Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாழ்த்தி வரவேற்போம்...... ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | October 21, 2011 | , , ,


அதிரைப்பட்டினத்து மண்ணின் மைந்தர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்...

நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் நமதூரில் பேரூராட்சி தலைவர் பதவிக்காக போட்டியிட்ட நமதூரின் அன்புச்சகோதரர்கள் (பஷீர், அஸ்லம், அஜீஸ் மற்றும் முனாஃப்) நால்வரில் நம் விருப்பு, வெறுப்புகளைத்தாண்டி இறைவன் நாட்டத்தில் எவர் வென்று அரியணையில் அமர்ந்தாலும் அது நம் ஊர் நலனுக்கு நன்மையே என்ற நல்லெண்ணத்திலிருப்போம்.

அவர்களை நாம் குடும்பம், தெரு, சங்கம், அரசியல் கட்சி சார்பு போன்ற பல பிரிவினைகளைத் தாண்டி நாம் ஒரு நடுநிலையோடு பாராட்டும் அதேவேளையில் அவர்களின் பணி சிறக்க, ஊர் வளம்பெற நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் இறைஞ்சியே ஆகவேண்டும். அவர்கள் மூலம் இனிவரும் நாட்களில் ஊர் நல்லது பலவற்றை இன்முகத்துடன் எதிர்பார்த்த வண்ணம் இருப்பது நம் எல்லோரும் அறிந்ததே.

என்ன செய்ய? நால்வரில் யாரேனும் ஒருவர் தான் வர இயலும் என்ற உண்மையான நிதர்சனம் நிலவி வருவதால் நாம் விரும்பிய ஒருவருக்கு வாக்களித்திருப்போம். இல்லையேல் நால்வரையும் நான்கு சமநிலை நாற்காலிகளில் அமர வைத்து அழகுபார்த்திருக்க மாட்டோமா என்ன?

இனி இறைவன் நாட்டத்தில் வென்று தலைவர் நாற்காலியில் அமர இருப்பவர்கள் கொஞ்சம் கவனத்துடன் கவனிக்க வேண்டியது சில:

அரசியல் கட்சிகள் போல் தாம் வென்று அரியணை ஏறிவிட்டோம் என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில் தோற்ற சகோதரர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும், அவர்கள் சார்ந்த தெருக்களையும், சங்கங்களையும் பழிக்கு பழி தீர்க்கும் நடவடிக்கையிலோ அல்லது அது போன்ற எண்ணம் சிறிதளவேனும் உள்ளத்தில் உருவாகிவிட வேண்டாம்.

ஊரின் எந்த மூலையாக இருந்தாலும் அது நம் எதிர்கால முன்னேற்றத்திற்கும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் (அது எம்.எல்.ஏ. தேர்வுக்கு கூட வழிவகுக்கலாம்) உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருக்கும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் நல்ல பல நடவடிக்கைகள்/செயல்பட்டால் வெறுப்பான மக்களின் உள்ளங்களை கூட எளிதில் கவர்ந்து விடலாம். மக்களின் மனதை கவந்து விட்டால் இனி வெல்வதற்கு உலகில் வேறென்ன இருக்கிறது?

அரசின் அனைத்து திட்டங்களையும், உதவிகளையும் அவரவருக்கு குடும்பம், தெரு, கட்சி, சங்கம் பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் அல்லலின்றி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.

நமக்கு அரசு அதிகாரத்தின் மூலம் என்ன சக்தியை நிர்ணயித்திருக்கிறதோ அதற்கு மேல் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. தேவையான நேரத்தில் தன் அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்தி பலன்கள் பல நம்மூருக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

அநாவசியமாக வரும் மதக்கலவரங்கள், பூசல்களுக்கும் அதனால் வரும் பதட்டமான சூழ்நிலைகளுக்கும் உரிய காரணம் கண்டு பிடிக்கப்பட்டு உரியவர்களை தன் சமயோசித முயற்சியில் தயக்கமின்றி தொடர்பு கொண்டு ஊரில் மதநல்லிணக்கமும், அமைதியும் அன்றாடம் நிலவ ஆவண செய்ய வேண்டும்.

ஆணவத்தில் ஆள்வதை விட சாதாரன மனிதனாக இருந்து சாதனைகள் பல புரிந்திடல் வேண்டும்.

ஊரில் ஒரு பொதுவான நல்ல விளையாட்டுத்திடல் உருவாக்கி ஊரில் இருக்கும் சிறுவர்கள், வாலிபர்களுக்கு மாலைப்பொழுது ஒரு நல்ல பொழுதாக கழிய வழிவகை செய்து தர வேண்டும்.

வென்று விட்டோம் என்பதற்காக வாக்குகள் சரிவர கிடைக்காத தெருக்களுக்கு சென்று வீண் வம்புகளில் ஈடுபடாமலும், அங்கு சென்று எல்லோரும் எரிச்சல் அடையும் விதம் சப்தமாக வெடிவெடித்து மேலும் வெறுப்புகளை சம்பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேனும்.

உண்மையான இஸ்லாம் மார்க்கம் பேணும் ஒரு முஸ்லிமாக இருந்தால் அது நம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல மாற்று மத சமுதாயத்தினர்களுக்கும் அது பாக்கியமாக அமைந்து விடும். காரணம், சரியாக மார்க்கம் பேணும் ஒருவர் நிச்சயம் ஒருபோதும் யாருக்கும் அநீதி இழைக்கமாட்டார் அவர் யாராக இருந்தாலும் சரி. அக்கம் பக்கம் உறவு பேணுவார். ஹராம், ஹலால் பேணுவார். தீயவைகளை ஒரு போதும் எங்கும் எப்பொழுதும் அனுமதிக்கமாட்டார். தவறை சுட்டிக்காட்ட ஒருபோதும் தயங்கமாட்டார். ஊர் நலனுக்காக தன் பதவியை துச்சமாக மதித்து அதை துறக்க என்றும் தயங்கமாட்டார் அதனால் அவருக்கு பேரிழப்பு வந்தாலும் சரியே. கடந்த கால இஸ்லாமிய நல் ஆட்சியாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை படித்தறிந்து அதையே தன் வாழ்க்கைக்கும் ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்வார். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை நொடிப்பொழுதும் படைத்த இறைவன் கண்காணித்துக்கொண்டிருக்கிறான் என்று உறுதியாக நம்பி அவனுக்கு பயந்து தவறுகள் செய்ய துணியமாட்டார். 

எனவே மாற்று மதசகோதர,சகோதரிகள் கூட எதற்கும் தயங்காமல், துணிவுடன் ஒரு உண்மையான இஸ்லாமியனுக்கு ஆதரவு கொடுக்க என்றும் தயக்கம் காட்டக்கூடாது. காரணம் அவன் இஸ்லாமியர்களை மட்டும் பார்க்கப்போவதில்லை நம் எல்லோரையும் படைத்த இறைவனுக்கே அஞ்சிக்கொள்பவனாக இருக்கிறான். நிச்சயம், மாற்றுமதத்தினர் என்பதற்காக ஒருபோதும் அவர்கள் மீது அநீதி செலுத்தமாட்டான்.

அவரவர் விருப்பு, வெறுப்புகளை மறந்து வென்று வருபவருக்கு என் இனிய வாழ்த்துக்களும், ஊர் நலன் சிறக்க, வலம் பெற, ஊரில் உள்ளவர்கள் எல்லா நலன்களும் பெற்று சந்தோசமாகவும், சகோதர மனப்பான்மையுடனும், அமைதியாகவும் வாழ்ந்து ஈருலக வெற்றிகள் பெற என் து'ஆவும் சென்றடையட்டுமாக...... ஆமீன்... !

- மு.செ.மு. நெய்னா முஹம்மது

4 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதனாலென்னெ ! நாமும் வாழ்த்தி வரவேற்போம் யார் வெற்றியாளர்களாயிருந்தாலும்... இனியாவது ஊருக்கு என்று நல்லதைச் செய்து காட்டி அடுத்தக் கட்டமாக தொகுதியைக் கைப்பற்ற முயற்சியிங்களப்பா !

தேர்தல் நாள் அன்று சொல்லியதே இன்றும் நினைவூட்டலுக்காக :-

//நாமும் சாதாரன மனிதர்கள் தானே, வீடுவிடாக வாக்கு சேகரிக்கச் செல்லும்போது உங்கள் வீட்டுப் பிள்ளை என்று சொல்லித்தானே வைத்தோம் ஆதலால் தோற்றவர்களும் நம் வீட்டுப் பிள்ளைகள் என்று அரவனைக்க கற்று கொடுக்கவும்தான் வேண்டுமா? வேண்டியவர் வேண்டதவர் என்று யாவரிடமும் வாக்கு கேட்டிட கெஞ்சிய மனம் தோற்றவர்கள் நமம்வர்கள்தானே என்று கொஞ்சிட மனம் இடம் தராதா ?! நிச்சயம் மனம் வைத்தால் மார்க்கம் (வழி) உண்டு !

மனம் விட்டு பேசுங்கள்….///

sabeer.abushahruk said...

அருமையாக வகுப்பெடுத்தீர்கள் எம் எஸ் எம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மண்ணின் மகிமையை மேலும் மெருகூட்டி எழுத வசதியாக நல்ல தலைவா வாயென நன்னெறிகளுடன் அழைக்கும் நெய்னா!

இன்றைய வெற்றியாளர் அதிரைக்கு ராஜா.(வாழ்த்துக்கள்)
அடுத்த மூவர்களே வருங்கால MLA க்கு தயாராகுங்கள்.(வாழ்த்துகிறோம்)

KALAM SHAICK ABDUL KADER said...

//(அது எம்.எல்.ஏ. தேர்வுக்கு கூட வழிவகுக்கலாம்//

முதற்படியில் கால் வைத்தால்
முன்னேறும் படிகள் மீதும்
எந்நேரமும் கவனம் இருக்க்கும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு