Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கன்னத்தில் முத்தமிட்டால்... ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | October 08, 2011 | , , ,

"வாப்பா....... வாப்பா............."

”என்னம்மா?”

”வாப்பா... சாயங்காலம் சீக்கிரம் வந்திருங்க, சரியா ஆறு மணிக்கெல்லாம் நிகழ்ச்சி ஆரம்பிச்சிருவாங்க, கலெக்டர் தான் சீப் கெஸ்ட். நான் பேச ஆரம்பிக்கையில் நீங்க இருக்கணும் சரியா....."  சொல்லிக்கொண்டே கல்லூரிப் பேருந்தைப் பிடிக்கப் பறந்தாள் ஆயிஷா.

"சரிம்மா, உம்மாவோடு வந்திடறேன் இன்ஷா அல்லாஹ்" சிரித்துக்கொண்டே பதிலுரைத்தார் வாப்பா.

"சிரிக்காதீங்க, என்ன தான் இருந்தாலும் நம்ம வூட்டு பொண்ணுவொ பேசிற தலைப்பையா தேர்ந்தெடுத்திருக்கிறாள்; முத்தமாம் முத்தம், எனக்கு வர இஷ்டமில்லை....." கோபத்துடன் சமையலறைக்குள் நுழைந்த உம்மா.

ஆயிஷா, மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி. கல்லூரியின் இலக்கியப் பேரவை சார்பில் நடத்தப்படும் விழாவுக்கு கலக்டர் அழைக்கப்பட்டிருக்கிறார். விழாவில் மாணவர்களின் பேச்சுப் போட்டியும், தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஆயிஷா தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு 'முத்தம்'. அதனால் தான் இத்தனை யுத்தம்.

"இதற்காகவா ரெண்டு நாளா குறிப்பெடுத்தீங்க வாப்பாவும் மகளும்..... சரியில்லைங்க....."  உம்மா மீண்டும் குமுறிக்கொண்டே சிற்றுண்டியை மேசையில் வைக்கும் போது.

"சரி விடு, நீ அவ கூடரெண்டு நாளா சண்டை போட்டே,  அதுதான் உனக்கு சஸ்பென்ஸ்ன்னு சொல்லியிருக்காள்...... , வந்து கேட்டுப்பாரு" 

"அஞ்சு மணிக்கு வர்றேன், ரெடியா இரு."  சிற்றுண்டி முடித்து அலுவலகத்திற்கு கிளம்பினார்.

கல்லூரியிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 'ஆயிஷா என்ன பேசப்போகிறாள்?' 

எல்லோரும் கேட்டுக்கொண்ட கேள்வியும் இதுதான்.

மணி 6:15  ஆகிவிட்டது, வாப்பாவை காணவில்லையே என்ற வருத்ததோடு வாசலை நோட்டமிட்டுக்கொண்டிருந்த ஆயிஷாவை பேச அழைத்தார் தொகுப்பாளர்.

கல்லூரி வாயிலைஅடையும் நேரம், ஆயிஷாவை தொகுப்பாளர் அழைக்கும் சப்தம் கேட்டு விரைவாக உள்ளே நுழைந்தனர் வாப்பாவும் உம்மாவும்.

மேடையில் உள்ளோரையும், வந்திருந்தவர்களையும் வரவேற்று பேசி முன்னுரையினை முடிக்கும் நேரம், பெற்றோரைப் பார்த்த சந்தோசத்தில் பேச்சைத் தொடரந்துகொண்டிருந்தாள் ஆயிஷா.

".......... முத்தத்தினால், தனக்கு கிடைக்க வேண்டிய கவர்னர் பதவியினை ஒருவர் இழந்து விட்டார்,  அப்படி பதவி மறுக்கப்பட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. நான் ஒன்றும் குற்றம் புரியவில்லையே, முத்தம் கொடுப்பதில்லை என்று தானே சொன்னேன், இதற்கும் என்னுடைய பதவிக்கும் என்ன தொடர்பு? அந்த மனிதருக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது. "

"அன்பர்களே, உங்களுக்கும் கூட இந்த ஐயம் எழலாம், இன்னும், இது எந்த மாநிலத்தில் நடந்தது? என்றும் கூட கேட்கத் தோன்றும். பதவி இழப்பு இன்று ஒருவேளை நடந்திருந்தால் முத்தம் கொடுத்ததற்காக வேண்டுமானால் நேர்ந்திருக்கும்."

அவையில் ஒரே சிரிப்பொலி; உம்மாவுக்கோ மகள் அரசியல் பேசுகிறாளே என்ற வியப்பு!

நண்பர்களே! விஷயத்திற்கு வருகிறேன்,  நான் சொன்ன அந்த நிகழ்ச்சி ஏறத்தாழ ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. உமர் பின் கத்தாப் (ரழி) என்ற நபித் தோழர் 'கலீபா'வாக ஆட்சி புரிந்த நேரம், அந்த மனிதர் ஆளுனராக பதவியமர்த்த அழைக்கப்பட்டிருந்தார். அந்த நேரம் கலீபாவுக்கும் ஆளுநராக பதவியேற்க வந்திருந்தவருக்கும் நடந்த உரையாடலின் இடையே, "......நானெல்லாம் என் குழந்தைகளை கொஞ்சுவதா? முத்தமிடுவதா?? அப்படி எதுவுமே செய்தது கிடையாது" என்று அது ஏதோ குற்றமான செயல் போல சொன்ன மாத்திரத்திலேயே, கலீபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள், அந்த நபருக்கு தரவிருந்த பதவியினை ரத்து செய்து உத்தரவிட்டார்கள். 

குழம்பிப்போய் இருந்த அந்த நபரிடம் சொன்னார்கள், "உனது மனம் உன் குழந்தைகளிடமே இரக்கம் காட்டவில்லை கருணை காட்டவில்லையெனில், பிறகு நீர் எப்படி மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்துகொள்வீர்? இறைவன் மீது ஆணையாக உம்மை ஒருபோதும் ஆளுனர் ஆக்கமாட்டேன்" என்று கூறி திருப்பி அனுப்பினார்கள். 

அவை மிகுந்த அமைதியுடன் காணப்பட்டது, ஆயிஷா அடுத்ததாக தொடர்ந்தாள்.

முத்தத்திற்கும் கருணைக்கும் தொடர்பா?  ஆம் நண்பர்களே, அண்மையில் ஒரு அறிவியல் செய்தியினைப் படிக்க நேர்ந்தது. நாம் நம் குழந்தைகளைக் கொஞ்சி அரவணைத்து முத்தமிட்டு மகிழ்வது நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் பாசம் காரணமாக என்று நினைத்திருக்கிறோம், ஆனால் அது அவற்றையும் மீறி இதயத்தின்பால் ஊறுகின்ற கருணையின் காரணமாக என்றறியும் போது வியப்பை அளிக்கிறது, 

பெற்றோர் குழந்தையினை முத்தமிடுவத்தின் மூலம் அந்தக் குழந்தை ஓர் உணர்வு ரீதியான அரவணைப்பைப் பெறுகிறது. அதுவும் ஒரு தாய் முத்தமிடும் போது குழந்தையுடனான பாசப்பிணைப்பு உயிரியல் மூலம் உறுதிசெய்யப்படுகிறது, பெற்றோரின் இந்த ஆத்மார்த்தமான முத்தத்தினால், எந்த ஒரு எதிர்மறையான சூழ்நிலையிலும் தாழ்வுமனநிலை என்பது குழந்தையின் உள்ளத்தினைப் பாதிக்காது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது,

மேலும், குழந்தையினை முத்தமிடுவதால் குழந்தைக்கும் அதேவேளையில் பெற்றோருக்கும் மகிழ்ச்சியான ஒரு மனநிலையினை அடையமுடிகிறது, குழந்தையின் இதயம் சீராக செயலாற்ற பெரிதும் உதவுகிறது.

தாய் தன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டால் என்ன நடக்கிறதென்பதை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையை உங்களுக்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.  ஒரு தாய் தன் குழந்தையினை கருவில் சுமக்கும் போது அதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கான தேவைகளை ஈடுசெய்கிறாள். ஆனால் குழந்தை பிறந்த பிறகு வெளி உலகில் குழந்தையினைத் தாக்கும் நோய்க்கு எதிர்சக்திகளை உருவாக்குவதில் முத்தம் பெறும் பங்கு வகிக்கிறது. ஆச்யர்யமாக இருக்கிறதல்லவா?? ஆம், ஒரு தாய் முத்தமிடுவதன் மூலம் கிருமிகளின் மாதிரி எடுக்கப்பட்டு வெளித் திசுக்கள் மற்றும்,   நினைவுத்திறன் 'பி' வகை செல்கள் மூலம் அந்த கிருமிகளின் வீரியம் அழிக்கப்பட்டு, இதற்கான நோய் எதிர்ப்பு சக்திகள் உருவாக்கப்பட்டு அவை 'பி'வகை செல்களினால் நினைவுத்திறன் கொண்டு தாய்ப்பால் மூலம் குழந்தைக்குப் போய்ச்சேருகிறது. குழந்தையும் நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாப்பு பெறுகிறது.

எனவே தான் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே, அறிவியல் அறிந்திராத காலத்தில் தோன்றிய எங்கள் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், குழந்தைகளை முத்தமிடாத ஒரு கிராமவாசியைப் பார்த்து, "இறைவன் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா??" என்று கூறினார்கள்.

"அன்பும் கருணையும் கலந்திருக்கும் முத்தத்தினைப்.........................."

வார்த்தையினை முடிப்பதிற்குள் அரங்கில் கரவொலி நிரம்பியிருந்தது. உம்மா, ஆயிஷாவின் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

- புதுசுரபி (ரஃபீக்)

19 Responses So Far:

Meerashah Rafia said...

மொத்தமும் முத்தான முத்துச்சொர்கள்..

ZAKIR HUSSAIN said...

To brother Rafeek , [ Hope this spelling is OK]

இதுமாதிரியான வித்தியாசமான கோணத்தில் நிறைய எழுதுங்கள்..ஒரு தேர்ந்த எழுத்துக்காரரின் தமிழ் வீச்சு அடிக்கடி உங்கள் எழுத்தில் இடம் பிடித்திருக்கிறது.

U.ABOOBACKER (MK) said...

இஸ்லாத்தின் முத்தான கருத்துக்களை முத்தாய்பாக சஸ்பென்சுடன் சொன்ன சகோதரருக்கு வாழ்த்துக்கள்.

மு.கி.அபுபக்கர்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அருமையான எழுத்து நடை அற்புதமான அர்த்தம் பொதிந்த வரலாற்று நிகழ்வினை பாடமாக சொல்லியவிதம் அருமை !

வாழ்த்துக்கள் !

புதுசுரபி said...

நன்றி சகோதரரே!
RAFEEQ என்று உச்சரித்தால் رفيق என்ற அரபிச்சொல்லுக்கு சரியாய் இருக்கும்!

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அழகான எழுத்து நடை!
அழகிய கருத்து கொண்ட ஆக்கம்!
வாழ்த்துக்கள்! சகோதரரே!

அப்துல்மாலிக் said...

ஹதீஸோடும் தொடர்புபடுத்தி முத்ததின் சிறப்பை விளக்கியது நன்று...

Yasir said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அழகான எழுத்து நடை!
அழகிய கருத்து கொண்ட ஆக்கம்!
வாழ்த்துக்கள்! சகோதரரே!

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மிக அருமையான எழுத்து, நடுவிலும் நிறைவிலும் மார்க்கம் போதித்த விதமும் அருமை சகோதரரே.

வாழ்த்துக்கள்.

என் யூகம் நீங்கள் ஜெயா செய்திச் சேனலில் செய்தி வாசிப்பவர் என்பது ! இது சரியா ?

புதுசுரபி said...

@ஆமினா - வ அலைக்கும் ஸலாம் சகோதரி!
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
உங்களின் யூகம் சரிதான்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் ரஃபீக்,

இந்த அவசர உலகத்தில் குழந்தைகளை கொஞ்சுவதற்கு கூட நேரம் ஒதுக்குவதில்லை நிறைய பெற்றோர்கள். இதை படித்த பிறகாவது சில பெற்றோர்கள் பிள்ளைகள் கொஞ்சுவார்கள் என்று நம்பலாம்.

நல்ல நினைவூட்டல் ஹதீஸுடன்.

மிக்க நன்றி

அதிரை தாருத் தவ்ஹீத் said...

//இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், குழந்தைகளை முத்தமிடாத ஒரு கிராமவாசியைப் பார்த்து, "இறைவன் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?" என்று கூறினார்கள்//

இந்த ஹதீஸ் ஸஹீஹ் புகாரீயின் 5998ஆவது எண்ணில் பதிவாகியுள்ளது.

இந்த ஆக்கத்தில் இடம்பெறும் //உமர் பின் கத்தாப் (ரழி) என்ற நபித் தோழர் 'கலீபா'வாக ஆட்சி புரிந்த நேரம், அந்த மனிதர் ஆளுனராக பதவியமர்த்த அழைக்கப்பட்டிருந்தார். அந்த நேரம் கலீபாவுக்கும் ஆளுநராக பதவியேற்க வந்திருந்தவருக்கும் நடந்த உரையாடலின் இடையே, "......நானெல்லாம் என் குழந்தைகளை கொஞ்சுவதா? முத்தமிடுவதா?? அப்படி எதுவுமே செய்தது கிடையாது" என்று அது ஏதோ குற்றமான செயல் போல சொன்ன மாத்திரத்திலேயே, கலீபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள், அந்த நபருக்கு தரவிருந்த பதவியினை ரத்து செய்து உத்தரவிட்டார்கள்//

எனும் செய்தியின் மூலம் யாது என சகோ. ரஃபீக் தெரியப்படுத்தினால் நன்றியுடையவனாவேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்பு கருணை பற்றிய அருமையான ஆக்கம்.வீட்டில் பிள்ளைகளோடு துவங்கும் அன்புதான் பொது வாழ்கையிலும் சீரிய ஆளுமைக்கும் அடிப்படை என்பதை தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.அருமை.

sabeer.abushahruk said...

கைதட்டவேண்டும்போல இருந்தது அந்த மேடைப்பேச்சுக்கு மட்டுமல்ல, கட்டுரை வாசித்த விதத்திற்கும்தான்.

இறுதி வரிகளில் மெய் சிலிர்த்தது சகோதரரே, வாழ்த்துக்கள்.

புதுசுரபி said...

@சகோ.ஜமீல்: உமர்(ரழி) அவர்களைக் கண்டால், பெண்கள், குழந்தைகள் அஞ்சி நடுங்குவர்; பெருமானார்(ஸல்) அவர்களே ஒருமுறை உமர்(ரழி) அவர்களிடம் தமாஷாய் சொல்லியும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உமர்(ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றவுடன் ஆற்றிய முதற்சொற்பொழிவில், ”என்னைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம்” என்று பேசினார்கள்.
அப்படி அஞ்சப்பட்ட கலீஃபாவே குழந்தைகள் மீது (நாட்டு மக்கள் மீதும்) இரக்கமும் கருணையும் கொண்டவர்களாக மாறினார்கள். தன்னுடைய ஆளுநர்களும் கூட தன்நாட்டு மக்களுடன் அவ்வாறே நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அவ்வாறு குணமில்லாத ஒருவர் ஆளுநர் பத்விக்குத் தகுதியில்லாதவர் என்று மறுப்புரைத்தார்கள்.
சுருங்கச்சொல்லின்: ஆட்சியாளருக்கு அன்பும் கருணையும் அவசியம்

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய சகோ. ரஃபீக்,

மிக அறுமையான ஆக்கத்தின் மூலம் சிறப்பான செய்தி சொல்லியிருக்குறீர்கள்.

எனினும் மார்கத்திலிருந்து குறிப்புகள் தரும்போது அதற்கான மூலத்தை (ஹதீஸோ குரான் வசனமோ) தருவது வீண் குழப்பங்களைத் தவிர்க்கும். அதைத்தான் ஜமீல் காக்கா மிக நாசுக்காக கேட்டிருக்கிறார்கள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். மொத்தத்தையும் படித்தபின் முத்தான இந்த ஆக்கம் மேலும் இனிமை சேர்க்கும் விதமாக மார்க்கவிளக்கத்துடன் கோர்க்கபட்டுள்ளது அருமை. வாழ்துக்கள்.

Unknown said...

Assalamu Alaikkum,

Dear brother Mr. Pudhusurabi Rafeeq,

A short novel like story about kissing beloved children is touching and moving our hearts.

As you have mentioned, a child constantly needs touching(hugging), kissing to feel safe, become confident, and for well being. I think its inherent in the human nature to hug and kiss our children that increases the bonding.

I used to observe parents who is having strong loving and bonding with their own children, expressing similar tendancies of love and kindess towards other children regardless of languages and races, thats the selflessness, love and kindness of universal natured towards fellow human beings(and children).

But there can be exceptions.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

அன்புடன் சீசன்ஸ் said...

அன்பிற்குரிய சகோ. ரஃபீக்,
அருமையான கட்டுரை தந்துள்ளார் .வாழ்த்துகள் அவருக்கும் உங்களுக்கும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு