Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 4 18

அதிரைநிருபர் | June 25, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.


''உங்களின் (தொழுகை) அணிவகுப்பை சமப்படுத்துங்கள். (இல்லையெனில்) உங்கள் முகங்களுக்கிடையே அல்லாஹ் வேறுபாட்டை (பிரிவை) உண்டாக்கி விடுவான்''  என்று நபி(ஸல்) கூற நான் நான் கேட்டேன். (அறிவிப்பவர்: (அபூஅப்துல்லா என்கிற) நுஹ்மான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).


''நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ உங்களின் தோற்றங்களையோ பார்க்கமாட்டான். எனினும் உங்களின் இதயங்களையும் உங்களின் செயல்களையும் பார்ப்பான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்:7 )


''ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரான் ஆவான். அவர் மற்றவருக்கு அநீதி இழைக்க வேண்டாம். அவரை ஆதரவற்றவராக விட்டு விட வேண்டாம்.  தன் சகோதரனின் தேவையை ஒருவன் நிறைவேற்றுபவனாக இருந்தால், அவனது தேவையில் (உதவிட) அல்லாஹ் இருப்பான். ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை (இவ்வுலகில்) ஒருவன் நீக்கி வைத்தால், மறுமையில் பல கஷ்டங்களில், ஒரு கஷ்டத்தை அவனை விட்டும் அல்லாஹ் நீக்கி வைப்பான். ஒரு முஸ்லிமின் குறையை (இவ்வுலகில்) மறைத்தால், மறுமை நாளில், அல்லாஹ் அவனது குறையை மறைப்பான்''  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 233)


''மரணித்த நபரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை: குடும்பம், அவனது சொத்து, அவனது செயல் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று தங்கி விடுகிறது. (அதாவது) அவனது குடும்பமும் அவனது சொத்தும் திரும்பி விடுகிறது. அவனது செயல் (அவனுடன்) தங்கி விடுகிறது. '' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).

''உலகத்தின் கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை ஒரு  மூஃமினை விட்டும் ஒருவன் நீக்கினால் மறுமை நாளின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அவரை விட்டும் அல்லாஹ் நீக்குவான். கஷ்டப்படுபவனுக்கு (உதவி செய்து) இலகுவை ஏற்படுத்தினால் அவருக்கு இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் (உதவி செய்து) இலகுவாக்குவான். முஸ்லிமின் குறையை ஒருவர் மறைத்தால், இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவரின்(குறையை) மறைப்பான். ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்பவனாக இருக்கும்வரை அந்த அடியானுக்கு உதவி செய்பவனாக அல்லாஹ் இருப்பான். கல்வியைத் தேடியவனாக ஒரு வழியில் நடந்தால், அவருக்கு சொர்க்கத்திற்குச் செல்லும் வழியாக அதை அல்லாஹ் இலேசாக்குவான்.'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)அவர்கள்(முஸ்லிம்).(ரியாளுஸ்ஸாலிஹீன்:245)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

-- அலாவுதீன்


18 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலாவுதீன் காக்காவின் தொடர்களில் இதுவும் மிக முக்கியமானது அடிக்கடி நினைவூட்டலும் அவசியமானதே !

சரியாகத்தான் சொன்னீர்கள் "திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்" !

தொடருங்கள் உங்களின் அற்புதமான நற்பனியை !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அலாவுதீன் காக்கா,

இது போன்ற பதிவுகள் தந்து இறையச்சத்தை நினைவூட்டி வருவதற்கு மிக்க நன்றி.

இறைவனுக்கே எல்லா புகழும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அப்பப்ப இறை நினைவூட்டல் மூலம் மறைக்கு வழிகாட்டலும் அவசியமே!

Shameed said...

இம்மை மற்றும் மறுமைக்கு தேவையான நல்ல நினைவுட்டல்

sabeer.abushahruk said...

வழிகாட்டுதல்களை நினைவூட்டியமைக்கு நன்றி. ஜசாக்கல்லாஹு ஹைரா!

உனக்கும் ஒன்றை நினைவூட்டுதல் எம்மீது கடமை.

"சகோதரியே" தொடர் இனியும் தாமதிக்காமல் தொடங்கியே தீரவேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வழிகேட்டில் ஆபத்தான நிகழ்வுகள் நடக்க காரணமாகிறது. சிரமம்தான். தொடங்கு, எங்கள் துஆக்கள் துணை நிற்கும்.

ஹிஜாப் சின்ன ஆர்டிக்கிள்தானே? பதியேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்காவின் வேண்டுகோளை நானும் அப்படியே வைக்கிறேன் !

//"சகோதரியே" தொடர் இனியும் தாமதிக்காமல் தொடங்கியே தீரவேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வழிகேட்டில் ஆபத்தான நிகழ்வுகள் நடக்க காரணமாகிறது. சிரமம்தான். தொடங்கு, எங்கள் துஆக்கள் துணை நிற்கும்.

ஹிஜாப் பற்றியும் ? பதியுங்கள். //

சகோதரிகள் சிலரிடமிருந்து இதுபற்றியும் கேட்டு தனி மின்னஞ்சல் எனக்கு வந்தது !

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!

அலாவுதீன்.S. said...

சகோதரர்கள் சபீர், அபுஇபுறாஹீம் இருவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// "சகோதரியே" தொடர் இனியும் தாமதிக்காமல் தொடங்கியே தீரவேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வழிகேட்டில் ஆபத்தான நிகழ்வுகள் நடக்க காரணமாகிறது. சிரமம்தான். தொடங்கு, எங்கள் துஆக்கள் துணை நிற்கும்.///

என் கவலை தெளிவாக தொடங்கி தெளிவாக அனைவருக்கும் புரியும் விதத்தில் எழுத வேண்டும். மேலும் இதற்காக குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள், எதார்த்த நிகழ்வுகள் நடந்த , நடந்து கொண்டு இருக்கின்ற என்று நிறைய ஆய்வுகள் செய்ய நேரங்கள் தேவைப்படுகிறது. சகோதரி தொடர் இரண்டு தொடர் அளவுக்கு எழுதி விட்டு இன்ஷாஅல்லாஹ் விரைவில் பதிகிறேன்.

/// ஹிஜாப் சின்ன ஆர்டிக்கிள்தானே? பதியேன்.
ஹிஜாப் பற்றியும் ? பதியுங்கள். ///

ஹிஜாப் ஆக்கத்திற்கு நபிமொழிகள், குர்ஆன் வசனம் தேடிக்கொண்டு இருக்கிறேன். இன்ஷாஅல்லாஹ் விரைவில் பதிகிறேன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோ. அலாவுதீன் நலமா? இப்ப நீங்கள் மருபடியும் ஆக்கம் எழுதவுது மிகச்சந்தோசமாக உள்ளது. இதற்கு கருத்து எப்படி எழுத முடியும்
இதை மருபடியும்,மருபடியும் படித்து மனதில் நிறுத்தி செயல் படனும் . இன்ஷா அல்லாஹ்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. அலாவுத்தீனின் அருமையான மார்க்க நினைவூட்டல். உலகின் பல அலுவல்களில் மூழ்கி மறந்து போகும் மார்க்க சிந்தனைகளையும், ஹதீஸ்களையும் அடிக்கடி நம்மிடையே நினைவூட்டி இறையச்சம் ஏற்பட காரணமாக இருக்கும் இது போன்ற ஆக்கங்களால் அல்லாஹ் உங்களுக்கும், இதை படிக்கும் அனைவருக்கும் ஈருலகின் எல்லா பாக்கியங்களையும், சரீர சுகத்தையும் யா! அல்லாஹ் உன் நல்லருள் மூலம் எங்கள் மீது பொழியச்செய்வாயாக! ஆமீன்.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

Yasir said...

உலகசிந்தனையிலயே மிதந்து கொண்டு இருக்கும் நமக்கு இந்த மாதிரி நினைவுட்டல்கள் அவசியம் அவசரம்..அல்லாஹ் இதற்க்குரிய நன்மை உங்களுக்கு வாரி வழங்கட்டும்..

அப்துல்மாலிக் said...

நல்ல நினைவூட்டல் பகிர்வு

அலாவுதீன்.S. said...

crown சொன்னது… ///அஸ்ஸலாமு அலைக்கும். சகோ. அலாவுதீன் நலமா? /// சகோ. தஸ்தகீர் வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) வல்ல அல்லாஹ்வின் அருளால் நலமுடன் இருக்கிறேன். தாங்களும், தங்களின் குடும்பத்தாரும் நலமுடன் இருக்க வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.
தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

Naina Mohamed சொன்னது… ///அல்லாஹ் உங்களுக்கும், இதை படிக்கும் அனைவருக்கும் ஈருலகின் எல்லா பாக்கியங்களையும், சரீர சுகத்தையும் யா! அல்லாஹ் உன் நல்லருள் மூலம் எங்கள் மீது பொழியச்செய்வாயாக! ஆமீன்.....///

சகோ. மு.செ.மு. நெய்னா முஹம்மதிற்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). தங்களின் அழகிய பிரார்த்தனைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

/// Yasir சொன்னது… உலகசிந்தனையிலயே மிதந்து கொண்டு இருக்கும் நமக்கு இந்த மாதிரி நினைவுட்டல்கள் அவசியம் அவசரம்..அல்லாஹ் இதற்க்குரிய நன்மை உங்களுக்கு வாரி வழங்கட்டும்.. ////

சகோ. யாசிர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

//அப்துல்மாலிக் சொன்னது… நல்ல நினைவூட்டல் பகிர்வு ///

சகோ. அப்துல்மாலிக் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). தங்களின் கருத்திற்கு நன்றி!

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஜஜாக்கல்லாஹு ஹைரா!

அழகிய, பயனுள்ள தொகுப்பு! இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் உள்ளத்தில் ஆழமாய் பதியவைத்துக் கொள்ள வேண்டிய போதனை!

யா அல்லாஹ் அனைத்து நிலைகளிலும் நீ பொருந்திக்கொள்கிற வாழ்க்கையை வாழ எங்களுக்கு நல்லருள் புரிவாயாக!

அலாவுதீன்.S. said...

/// Abu Easa சொன்னது…
அழகிய, பயனுள்ள தொகுப்பு! இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் உள்ளத்தில் ஆழமாய் பதியவைத்துக் கொள்ள வேண்டிய போதனை!
யா அல்லாஹ் அனைத்து நிலைகளிலும் நீ பொருந்திக்கொள்கிற வாழ்க்கையை வாழ எங்களுக்கு நல்லருள் புரிவாயாக!///

சகோதரர் அபுஈஸாவுக்கு வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) தங்களின் பிரார்த்தனைக்கும் , கருத்திற்கும் நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு