அமீரகத்தில் 30-செப்டம்பர்-2011 அன்று மிகச் சிறப்பாக நடந்தேறிய அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் முத்தாய்ப்பாக அதிரைநிருபரின் ஆஸ்தான கவி சபீர் காக்கா அவர்களால் எழுதப்பட்ட கவிதையை எங்களின் ஆசான் (அதி அழகு) ஜமீல் காக்கா வாசித்து வந்திருந்தவர்களை உணர்வுகளால் உசுப்பி விட்டார்கள். அதற்கு மகுடமாக சிறப்பு விருந்தினர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும் வரிக்கு வரி உணர்வுகளின் உச்சத்தை உவகையோடு எடுத்து வைத்த விதமும் அன்றைய நிகழ்வின் முத்திரையே !
- அதிரைநிருபர் குழு
யாதும் தெருவே; யாவரும் கேளிர் !
அதிரையின் கருக்கள்
கருத்துச் சூழ்கொண்ட
கண்ணியத்தின் உருக்கள்
அரவணைத்துச் சென்றால்
அத்துணைத் திசையும்
அதிரைக்கு இசையும்
இத்தனை நாட்களாய்
இங்குதான் இருந்தோம்
இன்றுபோல் என்றுமே
இணையாது மிகவிழந்தோம்
ஒற்றுமை யிருந்தும்
ஒழுகாது உழன்றோம்
ஒழுகும் குடிசையென
ஊரே நனைந்தோம்
இங்கிந்த இளைஞர்கள்
இல்லாது இருந்தால்
இன்னும் இழுத்திருக்கும்
இணைப்பெனும் இன்பம்
செயல்திட்ட மொன்று
செதுக்கும் இவ்வேளையில்
சிந்தையில் கொண்டிட
சீர்திருத்தங்கள் சில
தெருக்களைப் பெருக்கனும்
தெரு விளக்கெறியனும்
ஈக்களும் கொசுக்களும்
இல்லாமல் பண்ணனும்
நீர் நிலைகளெல்லாம்
தூர்வாரி நிறைக்கனும்
கழிவுநீர் கலக்காத
வாய்க்கல்கள் ஓடனும்
படிக்கவும் பயிலவும்
போதனை செய்யனும்
படிப்பின்றிப் போனாலோ
தொழில் பயிற்றுவிக்கனும்
மாற்றுக் கருத்தற்ற
மார்கம் போதிக்கனும்
முஹல்லாக்களுக்கிடையே
பாகுபாடு களையனும்
நீயும் நானும்
வழக்கொழிந்து போகனும்
நீங்களும் நாங்களும்
வாழ்க்கையென் றாகனும்
ஒற்றைச்சூரியன் உதிப்பதே
உலகுக்குக் கிழக்கு
ஊராரின் இவ்வமர்வால்
அதிரைக்குக் கிழக்கு
அதிரைக்காரர்களின்
அமீரகக் கூட்டமைப்பு
ஆழ வேர்விடனும்
வளைகுடா உலகமைப்பென
வளர்ந்து வியக்க வைக்கனும்
எல்லா முஹல்லாவையும்
இணைக்கும் நோக்கம்
நானிலம் முழுவதும்
நல்லா வளரனும்
அல்லாஹ் வளர்க்கனும்!
- சபீர்
Sabeer abuShahruk,
49 Responses So Far:
ஒன்று கூடிய இடத்தில் எங்கள் கவிக் காக்காவின் ஓர் கவிதை முத்திரையாய் பதிந்தது வந்திருந்த மண்ணின் மைந்தர்களின் மனதினிலே !
//ஒற்றைச்சூரியன் உதிப்பதே
உலகுக்குக் கிழக்கு
ஊர்க்காரர்களின் அமீரக அமர்வால்
அதிரைக்குக் கிழக்கு//
ஒற்றுமை குவியும் திசை !
//அதிரைக்காரர்களின்
அமீரகக் கூட்டமைப்பு
ஆழ வேர்விடனும்
வளைகுடா கூட்டமைப்பென
வளர்ந்து வியக்க வைக்கனும்//
இதுவே நம் எல்லோரின் அவா !
Masha Allah, super Kavidai!
Let us unite atleast now!
I leant that there are many associations for each streets in UAE. Kindly these brothers be unite first!
May Allah swt help us to unite with Ikhlas.
Brotherly yours
N. Fath huddeen abuhaamid
from Al-Jubail, KSA
கேளீர் என்பது கேளுங்கள் எனப் பொருள் தரும்
கேளிர் எனும் சொல் உறவினர் என்பதாம்
"யாவரும் கேளிர்" என்றால் நாம் எல்லாரும் உறவினர்கள் எனப் பொருள்.
தகுந்தாற்போல் தலைப்பை மாற்றிக் கொள்க!
//தகுந்தாற்போல் தலைப்பை மாற்றிக் கொள்க!//
அன்பின் அதி அழகு காக்கா:
அப்படியே ஆகட்டும் !
"யாதும் தெருக்களே ! யாவரும் கேளிர்" பதிவுக்குள் பளிச்சிடுகிறது !
ஜஸாகல்லாஹ் ஹைர் காக்கா !
Dear Brothers, Assalamu Alaikkum!!!
Alhamdhu Lillah.
I was fortunate to watch the live video telecast of AAMF's Inaugural meeting last night. I Praise Allah for bringing all my brothers under one roof and that too with the noble principles showed by our Holy Prophet.
I remember my first comment in AN was posted in the month of March this year with the caption, "Unity is the Need of the Hour". Alhamdhulillah, I feel that my brethren have come forward to realize it.
Every thing in the proceeding was perfect and every one showed their spirit and solidarity to join together for the cause of our community.
The way my dearest brother Jameel has conducted the meeting showed confidence that this forum is going to achieve its set mission. (Brother Jameel, is it true that Einstein has set two holes one for the big cat and another for the small cat?)
The verses of my brother Shabeer was once again well motivating, inspiring and made all of us feel the importance of the existence of this forum.
I think the first focus should be on ensuring the credibility of this forum. Each common man and woman of Adirai should trust that AAMF will resolve our social and civil issues amicably and without any bias. As one of the members rightly pointed out, it should be the FIRST interface for the common man of Adirai. (Every citizen irrespective of caste or creed)
The forum as my student Aslam has rightly pointed out is a module. I feel it should one of the modules of various AAMFs all over the world. We should encourage the fraternal members of all Adirains to form their units in their respective countries and strengthen our forum. In this aspect the AAMF can contact the UK, US, Canada, KSA, Malaysia, Australia and other overseas Adirains to form their respective units and become a member for this noble cause. When all units join hands we can achieve a lot in terms of dictating electoral roles and demanding our fundamental rights.
When our head unit at Adirai becomes functional under the guidance of the overseas units we can achieve a lot. Particularly "the Sick Shifa Hospital" can be nourished.
I think this is not an end, it is going to be the beginning of a glorious era in the history of Adirampattinam.
I am an admirer of Adirai Kavi Kalam, I am lucky to see his face last night. May Allah bless him to bring out more and more classical poems in praise of our Lord.
I felt elated to see many of my dearest friends over there and I had a feeling of as though I was with them on that night. It was 1.30 AM here when the meeting was over.
Zasakkalah Hair
Wassalam.
N.A.Shahul Hameed
சொந்த சோகத்திலும் ஊர் (கேளிர்) சொந்தங்களுக்கு கவிதை தந்த எங்களின் கவி காகாவிற்கு எங்களின் அன்பான வாழ்த்துக்களும் துவாவும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
// மாற்றுக் கருத்தற்ற
மார்கம் போதிக்கனும்
முஹல்லாக்களுக்கிடையே
பாகுபாடு களையனும் //
மாஷா அல்லாஹ் சபீர் காக்கா நல்ல ஒரு தலைப்பை கொண்டு முத்தான வரிகளோடு அதிரை வாசிகளின் இதயத்தை பிளந்து விட்டீர் . இதன் மூலம் கசடுகளை வெளியில் கொட்டிவிட்டு யாதும் தெருக்களே ! யாவரும் கேளிர் !என்ற ஒன்றை மட்டும் மனதில் வாங்கி நாம் ஒற்றுமை படுவோம்.
Dear Br. NAS,
It is nice to contact you via AN.
Regarding your doubt, as you well aware, I am the one who learn a lot from the sources whatever I come across instead learning from High Schools or Colleges. I never put a full-stop for learning.
Yes you are right. It was not Einstein but Newton:
The invention of the cat flap is attributed to Isaac Newton in a story by a 'Country Parson' to the effect that Newton foolishly made a large hole for the mother and a small one for the kittens, not realizing the kittens would follow the mother through the large one. Two Newton biographers cite passages saying that Newton kept 'neither cat nor dog in his chamber'[4] J. M. F. Wright, writing in his memoir Alma Mater in 1827, was an inhabitant of Newton's 'set' in Trinity and reported this same story, adding "Whether this account be true or false, indisputably true is it that there are in the door to this day two plugged holes of the proper dimensions for the respective egresses of cat and kitten."http://en.wikipedia.org/wiki/Cat_flap#cite_note-2
I can not assure you that it is mentioned in Newton's own biography.
Thanks for your correction.
Dear Brother Jameel,
Assalamu Alaikkum.
I am very happy to be in touch with u through AN. I know very well that you put all your words proof. That is why I just reminded you.
My request is that you should involve more in this mission and contribute your valuable guidance to AAMF.
Sorry if I had offended you. And how is your family? How is Sajitha (Karu Nakku) Can she remember me? If you have your mail ID please let me know.
Wassalam.
N.A.Shahul Hameed
Dear Br. NAS,
You did not offend me but you helped me.
Your friend Karu Naakku (Jaseema) is here for almost 8 years.
She used to visit her home in Manali as well as Adirai once in a year.
I am enjoying with her children.
My email ID is jameelms@gmail.com that can be reached by clicking my thumbnail displaying here.
Thanks and best regards,
Dear NAS,
Wa alaikkumussalam.
Sorry, I forgot to reply your salam.
அனைத்துத் தெருக்களும்
அதிரையின் கருக்கள்
கருத்துச் சூழ்கொண்ட
கண்ணியத்தின் உருக்கள்
-----------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆஹா! அருமை தொடக்கம்.எல்லாவிதைகளும் ஒரு மரமாகக்கூடிய அளவிலேயே எல்லாத்தெருக்களிலும் அறிவு ஆலமரம் இருக்கிறது.
எல்லாம் சேர்ந்த தெருக்கள்தான் அதிரை மண்.
----------
மரு போல சில தோன்றி மறையும் அது மரு எனும் வேற்றுமை எண்ணம். அதுதோன்றி மறைந்தாலும் தளு(வடு) மறையாதது போல ஒற்றுமைக்கு பங்கம் கவனம் அதிகம் வேண்டும் .
---------------
அதிரைக்கு எத்தனை கண்கள்
எல்லாம் பார்க்கத்துடிப்பது ஒற்றுமைஒன்றே!
இப்படி சிந்தித்து(ம்)பார்த்தேன் இனித்தது.
அரவணைத்துச் சென்றால்
அத்துணைத் திசையும்
அதிரைக்கு இசையும்
--------------------------------------
எல்லா திசையும் எட்டும் எம் குரல் ஒற்றுமையாய் ஓங்கி எழுந்தால். எந்த அதிகாரவர்கமும் கதவு திறக்கும் நாம் கைகள் இணைந்து தட்டினால். இமையமலையும் தூளாகும் எல்லாத்தலையும் இணைந்து முட்டினால். தடையெல்லாம் தூளாகும் நம் தோள்களேல்லாம் தூணாகும் .
ஒரே திசை கிப்லாவை நோக்கும் நம் வணக்கம் ஏன் ஒரே சிந்தையில் இணையாது தனித்து நிற்றது??? சிந்திப்போம் இனியாவது.
இத்தனை நாட்களாய்
இங்குதான் இருந்தோம்
இன்றுபோல் என்றுமே
இணையாது மிகவிழந்தோம்
ஒற்றுமை யிருந்தும்
ஒழுகாது உழன்றோம்
ஒழுகும் குடிசையென
ஊரே நனைந்தோம்
-----------------------------------------
அட இங்கே என் கண்முன்னாடித்தான் என் சொந்தங்கள் இருந்தனவா? நிறக்கண்ணாடி போட்டு நம்மை நாமே கானாமல் பிரிந்து நிற்றோம்.
பார்வையில் நிறக்குருடா நம் ஊருக்கு? இல்லை அகக்குருடு அதனாலேயே வெளிச்சம் உள்ள பாதையிலும் தடுக்கி விழுந்தோம்.
மழைக்குகூட ஒரே இடத்தில் ஒதுங்காது ஒதுங்கி நின்றோம். ஆனால் மானத்தில் நம் ஊரேயே நனைத்து நமத்து போகச்செய்தோம்.இப்படி இருந்த தால் எப்படியெல்லாம் பிறருக்கு நம் வாய்புகள் போனது என்பதை எண்ணமறந்தோம்.
மாற்றுக் கருத்தற்ற
மார்கம் போதிக்கனும்
முஹல்லாக்களுக்கிடையே
பாகுபாடு களையனும்
நீயும் நானும்
வழக்கொழிந்து போகனும்
நீங்களும் நாங்களும்
வாழ்க்கையென் றாகனும்.
----------------------------------------------------------------
இன்சாஅல்லாஹ். ஆமீன்
ஒற்றைச்சூரியன் உதிப்பதே
உலகுக்குக் கிழக்கு
ஊராரின் இவ்வமர்வால்
அதிரைக்குக் கிழக்கு.
---------------------------------------------
கிழக்கில் உதித்து கடற்கரைமேல் தவழ்ந்து, மெல்ல நடுவானுக்கும் வந்த பின் இலை தழைக்கெல்லாம் பசுமை தந்து பின் மெல்ல நகர்ந்து மேற்கே மறையும் சூரியனும் இயற்கையில் எல்லா இடத்தையும் இணைப்பது போல் இலை,கை என பிர்ந்து கிழக்கும் மேற்குமாய் இருக்காமல் நடுனிலையாய் நாம் இருக்க இந்த ஆமீரகத்து ஒற்றுமை கூட்டம் நமதூரில்லும் தொடரட்டும். தள்ளு போன தேர்தலை அது(ஒரு) தருதலை நான் கவனமுடன் கையாண்டு.கெடுவான் கெட்டழிவான் எனும் நிலைக்கு குரோத மனப்பான்கு இருப்பவை இணம் கானவேண்டும்.
நாமே பிரிந்து இல்லாமல் வெற்றி வாகை சூட வேண்டும்.
கவிஞர் சபீர் காக்காவிற்கு வாழ்துக்கள்.வழக்கம் போல் நல்ல ,சமூக சிந்தைனை மிக்க வைரக்கல் இந்த கவிதை.
அர்த்தமுள்ள அத்தனை வரியும்
அதிரைக்கு அழகு விண்மீன்
அருமையாய்ச் சொன்ன அத்தனையும்
அதிவிரைவில் ஆகனும்.ஆமீன்.
மின்னஞ்சல் வழி கருத்து
--------------------------------------------
ஜமீல் அவர்களே, தலைப்பில் காணப்படும் ஒருமை பன்மை மயக்கத்திற்கும் ஒரு டுமீல் கொடுத்திருக்கலாம்! யாதும் - ஒருமை; தெருக்களே - பன்மை!
அழகான தமிழ்க் கவிதையில், “முஹல்லா” - புரியாத புதிர்! பொருள் பொதிந்த நல்ல தமிழ்ச் சொல் தேவை!
-வாவன்னா
சபீர் காக்காவின் கவிதையும் அதற்கு கொடுக்கப்பட்ட விளக்க உரை மூலம் அதிரை வாசிகளை உசுப்பிவிட்டது என்னவோ உண்மைதான்
வாழ்த்துக்கள்..
Something wrong with comment box.
அன்பான சகோ. வாவன்னா அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
உமர் தம்பியோடு அறிமுகம் கொண்டிருந்த எனக்கு, உமருக் காக்காவை அதிரை நிருபர் மூலம் அறிமுகம் கொள்வதில் பெருமகிழ்வு!
அ.நி.யில் பதிவாகும் ஆக்கங்களைத் தங்களைப் போன்ற ஒருவர் சரிபார்த்துப் போடுவது சிறந்தது என்பதை அ.நி. குழுவினருக்குத் தொடக்கம் முதல் சொல்லி வருகிறேன்.
அ.நி.க்கு:
இப்பதிவின் தலைப்பை, "யாவும் தெருக்களே; நாம் யாவரும் கேளிர்" என்றோ "யாதும் தெருவே; யாவரும் கேளிர்" என்றோ மாற்றிக் கொள்ளப் பரிந்துரைக்கிறேன்.
இன்றைய பதிவின் தலைப்பையும் " ... - நினைவு கூர்வோம்" எனத் திருத்திக் கொள்க!
ஜமீல்
அன்பின் அதி அழகு காக்கா:
திருத்தம் பதிவுக்குள் வந்துவிட்டது !
ஜஸாக்கல்லாஹ் ஹைர் !
கவிக்காக்காவின் “ கனவு மெய்பட வேண்டும்” போல...இந்த சிறந்த கரு கொண்ட தெருக்கள்,சண்டை சச்சரவு என்ற ஊனம் இல்லாத,அழகான,அறிவான “ ஒற்றுமை” என்ற குழந்தையை பெற்று நம் சமுதாயம் என்றுமே தலை நிமிர்ந்து நிற்க துவா செய்வோம்....
கவிதை அருமை வெல்டன் சபீர்
மின்னஞ்சல் வழி கருத்து
----------------------------------------
//I am an admirer of Adirai Kavi Kalam, I am lucky to see his face last night. May Allah bless him to bring out more and more classical poems in praise of our Lord.//
அன்புமழைக் கண்டேன் அளவற்ற நட்பினால்
இனபத்தில் சென்றது இன்று.
“கவியன்பன்” கலாம்
--
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com, shaickkalam@yahoo.com, kalaamkathir7@gmail.com
//I am an admirer of Adirai Kavi Kalam, I am lucky to see his face last night. May Allah bless him to bring out more and more classical poems in praise of our Lord.//
Assalamu alaikkum Brother NAS,
I am immensely glad to know that you are an admirer of my classical poems. I was too writing "pudukavithai" as Br.Sabeer for some times eventhough I had been writing classical poems since 1974 (while I was a student of KMHS). As per our Adirai Ahmed Kaka's advice, I have reverted to classical poems only. You may visit and see my blog , http://www.kalaamkathir.blogspot.com/ where I started with "pudukavithai" and then I reverted to classical poems and still continue and steadfast only on this path as our Adirai Ahmed Kaka's advice is true. As he told that I had been admired by "pulavar Jinnah Sharfudden of Srilanka" for my classical poems. He too advised me to stay on this path only. Now, I am happy to know you are too admirer of my claasical poems. Also, as per your supplication I write poems to remember Allah which gives satisfaction.
அன்புச் சகோதரர் ஜமீல் காக்கா அவர்களின் இணைய தளத்தில் பதியாமல் என் கவிதைகள் கிடப்பில் உள்ளதால், அல்லாஹ் நாடியதால் அவர்களின் “இதய் தளத்தில்” பதியக் கூடிய வாய்ப்பினைப் பெற்றேன். இக்கருத்தினை யான் மேடையிலேயே சொல்லிவிடலாம் என்று எண்ணினேன். ஆனால், எனக்குத் தரப்பட்ட “எண்சீர் (எட்டு) நிமிடம்” நேரத்தில் விட்டு விட்டேன். அவர்களை நேரில் கண்டும் என் ஆதங்கத்தினை வெளியிட்டேன். அந்தப் புன்னகை மன்னரின் புன்முறுவலே எனக்கு மறுமொழியானது. “புற்றீசலாய்ப் புதுக்கவிதைகள் புறப்பட்டிருக்கும் இற்றைப் பொழுதினில் நீ மட்டும் தனியாக அடையாளப் படுத்தப்படவும், தமிழறிஞர்களின் மதிப்பினைப் பெறவும் மரபுப்பா மட்டுமே வனையவும்” என்று ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்கள் சொன்ன காரணம் தான் என்னை இடையில் புதுக் கவிதையின் பக்கம் திரும்பாமல் த்டுத்து விட்டது. அவர்கள் சொன்னதும் உண்மையாகவே அமைந்தது. ஆம். யான் யாத்திட்ட “மனைவி என்னும் துணைவி” எண்சீர் க்ழிநெடிலடி விருத்தப்பா வினைக் கண்ணுற்ற இலங்கை காவியத்திலகம் ஜனாப் ஷர்புத்தீன் புலவர் அவர்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய்ப் பாராட்டும், 30/09/2011 அன்று துபை மேடையில் எனது தமிழ்ப்பேராசிரியர் அவர்கள் “கவி.க்லாம் எப்படித்தான் இப்படி யாப்பினை யாத்துக் கொண்டே போகின்றார்” என்று என்றன் அதிரைச் சொந்தங்கள் முன்னால் பாராட்டிய்தும் எனக்கு விருது கிடைத்த வியப்பு!! எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
அன்பிற்குரிய கவியன்பன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தாங்கள் மரபுக் கவிதைகள் எழுதி வருவது குறித்து மிக்க சந்தோஷம். வாழ்க உங்கள் கொள்கை.
24 மணிநேரமே உயிர்வாழும் ஈசல்களோடு புதுக்கவிதைகளை ஒப்பிடுவது நல்லதொரு மரபா என்று யோசியுங்கள்.
என்னைப்பொறுத்தவரை "கவிதை என்பது தானாக வருவது, வரவழைப்பதல்ல.
மரபு எழுதுபவர்கள் சந்த சுகத்துக்காக சொந்த கருத்துக்களை இலக்கண விதிகளுக்குத் தாரைவார்த்து எதுகை மோனையில் ஒத்துப்போகும் வார்த்தைகளைத் தேடி கடைசியில் புனைவில் வாசிக்கவிடாமல் பயமுறுத்துகிறார்கள் என்பதே என் நிலைப்பாடு.
படைப்பின் வடிவம் முக்கியமல்ல
படிப்பினையே முக்கியம்
மொழி மூச்சல்ல பேச்சல்ல, மாறாக ஒரு ஊடகமே. just a tool.
Let's not be too emotional about language. I like my language but i don't breath it.
I respect your views on writings but i don't have to agree with it.
wassalaam.
sabeer.abushahruk சொன்னது…
அன்பிற்குரிய கவியன்பன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தாங்கள் மரபுக் கவிதைகள் எழுதி வருவது குறித்து மிக்க சந்தோஷம். வாழ்க உங்கள் கொள்கை.
24 மணிநேரமே உயிர்வாழும் ஈசல்களோடு புதுக்கவிதைகளை ஒப்பிடுவது நல்லதொரு மரபா என்று யோசியுங்கள்.
என்னைப்பொறுத்தவரை "கவிதை என்பது தானாக வருவது, வரவழைப்பதல்ல.
மரபு எழுதுபவர்கள் சந்த சுகத்துக்காக சொந்த கருத்துக்களை இலக்கண விதிகளுக்குத் தாரைவார்த்து எதுகை மோனையில் ஒத்துப்போகும் வார்த்தைகளைத் தேடி கடைசியில் புனைவில் வாசிக்கவிடாமல் பயமுறுத்துகிறார்கள் என்பதே என் நிலைப்பாடு.
படைப்பின் வடிவம் முக்கியமல்ல
படிப்பினையே முக்கியம்
மொழி மூச்சல்ல பேச்சல்ல, மாறாக ஒரு ஊடகமே. just a tool.
Let's not be too emotional about language. I like my language but i don't breath it.
I respect your views on writings but i don't have to agree with it.
wassalaam.
--------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சான்றோர்கள் அஹமது சாட்சா,ஜமில் காக்கா, கலாம் காக்கா எல்லாரும் தமிழ் மேதைகள் என்றால் அதிரை கவிஞர்(இதற்கு நான் உடன் பாடல்ல . அவர் அதிரையையும் தாண்டிய கவிஞர், பொது கவிஞர்.)சபீர் காக்காவும் தமிழ மேதையே! அவரின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். அல்லாஹ் அக்பர்.
தம்பி கிரவ்ன்: நீ சொல்வது சரியே ! இதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கவே முடியாது... ஒரே இடத்தில்தான் சஞ்சல் ஏற்படுத்துகிறது அதாவது //புற்றீசலாய்ப் புதுக்கவிதைகள் // என்று சொன்னதே !
மரபை மதிக்கிறோம் நேசிக்கிறோம் அதனை உணர்கிறோம் அது அறிந்தவர்கள் புரிந்தவர்கள் மத்தியில் மட்டுமே...
அஸ்ஸலாமு அலைக்கும்.
தம்பி கவியன்பன்,
சத்தியமார்க்கம்.காம் தளம் என்னுடையதன்று. அது ஒரு ட்டீம் ஒர்க். நான் அதில் ஓர் அங்கம் மட்டுமே (தல).
தம்பி க்ரவ்ன்,
மேதைகளோடு என்னைச் சேர்க்கவேண்டாம் என்று உங்களை வேண்டி, விரும்பி, கெஞ்சி ... ... ... ...க் கேட்டுக் கொள்கிறேன்.
நானு படியாதவன்.
மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------
மேலே என்னமோ பேசிக்கிறாங்க... ஒன்னும் புரியமாட்டேங்குது...ஈகோ பிரச்சினையா? இல்லை நல்லா இருக்குற மனுசனை அப்படியே கவுத்தும் காம்ப்லக்ஸ் பிரச்சனையா?
யான்வுளெ, காம்ப்லக்ஸ் பெரச்சனைண்டா என்னா? அதா மதராஸ்லெ நாலு காம்ப்லக்ஸ் வாங்கி போட்டு வாடகை சரியா வரமாட்டேங்குதான்..... ஆளப்பாரு......
காம்ப்லக்ஸ்னா மனுசனுக்கு ஏற்ற,தாழ்வு மனப்பான்மை வந்து மோசமாவோ/நாசமாவோப்போறதுக்கு சொல்றதுவுளெ.....
அதெல்லாம் நம்மாள்வொளுக்கு ஈக்காதுவுளெ....
அப்படி ஈந்தா எல்லாருக்கும் சலாமத்து தான்....
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
கிரவ்னு, தாம் குரிப்பிட்டிருந்த மேதைகளின் "டிரைவராக" நான் இருந்திடுறேண்(டா)ப்பா ! :)
அஸ்ஸலாமு அலைக்கும்,
நீங்கள் எல்லாம் வருத்தப்பட்ட அதே அளவு வருத்தம் தான் எனக்கும் நம்து தலைவர் அஹ்மத் காக்கா அவர்கள் என் வலைத்தளத்தின் பின்னூட்டத்தில் கருத்துரை இட்டு இருந்தார்கள்;” புற்றீசல்...” என்ற வார்த்தை அவர்களின் சொந்த வார்த்தை; அதனாற்றான், இவ்வாறெல்லாம் எதிர்ப்புகளும் வருத்தங்களும் வரும் என்று அந்த அறிஞரின் - ஆசானின் கருத்துரையினை யான் வெளியிடாமல் அழித்து விட்டேன்; ஆனால் இத்துணை நாட்களாக சகோதரர் சபீர் அவர்கள் சொன்ன அதே கருத்துக்கள் எனக்கும் உடன்பாடாகவே அமைந்தாலும் அஹ்மத் காக்கா “பற்றிப் பிடித்துக் கொள்” என்ற வார்த்தையினைப் பற்றிக் கொண்டதால் எனக்கும் தெரியும் மரபுப் பாக்களால் நிரம்ப “போர்” அடித்தவர்கள் என்னிடம் போராடியும் உள்ளனர். இன்று முதல் சைவமும் அசைவமும் கலந்த உணவகம் போல மரபுப் பாவும் புதுக்கவிதையும் படைத்து வெளியாகும் தளமாக அமைத்திடுவேன். இதனால் என்னால் எல்லாரின் வரவேற்பினையும் பெற முடியும். கீழே உள்ளக் கவிதை தான் யான் எழுதி வைத்து வாசிக்க இருந்தேன்.
ஊரை இணைக்கும் கோடுகளே
ஊரைப் பிரிக்கும் கேடுகளானது
வேற்றுமைத் தீயால்
வெந்து மடிகின்றோம்
வாஞ்சை வாளியால்
அன்பு நீரெடுத்து
வாரி அணைப்போம்
சிரட்டை அளவேனும்
சிரத்தை நினைப்போம்
கூட்டமைப்பு என்னும்
கூடாரம் அமைத்தோம்
ஓட்டுக்காகப் பிளக்கும்
வேட்டமைப்புகளை
வெளியில் நிறுத்துவோம்
உளத்தூய்மைப் பற்றினால்
உருவாகும் ஒற்றுமை
கத்தியில் நட்ப்பது போல்
பத்திரமாகவும்; கண்ணாடிப்
பாத்திரமாகவும் பக்குவமாய்க்
கோத்திரப் பெருமையின்றி
பழகுவோம்
எதிர்மறை எண்ணங்களின்
புதிர்களால் புறம்பேசுவதைப்
புறந்தள்ளுவோம்
அண்டைத் தெருவோடு
அன்பை மறந்தால்
அரவணைக்க ஆளின்றி
அடுத்துவரும் பெருங்கேடு
சமத்துவ மரத்தைச்
சாய்ப்பதற்குச் சாத்தானின் கைகளில்
சுயநலக் கோடாரி
சந்தித்துச் சொல்வோம்
சகோதரர்களின் வீடேறி
”எல்லா வீதிகளும் ஒன்றே”
இனியொரு விதி செய்வோம் நன்றே”
//”எல்லா வீதிகளும் ஒன்றே”
இனியொரு விதி செய்வோம் நன்றே”//
வாருங்கள் வாருங்கள் வாருங்கள் ! கலாம் காக்கா ! :)
அஸ்ஸலாமு அலைக்கும் அபூ இப்றாஹீம் சகோதரா,
அருகில் அமர்ந்து அளவளாவிய அன்று எனக்குக் கிடைத்தப் பேறுகளில் நன்று என்று மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் இருந்த என் உள்ளம் இன்று பின்னூட்டங்களினால் பின்னப்பட்டதும் பின்னோக்கிச் சென்று விட்டேன். கவியுள்ளம் கவியுள்ளமே அறியும். அன்புத் தம்பி சபீர் எனது வலைப்பூவில் கருத்துரையிட்டு “ உச்சக்கட்டப் புலமை; மெச்சத்தகுந்தப் புனைவு” என்ற போழ்தும், முன்பொருமுறை ஒற்றுப்பிழைகளைச் சுட்டிக்காட்டிய போழ்தும் அவரின் தமிழ்ப்புலமையினன்க் கண்டு வியந்தேன்! அவரும் நீங்களும் விரும்பிய “ஈரம்” என்னும் கவிதையின் சாரம் தான் காரணம் என்றும் அறிவேன்.(அதில் புதுக்கவிதையின் மலர்களை மரபின் நூலில் தொடுத்தது தான் காரணம்) இங்கு சிலர் என்னிடம் ஈகோ ஏறப்ட்டு விட்டதாக அறிவித்ததும் என் மனம் வெம்பி அழுது விட்டேன். காரணம். இதுவரை யான் பேசிய இரு கூட்டங்களிலும் “உளத்தூய்மை” மற்றும் மனோயிச்சைப் பற்றிய்துதான். ஆனால் நான் எப்படி என் கருத்துக்கு மாற்றமாக் அவ்வண்ணம் ஈகோவுடன் வெளிப்படுத்துவேன். கால்ம் காலமாக் கவிஞர்கட்குள் போட்டி உண்டென்றாலும் என்னிடம் பொறாமை இல்லை; தற்பெருமை இல்லை. அதனாற்றான் க்வி.கலாம் என்று அழைப்பது வேண்டா என்று எண்ணுகின்றேன் (பின்னால் கவிழ்க்கலாம் என்று மாறி வரும்)ஆனால். திருவாரூரில் யான் பயின்ற வேளையில் திரு.மு.கருணாநிதி அவர்களைப் பாராட்டியக் கவிதைக்கு என்னைப் பாராட்டி “கவியன்பன்” கலாம் என்றழைத்தர்ர்கள். அதன் நினைவாகவும் யான் பிற்ந்த ம்ண்ணின் நினைவாகவும் தான் “கவியன்பன்” கலாம்,அதிராம்பட்டினம் என்று இடுகின்றேன். அதனையும் யாரும் விரும்ப வில்லை என்றறிவித்தால் இன்றே விட்டு விடுகின்றேன்
“இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்” என்று இங்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே என்னிடம் உணமை தான் வெளிப்பட்டது; பொறாமை அல்ல; பொய் என்றெண்ணினால் தலைவர் அஹ்மத் காக்கா அவர்களிடம் கேட்கலாம். அவர்கள் மீது கூட எனக்கு ஒரு வருத்தம் தான், மரபுப்பாவினை மட்டும் பற்றிப்பிடி என்று சொல்லி என்னை இப்படி இக்கட்டான நிலைமையில் நிறுத்தி விட்டு, அவர்கள் எல்லா மேடைகளிலும் வாசித்துக் காட்டுவது மரபுக்கவிதை அல்லவே. (அவர்கள் வாசித்துக் காட்டுவது அவர்களின் சொந்தக் கவிதையும் அல்ல என்பதனாலோ)மேலும், நீங்கள் உருவாக்கியுள்ளச் ச்பையில் என்னையும் இணைக்கலாமா என்ற கேள்விக்கு எனக்கு அடைமொழி யிட்டு “யாப்பிலக்கணத்தை”ச் சேர்க்கலாமா என்றொரு பின்னூட்டமும் ஒரு மின்னன்சலில் கண்டதும் எனக்கும் இன்னும் வேதனை; சள் சள் என்று புதுக்கவிதையில் (நான் நேரில் சொன்ன வண்ணம்) புகுந்து எண்ணிக்கையில் அதிகமான்க் கவிதைகள் புனைந்தும் புகழும் பெற்ற வேலையில் அஹ்மத் காக்காவின் பின்னூட்டம் என்னை மரபின் பக்கம் திசைத்திருப்பி இன்று இப்படியொரு இக்கட்டானச் சூழலைச் ச்ந்திக்க வைத்து விட்டதால் அவர்கட்குக் கொடுத்த வாக்கினை விட்டும் விலகி மரபும்; புதுமையும் கல்ந்து (சைவ்மும் அசைவமும் கல்ந்து) சமைப்பேன்; இதனால் அன்பிற்கினியச் சகோதரர் சபீர் என் மீது கொண்ட அன்பை மீண்டு(ம்) பெறுவேன்
க்ரவுன்,
காதைக் கொடுங்கள்
மேதை எனும் விளிப்பு தரும்
போதை
பாதை மாற்றும் வலிமையானது!
தகுதியானவர்களே
மேலே
த...ய...ங்...கும்போது
நாமும் அடக்கி வாசிப்போமே:).)
அபு இபுறாகீம், சகோதரர் கவியன்பனுக்கு பதில் எழுதிவிட்டு விரிவாகப் பேசுவோம்.
அன்பிற்குரிய சகோ. கவியன்பன் கலாம் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
கீழே நீங்கள் எழுதி எனக்குப் பிடித்த மரபுக் கவிதையையும் அதற்கான என் பின்னூட்ட்த்தையும் பதிந்திருக்கிறேன்:
ஈரம்
ஈரமுள்ள நிலத்திற்றா னெழுந்துவரும் நல்விதைகள்
ஈரமுள்ள மனதிற்றா னெழுதவரும் கவிதைகள்
ஈரமுள்ள கர்ப்பத்தி லியங்கிவரும் குழந்தைகள்
ஈரமுள்ள வுதடுகளி லெழும்காதற் போதைகள்
ஈரமுள்ள வுறவுகளி லெப்பொழுதும் நன்மைகள்
ஈரமுள்ள வுணர்வுகளி லிரக்கத்தின் தன்மைகள்
ஈரமுள்ள இதயந்தா னிரத்தத்தி னோட்டமாகும்
ஈரமுள்ள ஈகையினா லேழ்மையுமே யோட்டமிடும்
ஈரப்பசையு மில்லையெனி லினியுறவும் தூரமாகும்
ஈரமின்றி வாழ்ந்தாலே யில்லறமும் பாரமாகும்
ஈரச்சு ருதியினின்னி சைதானி லையுமாச்சு
ஈரக்காற் றில்லையெனி லென்னாகும் நம்மூச்சு
ஈரமென்னு மீரசையே இக்கவியின் தலைப்பெழுத்து
ஈரமென்னு மீரசையா லிப்புவியின் தலைநிமிர்த்து
ஈரத்தைக் காட்டவில்லை ஈழத்தை மீட்கவில்லை
வீரத்த மிழனின்னும் விழிக்கவில்லை யானறியேன்
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
sabeerabuShahruk said:
மெச்சத்தக்கப் புனைவு
உச்சக்கட்டப் புலமை
வாழ்த்துகள்
ஈரத்தலை துவட்டி
ஈரோடு பேனகற்றி
ஈரைந்து அகவைச் சிறுமியை
ஈன்றவர் சிங்காரித்ததுபோல்...
அழகான கவிதை!
8 செப்டெம்ப்ர், 2011 8:32 am
நீங்கள் மரபுக்கவிதை என அடையாளம் காட்டாவிட்டாலும் எனக்கு இந்த கவிதை மிக பிடித்துத்தான்போகும். காரணம், நீங்கள் புனைந்த விதமேயன்றி தளை தட்டாமலோ சீர் கெடாமலோ அசை பிறழாமலோ எழுதியதல்ல.
புதுக்கவிதைகளில் கொடிகட்டிப்பறந்தவர்கள் எல்லாம் மரபு பயின்றவர்கள்தாம். ஆயினும், மரபைப் பதுக்கிவைத்துவிட்டு புத்தம் புது யுக்தியில் சிறகுகளை விரிக்கப்போய்தான் அவர்களுக்கு ஆகாயம் வசப்பட்ட்து; அவர்க்ளின் ஆக்கங்கள் வாசிக்கப்படுகின்றன.. புதுக்கவிதைகள் என பிரித்தறியப்பட்ட பல கவிதைகளில் ஆங்காங்கே மரபு தொணிப்பதைத் தாங்களும் உணர்ந்திருக்கலாம். படைப்புகள் பற்றிய என் நிலைப்பாட்டை அடுத்த பின்னூட்ட்த்தில் சொல்லி முடிக்கிறேன். உங்களைப்போன்ற கற்றுத்தேர்ந்தவர்கள் ஒரு வட்ட்த்துக்குள் முடங்கிவிட்டால் நஷ்டம் வாசகர்களுக்குத்தான்.
முத்தாய்ப்பாக… மரபில் உதிப்பதை மரபாகவேப் பதியுங்கள்; மரபுக்குள் அடங்காதவற்றைக் கட்டவிழ்த்துவிட்டு அதன் போக்கில் எழுதி எங்களைப்போன்றவர்களும் வாசிக்க உதவுங்கள். (முக்கியமான பின்குறிப்பு: நான் ஒன்றும் தமிழில் பெரிய வித்வானெல்லாம் இல்லை. நடப்புகள்மீது சுய அபிப்ராயம் உள்ளவன். என்னைச் சுற்றி நிகழ்பவற்றில் கவனம் செலுத்துபவன். என் கருத்துகளைப் பதிபவன். அவ்வளவே. கவியன்பன் எனும் பெயரில் ஒன்றும் பந்தா இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. எனவே, பொறுத்தம்தான் எனக்கொள்க.
அப்புறம், சத்தியமார்கம் டாட் காமில் ஒரு கவிதை வரவைப்பதற்குள் தாவு தீர்ந்துபோய்விடுகிறது என்பது என் அனுபவம். அதிரை நிருபரோ ஒன்னாம் வகுப்பிலிருந்து ஆட்கள் சேர்ப்பவர்கள். சத்தியமார்க்கம் கல்லூரி லெவெல்ல வகுப்பெடுக்கிறார்கள். ஆயினும், உங்களின் படைப்பு சமாவில் வர நான் போராடுவேன், ஜமீல் காக்கா தலைமையிலான குழுவுடன்.
அன்புடன் சபீர்.
பதிவிலக்கணம்?!!
கருத்துச் சூழ்கொண்ட
குருத்துக் கவிஞர்காள்...
கோர்ப்பது பிசிறினாலும்
வாரப்பது தொடரட்டும்!
எழுத்துப் பிழையால்
எண்ணம் குழையுமா?
சுமந்து வந்த செய்திச்
சுருங்கிப் போகுமா?
ஞஙன நமண யரல வழள
செழிக்கும் எழுத்தை...
லகர ளகரம் னகர ணகரம்
கிழித்துப் போடுமா?
உணர்ச்சி பொங்க
உருவாகும்
உள்ளக் கிடக்கையை...
புணர்ச்சி இலக்கணம்
புதைத்துப் போடுமா?
அடுக்குத் தொடரும்
ரெட்டைக் கிளவியும்...
அலங்கார மல்லாது
விலங்குக ளல்லவே?
குற்றியலுகர குற்றியலிகர
உகர இகரங்களும்
திரிபு மரபுகளும்
உற்று நோக்கியா
உணர்வுகள் பொங்கும்?
நாலடி வெண்பா
அறுசீர் ஈரடி எல்லாம்...
பாட்டன் பூட்டன்
பழகிய வித்தை!
எதுகை மோனையில்
முதுகு சொரிந்தால்...
சொக்கும் சுகத்தில்
திக்குமே தீர்வுகள்!
இலக்கண விலங்குகள்
தலைக்கன வியாக்யானம்...
தகர்த்து தந்தது
தற்காலத் தமிழின்
தனித்திறன் அன்றோ?
எண்ணங்களை
ஒட்டி வந்தால்...
கூட்டிச் செல்வோம்;
இடறிவிட்டால்...
உதறி விடுவோம்
இலக்கண கைவிலங்குகளை!
மொழி எமக்கு ஊடகம்...
ஒலியின் -
மாத்திரை அளக்கவோ
அசை பிரிக்கவோ
அல்ல!
கற்றதும் உற்றதும் ...
நினைத்ததும் உணர்ந்ததும் ...
ஜனித்ததும் கணித்ததும்
சொல்ல!
முற்றும் தெளிந்தோர்
கற்றுத் தாருங்கள்.
அதுவரை...
வெற்றாய் நின்று
அற்றுப் போகாமல்-
சொல்வோம்
சுட்டுவர் உள்ளமும்
வெல்வோம்!
Sabeer
கூட்டமைப்பு என்னும்
கூடாரம் அமைத்தோம்
ஓட்டுக்காகப் பிளக்கும்
வேட்டமைப்புகளை
வெளியில் நிறுத்துவோம்//
இவைதான் எல்லோரையும் உசுப்பும். தொடரட்டும். இத்தகு தாக்கம்தரும் தூண்டல்களை அதிரை நிருபரிலும் எழுதவேண்டும் என்பது என் விருப்பம்
அஸ்ஸலாமு அலைக்கும். கவிஅன்பன் கலாம் காக்கா ஈகோ அற்றவர்கள் என்பதை அவர்களிடம் பழகியவர்களுக்குத்தெள்ளத்தெளிவாகத் தெரியும். மேலும் . அவர்கள் தமிழில் புலமை பெற்றதுபோல் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்கள் என்பதை அவர்களிடம் பழகியவர்கள் நன்கு அறிந்ததே ஆனாலும் ஒருனாலும் தற்பெருமையாக இயங்கியதில்லை மேலும் என்னை சிறுவயதிலிருந்து பார்த்தவர்கள் ஆதலால் ஒரு இடத்தில் என்னை அறிமுகப்படுத்தும் போது என்னை(தன்னை)போல் ஒருவன் என்று அறிமுகப்படுத்தினார்கள். எவ்வளவு பெரியமனம் வேண்டும் சாமானியனான என்னை தன்னுடன் ஒப்பிட்டு சொல்ல பெரும் மனம் வேண்டும்.அந்த பெரும் மனத்துக்குச் சொந்தக்காரர் இந்த பெருந்தகை.
அப்பாட நல்லபடியா முடிஞ்சது
//அப்பாட நல்லபடியா முடிஞ்சது //எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே- விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் பாதுகாப்பானாக. நமது ஒற்றுமை ஓங்குக (ஆமீன்). நிற்க. அன்புத்தம்பிகள் சபீர் மற்றும் தஸ்தகீர் (கிரவுன்) என்பாலும் என் “பா”வின் பாலும் வைத்துள்ள அன்பால் மகிழ்ந்தேன்; நெகிழ்ந்தேன். எனது மேற்கண்ட புதுக்கவிதையும் கீழேக் காணப் போகும் துளிப்பா (ஹைக்கூ)வினையும் இதே அதிரை நிருபர் வலைத்தளத்தில் இட முடியாமல் (உள் நுழையாமல்) திரும்பி விட்டது. இதனைக் காணும் என் அன்புத் தம்பியும் என் மீது அளவற்ற பாசமுள்ளத் தம்பி தாஜுத்தீன் என்னிடம் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் நலம். தம்பி சபீர் கொண்டுள்ள கொள்கை (அவரின் கவிதையில் கண்ட உண்மை) எனக்கும் உடன்பாடே. “இதுவரை நான்” என்ற கவிப்பேரரசு அவர்களின் நூலைப் படித்து விட்டு அதுவரை நான் மரபை விட்டு புதுக்கவிதைக்குப் பயணமானேன். மீண்டும் திரும்பிய கதை ஏற்கனவேச் சொல்லப்பட்டு விட்டது. நேற்று யான் வனைந்த துளிப்பா (ஹைக்கூ)
சுமந்த போழ்தும்
சும்ந்த பின்னும்
சுமப்பது - தாயின்
தியாகம்
ஊருக்கு விருந்து வைக்கவும்
ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத்
தீக்குச்சி
மானம் காப்பதும்
மானமிழந்தால் கோர்ப்பதும் - ஒன்றே
முடிச்சு
மணந்தால் மறப்பதும்
மணக்காவிடில் மறக்காததும்- அதே
காதல்
உணவின் முடிவு
மறுவுலகின் துவக்கம் - அதுவே
மரணம்
ஊரை இணைப்பதும்
ஊரைப் பிரிப்பதும் - அதே
தெருக்கள்
பிறரைக் காப்பதால்
தன்னைக் காப்பது - அதே
தர்மம்
குழந்தைக்கு வந்து
பொம்மை நிறுத்தியதும்
பெரியதாய் வளர்ந்ததும்
தன்னைக் குழந்தை மறந்ததால்
பொம்மைக்கு வந்ததும் - ஒன்றே
அழுகை
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
"கவியன்பன்"கலாம் காக்கா:
உங்களின் கவிதைகள் பின்னுட்டத்திற்குரியதாக இருந்திடாமல் அவைகள் முன்னுட்டத்தில் (முகப் பதிவில்) வந்து அங்கே பின்னூட்டங்கள் அதனைத் தொடர வேண்டியவைகள் !
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தமிழ்ப்புலவர்கள் (சகோதரர்கள்: சபீர், கவியன்பன் கலாம், தஸ்தகீர்;, அபுஇபுறாஹீம், ஜமீல் காக்கா) அனைவரும் ஒன்று சேர்ந்து கருத்துக்களத்தில் இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. எல்கேஜி பிள்ளை போல் சில புரிந்தும் புரியமாலும் நானும் களத்தில் இருக்கிறேன்.
அலாவுதீன்.S. சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தமிழ்ப்புலவர்கள் (சகோதரர்கள்: சபீர், கவியன்பன் கலாம், தஸ்தகீர்;, அபுஇபுறாஹீம், ஜமீல் காக்கா) அனைவரும் ஒன்று சேர்ந்து கருத்துக்களத்தில் இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. எல்கேஜி பிள்ளை போல் சில புரிந்தும் புரியமாலும் நானும் களத்தில் இருக்கிறேன்.
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. அல்லாவுதீன். மேற்கண்ட பெரும் கவிகளின் மத்தியில் என் பெயரும்? உங்களின் பெரும்தன்மைக்கு நன்றி. ஆனாலும் இவ்வளவு பேராசை எதுக்கு? என்னால் சிறந்த வாசகனாகவே இருக்க முடியாத போழ்து இப்படி கவிகளின் வரிசையில் என்னை வைத்து பார்க்கும் ஆசை எதனால் வந்ததோ? நல்ல வாசகனாக எனை நிறுத்தி வைத்தபின் நான் முயலுவேன் அவர்களின் வால் பகுதியாக. உங்களின் அன்பிற்கு நன்றி.
அபுஇபுறாஹீம் சொன்னது…
"கவியன்பன்"கலாம் காக்கா:
உங்களின் கவிதைகள் பின்னுட்டத்திற்குரியதாக இருந்திடாமல் அவைகள் முன்னுட்டத்தில் (முகப் பதிவில்) வந்து அங்கே பின்னூட்டங்கள் அதனைத் தொடர வேண்டியவைகள் !
------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அபுஇபுறாகிம் காக்காவின் கண்ணோட்டமே என் எண்ண ஓட்டமும்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!
நான் இன்று அன்புத்தம்பி “அதிரை நிருபர்” தாஜுத்தீன் அவர்கட்கு தனிமடலில் விவரம் இட்டுள்ளேன்: எனது ஆக்கங்கள் உட்புகாமல் திரும்பவும் முகப்புக்கு வருவதும் ஏன் என்றும் அதிரை நிருபர்க்கான எனது பயனர்பெயர் மற்றும் கடவுசொல் சரியாகப் பதிவு செய்தும் இடையில் http:// என்று ஒரு இடைச்செருகல் வந்து தடைச் செய்கின்றது. எனக்கும் முன்னோட்டத்தில் (முகப்பில்) இருக்கவே பேரவா. யான் பயின்ற காலங்களில் எல்லாம் வகுப்புகளிலும் முகப்பு வரிசையினைத் தான் தெரிவு செய்வேன்; முதற் மாணவனாகவே இருந்திருப்பதும் அதனாற்றானோ? இதனால் எனக்குத் தற்பெருமை உண்டாகவில்லை; மாறாக படிப்போர் ஊக்கம் பெறவே; இப்படியும் “இக்லாஸ்” ஆன நிய்யத் வைக் கலாம்.நிற்க. எல்லாரும் என்பால் வைத்துள்ள அன்பால் அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகின்றேன்; அல்ஹம்துலில்லாஹ்- ஜஸாக்குமுல்லாஹ் கைரன்
தட்டச்சுப் பிழைகட்கு மன்னிக்கவும்; மீள்பார்வை செய்யவில்லை
வ அலைக்குமுஸ்ஸலாம்,
பாசமிகு கலாம் காக்கா,
கடந்த சில நாட்களாக அலுவல் வேலை அதிகம், அதிரைநிருபர் பக்கம் கொஞ்சம் கவனம் குறைவு.
நேற்றைய தங்களின் பின்னூட்டமும், தற்போதைய பின்னூட்டமும் தற்போதுதான் கண்டேன்.
internet explorer browserல் நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினை உள்ளது. கருத்திடுவதற்கு முன்பு தங்களின் gmail email IDயில் login செய்துவிட்டு அதிரைநிருபர் பதிவுகளை சொடுக்கவும், தாங்கள் login செய்த gmail IDயில் உள்ள பெயர் தானாக வந்துவிடும். மற்ற browserகளில் இந்த பிரச்சினை இல்லை என்று எண்ணுகிறோம்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள தனி மின்னஞ்சல் இது வரை கிடைக்கவில்லை.
என் மின்னஞ்சல் tjdn77@gmail.com
அதிரைநிருபர் குழு மின்னஞ்சல்: editor@adirainirubar.in, adirainirubar@gmail.com, comments@adirainirubar.in
தயவு செய்து தட்டச்சு செய்த கருத்துக்கள் பதிவு வலைத்தளங்களில் பதிவு செய்வதற்கு முன்பு அந்த கருத்துக்களை copy செய்துவிட்டு பதிவு செய்யுங்கள்.
Post a Comment