Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஹஜ் கடமை - பகுதி 1 9

அதிரைநிருபர் | October 22, 2011 | , , ,

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார். இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கிறான். அல்குர்ஆன் (3:97)

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.(புகாரி)

'செயல்களில் சிறந்தது எது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என வினவப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அங்கீகரிக்கப்படும் ஹஜ்' என்றார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி)

எமக்கு பிரசங்கம் நிகழ்திய நபி (ஸல்) அவர்கள் ‘மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆகவே விரைந்து ஹஜ் செய்யுங்கள்” என கட்டளையிட்டார்கள் என அபூஹுரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).

இந்த வருடம் புனித ஹஜ் பயணம் செய்யும் நம் அதிரைவாசிகள் அனைவருக்கும்,  நம் சமுதாய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களும் துஆக்களும்.  ஹஜ் செய்ய இருக்கும் அன்பு சகோதர, சகோதரிகளே...  உங்கள் புனித பயணத்தில் அதிகமாக   நம்  சமுதாயத்தின்  நலனுக்காக  துஆ  செய்யுங்கள்.    இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும் அன்பர்களே இந்த வருடம் ஹஜ் செல்லும் உங்களின் சொந்தங்களிடமும் நம் முஸ்லீம்  சமுதாயத்தின் நலனுக்காக  அதிகம் துஆ செய்ய சொல்லுங்கள். அல்லாஹ் போதுமானவன்.
 
-- அதிரைநிருபர் குழு


சென்ற வருடம் புனித ஹஜ் பயணம் செய்த அன்பு சகோதரர் S. ஹமீது  அவர்கள் நம் அதிரைநிருபருக்கு அனுப்பிய புகைப்படங்களை மீண்டும் உங்கள் அனைவருடன் பகிர்ந்துக்கொள்வதில் பெருமையடைகிறோம்.


புகைப்படங்கள்: அதிரை S. ஹமீது

- அதிரைநிருபர் குழு

9 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்ல தருணமறிந்து பதியப்பட்டிருக்கும் நினைவூட்டலும் உந்துதல் கொடுக்கும் புகப்ப்டங்கள் அருமை !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

காணக்கூப்பிடும் அழகான தெளிவான படங்கள்.ஜஸாக்கல்லாஹ்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இந்த வருடம் புனித ஹஜ் பயணம் செய்யும் நம் அதிரைவாசிகள் அனைவருக்கும், நம் சமுதாய சகோதர சகோதரிகள் அனைவருக்காகவும் நாம் எல்லோரும் து ஆ செய்ய வேண்டும்.

ஹஜ் செய்ய இருக்கும் அன்பு சகோதர, சகோதரிகளே... உங்கள் புனித பயணத்தில் அதிகமாக நம் சமுதாயத்தின் நலனுக்காக துஆ செய்யுங்கள்.

இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும் அன்பர்களே இந்த வருடம் ஹஜ் செல்லும் உங்களின் சொந்தங்களிடமும் நம் முஸ்லீம் சமுதாயத்தின் நலனுக்காக அதிகம் துஆ செய்ய சொல்லுங்கள்.

அல்லாஹ் போதுமானவன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா,

புகைப்படங்களை பார்த்தவுடம் சென்ற வருட ஹஜ் நினைவுகள் வருகிறதா?

அந்த நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்.

sabeer.abushahruk said...

ஷைத்தானுக்கு நான்கு மாடிகளா?

எனக்கு , முதல் மாடி மட்டுமே இருந்தபோது செய்த ஹஜ் நினைவுக்கு வருகிறது.

KALAM SHAICK ABDUL KADER said...

1983ல் நாங்கள் செய்த ஹ்ஜ்ஜில் கிடைக்காத இவ்வளவு வசதிகளும் இப்பொழுது பார்த்து இனிமேல் ஹஜ் க்ரியைகள் செய்யும் பொழுது ஏற்படும் நெருக்கடிகள் குறைய வாய்ப்புள்ளன்வாகவேத் தெரிகின்றது.சௌதி அரபிய்யாவில் பணியாற்றிய பொழுது கிடைத்த நிம்மதி, வாரந்தோறும் உம்றா செய்யும் வாய்ப்புகள் எல்லாம் இப்பொழுது இல்லாமல் போனதே என்ற ஏக்கத்தினை இந்தக் கட்டுரையும் படங்களும் ஏற்படுத்தி விட்டன.

அப்துல்மாலிக் said...

நல்ல படத்தொகுப்பு
யா அல்லாஹ் இந்தவருடம் தன் இல்லம் நாடி ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் அனைத்து ஹாஜிகளின் துஆக்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் ஹஜ்ஜை அங்கீகரிப்பாயாக.. ஆமீன் ஆமீன் ஆமீன்

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

ஷைத்தானுக்கு நான்கு மாடிகளா?

//எனக்கு , முதல் மாடி மட்டுமே இருந்தபோது செய்த ஹஜ் நினைவுக்கு வருகிறது//


நான்காவது மாடி இங்கு சவுதியில் இருந்து வரும் ஹஜ் பயணிகளுக்குகாக மினாவில் இருந்து ரயிலில் வந்து கல் எரிந்து விட்டு திரும்ப ரயிலில் போய்விடலாம்

Thameem said...

ஹஜ் கடமை முடித்தால் புதிதாய் பிறந்த குழந்தை மாதுரி.ஆனால் சிலபேர் அக்கடைமை முடித்தும் பாவம் செய்தவர்களாக இருக்கிறார்கள்.புரிகின்றவர்களுக்கு புரிந்தால் சரி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு