Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமீரக வரலாற்றில் AAMF ஒரு மைல் கல்! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 06, 2011 | , ,



வேடந்தாங்கலை நோக்கி வண்ணப் பறவைகள் பல திசைகளிலிருந்து வந்து சேர்வதைப் போல், 30.09.2011 வெள்ளிக் கிழமை மாலை 6.00 மணியளவில் அமீரகத்தின் 7 மாநிலங்களில் வாழும் அதிரையின் 7 முஹல்லாவாசிகளும் துபை-கிஸைஸில் உள்ள கிரஸண்ட் ஆங்கிலப் பள்ளியை நோக்கி புறப்பட்டார்கள். அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் “ADIRAI ALL MUHALLAH FORUM” (AAMF)-ன் முதல் பொதுக்குழு நடக்கும் அரங்கம் முழுவதும் சரியாக 6.30 மணிக்கெல்லாம் அதிரை மக்களால் நிரப்பப்ட்டது. AAMF தலைவர் A. தமீம் அவர்கள் மேடையின் முன் தோன்றி இக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினர்களையும், AAMF-ன் நிர்வாகிகளையும் விழா மேடையில் அமரச் செய்தார்கள். சகோதரர் முகமது மாலிக் அவர்கள் சகோதரர் ஜமீல் முஹம்மது சாலிஹ் அவர்களை இப்பொதுக்குழு அமர்வை தலைமை ஏற்று நடத்தி தர முன்மொழிந்தார். அதனை சகோதரர் பஷீர் அஹமது அவர்கள் வழி மொழிய, சகோதரர் ஹாஃபில் முகமது முகைதீன் அவர்களின் இனிய கிராஅத்துடன் கூட்டம் துவங்கியது. சகோதரர் தாவூத் கனி அவர்களின் வரவேற்புரைக்கு பின், கூட்ட தலைவர் சகோதரர் ஜமீல் முஹம்மது சாலிஹ் அவர்கள் “மனத்தூய்மையின் அவசியத்தையும்” நமதூர் மக்கள் ஒன்றிணைந்து ஒரு தலைமையின் கீழ் செயல்படும்போது தற்போது நாம் சந்திக்கின்ற பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக களைய முடியும் என்பதை வலியுருத்தியும், சகோதரர் சபீர் அவர்கள் AAMF குறித்து எழுதிய கவிதையை வாசித்து தனது தலைமை உரையை முடித்தார்கள்.

அதன்பின் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்புப் பேச்சாளராக அதிரையிலிருந்து அழைக்கப்பட்டிருந்த அதிராம்பட்டினம் காதீர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தற்போதைய அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இயக்குனருமான போராசிரியர் MA அப்துல் காதர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். பேராசிரியர் MA அப்துல் காதர் அவர்கள், நான் துபைக்கு மூன்றாவது முறையாக வந்து உங்கள் முன் உரை நிகழ்த்த நிற்கிறேன். இந்த AAMF-ன் முதல் கூட்டம் சுமார் 1000 அதிரை வாசிகளை ஒரே இடத்தில் பார்க்கிறது, எனக்கு உள்ளபடியே ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி என்னை திக்குமுக்காட வைத்துள்ளது என குறிப்பிட்டார். இக்கூட்டமைப்புக்கான முயற்சி மிகவும் காலதமதமாக மேற்கொள்ளப்பட்ட போதும் மிகக் குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றியைத் தந்திருப்பதாகக் குறிப்பிட்டார். தங்கம் சாதிக்க முடியாத காரியங்களை சங்கம் சாதித்து விடக்கூடிய ஆற்றல் பெற்றது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் எனக் வலியுருத்தினார். கூட்டமைப்புக்காக வடிவமைக்கப்பட்ட 'லோகோ' மற்றும் 'ஒன்று கூடி வளம் பெறுவோம்' என்ற வாசகமும் மிகப் பொருத்தமாக அமைக்கப்பட்டள்ளது எனப் பாராட்டினார்.

துபையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்கியன் முஸ்லிம் அசோஸியேஷன் IMAN அமைப்பைப் போல இந்த கூட்டமைப்பும் சிறந்த சமுதாயப் பணிகளை ஆற்ற வேண்டும். கல்வி, மருத்துவம், அதிரை மக்களின் ஒற்றுமை ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என கூறினார். விஞ்ஞான உலகின் வளர்ச்சி ஓட்டத்திற்கு ஏற்ற வகையில், நமதூர் இளைஞர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதற்கான வாயப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என குறிப்பிட்டார். துபையில் மிகவும் உழைப்புச் செய்து ஹலாலான முறையில் பொருளீட்டும் நமது மக்கள் ஈட்டிய பொருளை நம் சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் செலவு செய்யத் தயங்கக் கூடாது என கேட்டுக் கொண்டார்.

பேராசிரியர் M.A. அப்துல் காதர் அவர்கள், விழாத் தலைவர் ஜமீல் முஹம்மது சாலிஹ் வாசித்தளித்த சகோதரர் சஃபீர் அவர்களின் கவிதையில் மிகவும் ஈர்க்கப்பட்டு மீண்டும் அக்கவிதையை தனக்கே உரிய பாணியில் ஒவ்வொரு வரிகளையும் சபையோருக்கு விளக்கி, அக்கவிதைக்கும், அக்கவிதை எழுதிய சகோதரர் சஃபீர் அவர்களை அறிமுகம் செய்து, அனைவருடைய பாராட்டையும் பெற வைத்து, தனது நீண்ட நேர உரையை முடித்தார்.

பின்னர் சகோதரர். B. ஜமாலுத்தீன் அவர்கள் இக்கூட்டமைப்பு உருவாக உழைத்த சகோதரர்களான - ஏர்லிங்க் தமீம், இப்ராஹீம், VT அஜ்மல் கான், தாவூத் கணி, சபீக், இன்சுரன்ஸ் தமீம், கலாம், ஹக், உமர், அப்துல் வஹ்ஹாப், அப்துல் ஹமீது, தாஜுதீன், ரியாஸ், ஃபிர்தவ்ஸ், சிராஜூதின், ஆகியோரை நன்றியுடன் சபையோருக்கு நினைவு கூறினார்கள். மேலும் இக்கூட்டமைப்பின் துவக்கமும், நோக்கமும் குறித்து விளக்கினார். இக்கூட்டமைப்புக்காக வடிவமைக்கப்பட்ட 'லோகோ' வில் உள்ள ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள 7 கைகளும் நமதூரின் ஏழு முஹல்லாக்கள் என்றும், கைகளைச்சுற்றி வரையப்பட்டுள்ள 21 நட்சத்திரங்கள் 7 முஹல்லாக்களின் 21 வார்டுகளை குறிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளதை விளக்கி இப்பொதுக் குழுவின் 5 தீர்மானங்களை வாசித்து தனதுரையை முடித்தார்.

மேலும் சகோதரர் SMA ஷhகுல் ஹமீது அவர்கள் 'சமுக சேவையின் அவசியம்' வலியுருத்தி பேசினார். சகோதரர் A. சாகுல் ஹமீது 'இக்கூட்டமைப்பு கட்டமைப்பதும், மேன்மைபடுத்துவது' குறித்து கருத்துரை வழங்கினார். சகோதரர் S. அபுல் காலம் அவர்கள் 'உளத்தூய்மை உருவாக்கும் ஒற்றுமை' என்பது பற்றியும், சகோதரர் A. அஹமது அஸ்லம் 'இக்கூட்டமைப்பின் அவசியம்' பற்றியும் மற்றும் சகோதரர் மீரா முகைதீன் 'நமது ஒற்றுமை' குறித்து கருத்துரைகள் வழங்கினர்கள். நேரமின்மை காரணமாக, மக்களின் கருத்து கேட்கும் நிகழ்வு நடத்த முடியாமல் போனது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இப்பொதுக்குழுவின் ஹைலைட் நிகழ்வாக, அமீரகத்தில் செயல்படுகிற அதிரை அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகளையும், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகளையும் சகோதரர் சஃபிக் அஹமது அவர்களால் சபையோருக்கு அறிமுக செய்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக புகைப்படம் எடுத்த Global Advertising நிறுவனத்தின் இரட்டை சகோதரர்கள் Asif & Adil இருவருக்கும், ஒளிப்பதிவு செய்த சகோதரர் தாஜுதீன் மற்றும் இப்பொதுக்குழு நிகழ்வை கானொலியாக காண நேரடி ஒளிப்பரப்புக்கு உதவிய அதிரை பிபிசி மற்றும் அதிரை நிருபர் வலைப்பூ இயக்குநர்களுக்கும் பேராசிரியர் M.A அப்துல் காதர் அவர்கள், நன்றி கூற, இப்பொதுக்குழு கூட்டம் துஆ வுடன் இனிமையாக முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம 1:
அமீரகம் வாழ் அதிரை அனைத்து முஹல்லா சகோதர்களும் ஒன்றிணைந்து, “அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு” ஏற்படுத்தியுள்ளது போன்று தாயகத்திலும் நமதூர் அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகளும் ஒன்றுகூடி 'அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு' என்ற பெயரிலேயே உருவாக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு சார்பாக வேண்டுகோல் வைக்கிறோம்.

தீர்மானம் 2:
தற்போது நமதூரில் இரவு நேரங்களில் நோய் ஏற்படுகிறவர்களுக்கு முதல் உதவி வழங்குவதற்கு எவ்வித ஏற்பாடுமின்றி மக்கள் சிரமங்களை சந்திக்கிறார்கள். நமதூரில் உருவாகிற அ.அ.மு.கூ-ன் மூலம் நமதூரில் மருத்துவம் பணி செய்துவரும் டாக்டர்கள் அனைவரையும் ஒருகிணைத்து, மக்கள் படும் சிரமங்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு: சூழற்சி முறையில் டாக்டர்களில் ஒருவருடைய மருத்துவமனை மற்றும் ஒரு மெடிக்கலும் 24 மணி நேர சேவை செய்ய வலியுத்த வேண்டுமென ஆலோசனையாக தெரிவத்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 3:
ஷிஃபா மருத்துவமணை நமதூர் பொது மக்கள்களிடமும், வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்களிடமும், பொது வசூல் செய்து துவங்கப்பட்டது. அதற்கு அமீரகம் வாழ் நமதூர் சகோதரர்களில் பலர் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக அளித்தார்கள். ஆனால் ஷிஃபா மருத்துவமணையின் தற்போதைய செயல்பாடுகளும், அங்கு நிலவுகிற சூழ்நிலைகளும் எங்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது. நமதூர் மக்களுக்கு அனைத்து வகை மருத்துவத்திற்கும் பயன்படும் வகையில் அம்மருத்துவமணையை மேன்மைப்படுத்த அ.அ.மு.கூ-பின் அதிரை நிர்வாகம் முழு கவனம் செலுத்த இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் 4:
நமதூதில் தக்வா பள்ளி அருகிலுள்ள மார்கெட்டில் உள்ள கடைகளிலிருந்து மிக குறைந்த வாடகை வசூலிக்கப்படுவதாகவும், ஆனால் மீன் மார்கெட்டில் விற்கப்படுகிற மீன் விலையோ தமிழகத்தில் எங்கும் இல்லாத விலை விற்கிறார்கள் என்றும் அமீரகம் வாழ் நமதூர் மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். அதுபோன்று ஆட்டுக்கறி மற்றும் கோழிக் கறி விற்பனை செய்யும் கடைகளில் அறுக்கப்படும் ஆடுகளும், கோழிகளும் மார்க்கம் வலியுருத்துகிற முறை பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிற சூழ்நிலை அங்கு நிலவுவதாக பலர் தெரிவிக்கிறார்கள். மீன் மார்கெட்டில் உள்ள கடைகளின் வாடகையை உயர்த்துவதற்கும், மீன், ஆட்டுக் கறி, கோழி கறி ஆகிவைகளின் விலையை குறைப்பதற்கும், ஆடு,மாடு,கோழி அறுப்பதற்கும் ஒரு சீரான முறையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள அ.அ.மு.கூ-பின் அதிரை நிர்வாகத்தை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5:
அமீரகத்தில் வாழ்கிற நமதூர் சகோதரர்களில் பலர், 15 வருடங்களுக்கு மேல் இங்கு பணிகள் செய்து அவர்களோடு கூட பிறந்த சகோதரரிகளின் திருமணத் தேவையை பூர்த்தி செய்வதற்கே எங்களுடைய முழு வாழ்க்கையை களித்துவிட்டோம். ஆனால் நாங்கள் திருமண செய்து சந்தோசமாக வாழ வழியில்லாத சூழ்னிலை நமதூரில் நிலவுவதை பலர் எண்ணி கண்ணீர் சிந்துகிறார்கள். அதுமட்டுமின்றி இதனால்தான் நமதூரில் விற்கப்படுகிற மனைகட்டுகளின் விலை தமிழ்நாட்டில் எங்குமில்லாத விகையில் தாருமாராக உயர்வதற்கு காரணங்களாக உள்ளது. தயவு செய்து இஸ்லாம் வலியுருத்துகிற துளிகூட பெண் வீட்டாரிடத்திலிருந்து வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை இல்லாத, மஹர் கொடுத்து திருமணம் செய்யும் முறையை, நமதூர் அனைத்தது முஹல்லா சங்க நிர்வாகிகளும் போர்கால அடிப்படையில் ஒவ்வொரு முஹல்லாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என இப்பொதுக் குழு சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு: நமதூரில் வீட்டு மனைகள் விற்பனை செய்யும் முகவர்களிடம் அ.அ.மு.கூ-ன் சார்பாக மனைகளின் விற்பனை விலையை கட்டுக்குள் வைக்க கேட்டுக் கொள்ள வேண்டுகோள் விடுக்கவும்.

நிர்வாகம்
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக
அமீரகம்
+971 50 748 0023 / +971 55 4011 344

3 Responses So Far:

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

இந்தப் பக்கத்தைத் திறக்கும் போது http://quranflash.com பக்கமும் பக்கத்தின் மேலேயே லோட் ஆகி பாதி பல பத்திகளை மறைத்துக் கொள்கிறது,

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அன்புச் சகோதரர் அஹ்மத் ஆரிஃப் அவர்களுக்கு:

தாங்கள் சுட்டிக் காட்டியிருந்ததை தற்காலிகமாக மறைத்து வைத்திருக்கிறோம், இன்னும் கொஞ்சம் மெருகேற்றி விரைவில் பதிந்திடுவோம் இன்ஷா அல்லாஹ் !

ஜஸாக்கலலஹ் ஹைர் !

Yasir said...

நல்ல துவக்கம்..நலமாக செல்ல நாம் அனைவரும் உண்மையாக உழைக்க வேண்டும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு