அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.
‘‘மனிதர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவனிடம் பிழை பொறுத்திட வேண்டுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு நூறுமுறை பாவமன்னிப்பு(தவ்பாச்)செய்கிறேன் ' என்று நபி(ஸல்) கூறினார்கள்.’’ (அறிவிப்பவர்: அல்அஹர்ரு இப்னு யஸார் முஸனிய்யி (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 14)
‘‘ பாலைவனத்தில் காணாமல் போன தன் ஒட்டகத்தை மீண்டும் பெற்றுவிட்டதால், அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட, தன் அடியான் தன்னிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது, அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். ’’ (அறிவிப்பவர்: அபூ ஹம்ஸா என்ற அனஸ் இப்னு மாலிக் அல்அன்சாரீ(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்:15)
‘‘ஆதமின் மகனுக்கு தங்கத்திலான ஓர் ஓடை இருந்தாலும், தனக்கு (இன்னும்) இரண்டு ஓடை வேண்டும் என்றே அவன் விரும்புவான். அவனது வாயை மண்ணே தவிர வேறு எதுவும் நிரப்பி விடாது. தவ்பா செய்வோரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்கிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். ’’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 23)
'ஒரு மூஃமினின் காரியம் ஆச்சரியமானதே! அவனது காரியம் அனைத்தும் அவனுக்கு நல்லதாக அமைகிறது. ஒரு மூஃமினை தவிர வேறு எவருக்கும் இது நிகழ்வதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் நன்றி கூறுகிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகிறது. அவனுக்கு தீயவை ஏற்பட்டு விட்டால், பொறுமையாக இருக்கிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகின்றது என்று நபி(ஸல்) கூறினார்கள்.’’ (அறிவிப்பவர்: (அபூயஹ்யா என்ற)ஸூஹைப் இப்னு ஸினான்(ரலி) அவர்கள் (முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 27)
‘‘மூஃமினான எனது அடியானுக்கு உலக மக்களில் விருப்பமானவரை நான் கைப்பற்றி. பின்பு அவன் (பொறுமையாக இருந்து) நல்லதை எதிர் பார்த்திருந்தால், அவனுக்கு என்னிடம் கூலி, சொர்க்கத்தைத் தவிர வேறு இல்லை என்று அல்லாஹ்; கூறுவதாக நபி(ஸல்) கூறினார்கள்.’’ (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)அவர்கள். (புகாரி).(ரியாளுஸ்ஸாலிஹீன்: 32)
‘‘ஒரு முஸ்லிமுக்கு சிரமம், நோய், கவலை, துக்கம் நோவினை, மயக்கம் மற்றும் அவனின் காலில் குத்திவிடும் முள் வேதனை உட்பட அனைத்திற்காகவும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.’’ (அறிவிப்பவர்கள்: அபூஸயீத்(ரலி), அபூஹூரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 37)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
- S. அலாவுதீன்
9 Responses So Far:
மற்றதில் காணப்படும் அமைதியற்ற சர்ச்சைப் பேச்சுகளுக்கிடையே இங்கே நல்மருந்து கிடைக்குது அலாவுதீனாக்கா வாயிலாக! ஜஸாக்கல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
தவ்பா செய்ய தூண்டும் இந்த சிறிய ஹதீஸ் தொகுப்புகளை பகிர்ந்த சகோதரர் அலாவுதீன் காக்கா அவர்களுக்கு மிக்க நன்றி.
ஜஸாக்கல்லாஹ்.
தேர்தல் பரபரப்புகளுக்கிடையே... நிறைவான நினைவூட்டம் அருமருந்து !
ஜஸாக்கலலஹ் ஹைர் காக்கா !
ஈமானை வலுப்படுத்தும் வைட்டமின் மாத்திரைகள் இத்தொகுப்பு...பரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் மனதை பக்குவப்படுத்தும் ஆக்கம்....ஜஸாக்கலலஹ் ஹைர் காக்கா !
பகிர்வுக்கு நன்றி
உங்களின் தொகுப்பு இம்மைக்கும் மறுமைக்கும் தேவையா வகுப்பு பாடம்
தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.
ஜஸாக்கல்லாஹு க்ஹைரா
அஸ்ஸலாமு அலைக்கும். தலைப்புக்கு ஏற்ற நல்ல ஆக்கம். மாமருந்து சிறப்பு.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!
Post a Comment