Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 13 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 04, 2011 | , ,



ஊரின் தேவைகளும் உமரின் சேவைகளும்

உமர் படிக்கும் காலங்களில் பல பொழுது போக்குகளில் ஈடுபட்டிருந்தார். முதலில் அவரது கவனம் ரேடியோவின் பக்கம்தான் திரும்பியது. பத்திரிகைகளில் வரும் ‘ரேடியோ செய்வது எப்படி?’ என்ற கட்டுரையைப் படித்து, டிரான்சிஸ்டர் உதிரி பாகங்களை கடையிலிருந்து வாங்கி சிறிய சாக்பீஸ் பெட்டியில் ரேடியோ செய்தார். அதில் வெற்றியும் கண்டார். படிப்பில் கவனமில்லையே என்று நாங்கள் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் வாசலில் அவரது ரேடியோ முனுமுனுத்துக் கொண்டிருக்கும்.

எல்லா அலை வரிசைகளும் எடுக்கூடிய ஒரு பெரிய ரேடியோ செய்யவேண்டும் என்பதற்காக எங்கள் மாமா எல்லா உதிரி பாகங்களையும் உமருக்கு வாங்கிக் கொடுத்தார்கள். மாணவர் உமரின் ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே! அங்கீகாரம் தந்த மாமா, ரேடியோவின் அங்கங்களையும் வாங்கித் தந்ததும் உமரின் அங்கமெல்லாம் பூரித்தன! எதையும் செய்யத் துடிக்கும் இதயம் கொண்ட உமர், இதையும் செய்யத் துடித்தார் . ஒரே முனைப்பாக இணைப்புகள் கொடுத்தார். ரேடியோ இயங்கத் துவங்கியது. அதை அப்படியே மாமாவிடம் தந்துவிட்டார். எங்கள் மாமாவுக்கு உமரோடு பிணைப்பு அதிகமானது.

கல்லூரியில் பேராசிரியர் N.A. சாகுல் ஹமீது ஒலி, ஒளி காட்சிக்குப் பொறுப்பாளராக இருந்தார். அப்போது உமர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். N.A.S. உடன் சேர்ந்து கல்வி தொடர்பான படங்களையும், கலைப் படங்களையும் திரையிட உதவினார். கல்லூரியின் ஆண்டு விழாக்களிலும் இலக்கிய மன்றக் கூட்டங்களிலும் முக்கிய விருந்தாளிகள் மற்றும் பேச்சாளர்களின் பேச்சுக்களை ஒலிப்பதிவு செய்தார்.

உமருக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது. ஒரு விலையுயர்ந்த புகைப் படக் கருவி வைத்திருந்தார். N.A. சாகுல் ஹமீது சாருடன் சேர்ந்து கல்லூரி விழாக்களில் புகைப்படம் எடுப்பார். இருவரும் எடுக்கும் படங்களில் தொழில் நுட்பம் இருக்கும். புகைப் படக் கருவி பழுதடைந்துவிட்டால் அதற்கு வைத்தியமும் பார்ப்பார் உமர்!. உமர் வீட்டிலேயே இருட்டறை தயார் செய்து பிலிம் டெவலப்பிங், ஃபோட்டோ பிரிண்டிங் ஆகிய பணிகளைச் செய்வார். இருட்டறையிலேயே டெவலப்பர், ஃபிக்சர் போன்றவைகளை வைத்திருப்பார். பிளிம்களை ‘டச்’ செய்து பிரிண்டும் போடுவார்.

ஸ்க்ரீன் ப்ரிண்டிங்கையும் இவர் விட்டு வைக்கவில்லை. வெள்ளை பிலிமில் எழுத்து அல்லது படங்களை அண்ணனை வைத்து வரைந்து, தாமே தயாரித்து வைத்திருந்த ரசாயனம் பூசப்பட்ட ஸ்க்ரீன் மேல், படம் வரையப்பட்ட பிலிமை வைத்து சூரிய ஒளியில் எக்ஸ்போஸ் செய்வார். இந்த ஸ்க்ரீனைப் பயன்படுத்தி பிரிண்ட் செய்து நகல் எடுப்பார்!

முன்பு டிரான்சிஸ்டர் ரேடியோவுக்குத்தான் மவுசு அதிகம். நிறையப் பேர் அதை கையில் வைத்துக் கொண்டுதான் செய்திகள், கிரிக்கட் வர்ணனைகள் கேட்ப்பார்கள். பேட்டரி செல்கள் பயன்படுத்துவதால் அது தீர்ந்தவுடன் மீண்டும் வாங்கியாகவேண்டும்; பணச்செலவு! இந்தச் செலவை மிச்சப் படுத்துவதற்காக உமர் எளிமிநேட்டர் என்ற எளிய சாதனத்தைத் தன் கைப்படச் செய்தார். காயில்களை அவரே சுற்றினார். கடையில் புதிதாக வாங்குகிற எளிமிநேட்டரோடு ஒப்பிடும்போது இது மலிவு. மின் தொடர்பு கொடுத்துவிட்டால் டிரான்சிஸ்டர் ரேடியோ தொடர்ந்து பாட ஆரம்பித்துவிடும். எளிமை மிகு உமர், எலிமிநேட்டர்களை ஏராளமானவர்களுக்குத் தாராளமாக செய்து வழங்கியிருக்கிறார். நன்றாகச் சம்பதித்தார் நல்ல பெயரை!

1980- களில் கையடக்கமாக ஒரு கணினி வந்திருந்தது. அதில் செய்தியை தட்டச்சு செய்து அச்செய்தியை ஒலியாக மாற்றி, அதை நாடாவில் பதிவு செய்து, கிரீச் ஒலி எழுப்பக் கூடிய இந்த செய்தியை மற்றொரு கணினியில் ஏற்றினால் இதில் முன்பு தட்டச்சு செய்யப்பட்ட செய்தி திரையில் அப்படியே வரும்! போட்டி மிகுந்த இந்த உலகில், முந்திக் கொள்வற்காக வியாபாரத் தொடர்பான செய்திகளை மற்றொரு ஊருக்கு அனுப்புவதற்கு தன் நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் உமர்!

உமர்தம்பியும் நானும் துபாயை விட்டு 2001-ல் ஊர் வந்தபின் அவர் ஓய்ந்துவிடவில்லை! தான் துபைக்குப் போகுமுன் செய்து கொண்டிருந்த பணிகளை மீண்டும் துவக்கினார்.

தனக்கு அமீரகத்தில் ஏற்பட்ட அனுபவங்களை இங்கும் பயன்படுத்த எண்ணினார். அதற்கான வரவேற்புகளும் வந்தன. பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு கார் விற்பனை மற்றும் சேவை நிறுவனத்துக்கு மென்பொருள் செய்ய அவருடைய மகன் மொய்னுதீனுக்கும், அவருடைய அன்பிற்குப் பாத்திரமான N.B.சாகுல் ஹமீதுக்கும் ஆலோசனைகள் சொல்வதில் உறுதுணையாக இருந்தார். உமரின் வழிகாட்டலில் அந்த இரு இளைஞர்களும் அந்தப்பணியை ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்துமுடித்தனர். அந்த நிறுவனத்துக்கு ஆலோசனைகளும் உதவிகளும் தேவைப் படும்போதெல்லாம், தொலைபேசி மூலமாக அழைப்பார்கள். இருவரும் உடனே சென்று பணியை முடித்துக் கொடுத்துவிட்டு வருவார்கள்.

இதே போல சென்னையில் உள்ள ஒரு குடி நீர் சுத்திகரிப்பு சாதனம் (Water Purifier) விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்திற்கு உமரும் அவருடைய மகனும் ஒரு மென்பொருளை உருவாக்கிக் கொடுத்தார்கள். இருவரும் சென்னைக்குச் சென்று அதன் செயல் முறையை அவர்களுக்கு விளக்கிக் காட்டினார்கள். இந்த மென்பொருள் அந்த நிறுவனத்தில் இன்னும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

நானும் உமர்தம்பியும் ஊரில், காலையில் நடைப் பயிற்சிக்காகச் செல்லும்போது ஹாஜி M.S.தாஜுதீன் அவர்களைச் சந்திப்போம். தற்கால கல்வி தொடர்பாகப் பேசும்போது, இமாம் ஷாபி பள்ளியைப் பற்றியும் பேச்சு வரும். உமரின் பேச்சுக்களில் இருந்த கருத்துக்களின் முக்கிய பகுதியைப் புரிந்துகொண்டார் M.S.T. உமரை அவருக்குப் பிடித்துவிட்டது.

நம்மூரில் பெண்கள் கல்லூரி ஒன்று நிறுவ வேண்டும் என்பது M.S.T. அவர்களின் நீங்காத ஆசை. பெண்கள் கல்லூரி நிறுவ முயற்சி மேற் கொண்டிருந்தார். கற்றோர், பெற்றோர், மற்றோர் அனைவரயும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பல தரப்பிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டு, ‘கல்லூரி தேவை’ என்பது முடிவானது. இதைப்பற்றி நம்மூர்ப் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய வேண்டியதாயிற்று. இதற்காகப் புள்ளி விவரம் எடுக்கவேண்டும். உமர்தம்பி மீது நம்பிக்கை வைத்திருந்த M.S.T. அவர்கள், அந்தப் பொறுப்பை உமரிடம் கொடுத்தார். ‘நம்மூரில் எத்தனை பேர், பெண்கள் கல்லூரியில் படிக்க விருப்பப்படுகிறார்கள்’ என்பதற்கான புள்ளி விவரம் தயரித்துத் தரும்படி கேட்டுக்கொண்டார். பைதுல்மால் புள்ளி விவரங்கள் தயாரிக்க உமர்தம்பிக்கு உதவ முன் வந்தது.

இந்தப் பணிக்காக பைத்துல்மால், படித்துவிட்டு வீட்டில் இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளைப் பயன்படுத்தியது. இந்தப் பணிக்காகப் படிவங்கள் வடிவமைக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டன. மாணவிகள் வீடு வீடாகச் சென்று தாய்மார்களிடம் வினாக்கள் தொடுத்து, தகவல்களைப் பெற்றனர். பெறப்பட்ட தகவல் படிவங்கள் உமரிடம் வந்தன. உமர் அவற்றின் உதவியைக் கொண்டு பெண்கள் கல்லூரி தொடர்பான புள்ளி விவரம் தயாரித்தார்.

புள்ளி விவரங்கள் எடுப்பதில் அவருக்கு இருந்த அனுபவங்களைப் பார்த்து நான் அயர்ந்து போனேன்! உமர் என் உள்ளதில் உயர்ந்து போனார்! கல்வியில் உமர் காட்டிய ஆர்வத்தையும், சொன்ன யுக்திகளையும் உணர்ந்துகொண்ட M.S.T. அவர்கள் அவருக்கு இமாம் ஷாபி மேல் நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர் பதவியை வழங்கி, அவரைப் பெருமைப் படுத்தினார். உமர் அதை தனது கடமையாக நினைத்தாரே தவிர பெருமையாக நினைக்கவில்லை!

நூல்களின் மேல் இருந்த ஆர்வம் காரணமாக, தனது மகன் மொயனுதீன் மற்றும் N.B.சாகுல் ஹமீது ஆகியோருடன் இணைந்து, காதிர் முகைதீன் கல்லூரி நூலகத்திற்கு ஒரு மென்பொருள் உருவாக்க முனைந்தார். மாணவர்களுக்கு நூல்கள் கொடுத்தல், திரும்பப் பெறுதல், புதிய நூல்களைப் பதிதல் போன்ற தகவல்களை அறிவிக்கும் ஒரு மென்பொருளை வடிவமைக்க முயற்சி மேற்கொண்டார்.

தனக்கும் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியைத் தரக்ககூடிய ஒரு பொழுது போக்கு உமரிடம் இருந்தது. அதுதான் மீன் வளர்ப்பு!

தொடரும்..
-- உமர்தம்பி அண்ணன்

6 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பல்வேறு அம்சங்களை அறியத்தரும் அரிய சித்திரத்தொடர்.

ZAKIR HUSSAIN said...

நல் உள்ளங்களின் இழப்பின் அவசியமும்..இறைவன் மூடி வைத்திருக்கும் தத்துவமும் இன்னும் புரியவில்லை.

வாழ்க்கை இறைவனின் ஞானத்துக்கும், மனிதனின் சிற்றரிவின் போராட்டத்துக்கும் இடைப்பட்டது என நினைக்கிறேன். துரத்தி அடிக்கும் நிதர்சனம்...திரும்ப திரும்ப வந்து தீயில் விழும் விட்டில் பூச்சியாய் மனித வாழ்க்கை......தெளிவின் முடிச்சு இன்னும் அகழவில்லை.

சகோதரர் உமர் தம்பி இப்போது நம்முடன் இருந்தால் அவரின் சாதனைகளை வாவன்னா சாரை வைத்து எழுதி அதை புத்தகமாக வெளிட்டிருக்களாமோ என சிந்திக்க வைத்திருக்கிறது வாவன்னா சாரின் எழுத்துக்கள்.

வாழ்க்கையிலும் VCR மாதிரி ஒரு ரிவைன்ட் பட்டன் இருந்திருக்களாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//1980- களில் கையடக்கமாக ஒரு கணினி வந்திருந்தது. அதில் செய்தியை தட்டச்சு செய்து அச்செய்தியை ஒலியாக மாற்றி, அதை நாடாவில் பதிவு செய்து, கிரீச் ஒலி எழுப்பக் கூடிய இந்த செய்தியை மற்றொரு கணினியில் ஏற்றினால் இதில் முன்பு தட்டச்சு செய்யப்பட்ட செய்தி திரையில் அப்படியே வரும்//

அப்படியே கண்முன்னால் வந்து நிற்கிறது அந்த பாக்கெட் PCயும் அதன் (Demo) செயல்பாடுகளும் !

ஸ்பீக்கரில் இருக்கும் காந்தம், அதன் கருநிற அடர்த்தியான பேப்பர், அதிகாலை வீட்டு முற்றத்தில் விழும் காலைச் சூரியனின் வெளிச்சத்திலும் வீட்டின் ஓட்டுக் கூரையில் எங்கோ கண்ணுக்குத் தெரியாத இடத்தில் இருக்கும் துவாரத்திலிருந்து வரும் வெளிச்சத்தில் அயர்ன் பத்த வைக்கும்போது எழும் மெல்லிய புகை அதன் நடன அசைவுகளும், அங்கே சூழ்வதும் ! அதனை ரசிக்கும் அழகே தனிதான் !

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------

Death…
Is it an end
Or
it is an initial?

It ends the one
and
Initiates the others…
Ends and erases…
Initiates and seeds…!

Died one
does not feel
the pain…
The pain that
prolongs
in beloved ones.

Deads die ones
Others die
every moment from there!

Sabeer Ahmed

Ahamed irshad said...

சிற‌ப்பான‌ தொட‌ர்..

Shameed said...

காலேஜ் நிகழ்சிகளுக்கு அடிகளார் காலேஜ் வந்தபோதும் மறுமுறை உயர் நீதிமன்ற நீதிபதி ஜனாப் இஸ்மாயில் அவர்கள் காலேஜ் நிகழ்சிகளுக்கு வந்தபோதும் அண்ணன் N.A.SHAHULHAMEED போட்டோ எடுக்க என்னை பணித்ததும் நம் ஊரில் நாங்களே F M ரேடியோ வில் ஒலிபரப்பு செய்ததும் எலிமினேட்டர் செய்து விற்றதும்.பிளாக் & ஒய்ட் போட்டோ சொந்தமாக பிரின்ட் எடுத்துக்கொண்டதும்
இந்த நிகழ்ச்சி அப்படியோ எங்களுக்கும் நடந்தது இதை படித்ததும் எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு