Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஹஜ் செய்வீர் ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | October 29, 2011 | , , ,

உறுதி யான தொரு
எண்ணமே கொள்ளனும்
இறுதி யாத்திரைக்கு
முன்னமேச் செல்லனும்

புனித ஹஜ்ஜுக்குப்
போய் வரவேனும்
மனிதப் புனிதத் தூதர்
ஜனித்த மக்கா நகர்

எளிமையான ஓர் ஆயத்தம்
இதயமெல்லாம் ஒரே நிய்யத்தும்
கடனே இல்லா வாய்மையோடும்
கடமை கழித்த தூய்மையோடும்

இலக்கை அடைந்தபின் குளிப்பும்
இன்றியமையாத ஒலூவும்
இஃக்ராம் எனும் ஈருடையும்
இஃக்லாஸ் எனும்  இறையச்சத்தோடும் 
இரண்டு ரக்காத்துகள் தொழனும்

உரக்க உறைக்கனும் நோக்கத்தை
தழ்பியா எனும் முழக்கத்தை:
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லப்பைக் லாஷரீக்க லக்க லப்பைக்
இன்னல் ஹம்த
வன்னிஃமத்த
லக்க வல்முல்க்க
லா ஷரீக்க லக்
வழியெல்லாம் முழங்கனும்
வளியெல்லாம் ஒலிக்கனும்

மக்கா அடைந்ததும்
ஹரத்தைக் கண்டதும்
ஊனோடு உயிரும்
உருகுதல் போலொரு
உணர்வு வியாபிக்க
உண்மை உறைக்கனும்
உலகை வெறுக்கனும்

எல்லாப் பயணங்களும்
இலக்கில் முடியும்
ஹஜ் மட்டுமே
இலக்கில் துவங்கும்

கஃபாவைச் சுற்றியும்
தொங்கோட்டம் ஓடியும்
ஹஜ்ஜின் கிரியைகளை 
கவனமாய்ச் செய்யனும்

மினாவில் தங்கனும்
வீண்பேச்சுத் தவிர்க்கனும் 
சகிப்புத் தன்மையோடு
சகலமும் பகிரனும்

அரஃபாத்தை அடையனும்
அல்லாஹ்வை அஞ்சனும்
அ முதல் அ ஃ வரை
அத்தனை துஆக்களும்
அங்கேயே கேட்கனும்
அழுது தொழுது
ஆண்டவனை இரைஞ்சனும்

அரஃபாத் பெருவெளியில்
அனைவரும் மனவலியில்
மறைத்து செய்த பாவமெல்லாம்
நினைத்து நினைத்து அழுதிடுவர்

கிடைக்குமோ கிடைக்காதோவென
கெஞ்சிக் கெஞ்சிக் கேட்போர்
மன்னிப்போரில் மிகப்பெரியோன்
மன்னித்தாலே மீள்வர்

அந்திசாயக் கிளம்பினால்
அடுத்துள்ளது முஸ்தலிஃபா
அருமையான மலைகளிடை
அன்றிரவைக் கழிக்கனும்

கூழாங்கற்கள் பொருக்கி
ஷைத்தான் மீதான
கோபம் சற்று அடக்கி
மினாவுக்குச் செல்லனும்

ஷைத்தானை அடிக்கயில்
ஹாஜிகள் காயமின்றி
கவனமாய் எரியனும்
சுவனமே விரும்பனும்

தலைமுடி மழிக்கனும்
ஈருடை அவிழ்கனும்
இவ்வுலக உடைதரித்து
தவாபும் செய்யனும்

எஞ்சிய கிரியைகள்
எல்லாம் நிறைவேற்றி
கடமை முடிந்ததும்
மதினாவும் செல்லனும்

நபவியில் தொழவேண்டும்
நபிவழி வாழ்ந்த
நல்லோர்கள் அடங்கிய
மையவாடி காணவேண்டும்

நபியும் நற் தோழர்களும்
தொழுத பள்ளிகளில்
ஜியாரத் செய்தபடி
தொழும் பாக்கியம் வேண்டும்

எல்லாம் நிறைவேற்றி
இல்லம் திரும்பியபின்
இன்ஷா அல்லாஹ்
ஹாஜியாய் வாழ்ந்திடனும்

ரப்பனா ஆத்தினா
ஃபித்துன்யா ஹஸ்னா
வ ஃபில் ஆக்ஹிரத்து ஹஸ்னா
வகினா
அதாபன்னார்!

- சபீர்


புகைப்படம்: S ஹமீது

14 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆமீன்!
ஹஜ்ஜின் பர்ளு சுன்னத்து அத்தனையும் அப்படியே அனைவரும் செய்வதற்கு நாயன் நாடிடுவானாக ஆமீன்!!
ஹஜ்ஜின் சிறப்பம்சங்களை சிறப்பான கவிநடையில் வடித்து தந்த உங்களையும் எங்களையும் நாயன் அங்கீகரிப்பானாக ஆமீன்!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//உறுதி யான தொரு
எண்ணமே கொள்ளனும்
இறுதி யாத்திரைக்கு
முன்னமேச் செல்லனும்///

இன்ஷா அல்லாஹ் !

ஹஜ் கிரியைகள் அனைத்தையும் அழகுற ஒன்றன் தொடர் ஒன்றாக விளக்கி விதமும் அதனை அடுக்கடுக்காக எடுத்து தந்த கலையும் அருமை !

//ரப்பனா ஆத்தினா
ஃபித்துன்யா ஹஸ்னா
வ ஃபில் ஆக்ஹிரத்து ஹஸ்னா
வகினா
அதாபன்னார்!//

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

ஹஜ் செய்யும் முறை அருமையான முறையில் ஞாபகப்படுத்தியுள்ளீர்கள்.

படிக்கும்போதே கற்பனையில் அந்த புனித இடங்களுக்கு சென்று வந்த உணர்வு.


அல்லாஹ் நம் எல்லோருக்கும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை தந்தருள்வானாக.

அப்துல்மாலிக் said...

//ரப்பனா ஆத்தினா
ஃபித்துன்யா ஹஸ்னா
வ ஃபில் ஆக்ஹிரத்து ஹஸ்னா
வகினா
அதாபன்னார்!//

ஆமீன் ஆமீன் ஆமீன்..

அபு ஆதில் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
ஹஜ் செய்பவர்களுக்கு கவி வரியில் அருமையானதொரு வழி காட்டல்.

//எல்லாப் பயணங்களும்
இலக்கில் முடியும்
ஹஜ் மட்டுமே
இலக்கில் துவங்கும்

எல்லாம் நிறைவேற்றி
இல்லம் திரும்பியபின்
இன்ஷா அல்லாஹ்
ஹாஜியாய் வாழ்ந்திடனும்

ரப்பனா ஆத்தினா
ஃபித்துன்யா ஹஸ்னா
வ ஃபில் ஆக்ஹிரத்து ஹஸ்னா
வகினா
அதாபன்னார்!//

ZAKIR HUSSAIN said...

கவிதை வழி அமல்.

Shameed said...

கவிதையை படித்ததும் மறுமுறையும் ஹஜ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது

KALAM SHAICK ABDUL KADER said...

//எல்லாப் பயணங்களும்இலக்கில் முடியும்ஹஜ் மட்டுமேஇலக்கில் துவங்கும்// கவிவேந்தர் சபீர் கலக்கிய வரிகள்; கண்கள் கலங்கிய வரிகள்;இலக்கியமாய்ச் சொன்னால் உண்மைகள் இதயத்துள் இறங்கும்; அதனாற்றான், கவிதைகள் எல்லாம் பொய்யுரைப்பதில்லை; காண்போர் கண்ணோட்டம்- எண்ணவோட்டம் கவிதைகளைப் பொய்யன்கின்ற நிலைமைக்குத் தள்ளி விடுகின்றது என்பதே உண்மை. அல்-குர் ஆனின் வசன்ங்கள் யாவும் ஈற்றெதுகையில் அமைந்து; இலக்கிய நயமுடன் இன்றும் அரபுக் கவிஞர்கட்கு அறைகூவல் விட்டுக் கொண்டிருக்கின்றது!!
கண்மணி முஹம்மத்(ஸல்)அவர்களின் கனிமொழிகள் யாவும் கவிதை வடிவமாகவே அமைந்ததாற்றானே கேட்போரை ஈர்க்கின்றன; அவர்களின் பொன்னுரைகள் யாவும் பொய்யுரைகள் அல்லவே!

Shameed said...

கலாம் காதிர் சொன்னது…
//இலக்கியமாய்ச் சொன்னால் உண்மைகள் இதயத்துள் இறங்கும்//

சகோதரர் கலாம் காதிர் உங்களின் கவி அறிவை இத்தனை நாட்களாக நான் அறியாமல் இருந்து விட்டேன் இப்போது அறிந்ததும் மலைப்பாக உள்ளது!

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…

கவிதை வழி அமல்.
-----------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆமாம் கவிதை வழி அமல்.இதை வாழ்வில் அமல் செய்தால் நன்மை நமது!தீமை அமிழ்ந்து அழிந்து போகும்

Yasir said...

ஹஜ் செய்யும் ஆர்வத்தை தூண்டும் கவிதை....நிய்யத் வைத்து விட்டோம்..இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் கபூலாக்கி தர வேண்டும்

KALAM SHAICK ABDUL KADER said...

//ஹஜ் செய்யும் ஆர்வத்தை தூண்டும் கவிதை....நிய்யத் வைத்து விட்டோம்..இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் கபூலாக்கி தர வேண்டும் // இதைத் தான் இலக்கிய தாகம் கொண்ட நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஒரு கவிதை திறந்து பார்த்ததும் “கல்பை” திற்ந்து வைத்தது என்றால் அது அல்லாஹ் கவிவேந்தர் சபீர் அவர்கட்கு வழங்கிய அருட்கொடை.

sabeer.abushahruk said...

கவியன்பன்,

தங்களின் அலைப்பேசி பேசினால், திண்ணையில் வாசித்தேன். நல்லாருக்கு. வாழ்த்துகள்.

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தர்,

இத்துடன் இரண்டாம் முறையாக திண்ணையில் உட்கார்ந்து விட்டேன்; ஜஸாக்கல்லாஹ் கைரன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு