Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மறக்க முடியா மனிதர் (நிறைவு) 23

அதிரைநிருபர் | October 16, 2011 | , ,

இன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலத் தெருவில் அமைந்துள்ள குடி நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் M.G.R. அவர்கள் அதிரைக்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் ‘பெண்களுக்காகத் தனியாக உயர் நிலைப் பள்ளி வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து அதிரை மக்களால் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விழா மேடையிலேயே அவ் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த முதலமைச்சர், அப்போது மேடையில் வீற்றிருந்த தமிழக அமைச்சர் மாண்புமிகு S.D. சோம சுந்தரம் அவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து, அதிரைக்குப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி அமைவதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்! அமைச்சர் S.D. சோம சுந்தரம் அவர்களின் முயற்சியால் அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவாவதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தன!

அத் தருணத்தில் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் கூட்டுக் கல்வி (CO-EDUCATION) முறையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகளின் பெற்றோர்கள் தாளாளர் அவர்களை அணுகி, ”பலரும் கூடுகின்ற இடமான மெயின் ரோட்டில் அமையவிருக்கும் அரசுப் பெண்கள் பள்ளிக்கு எங்கள் பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை. ஊரின் மையப்பகுதி ஒன்றில் பெண்கள் உயர் நிலைப் பள்ளி வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட அறக் கட்டளையின் செயலாளர் ஹாஜி S.M.S. அவர்கள் துரிதமாகச் செயல்பட்டார், விடிந்தால் வெள்ளிக்கிழமை. இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்த எனக்கு கல்லூரி அலுவலக ஊழியர் ஜனாப் S.M.சுல்தான் அவர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.


அறக் கட்டளை அலுவலகம் இயங்கி வந்த சேர்மன் வாடிக்கு நான் விரைந்து சென்றேன். அபோது அங்கே தாளாளர் அவர்களுடன் ஜனாப் A.S.M.ரஹ்மத்துல்லா ஹாஜியார், ஹாஜி ஜனாப் மன்னார் M.K. அப்துல் காதர், ஹாஜி ஜனாப் M.A.M. பாட்சா மரைக்காயர் உட்பட அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். அங்கு சென்ற என்னிடம் தாளாளர் அவர்கள் சொன்ன செய்தி இதுதான்: “நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன், நம் அறக்கட்டளை சார்பில் சலாஹிய்யா மதரசா நடைபெற்று வரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் பெண்கள் உயர் பள்ளி துவக்கவும், அப்பள்ளியின் தலைமையாசிரியராக உன்னை நியமனம் செய்யவும் தீர்மானித்துள்ளோம். நாளை ஜும்ஆவுக்குப் பின் அட்மிஷன் செய்ய ஏதுவாக 5- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, படிப்பைத் தொடர முடியாமல் உள்ளவர்களில் குறைந்தது 10 மாணவிகளின் ரிகார்டு ஷீட்டுகளையும பெற்று, அப்பொழுதே அட்மிஷன் செய்யவேண்டும்; மறுநாள் நம் மேல் நிலைப் பள்ளியிலிருந்து 6 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளை அங்கிருந்து பிரித்து பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு இடம் மாற்றவேண்டும். பெண்கள் பள்ளிக்குப் புதிய ஆசிரியைகளை நியமனம் செய்யும் வரை, ஆண்கள் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் ஆசிரியைகளைத் தற்காலிகமாகப் பெண்கள் பள்ளியில் பணியாற்றச் செய்யவேண்டும்!” போன்ற உத்தரவுகளைத் தாளாளர் அவர்கள் பிறப்பித்தார்கள்.

தாளாளரின் உத்தரவுக்கு இணங்க அனைத்தும் துரிதமாக நடந்தேறின! 04-06–1986 –ஆம் நாள் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி நிறுவப்பட்டது! நான் தலைமையாசிரியராகவும், ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியைகளான திருமதி H.நூர்ஜஹான், திருமதி R.வடிவழகி, திருமதி M.மேகலா ஆகியோர் ஆசிரியைகளாகவும் பணியாற்றத் துவங்கினோம். சில மாதங்களில் பெண்கள் பள்ளிக்கெனத் தலைமையாசிரியை மற்றும் தேவையான ஆசிரியைகள் நியமனம் செய்யப்பட்டார்கள். நாங்கள் எங்கள் பள்ளிக்குத் திரும்பினோம். அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்குப் போட்டியாக நிறுவப்பட்ட பள்ளி எனக் கருதிய தமிழ் நாடு அரசு, காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளிககு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியைப் பணியிடங்களை வழங்கவும் தயக்கம் காட்டியது. தாளாளர் அவர்கள் தனக்கே உரிய பாணியில் நீதி மன்றத்தில் வழக்குத் தொடந்தார்கள். காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியர் பணியிடங்கள் வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தது. கல்வித் தந்தை ஹாஜி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனையோடு, ஏறத்தாழ 120 மாணவிகளோடு துவக்கப்பட்ட காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக, இன்று உயர்த்தப்பட்டு, 1200- க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.


அரபி மதரசா, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, கல்லூரி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, என வரிசையாகத் துவக்கப்பட்டு அவற்றை நிர்வகித்து வந்த போதிலும், தாளாளரின் கல்வித் தாகம் மட்டும் தணியவில்லை. சிறு குழந்தைகளின் தொடக்கக் கல்வியின் அவசியத்தை அறிந்து ‘சாதுலியா மழலையர் பள்ளி’யையும், தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து, சாதுலியா தொழிற் கல்வி நிலையத்தையும் தொடங்கி, அதிரையின் எல்லாப் பருவத்தினருக்கும் அனைத்து வகைக் கல்வியும் கிடைத்திட வழி செய்தார், நமது கல்வித் தந்தை அவர்கள்!

எனது சொந்த வாழ்க்கையில் என்னுடைய முன்னேற்றத்திற்குத் தாளாளர் அவர்களின் பங்களிப்பைப் பற்றி இங்கு குறிப்பிட மறந்தேனென்றால், நன்றி கொன்றவனாகிவிடுவேன். கல்விக் கட்டணம் செலுத்தி மட்டுமே படிக்க முடியும் என்ற காலக் கட்டத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் அறக் கட்டளையின் கட்டணச் சலுகையில் படித்து முடித்ததையும், B,sc. பட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணி செய்திட வாய்ப்புத் தந்ததையும், உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டபோது, கணித முதுகலை ஆசிரியராகப் பணியாற்றிட வாய்ப்பு வழங்கியதையும், முதுகலைப் பட்டங்களோடு என்னினும் மூத்த ஆசிரியர்கள் பலர் இருக்க, அத் தருணத்தில் முது கலைப் பட்டம் பெற்றிராத என்னை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக நியமித்ததையும் உயிர் உள்ள வரை என்னால் மறக்க முடியாது.


02–10–1986 வியாழக்கிழமை, அதிரை நகர வரலாற்றிலும், கல்வி நிறுவனங்களின்வ வரலாற்றிலும் ஈடு செய்ய முடியா ஒரு பேரிழப்பை ஏற்படுத்திய கண்ணீரில் மூழ்கடித்த நாளாகும். ஆம்! அந்த நாள் தான் மறக்க முடியா மனிதர் மறைந்த நாள்! இறை நாட்டப்படி நேர்ந்த இறப்பால் ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவது மிகக் கடினம் என்ற போதிலும் அன்னாரது மூத்த புதல்வர் ஹாஜி ஜனாப் S.முகம்மது முகைதீன் அவர்களும் அவரைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர் ஹாஜி ஜனாப் A.M. சம்சுதீன் அவர்களும் அந்த வெற்றிடத்தை நிறைவு செய்தார்கள். தற்போது ஹாஜி S.M.S. அவர்களின் இரண்டாவது புதல்வர் ஜனாப் Dr. S.முகம்மது அஸ்லம் அவர்கள் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளராக மிகச் சிறப்பாகச் செயல் பட்டு வருவது பாராட்டுக்குரியது. உலகம் உள்ள வரை கல்வி இருக்கும். கல்வி உள்ள வரை கல்வித் தந்தை ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் புகழ் இருக்கும் என்பது உறுதி.

ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T.,
தலைமை ஆசிரியர் (ஓய்வு)
காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி
அதிராம்பட்டினம்

23 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சிலிர்ப்பூட்டிய மறக்க முடியாத நினைவுகள் !

ZAKIR HUSSAIN said...

கல்லூரிக்கு சென்று படிக்காமல் வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே படித்து முன்னேறியவர் பற்றிய ஆக்கம் மறக்கமுடியாதது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

காதிர் முகைதீன் கல்விக்கடலின் நல்ல தகவல்களும் நினவூட்டல்களும்.தேங்க்ஸ் சார்.

Yasir said...

வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியம்....அழகிய முறையில் ஒரு மாமனிதரைப்பற்றி நிறைய தெரிந்து கொண்டதில் பெருமிதமே....நன்றி சார்

N.A.Shahul Hameed said...

Dear Brothers,
Assalamu Alaikkum!
I have got a lot of messages to share with you when I think about the great Man Haji.SMS.
His vision, his judgement about any person on his first look, his foresightedness, his courage, his timely action all can be told as separate stories.
In my opinion Haji SMS ஒரு மறக்க முடியாத மாமனிதர்.
I am really excited to see those photos in this article that are all taken by me.
A few are taken before I entered into this noble institution.
Inshya Allah I would like to post a separate article about the memories of Haji.SMS very soon.
I pray Allah the Almighty to bless him in the world after this.
Wassalam
N.A.Shahul Hameed

அப்துல்மாலிக் said...

எந்த சொத்துக்களும் அழிந்துவிடும் கல்வி சொத்தை தவிர, கற்பிப்பதின் மூலம் நிறைய கற்கலாம். அந்த கற்பிக்கும் ஸ்தலத்தை உருவாக்கி நிர்வகித்த அன்னாருக்கு நம் ஊர் மக்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டிருக்கோம், அன்னாருக்காக துஆ செய்வோம்

அதிரையில் LKG முதல் PG வரை படிக்கும் கல்வி நிறுவனம் இருக்கும் ஒரே (பேரூ)ஊராட்சி அதிரை என்பதில் மிகப்பெருமை...

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------

sabeer.abushahruk சொன்னது…

N A S சார் கவனத்திற்கு:

ஓர் ஊரிலே ஒரு வாத்தி இருந்துச்சாம். நல்ல வாத்தியாம். ர்ர்ரொம்ப ர்ர்ரொம்ப நல்ல வாத்தியாம். அந்த வாத்தியே சக வாத்தியாராகவும் படிச்சித்தர்ர ஆசானாவும் பழக இனிய நண்பராகவும் பொடுசு பெருசுன்னு எல்லாருக்கும் பிடிக்குமாம், ர்ர்ரொம்ப ர்ர்ரொம்ப பிடிக்குமாம்

காலச்சக்கரம் சுழண்டதிலே பிரியமானவர்கள் எல்லோரும் திக்காலுக்கு ஒன்னாப் பிரிஞ்சு போய்ட்டங்கலாம். மத்த எல்லாரும் தொடர்புல இருந்தாலும் இந்த வாத்தி மட்டும் எங்கே இருக்குன்னே ஆருக்கும் திரியாதாம்.

இப்படி இருக்கிற காலத்திலதான் திடீர் திடீர்னு அந்த வாத்தி இணையத்தில வந்து, “ நான் அதப் பத்தி எழுதப் போறேன், இதப் பத்தி எழுதப் போறேன்”னு அறிவுப்புகளைச் செய்துட்டு அப்பால ஒரு ஒரு மாசத்துக்கு பேச்சு மூச்சு இல்லாம இருக்குமாம். எங்களுக்கும் அவர் எழுதுவதைப் படிக்க ர்ர்ரொம்ப பிடிக்கும் ஆதலால் நாங்களும் ர்ர்ரொம்ப எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போய்க்கொண்டே இருக்கிறொமாம்.

எப்படின்னா, ரஜினின்னு ஒரு நடிகன் அரசியலுக்கு வரப்போகிறேன், வந்துடுவேன், வரவா, வரேனா இல்லையானு பாரு இப்படி பாவ்லாக் காட்டி பாவ்லாக் காட்டியே ரசிகர்களை கேனையாக்கின மாதிரி…

நான் சொல்ர இந்த கதை வேறு யாருக்குப் புரியுதோ இல்லையோ… N A S சார்... உங்களுக்குக் கூடவா புரியல என் ஒருதலை ராகம்? :)

N.A.Shahul Hameed said...

Dear Sabeer,
Assalamu Alikkum.
Really I become so attached whenever I go through AN. I will feel elated at times and some times I do feel excited to see all my brought ups exposing their genius through AN. Indeed we are indebted to AN for bringing all of us together. I wonder the skills Savanna has and the matured articles from Zakhir and most important the way u r dominating the web world with your excellent poems. You have expanded your contributions to Sathya Margam too. I also find the expert views from my dearest brother Jameel Kakka.
I think to a man of my stature, as a retired teacher, AN is helping me a lot by refreshing my hey days at Adirai.
Whenever I read the events happening in Adirai, I feel as though I am still living in Aidrai although I am thousands of miles away.
My memories of Adirai with you all my beloved ones will ever remain green I cherish it for ever.
Inshya Allah I will post my article with a lot of our hey days.
Wassalam
N.A.Shahul Hameed

Shameed said...

சார் உங்களின் கட்டுரையை படிக்கும்போது உங்கள் குரலில் நீங்கள் வாசிப்பது போல் உள்ளது S.M.S அவர்களை பற்றி நீங்கள் அனுபவித்து எழுதிய கட்டுரை
உங்களை நினைக்கும்போதெல்லாம் நம் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் தினத்தில் கிளாப் கட்டை அடிப்பதற்காக ரெடியாக நீங்கள் நிற்கும் அந்த போஸ் ( காட்சி ) நினைவுக்கு வருகின்றது

Yasir said...

//Inshya Allah I will post my article with a lot of our hey days// eagerly waiting sir

ZAKIR HUSSAIN said...

அண்ணே இப்போ அரசியல்வதிங்க கூட வாக்கெ காப்பாத்திர்ராய்ங்கண்ணே!!!

Shameed said...

அண்ணன் N.A.S. வருவார் எப்படி வருவார் எப்போ வருவார்ன்னு அவருக்கே தெரியாது! ஆனால் வருவார்!

Adirai khalid said...

பழைய தஞ்சை மாவட்டம், இன்னும் இரமநாதபுரம் அதற்க்கு மேலும் உள்ள மக்களின் அடிப்படை கல்விதாகத்தை பூர்த்தி செய்தவர் கல்வி தர்ம கர்ம வீரர் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் கல்விக்கான கடின முயர்ச்சிதான் மிகையில்லை.

முத்துப்பேட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த நாசா விஞ்ஞானியை சிங்கப்பூர் விமான சந்திப்பில் காண நேர்ந்தது அவரிடம் கதைக்கும்பொழுது அவர் நம் காமு கல்லூரியில் படித்தவர் என்றும் இன்று நாசா அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றுவதாகவும், காமு கல்லூரியில் படித்ததை பொருமையாக கருதினார்கள். காமு கல்வி நிர்வாகத்திற்க்கு என்றென்றும் நன்றி கடன் பட்டவனென்று கூரினார்

அவரைப் போல் இன்னும் ஏராலமானோர் உலகில் பல இடங்களில் காதிர் முகைதீன் கல்வி நிலயங்களில் கற்றவர்கள் மனநிறைவுடம் இருக்கின்றனர் என்பதே உன்மை!

Mohamed Rafeek Taj said...

S.M.Sஅவர்களின் வேகம் தொடர்ந்து இருந்தால் காதர் முகைதின் கல்லூரி இன்று இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் அடங்கிய பல்கலைகழகமாக உருவேடுதிருக்கும் ....

நான்கு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட கல்லூரிகள் எல்லாம் இன்று பல்கலைகழகமாக மாறிவரும் இந்த தருணத்தில் காதர் மொய்தீன் டிரஸ்ட் மட்டும் S.M.S அவர்களுடைய காலத்தில் இருந்தை போல் இன்றும் இருப்பது வேதனை அளிக்கிறது

டிரஸ்ட் உறுப்பினர்கள் ,அதிரை மக்கள்கள் , முன்னால் மாணவர்கள் ஒன்றுனைந்து ஒரு கமிட்டியை உருவாக்கி இந்த கல்லூரியை எப்படி பல்கலைகழகமாக மாற்ற முடியும் என்பதை அறைய வேண்டும்

*****
நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் அறிவை மட்டுமே வாரிசாக விட்டுச் சென்றனர். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.' (அபூதாவுத், அஹ்மத்)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஒரு சகாப்தம் இன்றும் நிசப்தமாக உணர்வில் சப்பதமிட்டுகொண்டிருக்கு.

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

I wish you, Mr. Crown!
To win throne of thorn;
Of Adirampattinam town;
To put politicians down!

VAVANNA

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அரசியல் வாதிகளை புறந்தள்ளி!
என்னை அரசுஆள அரசானையில் அமர சொல்லி.
சொல்லின் செல்வர் வாக்கு,
"வாவேன்னா" நீ வருக என வாழ்தும் இனிய நெஞ்சுக்கு,
நான் என்ன கைமாறு செய்வேன்?
என் நிச அன்பை தருவதைத்தவிர!
அல்லாஹுக்கே எல்லாப்புகழும்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------

sabeer.abushahruk சொன்னது…

“ஓ” போடுவது ஒரு கலாச்சார அடையாளம் என ஆகிவிட்டபடியால்…
வாவன்னா சாருக்கு
ஓர்
ஓவன்னா!

for him having drawn
poem calling Crown
wisely willing dawn
before adirai drown

//என் நிச அன்பை தருவதைத்தவிர!//

இதுக்குத்தானே க்யூவிலே நிற்கிறோம்.

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

நான் விட்டெறிந்த கல்லுக்கு ஒரு வைரம் வந்துவிழும் - சபீரிடமிருந்து என்று எனக்குத் தெரியும்! அதை மகுடத்தில் (CROWN) பதித்து விடலாமே!

-வாவன்னா

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------

sabeer.abushahruk சொன்னது…

கல்லெறியக்
காய் தர
மாமரமல்ல நான்

கல்லெறியக்
கல்லே தந்தேன்
பட்டை தீட்டிய
பத்தன் மட்டுமே!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இரு ஜாம்பவான்களுக்கிடையில் என் அடை மொழி நடுவில் பொது பொருளாகி அடைமொழி தேன் அடைபோல் என் தலைமேல் கொட்டவும், கவி அடை மழையில் நான் நனைந்து நிற்கவும் மரமண்டை எனக்கு சொல் எறிந்து என்னை பட்டை தீட்டி என் தலைமேல் பதிக்கவும் இப்படி அன்பில் என்னை முக்கி,அன்பால் கவிதை வரைந்து, விடியல் கண்ட குருடன் நிலையில் திக்குமுக்காடி போய்கிறேன். எல்லாப்புகழும் அல்லாஹுக்கே! அன்பே எல்லாம் கொனரும் என்பது அடித்தள உண்மை. நன்றிகள் பல.

sabeer.abushahruk said...

//என்றும், "போ" என்று சொல்லாத "வா.."//

என்றும் "போதும்" என்று சொல்லாமல் "வாங்கிக்கொண்டே இருக்கும்" அரசியல்வாதியா சார் நீங்க? :)) (மாட்டிக்கினீங்களா?)

என்னைத் தெரியவில்லை என்று சொன்னதாகப் பேச்சு. சரியாப்போச்சு.
ஒரு நாள் நீங்கள் பட்டுக்கோட்டை செல்ல பஸ்ஸூக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு அருகில் "ஷப்னம் மினி டவர்ஸ்" என்ற பெயர் பொரித்த பச்சை நிற டொயோட்டா க்வாலிஸ் வந்து மரியாதையாக நிற்கிறது. கண்ணாடிக்கீழிறக்கி கண்ணாடி அணிந்த ஒரு கருப்பன், "சார், பட்டுக்கோட்டைக்கா?" என்கிறான். "ஆம்" என்று வாயும் அழகான சிரிப்பொன்றை கண்ணாடிக்குப் பின்னிருந்து உங்கள் கண்களும் உதிர்க்க. "வாங்க சார் நானும் பட்டுக்கோட்டைதான்" என்று உங்களை அழைத்துப் போய் விட்டேன் நினைவிருக்கா? இல்லையெனில் இன்னும் 10 வயசைத் தாங்கள் தங்களுக்குக் கூட்டிக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. :) :) :)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு