Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அந்தக்கால மனுசரும், இந்தக்கால (பேரப்)பிள்ளைகளும்..! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | October 02, 2011 | , ,

அப்பா : (ஊரில் வயது முதிர்ந்த ஆண்கள் அனைவரும் அப்பாக்கள் தான்) அஸ்ஸலாமு அலைக்கும். என்னடா பேராண்டியல்வொளா? எங்கடா போரியல்வோ? 


பேராண்டி : வலைக்குமுஸ்ஸலாம்....என்னா அப்பா, நீங்க எங்கையாவது கெளம்பும்போது எங்க போரியண்டு கேட்டா? ஒடனே பொசுக்குண்டு கோவம் வந்து போகும் பொழுது எங்க போரியண்டு கேக்கக்கூடாதுண்டு சொல்லுவியெ? நீங்க மட்டும் இப்புடி கேக்குறது ஞாயமா? 


அப்பா : அட படுவா...அப்பாகிட்டெயேக்கேள்வி கேக்குறியா? எல்லாம் உன் வாப்புச்சாவூட்டு அப்பா மாதிரியே ஈக்கிறியெடா.....அவனத்தான் உறிச்சி வச்சிக்கிது ஒனக்கு..... 


பேராண்டி : ஆமாம்மா, நம்ம எதாச்சும் கேட்டா எதையாவது சொல்லி மழுப்பி உட்ற வேண்டியது நல்ல தீந்த அப்பா தான் நீங்க போங்கெ.... 


அப்பா : பேராண்டி,அது என்னாடா தலையெ சுத்தி முடியெ கம்மியா வெட்டி நெத்திக்கு மேல மட்டும் கொஞ்சம் பில்லு மொளச்ச மாதிரி  நட்டிக்கிட்டு ஈக்கிதே அது என்னா ஸ்டைலு வாப்பா? 


பேராண்டி : அட போங்கப்பா நீங்க ஒன்னு, அந்த காலத்துலெ காதெ மறச்சி ஹிப்பி வச்சிக்கிட்டு மினுமினுக்கும் எரும நாக்கு காலரு வச்ச சட்டெயெ போட்டுக்கிட்டு தலையிலெ கப்பல் மாதிரி ஒரு தொப்பியெயும் போட்டுக்கிட்டு காதுக்குள்ள அத்தர் தடவுன பஞ்செ சொருகி வச்சிக்கிட்டு இங்கெ வந்து நிக்க சொல்றியளாக்கும்? இந்த ஸ்டைலுக்கு "ஸ்பைக்"குண்டு பேருப்பா... 


அப்பா : அட படுவா ஸ்பைக்காவது பைக்காவது.......அந்த காலத்து எங்க ஸ்டைலைப்பத்தி கொற சொல்ல வந்துட்டியா? அந்த காலத்துலெ இருந்த சந்தோசமும், உடல் ஆரோக்கியமும், குடும்ப ஒத்துமையும், பெரியவங்களெ மருவாதெ கொடுக்குறதும், வீண் வம்புதும்புகள் இல்லாமல், ஹராம் ஹலால் பேணும் நன்னடத்தையும் இந்த காலத்துலெ கண்மாசியாக்காணோமடா... 


பேராண்டி : அப்பா, நீங்க கொடுத்து வச்ச ஆளு தான் போங்கெ....அந்த காலத்தையும் பார்த்து என்ஜாய் பண்ணிட்டு இந்த காலத்தையும் பார்த்து எங்களோட என்ஜாய் பண்ணிக்கிட்டு ஈக்கிரியெ....எங்கள்வொளுக்கு தான் அந்த காலத்தை பாக்க நசீபு இல்லாம போயிரிச்சி... 


அப்பா : அதுக்கு என்னா வாப்பா இப்போ? இந்த காலத்துலெ என்ஜாய் பண்ணிக்கிட்டு ஈக்கிற நீ....நாளை வருங்காலத்துலெ உன் பிள்ளை,பேரப்பிள்ளைகளிடம் இந்த காலத்தெ பத்தி என்னமாதிரி சொல்லிக்கிட்டு திரியமாட்டியா? 


பேராண்டி : என்னா அப்பா நா எதையோக்கேக்குறேன் நீங்க பாட்டுக்கு எங்கெங்கையோ போரியளே? இவ்ளோ பேசுரியளே உங்களுக்கு தண்ணியிலெ நீச்ச அடிக்க தெரியுமா?  


அப்பா : என்னா பேராண்டி இப்புடி கேட்டுப்புட்டா? நான்னெல்லாம் கொளம், ஏரியிலெ குளிக்க குதிச்சிட்டா கரை ஏற நாலு, அஞ்சு மணி நேரம் ஆவும். இந்த கரைலேர்ந்து அந்தக்கரைக்கு நீந்தி எத்துனமட்டம் போயிட்டு வருவோம் தெரியுமா? இப்பொ உள்ள புள்ளையல்வொளுக்கு தான் கொளம், ஏரியிலெ நீச்சல் அடிச்சி குளிக்க நசீபு இல்லாம போயிரிச்சி... அதுனாலெ வெள்ளம் வந்து இல்லாட்டி தண்ணியிலெ தவறி உழுந்துட்டா கூட அவங்களெ அவங்க காப்பாத்திக்கிட முடியாம போவுது பாத்தியா? இப்படி ஈக்கிம் பொழுது தண்ணியிலெ கண்ணு முன்னாடி உழுந்து தத்தளிக்கிறவங்களெ தண்ணியிலெ ஒடனே குதிச்சி எப்படி அவங்கள்னாலெ காப்பாத்த முடியும் சொல்லு? 


பேராண்டி : ஆஹா...அப்பாட்டெ தொடர்ந்து பேசுனா இன்னும் நெரையா விசயத்தை உருவலாம் போல தெரியுதே??? 


அப்பா : அதெ யான் கேக்குறா பேராண்டி? அந்த காலத்துலெ வீட்டு பெரியவங்கள்ட கைப்பக்குவத்துலெயும் நாட்டு மருந்து சிகிச்சையிலும் தான் குடும்பத்துக்கே வைத்தியம் நடக்கும். ஆஸ்பத்திரி எல்லாம் கெடையாது ரொம்ப முடியமெ தொண்டைக்கும் வாய்க்கும் இழுத்துக்கிட்டு கெடந்தான் தான் டாக்டர்ட்டெ போவோம். இக்ராமு டாக்டர்ண்டு நம்மூர்லெ ஆரம்பத்துலெ ஒரு வைத்தியர் இருந்தாரு. அவர்ட்டெ போயி காம்ச்சி ஒரு ஊசி போடுவோம். அவ்ளோதான் சரியாயிடும். 


பேராண்டி : அப்பொ ஆஸ்பத்திரி செலவு இல்லாமெ காலத்தெ ஓட்டிட்டியண்டு சொல்லுங்க...அது அந்த காலம் அப்பா. இப்பொ பாத்தியளா? புள்ளையல்வொளுக்கு கொசு கடிச்சிட்டா கூட ஆஸ்பத்திரிக்கு கொண்டுக்கிட்டு ஓடனுமா ஈக்கிது.....நம்மளெ ஊட்லெ கொசு புடுங்குது அங்கெ ஆஸ்பத்திரியிலெ செலவு புடுங்குது. ரெண்டுக்கு நடுவுலெ என்னா பண்றதுண்டு தெரியலெ அப்பா? அதுனாலெ தான் உங்க அந்த காலத்தெ பாக்க நசீபு இல்லாமே போயிடுச்சுண்டு சொன்னேன். 


அப்பா : இன்னொ ஒன்னு சொல்றேன் கேட்டுக்கொ..முன்னாடி நம்ம ஊரை சுத்தி நெல்லு வெளயும் வயக்காடு பச்சபச்சேண்டு இருக்கும். மழைக்காலங்களில் வயல் வரப்புகளில் வெள்ளவெள்ளேண்ட கொக்குஒலும், சின்னசின்ன கொசு உள்ளான்களும், பொட்டிமடையானும் கூட்டம் கூட்டமாக வந்து மேயும். மழை உட்டதும் நாங்க தோழன்களுடன் சைக்கிளில் அங்கு போய் அந்த அழகான இயற்கையின் கண்கொள்ளாக்காட்சிகளை கண்டு ரசிப்போம்டா. இப்பொ எல்லா வயக்காடும் வீடுகளாகிகிட்டு வருது. கொக்கு குருவிகளின் வரத்தும் கொரஞ்சி போச்சி. 


பேராண்டி : அப்பா நீங்க சொல்றது நெசமாவா? ஏதோ டிவியிலெ நேசனல் ஜாக்ரஃபி சேனல் பாக்குற மாதிரியில்லெ ஈக்கிது நீங்க சொல்றதெ பாத்தா... 


அப்பா : அது மட்டுமில்லெ பேராண்டி...இன்னும் நெறையா ஈக்கிது...தண்ணி ஓடும் சிறு ஓடையிலெ வேட்டிய மடிச்சி புடிச்சிக்கிட்டு மீன் பிடிப்போம். செல நேரம் அதுலெ சின்ன தண்ணி பாம்பு கூட ஆப்புடும். பயப்புடாமெ அதை புடிச்சி வெளயாடுவோம். ஊட்லெ மண் குடுவையில் செஞ்செ உண்டியல்லெ அப்பஅப்ப கெடைக்கும் அஞ்சு காசு, பத்து காசுகளை போட்டு சேத்து வச்சி அது நெரஞ்சதும் அதை சந்தோசமாக ஒடைச்சி கடையிலெ போயி வேண்டிய சாமான்கள் வாங்கி திண்போம்.... 


பேராண்டி : அப்பா நீங்க சொல்றதெ பாத்தா சமீபத்துலெ வந்த ஆட்டோ கிராஃப் படமே தோத்து போயிடும் போல ஈக்கிதே? 


அப்பா : அட படுவா....என்னடா ஆட்டோகிராப்பாவது போட்டோ கிராப்பாவது...எங்க காலத்துலெ அனுபவிச்சதெ தானே கொஞ்சம் கொஞ்சமா படத்துலெ போட்டு காம்ச்சி நல்லா காசு பாக்குறானுவோ...... 


பேராண்டி : பெரிய டைரக்டரையே உங்க கிட்ட வந்து கதெ கேக்க வச்சிரிவியெ போல ஈக்கிது? 


அப்பா : பேராண்டி கொஞ்சம் உட்டா ஏதாவது படத்துலெயெ அப்பாவெ நடிக்க வச்சிடுவா போல ஈக்கிதே....அதெல்லாம் வாணான்டா வாப்பா..நம்மலுக்கு அல்லாஹ் கொடுத்த வாழ்க்கையை சப்தமில்லாமெ ஹலாலான முறையிலெ அனுபவிச்சிட்டு நல்லபடி யாருக்கும் தொந்தரவு இல்லாம வாழ்ந்துட்டு கலிமாவோடெ கடைசியிலெ போயி சேர வேண்டியது தான் நமக்கு முக்கியமும் என்னடெ பேராசையும். அது தான் நமக்கு நெசமா கை கொடுக்கும் பேராண்டி. 


பேராண்டி : அப்பா, ரொம்ப நேரம் உங்க அந்த கால வாழ்க்கை சம்பவங்களை எங்களுக்கு சொல்லி காமிச்சி கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிப்பாட்டி உள்ளத்தெ குளிர வச்சிட்டியெ...தெடல்லெ பயல்வொ ஆட்டத்தை ஆரம்பிச்சிடுவானுவொ வர்ரேன்ப்பா...இன்ஷா அல்லாஹ் இன்னொரு தடவை உங்களெ பாக்கும் போது பாக்கி உள்ள மத்த விசயங்களைப்பத்தியும் சொல்லுங்க அதையெல்லாம் சேகரிச்சி அதிரை நிருபர்ண்டு சொல்லி கம்ப்யூட்டர்லெ நம்மூர்க்குண்டு ஒரு இணையதளம் (இணைய தளம்ண்டா உங்களுக்கு புரியுதோ இல்லையோ தெரியலெ அப்புறம் உங்களுக்கு வெளக்கமா சொல்றேன்)ஈக்கிது அதுக்கு இந்த செய்தியல்வொளெ அனுப்புனா உங்க சங்கதிகளை ஒலகத்துலெ ஈக்கிற நம்ம புள்ளெயல்வோ எல்லாரும் கம்ப்யூட்டர்லெயே படிச்சிட்டு அவங்க கருத்தையும் சொல்லுவாங்க. அதை அப்படியே உங்கள்ட்டெ வந்து சொல்றேன் சரியா? வரட்டுமாப்பா..... 


அப்பா : பாத்து வெளையாடு வாப்பா....கீழே உழுந்து காலுகிலெ ஒடச்சிக்கிடாதெ....உம்மா திட்டுவா... வாப்பாவும் ராத்தாக்கு ஊடு கட்டிக்கிட்டு ஈக்கிறான் அவனுக்கும் காசுபணம் நெரையா வேனும்..பாத்துப்போ பேராண்டி..... 


பேராண்டி : சரிப்பா....நீங்களும் ஊட்டுக்கு பாத்துப்போங்க வழியிலெ கானு வெட்டி போட்டிக்கிறானுவொ....வலுக்கிகிட்டி கீழே உழுந்துறாதியெ...

திடீரென உருவான அப்பா பேரன் உரையாடல் கட்டுரை இது. படிச்சிட்டு பின்னூட்டத்தில் சொல்லுங்க எப்புடி இருந்திச்சிண்டு....

- மு.செ.மு. நெய்னா முஹம்மது

10 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மண்வாசனையுடன் எழுத்தில் இழுத்து உள்ளிழுக்கும் MSM(n) தனி நடைதான் என்றுமே !

//பாத்து வெளையாடு வாப்பா....கீழே உழுந்து காலுகிலெ ஒடச்சிக்கிடாதெ....உம்மா திட்டுவா... வாப்பாவும் ராத்தாக்கு ஊடு கட்டிக்கிட்டு ஈக்கிறான் அவனுக்கும் காசுபணம் நெரையா வேனும்..பாத்துப்போ பேராண்டி..... //

எப்போதான் MSM(n) ஊடு கட்டுற வேலை முடியும் ?

Yasir said...

நல்லா இருந்துச்சு சகோ.நெய்னா முகம்மது..அதிரை தமிழில் அழகாக, ஒவ்வொரு உரையாடலிலும்...சமுதாய சிந்தனை ஓங்க எழுதி இருக்கிறீர்கள்

அப்துல்மாலிக் said...

உனக்கே உரிய பாணி, நீ கலக்குப்பா...

Shameed said...

அப்பப்பா என்னப்பா இது ஒரே அசத்தலப்பா

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சூப்பரா இருந்துச்சுப்பா!
ஏம்ப்பா நீங்க அப்பொ ஓட்டுலெ நிக்கிம்போது ஒருஆளுதானே எதிரா இருந்தாங்கொ இப்பொ எல்லாரும் அவொவொ போட்டியா நிக்கிறாங்களே யாம்ப்பா. அது எதுக்கு பதவி ஆசையா இல்லெ, அங்குட்டு சம்பாரிக்க வழி எதுவும் இருக்கா சொல்லுங்கப்பா. நானும் பெரிசாபோயி நிக்கலாமா அப்பா!

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------

அபுஇபுறாஹீம் சொன்னது…

\\எப்போதான் MSM(n) ஊடு கட்டுற வேலை முடியும் ? \\

மு.செ.மு.நெய்னா ப‌தில் சொல்வது....

உன்ன‌த‌ மார்க்க‌த்தில் இருந்து கொண்டு கொஞ்ச‌மும் பொறுப்பில்லாம‌ல் திருந்த‌ அட‌ம்பிடிக்கும் அர‌க்க‌ர்க‌ள் இருக்கும் வ‌ரை ந‌ம்மூரில் வீடு க‌ட்டும் வேலை ஒரு போதும் ஓய‌ப்போவ‌தில்லை.......

அப்துல்மாலிக் said...

//உன்ன‌த‌ மார்க்க‌த்தில் இருந்து கொண்டு கொஞ்ச‌மும் பொறுப்பில்லாம‌ல் திருந்த‌ அட‌ம்பிடிக்கும் அர‌க்க‌ர்க‌ள் இருக்கும் வ‌ரை ந‌ம்மூரில் வீடு க‌ட்டும் வேலை ஒரு போதும் ஓய‌ப்போவ‌தில்லை.......//

நெத்தியடி நெய்னா...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
நண்பர் நைனா பூந்து விளையாடி இருக்கார். எப்பவுமே அதிரையைப்பற்றித்தான் சிந்திப்பாருன்னு நினைக்கிறேன். அப்படியே அதிலேயே ஊரிபோய்ட்டார் மனுசன்.அனாவசியத்துக்கு ஊர் வழக்குச்சொல் இப்படி கையாளுறாரே எப்படி? ஆனாலும் சிறுதகவல். அப்பாவின் சின்ன அகவலில் காசு புழக்கத்தில் இல்லை "அனா"இருந்ததா கேள்வி ஆனா நைனாவுக்கு தெரிந்திருக்கும் இதுல நம அறிவு பூஜ்ஜியம்தாம்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------

“உன் வாப்புச்சாவூட்டு அப்பா மாதிரியே ஈக்கிறியெடா..... மோயினப்பாவத்தான் உறிச்சி வச்சிக்கிது ஒனக்கு...!” உம்மாவூட்டு அபுல்ஹசன் அப்பா.

-வாவன்னா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு