Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை உள்ளாட்சித் தேர்தலும்... ! அதிரைநிருபரும் ! 31

அதிரைநிருபர் பதிப்பகம் | October 10, 2011 | , ,

“ஹலோ..”

“அஸ்ஸலாமு அலைக்கும்,”

“என்ன செய்தி சோஹமா இருக்கியளே?“

“ஊர்ல தேர்தல் நேரம், இப்போ என்ன நிலவரம்?“

“யாரு ஜெய்ப்பாங்கா?”

“முப்பது ஆண்டுகளாக பேரூராட்சி மன்றத்தை ஆண்ட காங்கிரஸ் தான் வரும் போல தெரியுது…”

“இல்லைப்பா திமுக தான் வரும் போல தெரியுது..”

“அதெல்லாம் இல்லைங்க ஆளும் கட்சி தான் வரும்…”

“ஏன் சுயட்சையாக நிற்க்கின்ற வக்கீல் அவர்கள் வந்தாலும் வரலாம் போல தெரியுது..”

“அட போப்பா பொலப்பில்லாதாளு… போறப்போக்க பார்த்தா நம்மாளுக யாரும் வரமாட்டாங்க போல தெரியுது…”

இது போன்ற சம்பாஷனைகளும், என்னற்ற கேள்விகளும், குழப்பமான வெறுப்பேற்றல்களும், நேர்முகமாகவோ அல்லது அலைப்பேசியினூடோ காதில் விழத்தான் செய்கிறது.

நிற்க… !

பெருமூச்சுவிடுங்க…! ஸ்ஸ்ஸ் யா அல்லாஹ்…!

அட! நீங்களும் ஆரம்பிச்சுட்டியளா என்று கேட்கத்தோன்றுகிறதா? இது உள்ளாட்சி மன்றங்களுகுக்கான தேர்தல் பற்றிய பதிவு அல்ல என்றாலும் அதிரைநிருபரின் இச்சூழலின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதற்காக இந்த பதிவு.

அதிரைநிருபர் தளம் அதிரையில் நடைப்பெற இருக்கும் பேரூராட்சி மன்றத் தேர்தல் பற்றிய நிகழ்வுகளை அமைதியாக அவதானித்து வருகிறது ஆனால் அதற்கான ஊடகமாக செய்திகளில் கவனம் செலுத்தவில்லை, காரணம் அதிரையின் அனைத்து வலைத்தளங்களும் ஊர் செய்திகளை உடனுக்கு உடன் அவர்களுக்கு உரிய பாணியில் பகிர்ந்தளித்துக் கொண்டிருப்பதால் நாம் மட்டும் என்ன புதுசாவா கொடுக்க முடியும் என்ற அடிப்படையிலேயே. ஆனால், தனித் தன்மையுடன் கூடிய அனுகுமுறைக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் நம் வாசக நேசங்களுடன் பகிர்ந்துக்கொள்வோம். இந்த முறை நிறையவே விமர்சனத்திற்குள்ளாகியிருக்கும் இந்த உள்ளாட்சி தேர்தல் நிகழ்வுகளை அப்படி தள்ளி நின்றுதான் கவனிப்போமே.

அன்று முதல் இன்று வரை தொடர்ந்து தனித்தன்மையுடன் தனக்கென்று ஒரு தனி நெறியை உருவாக்கி கண்ணியத்துடன், மரியாதையுடன், நட்புடன், சகோதரத்துவத்துடன், சில நேரங்களில் நகைச்சுவை உணர்வுடன், பல நேரங்களில் பாசமிகு அனாமத்து பின்னூட்டக்காரர்களிடம் கண்டிப்புடன் வரைமுறைகளுக்கு உட்பட்டு இணையக்கடலில் மிதந்து நல்ல இதயங்களை இணைத்து மேலும் அவ்விதயங்களோடு தொடர்ந்து உறவாடி வருகிறது நம் அதிரைநிருபர் வளைத்தளம் என்பதை அதிரைநிருபர் பக்கம் தினசரி தட்டிக் கொடுத்துச் செல்லும் வாசக நேசங்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.

எழுத்தாற்றல் மிக்க திறமைசாலிகளை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தி, மேலும் வளரச்செய்து அதிரைநிருபரைவிட இன்னும் தரம்வாய்ந்த தளங்களில் அவர்களின் பங்களிப்பை செலுத்துவதற்கு வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதற்கு நம் அதிரைநிருபரின் ஆஸ்தான கவி அவர்கள் ஓர் சிறப்பான உதாரணம். 

மற்ற இணையத்தளங்கள், செய்தி ஊடகங்களில் பங்கெடுத்தவர்கள் நம் அதிரைநிருபர் வாசக வட்டத்தின் ரசனையினை உணர்ந்து நமக்காக தன் பதிவுகளை பகிர்ந்தளிக்கிறார்கள் என்பதற்கு ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் சகோதரர் புதுசுரபி ரபீக் அவர்கள் ஓர் எடுத்துக்காட்டு. அட! என்ன எங்களை எல்லாம் விட்டுட்டியலே என்று யாரோ முணுமுணுப்பது போல் தெரிகிறது. யாரையும் விட்டு விடவில்லை மறக்கவுமில்லை, நினைவுகளை விட்டு அகலாத அச்சாக என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள் அத்துணை பங்களிப்பாளர்களும். பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும் என்பதால் இந்த பதிவை வாசிக்கும் நீங்கள் அனைவரும் அதிரைநிருபர்கள் தான் என்பதற்கு இவர்களும் அதிரைநிருபர்களே என்ற பதிவே சாட்சி.

அதிரைநிருபர் வலைத்தளத்தின் பொறுப்பாளிகள் பற்றி தவறான கருத்துருவாக்கம் இன்னும் சில சகோதரர்களிடம் விலகாமல் உள்ளது என்பதை அந்தச் சகோதரர்களிடம் நேரில் சமீபத்தில் உரையாடியதில் உணர முடிகிறது, இது சற்றே வேதனை தரக்கூடியதாக இருப்பினும், மீண்டும் இங்கு பதிவு செய்கிறோம் அதிரைநிருபர் வலைத்தளமும் அதன் பங்களிப்பாளர்களும் அதிரையில் உள்ள எந்த ஒரு வலைதளத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. அனைத்து வலைத்தளங்களும் நம் சகோதர வலைதளங்கள் எனபதற்கு நம் அதிரைமணமே சாட்சி. எந்த ஒரு வலைதளத்தை பற்றியும் அதிரைநிருபரில் எங்கேனும் ஒரு பதிவு அல்லது அதிரைநிருபரின் பின்னூட்டம் கூட இதுவரை வெளிவரவில்லை. அதிரைநிருபர் வலைதளத்தின் அணுகுமுறையில் குறையோ அல்லது ஆலோசனைகளோ இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் நிச்சயம் கவனத்தில் கொள்கிறோம்.

அதிரைநிருபர் ஊர் செய்திகளை தருவதில்லையே, கட்டுரை, தொடர்கள், கவிதை, வாழ்வியல் என்றுதானே செல்கிறது இப்படியாகவும் சிலிர்த்துக் கொள்கிறார்கள் சில சகோதரர்கள். 

ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றம் செய்து, ஒருவரை ஒருவர் பாராட்டி (முகஸ்துதி இல்லை), நட்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், அதிரைநிருபர் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை எங்கள் வாசக நேசங்கள் அனைவரும் அறிவீர்கள். அதிரைநிருபர் பின்னூட்டங்களை படிப்பதற்காகவே தனி வாசகர் வட்டம் உள்ளது என்பதை அதிரைநிருபர் தளம் நன்கு அறியும். இதற்காகவே தான் குழப்பங்களைத் தூண்டும் அனாமத்து பின்னூட்டங்களை அதிரைநிருபர் என்றுமே அனுமதிப்பதில்லை. மேலும் அனைத்து சகோதர சகோதரிகளின் கண்ணியத்தை காப்பதில் நம் அதிரைநிருபர் மிகவும் அக்கரையுடன் செயலாற்றி வருகிறது என்பதற்கு ஆரோக்கியமான பின்னூட்டங்களே சாட்சி. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

உலகில் எந்த ஒரு ஊடமும் அனைத்தையும் ஒரே பங்களிப்பைத் தருவதில்லை, அவைகளில் செய்திப் பிரிவு, வர்த்தக நிகழ்வுகள், பல்சுவை நிகழ்வு என்று பலரின் ரசனைக்கு ஏற்ப செயல்படுகிறது. இது போலத்தான் அதிரைநிருபர் விழிப்புணர்வு கட்டுரைகள், தொடர்கள், கவிதை (இதுலையும் message இருக்கு), வாழ்வியல் கட்டுரைகள், கல்வித் தகவல்கள், மார்க்க அறிவுரைகள் என்று முன்னுரிமை தந்து ஒரு பரந்து விரிந்த வாசகர் வட்டத்தை தன் வசப்படுத்தியுள்ளது. அல்ஹம்துல்லில்லாஹ் !

அதிரைச் செய்திகளை உடனுக்குடன் நம் அதிரைநிருபரால் தரமுடியவில்லை என்றாலும் ஊர் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்தளித்து இன்று எல்லோருடைய வரவேற்பை பெற்ற அதிரை வலைதளங்களின் ஒன்றான அதிரை பி.பி.சி. வலைத்தளத்தை கடந்த ஜூன் 27ம் தேதி நம் அதிரைநிருபரில் அறிமுகம் செய்து வைத்தோம், இந்த பதிவே இன்று நம் அதிரைநிருபரின் பிரபலமான முதல் பதிவு என்பதற்கு கீழ்கண்ட புள்ளி விபரங்ளகடங்கிய படமே சாட்சி.



அதிரை பி.பி.சி. வலைத்தளம் அறிமுகப் பதிவு பற்றி நம்மில் சிலருக்கு ஏதோ விரும்பத்தகாத செயலைச் செய்திட்டது போல் உணரப்பட்டது, என்பதை அதன் பின்னர் வந்த விமர்சனங்களில் கண்ட உண்மை. காரணம் ஏற்கனவே 40க்கு மேற்பட்ட வலைத்தளங்கள் உள்ளது இது போதாது என்று இன்னொன்றா? என்ற கேள்வி கணைகள் தொடுக்கப்பட்டு கடும் எதிர்ப்பும் கிளம்பி பின்னூட்ட மழை பொழிந்தது. 

அதிரையில் உள்ளவர்களால் தான் அதிரை செய்திகளை உடனுக்கு உடன் தரமுடியும் என்பதில் நாம் உறுதியாக இருந்ததால், துடிப்புடன் செயலாற்றிட வந்த சகோதரர்களின் வலைத்தளத்தை அறிமுகம் செய்தோம், இன்று இத்தளத்தில் வரும் ஊர்ச் செய்திகளும் காணொளிகளும் ஏனைய பிற அதிரை வலைத்தளங்களில் நன்றியுடன் வெளியிடப்படுவதை காணும் போது மகிழ்வைத் தருகிறது அல்ஹம்துலில்லாஹ். உண்மையிலேயே இது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு என்று சொன்னால் மிகையில்லை. மேலும் கடும் விமர்சனத்திற்குள்ளான அதிரை பி.பி.சி.யின் அறிமுக பதிவை அதிரைநிருபர் வலைத்தளம் அன்று (27.06.2011) பதிந்தது நன்மையை நாடியே என்று கடந்த சில வாரங்களாக மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதிரைநிருபரின் நிலைபாட்டிற்கு கிடைத்த அதுவும் சற்றே காலம் கடந்த வெற்றி என்று சொன்னாலும் பொருத்தமே.

திறமையானவர்களை தட்டிக் கொடுக்கலாமே, தவறு செய்தால் அன்பாக தட்டிக் கேட்கலாமே, மேலும் அவர்கள் புரிந்துகொள்ளும் விதமாக அன்புடன் திருத்தலாமே, இதுவெல்லாம் சாத்தியமில்லை என்று வரும் போது மட்டும் கோபமே காட்டிடாமல் ஒதுக்கிவைத்து ஓரங்கட்டலாமே என்பது தான் அன்றும், இன்றும், என்றும் அதிரைநிருபர் தளத்தின் நிலைப்பாடு. இன்ஷா அல்லாஹ்.. இது என்றும் தொடரும்.. இணையத்தால் பல நல்ல இதயங்களை இணைக்க முடியும் என்பதற்கு அதிரைநிருபர் வலைத்தளம் ஒரு சிறந்த காட்டு.

அதிரைநிருபர் அதிக சொட்டுகள் (செல்ல குட்டுகள், hits) வாங்க வேண்டும் என்றில்லாமல், ஒரு நாளைக்கு ஒரு பதிவு என்று தன்னிலையில் தெளிவாக இருந்தும் அவசியங்கள் ஏற்படும்போது அடுத்த பதிவினையும் பதிந்திட்டும், அற்புதமான சிறந்த பங்களிப்பாளர்களை நீண்ட நாட்கள் சில சமயங்களில் வரிசையில் காக்க வைத்து விட்டுதான் பதிவுகள் வெளிவருகிறது. காரணம் அதிரைநிருபரில் வரும் பதிவுகள் தரமானதாக நல்ல ரசனையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அனைத்து மக்களும் படித்து கருத்திட வேண்டும் என்பதற்காவும் அதிரைநிருபர்-குழு சற்றே நேரம் எடுத்துக் கொள்கிறார்களே தவிர வேறு எந்த காரணங்களும் இல்லை. இதை நம் அனைத்து பங்களிப்பாளர்களும் நன்கு அறிவார்கள்.

அதிரைநிருபர் வலைத்தளம் மீது தவறான எண்ணம் கொண்டிருக்கும் சில அன்பு சகோதரர்களே, கடந்தகால மற்றும் புதிய பதிவுகளையும், பின்னூட்டங்களையும் படியுங்கள் பிரிவினை தூண்டும் எங்கேனும் ஒரு கருத்து இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் நெறிப்படுத்திக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

அதிரையின் முன்னனி வலைதளங்களில் அதிரைநிருபரும் ஒன்று என்பதை வாசக நேசங்கள் அறிவீர்கள். அதிரைநிருபர் அதிரை வலைதளங்களில் முன்னனியில் இருக்க வேண்டும் என்பதைவிட, பக்குவபட்ட அனுகுமுறையுடன் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறோம். இந்த நிலைபாட்டினை சிலர் விரும்பலாம் அல்லது விரும்பாமலும் போகலாம்.

எல்லாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே..

தொடர்ந்து இணைந்திருங்கள்..

-அதிரைநிருபர் குழு.

31 Responses So Far:

நிஸார் அஹமது said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அதிரை நிருபர் தளத்தை நான் வெகு நாட்களாகவே கவனித்து வருகிறேன்.
அதில் செய்திகள் கவனிக்கக்கூடியவைகளாக இருந்தாலும், செய்திகளிலும் பின்னூட்டங்களிலும் சுய தம்பட்டமே அதிகமாக தென்படுகிறது என்பது என் கருத்து.
பின்னூட்டங்களில் சில குறிப்பிட்டோருடைய பின்னூட்டங்கள் மட்டுமே வருகின்றன..மேலும், பின்னூட்டங்களில் ஒருவர் பின்னூட்டமிட்டால் அவரை பாராட்டி இன்னொருவரும் அவரை புகழ்ந்து இன்னொருவரும் இப்படி தொடர்ந்து ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டே இருப்பதால் செய்தியின் நோக்கம் அடிபட்டு விடுகிறது...

அப்துல்மாலிக் said...

பெருவாறியான பேர் மேலோட்டமாகவும், நிறைய பேர் தினமும் படிக்கிறார்கள், மிகச்சிலரே பின்னூட்டமிடுகிறார்கள். பின்னூட்டமிடுவதில் சில/பல சிக்கல் அதாவது இதற்காக மெனக்கெட்டு கருத்து சொல்லனும், ஆழ்ந்து படிக்கனும் என்பதை யாரும் மறுக்கமுடியாது, நிச்சயம் நல்ல கட்டுரைகள் ரெகெமெண்ட் செய்யப்பட்டு படிக்கப்படுகிறது. எனவே ரொம்ப கவலைப்படாமல் தாங்கள் பணிகளை செவ்வனே தொடர்ந்து செய்யுங்கள், அதே சமயம் ஊரின் செய்திகளையும் பதியவும். ஊர் செய்திகள் படிக்கும் ஆர்வத்தில்தான் அதிகமதிக வாசகர்கள் வருகிறார்கள்...

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அன்புச் சகோதரர் நிஜார் அஹ்மத் அவர்களுக்கு:

தாங்கள் அதிரைநிருபரை வெகு நாட்களாக கவனித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

சுய தம்பட்டம் என்பது சுயத்தை பெருமைப் படுத்தி சப்திப்பது. அப்படி எந்த ஒரு பதிவரோ வாசகரோ அல்லது அதிரைநிருபரோ தம்மைத் தாமே புகழ்ந்தும் பாராட்டியும் தம்பட்டம் அடித்திருந்தால் மாதிரிக்கு ஒன்றே ஒன்றையாவது பதிந்தால் மிக உதவியாக இருக்கும். எங்கள் தவறும் உணரப்பட்டு நெறிபடுத்தப்படும். அதிகம் வேண்டாம் நீங்கள் சொல்லும் தன்மையில் ஒன்றே ஒன்று போதும். சுட்டிக்காட்டுங்களேன் பார்ப்போம்.

மற்றபடி, பின்னூட்டங்களில் ஒருவரை மற்றவர் பாராட்டுவதும் வாழ்த்துவதும் எவ்விதத்தில் தவறென்று புரியவில்லை. தட்டிக்கொடுக்கவும் வாழ்த்தவும் இத்தளம் என்றுமே தயங்காது. ஆயினும், இயன்ற வரை ஆக்கத்திற்கு தொடர்பாகவே பின்னூட்டங்கள் இடுமாறு ஏற்கனவே அறிவித்திருக்கிறோம்.

இது அறிவுஜீவிகளுக்கான தளமே என்று நாங்கள் என்றுமே கருதியதில்லை. கற்றுக் கொள்பவர்களுக்கான பள்ளியாகவே கருதுவதால் எழுதுபவர்களையும் பின்னூட்டமிட்டுக் கலந்து கொள்பவர்களையும் உற்சாகப்படுத்தி, சொற்ப காலத்திலேயே அவர்களை எண்ணங்களிலும் எழுத்திலும் மிளிரச் செய்வதில் சந்தோஷமடைகிறோம். மெத்தப் படித்தவர்களேயானால் கூட சபையில் ஒருவரை மற்றவர் பாராட்டுவதைப் பார்க்கலாம். அது ஒரு அரோக்கியமான கலாச்சாரமே. நிந்திக்கத்தான் கூடாது என்பது எங்களில் நிலைப்பாடு.

சாம்பிளுக்கு: உங்களின் பின்னூட்டம் மிக நேர்த்தியாக இருக்கிறது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் நீங்கள் சொல்ல வந்ததை யார் மனமும் நோகாமல் பதிந்திருக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டினால் குறைகள் இருப்பின் நெறிப்படுத்தி விடலாம். கை கோருங்கள்… தூக்கி நிறுத்துவோம் நம் மக்களை ஊடகத்துறையில்.

மேலே சொன்னது சுய தம்பட்டம் எனில், சகோதரரே நாங்கள் எங்களை மாற்றிக் கொள்வதாயில்லை.

அப்புறம், தளம் தொடங்கிய நாள் முதல் பின்னூட்டங்களில் மட்டுறுத்தாமல் அனுமதித்து நடந்து வரும் ஒரே தளம் எமதுதான் (இது செய்தி. சில சமயங்களில் நல்ல செய்தி சுய தம்பட்டம்போல் தொணிக்கும். ஆனால் , உண்மையை சொல்லித்தானே ஆகனும்?)

தொடர்ந்து (சுட்டிக்கொண்டேயாவது) இணைந்திருங்கள் :)

-அதிரை நிருபர் குழு

sabeer.abushahruk said...

“சிஷ்யா, ஏன் முகம் வாடி மருகுகிறாய்?”

“குருவே, வந்து சொற்ப காலமேயான இளம் சிஷ்யனான அதிநிருபன் என் நண்பர்களையெல்லாம் தன் வசப்படுத்திக்கொண்டான். நான் ஒற்றையாகிப்போனேன். இதை நீங்கள்தான் விசாரிக்கனும்.”

“கூப்பிடுங்கள் அந்த அதிநிருபனை”

“அழைத்தீர்களா குருவே?”

“ஆமாம். என்ன நடக்கிறது இங்கே? அத்துனை சிஷ்யர்களையும் உன் வசப்படுத்த என்ன மந்திரம் செய்தாய் சொல்?”

“குருவே. நான் எனும் அகம்பாவம் துறந்து 'நாம்' என்றாக அழைத்தேன். அன்பெனும் ஈட்டியும் அமைதி எனும் கேடயமும் கொண்டு எதிர் கொண்டதால் எதிரிகளும் என்னுடன் கை கோர்த்தனர். ஒன்றுபட்டோம் வென்றுவிட்டோம் குருவே”

“சிஷ்யகோடிகளில் சிலுமிஷ கேடிகள் இருப்பார்களே, தண்டிப்பதில்லையா?”

“தன்டிப்பதில்லை குருவே, கண்டிப்பதுண்டு. கழுத்தை அறுப்பதில்லை, கருத்தைத் திருத்துவதுண்டு குருவே”

“திறமையானவர்களை மட்டும்தானே சேர்க்கச்சொன்னேன். இதென்ன கூட்டம்?”

“சற்று மாற்றி யோசித்தேன் குருவே. முதலில் சேர்த்துக்கொண்டேன், அவரவர் திறமையை உணர்ந்தேன். வெளிக்கொணர துணை நின்றேன். இப்போது ‘இவர்களும் போட்டிக்குதிரைகளே குருவே”

“நீயே சிறப்பான சிஷயன். என் மர்ம அங்கிகளையும் ஆயுதங்களையும் துறக்கிறேன். உன்னோடு இணைகிறேன். எங்கே உன் ஈட்டியும் கேடையமும்?”

“????”

“அதான் சிஷ்யா, அன்பும் அமைதியும்” --என்று சொல்லி அதிநிருபனோடு இணைந்தார் குரு நிஜார் அஹ்மத். :):)

அபூ சுஹைமா said...

நீண்ட தன்னிலை விளக்கம். வாழ்த்துகள்!

//அதிரைநிருபர் பின்னூட்டங்களை படிப்பதற்காகவே தனி வாசகர் வட்டம் உள்ளது என்பதை அதிரைநிருபர் தளம் நன்கு அறியும்.//

அண்மைக்காலமாக சில வேளைகளில் நானும் அப்படித்தான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

"குருவே எனது கையையும் கட்டிப்போட்டுட்டாங்க"

"என்ன சொல்கிறாய் சிஷ்யா?"

"உங்களைப் பாராட்டலாம் என்று வந்தேன் இங்கே என்னடான்னா உங்களிடமே அன்பு எனும் ஆயுதத்தை கொடுத்து சரண்டர் ஆகிவிட்டாங்களாமே!"

"சரி சரி விடு சிஷ்யா"

"குருவே உங்களை ஒரு வார்த்தையாவது பாராட்டனும்போல இருக்கே"

"அட விடு சிஷ்யா"

"குருவே! நீங்கள் குருவேதான், பாராட்டே வேண்டாம் என்று சொல்ற குருவாகிய உங்களைப் பாராட்டத்தான் முயல்கிறேன்"

"அட பாராட்டித்தான் எழுதிவிட்டுப் போயேன் சிஷ்யா !!"

Shameed said...

பின்னுட்டம் மட்டும் இட்டுக்கொண்டிருந்த என்னை அதிரை நிருபர் வலைத்தளம் ஆக்கமும் ஊக்கமும் (பாராட்டி பாராட்டியோ) கொடுத்து என்னை கட்டுரை எழுத சொன்னார்கள் எனக்கு எழுத வருமா என்ற நீண்ட யோசனையில் இருந்த போது சிறு பிள்ளைக்கு கையை பிடித்து ஆன ஆவனா எழுத சொல்லிக்கொடுப்பது போல் சொல்லிகொடுத்து எனக்கே தெரியாமல் என்னிடம் ஒளிந்து கிடந்த திறமைகளை வெளிக்கொண்டுவந்தார்கள் என்பது இங்கு வந்துபோகும் அனைவரும் அறிந்தததே

ஒருவரை குறை சொல்லி திறமைகளை முடக்குவதை விட பாராட்டி தட்டிக்கொடுத்து அவரின் திறமைகளை வெளிக்கொண்டுவருவது ஒன்றும் முகஸ்துதி ஆகாது என்பது என் அனுபவ கருத்து,

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பின்னோட்டத்தில் முன்னோடியாக வந்தமைக்கு அவரை தட்டிக்கொடுத்து தன் கருத்தாக(மட்டுமே) சொன்னமைக்கு பாராட்டி வரவேற்போம்.கூடல் எண்ணத்தில் சிறு ஊடல் அவ்வளவுதான்.

// கட்டுரை, தொடர்கள், கவிதை, வாழ்வியல் என்றுதானே செல்கிறது //

அதிரை என்று துவங்குவதால் அதிரைச் செய்தியும் வேணும்,
நிருபர் என்று இருப்பதால் அரசியலும் அளவாக வேணும்.

//அதிரையின் அனைத்து வலைத்தளங்களும் ஊர் செய்திகளை உடனுக்கு உடன் அவர்களுக்கு உரிய பாணியில் பகிர்ந்தளித்துக் கொண்டிருப்பதால் நாம் மட்டும் என்ன புதுசாவா கொடுக்க முடியும் //

அப்படி எண்ணும்போது சில முக்கிய நிகழ்வுகளை (ஆதரிக்காதது போல்)புறக்கணிப்பது போல் ஆகிவிடுமே!

அதுக்காக.... இது முக்கியம் பாராட்டு: குரு- சிஷ்யா பேச்சு சூப்பர்.

Adirai khalid said...

கூறியது...

நிசார் அஹமது சொன்னது,
'''''"அஸ்ஸலாமு அழைக்கும்
அதிரை நிருபர் தளத்தை நான் வெகு நாட்களாகவே கவனித்து வருகிறேன்.
அதில் செய்திகள் கவனிக்கக்கூடியவைகளாக இருந்தாலும், செய்திகளிலும் பின்னூட்டங்களிலும் சுய தம்பட்டமே அதிகமாக தென்படுகிறது என்பது என் கருத்து.
பின்னூட்டங்களில் சில குறிப்பிட்டோருடைய பின்னூட்டங்கள் மட்டுமே வருகின்றன..மேலும், பின்னூட்டங்களில் ஒருவர் பின்னூட்டமிட்டால் அவரை பாராட்டி இன்னொருவரும் அவரை புகழ்ந்து இன்னொருவரும் இப்படி தொடர்ந்து ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டே இருப்பதால் செய்தியின் நோக்கம் அடிபட்டு விடுகிறது... """""

உண்மை!! இதே ஆதங்கத்தினால் நானும் "உன்னைப்போல் ஒருவன்"!

இக் கருத்திட்ட நிசார் அஹமது(?)வும் நெய்னா தம்பியும் நானும் ஒரே புலுதியில் விளையாடிய தோழர்கள் போல் தெரிகிறது? கிடக்கட்டும் அந்த உணர்வுகள் அதே மண்னோடு ,
சில காலங்களுக்கு முன்பு நான் பின்நூட்டங்களின் மூலம் நானும் கருத்துகளை பரிமாரிக் கொண்டிருந்தேன். தலைப்பை ஒட்டிய அல்லது கருத்தை ஒட்டிய பின்னுட்டங்கள் குறைந்து வட்டிலப்பம், பிரியாணியாக உருமாறியது, உடன் சுட்டிக் காட்டினேன், பின்பு தனிமனித துதிகளும் பின்பாட்டுகளும் அங்கங்கே முளைத்தவுடன் நம் வேலைப்பளுக்கிடையில் இந்த பின்னுட்ட வேலைகள் செய்யவேண்டுமா? என்று எண்ணி சாதாரண வாசகனாக என்னை நிலை நிரித்திக் கொண்டேன்.

இன்னும் சொல்லப் போனால் குறிப்பிட்ட மனநிலையில் அல்லது குறுகிய வட்டத்தில் தான் வாசகவட்டத்தை அதிரை நிருபர் கொண்டுள்ளது போல் தெரிகின்றது. வளர வேண்டும், விசாலத் தன்மையோடு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இக் கருத்திட்ட நிசார் அஹமது(?)வும் நெய்னா தம்பியும் நானும் ஒரே புலுதியில் விளையாடிய தோழர்கள் போல் தெரிகிறது?///

ஆம் அப்படியே ! அதே நிஜார் அஹ்மது(?) தான்(!) அதே மண்வாசனைக்கு சொந்தக்காரர்கள்தான்.

//இன்னும் சொல்லப் போனால் குறிப்பிட்ட மனநிலையில் அல்லது குறுகிய வட்டத்தில் தான் வாசகவட்டத்தை அதிரை நிருபர் கொண்டுள்ளது போல் தெரிகின்றது.//

அப்படி ஒரு சூழல் இருப்பதுபோல் மாயை இருக்குமேயானால் அதனை களைப்பட வேண்டும், இருப்பினும் பின்னாலிருந்து அவதானிக்கும்போது ஒன்றரை வருட கைக் குழந்தையாக இருக்கும் அ.நி. சென்றடையும் வட்டம் மிக விரிவாகவே புலப்படுகிறது காரணம அங்கே வந்து செல்லும் இணைய வாசகர்களின் எண்ணிக்கையும், நமது பெண்மக்களின் வருகையும் அவர்கள் வாசிக்க காட்டிடும் அவர்வமும் தனி மின்னஞ்சல் வழி வரும் கருத்தும் விமர்சனங்களாலுக் உணர முடிவது என்னவோ உண்மையே.

ஏற்கனவே அதிரைநிருபர் சார்பாக நிஜார் அஹ்மதுக்கு பதிலுரையாக கருத்தில் பதிந்திருந்ததையே தாமும் பதிலாக புரிந்திருக்கலாம்.

இப்படியாக வெளிப்படையாக அவ்வப்போது வந்து சொல்லத்தான் வேண்டும் அதுவும் நளினமாக அதனை உனக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை, அதனை நன்றாகவே செய்திடுவாய்.

மவுனம் காத்திடாதே ! சரி அவர்கள் அதைத்தானே பேசுகிறார்கள் என்றும் மட்டும் பின்வாங்க வேண்டாம் !

எந்த ஆக்கத்திற்கும் அலல்து உணர்வுகளுக்கும், ஒரு சொட்டு / குட்டு / ஹிட்டு என்று தரவரிசையிருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கும். குளத்தில் விட்டெரிந்த கற்களாக மட்டும் இருந்தால் அது உள்ளே சென்றது மேலெழுந்த அதிர்வலைகள் சிறிது நேரத்திலேயே அடங்கிவிடும்.

இவர்களும் அதிரைநிருபர்களே என்ற பதிவில் சொன்னது வெறும் புகழ்சிக்காக அல்ல நிஜத்தினை பளிச்சென்று சொல்லிக் காட்டத்தான்:-

//சகோ. ஹாலித்:
பதிவர்களை
முன்னேற்றப் பாதையில்
உந்தும் சக்தியில்
என்னைப்போல் ஒருவரான
இவரைப்போல் ஒருவராக
எல்லோரும் மாறனும்!
கச்சித மொழியாடலின்
குத்தகைக்காரர்!///

எதனை எதிர்பார்க்கிறோம் என்று தனி மின்னாடலிலோ அல்லது திறந்த வெளியாக இருக்கும் அதிரைநிருபர் கருத்துப் பந்தலிலோ தாராளமாக பதிந்திடு அவைகள் எங்கள் யாவரின் மனதிலும் பந்திந்திடும் கண்டிப்பாக திரும்ப பாய்ந்திடாது, ஆனால் திரும்பிப் பார்க்க வைக்கும் பதிலுரைகள் இருந்திடும் நிச்சயம், இதனை நீ நன்கு அறிவாய் !

எது எப்படியாயிருப்பினும் மிட்டெடுத்த நட்புகள் மீண்டும் கருத்துக் கோர்வைக்குள் நுழைந்திருப்பது ஆரோக்கியமட்டுமல்ல அவசியமும் கூட !

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்திடு... இல்லாவிடினும் விடுவதாக இல்லை உன்னை(யும்)போல் ஒருவனாக ! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தலைப்பை ஒட்டிய அல்லது கருத்தை ஒட்டிய பின்னுட்டங்கள் குறைந்து வட்டிலப்பம், பிரியாணியாக உருமாறியது, உடன் சுட்டிக் காட்டினேன், பின்பு தனிமனித துதிகளும் பின்பாட்டுகளும் அங்கங்கே முளைத்தவுடன் நம் வேலைப்பளுக்கிடையில் இந்த பின்னுட்ட வேலைகள் செய்யவேண்டுமா? //

இது நிகழ்ந்தது ஒரே முறையோ அல்லது அந்தப் பதிவை ஒட்டியோ நடந்த நிகழ்வுகள் அதன்பின்னர் தொடரவில்லை ஆக்கத்தின் கருப்பொருளை மையப்படுத்தியே கருத்தாடல்கள் களைகட்டும் இங்கே.

ஒற்றை வரியில் அல்லது ஓன்று இரண்டு வார்த்தைகளில் இடப்படும் கருத்துளிலும் இதே தான் பிரதிபலிக்கும் பிற வலைத்தளங்களும் நிறையவே உண்டு.

பதியப்பட்ட பதிவின் தாக்கம் அல்லது அதன் கருப் பொருள் / எழுத்து நடை பிடிக்காவிடின் அதற்கு வேறு எவரேனும் பாராட்டியோ / எழுதியவரை வாழ்த்தியோ கருத்துக்கள் வந்திருந்தால் அந்தப் பதிவை / எழுதியவரை / அந்தப் பதிவை விரும்பாதவருக்கு வெறுப்பாகத்தான் இருக்கும் அதன் பிரதிபலிப்பு அங்கே முகஸ்துதி / தனிமனித துதி என்று சொல்லாடல்கள் எழுவதும் வாடிக்கையே !

அதிரைநிருபரைப் பொருத்தமட்டில் ! கருத்துக்களால் களம் வென்றவர்கள் என்ற புன்முருவலும் அநேகரிடம் நிறைந்திருப்பது மெய்யே !

நிஸார் அஹமது said...

நன்றி..என் கருத்தை சொன்னேன்..நான் எது கூடாது என்று பின்நூட்டமிட்டிருந்தேனோ..அதே நிகழ்வுகள்..என்னைப்பற்றியே பின்நூட்டமிட்டுக்கொண்டிருப்பது சிரிப்பை வரவழைக்கிறது...இனி பதிவுகளைப்பற்றிய கருத்துக்கள் தொடர்ந்தால் ஆரோக்கியமாக இருக்கும்..அதிரை நிருபர் தம் பணியை மேலும் சிறப்புற தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//Nizar Ahamed சொன்னது…

நன்றி..என் கருத்தை சொன்னேன்..நான் எது கூடாது என்று பின்நூட்டமிட்டிருந்தேனோ..அதே நிகழ்வுகள்..என்னைப்பற்றியே பின்நூட்டமிட்டுக்கொண்டிருப்பது சிரிப்பை வரவழைக்கிறது..//


மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------------

அப்பாடா!!!

சிரித்துவிட்டீர்களா?

இதற்குத்தானே இத்தனை கஷ்டப்பட வேன்டியிருந்தது.

கோபித்துக்கொண்டேன், சோகாமாயிட்டேன், வருத்தப்பட்டேன், வெஞ்சினம் கொண்டேன், எரிச்சலுற்றேன், கடுப்பேத்தராங்க யுவர் ஆனர் என்றெல்லாம் சொல்லாமல் சிரித்தேன் என்றது மன திருப்தியைக் கொடுக்கிறது.

சிரிக்க வைத்துக்கோண்டிருக்கும் ஆனந்த விகடந்தான் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் பத்திரிகை என்பது நினைவிற்கு வருகிறது.

டேக் இட்ட் ஈஸி நிஜார் பாய்.

சிரிப்பு ஆரோக்யமானது

நரசிம்ம ராவைத்தவிர மற்ற யாவருக்கும் பிடித்தது.

காசு கொடுத்து கிளப்பெல்லாம் வைத்து சிரிக்கிறார்கள்

சிரித்து வாழவேண்டும்; பிறர் சிரிக்கத்தான் வாழக்கூடது (யாரோ சொன்னது)

//இனி பதிவுகளைப்பற்றிய கருத்துக்கள் தொடர்ந்தால் ஆரோக்கியமாக இருக்கும்.//

வழிமொழிகிறேன்.

பதிவைப்பற்றி எனக்கு அதிகம் சொல்லத் தெரியாது என்பதால்... நான் ஷட்டிங் அப்!

sabeer.abushahruk

நிஸார் அஹமது said...

இந்த பின்னூட்டம் உங்களது கவனத்திற்கு..
உலகின் மிக கேவலமான, ஆபாசமான, மாமா பத்திரிக்கைதான் ஆபாச விகடன் என்கிற ஆனந்த விகடன்..தயவு செய்து அவனுக்கு இலவச விளம்பரம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..
பின்குறிப்பு : குமுதம், ஆபாச விகடன், ஜூனியர் (ஆபாச) விகடன், (ஆபாச வியாபாரி) நக்கீரன், குமுதம்( ஆபாச) ரிப்போர்டர் போன்ற பலான பத்திரிக்கைகளை படிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டது.. மனதை தொட்டு சொல்லுங்கள்..நமது வீட்டுப்பெண்கள் முன்னிலையில் இந்த பத்திர்க்கைகளை படிக்க முடியுமா?

நிஸார் அஹமது said...

இன்னுமொன்று - நரசிம்மராவ் முகத்தோற்றம் ஒரு காரணம்..அதற்காக அவர் சிரிக்கவே மாட்டார் எனபது அபத்தம் இது போன்ற தேவையற்ற நச்சுக்கருத்துகளை பரப்புவதில் இந்த ஆபாச பத்திரிக்கைகள் வெற்றி பெற்று மக்களை மூளை சலவை செய்து வருகின்றன..
மேலும் நான் ஏதோ நகைச்சுவைக்கு எதிரி எனபது போலவும் நீங்கள் குறிப்பிட்டிருப்பதும் எனக்கு ஆச்சரியமளிக்கிறது..என்னைப்பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்..ஏன் நண்பர் நெய்னா தம்பியிடமே கேட்டுக்கொள்ளலாம்..

தொடர்ந்து தொடர்பு கொள்ளலாம்..என்மீதான் எந்த விமர்சனத்தையும் வைக்கலாம்..நன்றி..

sabeer.abushahruk said...

அன்பு நிஜார் பாய்!

எனக்கு ஆனந்த விகடனைவிட, நரசிம்மராவின் தன்மையை விட, என் சக சகோதரனின் திருப்தியும் மகிழ்ச்சியுமே முக்கியம். எனவே,

ஐ டிக்லேர்:

-விகடன் ஒரு சாக்கடைப் புத்தகம்.
-நரசிம்ம ராவ் நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

போதுமா?

இப்பவாவது என்னுடன் ரிலாக்ஸாக உரையாடுங்களேன் ப்ளீஸ்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா: நிஜாரை பாய் என்பதற்கு பதிலாக உன்னைப் போல் ஒருவனைப் போல் என்னைப் போல் ஒருவனே... பாய்(ச்சலை) எடுதிட்டு நிஜார் என்றே அழையுங்கள் நான் அனுமதி வாங்கித் தருகிறேன் :)

ஹூமரும் = நிஜாரும் ! (ரொம்ப சிம்பிள்) ஒன்றே !

பி.கு.: என்னிடம் கேட்டுப் பாருங்கள் என்று சொன்னதால் மேற்சொன்ன பின்னூட்டம் (ஏம்பா நிஜார் சரியா எழுதிட்டேனா?)

sabeer.abushahruk said...

அப்டீன்னா, தம்பி நிஜாரை நமக்காக நகைச்சுவை பதிவு ஒன்றை எழுதி படையுங்களேன் பார்ப்போம்.

(எப்புடி இழுக்கிறேன் பார்த்தீங்களா?)

sabeer.abushahruk said...

//எழுதி படையுங்களேன் பார்ப்போம்//

"எழுதச்சொல்லி படையுங்களேன்" என்று சொல்லவந்தேன்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//"எழுதச்சொல்லி படையுங்களேன்" என்று சொல்லவந்தேன்..//

நிச்சயம் எதிர்பார்க்கலாம் ! சொல்லாடலிலும், வரிக்கோர்வையிலும் கில்லாடியானவரிடமிருந்து ! :)

crown said...

அபுஇபுறாஹீம் சொன்னது…
ஹூமரும் = நிஜாரும் ! (ரொம்ப சிம்பிள்) ஒன்றே !
------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் . கண்டிப்பாக இதை நான் வழி மொழிகிறேன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர்கள். ஹாலித், நிசார் ஆகியோருக்கு என்னை பற்றி தெரிந்தவர்கள். நான் எனக்கு சரியென படுவதை ஆனித்தரமாக பதிபவன் அதே நேரம் பிறர்ரை மன நோகச்செய்யமாட்டேன். மேலும்.ஊக்குவிக்கவே பல நேரம் நேரம் ஒதுக்கி எழுதுகிறேன். சபிர்காக்கா போன்றவரிகளின் விசிறியாக இருந்தும் எழுதுகிறேன். மொத்தத்தில் நானும் ஒரு வாசகன். இது(என்)தன்னிலை விளக்கம் அல்ல. ஒருவகையில் உங்களிலிருவரிடமும் என்னை நியாபகப்படுத்திக்கொள்ள இதை எழுதுகிறேன். நீங்கள் இருவரும் ஜனரஞ்சகமான எழுத்தர் உங்களின் ஆக்கம் ஆவலுடன் எதிர் பார்க்கும் அன்புச் சகோதரன்.
முஹமது தஸ்தகீர்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புள்ள சகோதரர்களுக்கு,

என் தனிப்பட்ட கருத்தை பதிகிறேன் யாரும் சடைக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.

ஒருவர் மற்றவரை -பாராட்டுவதற்கும்-ஊக்கப்படுத்துவதற்கும், தம்பட்டம் தனிமனித துதிபாடல்கள் இவைகள் அனைத்திற்கு நிறைய வித்யாசம் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே.

அதிரைநிருபர் பின்னூட்டங்கள் தம்பட்டம் அடித்து, தனிமனித துதிபாடல்களாக உள்ளது என்று ஒரே பார்வையில் பார்ப்பதைவிட, அதிரைநிருபர் பின்னூட்டங்களில் குழப்பங்கள், அவதூறுகள், தனிமனித சாடல்கள், சமுதாயத்தை கூறுபோடும் செய்திகள், இரு சாராரை சீண்டிப்பார்க்கும் கண்ணாம்பூச்சி விளையாட்டுக்கள், புனைப்பெயர்களில் கண்டதை உலரித்தள்ளுவது போன்றவைகள் இல்லவே இல்லை என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

எனக்கு தெரிந்து, அதிரைநிருபர் ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை பல நாட்கள் தொடர்பில்லாம் இருந்த நண்பர்கள், உறவுகள், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலபேர் இதன் மூலம் இணைந்துள்ளார்கள்.

இங்குள்ள நிறைய வாசகர்களுக்கு பாசம் மழை பொழியும் வயதில் மூத்த மற்றும் இளைய சகோதர்களின் நட்பு கிடைத்துள்ளது என்பதை இதன் பங்களிப்பாளர்கள் அறிவார்கள். உதாரணம் சொல்லவேண்டும் என்றால் பெரும் கட்டுரையாக எழுதலாம்.

பின்னூட்டங்களில் நட்பை ஏற்படுத்தி பிறகு மின்னஞ்சல், கூகுள் டாக், அலைப்பேசி என்று தொடர்ந்து, நேரில் சந்தித்துக்கொள்வது என்று பல சகோதரர்களின் நட்பு வளர்ந்துள்ளதற்கு அதிரைநிருபரில் பாராட்டி நட்பை பலப்படுத்தும் பின்னூட்டங்கள் காரணமாக இருந்துள்ளது என்பதற்கு உதரணங்கள் பல சொல்லலாம்.

பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களினால் பித்னாக்கள் உண்டுபன்னாமல் இருந்தால் அவைகளை நீக்குவதைவிட, அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

பின்னூட்டங்களை மட்டுருத்துவது என்பது சுலபமான வேலையில்லை என்பது பதிவுலகில் உள்ள அனைத்து சகோதரர்களுக்கும் தெரியும்.

என் உடன்பிறப்பின் நண்பர், என் நண்பனின் உடன்பிறப்பு நிஜார் காக்காவின் ஆதங்த்தையும், ஹாலித் காக்காவின் கருத்தும் வரவேற்கதக்கது. நிச்சயம் உங்கள் கருத்துக்கள் அதிரைநிருபர் தளத்தை நெறியாளும் என்பதில் அய்யமில்லை.

தொடர்ந்து உங்கள் பங்களிப்பை அதிரைநிருபரில் வழங்குவீர்கள் என்று நம்புகிறோம்.

கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி..

Yasir said...

சகோ.நிஜாரும்,சகோ.ஹாலிதும் சொன்ன கருத்துக்களில் உடன்பாடு இல்லை...கருத்து சொல்லவும் / கண்டிக்கவும் உரிமை உண்டு அதே சமயம்...கருத்து எழுதும்போது எந்த மனநிலையில் எழுதுகிறோம் என்பது கருத்திடும் அனைவருக்கும்,அல்லாஹ்வுக்கு தெரியும்...முகஸ்துதி என்பது அ.நி என்றுமே இல்லை....குழந்தை முதலடி எடுத்து வைக்கும்போது..அதற்க்கு கைகொடுத்து பழக கற்றுக்கொடுக்கும் செயலை.அது ஓவர் ஆக்ட்/பொவ்மானம் என்று சொல்வது சரியென்றால் நீங்கள் சொல்வதும் சரிதான்...எட்டி பிழைப்பதுதான் ஈனத்தனம்..தட்டி கொடுப்பது தரமான செயலே...அதை அதிரை நிருபரும்,வாசகர்களும் என்றுமே செய்ய வேண்டும் ....அப்போதுதான்...நேரம் கிடைக்கும்போது எழுதும் என்னைபோன்ற கத்துக்குட்டிகளும்...கரையேறும் என்பது என் கருத்து....

Shameed said...

உயிர் வாழ உணவு முக்கியம் அதற்க்காகவே நாம் கடல்கடந்து வந்து உளைகின்றோம் அதிராம்பட்டினம் விருந்தாளிகளை உபசரிப்பதில் பெயர்பெற்ற ஊர் இந்த வட்டிலப்பமும் , பிரியாணியிம் பிரிக்க முடியாத ஒரு அங்கம் அதிராம் பட்டினத்திற்கு. அப்படி இருக்கும்போது அதை பற்றி பின்னுட்டம் வருவது ஒன்றும் மன்னிக்க முடியாத குற்ற செயல் அல்ல ஹராமான செயலும் அல்ல என்னை பொறுத்தவரை இது ஒரு சாதாரண விசயம்

crown said...

Shameed சொன்னது…
உயிர் வாழ உணவு முக்கியம் அதற்க்காகவே நாம் கடல்கடந்து வந்து உளைகின்றோம் அதிராம்பட்டினம் விருந்தாளிகளை உபசரிப்பதில் பெயர்பெற்ற ஊர் இந்த வட்டிலப்பமும் , பிரியாணியிம் பிரிக்க முடியாத ஒரு அங்கம் அதிராம் பட்டினத்திற்கு. அப்படி இருக்கும்போது அதை பற்றி பின்னுட்டம் வருவது ஒன்றும் மன்னிக்க முடியாத குற்ற செயல் அல்ல ஹராமான செயலும் அல்ல என்னை பொறுத்தவரை இது ஒரு சாதாரண விசயம்.
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.சாகுலின் கருத்தை நான் முற்றிலுமாக அமோதிக்கிறேன். நாம் அதிரைக்காரர்கள் அதிரை மக்களை படிக்கும் ஆர்வத்தை அதிகம் ஆக்கவே இவ்வாரெல்லாம் பதியபட்டுள்ளது. இது மண்ணின் வாசனையுடன் கூடிய பதிவுகளே!. அறிவு ஜீவி வேசம் போடவேண்டியதில்லை. இயல்பாக நடப்பை எழுதினாலே போதும். மேலும் எங்கேனும் ஜனரஞ்சகம் எனும் பெயரில் விசமத்தனமாகவோ, சினிமா போன்ற கேடு கெட்ட துறையை தூக்கிவைத்தோ ஏதும் கட்டுரையோ,கருத்துக்களோ அதிரை நிருபரில் வந்துள்ளதா? நடு நிலையாளர்கள் சிந்திக்கட்டும்.

நிஸார் அஹமது said...

அஸ்ஸலாமு அலைக்கும்..இந்த விவாதத்தை நான் தொடங்கி வைத்ததற்காக வருந்துகிறேன்..
பதிவிடுவது மற்றவர்களுக்கு செய்திகள் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில்தான்.அதை விடுத்து அதற்க்கு சம்மந்த சம்மந்தமில்லாமல் பின்னூட்டமிடுவது- பதிவின் செய்தியை பாதித்து விடும் என்றுதான் சொல்லி இருந்தேன். அதைத்தொடர்ந்த பின்னூட்டங்களும் குறிப்பிட்ட எனது கருத்து, மற்றும் சகோதரர் ஹாலிது கருத்து பற்றியே இருப்பதும் இன்னும் எனது பின்னூட்டத்திற்கான காரணம் சரிவர விளங்கப்படவில்லை என்றே தோன்றுகிறது..அதற்காக அறிவுஜீவிகளுக்கானதல்ல, இப்படி பின்னூட்டமிடுவது ஹராமல்ல என்று ரொம்பவும் ஆழமாக போவது - நான் முன்பு சொன்னது போல பதிவின் நோக்கம் புரிந்து கொள்ளாமல் போய்விடும் என்றே தோன்றுகிறது..எனவே இது போன்ற விவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது நல்லது..இனி பதிவைப்பற்றிய பின்னூட்டமிடலாமே?
இந்த பதிவை பற்றிய பின்னூட்டம் இனி தேவை இல்லை எனபது என் கருத்து..இனி புதிய பதிவுகளை பற்றிய பின்னூட்டங்களில் கவனம் செலுத்தலாம்..நன்றி..வஸ்ஸலாம்

Unknown said...

Nizar said:

"பதிவிடுவது மற்றவர்களுக்கு செய்திகள் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில்தான்.அதை விடுத்து அதற்க்கு சம்மந்த சம்மந்தமில்லாமல் பின்னூட்டமிடுவது- பதிவின் செய்தியை பாதித்து விடும் என்றுதான் சொல்லி இருந்தேன்."

Young man! You are corrrrect...! Hats off....!

- Abu Bilal

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

ஒரு சிலர் எழுதும் பதிவே பலரையும் முகம் சுளிக்க வைத்துவிடும்!

புதுசுரபி said...

:-)

Sometimes we easily forget things we have done just a few minutes ago. Even if you are still young, it could happen to you if you will not use your brain at all times. According to some studies, we can rejuvenate our brain by means of praising one another.

Please read more at http://www.pyroenergen.com/articles09/praise-for-success.htm

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு