Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சங்கங்கள் இயக்கங்கள் - ஒரு பார்வை ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | October 11, 2011 | , , ,

இறைவனின் திருப்பெயரால்...

அன்பானவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்..

த.மு.மு.க. நம் சமுதயத்திர்க்காக கிடைத்த பெரும் பொக்கிஷம், இது அரசிடமிருந்து பெற வேண்டிய சலுகைகளை போரடி பெற்றுள்ளனர் இன்னும் பெற போராடிக் கொண்டுள்ளனர். இன்னும் எத்தனையோ சேவைகளை செய்த வண்ணம் இருக்கின்றனர். இத்தகைய சமுதாய நலன் அமைப்புகளில் உள்ளவர்கள் சங்கத்தின் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாதா? ஏன் இன்னும் கோணல் பார்வை.

முந்தய சங்கங்களின் செயல்பாடுகள் கல்யாண வரி வசூலிப்பதிலும் மற்றும் மணமுறிவு (தலாக்) ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாக மட்டுமே இருந்துள்ளது. சங்கம் என்பது பலதரப்பட்ட மாற்று கருத்துடையவர்களின் கூட்டமைப்பே, பலதரப்பட்டவர்கள் மாற்று கருத்துள்ளவர்கள் இதில் அங்கத்தினராக இருக்கலாம். ஆனால் அதன் செயல்பாடுகள் அனைவருக்கும் சமமாகவும் / நீதமானதாகவும் ஒளிவு மறைவின்றி இருக்கவேண்டும். ஒருசில நேரங்களில் சமுதாய நலன் கருதி முடிவுகள் எடுக்க நேரிடும்பொழுது சிலரிடமிருந்து கசப்பான எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அதை சமுதயத்திற்காக பொருந்திக் கொண்டுதான் ஆகவேண்டும், யாரேனும் பாதிக்கப்பட்டோம் என்று கருதினால் மேல்முறையீடு செய்வதுதான் சாலச்சிறந்தது. பொதுவாக அமைப்புகள் /  சங்கங்கள் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. எல்லாவற்றையும்  எதிர் கொண்டுதான் ஆகவேண்டும், உணர்ச்சிவசப்படத் தேவையில்லை.

சிலசமயம் த மு மு க வின் (மேலும் சில இயக்கங்களின்)  செயல்பாடுகளில் நமக்கு மாற்று கருத்துகள் இருந்த போதிலும் அதை புறம் தள்ளிவிட்டு அல்லாஹ்வுக்கும் நம் சமுதாயத்திற்காக உழைக்க கூடிய அந்த மக்களுக்கு முடிந்தவரை ஒத்துழைப்பையும் துவாவையும் செலுத்தி கொண்டுதான் இருக்கின்றோம்.

புதிதாக அமைந்த சங்க நிர்வாகிகள் நிர்வாக திறன் பாராட்ட தகுந்தவையாக உள்ளது,  சில விசயங்களில் உடனுக்குடன் சம்மந்த பட்டவர்களை தொடர்பு கொண்டு அதற்காக முயற்சியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்காக முடிந்தவரை ஒத்துழைக்க வேண்டும்.  இதற்க்கு மெருகூட்டும் வண்ணம் அமீரகவாழ் அதிரைச் சகோதரர்களால் நடத்திய ஒருங்கிணைந்த நிகழ்வும், மேலும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த பொதுக் கூட்டமும் மனதிற்கு புதுதெம்பை தந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.       

சங்கங்கள் வரி மற்றும் தலாக் போன்ற பஞ்சாயத்தில் மட்டும் நின்று விடாமல் நம் சமுதாயத்தில் நிலவும் சமுக ஒழுங்கீனங்களை சீர்படுத்த முயற்சி செய்ய வேண்டும். 

உலமாக்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றோம் என்று கூறும் சங்கங்கள் பொருளாதரத்தில் நலிவடைந்த உலமாக்களுக்கு / பள்ளிகளை பராமரிக்கும் முஅத்தீன் / நம் பிள்ளைகளுக்கு ஓதிக் கொடுக்கும் உஸ்தாதுகளுக்கு நம் ஊர் வாழ்க்கை தரத்திற்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

வேட்பாளர்களிடத்தில் உறுதிமொழி வாங்கியது போல், சங்கத்திற்கு கல்யாண வரி வசூலிக்கும் முன்பு பெண் வீட்டில் மாப்பிள்ளை வீட்டிற்கு கைக்கூலி பரிமாற்றம் இருக்கிறதா விசாரிக்க வேண்டும் அப்படி கைக்கூலி / வரதட்சனை பரிமாற்றம் இருந்தால் அந்த கல்யாணத்திற்கு பதிவுப் புத்தகத்தை அனுப்ப மாட்டோம் என்று (பெயரளவிலாவது) முதல் கட்ட  நடவடிக்கை எடுக்க வேண்டும்.     

ஒவ்வொரு முஹல்லாவிலும் படிக்கும் மாணவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு அந்தந்த முஹல்லாவில் அடிப்படை மார்க்க அறிவு போதிக்கப்படுகிறதா என்று ஆராய வேண்டும்.

பாதியில் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் (பொருளாதார அல்லது அறிவுரீதியாக கற்க கடினப்படும்) செய்யும் மாணவர்களை இனம் கண்டு  அதற்கு ஏற்றவாறு உதவி செய்ய ஆலோசனை வழங்க வேண்டும்.
        
துரதிஷ்டவசமாக நம் ஊர் மக்கள் ஏனோ இன்னும் இடஒதுக்கிட்டை அனுபவிக்காமல் இன்னும் அரசு தரும் சலுகைகளை பெற முயற்சி செய்யாமல் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்)  மட்டுமே நம்பி வாழ்க்கையை காணடித்துக் கொண்டு இருக்கின்றோம் என்பதும் நம் சமுதாயம் இன்னும் விசா வியாபாரிகளின் கையில் சிக்கி சின்ன பின்னமாகி கொண்டிருக்கின்றது என்பதுதான் கசப்பான உண்மை. 

மேலும் சில / பல கொள்கைகளால் பிரிந்து கிடக்கும் நம் சமுதாய இயக்க சகோதரர்கள் வீண் விதண்டவாதமும், கொள்கை சண்டைகளை முச்சந்திக்கு முச்சந்தி செய்வதை விட்டுவிட்டு பயனுள்ள வழியில் வருங்கால சந்ததியினருக்கு,  நாம் வரிசெலுத்தும் அரசிடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மை அல்லது  பொது  இட ஓதிக்கிட்டு முறையில் கல்வி , வேலைவாய்ப்புகள் பெற முயற்சி செய்தல் வேண்டும், முதியோர் ஊக்க தொகை, ஏழை விதவைகளுக்கான உதவித் தொகை, உலமாக்கள் ஊதியம் போன்ற என்னென்ன சலுகைகளை பெறமுடியுமே அனைத்தையும் பெற சங்கங்களோடு சேர்ந்து முயற்சிக்கவேண்டும். இதற்காக ஒவ்வொரு முஹல்லா  சங்கத்தில்  உள்ள கட்டிடத்தில் தனி அலுவலகமே செயல் படவேண்டும்

இதுவரை நம் சமுதாயத்திற்கான பொதுவான பெண் மருத்துவரை பெற முயற்ச்சி செய்யவில்லை நன்கு படிக்கும் நடுத்தர அல்லது  ஏழை மாணவிகளை இனியாவது தேர்ந்தெடுங்கள் இன்ஷா அல்லாஹ் அதற்கு தேவைப்படும் பொருளாதாரம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள் செய்ய வெளியில் உள்ள நாங்கள் அதிரை சொந்தங்கள் மேலும் நட்பு வட்டங்கலில் சொல்லி ஆதரவு திரட்டி  உதவி செய்கின்றோம்.  இன்ஷா அல்லாஹ்.

மேலும் நமக்காக நம் சமுதாயத்திற்கான சட்ட நிபுணர்கள், வழக்கறிங்கர்கள் (law  studies), ஊடகவியலாளர்கள் (journalist )  இந்தியா மேலாண்மை அதிகாரிகள் (IAS ,IPS )   படிக்க ஆர்வமுடைய மாணவர்கள் தேவை இன்ஷா அல்லாஹ் இதற்காகவும் அமைப்புகளும், சங்கங்களும் ஒருங்கிணைந்தால் அனைத்துதரப்பிலும் உதவி செய்ய ஒத்த கருத்துடைய நாங்கள் தயாராக இருக்கின்றோம். 

இன்ஷா அல்லாஹ் ஒன்றுகூடி வளம் பெறுவோம் !

வல்லோனின் வான் துணையில் 

தங்களின்,

மு அ ஹாலித், சிட்னி    

குறிப்பு : இத்துடன் அதிரை பேரூராட்சி செயலற்று கிடந்த பொழுது அதற்கு மாற்றாக council for adirai promotion (CAP)  என்ற அமைப்பை உருவாக்கிய தன்னார்வ சகோதர்களில் அஸ்ரப் அலி அவர்கள் காலம் சென்ற மு. இ. ஹசன் அவர்களுக்கு ஆதரவு கேட்டு எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் மர்ஹூம் மு.இ.ஹசன். இவை இன்று நடைபெறும் சச்சரவுக்கும் நம் அனைவரின் பதிலாக இருக்க முடியும்.


9 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்றுமே ஒரே சிந்தனைக் கோட்டில் பயணிப்பாவர்கள் இப்படிச் சிந்திப்பார்கள், அங்கே ஹாலித் போன்றோர்களின் உள்ளக்கிடைக்கையில் இருப்பதை பிரதிபலித்திருக்கும் இதேபோன்ற மாதிரி பிம்பம்தான் எங்களிடமும் இருக்கிறது, சங்களின் ஒரு அங்கமாக இருந்திட வேண்டிய மேற்சொன்ன அதிமுக்கியமான நலத்திட்டங்கள் ஏனோ செயலற்று அல்லது வீரியமிழந்திருந்ததாலோ அல்லது உருவாக்கப்படாமலே இருந்ததாலோ கடல்கடந்து வாழும் நம்மைப் போன்றோரை ஏங்க வைக்கிறது.

அதன் விளைவே அமீரகத்தில் ஏற்கனவே உருவெடுத்திருக்கும் நலச் சங்கங்களும், கூட்டமைப்பு கருத்துருவாக்கமும். இங்கு மட்டுமல்ல இன்னும் பிற நாடுகளில் எங்கெல்லாம் நமது சகோதரர்கள் வாழுகிறார்களோ அங்கெல்லாம்.

சென்ற ஆண்டு துவங்கப்பட AEM அதிரை கல்விச் சேவையகம் பற்றி ஏற்கனவே தனிமின்னஞ்சலில் அனுப்பியிருந்ததை ஹாலித் நன்றாகவே அறிந்திருக்கலாம், அங்கே சொல்லியிருந்ததை இங்கே இப்பதில் கண்டதும் ஒரு நினைவூட்டலே!

அப்துல்மாலிக் said...

சகோ. ஹாலித் அவர்களின் ஒவ்வொரு வரிகளின் ஏக்கங்களும் நம் அனைவரின் உள்ளக்கிடங்கில் நீண்டநாளாக தவித்துக்கொண்டிருக்கும் ஏக்கங்கள். ஒரு குறிப்பிட்ட இயக்கங்களையும் தாண்டி முகல்லாவுக்கென்றுள்ள சங்கங்கள் அனைத்தும் பாடு பட வேண்டும், சங்க முகல்லாக்கள் மட்டுமே அந்ததந்த ஏரியாவில் ஒவ்வொரு குடும்பத்திலும் உட்புகுந்து திறமையானவர்களை கண்டெடுக்க முடியும், அதை தற்போது திறம்பட செயல்பட்டுக்கொண்டிருக்கும் இயக்கங்கள் மூலம் சாதிக்கலாம், நிச்சயம் மாற்றம் வேண்டும், இன்ஷா அல்லாஹ்

Anonymous said...

பிறர் உன்னை நேசிக்க விரும்பினால், முதலில் நீ உன்னை நேசிக்கப் பழகிக் கொள்.

சிறு சந்தேகத்தைக் கூட அப்போதே தீர்த்து விடு. சேர்த்து வைக்காதே.

திருமணம் வாழ்க்கையில் கடைசி சந்திப்பு அல்ல ஒரு பிரயாணத்தின் துவக்கம்.

வீரம் என்பது மன உறுதியில் தான் இருக்கிறது உடல் உறுதியில் அல்ல.

வீழ்வது வெட்கமல்ல எப்போதும் வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கம்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------

ஒவ்வொரு வரிகளும் மனதை நெருடாமல் செல்லவில்லை.
நம்மில் யார் யோசித்தோம் !?. அன்டை வீட்டாரை பற்றி, நம் சமுதயத்தில் பிந்தங்கிய சகோதரரின் வாழ்க்கயை பற்றி ஆலிம்ஷாஎன்றால் ஏழையாகத்தான் இருக்கவேண்டும், நீன்ட ஜுப்பாவும், வளர்ந்த தாடியும், கரைபடிந்த வேட்டியுமாகத்தான் மனதில் தைத்து வைத்திருக்கின்றோம். அவர்களின் வாழ்க்கைதரம் எப்படி உள்ளது. நானும் ஆலிம்கள் ஹாபில்கள் நிரைந்த குடும்பத்தின் நடுவில் வாழ்தவன். அவர்களின் வாழ்க்கைதரம் இன்னும் சொல்லப்போனால் அவர்களின் குழந்தைகளின் ஏக்கங்களும் சொல்லிடங்காது.

மேற்குறிப்பிடும் சங்கங்கள் இயக்கங்கள் அவர்களின் வாழ்வாதார பிரச்சினையில் பங்கெடுத்தே ஆகவேண்டும்

மர்ஹூம் ஹசன் காக்கா அவர்களின் கடித வரிகளை வாசிக்கும்பொழுது மெய்சிலிர்த்தது. அவர்களை தெறிந்தவர்கள் இக்கடிதத்தை பார்த்தார்களேயானால் பரவச மடையாமல் இருக்க மாட்டார்கள். அவர்களின் ஊர் பற்றிய சிந்தனை மற்றும் ஆதரவு அவர்களின் இருதி நாட்கள்வரை நீடித்தது உண்மை இன்னும் எதிர்கால சந்ததிகளின் கல்வி பற்றிய கவலை அவர்களிடத்தில் மேலோங்கி இருந்தது. அல்லாஹ் அவர்களுக்கு சுவர்கத்தை நசீபாக்கி வைப்பனாகவும். ஆமீன். அவர்களின் கனவையும் நம் சமுதாயதிர்க்கும் எதிர்கால சந்ததிகளுக்கு அமல் படுத்திவைப்பானகவும் ஆமீன்

முஹம்மத் அப்துல்லாஹ்

Anonymous said...

ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது, (மற்றவர்) தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களிடம் எதைப் பற்றி அறிவு இல்லையோ, அதைப் பின் தொடராதீர்கள், திண்ணமாக கண், காது, இதயம் ஆகியவற்றைப் பற்றிஎல்லாம் விசாரிக்கப்பட்டே தீரும்.

BY ABOOBACKER,

AMAZON WATER PURIFIER

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆதரவுடன் நல் ஆலோசனைகள்.நிய்யத் நிறைவேறட்டும்.

கடிதம் எழுதியவர்கள்களின் இதயம் போன்ற தலைமை தான் இன்று நமக்கு தேவை.

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

வாவன்னா குடும்பத்திற்கு ஒரு அப்பாஸ் காக்கா மாதிரி, மு.கி. குடும்பத்திற்கு ஒரு M.I. ஹசன் !
மக்கள் நம்முடைய புறங் கையைப் பார்த்திருக்கிறார்களே தவிர, உள்ளங் கையைப் பார்த்ததில்லை !

-வாவன்னா

sabeer.abushahruk said...

கற்பனையாகவும் யூகமாகவும் எழுதுவதைவிட இதுபோன்ற ஆக்கபூர்வமான பதிவுகள் உணர்வுபூர்வமாக எழுதப்படுவதால் தாக்கம் ஏற்படுத்துவது உறுதி.

ஆனால், அடிக்கடி எழுதப்படுவதில்லையே என்கிற வருத்தம் உண்டு சகோ. ஹாலித்!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் ஹாலிதின் ஆக்கம் சிப்பிக்குள் முத்து போல் அதிரை நிருபரில் வந்த மிக எதார்த கட்டுரை. அருமை வாழ்துக்கள். இவர் அதிகம் எழுதனும் என்பது எம் அவா! செய்வாரா? ஹசன் காக்கா போன்ற படித்த உத்தமர்கள் வாழ்ந்த ஊர் நம்மூர். அவர்களிடம் பழகிய நாட்கள் பல்கலைகழகத்தில் இருந்தது போல் ஓர் உணர்வு. அல்லாஹ் அவர்களின் ஆகிரத்தை சிறப்பாக்கி வைப்பானாக. ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு