Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உள்ளாட்சி ஊர்வலம் ! 28

அதிரைநிருபர் பதிப்பகம் | October 13, 2011 | , ,


தேர்தல் திருவிழா
தெருவில் பிறர்
காலில் விழாத தலைவரா?

வாக்குறுதி கொடுப்பது
பின்
வாக்கு உறுதி ஆகுமா?

உங்கள் வீட்டுப் பிள்ளை
நாளை
நம்மூருக்கேத் தொல்லை

போடுங்கம்மா ஓட்டு
பின்
என் ஓட்டுவீடு
மாடி வீடாக்கப் பார்த்து

ஏழையின் சிரிப்பினில்
இறைவனைக் காண்போம்
என
சொல்லி ஓட்டு கேட்டார்
இனி
ஏழை எங்கே சிரிக்க
தலைவருக்கு ஓட்டு போட்டால்?

ஜனநாயகக் கேள்வி:
தேர்தல் திருவிழா
முடிந்ததும்
மக்கள் தெருவிலா?

- Crown

28 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

//தேர்தல் திருவிழா
முடிந்ததும்
மக்கள் தெருவிலா?//

To Brother CROWN

இந்தக்கேள்வியை கேட்க நீங்கள் ஞானியாக இருக்கவேண்டும் , அல்லது குழந்தையாக இருக்க வேண்டும்...இல்லாவிட்டால் இந்தியாவில் பிறக்காமல் , இந்தியாவுக்கே வராத , இந்தியாவை டெலிவிசனில் கூட பார்த்திராத மனிதனாக இருக்க வேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//போடுங்கம்மா ஓட்டு
பின்
என் ஓட்டுவீடு
மாடி வீடாக்கப் பார்த்து//

அதிரைக்கு பொருந்தாதே !

ஊருக்கா போறீய !?
யாருக்கு போடுவிய !?

ஓட்டைத்தான் பிரிக்கிறாங்க !
கோட்டைவிட போறாங்க !

ஓட்டு வேட்டையாம்
தெருவெல்லாம் சேட்டையாம் !

குட்டைகள் குழம்புது !
அரசியலும் அடுப்படியிலே !

யார்தான் செய்யவில்லை அரசியல் !??

கிரவ்ன் உன்னோட ஊர்வலத்தில் வழியில் இணைந்து கொண்டேன்(டா)ப்பா !

Shameed said...

கவிதை சிரிதா இருந்தாலும் காரம் கூடுதலப்பா நெடி தலைக்கு ஏறுது

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

யாருக்கு ஒட்டளிப்பது என்பதில்
குழப்பமான மனதில்
ஆட்டு மந்தையான மக்கள் கூட்டம்!

யார் வந்தாலும் ஒன்றும் நடக்காது
என்ற வெறுப்பில்
ஓர் கூட்டம்!

பரிசுத்தம் எங்கே!
எங்கே! எங்கே!
தேடுகின்றது ஓர் கூட்டம்!

திருவிழா முடிந்ததும்
யாரையும் அருகில்
சென்று கூட பார்க்க முடியாது
என்ற தவிப்பில் ஓர் கூட்டம்!

///ஜனநாயகக் கேள்வி:
தேர்தல் திருவிழா
முடிந்ததும்
மக்கள் தெருவிலா?///

இது உண்மையாக இருக்கக்கூடாது!

தெருவும் - மக்களும் நலம் பெற வேண்டும்!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அபு இபுறாகிம் காக்காவின் குசும்புக்கு இந்த கவிதை?யும் ஒரு உதாரணம்.வழக்கமா சாட் செய்யும் போது தம்பி இப்ப இத பத்தி சொல்லு அத பத்தி சொல்லுன்னு கேட்பாங்க உடனே நானும் நாலு.ஐந்து வரியில் இப்படி எழுதுவதுண்டு. அவர்களும் பல வரிகள் இப்படி எழுதுவார்கள் இப்படி போகும் எங்கள் உரையாடல்.இப்படி எத்தனையோ உடனே நாங்கள் இயற்றியது ஏராளம் ஆனாலும் இப்ப உள்ளாட்சியை பற்றி நீண்ட கவிதை அனுப்பு என சொன்னார்கள். நான் சொன்னேன் நேரம் இல்லை, சபிர் காக்காவிடம் கேளுங்கள். நானும் சபாத்திடம் கேட்டேன் ஆனால் தீடீரென இதை பதிந்துள்ளார்கள்.இது நான் எதிர்பார்க்காத செல்ல அதிர்ச்சி! நன்றி! மிகச்சில வரிகள் பிழை இருப்பின் மன்னித்துக்கொள்ளுங்கள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அருகில் உள்ள கானவில்லை பையனை கண்டுபிடிக்க வல்ல அல்லாஹ்விடன் அனைவரும் பிராத்திப்போமாக. ஆமீன்.(இந்த வேண்டுகோளை விட இந்த கருத்து பகுதியை உபயோகிப்பதைத்தவிர எனக்கு வேறு வழித்தோன்றவில்லை).

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// நான் சொன்னேன் நேரம் இல்லை, சபிர் காக்காவிடம் கேளுங்கள். நானும் சபாத்திடம் கேட்டேன் ஆனால் தீடீரென இதை பதிந்துள்ளார்கள்.இது நான் எதிர்பார்க்காத செல்ல அதிர்ச்சி! நன்றி! //

அட ! கிரவ்னு: இன்னும் காலம் தாழ்ந்திடவில்லை ! ஷஃபாத்தையும் அழைத்துக் கொண்டு வா இந்த ஊர்வலத்தில் சேர்ந்திட(த்தான்) ஒரு ஓட்டுக்கு சென்னையிலிருந்து வர ஏதோ கொடுக்கிறாங்களாமே ! ஓ பஸ்டிக்கெட்டாமே... நமக்கு ஏதாவது கிடைக்குமா ? :)

sabeer.abushahruk said...

சிலபல வேலை பளுவால் கிரவுனின் கவிதைக்கு இன்றிரவு விமரிசிக்க அனுமதி அளிக்கவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//விமரிசிக்க அனுமதி அளிக்கவும். //

அப்படியே ஆகட்டும் !

ஊர்வலத்தில் கரு
கலைந்திடாமல்
கவனமாக
செல்லட்டும் !

sabeer.abushahruk said...

வாக்குறுதி மட்டும்தான் இப்பவெல்லாம் மிக மிக சுலபமாகக் கிடைக்கிறது. செலவில்லாதது என்பதால் எல்லோரும் தந்துவிடுகிறார்கள்.

ஒரு காலமிருந்தது. சிறுசோ பெரிசோ நிறைவேற்ற முடியாத எந்த ஒரு வாக்குறுதியையும் யாரும் கொடுக்க மாட்டார்கள்.

அவர்களே தொண்டு செய்ய விரும்பியத் தலைவர்கள். இன்று??

அதிரை என்.ஷஃபாத் said...

போன வார ஆனந்த விகடன்ல படிச்சது..
"ஊர்-ல உள்ள பொய்யெல்லாம் 'அன்புள்ளம் கொண்ட வாக்காளர் பெருங்குடி மக்களே'-ன்னு தான் ஆரம்பிக்குது'"

Yasir said...

கிரவுனின் அரசியல் அட்டகாச கவிதை...ம்ம்ம்ம் அசத்துங்க மொழி பல்கலைக்கழகமே....என் ஓட்டு உங்களுக்குதான்..ரசித்து ருசித்த வரிகள்
//
தேர்தல் திருவிழா
முடிந்ததும்
மக்கள் தெருவி
//

crown said...

அதிரை என்.ஷஃபாத் சொன்னது…

போன வார ஆனந்த விகடன்ல படிச்சது..
"ஊர்-ல உள்ள பொய்யெல்லாம் 'அன்புள்ளம் கொண்ட வாக்காளர் பெருங்குடி மக்களே'-ன்னு தான் ஆரம்பிக்குது'"
--------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இப்படித்தான் லாட்டரி சீட்டு விற்பவர் கூப்பாடு நாளைய லட்சாதிபதி நீங்கலாக இருக்க.( நீங்கலாக=உங்களைத்தவிர).ஹஹஹஹ்ஹ அரசியல் வாதியின் வாக்கும் இப்படித்தான்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஓட்டிலும் லூட்டியா? Mr க்ரவ்ன்.

தாய்மார்களின் சின்னம் ...
போடுங்கம்மா ஓட்டு...
இப்படித்தான் கேட்கிறது.

தந்தைமார்களை புறக்கணிப்பது ஏனோ! வார்த்தை ஒதுக்கீடு கிடையாதா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நாளைய இலட்சாதிபதி நீங்களாக இருக்கலாம் ! = இலட்சாதிபதி நீங்கலாக(வும்) இருந்திடலாம் ! = ரசித்தேன் !

Yasir said...

///இப்படித்தான் லாட்டரி சீட்டு விற்பவர் கூப்பாடு நாளைய லட்சாதிபதி நீங்கலாக இருக்க.( நீங்கலாக=உங்களைத்தவிர).//

புயர த்தை
உயர வைக்கும் மொழிஞானம்

sabeer.abushahruk said...

கிரவுனின் கவிதைகள், மனிதனின் குழந்தைகள்போல சிறியதாக எழுதப்பட்டாலும் வாசிக்க வாசிக்கத்தான் வளர்ந்து விசுவரூபமெடுக்கின்றன.

இதுவும் அந்த ரகம்தான்.

//போடுங்கம்மா ஓட்டு
பின்
என் ஓட்டுவீடு
மாடி வீடாக்கப் பார்த்து//

தற்கால அரசியலை வெட்ட வெளிச்சமிடும் வரிகள்

sabeer.abushahruk said...

//இப்படித்தான் லாட்டரி சீட்டு விற்பவர் கூப்பாடு நாளைய லட்சாதிபதி நீங்கலாக இருக்க.( நீங்கலாக=உங்களைத்தவிர).//

புருவத்தை
உயர வைக்கும் மொழிஞானம்

அமோதிக்கிறேன் யாசிர்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

//இப்படித்தான் லாட்டரி சீட்டு விற்பவர் கூப்பாடு நாளைய லட்சாதிபதி நீங்கலாக இருக்க.( நீங்கலாக=உங்களைத்தவிர).//

புருவத்தை
உயர வைக்கும் மொழிஞானம்

அமோதிக்கிறேன் யாசிர்.
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பின் சொந்தங்களே! என் மேல் கொண்ட அன்பின் வெளிப்பாடே இது. அல்லாஹ் அக்பர். எல்லா புகழும் அல்லாஹுக்கே.
மொழியை விழியாக நினைப்பதாக பலர் உலரல் கேட்டு இருக்கிறேன். இங்கு விழிக்கும் மேலே உள்ள புருவம் உயர்ந்ததாய் சொன்ன விதம் புதிய கோணம்.

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

நல்ல வேளை, படத்தில் உள்ளதை தேர்தல் சின்னமாகக் கொடுக்காமல் இருந்தார்களே!
-வாவன்னா

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

என் இனத்தாரே ஓட்டைப் பிரித்தார்கள்!
இன்று என் வீட்டில்
வெயிலடிக்கிறது!
மழை நீர் கொட்டுகிறது!
மின்னல் கண்ணைப் பறிக்கிறது!
இடி முழக்கம் காதைத் துளைக்கிறது!
நானோ வீடின்றி!
என் எதிரியோ மாடி வீட்டில் !
-வாவன்னா

Adirai khalid said...

ஊரின் தற்போதைய நடப்பின் காரணமாக மடித்து வரையப்பட்ட கவிதை
வெளிநாட்டு வாக்காளர்களை மனதை நெருடி சென்றுள்ளது

படித்ததில் பிடித்தது
///தேர்தல் திருவிழா
முடிந்ததும்
மக்கள் தெருவிலா?///

தற்போதைய முக்கிய செய்தி செய்தி :

ஆட்டுமந்தை சின்னம் "அதிரையின்" தேசிய சின்னம் ஆகையால் வேட்பாளர் யாருக்கும் ஒதுக்கவில்லை என்று தேர்தல் சின்னம் வருத்ததுடன் அறிவித்துள்ளது

sabeer.abushahruk said...

//ஏழை எங்கே சிரிக்க
தலைவருக்கு ஓட்டு போட்டால்?/

அதுமட்டுமல்ல. மக்கள் பிழைப்பை சிரிப்பாய் சிரிக்கவேற அல்லவா வைத்துவிடுகிறார்கள்

sabeer.abushahruk said...

//ஆட்டுமந்தை சின்னம் "அதிரையின்" தேசிய சின்னம் ஆகையால் வேட்பாளர் யாருக்கும் ஒதுக்கவில்லை என்று தேர்தல் சின்னம் வருத்ததுடன் அறிவித்துள்ளது//

ஹாஹாஹாஹா (ச்சே வேதனை வேதனை)

crown said...

sabeer.abushahruk சொன்னது…

//ஆட்டுமந்தை சின்னம் "அதிரையின்" தேசிய சின்னம் ஆகையால் வேட்பாளர் யாருக்கும் ஒதுக்கவில்லை என்று தேர்தல் சின்னம் வருத்ததுடன் அறிவித்துள்ளது//

ஹாஹாஹாஹா (ச்சே வேதனை வேதனை)
-------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.ஆட்டுச்சின்னமாவது வாங்கியிருக்கலாம்.அப்பவாவது "முட்டிமோதி"யாவது ஜெய்க்க பாக்கலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆட்டுமந்தை சின்னம் "அதிரையின்" தேசிய சின்னம் ஆகையால் வேட்பாளர் யாருக்கும் ஒதுக்கவில்லை என்று தேர்தல் சின்னம் வருத்ததுடன் அறிவித்துள்ளது//

ஆட ! வருத்தமே !

பெரும்பான்மை தனித் தனி மக்களின் ஆதரவு பெற்ற நமது முற்போக்கு கூட்டணிக்கு என்று ஒதுக்கச் சொல்லி கேட்கலாம் என்றிருந்தோமே !

அங்கே தேர்தல் கமிஷன் வைச்சுடுச்சா ஆப்பு !

U.ABOOBACKER (MK) said...

ஆட்டு மந்தை படம் போட்டது தேர்தலுக்குப் பிறகு அரசியல் வாதிகள் மக்களை குர்பானி கொடுக்கப்போகிறார்கள் என்பதற்காகவா?

மு.கி

அப்துல்மாலிக் said...

படத்தேர்வு தேர்தலுக்கு பொறுத்தமானது, எப்பவுமெ ஓட்டளிக்கும் மக்கள் ஆட்டுமந்தைதான் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு