அதிரைப்பட்டினத்தில் இன்று தேர்வு நிலை பேரூராட்சி மன்றத்திற்காக தேர்தல் நடைபெறும் நாள். ஆடி அடங்கியிருக்கும் பிரச்சாரத்தின் உச்சம் அதில் மச்சம் யாருக்கு என்று உரசிப் பார்க்கும் நாள். ஊரார் ஒன்று கூடியும் பற்பல பிரிவுகளாகவும் அவரவர் விருப்பு வெற்றுப்புகளின் அடிப்படையிலும் சமுதாய நல்லெண்ண நோக்கிலும் / சுயலாப அரசியல் சூழலை அலசி ஆராய்ந்து வாக்களிக்கும் நாள்.
தேர்தல் அறிவித்த நாளிலிருந்து தனிப்பாதை வகுத்து ஆளாளுக்கு பிரிந்து ஒன்றுவிட்டவர்கள் எதிரும் புதிருமாகவும், நேசம் பாராட்டிய அடுத்ததடுத்த தெருக்காரர்கள் அடியாட்களைப் போல் குரூரப் பார்வை பார்த்தச் சூழலும் உருவானது நிஜமே.
சரி, நடந்தது நடந்ததாக இருக்கட்டும், வெற்றி பெற்றவர் நாம் விரும்பாதவராகவே இருந்திடட்டும், எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்ற உணர்வுகளுடன், ஆவேசம் கொள்ளாமல் அமைதி காத்திடுவோமென்றால் இழந்த மனங்களையும் மீண்டும் வெல்வோம் அவர்களின் மனதில் நிச்சயம் குடிகொள்வோம் நிரந்தரமாக. நாம் செய்வதாக வாக்களித்த பொதுப்பணிகளை அல்லாஹ் உங்களின் வாயிலாக நிறைவேற்ற வாய்ப்பளித்து இருக்கிறான் அதனைச் சிறப்புடன் செய்து நம் மக்களுக்கு நன்மை பயக்கும் காரியங்களை தொடர்ந்திடுங்கள் என்று வாழ்த்துவோம், அப்படிச் செய்வதற்கும் நாம் சலைத்தவர்களல்ல என்று நிருபிப்போம்.
இவைகள் எல்லாவற்றையும் விட, வெற்றியாளர்கள் நாம் விரும்பியவராக இருந்திருந்தால், ஆணவம் கொள்ளாமல், நிதானத்துடன் முதலில் அல்லாஹ்வுக்கு நன்றியுடையவர்களாக இருந்திடுவோம். வெற்றியை நமக்கென கிடைத்திட தோல்வியை தழுவியவர்கள் நம் சகோதரர்கள்தான் என்ற உரிமையில் அவர்கள்மீதான காழ்புணர்ச்சிகளை கலைந்து நட்பு பாராட்டுங்கள். அவர்களிடம் நேரில் சென்று உங்களால் என்ன பணிகள் ஊருக்கு செய்ய நினைத்திருந்தீர்களோ அதனை என்னிடம் எடுத்துரையுங்கள் நான் உங்களின் சார்பாக செய்கிறேன் என்ற உறுதியளியுங்கள் அவர்களுக்கும் நம்பிக்கையூட்டுங்கள். உங்களின் அனைத்து நற்பனிகளுக்கும் அவர்களைத் துணைக்கு அழையுங்கள்.
இது ஒன்றும் சாத்தியப்படாத நிகழ்வுகளல்ல ! தேர்தல் நேரத்தில் பிரச்சாரங்களில் அடுத்தவர்களின் மனம் நோகும்படி நிகழ்வுகள் நிழ்ந்திருந்தால் அந்தச் சகோதரரை சந்தித்து அவரிடம் மன்னிப்பு கேளுங்கள் அல்லது குறைந்த பட்சம் அவரை மேலும் நிந்திக்காமலிருந்திடுங்கள், அவைளுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள். தேர்தலில் கிடைத்த வெற்றியை விட அங்கே உங்களுக்கு கிடைக்கும் வெற்றி எல்லா வற்றையும் மிஞ்சும் வெற்றியாகும்.
22ம் தேதி அக்டோபர் 2011 முதல், அதே தெருவில் அதே உடையில், நடையில், கூடுமிடத்தில், தொழுமிடத்தில், விருந்தில் என்று ஒருவரையொருவர் சந்திப்புகள் தொடரும் அவைகள் எல்லாமே நமக்கிடையே நட்பையும் அன்பையும் பரிமாறிடும் களமாகத்தான் இருக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்…
நாமும் சாதாரன மனிதர்கள் தானே, வீடுவிடாக வாக்கு சேகரிக்கச் செல்லும்போது உங்கள் வீட்டுப் பிள்ளை என்று சொல்லித்தானே வைத்தோம் ஆதலால் தோற்றவர்களும் நம் வீட்டுப் பிள்ளைகள் என்று அரவனைக்க கற்று கொடுக்கவும்தான் வேண்டுமா? வேண்டியவர் வேண்டதவர் என்று யாவரிடமும் வாக்கு கேட்டிட கெஞ்சிய மனம் தோற்றவர்கள் நமம்வர்கள்தானே என்று கொஞ்சிட மனம் இடம் தராதா ?! நிச்சயம் மனம் வைத்தால் மார்க்கம் (வழி) உண்டு !
மனம் விட்டு பேசுங்கள்….
மனம் விட்டு பேசுங்கள்….
- அதிரைநிருபர் குழு
12 Responses So Far:
உருக்கமான நல்லுரை.
ஆமாம் வெற்றியின் மோகத்தில் குறிப்பாக கடைசி கட்டத்தில் தனிப்பட்ட முறையில் மிகவும் வருந்தும்படி பேசியது அவர்களால் தவிர்க்கமுடியவில்லை.அரசியலுக்கு இதெல்லாம் சகஜமாகிப்போய்விட்டது.நடந்தது போகட்டும்.தேர்தல் முடிந்த மாலை 5 மணிக்குப் பின் 4 முக்கிய தலைவர்களும் இணைந்து தவ்பா செய்துகொள்ளுங்கள்.வெற்றிவிழாவை 4 பேரும் சேர்ந்து சிறப்பாக்குவது ஊரின் நலனுக்கு அத்தியாவசிய கடமை.பகைமையை மறந்து அனைவரும் பழைய பாசக் கடலின் இணையுங்கள்.புது சேர்மனுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பது அதிரையின் நலனுக்கு மிக அவசியம்.
ஒன்றுபடுவோம் புதுசேர்மன் தலைமையில்!
இறைவா இஸ்லாமிய ஆட்சியை கொடு!
இன்ஷா அல்லாஹ் சாதிப்போம்.
நிச்சயம் பதவிக்காக பிரிந்த இதுவும் மறந்துப்போகும், ஒத்த தலமையின் கீழ் செயல்படவும், ஒன்றுபட்ட ஜமாத் வேண்டும் என்றும் துஆ செய்வோம்.. இன்ஷா அல்லாஹ்
Assalamualaikum
Will anyone arrange to take a copy of it, print at least 1000 copies and issue to each house before result is announced, this will make our brothers to think and act as per this message. May Allah help our brothers to avoid making fuss after result.
Regards
Abu Salih
அஸ்ஸலாமு அழைக்கும்
இதை நோட்டிசாக பயன்படுத்திக்கொள்ள "சலீம் காக்கா அனுமதி கேட்டுரிக்கிரார்கள்..பயன்படுத்திக்கொள்ளலாம?
மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------------
sabeer.abushahruk சொன்னது…
Wa alaikkumuSSalaam.
Wise people wise thoughts.
Good suggestion !
அன்பிற்கினிய (நட்பு) நிஜார் அஹ்மது:
தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்....
- நெறியாளர்
அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்று சொந்தங்களும் நட்புகளும் இந்த அரசியல் சூழ்ச்சியில் பகைத்துக்கொள்ளும் சூழலை இந்த பேரூராட்சி தேர்தல் உருவாக்கியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த பகைமையை தூண்டியாவர்களையும், தூண்டி உறுதுனையாக இருப்பவர்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக.
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். ( ஸூரத்துன்னிஸா 4:59)
மேல் உள்ள குர்ஆன் வசனத்தை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வோம்.
இந்த பதிவை நோட்டீஸாக தாராலமாக வெளியிடலாம், மேலும் மற்ற வலைத்தளங்களும் இந்த பதிவை மீள்பதிவு செய்யலாமே...
நல்லெண்ணம் இப்படியல்லவா இருக்க வேண்டும்....அல்லாஹ் நாம் அனைவரும் ஒற்றுமை என்ற கயிற்றை பற்றி பிடிக்க அருள் செய்வானக ஆமீன்..கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்....
அருமையன பதிவு.கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும். மிக அருமையான காலத்தின் கட்டாயம் கருதி எழுதிய ஆக்கம். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு சிறு யோசனை. தேர்தல் முடிந்ததும். போட்டியில் இருந்த "அணைத்து" நம் சகோதர்களையும் "அனைத்து" போகவேண்டியது நம் கடமை. எனவே தேர்தலுக்குப்பின் அனைவரையும் சங்கத்தில் அழைத்து ஒரு ஒருங்கினைப்பு கூட்டம் கூட்டினால் (போட்டால்) சிறிதாகினும் மனத்தாங்கள் , மனச்சோம்பல் நீங்கும். சங்கம் செய்யுமா? அதன் அங்கத்தினர் இந்த கோரிக்கையை வைப்பார்களா?
அதிரையின் அய்யாமுல் ஜாஹிலிய்யா நேற்றோடு மடிந்துவிட்டதா, இல்லை இன்னும் தொடருமா?
-வாவன்னா
Post a Comment