Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சற்றே காத்திருக்கவும் ! - Just wait ! 45

அதிரைநிருபர் பதிப்பகம் | October 15, 2011 | , , , ,

அதிரைநிருபரின் மொழியாடலின் எளிமையையும் இணக்கத்தையும் உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை, வாசக நேசங்களாகிய நீங்கள் யாவரும் நன்கறிந்ததே ! சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல் மொழியாடலும் அப்படியே; பழகப் பழகப் பண்படும் எழுத்தும் அதன் தாக்கமும்.

இருப்பினும் இந்தப் பதிவு ஒரு செய்தியைச் சொல்லத்தான்.

நம்மில் பலர் - கல்லூரிப் பட்டதாரிகள் உட்பட - ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் அடிப்படையில் அதற்கான பொருளைத் தமிழில் நினைத்தும் உணர்ந்தும் வைத்துக்கொண்டு அதை அப்படியே உள்மனதில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பேசுவதாலும் எழுதுவதாலும் ஆங்கில மொழி வெளிப்பாட்டில் அடர்த்தியும் அழகும் குறைந்து போய்விடுகிறது.

மனத்தில் உதிக்கும் ஒரு கருத்தோ உணர்வோ எந்த மொழியில் தோன்றுகிறதோ அந்த மொழியிலேயே எழுதப்படும்போதுதான் எழில் பெறுகிறது. ஒரே உணர்வு, இரு மொழிகளில் கீழே தரப்பட்டுள்ளது.  ஆனால், இவை ஒன்றின் மொழி பெயர்ப்பல்ல மற்றொன்று என்பதை ஒப்பிட்டு உணர்வீர்கள்.

இந்த முன்குறிப்புகள் தங்களின் மொழி செழிக்கவும் சிந்தனை வழி திறக்கவும் உதவும் என்று நம்புகிறோம்.

சற்றே காத்திருக்கவும்!

முழுப் பெயரையும்
முன்பின் என
மாற்றிக் குதறியக்
காப்பீட்டு அட்டையைக்
கேட்டு வாங்கிக்கொண்டு
காத்திருக்கச் சொன்னாள்
வரவேற்பாளினி

காத்திருக்கலானோம்
நானும் என் வலியும்

படிவங்கள் நிரப்பி
பிரதிகள் அச்சிட்டப் பிறகு
காசாளர்
என் தாத்தாவை விளிக்க,
நான் சென்றேன்

காசும் கையெழுத்தும்
வாங்கிக்கொண்டு
என்னையும் வலியையும்
சற்றே காத்திருக்கச் சொன்னாள்
ந்தோம்

கவனிப்பவற்றைப்
பதிந்துகொண்டிருக்கையில்
செவிலிப்பெண்
என்
தந்தையைக் கூப்பிட
குழம்பாமல்
நான் சென்றேன்

என் வலி யோடு
அவள் வழி தொடர
வழுக்கைச் சொட்டையும்
முழுக்கைச் சட்டையுமாய்
கழுத்துக் கட்டிக்குள்
சுருக்கிட்டு இருந்தார்
மருத்துவர்

என்
கோப்பு எடுத்து
யாப்பெனப் படித்து
என்
பெயர் என
என்னவோ சொன்னார்

அப்படித்தான்
உச்சரிக்கப் படுமெனில்
எனக்கு என் பெயர்
வேண்டாமாயிருந்தது

அத்தனை நேரம்
ஆராய்ந்து
அறிந்த விடயங்களை
பணம்
உறுதி செய்தபின்
என் வியாதியை
அறிவித்தார் மருத்துவர்
வயதாக ஆக இதெல்லாம் வரும்
என்ற குறியோடு

கூட்டணி என்பது வலிமையே
ஒப்புக் கொள்வோம்
விரலின்
மூட்டுகள் கூட்டுச் சேர்ந்து
மூட்டு வலியென
முழங்கினால்
கூட்டணி என்பது
'மை'யற்ற வலியே

ஆஸ்பத்திரியை விட்டு
வெளியேறியபோது
கவனமாக
என் பெயரையும் பொறுக்கிக்கொண்டேன்
வலி கூடவந்தது
இம்முறை சற்றுக் கூடி!
Just wait!


On receipt
of health card
said the receptionist
“just wait’


So did I
with my pain


Forms filled
printouts taken
called the cashier
my grandpa’s name


I responded
signed and paid
continued with ‘just wait’
so did the pain


then heard the nurse
calling my father
I nodded
walked along
into the cabin
not leaving the pain behind


There saw the doctor
who called me
with a name
that
I would never wanted
with such pronunciation.


Having me examined
Doctor declared
my sickness
reasoning out the age

Unity is good
but not
when both joints
join together
to
yell the slogan
‘arthrities’


Walked away
from the clinic
carefully carrying my name
with the pain
that
doubled up!


- சபீர்
sabeer.abushahruk

45 Responses So Far:

நிஸார் அஹமது said...

www.translate.google.com - உபயோகப்படுத்தினால் இப்படித்தான் மண்டை காய்கிறது..

நிஸார் அஹமது said...

On receipt
of health card
said the receptionist
“just wait’

ரசீது on
சுகாதார அட்டை
என்றது வரவேற்பாளர்
"நான் காத்திருக்க '

அப்துல்மாலிக் said...

ஆங்கிலத்தில் கடிதம் டிராஃப்ட் செய்ய எத்தனிக்கும்போது முதலில் தன் தாய்மொழியில்தான் யோசிச்சு அதற்கேர்ப ஆங்கில எழுத்துக்களை கோர்வையாக்கி எழுத முயற்சிக்கிறோம், இதன் அடிப்படையில் சரியான இலக்கணம் தெரியாவிடில் இதே நிலமைதான் வரும்..

பகிர்வுக்கு நன்றி சபீர் காக்கா

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வாங்க (இங்லீசுக்கும்) பேராசிரியரே!

மொழி மாற்றத்தில் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் நல்ல பாடமும் புரிந்துணர்வும்.

Yasir said...

வித்தியாசமான சிந்தனை--- மாத்திதான் யோசிச்சு இருக்கீங்க !!! i like it

//அப்படித்தான்
உச்சரிக்கப் படுமெனில்
எனக்கு என் பெயர்
வேண்டாமாயிருந்தது// ...ரொம்பவுதான் குசும்பு கவிக்கு

Yasir said...

//Unity is good
but not
when both joints
join togethe// ....in which part of your brain telling you to think like this (one) kakka....nice....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மொழியாடலும் மொழி மாற்றத்தின் தாக்கமும் அருமையான எடுத்து வைக்கும் வரிகள் !

இந்த இரண்டு மொழியாடல்ளை தனித் தனியாக பிரிண்ட் எடுத்து என்னோடு வேலை செய்யும் தமிழன்(பர்) ஒருவரிடம் முதலில் ஆங்கில கவிதையை இருப்பதை வாசிக்கச் சொன்னோன் அவர் அப்படியே உரை நடையாக ஒப்பித்தார் அதன் பின்னர் என்ன புரிந்தது என்றும் கேட்டேன் அதற்கு அவர் "கஷ்டமான இங்க்லீஸ்ல இருக்கு என்றுரைதுவிட்டு தெட்டுத் தெரிந்து (நானும் அவரும் புரிந்த மொழி பெயர்ப்பைச் சொன்னார்) என்றேன் ஏதும் தெரியாதது மாதிரி.

அதன் பின்னர் தமிழ் கவிதையை நீட்டினேன் வாசித்தார் அப்படியே அசந்துவிட்டார்... புருவம் உயர்த்திச் சொன்னார் என்னா அழகா புரியும் படி அற்புதமான கவிதை என்றார் :)

எனக்கு ஒரு கேள்விங்க "ஒவ்வொரு முறையும் இங்கே மருத்து மனைக்குச் சென்றால் அங்கே "ஜஸ்ட் வெயிட்" அலல்து "ஒன் மினிட்" இப்படிச் சொல்லிவிட்டு ஏன் மணி கணக்கில் காத்திட வைக்கிறார்கள் !?

ஒன் மினிட் அப்படின்னா இரண்டு மணிநேரமா ? குறைந்தது !?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வரிக்கு வரி மொழி மாற்றம் செய்து கேட்டேன்

அதற்கு

Forms filled
printouts taken
called the cashier
my grandpa’s name

படிவம் பூர்த்தியானது
அச்சு எடுக்கப்பட்டது
காசாளர் அழைத்தார்
என் தாத்தா பெயரை...

இப்படியாக !

form = படிவமானது
priintouts = அச்சு ஆனது
cashier = காசாளரானார்

மொழி மாற்றத்தில் !

இது தப்பா !?

ZAKIR HUSSAIN said...

Unity is good
but not
when both joints
join together
to
yell the slogan
‘arthrities’


DID YOU CHECK YOUR URIC ACID? ...WHAT IS THE LEVEL?

ZAKIR HUSSAIN said...

கவிதையில் ஆங்கிளமும் தமிழும் வசப்படுவது கொஞ்சம் வழக்கத்தில் அதிகம் காணப்படாதது.

இருந்தாலும் தமிழில் உள்ள நளினம் பரங்கியன் மொழியறியாது.

தமிழன் உணர்வுகளுக்குள் ஊடுறுவியிருப்பது தாய்த்தமிழ்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நலமா சாபீர் காக்கா ? நல்ல ஒரு மொழி மாற்றம்

//முழுப் பெயரையும்
முன்பின் என
மாற்றிக் குதறியக்
காப்பீட்டு அட்டையைக்
கேட்டு வாங்கிக்கொண்டு
காத்திருக்கச் சொன்னாள்
வரவேற்பாளினி//

காப்பீட்டு அட்டையில் முன்பின் என முழு பெயரையும் எழுதியதிற்கு கொஞ்சம் ஆறுதல் பட்டுக்கொள்வோம்.
இப்ப தேர்தல் லிஸ்டில் ஆணுக்கு பதிலாக பெண்கள் பெயரும்,பெண்ணுக்கு பதிலாக ஆண்கள் பெயரும்.எழுதி மக்களை குழப்பி பைத்தியகாரங்களாக ஆக்கி இருக்கிறாங்கள்.படிக்க தெரியாதவங்களை அரசு வேலையில் பணிக்கு
அமர்த்திருக்கிறாங்க.வலியோடு ஆஸ்பத்திரியில் காத்திருப்பதைவிட.மன கஷ்டங்களோடு ஒட்டு போட போவதுதான்
பெரும் வழியாக இருக்கும்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

இந்த ஏற்புரை மிக அவசியமானது. காரணம், இந்தப் பதிவின் முக்கியத்துவம் நம் அனைவராலும் அறியப்பட்டதா என தெரிந்து கொள்வதற்காக. வாத்தியார்கள் மட்டுமே பாடம் நடத்தும் வகுப்பறைகளைப்போல எழுத்தாற்றல் மிக்கவர்களே ஊடகத்துறையை கையகப்படுத்தி தத்தமது எண்ணங்களையும் தீர்வுகளையும் சரியோ தவறோ என்கிற பிரக்ஞை இல்லாமல் நம்மீது திணித்து வரும் சூழலில்…

அதிரை நிருபரில் சற்று வித்தியாசமாக வாத்தியார்கள் வருமுன் வகுப்புக்குள் மாணவர்களை அழைத்து வந்து நிறைத்தனர். என்னையும் சேர்த்து. வந்தமர்ந்த மாணவர்களிடம் “நீங்கள் அறிந்தவற்றைச் சொல்லுங்கள்” என்றனர்.

ஆட்டம் அந்த நிமிடத்தில் துவங்கியது. எழுத்துப்பிழைகள் புறக்கனிக்கப்பட்டு எண்ணங்கள் வெளிச்சமிடப்பட்டன. வாழ்வியல், உளவியல், விஞ்ஞான, மருத்துவ, கல்வி, சமுதாய, சமூக, கலை என்று ஊடகத்துறைத் தொடர்பான அத்துனை விஷயங்களிலும் விதவிதமானக் கருத்துப் பரிமாற்றங்களும் தீர்வுகளும் என்று விழிப்புணரத்துவங்கியது நம் மக்கள்.

இனி, இதோ வாவன்னா சார், ஹாஜாமீ சார், என் ஏ எஸ் சார், அஹ்மது காக்கா, ஜமீல் காக்கா என்று கற்றுத்தேர்ந்தவர்களின் பார்வை இந்தத் தளம் நோக்கித் திரும்பி இருக்கிறது, புன்னகையோடு.

எனவே, இனி வரும் ஆக்கங்கள் பரீட்ச்சைபோல மதிப்பெண்களுக்காக எழுதப்படுவதுபோல் கவனமாகவும் செறிவாகவும் இருக்க வேண்டியது அவசியம். இது, அதிகம் எழுதினாலே சாத்தியம்.

அதன் ஒரு துவக்கமாகத்தான் இந்தப் பதிவை ஒரு புது முயற்சியாகவே பதியச் சொல்லி அதிரை நிருபரைக் கேட்டுக்கொண்டேன்.

இனி, வழக்கமான ஏற்புரை:

என் பல எழுத்துக்களில் எழுத்துப் பிழைகள் களையப்பட்டு பதியப்படுவதற்கும், கருத்துப் பிழைகள் வெகுவாகக் குறைந்திருப்பதற்கும் காரணம் என் பெருமதிப்பிற்குரிய காக்கா ஜமீல் ஷாலிஹ் அவர்கள்தான். தீவிரமான எந்த எழுத்தையும் காக்காவிடம் கொடுத்து கெஞ்சிக் கேட்டு (அவர்களுக்கு நேரம் இல்லாததால்) திருத்தி வாங்கித்தான் பதிகிறேன். அப்படித்தான் இந்தப் பதிவும். காக்கா கை வச்சதுதான். (அதனாலதான் கொஞ்சம் தைரியமா ஏற்புரையெல்லாம் எழுதறேன்) அவர்களுக்கு மிக்க நன்றி. (மேற்கொண்டு திருத்தித் தருவதற்கு ஐஸ் வைக்கிறான் என்று நினைத்தாலும் அதுவும் உண்மைதான்.)

அடுத்ததாக, அபு இபுறாகீமின் உழைப்பு. என் எழுத்துகளுக்குப் பின் அபு இபுறாஹீமின் உழைப்பு எவ்வளவு இருக்கிறது எனில், எந்த ஓர் ஆக்கமும் பதியப்படுமுன் நாங்க ரெண்டு பேரும் பலமுறை விவாதித்தும் திருத்தியும்தான் களத்தில் இறங்குகிறோம். அவருக்கும் நன்றி.

அடுத்து, என் ஜாகிர். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்ததே இவந்தான். இல்லேனா, நீங்கள் எல்லோரும் என் எழுத்து எனும் கத்தியிலிருந்து தப்பி இருப்பீர்கள். எங்களுக்குள் பல வருடங்களாக பேசியும், விவாதித்தும், எழுதியும் வந்த விஷயங்களே அவனிடமிருந்து கட்டுரையாகவும் என்னிடமிருந்து இவ்வடிவத்திலும் வருகிறது. காலநேரத்திற்கு ஏற்ப பரிமாணங்கள் கூடக் குறைய இருக்கும் அவ்வளவே.

மேற்கொண்டு நிறைவில் பேசுவோம்.

Sabeer Ahmed

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஏற்புரையில் தான் என் பெயரை விட்டு விட்டு எழுதிய முதல் ஏற்புரை? இருக்கட்டும். இருக்கட்டும்.
முழுப் பெயரையும்
முன்பின் என
மாற்றிக் குதறியக்
காப்பீட்டு அட்டையைக்
கேட்டு வாங்கிக்கொண்டு
காத்திருக்கச் சொன்னாள்
வரவேற்பாளினி!-
----------------
இப்படி எழுத்து நோய் மெத்த படித்த இடத்தில் மெத்தை போட்டு தூங்குது! தட்டி எழுப்ப ஆளும் இல்லை தட்டச்சும் காரிய(அவள் காரியத்தில் கண்)தரசியும் தட்டி, தட்டி நம் முஸ்லிம் பெயரெல்லாம் புது பெயர் மாற்றம் நம் அனுமதி இல்லாமலே நடக்குது.

crown said...

காத்திருக்கலானோம்
நானும் என் வலியும்.
-----------------------------------
இது எல்லாவற்றையும் விட பெரும் வலி. காத்திருப்பது அவசியம் தான் ஆனால் காத்திருக்க சொல்லிவிட்டு அங்கே பணியாளர்களின் அலட்சிய போக்கு மேலும் மனவலித்தரும். மனவலிமை தேயும்.காத்திருப்பததால் தான் எம்மையும் பேசன்ட் என அழைக்கின்றனரோ?

crown said...

படிவங்கள் நிரப்பி
பிரதிகள் அச்சிட்டப் பிறகு
காசாளர்
என் தாத்தாவை விளிக்க,
நான் சென்றேன்

காசும் கையெழுத்தும்
வாங்கிக்கொண்டு
என்னையும் வலியையும்
சற்றே காத்திருக்கச் சொன்னாள்
…ந்தோம்
-----------------------------------------------------------------
ஏன்டா வந்தோம் ந்னு நொந்து போகும் படி நோயளியை பெருன் நோயளியாக ஆக்கும் இடம் தானோ மருத்துவ மனை(வினை)?காசு கொடுத்தும் காத்திருக்கும் கடனாளி நாம்.

crown said...

என்
கோப்பு எடுத்து
யாப்பெனப் படித்து
என்
பெயர் என
என்னவோ சொன்னார்

அப்படித்தான்
உச்சரிக்கப் படுமெனில்
எனக்கு என் பெயர்
வேண்டாமாயிருந்தது.
--------------------------------------------------------
பெயருக்கு ஏதோ அவர்கள் ஒப்பிக்கிறார்கள் . ஏதோ (டேட்பாடி)உயிரற்ற ஜடம் போல. பெயர் நமக்கு உயிர் இல்லையென்றாலும் "மெய்"யாகவே உடல் போன்றல்லவா? இப்படி நம் பெயரை பிரித்து மேயும் ஆட்களை கெட்ட பெயர் வைத்து திட்ட ஆசை!!!

crown said...

அத்தனை நேரம்
ஆராய்ந்து
அறிந்த விடயங்களை
பணம்
உறுதி செய்தபின்
என் வியாதியை
அறிவித்தார் மருத்துவர்
வயதாக ஆக இதெல்லாம் வரும்
என்ற குறியோடு.
------------------------------------------
பிறரோடு ஒப்பில்லாவாறு பணியாற்றும் நேர்மை,திறமை சாலிகள் முன் பணம் பிரதானமாக போன பின்னே ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்ததை ஒப்பிக்கிறார் மருத்துவர் ஒரு சில வலினிவாரணி மாத்திரைகளுடன். நம் மனவலியெல்லாம் அந்த மருத்துவரும் அவர் தம் ஊழியரும் தரும் வலிக்கு மருந்தொன்று சொல்லும் மருத்துவனே நல்ல மருந்தாவன் இந்த இழினிலை செயல்களுக்கு.

crown said...

கூட்டணி என்பது வலிமையே
ஒப்புக் கொள்வோம்
விரலின்
மூட்டுகள் கூட்டுச் சேர்ந்து
‘மூட்டு வலி’யென
முழங்கினால்
கூட்டணி என்பது
'மை'யற்ற வலியே!
------------------------
அருமை , நையாண்டித்தனம் எல்லாம் எழுத்தில் இருந்தாலும் இப்படி பலகீன மான கூட்டனியும் வலிதரும் பின் வேதனைதான்.

crown said...

ஆஸ்பத்திரியை விட்டு
வெளியேறியபோது
கவனமாக
என் பெயரையும் பொறுக்கிக்கொண்டேன்
வலி கூடவந்தது
இம்முறை சற்றுக் கூடி!
--------------------------------------------
ஆமாம் இருக்காதாபின்னே? வரும்முன் காப்போம் என்பதற்கு எனக்குத்தோன்றிய புது யோசனை இப்படியெல்லாம் வரும் முன் யோசிப்போம் தகுதியற்றமருத்துவமனைக்கு செல்லாமல் தவிர்ப்பதே சிறந்தது. இதனால் தான் உங்க பெயர் "அடி"படுதுன்னு சொல்றாங்களோ? இந்தியாவில் இப்படி பொது சேவை மையத்திலும் அரசு அலுவலகங்களிலும் நம் பெயர் அடிபடுகிறது.

N.A.Shahul Hameed said...

WELCOME TO THE 21ST
CENTURY!!! !!!!!!
Our phones ~~ wireless!
Cooking ~~ fireless!
Cars ~~ keyless!
Food ~~ fatless!
Dress ~~ sleeveless !
Youth ~~ jobless!
Leaders ~~ shameless!
Relationships ~~meaningless!
Attitude ~~ careless!
Spouse ~~ fearless!
Feelings ~~ heartless!
Education =~ valueless!
Children ~~ mannerless !
Everything is becoming LESS But still, Our Hopes are ~~ Endless..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு உன் கருத்தில் கோர்த்தது... கவிக் காக்கா வைக்கும் குட்டு வைத்தாலும் அது சொட்டாகத்தான் எமக்கு படும் !

இப்படியாக !
மெத்தனப் போக்கு
மெத்த படித்தவிடத்தில்
மெத்தை போட்டு
தூங்குது!

தட்டி தட்டி
எழுப்பிட யாருமில்லை
தட்டச்சிடும் காரியதரிசியான
அவள் காரியத்தில்
கண் அரசியானாள்

தட்டி தட்டி
நம் பெயர்களை
பெயர்த்தெடுத்தாள்
பெயர் மாற்றம்
அனுமதியின்றி
நடக்குது !

இப்படியாக !
பலமான கூட்டனி
வழிதோறும் வரவேற்கும் !
பலமில்லா கூட்டனியோ
வலிதரும்
பின் வேதனைதான்.

தகுதியற்ற இடம்
செல்வதை
தவிர்ப்பதே சிறந்தது.
உங்கள்
பெயர் "அடி"படுதுன்னு
சொல்வதனாலே !

Shameed said...

Its good you did not think in Hindhi. If did so, ham sabko dhimaak kharaab ho jaayaga.

very simple vocabulary but when written as a sentence, it gives strong and specific meaning.

Well done!

How about Asaththal kaaka if write in both Tamil and Malaay?

sabeer.abushahruk said...

நிஜார் அஹமது:
எழுத்துக்களை மொழி பெயர்க்கலாம். எண்ணங்களை? மொழியாக்கலாம். ஆயினும், மொழி பெயர்ப்பு செய்யுகையில் பெரும்பாலும் கருத்தோ கற்பனையோ தட்டையாகப் போய்விடுகிறது என்பதே என் வாதம். ஷேக்ஸ்பியரையோ, கலீல் கிப்ரானையோ மொழி பெயர்க்கும்போது கரு மட்டும் நிலைத்து வர்ணனையும் நடையும் யார் மொழி பெயர்க்கிறர்களோ அவரின் சாடையாகிப்பொவதுதான் சோகம்.   எனவே, உங்களின் “மண்டை காய்கிறது” எனும் பின்னூட்டம் இயல்பானதே.
 
அப்துல் மாலிக்:
 
“வாட் இஸ் யுவர் நேம்” என்பதை தமிழிலா யோசித்து மொழி பெயர்க்கிறோம்?  அதுவாகவே ஆங்கிலத்திலேதானே வருகிறது? அது எப்படி? பழக்கமாகிப்போனாதால் அல்லவா? அதைப்போலதான்,
“அன்புள்ள ஐயா” என்று யோசித்து “டியர் சார்” என்றா  கடிதம் எழுதத் துவங்குகிறோம்? “டியர் சார்” என்றுதானே ஆங்கிலத்திலேயே எண்ணி ஆங்கிலத்திலேயே எழுதத் துவங்குகிறோம்?  இது சாத்தியமெனில் மொத்தக் கடிதமும் சாத்தியமா இல்லையா என்று சொல்லுங்கள் மாலிக்.

sabeer.abushahruk said...

எம் ஏ ஹெச்:
 
பின்னூட்டத்தில் எழுத்துப் பிழை இருப்பதுபோல் தெரிகிறதே :) போவன்னாவுக்குப் பதிலா பேயென்னா போட்ட மாதிரித் தெரியுது? “போர்’ஆசிரியரே என்றுதானே சொல்ல வந்தீர்கள்.
 
யாசிர்:
 
படிக்கிற காலத்தில ‘சபீர்’க்கு பதில் ‘ஜபீர்’ நு கூப்பிடும்போதே என் பெயர் எனக்கு வேண்டாமாயிருந்தது.  (‘ஷப்னம் வாப்பா’ நு கூப்பிடுவாங்களே அப்பதான் என் பெயர் எனக்குப் பிடிக்கும் .-)) .  அம்மாக்களே, மச்சான், இந்தாங்க, இவொலே அவொலே  நு கூப்பிடுவதற்கு பதில், பிள்ளையின் பெயரோடு வாப்பா சேர்த்துக் கூப்பிட்டுப்பாருங்கள், ஆள் சொக்கிப்போய் கை நெறைய வளையல்கள் வாங்கிப்போடுவாரு. (உதாரணம்: ஆமினா வாப்பா, இபுறாஹீம் வாப்பா, அஸ்ரா வாப்பா)
 

sabeer.abushahruk said...

அபு இபுறாஹீம்:
 
தொழிநுட்பம் உணர்வுகளில்லாதது. அப்படித்தான் மொழிபெயர்க்கும். மொழிபெயர்ப்பு சரிதான்.  ஆனால், உணர்வுபூர்வமானதா? சுறுக்கமாக, உங்கள் அஸிஸ்டென்ட் ஆங்கிலத்தில் படித்துக் கொடுத்த ஒரு ப்லாங்க்(blank) லுக் போல.,.. தட்டையானது.
 
ஜாகிர்:
 
பொறிச்ச ராலு, புளியூத்திக் காச்சிய மீனானம், மாப்பிள்ளைத் தோழன் சாப்பாட்ல சாப்பிட்ட ஃப்ரைட் சிக்கன், களரிசோற்று எறச்சானம்…ம்ம்ம் என்ன கேட்டே? uric acid அளவா? சொல்றேன் சொல்றேன்.
 
லெ.மு.செ.:
 
சர் நேம், ஃபேமிலி நேம், ஃபர்ஸ்ட் நேம், மிட்ல் நேம் என்று இவிங்க கேட்கிற பேரெல்லாம் கொடுத்தாலும் நம்ம பேரை மட்டும் விட்டுட்டு மற்ற எல்லா பேரையும் வச்சுத்தான் நம்மலக் கூப்பிடுவாங்க. இதில் எலக்ஷன் குழப்பங்கள் வேறா?
 
 

sabeer.abushahruk said...

என் ஏ எஸ் சார்:
இல்லை இல்லையென்று எத்தனை விஷயங்கள் இருப்பதைச் சொல்லியிருக்கிறீர்கள்!

இதுக்குத்தான் வகுப்புக்கு ஒரு வாத்தியாராவது வேண்டும் என்பது.

கடைசி ரெண்டு பாயின்ட் இருக்கும்போது "குட்ரா நான் சர்வீஸ் போட்றேன்" னு பாலை வாங்கி ஏதோ ஜெயிச்சுத்தர்ர மாதிரி பாவ்லா பண்ணி தோல்வியை உடனே வாங்கித்தருவீர்களே அந்த வாலிபாலே வாலிபால்தானாக்கும்.

sabeer.abushahruk said...

ஹமீது,
பகூத் ஷுக்ரியா ஹை! அய்ந்தா அகர் மோக்கா மிலேகாத்தோ ஹிந்திமேபி ஹம் ஷெஹ்ரி லிக்கேகா...க்யோன் நஹி?
தெங்க்ஸ்.

கிரவுன்,
இம்முறை அபு இபுறாகீம் என் வேலையை சுலபமாக்கிவிட்டார்கள். நான் சொல்லி சிலாகிப்பதையெல்லாம் தொகுத்துத் தந்துவிட்டபடியால் மீண்டும் மீண்டும் சொல்லி சலிப்பு ஏற்படுத்தப் போவதில்லை.

எப்பவுமே, எந்த ஒரு கலைப்படைப்பிலுமே, கிளைமாக்ஸ்தான் சிறப்பு. உங்களுக்கு நன்றி சொல்வதே என் ஆக்கங்களின் கிளைமாக்ஸ். நன்றி கிரவுன்.

KALAM SHAICK ABDUL KADER said...

//WELCOME TO THE 21ST
CENTURY!!! !!!!!!
Our phones ~~ wireless!
Cooking ~~ fireless!
Cars ~~ keyless!
Food ~~ fatless!
Dress ~~ sleeveless !
Youth ~~ jobless!
Leaders ~~ shameless!
Relationships ~~meaningless!
Attitude ~~ careless!
Spouse ~~ fearless!
Feelings ~~ heartless!
Education =~ valueless!
Children ~~ mannerless !
Everything is becoming LESS But still, Our Hopes are ~~ Endless..//

Dear Sir, NAS

Assalaamu alaikkum

You may continue to write English Poem. Yesterday I met your student Mr.Aslam and he told about your talent. To-day I have seen thru this poetic words.

கவி வேந்தர் சபீர் அவர்கள் பன்மொழிப் புலவர் என்பதை அவர்களின் பின்னூட்டங்களில் யான் காணும் ஆங்கில வர்ணணைகள் மூலம் கண்டு கொண்டேன்; இப்பொழுது அவர்களின் திறமையை இந்த ஆக்கம் தெள்ளத் தெளிவாகச் சொல்லி விட்டது; ஹிந்தி கா ஷெஹ்ரி கப் மில்லேங்கா சபீர் சாஹெப்?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//பின்னூட்டத்தில் எழுத்துப் பிழை இருப்பதுபோல் தெரிகிறதே :) போவன்னாவுக்குப் பதிலா பேயென்னா போட்ட மாதிரித் தெரியுது? “போர்’ஆசிரியரே என்றுதானே சொல்ல வந்தீர்கள்.//

பிழை உங்களிடமும் MAH,

ஆமாம் ஸப்னம் டெ வாப்பா Foreஆசிரியர்(head teacher) தான்

ZAKIR HUSSAIN said...

சகோதரர் [ கவிஞர் ] கலாம் அவர்களுக்கு..உங்களுடைய Profile Photo நீங்கள் கம்ப்யூட்டரில் வேலைபார்ப்பது போல் உள்ளதை மாற்றி தனியாக உங்கள் முகம் தெரிய ஒரு Close- Up Shot எடுத்து வெளியிட்டால் ஒரு சிறந்த முகம் எங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இதற்கு எல்லாம் Due date இல்லாததால் எப்போது வேண்டுமானாலும் எடுத்து வெளியிடலாம். எப்படி ஆங்கிள் வைப்பது என்று சாகுல் [ தமாம் ] இடம் கேளுங்கள். எனக்கு எப்படி பேக்கிரவுன்ட் அவுட் ஆஃப் போகஸ் செய்து ஆப்ஜக்ட் ஷார்ப் சாட் எடுக்க சொல்லித்தந்ததே சாகுல் தான் [ அப்போது அவருக்கு 17 வயது இருக்கும் ]

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு ஆலைக்கும் கலாம் காதிர்,
கற்றோரைக் கற்றோரே காமுறுவர். ஊங்களின் பின்னூட்டம் சபீருக்கு ஒரு டானிக். நானும் உங்களின் கவிக்கும் சிந்தனைக்கும் வசப்பட்டவன் தான். மரபுக்கவி உங்களுக்கு மிக அருமையாக் வருகிறது. நீங்கள் ஏதேனும் ஒரு முழுமையான காவியம் இஸ்லாமிய நெறியைக் கொண்டு எழுதலாமே.
வஸ்ஸலாம்.
N.A.Shahul Hameed

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

NAS சார்:

உங்களிடமிருந்து ஆங்கிலக் கவிதைக்குதானே பதில் வருமென்று எதிர்பார்த்து இருக்கிறோம் ! அதுவும் தானே டானிக் கவி காக்காவுக்கு !

அப்படின்னா டானிக் அனுப்புவீங்க தானே ! :)

Adirai khalid said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.,

இருதியாக வந்தாலும் உறுதியாக இருக்கின்றேன்.

சகோ. சபீர் அவர்களின் பங்களிப்புகள் அதிரையோடு நின்றுவிடாமல் தமிழ்கூறும் உலகிற்கு பரவலாக்கப் படவேண்டும்.

சத்தியமார்க்கம்.காம் இதற்கு தலம் அமைத்துக் கொடுக்குமா ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சகோ. சபீர் அவர்களின் பங்களிப்புகள் அதிரையோடு நின்றுவிடாமல் தமிழ்கூறும் உலகிற்கு பரவலாக்கப் படவேண்டும்.

சத்தியமார்க்கம்.காம் இதற்கு தலம் அமைத்துக் கொடுக்குமா ?//

அலைக்குமுஸ்ஸலாம் மு.அ.(ஹா): ஏறகனவே அங்கே (சத்தியமார்க்கம்.com தளத்தில்) கலக்கியெடுக்கும் அங்கேயும் ஆஸ்தான கவி சபீர் காக்கா அவர்களே... பார்ததில்லையா ?

அது மட்டுமல்ல திண்ணை.com தளத்திளும் கவிதைக் குவியல் நிறைந்தே இருக்கிறது அங்கேயும் தொடர்கிறது ! சென்று பார்க்கலாமே !

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பு மருமகன் ஹாலித்,
அஸ்ஸலாமு அலைக்கும்.

உன் வேலைப்பளுவில் இவற்றையெல்லாம் பார்த்திருக்கமாட்டாய்.
இதோ வாய்ப்பு, சென்று பார் : http://www.satyamargam.com/Search?ordering=&searchphrase=all&searchword=%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D

- மாமா

என் ஏ எஸ் உஜாலாக்கு மாறியாச்சா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஹாலித்: இதனையும் வாசித்துப் பார் : http://adirainirubar.blogspot.com/2010/11/blog-post_09.html இரண்டு நண்பர்கள் கைகோர்த்து கட்டிய வரிகள் ! :)

KALAM SHAICK ABDUL KADER said...

வ அலைக்கும் சலாம் சகோ. NAS,

உங்களிடமிருந்து ஆங்கில poem எதிர்பார்த்தேன்; நீங்கள் இன்னமும் என் மீதும் என் மரபுப்பா மீதும் அளவிலா பாசம் வைத்துள்ளது கண்டேன். இன்ஷா அல்லாஹ் தாங்கள் நாடியது நடக்கலாம்; அதற்கான காலம் வரும் வரைக் காத்திருக்கலாம்;நீங்களும் ப்டிக்கலாம். இப்பொழுதுதான் மரபுக்கடல் நீந்தி விட்டுச் சற்று சகோதரர் சபீர் அவர்கள் கற்றுக் கொடுத்த புதுக்கவிதை மகாநதியில் நீச்சல் பழகுகின்றேன். மரபுக்கடல் நீந்தியவனுக்கு இந்த மகாநதி புதுகவிதை ஒரு புது சுகமாகத்தான் தெரிகின்றது.

KALAM SHAICK ABDUL KADER said...

தம்பி ஜாஹிர் ஹுஸைன் விரும்பிய வண்ணம் எனது சுயவிவரப்படம் மாற்றி விட்டேன்

crown said...

கலாம் காதிர் சொன்னது…
வ அலைக்கும் சலாம் சகோ. NAS,

உங்களிடமிருந்து ஆங்கில poem எதிர்பார்த்தேன்; நீங்கள் இன்னமும் என் மீதும் என் மரபுப்பா மீதும் அளவிலா பாசம் வைத்துள்ளது கண்டேன். இன்ஷா அல்லாஹ் தாங்கள் நாடியது நடக்கலாம்; அதற்கான காலம் வரும் வரைக் காத்திருக்கலாம்;நீங்களும் ப்டிக்கலாம். இப்பொழுதுதான் மரபுக்கடல் நீந்தி விட்டுச் சற்று சகோதரர் சபீர் அவர்கள் கற்றுக் கொடுத்த புதுக்கவிதை மகாநதியில் நீச்சல் பழகுகின்றேன். மரபுக்கடல் நீந்தியவனுக்கு இந்த மகாநதி புதுகவிதை ஒரு புது சுகமாகத்தான் தெரிகின்றது.
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். காக்கா கவி அன்பன் , நீங்கள் மரபுக்கடலும், அரபுகடலும் கடந்தவர்கள் ஆனாலும் திரை போட்டு மறைத்தாலும் மா நதியாம் புதுக்கவிதையிலும் உங்கள் புத்திகூர்மை புலப்படும். இங்கும் உங்களுக்கு ஆதரவு திரை கிடைக்கும் திரை விலகும். நுரை பொங்கும் அத்திரை வாசகரின் அன்புத்திரை . நீங்கள் திரை கடலில் தாண்டி வந்த திரவியம் தமிழ் உலகுக்கு. வாழ்துக்கள்.

ZAKIR HUSSAIN said...

//தம்பி ஜாஹிர் ஹுஸைன் விரும்பிய வண்ணம் எனது சுயவிவரப்படம் மாற்றி விட்டேன் //

Thanx brother kalam... Insha Allah when i come to UAE , i will take a good portrait photo of you

அதிரை என்.ஷஃபாத் said...

Comment:
========
/**
WELCOME TO THE 21ST
CENTURY!!! !!!!!!
Our phones ~~ wireless!
Cooking ~~ fireless!
Cars ~~ keyless!
Food ~~ fatless!
Dress ~~ sleeveless !
Youth ~~ jobless!
Leaders ~~ shameless!
Relationships ~~meaningless!
Attitude ~~ careless!
Spouse ~~ fearless!
Feelings ~~ heartless!
Education =~ valueless!
Children ~~ mannerless !
Everything is becoming LESS But still, Our Hopes are ~~ Endless.
*/

Follow-up Comment
===============

CHANCE LESS !! :D

Yasir said...

// i will take a good portrait photo of you// காக்கா என்னே ???

ZAKIR HUSSAIN said...

// i will take a good portrait photo of you// காக்கா என்னே ??? //

உங்களை எடுக்காமையா??...ஒரு சின்ன Photo shoot அர்ரேஞ் செய்யலாம்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இலக்கணம் அதிகம் தெரிந்தவர்கள் கலக்குவதால் கருத்து போடுவதா, வேண்டாமா என்ற தயக்கம்.

மருத்துவமனை, வலி, காத்திருக்கும் நேரம் இவைகளை மனக்கண் முன் கொண்டு வந்து கவிதையாக்கியது அருமை!

crown said...

வீடு
---------------------------------
விடுமுறை நாளொன்றில்
வீடு சுத்தம் செய்யுகையில்
விடுபட்ட இடங்களில்
விரல்கள் துலாவியதில்

தொலைந்துபோன
பொம்மைக்காரின் ரிமோட்
தீர்ந்துபோன
பேட்டரிகள்

மூடிகள்
மூடிகளற்றப் பேனாக்கள்

பொத்தான்கள்
பொத்தான் குறைந்த சொக்காய்கள்

ஓரிரண்டு
உலர்ந்த
உணவுத் துணுக்குகள்

என
எல்லாவற்றையும்
அகற்றியும்
கைப்பற்றியும்
தொடர்ந்து

அத்தனைப் பொருட்களையும்
அதனதன் இடத்தில்
அடுக்கியும் நிறுத்தியும்
அழகுற வைத்த்தும்

ஏனோ
ஷாப்பிங் மாலின்
நடைபாதை கடைகளின்
கட்டுக்குள் இருப்பதுபோலொரு
உணர்வு
வியாபிக்க

பிள்ளைகள்
பள்ளிக்கூடம்விட்டு
வரும்வரைக்
காத்திருக்கலானேன்
மீண்டும்
கலைத்துப் போட்டு
வீடாக மாற்ற!
-சபீர்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு