Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வென்றவருக்கு ஓரு விண்ணப்பம் ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | October 25, 2011 | , , , , ,

அதிரை பேரூராட்சியின் தலைவரே !
அஸ்லம் அவர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும்

அழகான வெற்றிக்கு
அமைதியின் ஆளுமையான
அதிரை நிருபரின் 
அன்பான வாழ்த்துக்கள் !

அறிக்கைகளில் மனமகிழ்ந்து
அறிவிப்புகளில் சொக்கிப்போய்
அதிரை மக்களின் சார்பாக
அளிக்கிறேன் விண்ணப்பம்:                       

சுகாதரச்சீர்கேட்டைச் சுட்டினீர்கள்
சீரமைப்புத் திட்டங்களில்
சேர்த்துக் கொள்வீர்களா?
சின்னச் சின்னக் கோரிக்கைகளை:

கருவேலங் காடழித்து
காட்டு ரோஜா வளர்க்கனும்
கள்ளிச் செடி களைந்து
கற்றாலை முளைக்கனும்

வாய்க்காலிலும் கால்வாயிலும்
நீர்வரத்தும் வடிகாலும்
நிச்சயம் வேண்டுமையா
நெற்கதிர்கள் செழிப்பதற்கு

வெட்டிக்குளத்தைச் சற்று
வெட்டெடுத்துத் தரவேனும்
மீன்கள் வளரவிட்டு
நாங்கள் வாழவேண்டும்

செடியன் முதல் செக்கடி வரை
தூர்வாரித் தந்துவிட்டால்
ஊர்க்கார ரெல்லோர்க்கும்
ஊருணியில் நீரிருக்கும்

மழைநீரைச் சேமிக்க
மார்க்கம் ஒன்று காட்ட வேண்டும்
மற்றெல்லா மாவட்டம்போல்
மண் செழிக்க வாழ வேண்டும்

புலரும் வெஞ் சுடர்கூட
உலர்த்த முடியா ஈரத்தால்
காலி மனையி லெல்லாம்
கடும் கொசுக்கள் குடியிருக்கு

சகதியாய்ப் போன மனையில்
சல்லிக்காசு வாடகை யின்றி
சாரைப்பாம்பு வசிக்கு ததனால்
நல்லதும் புழங்குதைய்யா

மனைக்குச் சொந்தக்காரரோ
சொந்தக்காரரின் மனைவியோ
தன் னிலம் உலர வைத்து
தடுப்பு வேலி அடைக்க வேனும்

கூலிக்கு ஆள் வைத்து
குப்பைக் கூலம் கொளுத்த வேனும்
பாலிதீன் பைகளுக்கும்
பைபை சொல்ல வேனும்

வீட்டு வாசலிலும் ரோட்டு ஓரத்திலும்
ஆட்டு ரத்தம் ஓடுதய்யா
நாட்டு நடப்பு அறியாதோரின்
காட்டு தர்பார் நிறுத்துங்கய்யா

சாக்கடைச் சண்டையினால்
சாக்காடு நிகழு முன்னர்
நேக்குப் போக்குப் பார்த்து
நிலத்தில்மூடி மறைக்க வேனும்

ஏனா கானா ஈனா என்னய்யா
என்றுமே நீர் நம்மாளு தானய்யா
தொடங்குங்கள் நீங்களய்யா
தோள்கொடுப்போம் நாங்களய்யா !

- சபீர்
- sabeer.abushahruk

27 Responses So Far:

Yasir said...

ஜனாப்.அஸ்லம் அவர்களே...அதிரையின் ஆஸ்தான கவி எங்கள் கவிக்காவின் கவிதைமூலம் கோரிக்கை வச்சாச்சு...இனி அசத்தபோவது நீங்கதான்.......

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்லோர்களும் வல்லோர்களும் நிறைந்தே ஆலோசனைகள் நிறைய வழங்கியிருந்தாலும் இங்கே எங்களின் கவிக் காக்கா வைத்திருக்கும் ஓர் கவிதை ஓலை ஒவ்வொரு அதிரைப்பட்டினத்து மைந்தனின் உணர்வு பூர்வமான கோரிக்கைகள் சில அடக்கம் ! ஆக, அடங்களும் வருங்கள் என்று அழைத்த அஸ்லம் அடங்களையும் கவனிக்கத்தானே வேண்டும், ஒன்றன் பின் ஒன்றாக !

இன்றே துவங்கட்டும் இனிதே துவங்கட்டும்... இவனுக்கு அவனுக்கு என்று பாராமல் தொடருட்டும் !

//வீட்டு வாசலிலும் ரோட்டு ஓரத்திலும்
ஆட்டு ரத்தம் ஓடுதய்யா
நாட்டு நடப்பு அறியாதோரின்
காட்டு தர்பார் நிறுத்துங்கய்யா

சாக்கடைச் சண்டையினால்
சாக்காடு நிகழு முன்னர்
நேக்குப் போக்குப் பார்த்து
நிலத்தில்மூடி மறைக்க வேனும்

ஏனா கானா ஈனா என்னய்யா
என்றுமே நீர் நம்மாளு தானய்யா
தொடங்குங்கள் நீங்களய்யா
தோள்கொடுப்போம் நாங்களய்யா !///

மிக மிக முக்கியமானவைகள் இது மனதில் கொள்ளவும்...

இதனை வாசிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயம் பேரூராட்சித் தலைவரின் நண்பர்கள் வாசிப்பார்கள் அவர்களில் சிலர் உங்களுக்கு இதனை எடுத்துரைப்பார்கள் ! வாழ்த்துக்கள் !

அஸ்லம் - வாங்க அசத்தலாம் !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

கவிதையில் பொய் மட்டுமே புனையப்படும் என்று எண்ணி தூர விலகியிருந்த என்னைப்பேன்றவர்களை, கவிதைகளின் உண்மையை அழகாக சொல்லமுடியும் என்று கவிதை வாசிப்பவர்களாக எங்களை உருவாக்கிய பெருமை உங்களையே சேரும் காக்கா..

பொதுவான மனுக்களுக்கு உள்ள மரியாதை இது கவிதை மனுவுக்கு நிச்சய்யம் இருக்கும் என்று நம்பலாம்.

ZAKIR HUSSAIN said...

//கவிதையில் பொய் மட்டுமே புனையப்படும் என்று எண்ணி ///

இது எப்ப ..இது என்னப்பா புதுக்கதையாக்கீது...

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//கவிதையில் பொய் மட்டுமே புனையப்படும் என்று எண்ணி ///

இது எப்ப ..இது என்னப்பா புதுக்கதையாக்கீது//


தம்பி தாஜுதீன் சொல்ல வருவது
"கண்ணுக்கு மையழகு"
"கவிதைக்கு பொய்யழகு"

என்பதனை மாற்றி நம் கவி காகா
யாவற்றுக்கும் கவிதை அழகு என்று மெய்ப்படுத்தியதை
சொல்லவருகின்றார்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமித் காக்கா,

சரியான நேரத்துல வந்து எனக்காக பதில் சொல்லிட்டியே காக்கா.

தைங்க்ஸ் காக்கா..

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------------------

கவிதை ஓலை... அருமையாக ஊர் மக்கள் அனைவரின் கம்ளைண்ட் எல்லாத்தையும் ஒருங்கினைத்து கையெழுத்து பெட்டிசன் போல் இருக்கிறது.

கவிஞர் காக்கா அவர்கள் நிறைய பேரை சிந்திக்க வைக்கிறீர்கள், மாஷா அல்லாஹ்.

வாழ்த்துக்கள்

-UmmHisham

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்லமாக்கா
அசத்தப்போகும் அஸ்லமாக்கா
செழிப்பாகப் போகும் அதிரைத்திட்டத்தில்
செவிமடுப்பீர் கவித்துவ வேண்டுதலையும்!

அதிரை என்.ஷஃபாத் said...

எதையும் கவித்துவமாக்கும் காக்காவின், கவிதை வழி கோரிக்கை இது. இடப்படும் ஒவ்வொரு பின்னூட்டமும் கோரிக்கையோடு இணைக்கப்படும் கையெழுத்து ஆதரவு. மெய்ப்படட்டும் இன்ஷா அல்லாஹ்.

Shameed said...

கோரிக்கையையும் கவிதையாய் சொல்லலாம்
என்று சொல்லிய கவிதை அருமை

KALAM SHAICK ABDUL KADER said...

சின்ன்ச் சிங்கையாய்
இன்னும் சிலநாளில்
குப்பைகளுக்கு
“குட்பை” சொல்லவும்;
பைகளுக்கு
”பைபை” சொல்லவும்
தொப்பைகள் குறைக்க
தொடர்பயிற்சி செய்திடவே
உடற்பயிற்சிப் பூங்கா என

எத்துணையோ கோரிக்கைகள்
அத்துணையும் அவர் கைகளில்
ஆனால்
வெற்றிப் படிகள் எட்ட
பற்றிப் பிடியுங்கள் எட்டு:

)கனவுகள் எளிதானால்
கடமைகள் எளிதாகும்

2) அன்பென்னும் கயிற்றால்
வம்பர்களைக் கட்டுக

3) கருவின் சிசுவும்
கனியாகும் விதையும்
ஒரு காலம் வரை
பொறுப்பது போல்
பொறுத்தல் வேண்டும்

4) அதீதமான நம்பிக்கை
அவசரத்தின் குழந்தை

5) எப்படியும் வாழலாம்;
ஒழுக்கக் கேடானது
இப்படித்தான் வாழ்வதென்பது
ஒழுக்கத்தின் ஆணிவேர்

6) சொல்வதைத் தெளிவாகச்
சொல்வதற்குப் புரிந்த மொழி

7) பேச்சைக் காட்டிலும்
புன்னகையும் மௌனமும்
வலியது

8) முரண்பட்டோரையும்
அரவணைத்தலே
திரண்ட வெற்றிக் கதவு
திறக்கும் திறவுகோல்

mohamed said...

உங்களது அதிரை நிருபர் தொய்வு அடைந்தது போல் தெரூகிறது.மற்ற அதிரை மீடியா கள் உள்ள துடிப்பு இல்லையே சற்று உங்களது அதிரை நிருபரையும் மற்ற மீடியா போல் கொண்டுவாருங்கள்

Yasir said...

வாங்க முஹம்மது....சிறிய குழந்தைகளின் இதயம் கொஞ்சம் வேகமாகதான் துடிக்கும்.ஏனென்றால் அது வளர துடிக்கிறது....வளர்ந்த மனிதனின் இதயம் நிதானமாக துடிக்கும் அதிரை நிருபர் வளர்ந்த மனிதன்...அமைதியின் ஆளுமை..அரசியல் செய்திகளை போட்டுதான் துடிப்பை காட்டவேண்டும் என்றால் ...சாரி நீங்க எதிர்பார்க்கிற இடம் இது இல்லை.....அதிரை நிருபர் கூச்சல் மட்டுமே கேட்கும் கடைதெரு இல்லை....அமைதி நிலவும் ஒரு அழகான தோட்டம் போன்றது...அதில் குயில்கள் கவிபாடும்...கட்டுரையாளர்கள் மெல்லிய தாளம் போட்டு மற்றவர்களையும் தன்னகத்தே அசைபோட வைப்பார்கள்....மற்ற தளங்களுக்கு போய்விட்டு வந்து இங்கே அமருங்கள்...அசர் தொழுதுவிட்டு இரயில்வே ஸ்டேஷனின் களைப்பாறிய அமைதி கிடைக்கும்

Anonymous said...

///உங்களது அதிரை நிருபர் தொய்வு அடைந்தது போல் தெரூகிறது.மற்ற அதிரை மீடியா கள் உள்ள துடிப்பு இல்லையே சற்று உங்களது அதிரை நிருபரையும் மற்ற மீடியா போல் கொண்டுவாருங்கள்///

அன்புச் சகோதரர் முஹம்மது அவர்களுக்கு:

தங்களின் எதிர்பார்ப்புக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி.

அதிரைநிருபர் சீரான் வழிநடை அமைத்து அமைதியின் ஆளுமையாக வல்ல அல்லாஹ்வின் பேரருளால் சிறப்புடன் அதன் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

தளம் என்றுமே பொலிவுடன் நிகழ்வுகளை பளிச்சிட வைத்துக் கொண்டுதானிருக்கிறது அதே அமைதின் ஆளுமையாக..! இது இன்று எடுத்த நிலைபாடல்ல துவங்கிய நாளிலிருது அதில் தெளிவான நெறியமைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

தம்பி யாஸிர் : உள்ளக் கிடைக்கையில் உள்ளதை உணர்வுகளின் கோர்வையாக அதிரைநிருபர் நிலைபாட்டினை வைத்தமைக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

-நெறியாளர்

ZAKIR HUSSAIN said...

To Brother Mohamed,

மற்ற அதிரை மீடியாக்களில் உள்ள "துடிப்பு' எது என விவரித்தால் அதிரை நிருபரும் அதை பற்றி சிந்திக்களாம்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------------

//அசர் தொழுதுவிட்டு இரயில்வே ஸ்டேஷனின் களைப்பாறிய அமைதி//

ஆஹா...ஆஹா...!!! இதைவிட அதிரை நிருபரின் நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொல்லிவிட முடியாது.

சகோதரர் முஹம்மது:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

இந்தத் தளம் சற்றே வித்தியாசமானது என்பதை இதன் பதிவுகளைப் பார்த்தாலே தங்களுக்குப் புரியும்.

சமூகம், கலாச்சாரம், மார்க்கம், வாழ்வியல், உளவியல், மருத்துவம், நகைச்சுவை, உறவுகள், ஊர் நேசம், வரலாற்றுக் குறிப்புகள், பயணக்குறிப்புகள், புத்திமதி, என்று மனிதனின் வாழ்வாதார விஷயங்களை மட்டுமே பதிந்து வருகிறது. இவற்றை கட்டுரைகள், கவிதைகள், காணொளிகள், ஒலி வடிவம் என கையாண்டு வருகிறது.

குறிப்பாக, சென்ற ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்திக்காட்டியதில் முக்கிய பங்கு வகித்தது, தொடர்ந்து வகிக்கும்.

தமிழ் நாட்டின் எல்லாப் பத்திரிகைகளும் ஒரே செய்தியையேச் சொன்னால் சரியாகுமா. அதுபோல், அதிரையின் எல்லாத் தளங்களும் ஓட்டு எண்ணிக்கையையும், தேர்தலையும் சொன்னாலும் சரியாகாது. அத்துடன், தேர்தலுக்கு முன்னாலேயே இத்தளத்தின் அமீர் ஒரு பதிவிட்டு, “அதிரை நிருபரின் அரசியல் நிலைப்பாட்டை” விளக்கமாகச் சொல்லிவிட்டபடியால் என்னைப் போன்ற எழுத்தார்வமும், இலக்கியத் தாகமும் கல்வி சார்ந்த சமூக உதவிகளும் செய்யத் துடிக்கும், செய்துகொண்டிருக்கும் யாவருக்கும் ஒரு தரமான தளமாகவேத் தொடரும் என்பதைத் தாங்கள் அறியத் தருகிறேன்.

ஊடகத்தின் தரம் அதன் பதிவுகளைக்கொண்டே கணிக்கப்படுகிறதே தவிர ஆர்ப்பாட்டங்களையோ ஆராவாரங்களையோ கொண்டோ அல்ல.

நிறைகுடம் தழும்பாது சகோதரரே. அத்தகைய தழும்பலைத்தான் நீங்கள் “துடிப்பு” என்கிறீர்கள்;

சலனமற்ற ஓட்டத்தை “தொய்வு” என்கிறீர்கள்.

மகாநதிகளில் சலசலப்பு இருக்காது. தெளிவான, திடமான, நிறைவான, அமைதியான ஓட்டம் மட்டுமே இருக்கும்.... இலக்கை நோக்கி!

வஸ்ஸலாம்.

- சபீர்
- sabeer.abushahruk

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------

//மற்ற அதிரை மீடியாக்களில் உள்ள "துடிப்பு' எது என விவரித்தால் அதிரை நிருபரும் அதை பற்றி சிந்திக்களாம்.//

அத்துடன் எந்த மீடியா, என்னத் துடிப்பு என்றும் சொன்னால் தேவலாம். அதுவும் துடிப்பு அடங்கு முன் சொன்னால் இன்னும் நலம்.

- சபீர்
- sabeer.abushahruk

mohamed said...

அதிரை நிருபர் நிர்வாகிகளுக்கு ...நீங்கள் அமைதியின் ஆளுமையே இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.அனால் நீங்கள் வயதிருக்கும் பெயர் அதிரை நிருபர் இப்போது இருக்கும் தளத்துக்கும் பெயருக்கும் சமந்தம் இல்லாமல் இருக்கிறது.உங்களுடுடைய தலத்தில் அதிக பதிவாளருக்கும் இருக்கும் நிலையில் அனைவரும் கவிதை கட்டுரை என்னும் நிலையில் உள்ளீர்கள் சற்று உங்களது எழுத்துகளை அதிரை பக்கம் திருப்புங்கள்...பெருகேத தளமாக இருக்கும் .
என்றும் உங்கள் இனிய வாசகன்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//அதிரை நிருபர் நிர்வாகிகளுக்கு ...நீங்கள் அமைதியின் ஆளுமையே இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.அனால் நீங்கள் வயதிருக்கும் பெயர் அதிரை நிருபர் இப்போது இருக்கும் தளத்துக்கும் பெயருக்கும் சமந்தம் இல்லாமல் இருக்கிறது.உங்களுடுடைய தலத்தில் அதிக பதிவாளருக்கும் இருக்கும் நிலையில் அனைவரும் கவிதை கட்டுரை என்னும் நிலையில் உள்ளீர்கள் சற்று உங்களது எழுத்துகளை அதிரை பக்கம் திருப்புங்கள்...பெருகேத தளமாக இருக்கும் .//

:)

//என்றும் உங்கள் இனிய வாசகன்///

ஜஸாகல்லாஹ் ஹைர் !

அப்துல்மாலிக் said...

சபீர் காக்கா நம் ஒட்டுமொத்த கோரிக்கையாக வரிகளால் கோர்த்துக்கொடுத்த விதம் அருமை, வாழ்த்துக்கள் சகோ

கநந்த 3 நாட்களாக அஸ்லமாக்கா என்ற பேர் தீபாவளி ஒலிச்சத்தத்தையும் மிஞ்சும் வகையில் ஒலித்த வண்ணமிருக்கு, எல்லா மக்களின் ஆதங்கம் தெரிந்திருக்கும், இந்த ஒலி என்றென்றும் நிலைத்திட தாங்களின் செயல் திட்டம் முக்கியமானது... வாழ்த்துக்கள்

Anonymous said...
This comment has been removed by the author.
Shameed said...

''உங்களது அதிரை நிருபர்''

"என்றும் உங்கள் இனிய வாசகன்'

உங்களது முதல் பின்னுட்டம் உங்களது என்று பிரித்தும் இரண்டாவது பின்னுட்டம் என்றும் உங்கள் வாசகன் என்றும் எழுதி உள்ளீர்கள் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் அதிரை நிருபரின் இனிய வாசகன் ஆகி விட்டீர்கள் அதிரை நிருபருக்கு இதை விட என்ன துடிப்பு வேண்டும்.

உங்களைப்போல் என்னைபோல் இன்னும் ஏராளமான இனிய வாசகர்களைக் கவர்ந்த தளமே இந்த அதிரைநிருபர். மேலும் தாங்கள் கருத்திட்டிருக்கும் பதிவு கூட அதிரையின் சுகமான சுமைகளைச் சொன்ன பதிவுதானே.

Muhammad abubacker ( LMS ) said...

பதவிக்கோ .பணத்துக்கோ ஆசைப்பட்டு நான் தலைவர் பதவிக்கு வரவில்லை,நம் அதிரையை சுகாதாரத்திற்கு முன் மாதிரியான ஊராக மாற்றிக்காட்டவே இறைவனின் உதவியால் தலைவர் பதவிக்கு வந்துள்ளேன் என்று பதவி ஏற்ப்பு விழாவில் பிரகடனம் செய்த சேர்மன் அவர்கள்.நிச்சயமாக செய்து காட்டுவார் என உறுதியுடன் கூறுகிறேன்.தான் எடுத்த முடிவை பின் வாங்காமல் அல்லாஹ்வின் உதவியால் செய்து முடிக்ககூடியவர் இந்த இளம் சேர்மனுக்கு நாமும் உறுதுணையாக இருப்போமாக

KALAM SHAICK ABDUL KADER said...

சுகாதாரம் பெற வேண்டும்-அதற்கு
பொருளாதாரம் பெற வேண்டும்-அதனால்
நிதித்துறை இணையமைச்சரை நாடி
அதிரை இளம் தலைவர் வேண்டி
நிற்கின்ற நிழற்படம் காட்சி;
பொற்காலம் காணும் ஆட்சி

ஒரே நாளில் எல்லாம் நடக்க வேண்டும் என்பது நமது அவாவாக இருக்கலாம்; அது முடியாததும் பதற்றமானதும் ஆகும்; “பதறாத காரியம் சிதறாது” அன்புத் தலைவர் அஸ்லம் அவர்களின் பேச்சும் செயலும், அவர்கள் ஒவ்வொரு அடியும் நிதானமாகவும் உறுதியானதாகவும் எடுத்து வைக்கின்றார் என்பதை உறுதியாக உணரலாம். அவர்களின் பேச்சு முழுவதும் அவர்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவேத் தெரிகின்றது. குறிப்பாக “சமய நல்லிணக்கம்” பற்றிய அவர்களின் துடிப்பு மிகவும் என்னைக் கவர்ந்தது. அனைவருடனும் ஒற்றுமையுடன் அரவணைத்துச் சென்றால் அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றியை எட்டுவார்கள் என்பதை அவர்களின் வணிக அனுபவமும் தெரிகின்றது.
அல்லாஹ் போதுமானவன்

crown said...
This comment has been removed by the author.
crown said...

கருவேலங் காடழித்து
காட்டு ரோஜா வளர்க்கனும்
கள்ளிச் செடி களைந்து
கற்றாலை முளைக்கனும்
-----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கவிஅரசரின் கவிதை வரிகள் முள் மரம் மணம் வீசும் ரோசாவாக(அதின் அடியிலும் முள் பார்த்தீரா கவிஞரே)மாறனும். இப்படி எழுதும் உங்களின் உள் மனம் சொல்ல வந்தது சகோதரர் ஆட்சியில் கயவனும் திருந்ததும். மனம் மாறி மணம் வீசனும் என்னும் எண்ணதில் சொல்ல பட்ட உருவகம்.(மல்லிகை மலராக்கி பார்த்திருக்கலாமோ? என் ஆர்வம் இது)கள்ளி(கல்லாதவர் களைந்து) செடி களைந்து கற்றாலை முளைக்கனும்.( கற்ற ஆளை உருவாக்கனும்)கற்ற+ஆள்=கற்றாள்!.இப்படி சமுதாயத்துக்குத் தேவையானதை கவிதையாக வடித்து வென்றவருக்கு ஒரு
(Win )விண்ணப்பம் உயர்ந்து நிற்கிறது அந்த விண் அப்பமாக ( நிலவு) ஓளிவீசுனும் அதிரைக்கு! கவிஅரசே வழக்கம் போல் உம் கவி செங்கோல் இந்த ஊர் இளம் தலைமைக்கு வேண்டுகோள் வைத்ததுபோல், ஊண்று கோலாகவும், நன்மைக்கு தூண்டு கோலாகவும் இருக்கனும்.சிறக்கனும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னின் கருத்தில் கிள்ளியது!

கயவனும் திருந்தனும் !
கள்ளாமை கலைந்து
கற்றோரை காணனும்
Winனுக்கு விண்ணப்பம்
கவியின் வேண்டுகோள்
தலைமைக்கு ஊன்றுகோல் !
நன்மைக்கு தூண்டுகோல் !

ஆஹா !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு