நான் என்றால்
“அகம்பாவத்தின்
அடையாளம்;
அகம் பாவங்களை
ஆக்ரமிக்க
ஆரம்பத்தளம்”
ஆன்மீகக் கூற்று
“தன்னம்பிக்கையின்
ஊக்க மருந்து;
உற்சாகத்தின் ஊற்று
நான் என்கின்ற கூற்று”
உளவியலார்க் கூற்று
உன்னால் மட்டுமே
முடியும் என்றால்
தற்பெருமை
உன்னால் முடியும்
என்றால் தன்னம்பிக்கை
“நான் யார்?”
மூளையின் மூலையா?
உடலின் கூடா
உயிரும் போனதும்
பெயரும் போகின்றது
மெய்யும் பொய்யானது
மெய்யின் மீதானப் பெயரும்
பொய்யானது
உள்ளிருக்கும் நான்
உயிரின் ஒளியா?
எந்தையின் விந்தா?
விந்தைகளின் கனாவாக
விடையறியா வினாவாக
என்னைப் பற்றி
இன்னமும் அறியாமல்
என்னதான் படித்தேன்?
என்னையேக் கேட்டேன்
நானாக நான் இன்றேல்
வீணாக ஏன் தம்பட்டம்?
நான் என்ற தன் பட்டம்!!
- ”கவியன்பன்” கலாம்
“அகம்பாவத்தின்
அடையாளம்;
அகம் பாவங்களை
ஆக்ரமிக்க
ஆரம்பத்தளம்”
ஆன்மீகக் கூற்று
“தன்னம்பிக்கையின்
ஊக்க மருந்து;
உற்சாகத்தின் ஊற்று
நான் என்கின்ற கூற்று”
உளவியலார்க் கூற்று
உன்னால் மட்டுமே
முடியும் என்றால்
தற்பெருமை
உன்னால் முடியும்
என்றால் தன்னம்பிக்கை
“நான் யார்?”
மூளையின் மூலையா?
உடலின் கூடா
உயிரும் போனதும்
பெயரும் போகின்றது
மெய்யும் பொய்யானது
மெய்யின் மீதானப் பெயரும்
பொய்யானது
உள்ளிருக்கும் நான்
உயிரின் ஒளியா?
எந்தையின் விந்தா?
விந்தைகளின் கனாவாக
விடையறியா வினாவாக
என்னைப் பற்றி
இன்னமும் அறியாமல்
என்னதான் படித்தேன்?
என்னையேக் கேட்டேன்
நானாக நான் இன்றேல்
வீணாக ஏன் தம்பட்டம்?
நான் என்ற தன் பட்டம்!!
- ”கவியன்பன்” கலாம்
24 Responses So Far:
நல்ல பொருட்கவிதை.
நான் நான் என்ற அகம்பாவத்தில் தான் இன்று அரசியல் நாறுகிறது.
//நானாக நான் இன்றேல்
வீணாக ஏன் தம்பட்டம்?///
சூப்பர் !
மரபினை மடியில் வைத்திருந்தவர்களின் கையிருப்பில் இதே போல் ஏராளம் இருக்கும் அவைகளும் வெளிக் காட்டிட வேண்டும் !
//உன்னால் மட்டுமே
முடியும் என்றால்
தற்பெருமை
உன்னால் முடியும்
என்றால் தன்னம்பிக்கை//
இது எனக்கும் என் முதலாளிக்கும் நடக்கும் போராட்டம் (எப்படி உங்களுக்கு தெரிந்தது ? - அட இப்போ சொல்லிட்டேனா ! :)) )
//நான் என்றால்
“அகம்பாவத்தின்
அடையாளம்;
அகம் பாவங்களை
ஆக்ரமிக்க
ஆரம்பத்தளம்”// ஆரம்பமே அசத்தலா இருக்கு....பொருள்பொதிந்த கவிதை...வாழ்த்துக்கள் கவியன்பன் கலாம் அவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்,
அபுல் கலாம் காக்கா,
//“நான் யார்?”
மூளையின் மூலையா?//
இது உண்மையாக இருக்கும் போல் தான் எண்ணத் தோன்றுகிறது..
கலாம்... நாம்... கலக்கலாம்..
வாழ்த்துக்கள் காக்கா..
தொடருங்கள் இது போன்று வாசீகரிக்கும் சிந்தனைதூண்டும் கவி வரிகளை
கவி அன்பனின்
கவி வாய்க்கால்
கரை புரண்டு
ஓடுகின்றது கவி
எல்லாம்
கவி அன்பனின்
கவி வெள்ளம்
தலைக்கு மேல்
ஓட வேண்டும்
ஜானையும் தாண்ட
வேண்டும்
முழத்தையும்
தாண்டவேண்டும்
மின்னஞ்சல் வழி கருத்து
----------------------------------------------
"கவியன்பன்" கலாம்! எங்களின் சலாம்!
நமக்கு உறுதுணை இறைவனின் கலாம்!
நபிகளின் வழிகளில் நடந்து பார்க்கலாம்!
வருவது வரட்டும் ஒரு கை பார்க்கலாம்!
-வாவன்னா
மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------------
sabeer.abushahruk சொன்னது…
//உன்னால் மட்டுமே
முடியும் என்றால்
தற்பெருமை
உன்னால் முடியும்
என்றால் தன்னம்பிக்கை//
மட்டுமே” எனும் ஒரே வார்த்தையைக் கொண்டும் எடுத்தும் அர்த்தம் கற்பிக்கும் கவியன்பன் அவர்களே, இந்தக் கவித்துவம் ஒரு கலை. இதைக் களைந்த நிலையிலிருந்து முன் வந்தமைக்கு நன்றிகள் பல.
குளிர் கண்ணாடிகளை வெயிலுக்காகப் போட்டுக்கொள்ளுங்கள். எங்களுக்காக வெற்றுக் கண்களோடும் உலகைப் பார்த்து இப்படி அடிக்கடி எழுதித்தாருங்கள். அதில்தான் நிதர்சனம் இருக்கும். தொட்டியில் நீந்தும் மீனைவிட தொட்டத்தில் நீந்தும் மீனே சுதந்திரமானது. இனி, கிரவுன் என்றொரு கவிதைக்காதலர் வருவார், இன்னும் அலங்கரிக்க.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
//உன்னால் மட்டுமே
முடியும் என்றால்
தற்பெருமை
உன்னால் முடியும்
என்றால் தன்னம்பிக்கை//
"உன்னால்" என்பதற்கு பதிலாக "என்னால்" என்று இருக்க வேண்டும் என்பது என் கருத்து தவறிருப்பின் மன்னிக்கவும்
அன்புடன் அபு ஈசா
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/// நான் என்றால்
“அகம்பாவத்தின்
அடையாளம்;
அகம் பாவங்களை
ஆக்ரமிக்க
ஆரம்பத்தளம்”
ஆன்மீகக் கூற்று
உன்னால் மட்டுமே
முடியும் என்றால்
தற்பெருமை
உன்னால் முடியும்
என்றால் தன்னம்பிக்கை ///
**********************************************************************************
நான்! நல்லதொரு கவிதை
சகோதரர் கவியன்பன் கலாமை
வரவேற்கிறோம்!
மிகச்சிறப்பான சுய ஆழுமை ஆராய்ச்சி. சைத்தானின் பிடியில் அகப்படாமல் இருக்க ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டும். மனிதனுக்கு தற்போதைய வாழ்க்கை ஓட்டத்தில் இதைச் செய்ய நேரமில்லை, தன்னை மறந்த நிலையில்.
//"உன்னால்" என்பதற்கு பதிலாக "என்னால்" என்று இருக்க வேண்டும் என்பது என் கருத்து தவறிருப்பின் மன்னிக்கவும்//
அபு ஈஸா,
தற்பெருமை எனும் தீய குணம் 'தன்மை, முன்னிலை, படர்கை ஆகிய மூன்றிலும் தற்பெருமை என்றே வரும்.
தன்மைக்கு தற்பெருமை என்றும் முன்னிலைக்கு உன்பெருமை என்றும் படர்கைக்கு அவர்பெருமை என்றும் வராது.
எனவே, கவிஞரின் போதனை சரியே.
என்ன ஆளையே காணோம்? :))
///என்ன ஆளையே காணோம்? :))/// இத இத தான் எதிர்பார்த்தோம் :)))
காக்கா நான் இலக்கணப்பிழை என்று சொல்லவில்லை. கருத்தில் பிழை ஏற்படும் என்பது என் கருத்து.
"உன்னால் மட்டுமே முடியும்" என்று யாரும் சொன்னால் அதை தற்பெருமை என்று சொல்ல மாட்டோம். அதே போல "உன்னால் முடியும்" என்று சொன்னாலும் அதை தன்னம்பிக்கை என்றும் யரும் சொல்வதில்லை. மாறாக ஊக்கப்படுத்துதல் என்று பதமே இரண்டு நிலைக்கும் பொருந்தும்.
"என்னால்" என்ற சொல் கருத்துப் பிழையைக் களையும் என்பதே என் கருத்து.
என்னைப் போன்ற புறியாதவர்கள் தவறாய் புறிய வாய்ப்புண்டு.
****************************
ஊருக்குப் போயிருந்தேன்
அன்பான உள்ளங்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
“நான்” என்ற மேலெண்ணம் வெளியேறத் தூண்டும்
”நான்” என்ற கவிதை முதன் முதலாக உள்ளே வர வேண்டும்
என்பது தான் எல்லாம் வல்லவனின் நாட்டம். அல்ஹம்துலில்லாஹ்
மரபுக்கடலில் நீந்திவிட்டு
புதுநதியில் நீச்சல் கற்றதும்
புதுசுகம் தான்; புரிந்துணர வைத்த
கவிவேந்தர் சபீர் அவர்கட்கும்
கருத்துரைகள் இட்ட சகோதரர்கட்கும் ”ஜஸாக்கல்லாஹ் கைரன்” என்ற துஆவுடன் நன்றி பகர்கின்றேன்
ஓவிய ஆசிரியர் அவர்களிடம் பள்ளிப் பருவத்தில்
இலக்கியமும் இலக்கணமும் (ஆங்கில இலக்கணம் உட்பட்)கற்றேன் - இன்று
கலக்கிய் விதமோ என்னை ஆனந்தமாய்க் கண்ணீர் கலங்க வைத்தது.
மீண்டும் எல்லாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.
தொடர்ந்து கவிதைகள் வரும்; எனது கவிதைத் தொகுப்பு இன்ஷா அல்லாஹ் நவ்ம்பர் முதல் வாரம் கோவை தகிதா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட உள்ள்தால் ஒரு வார விடுப்பில் (பெருநாள் விடுமுறையில்) தாய் மண்ணுக்குச் செல்கின்றேன். எனது கவிதைத் தொகுப்பின் தலைப்பு
“தாயின் காலடியில் சொர்க்கம்” (பதிப்பக உரிமையாளர் முனைவர் பேராசிரியர் மணிவண்ணன் அவர்களாகவே தெரிவு செய்து கொண்டார்கள்)
மேலும் சிகரத்தை நோக்கி
உங்களின் துஆக்களைத் தேக்கி
குறிப்பு: அந்நூலின் “என்னுரையில்” மறவாமல் நமது தமிழறிஞர் அதிரை அஹ்மத் காக்கா அவர்கள் என்னை வழிநடத்திச் சென்றதை நன்றிய்ணர்வுடன் அறிவித்துள்ளேன்.
/எனது கவிதைத் தொகுப்பு இன்ஷா அல்லாஹ் நவ்ம்பர் முதல் வாரம் கோவை தகிதா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட உள்ள்தால்//
வாழ்த்துகள்!
வாசிக்க வழிவகையுண்டா?
அஸ்ஸலாமுஅலைக்கும்.
கவிதை எப்படி இருக்"கலாம்" என்பதை விளக்கும் விதமாக அமைந்த கவிதை. கவிதை எப்படி இருக்கலாம்னு இருந்தாலும் மனிதன் எப்படி இருக்ககூடாதுன்னு கருத்தை சொல்லும் கவிதை இது. சுயஸ்கால்வாயில் நீந்தியவர் இன்று அதிரையில் தோப்பில் குளி(ர்)க்க வந்திருக்கிறார். இருந்தாலும் யாப்பில் பின்னும் இவர் தோப்பிலும் பின்னி யெடுக்கிறார்.எப்படி வார்தையை சேர்க்"கலாம்,கவிமாலையாய் கோர்க்"கலாம், படிப்பவரை ஈர்க்"கலாம்ன்னு, நாம் யோசிப்போம் ஆனால் இவர் கவிதையை ஒருகை பார்க்"கலாம் என்று வந்திருப்பவர்.இனி கவிதையை நோக்"கலாம்.
நான் என்றால்
“அகம்பாவத்தின்
அடையாளம்;
அகம் பாவங்களை
ஆக்ரமிக்க
ஆரம்பத்தளம்”
ஆன்மீகக் கூற்று.
-----------------------------------------------------
நான் என்னும் அகந்தை ஒரு புற்று! நாளுக்கு நாள் தொடரும் தொற்று!அடுத்தவர்களிடம் பாசம் பற்று அற்று போகசெய்யும் விச காற்று, களையெடுக்கப்படும் அனுசரனை நாற்று, இதை கற்று வாழ்வில் தோற்று போவதைத்தவிர வேறு என்ன கிடைக்கும்?
“தன்னம்பிக்கையின்
ஊக்க மருந்து;
உற்சாகத்தின் ஊற்று
நான் என்கின்ற கூற்று”
உளவியலார்க் கூற்று
-----------------------------------------------------
தன்னம்பிக்கையின் ஊக்க மருந்தா இல்லை ஊக்கத்தின் தூக்க மருந்தா?ஊக்கமருந்தும், தூக்க மருந்தும் மறந்து அதிகம் எடுத்தால் பின் நாள் வரும் நம்மை நால்வர் வந்து எடுத்துச்செல்ல. அறிவியலார் , அறிஞரெண்ணும் பட்டம் பெற்றவர் எல்லாரும் வெல்ல முடியுமா அகிலத்தை படைத்த அல்லாஹ்வின் வாக்குறுதியை?எது உறுதி என்று நம்படுகிறதோ அது இறுதி வரை தொடருமா? இல்லை எல்லை தாண்டி படருமா?
உ(எ)ன்னால் மட்டுமே
முடியும் என்றால்
தற்பெருமை
உ(எ)ன்னால் முடியும்
என்றால் தன்னம்பிக்கை.
----------------------------------------------------------------------
என்னாளும் என்னால் என்றால் மட்டுமே என கொண்டால் முடியாது, என்னாலும் முடியும் என கொண்டால் எல்லாரும் போற்றவாழ்த்த நல்லவிதமாய் முடியும். என்னால் என்றால் சமூகத்தின் அங்கமாய் இருக்கமுடியாது, நானும் என்றால் சமூகமே நம்மை அங்கமாக்கிகொள்ளும்.
“நான் யார்?”
மூளையின் மூலையா?
உடலின் கூடா
உயிரும் போனதும்
பெயரும் போகின்றது
மெய்யும் பொய்யானது
மெய்யின் மீதானப் பெயரும்
பொய்யானது.
---------------------------------------------------------------
மெய்யற்று(உன்மை இல்லாமல்) எல்லாம் பிணமே!
மெய்மேல் உயிர் அற்று விலகுதல் அதனால்தான் பெயர்தாங்கிய இன்னார்
மெய்யெத்துஎன ஆனார்? நிலையில்லா உடல்,உயிர், பெயர் எல்லாம் நான் என்னும் அகந்தையின் தோல்விகள். நானும் என்னும் பக்குவம், மறனித்தபின்னும் மண்ணில் நற்பெயராய் மிண்ணும் வைரம்.
உள்ளிருக்கும் நான்
உயிரின் ஒளியா?
எந்தையின் விந்தா?
விந்தைகளின் கனாவாக
விடையறியா வினாவாக
என்னைப் பற்றி
இன்னமும் அறியாமல்
என்னதான் படித்தேன்?
என்னையேக் கேட்டேன்.
--------------------------------------------------------
பெற்றோருக்கு பிள்ளையாக,உடன் பிறப்பிற்கு சகோதரனாக,தோழர்களுக்கு நண்பனாக, ஆசிரிருக்கு மாணவனாக, மனைவிக்கு கணவனாக, பிள்ளைகளுக்கு தந்தையாக இப்படித்தான் " நான்" என்பது இருக்கனும். நான் , நாம் , நாங்கள் என்பது எல்லாம் மொத்தத்தில் வல்ல அல்லாஹ்வின் அடிமை. ஆக நான் என்பது எல்லாம் மாயை! கனி இருக்க ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும் காயை ?
நானாக நான் இன்றேல்
வீணாக ஏன் தம்பட்டம்?
நான் என்ற தன் பட்டம்!!
-----------------------------------------
உயர, உயரே பறக்குது கவியன்பன் கவிப்பட்டம். பல் நூல் படித்து வந்தாலும். தான் , நான் எனும் அகங்காரம் கொண்டால் . உயர பறக்கும் சில தற்காலிக பட்டமெல்லாம் நூல் மெல்ல அருந்து வீழ்தே பலர் மிதிபட ஆளாகவேண்டும். என்னால் மட்டும் நடக்கும் என நினைப்பதை விட்டு விட்டால் . கெட்டதெல்லாம் எட்ட ஓடிவிடும்.வாழ்துக்கள் கவிசக்கரவர்த்தியே!
நானற்ற நன் முயற்சி
வீனற்று போவதில்லை
நாம்பெற்ற பெருமகிழ்சி
ஊனற்று கிடப்பதில்லை
வீம்பற்ற சமுகம்
தெம்பற்று போவதில்லை
எனது துவா மற்றும் வாழ்த்துகள் தங்களின் அனைத்து நன் முன்னேற்பாடுகளுக்கும்
சிட்னியிலிருந்து மு. அ. ஹாலித்
கவிவேந்தர் சபீர் அவர்கட்கு,
கவியன்பன் கலாம் கூறும் சலாம், அஸ்ஸலாமு அலைக்கும்
வாசிக்கின்ற அளவுக்கோ
நேசிக்கின்ற அளவுக்கோ
இருக்கலாம் அலலது
மறுக்கலாம் சில கவிதைகள்
முதிர்ச்சிப் பெறாக் குழந்தையாக
பதிப்பகத்தாரின் அவசர காலப்
பிரசவமாக - இந்தத் தொகுப்பைப்
பிரசுரம் செய்வதாகத் தோன்றுவதால்
எனக்குள் இப்பொழுதே அச்சம்
மனக்கண்ணில் தோன்றி நடுக்கம்
உங்களைப் போன்றப் புலமைத்
தங்கங்கள் அதனைப் பார்த்து
விமர்சிப்பதும் எனக்கு ஒரு
விமோட்சனமே. இன்ஷா அல்லாஹ்
Post a Comment