படித்து முடித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருந்தாலும் அதற்கான முயற்சிகளை திட்டமிட்டு மேற்கொள்ளாத காரணத்தால் வேலை கிடைக்காமல், அல்லது விரும்பிய துறையில் வேலை கிடைக்காமல் போகிறது. கீழ்க்காணும் 8 வழிகளை நீங்கள் கடைபிடித்தால் நிச்சயம் நீங்கள் விரும்பிய துறையில் எளிதில் வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற நம்பிக்கையில் கல்வி களஞ்சியம் (kalvikalanjiam.com) இந்த முயற்சியை எடுத்துள்ளது.
1. நீங்கள் படித்த துறையில் மட்டும் வேலை வாய்ப்பை பெற முயற்சி செய்யுங்கள். தற்காலிக வருமானத்தை மனதில் கொண்டு உங்களது எதிகாலத்திற்கு உதவாத வேலை வாய்ப்புகளை உதறி விடுங்கள். நீங்கள் எடுக்கும் சிறிய முடிவு கூட உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்யும்.
2. கிராமப்புறங்களில் அல்லது வேலை வாய்ப்பு குறைவாக உள்ள பகுதிகளில் உள்ளவர்கள் வேலை வாய்ப்பு அதிகமாக உள்ள நகர் பகுதிகளுக்கு வருவது சிறந்தது. நண்பர்களுடன் சேர்ந்து இடம் மற்றும் உணவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
3. வேலை சம்பந்தமான Naukri, monster, timesjobs போன்ற பல இணையதளங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அடிக்கடி இந்த இணைய தளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கவும் வேண்டும். அப்போதுதான் நீங்கள் வேலை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவல் நிறுவனங்களுக்கு தெரிய வரும். Linked In என்ற இணையதளத்தில் பதிவு செய்து உங்களுடைய துறையில் வேலை வாய்ப்பிற்கு உதவும் நண்பர்கள் மற்றும் பல நிறுவனங்களின் HR ஆகியோரை நண்பர்களாக்கி கொள்ளுங்கள். Linked In இணையதளம் வேலை வாய்ப்பிற்கு உதவும் ஒரு சிறந்த இணையதளமாக உள்ளது. கல்வி வேலை வாய்ப்பு சம்பந்தமான தகவல்களை கொடுக்கும் கல்வி களஞ்சியம் இணையதளத்தையும் மறந்து விடாதீர்கள் .
4. வேலை வாய்ப்பை பெற்று தரும் அல்லது வேலை வாய்ப்பிற்கு உதவும் பல்வேறு Consultancy என்று சொல்லப்படும் நிறுவனங்களை தொடர்பு கொண்டு வேலை பெற முயற்சி செய்யுங்கள்.இன்றைய சூழ்நிலையில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இது போன்ற Consultancy மூலமாகவே வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் வேலை கிடைப்பதற்கு முன்னே பணம் செலுத்துவதை தவிர்த்திடுங்கள். வேலை கிடைத்ததும் பணம் தருவதாக கூறுங்கள். ஏமாற்றும் நிறுவனங்களிடம் உஷாராக இருங்கள் (ஏமாற்றும் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இணையதளத்தில் அந்த நிறுவனத்தை பற்றிய விசயங்களை ஆராயுங்கள். consumercomplaints.in போன்ற இணையதளங்களில் பலரது கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்).
5. நாளிதழ்களில் வெளியாகும் வேலை வாய்ப்பு சம்பந்தமான விவரங்களை தவற விடாதீர்கள். The Hindu போன்ற நாளிதழ்களில் வேலை வாய்ப்பு செய்திகளுக்கென்றே தனியாக பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
6. உங்கள் துறையில் பணி புரியும் உங்கள் கல்லூரிகளில் பயின்ற சீனியர் மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் உதவி கேட்கலாம். நேரம் கிடைத்தால் அவர்களை நேரில் சந்தித்து உங்களுடைய Resume ஐ கொடுத்து விடுங்கள்.
7. உங்களுடைய துறையில் அதிக பயிற்சி பெற அல்லது நீங்கள் பின்தங்கியுள்ள கம்ப்யூட்டர் பயிற்சி (Software Courses), பேச்சு திறன் பயிற்சி (Communication Training) போன்ற பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு தயங்காதீர்கள். சிறந்த வேலை வாய்ப்பிற்கு வழி செய்யும் பயிற்சி நிறுவனங்களை பலரிடம் விசாரித்து தேர்ந்தெடுங்கள். கல்விக்காக நீங்கள் செய்யும் செலவு ஒரு போதும் வீணாகாது. (கல்வி களஞ்சியம் வழிகாட்டி குழுவை தொடர்பு கொள்ளலாம்)
8. இறுதியாக, நேரத்தை வீணாக்காதீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து சினிமாவிற்கு செல்வது, வணிக வளாகங்களில் பொழுதைக் கழிப்பது, காதல் மற்றும் இன்னும் பிற தீய செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றால் உங்கள் நேரம் அதிகமாக வீணடிக்க படுவதோடு உங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும்.
இந்த வழிமுறைகளை பின்பற்றுவதால் நீங்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்று உங்கள் எதிகாலம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம். மேலும் உங்களுடைய ஆலோசனைகளையும் கமெண்ட் இல் தெரிவித்து வேலை தேடும் பலருக்கு உதவுங்கள்.
Thanks to : கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)
கல்வி பணியில் என்றும் உங்களுடன்,
- V.A. Syed Abdul Hameed
21 Responses So Far:
நல்ல ஆலோசனைகள்....படித்த துறையிலயே பணிவாய்பை பெறுவது சாலச்சிறந்தது...உங்கள் பொருளாதார பின்புலமும் அதற்க்கு சப்போர்ட் செய்ய வேண்டும்
//கல்விக்காக நீங்கள் செய்யும் செலவு ஒரு போதும் வீணாகாது.//
இந்த கருத்துக்கு உடன் படுகிறேன், காச காசாலே எடுக்கலாம்
பகிர்வுக்கு நன்றி..
நல்ல பயனுள்ள அறிவுறுத்தல்கள்...
வேலைத் தேடிச் செல்லும் இடங்களில் நல்ல நட்பை உருவாக்கிக் கொள்ள் வேண்டும் அவர்களில் யேரேனும் ஒருவர் தகுதியான வேலை அமையும் தருணம் பார்த்து தகவல் தரலாம்.
தகுதியான வேலைக்கு என்று இண்டர்வியுக்கு சென்று வந்ததும் மீண்டு அழைக்கிறோம் என்று சொல்லிய கம்பெணிகள் அந்தக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் அழைக்க வில்லை எனில் தொடர்பு கொண்டு இண்டர்வியூ முடிவு தகலவைக் கேட்கனும், ஒருவேளை அதே நேரத்தில் தேர்ந்தெடுக்க வில்லை என்றால் மற்றொன்ன்றை முயற்சிக்க உந்துதலாகவும் இருந்திடும். புலிவருது புலிவது என்று காத்திருக்க வேண்டியா அவசியமிருக்காது.
//நீங்கள் படித்த துறையில் மட்டும் வேலை வாய்ப்பை பெற முயற்சி செய்யுங்கள். தற்காலிக வருமானத்தை மனதில் கொண்டு உங்களது எதிகாலத்திற்கு உதவாத வேலை வாய்ப்புகளை உதறி விடுங்கள். நீங்கள் எடுக்கும் சிறிய முடிவு கூட உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்யும்.//
சமயங்களில் குடும்பத்தில் நிகழும் சம்பவங்கள் இது போன்ற கொள்கையை விட்டுக்கொடுக்க வைத்து விடுகிறது.
வேலை தேடுபவன் வேலைக்காரன்...வேலையை உருவாக்குபவன் முதலாளி.... [ 25 வருசத்துக்கு முன் என் படிக்காத பாட்டி சொன்னது ]
துடிப்பான இளைஞர்களுக்கு எடுப்பான அறிவுரை
//துடிப்பான இளைஞர்களுக்கு எடுப்பான அறிவுரை//
நீங்க அத வெடுப்பா சொன்னவிதம் அருமை
நல்ல வேலை, விவரமாக எடுத்த்ச் சொன்னீர்கள். இல்லையெனில், படிப்புக்கும் செய்யும் தொழிலுக்கும் சம்மந்தமில்லாத வேலை செய்பவர்களால் வேலையில் பிடிப்புன்றி ஒரு தோற்றுப்போன சமுதாயமே உருவாகும்.
பதிவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
அதிரை நிருபர் கவனத்திற்கு: ஆங்காங்கே 'அதிரை அதிரை' என்று சேர்த்து நல்ல பேர் வாங்கலாம்ல? :)
மிகவும் உபயோகமான கட்டுரை இது. வேலை தேடுவோர்/வேலை தேடி சென்னை வருவோர் முக்கியமாக 8-ஆம் விஷயத்தில் தான் கோட்டை விட்டு விடுகிறார்கள். இன்ஷா அல்லாஹ், எட்டையும் ஏற்று நடந்த்தால் எட்ட வேண்டிய உயர்வை எட்டலாம்.
//பேச்சு திறன் பயிற்சி (Communication Training) போன்ற பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு தயங்காதீர்கள்// குறிப்பாக ஆங்கில மொழிப் புலமையில் நம்மவர் திறமை மிகவும் குறைவானதால் அவர்களின் படிப்பு மற்றும் அனுபவங்கள் எவ்வளவு இருந்தாலும், நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வில் குறிப்பாக “way of expression"ல் அவர்களால் திறம்பட செய்து காட்ட முடியாம இறுதியில் தோல்விகளைச் சந்திக்கின்றனர். நான் கண்கூடாகக் கண்ட பேருண்மை. சென்ற 5 மாதங்கட்கு முன்பாக எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதறிந்து என்னால் முடிந்த அளவு யு.ஏ.இ. தமிழ்ச் சங்கம், முகநூல் வழியாக அறிவிப்புச் செய்து சுமார் 1500 மனுக்கள் பெற்று அவர்களை எல்லாம் நேர்முகத்தேர்வுக்கு அனுப்பி வைத்தேன். அதில் நான் மேலே சொன்ன காரணத்தால் தோல்வியினைச் சந்தித்தனர். அதனாற்றான், 1981 முதல் இந்த நிமிடம் வரை basic englsih grammar இலவசமாகக் கற்றுக் கொடுக்கின்றேன். (எனது மரியாதைக்குரிய ஆசான்கள் SKMH வாவன்னா சார் ஆகியோர் கற்றுக் கொடுத்த முறையில்)
ஏற்றம் பெற பயன்மிகு 8 எளிய வழிகள்.ஜஸாக்கல்லாஹ்.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் உஷார்:வெளிநாட்டு பல்கலை கழகங்களை கண்டறிவது பற்றி கூறும் சாவித்ரி: பொதுவாக தரமான கல்வி நிறுவனங்களில் கண்டிப்பு அதிகமிருக்கும். ஆனால், போலிகள், மாணவர்களின் தகுதி, கல்விக் கட்டணம் இன்னபிற விஷயங்களில், கொஞ்சம் தளர்வாகத்தான் இருப்பர். சம்பந்தப்பட்ட நாட்டின் அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் வழியாக, பல்கலைக்கழகங்கள் தேடுவது பாதுகாப்பானது.மேற்படி கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் படித்த அல்லது படிக்கும் சீனியர் மாணவரின் பரிந்துரையை நாடலாம். அவர் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பது மிக அவசியம்.ஏனெனில், பெரும்பாலான தரமற்ற வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் அகப்பட்டுக் கொள்ளும் மாணவர்கள், பின் அவர்கள் தரும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, தங்கள் நாட்டிலிருந்து, புதிய மாணவர்களை அந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்த்துவிடும் ஏஜன்ட்டுகளாகவும் மாறிவிடுகின்றனர்.குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்தில் இந்தியர்களின் பங்கு அதிகமாகத் தெரிந்தால், முன்னெச்சரிக்கை அதிகம் வேண்டும். "பாரின் பல்கலைக்கழகத்தின் ஏஜன்டுகள்' எனக் கூறிக் கொண்டு, பகட்டான விளம்பரங்களுடன், சிலர் தற்காலிக அலுவலகம் திறந்திருப்பர். வெளிநாட்டு மேற்படிப்பிற்கு ஆர்வம் காட்டும் மாணவர்களைக் குறிவைப்பர்.வெளிநாட்டு மேற்படிப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் நம்பிக்கையான நிறுவனங்களை அணுகலாம். ஆலோசனை நிறுவனங்கள் மாணவர்கள், பெற்றோர் இரு தரப்பிற்கும் கவுன்சிலிங் வழங்குவர். அதில் அவர்கள் தெளிவு பெற்றதும், குறிப்பிட்ட நாட்டிற்குச் செல்ல, எழுத வேண்டியத் தேர்வுகள், படிப்பு விவரம், கல்விக் கடன் ஏற்பாடு, கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது, முன்னாள் மாணவர் அறிமுகம், விண்ணப்பித்தலுக்கான அத்தியாவசிய சான்றிதழ் மற்றும் நடைமுறைகள், பணம் கட்டுவது, விசா ஏற்பாடுகள் இவை அனைத்திற்கும் உதவிகரமாக நின்று வழிநடத்தும்.
இந்தியர்கள் உட்பட 15,000 மாணவர்களின் விசா ஆஸ்திரேலிய அரசு ரத்து கடந்த ஓராண்டில் ஆஸ்திரேலிய அரசு 15,066 வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இதனால் ஆயிரக் கணக்கான இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் தோல்வியடைந்தது அல்லது வகுப்பை புறக்கணித்த காரணத்தால் 3,624 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும், படிப்பதாகக் கூறிக்கொண்டு சட்டவிரோதமாக வேலை செய்த அல்லது விபசாரத்தில் ஈடுபட்டது ஆகிய காரணங்களால் 2,235 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. இதுதவிர பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஓராண்டில் மொத்தம் 15,066 விசா ரத்து செய்யப்பட்டது. முந்தைய ஆண்டைவிட இது 37 சதவீதம் அதிகம்.
இதன் காரணமாக, ஆயிரக் கணக்கான இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மாணவர்களைவிட சீன மாணவர்கள் அதிக அளவில் இருந்த போதிலும், அவர்களது விசா அதிக அளவில் ரத்து செய்யப்படவில்லை.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி 3,32,709 வெளிநாட்டு மாணவர்கள் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் வசித்தனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக மாணவர்கள். 3ல் ஒரு பகுதியினர் தொழிற்கல்வி விசா பெற்று டிப்ளமோ படித்து வந்தனர்.
மொத்த வெளிநாட்டு மாணவர்களில் 6ல் ஒருவர் அதாவது 17 சதவீதம் பேர் இந்தியர்கள். தொழிற்பயிற்சி, பல்கலைக்கழக கல்வி, ஆங்கில கல்வி அல்லது பள்ளிக் கல்வி உட்பட மொத்தம் 8 பிரிவுகளின் கீழ் மாணவர் விசா வழங்குகிறது. பிரிட்டனுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு சிக்கல்
உயர்கல்விக்காக பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசாவுக்காக சமர்ப்பிக்கப்படும் வங்கி கணக்கு அறிக்கை தொடர்பாக, பிரிட்டன் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் செயல்படும் 1,900 கூட்டுறவு வங்கிகளில் இருந்து பெறப்படும் வங்கி கணக்கு அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என, அறிவித்துள்ளது.
இந்த வங்கிகள் அனைத்தும் கூட்டுறவு வங்கிகள். அவை இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்பட்டு வருபவை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:மாணவர்களின் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, அவர்களின் வங்கி கணக்கு அறிக்கையை பரிசோதிப்பதற்காக சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளைத் தொடர்பு கொண்டால், அங்கிருந்து சரியான பதில் வருவதில்லை அல்லது தொடர்பே கொள்ள முடிவதில்லை அல்லது எந்த பதிலும் தெரிவிப்பதில்லை. பிரிட்டன் குடியேற்ற சட்டப்படி, ஒரு வங்கி தொடர்ந்து இதுபோன்ற சரியான பதிலை அளிக்கவில்லையெனில், அதன் கணக்கு அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.கூட்டுறவு வங்கிகளுக்குப் பதிலாக, இந்தியாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட மற்றும் சர்வதேச வங்கிகள் என, 85 வங்கிகளில் மாணவர்கள் சேமிப்பு கணக்கு வைத்திருந்து, அதன் அறிக்கையை விசா விண்ணப்பத்துடன் அனுப்பினால், அது ஏற்றுக் கொள்ளப்படும். தகுதி வாய்ந்த அந்த 85 வங்கிகளின் பட்டியலிலும், மேலும் சில மாற்றங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். இந்த புதிய விதிமுறை, நவம்பர் 24ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கிகள் அனைத்தும் கூட்டுறவு வங்கிகள். அவை இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்பட்டு வருபவை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:மாணவர்களின் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, அவர்களின் வங்கி கணக்கு அறிக்கையை பரிசோதிப்பதற்காக சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளைத் தொடர்பு கொண்டால், அங்கிருந்து சரியான பதில் வருவதில்லை அல்லது தொடர்பே கொள்ள முடிவதில்லை அல்லது எந்த பதிலும் தெரிவிப்பதில்லை. பிரிட்டன் குடியேற்ற சட்டப்படி, ஒரு வங்கி தொடர்ந்து இதுபோன்ற சரியான பதிலை அளிக்கவில்லையெனில், அதன் கணக்கு அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.கூட்டுறவு வங்கிகளுக்குப் பதிலாக, இந்தியாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட மற்றும் சர்வதேச வங்கிகள் என, 85 வங்கிகளில் மாணவர்கள் சேமிப்பு கணக்கு வைத்திருந்து, அதன் அறிக்கையை விசா விண்ணப்பத்துடன் அனுப்பினால், அது ஏற்றுக் கொள்ளப்படும். தகுதி வாய்ந்த அந்த 85 வங்கிகளின் பட்டியலிலும், மேலும் சில மாற்றங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். இந்த புதிய விதிமுறை, நவம்பர் 24ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்எல்சியில்...
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனது உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, 12 தலைமை பொது மேலாளர்கள் (மெக்கானிக்கல் / எலக்ட்ரிகல், பைனான்ஸ், மைனிங், சிவில்), பல்வேறு பிரிவுகளுக்கான 19 துணைப் பொது மேலாளர்கள், 131 பொறியாளர்கள் ஆகிய பணிகளுக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது : பதவிக்கு ஏற்ப 32 முதல் 56 வரை. சம்பளம் : பதவிக்கேற்ப ^20,600 முதல் ^73,000 வரை.
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த கிளையிலும் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு விதிமுறைகள் பின்பற்றப்படும்.
குறிப்பிட்ட பதவிகளுக்கு தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதற்கான தேதி மற்றும் இடம் ஆகியவை தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்,www.nlcindia.com இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 14&11&2011. மேலும் விவரங்களுக்கு: அக்டோபர் 22&28 நாளிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழை பார்க்கவும்.
ரயில்வேயில்...
இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் துறையின் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிசஸ் தேர்வை (01/2012&எஸ்.சி.ஆர்.ஏ.) நடத்துகிறது. மொத்தம் 42 பணியிடங்களுக்காக நடக்கும் இத்தேர்வு சென்னை, மதுரை உட்பட நாட்டின் 41 முக்கிய நகரங்களில் நடக்கிறது. கல்வித் தகுதி: மெட்ரிக்குலேஷன் அதற்கு நிகரான மேல்நிலை பள்ளி படிப்பு மற்றும் பட்ட படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல், வேதியியலில் ஏதேனும் பாடத்தை எடுத்து படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 2012 ஜனவரி 1ம் தேதியில் 17 முதல் 21 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு வயது தளர்வு உண்டு. தகுதியான விண்ணப்பதாராகள் http:// www.upsc.gov.in என்ற இணையதள முகவரிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 21.11.2011. மேலும் விவரங்களுக்கு அக்டோபர் 22&29ம் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழை பார்க்கவும்.
பெல் நிறுவனத்தில் பொறியாளர் பணி
நாடு முழுவதும் உள்ள 4 மண்டலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மின் உற்பத்தி திட்டங்களில் பெல் நிறுவனத்தின் சார்பில் உதவி மேலாளர், மேலாளர், முதுநிலை மேலாளர் ஆகிய பதவிகளில் பணியாற்றுவதற்கு மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், சிவில், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், கெமிக்கல் ஆகிய பிரிவுகளில் அனுபவம் வாய்ந்த பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: உதவி மேலாளர் 38, மேலாளர் 41, முதுநிலை மேலாளர் 45க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது வரம்பு தளர்த்தப்படும். முன் அனுபவம் முறையே 9, 12, 15 ஆண்டுகள் இருக்க வேண்டும். சம்பளம்: ^32,900 முதல் ^66,000 வரை. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.careers.bhel.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே 1.11.2011க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.
இக்னோ, எஸ்எஸ்சிஐ அளிக்கிறது பேரிடர் மேலாண்மை பணிக்கான படிப்பு
பூகம்பம், சுனாமி, தீ, புயல் & மழை உட்பட இயற்கை பேரிடர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன. பூமி வெப்பமடைதல் காரணமாக பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுவதே இவற்றுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், சுற்றுச்சூழல் சீர்கேடு, சரியான கழிவு மேலாண்மை இல்லாதது ஆகியவற்றால் மண் வளமும், காற்றின் தூய்மையும் வேகமாக குறைந்து வருகின்றன. இதனால், இயற்கை சீற்றங்கள் அதிகரித்து மக்கள் திடீர் அழிவுக்கும் சொத்துக்கள் இழப்புக்கும் ஆளாகின்றனர்.
எனவே, இந்த சூழ்நிலையில் பூகம்பம், சுனாமி, புயல் மழை & வெள்ளம், தீ, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களை சமாளித்து சேதத்தை குறைக்க தேவையான நவீன நிர்வாக முறைகள் அவசியமாகிறது.
இதை உணர்ந்து இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகமும், செக்யூரிடி அண்ட் இன்டலிஜென்ஸ் சர்வீசஸ் (எஸ்எஸ்சிஐ) நிறுவனமும் இணைந்து முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை முதல்முறையாக அறிமுகம் செய்கின்றன.
பிஜி டிப்ளமோ இன் செக்யூரிடி ஆபரேஷன்ஸ், பிஜி டிப்ளமோ இன் ஃபயர், சேப்டி அண்ட் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் என்பது அந்த படிப்புகளின் பெயர். ஓராண்டு மற்றும் 6 மாதங்களில் இதை படித்து சான்றிதழ் பெறலாம். படிப்பு காலத்தில் கல்வி உதவித் தொகை உண்டு. படிப்பை முடித்த பிறகு வேலைவாய்ப்பு உறுதியை இந்த கல்வி நிறுவனங்களே அளிக்கின்றன.
படிப்புகள் 2012 ஜனவரி மாதத்தில் தொடங்குகின்றன. எஸ்எஸ்சிஐ மையங்களில் நேரடி வகுப்புகள் மூலம் மட்டுமே படிக்க முடியும். இதில் சேர நவம்பர் 20ம் தேதி நுழைவு தேர்வு நடக்கிறது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வில் பங்கேற்க வேண்டும். சென்னையிலும் இவை நடக்கவுள்ளன. மேலும் விவரங்களை www.sisindia.com, www.ssci.co.in என்ற இணைய தளங்களிலோ, செக்யூரிடி ஸ்கில் கவுன்சில் இந்தியா லிட்., ஏ28, 29, ஆக்லா இண்டஸ்டிரியல் ஏரியா, பேஸ் 1, புதுடெல்லி&20, போன் 011 & 29536982 என்ற முகவரி, போன் எண்ணில் அறியலாம் .
ஜிஐசி ரீ நிறுவனத்தில் வேலை
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா குளோபல் ரீஇன்சூரன்ஸ் சொல்யூஷன் நிறுவனத்தில் உள்ள 50 பணியிடங்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற திறமையுடன்ஆர்வமிக்க இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்நிறுவனத்தின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு கிளைகளில் துணை மேலாளருக்கு (ஸ்கேல் 1) இணையான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. கல்வித் தகுதி: இளங்கலை பொறியியல் (கடல்சார் / ஏரோநாட்டிக் / மெக்கானிக்கல் / கெமிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / சிவில் / ஐடி முதுகலை (புள்ளியியல் / கணிதம் / மார்க்கெட்டிங் / மேலாண்மை / ரிஸ்க் மேலாண்மை; தொடர்பியல் / மனித வள மேலாண்மை / நிதி / வணிகவியல் / சட்டம்) உட்பட எம்பிபிஎஸ். வயது வரம்பு: 30.09.2011ன்படி 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு, குழு விவாதம், நேர்காணலுக்குப்பின் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்து தேர்வு சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தாவில் நடைபெறும். விண்ணப்பங்களை www.epostonline.in.GIC என்ற இணையதள முகவரிக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 05.11.2011. மேலும் தகவலுக்கு 22&29ம் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழை பார்க்கவும்.
சிஏ படிக்க விரும்பும் மாணவர்களேஇன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா கல்வி நிறுவனத்தால், சிஏ படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வே சி.ஏ. சி.பி.டி. என்பதாகும்.இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இந்த தேர்வு நடைபெறும். ஆண்டிற்கு நான்கு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது.கல்வித்தகுதி
சிஏ சிபிடி தேர்வெழுத விரும்புவோர் கணக்குப்பதிவியல் பாடம் எடுத்து படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேரச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்வு முறை
சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் 200 கேள்விகள் கேட்கப்படும். இரண்டு பிரிவுகளாக கேட்கப்படும் ஒவ்வொரு பகுதிக்கும் 2 மணி நேரங்கள் அளிக்கப்படும். பேப்பரில் மாணவர்கள் தேர்வெழுதும் விதத்திலும், ஆன்லைனில் தேர்வெழுதும் விதத்திலும் தேர்வுகள் அமையும்.முதல் தாளில் அடிப்படை கணக்குப்பதிவியல் மற்றும மெர்க்கன்டை லா பாடப்பிரிவில் இருந்தும், இரண்டாம் தாளில் பொது பொருளாதாரம் மற்றும் குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட் பிரிவு கேள்விகளும் கேட்கப்படும். கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும். தவறான பதில்களுக்கு எதிர்மறையான மதிப்பெண்கள் உண்டு.நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் போது பதிவுக்கட்டணம் மற்றும் டியூஷன் கட்டணம் சேர்த்து ரூ.6000 செலுத்த வேண்டும். தேர்வு அறிவிப்பு வெளியானதும், தேர்வுக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். தேர்வுத் துறை தேர்வு மையங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடும். அனுமதிச் சீட்டுக்களும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.ஒவ்வொரு ஆண்டும் 4 முறை அதாவது பிப்ரவரி, மே, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் சிஏ சிபிடி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள் மட்டுமே மேற்கொண்டு சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் படிக்க இயலும்.
தமிழக அரசு நடத்தும் இலவச ஐ.ஏ.எஸ். தேர்வுப் பயிற்சி பற்றிய தகவல்கள்தமிழ்நாட்டிலிருந்து இத் தேர்வுக்கு விண்ணப் பித்துள்ளவர்கள் இந்த சிறப்புப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இப் பயிற்சி வகுப்புகள் பொதுவாக டிசம்பர் மாதத்தில் துவங்கி 6 மாத காலம் வரை நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்புகளில் ஏற்கனவே கலந்து கொண்டிருப்பவர்களும் சிவில் சர்விசஸ் முக்கியத் தேர்வு வரை எழுதியிருப்பவர்களும் கலந்து கொள்ள முடியாது.முழு நேரம் பயிற்சி மையத்திலேயே தங்கிப் படிப்பது, பகுதி நேர மாலை வகுப்புகளில் அங்கே தங்காமலே படிப்பது என 2 வகைகளாக இது நடத்தப்படும். இப்படி இந்த பயிற்சியானது தங்கிப் படிப்பது தங்காமல் படிப்பது என பிரிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எந்தப் பிரிவினருக்கு எத்தனை இடங்கள் என்பது கீழே தரப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டவர்கள்: தங்கிப் படிப்பது 42, தங்காமல் படிப்பது 21.
கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்: தங்கிப் படிப்பது தலா 6 மற்றும் தங்காமல் படிப்பது தலா 3.
மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் டீநோட்டிபைட் பிரிவினர்: தங்கிப் படிப்பது 36 மற்றும் தங்காமல் படிப்பது 18.
பிற சமூகத்தினர்: தங்கிப் படிப்பது 10 மற்றும் தங்காமல் படிப்பது 5.
தாழ்த்தப்பட்டவர்: தங்கிப் படிப்பது 98 தங்காமல் படிப்பது 49.
எஸ்.டி. தங்கிப்படிப்பது 2 மற்றும் தங்காமல் படிப்பது 1.
தகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பட்டப்படிப்பு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 21 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35 வயதுக்குள்ளும் பிறர் 33 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.கட்டணம்
பொதுப் பிரிவினர் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும். பிறருக்குக் கட்டணம் இல்லை. எனினும் இவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமலிருக்க வேண்டும். அதற்கு மேலிருப்பவர்கள் மாதக் கட்டணம் கொஞ்சம் செலுத்த வேண்டும். பகுதி நேரப் பயிற்சியில் சேருவோருக்கு விடுதி வசதி கிடையாது. விருப்பப் பாடத்தில் பயிற்சிக்கு இவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். பகுதி நேர வகுப்புகள் மாலை 6.30லிருந்து 8.30வரை மட்டுமே நடத்தப்படும்.இந்த பயிற்சியில் சேருவதற்கான தகுதியானது பொது நுழைவுத் தேர்வு ஒன்றின் மூலமாக மட்டுமே நடத்தப்படும். இத் தேர்வானது சென்னை, சிதம்பரம், கோயம்புத்தூர், தர்மபுரி, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் சிவகங்கை ஆகிய ஊர்களில் நடத்தப்படும்.
இத் தேர்வானது அப்ஜக்டிவ் கேள்விகளைக் கொண்டிருக்கும். இதில் இந்திய அரசியல், பொருளாதாரம், புவியியல், பொது அறிவியல் மற்றும் நடப்புச் செய்திகள் ஆகியவற்றில் கேள்விகள் இடம் பெறும். இத் தேர்வானது நவம்பரில் நடத்தப்படலாம்.விண்ணப்பிக்கும் முறை
முழு விபரங்களையும் படிவத்தையும் http://www.civilservicecoaching.com என்னும் இணைய தளத்திலிருந்து பெறலாம். தகுதிகள், கட்டணங்கள், விடுதி வசதி போன்ற அனைத்து விபரங்களையும் இத் தளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். விண்ணப்பத்துடன் ஜாதி, பட்டப்படிப்பு ஆகிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி
Director and Director General of Training Anna
Institute of Management, Chennai 600 028.
தொலைபேசி எண்கள்: 044 26211475, 26211909
பொதுவாக செப்டம்பர் மாதத்தில் இதற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் நிர்ணயிக்கப்படுவதால், தொடர்ந்து இது குறித்த அறிவிப்புக்காகக் காத்திருக்கவும்.
விடுமுறையில், அயல்நாட்டிலிருந்து அதிரைக்கு வருகிற அதிரைத்தமிழர்கள் அவசியம் மலயாளம் கற்றுவாருங்கள்!
ஞான் பறஞ்சது புரிஞ்சோ அண்ணாச்சி?
-வாவன்னா
அஸ்ஸலாமு அலைக்கும்.
// விடுமுறையில், அயல்நாட்டிலிருந்து அதிரைக்கு வருகிற அதிரைத்தமிழர்கள் அவசியம் மலயாளம் கற்றுவாருங்கள்!
ஞான் பறஞ்சது புரிஞ்சோ அண்ணாச்சி? //
சேட்டா நீங்கள் சொன்னது நல்ல புரிஞ்சு ஜாவியா புஹாரி சரிபில் மலயாளம் ஹஜரத் பயானை தெரிந்து கொள்வதற்கென்று.
எனக்கு ஊடகத் துறையில் சேர வேண்டும் என ஆர்வம்.ஆனால் சேருவதற்கான வழி முறைதான் தெரியவில்லை. வழிமுறைகள் கூறினால் உதவியாக இருக்கும்.
உண்மையான கருத்து, படிப்பை முடித்ததும் பலபேர்கள் உடனடியாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு சம்பந்தமில்லாத பணிகளுக்கு சென்று விடுகின்றனர், இதன் காரணமாக
10 வருடங்கல் களித்தும் குறைவான சம்பளம் கிடைக்கிறது,
Post a Comment