“ஒரே வயசு... ரெண்டு பெரியமனுசர்வோ... (உரையாடல்)”
யான்வுளே, வர்ர எலக்சன்லெ நீ யாருக்கு ஓட்டு போடப்போறா?
அடி அதெ யாண்டி கேக்குறா? வர்ர எலக்ஸன்லெ யாருக்கு ஓட்டு போட்ரதுண்டு ஒரே கொழப்பமா ஈக்கிதுவுளெ.
யாண்டி அப்புடி சொல்றா?
அது இல்லெடி, எலக்சன்லெ நிக்கிற எல்லார்மே நமக்கு தெரிஞ்ச அறிஞ்ச புள்ளெயெலுவொலா ஈக்கிதுஓ. அதான் யாருக்கு ஓட்டு போட்ரதுண்டு தெரியலெ.
இப்பொ அவ்வொல்ஒல்லாம் நம்ம புள்ளெயெலுவொளா நமக்கு கண்ணுக்கு தெரியுதுஹ. ஓட்டு முடிஞ்சி ஜெயிச்சி கொஞ்ச நாளுச்செண்டு நாமெ ஏதாச்சும் ஒதவி ஒத்தாசெண்டு அவ்வொள்ட்டெ கேட்டு போனா யாரு ஊட்டு புள்ளெயெல்வொளாட்டம் பேசுங்கெ.. இந்த அனுபவம் நமக்கு ஏற்கனவே ஈக்கிதுடீ...
ஆம்மாவுளே, நீ சொல்றதும் நெசந்தான். என்னா பண்றது யாருக்காவது ஓட்டு போட்டுத்தானே ஆவனும். நீ ஓட்டு போடாட்டி வேறெ யாராச்சும் ஒ ஓட்டை போட்டுட்டு போயிருவாங்கெ...
சரிடீ, இந்த தடவெ நம்ம புள்ளெயெலுவோ ஜெயிச்சி தெருவுக்கும் ஊருக்கும் ஏதாவது நல்லது செஞ்சா சரிதான். கடெசி காலத்துலெ நாமெ என்னெத்தெ அவ்வொல்ஒல்ட்டெ எதிர்பாக்குறது? ஏதோ சின்னஞ்சிறுசுக நல்லா ஈந்தா நாலு பேரு கண்ணுக்கு அழகுதானே?
அதுவும் நெசந்தான் யாரு ஜெயிச்சி வந்தா நமக்கென்னாண்டு நாம்மெ சும்மா ஈக்கெ முடியாது. ஏதோ இவ்வொ ஜெயிச்சா நல்லது செவ்வாஹண்டு நமக்கு முன்னாடியே ஓரளவுக்கு தெரிஞ்சிக்கிட்டு அவ்வொளுக்கு ஓட்டு போட்ர வேண்டியது தான்.
உங்கூட்டு காரவொ, எங்கூட்டு காரவொல்க்கு தான் ஓட்டு போட்ர நசீபுலாம் இல்லாமெ போச்சு. இப்புடி காலமெல்லாம் அவ்வொ ஆயுசு முச்சூடும் சம்பாதிப்பு, சம்பாதிப்புண்டே ஓடிடிச்சி..
என்னா பண்ணச்சொல்றா? மவுத்துக்கு அப்புறமாச்சும் நாமெ சந்தோசமா ஈக்கிறதுக்கு வேண்டிய அமல்வொலெ செய்வோம்வுளே.
நம்ம ஓட்டுவூட்லெ ஈந்தாலும், மெத்தெவூட்லெ ஈந்தாலும் நம்ம ஊரு சண்டெ, சச்சரவு, பெரச்சினெ எதுவும் இல்லாமெ அமைதியா ஈந்தாலே நம்மல்ஒலுக்கு பெரிய சந்தோசம் தாண்டீ...வெறெ என்னெத்தெ இந்த கடெசி காலத்துலெ நாம்மெ எதிர்ப்பாக்கப்போறோம் சொல்லு?
இன்னொ ஒன்னு டீ, ஜெயிச்சி வர்ர புள்ளெயெலுவோ எல்லாம் சேந்து நம்மூர்லெ ஓடிக்கிட்டு ஈந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ் ரயிலெ கொண்டு வர்ரத்துக்கு கொஞ்சம் மொயற்சி பண்ணி கொரலு கொடுத்தா ஏதாவது நடக்கும்டீ....
ஆம்மாடீ, நீ சொர்ரமாதிரி நம்மல்க்குள்ளெ ஒத்துமையா ஈந்தா ஏரோப்ளேனெயே நம்மூர்க்கு கொண்டு வந்துர்லாம்டீ....
அப்புடி பெருசாவெல்லாம் நாமெ எதிர்பாக்கலடீ.....அன்னன்னெக்கி ஊர்க்குப்பையெல்வொலொ ஒழுங்கா அள்ளிக்கிட்டு போயி சாக்கடை தண்ணி தேங்காத மாதிரி ஒவ்வொரு தெருவுலெயும் பாத்துக்கிட்டாலே கொசுக்கடி, மத்தெ நோய் நொடியெல்ஓ வராமெ நம்மலெ நாமெ காப்பத்திக்கிடலாம்டீ....
வேறெ என்னாவுளே நம்மள்க்கு வேனும்? ஊர்லெ மேம்பாலம் கட்டவா சொல்றோம்? இல்லாட்டி நம்மூரு கடலெ மெரினா பீச்சி மாதிரி அழகாக்க சொல்றோமா? அதுவும் இல்லாட்டி நம்ம புள்ளெயெல்வோ ஒலகம் பூரா ஈக்கிறது நாலெ சட்டுண்டு ஊடு வந்து சேர்ரதுக்கு ஏர்ப்போர்ட்டா கட்டச்சொல்லி பாடுபடுத்துறோமா?
கரெக்டுடீ, சின்னசின்ன வேலெக்கு கூட பஞ்சாயத்து போர்ட்டு, பட்டுக்கோட்டை தாலுக்கு ஆபீசுண்டு அலையனுமா ஈக்கிது? அதுக்கு பணங்காசு வேற செலவாகிப்போவுது.....யாந்தான் இப்புடி ஈக்கிறானுவொலோ?
நம்ம அம்பது அருவது வயசுக்குள்ளெ இந்த ஒலகத்துலெ என்னெஎன்னெத்தெ பாத்தாச்சி...இன்னும் பாக்கி ஈக்கிற காலத்துக்குள்ளெ என்னெஎன்னெத்தெ பாக்கப்போறோமோ தெரியலடீ.....
சரிவுளே, அசருக்கு பாங்கு சொல்லிட்டாஹெ....தொழுவப்போறேன்....இன்ஷா அல்லாஹ் அப்புறம் பேசிக்கிடலாம்டீ....தேத்தண்ணி வேறெ போடனும்...வரட்டா......
வாவுளெ.... நானுந்தான் ஒதுச்செய்யனும்...
- மு.செ.மு. நெய்னா முஹம்மது
18 Responses So Far:
//ஆம்மாடீ, நீ சொர்ரமாதிரி நம்மல்க்குள்ளெ ஒத்துமையா ஈந்தா ஏரோப்ளேனெயே நம்மூர்க்கு கொண்டு வந்துர்லாம்டீ....///
அடடா ! தெரியாம போச்சே ! சரி இனிமேலாவது நடக்குதான்னு பார்ப்போமே ! :)
இது இதுதான் MSM(n) டச் !
//உங்கூட்டு காரவொ, எங்கூட்டு காரவொல்க்கு தான் ஓட்டு போட்ர நசீபுலாம் இல்லாமெ போச்சு. இப்புடி காலமெல்லாம் அவ்வொ ஆயுசு முச்சூடும் சம்பாதிப்பு, சம்பாதிப்புண்டே ஓடிடிச்சி..
என்னா பண்ணச்சொல்றா? மவுத்துக்கு அப்புறமாச்சும் நாமெ சந்தோசமா ஈக்கிறதுக்கு வேண்டிய அமல்வொலெ செய்வோம்வுளே.//
அல்லாஹ்வும் அல்லாஹ்வின் ரஸூலும் காட்டி தந்த வழிமுறையில் வாழ்ந்தால் உங்கூட்டு காரவொ காலமெல்லாம் ஓட வேண்டிய அவசியமில்லை. துனியாவுலேயே சந்தோசமா ஈக்கலாம் பஞ்சாயத்து போர்ட்டு, பட்டுக்கோட்டை தாலுக்கு ஆபீசுண்டு பொம்ப்பலைவோ அலைய வேண்டியதில்லை.
மு.கி
உணர்வுகளால் உணர்ந்ததை அனுபவங்களும் பேசுகிறது !
நம்மூருக்கு உடனே ஏர்போட் கட்டவேண்டும்.வேட்பாளர்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச்செய்யவேண்டும். இப்படி இருந்தால்...
//அதுவும் நெசந்தான் யாரு ஜெயிச்சி வந்தா நமக்கென்னாண்டு நாம்மெ சும்மா ஈக்கெ முடியாது. ஏதோ இவ்வொ ஜெயிச்சா நல்லது செவ்வாஹண்டு நமக்கு முன்னாடியே ஓரளவுக்கு தெரிஞ்சிக்கிட்டு அவ்வொளுக்கு ஓட்டு போட்ர வேண்டியது தான்.//
தேர்தல் கமிசனே சொல்லவேண்டிய கட்டளையை நம்மாளு சொல்லி விட்டார்.
//உங்கூட்டு காரவொ, எங்கூட்டு காரவொல்க்கு ஓட்டு போட்ர நசீபுலாம் இல்லாமெ போச்சு. இப்புடி காலமெல்லாம் அவ்வொ ஆயுசு முச்சூடும் சம்பாதிப்பு, சம்பாதிப்புண்டே ஓடிடிச்சி..//
உங்கூட்டு காரவொலும் வேட்பாளரா நிக்கனும்டு ஆசையிருக்கா?
மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------
“மகனே! சபா(-மர்வா) இடையில் இருந்த செல்வமே! உன் கழுத்திலா இப்ராஹீம் கத்தியை வைக்கப் பார்த்தார்?”
E( )mail: “அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான்! அல்ஹம்துலில்லாஹ்!”
-வாவன்னா
மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
இங்கு இதுவரை கருத்திட்ட மற்றும் இன்னும் கருத்திட இருக்கும் அனைவருக்கும் ரொம்ப தேங்க்ஸ்....
வாவன்னா சார்,
எப்படி பல அரிய பொருட்களை கசக்கிப்பிழிந்து வடித்தெடுக்கப்பட்ட விலையுயர்ந்த வாசனைத்திரவியத்தின் ஒரு சொட்டு ஊருக்கே மணம் வீசச்செய்வது போல் தான் உங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் ஆராய்ந்து வடித்தெடுக்கப்பட்ட அற்புத சொல்லாகும்.
தாங்கள் என் கட்டுரைக்கு முன்பு இட்ட கருத்து இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது சில சமயம் சிந்தித்து சிரிக்கவும் வைக்கிறது அது இதோ "ஆமாத்மா, மொம்மாத்மாவுக்கு முன் மகாத்மா, பரமாத்மா எம்மாத்திரம்?"
குடும்ப, தெரு, ஊர் மற்றும் உலகின் அசொளகரியமான சில நிகழ்வுகளையும், வேதனையான நெருடல்களையும் ஆழமாக சிந்திக்கும் பொழுது கத்தி கழுத்தில் அன்றே வைக்கப்பட்டு குரல்வளை அறுக்கப்பட்டு எம் சோலிகள் முடிக்கப்பட்டிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்குமோ? என எண்ணத்தோன்றும் சில வேளைகளில்...என்ன செய்வது? எல்லாம் அல்லாஹ்வின் கட்டளைப்படியே இயங்கக்கூடியதாக இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் இறைவன் வாய்ப்பு நல்கினால் வாவன்னா சார் உங்களை ஹஜ்ஜுப்பெருநாள் சமயம் ஊரில் நேரில் சந்திக்கிறேன்.
வஸ்ஸலாம்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
சோத்த உண்ட கையோட ராத்தமாறு பேச ஆரம்பிச்சு அஸருக்கு பாங்கு சொல்றவரைக்கும் பேசிக்கிட்டு இருந்துடக சட்டி பொட்டி எல்லாம் கலுவாமே அப்புடியோ அடுப்பான்கரையிலே கேடக்குமே!
ராத்தாமார்களா !
உங்கள்வோ வூட்டுக்கரவொல்லாம் ஊருல ஈந்தாக்கா எங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவங்க, என்ன பன்றது அவங்க ஓட்டுவொல நாங்களே போட்டுக்கோறோம் ஒன்னும் கவலப் படாதிய !
இப்படிக்கு,
ஓட்டு கேட்டுச் சென்ற வேட்பாளர்
என் அன்பிற்கும் பாசத்திற்கும்-உரிய என் அதிரை மக்களை நம் ஊரில் ,நடக்க -இருக்கும் ,பஞ்சாயத்து தேர்தலில் யாருக்கு வாக்களிப்பதன்று குழப்பத்தில் , இருப்பிர்கள் .நம் ஊரில் , போட்டிடும் அனைத்து ,கட்ச்சினரும் , நம் சாகோதர்கள் .ஆகையால் ,நம் ஊர் நலன் கருதியும் ,நம் ஊர் ,மக்களின் நலன் கருதியும் , யார் ? செயல்படுவார்கள் . என்பதை மனதில் கொண்டு ,வாக்களியுங்கள் . அல்லா-விற்கும் பயந்துகொள்ளுங்கள்
அபுஇபுறாஹீம் சொன்னது…
ராத்தாமார்களா !
//உங்கள்வோ வூட்டுக்கரவொல்லாம் ஊருல ஈந்தாக்கா எங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவங்க, என்ன பன்றது அவங்க ஓட்டுவொல நாங்களே போட்டுக்கோறோம் ஒன்னும் கவலப் படாதிய !
இப்படிக்கு,
ஓட்டு கேட்டுச் சென்ற வேட்பாளர் //
நல்ல ஓட்டை கள்ள ஓட்டா மாத்துறது இப்படிதானா ?
எம் எஸ் எம்மின் உரையாடலில் ஒத்தப்புடவையும் சுருக்குப்பையும் நிழலாடியது.
வட்டாரத்தமிழை இவர் தட்டுச்சுகிறாரா தட்டிக்கொடுக்கிறாரா?
அஸ்ஸலாமு அலைக்கும். என் ஓட்டு வட்டார மொழியின் ராஜா நைனாவிற்குத்தான்.
உங்கூட்டு காரவொ, எங்கூட்டு காரவொல்க்கு தான் ஓட்டு போட்ர நசீபுலாம் இல்லாமெ போச்சு. இப்புடி காலமெல்லாம் அவ்வொ ஆயுசு முச்சூடும் சம்பாதிப்பு, சம்பாதிப்புண்டே ஓடிடிச்சி..
என்னா பண்ணச்சொல்றா? மவுத்துக்கு அப்புறமாச்சும் நாமெ சந்தோசமா ஈக்கிறதுக்கு வேண்டிய அமல்வொலெ செய்வோம்வுளே.//
டச்சிங்க் பாய்ண்ட் நெய்னா,
ஒரு ராத்தாமார்வோலும் சம்பாதிச்சது போதும் கஞ்சோ தண்ணியோ குடிச்சிக்கலாம் வாங்கோனு கூப்பிட மாட்டேங்குறாங்களே, நம்ம காக்கா மார்வோ ரெடிதான் எப்பவுமே...
இன்ஷா அல்லாஹ் மாற்றம் வரும்..
லேட்டா போட்டா சூப்பர்.
எங்களுக்கு அகலப்பாதை வேண்டாம். இந்தப்பாதையே போதும்.விமானமே ஏற்றம்
இந்த திட்டத்தை ஆராயப்போகும் சேர்மன் வேட்பாளர் யார்?
”அதிரைதமிழ்”பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அதற்க்கு சகோ.நெய்னா அவர்களை துணைவேந்தராக நியமிக்கலாம் அந்த அளவிற்க்கு அதிரை தமிழிலில் பின்னி பெடல் எடுக்குறீங்க
'அதிரை நிருபர்' தொழில்நுட்பக் குழு இரண்டு ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் விமானத்தை இறங்க வைத்த விதம் அருமை! படத்தை மீண்டும் பாருங்கள்.
// படத்தை மீண்டும் பாருங்கள். //
ஆம் ! Sஹமீத் காக்கா அவர்கள் இரயிலடிப் படம் இங்கே இட்டிருக்கலாமே என்றார்கள் அபோது MSM(n)ன் கட்டுரையில் கண்டெடுத்த விமான நிலையமாக நமதூர் இரயிலடியை மாற்றினால் எப்படி என்று தோறியதன் பலனே... இரும்புத் தண்டவாளங்களிலிருந்து விமானம் take off ! :)
அஸ்ஸலாமு அலைக்கும். அபுஇபுறாகிம் காக்கா! நலமா? என்ன " நேரமில்லையா?
Post a Comment