அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
- அபுஇபுறாஹிம்
இனிய அதிரை சொந்தங்களே:
இதுவரை வாழ்வியலும் வசப்படும் வரிகளையும் கண்டு வந்த உங்களின் பார்வைக்கு சற்றே மாறுதலாக ஆனால் மாற்றமே இல்லாமல் சவுதி பாலைவனங்களைப் பார்த்துப் பார்த்து கண்களின் கரும்பாவைகூட வெண்மையாகி விடக்கூடிய சூழலில் இருந்து தப்பித்த நம் அதிரைநிருபரின் ஆஸ்தான ஃபோட்டோ கிராஃபர் ஹமீது காக்கா, விடுமுறையில் கண்டதையும் (!) பச்சை பசேலென்ற பேசும்படங்களை இங்கு நமக்காகப் படைத்திருக்கிறார்கள்.
இவைகளில் சில… எம்முடன் பேசியவை இதோ….
பேசும் படங்களும்
ஏங்கும் மனங்களும் !
கூர்ந்து கற்றேன்
நிமிர்ந்து நிற்கிறேன் !
தூறல் மோதி
பயிர்கள் பரவசம் !
தேங்கிய நீர் கண்டு
தேகம் சிலிர்க்கிறது !
வீழ்ந்தாலும் வீழ்வேன்
இம்மண் மீதே வீழ்வேன் !
போர்வைக்குள் விழித்தேன்
பார்வைக்குள்ளே தவித்தேன்
பசுமையின் போர்வை சொன்னது
உழவனின் வேர்வை இதென்று !
உயர்ந்திருக்கும் அணை
உழவனுக்கும் துணை
ஓடும் நீரே
ஓய்வும் எடுக்கிறாயோ ?
ஒற்றையடி பாதைக்கும்
இரண்டு சிமிண்ட் வேலிகள்
தென்னை பண்ணைகள்
தென்றலின் பிறப்பிடமோ ?
சரி சரி இனிமே உங்களிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
- அபுஇபுறாஹிம்
25 Responses So Far:
பச்சை பசுமையே நீ பரந்து படர்ந்திருப்பது
கதிரவனின் பார்வைக்கா அல்லது கரிய எம் கண்களின் கவர்ச்சிக்கா?
உனக்கும் சுகம் இருப்பதை அறிய முடிகிறது
தண்ணீரை கொட்டவிடாமல் உன்னுள் இருத்திவத்திருப்பதை பார்க்கும்போது!
வானமே நீ தரும் வண்ணம் எங்கள் கண்களுக்கா
அல்லது உன்னை கவரும் பசுமைக்கு பகரமா?
உயிர்களுக்கு உயிரோட்டம் தரும் பயிர்களே
உலகம் உள்ளவரை செழிப்பாயாக!
மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------------
தனி மரமாய் நின்று உழைக்கிறேன் என்பது இது தானோ? ஒத்தாசைக்கு தரைப்புல்களே கொஞ்சம் உதவுங்களேன்?
வென்முகிலும் மலைநுனியும் ஒன்றோடொன்று
திரையிட்டு முத்தமிட்டு மழை பெறச்செய்வது தான் முத்தமழையோ? இதில் நனைந்திட்ட இதயங்கள் தான் சாட்சிகள்.
எந்த காம்பஸும் இல்லாமல் சீராக வரையப்பட்ட அரை வட்டத்தை வானப்பலகையில் வரைந்து பழகும் இயற்கையே இறைவனின் அதிசயம்.
மழையில் நனைந்திட்ட காகம் வெயிலுக்கு ஏங்கும்.
கொக்கரக்கோ சேவலோ சூரியன் வரவின்றி சோர்வடையும்.
ஊரில் மழை காலம் ஆரம்பம் இனி கவிதைகள் கரைபுரண்டு ஓடட்டும்.
அதில் காகித ஓடம் விட வயதுகள் இல்லை நினைவுகள் உண்டு.
வெலெவெட்டி நேரத்துலெ சும்மா இருந்த என்னை உசுப்பேத்தி உட்டுட்டியளெ?
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
இந்தியனாய் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன்..இது சாகுல் அடிக்கடி சொல்லும் வார்த்தை...இந்தியாவில் பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன் ..உங்கள் போட்டோக்களை பார்த்த உடன்.
மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------------
முதல் போட்டோ விற்கு முன்பக்கம் அந்த சோகமான கல்யாண ஓடை ஆறு ஒன்றும் அறியாது கலகலப்பாக ஓடிக்கொண்டுள்ளது
Sஹமீது
தேயிலைத் தோட்டத்தில் நடைபாதை:
சற்றே
உதறிவிட்டு விரித்திருக்கலாம்
பச்சைக்கம்பளத்தில்
சுருக்கங்கள்.
மின்னஞ்சல் வழி கருத்து
--------------------------------------------
போட்டோ 2 மழை விட்ட சிறிது நேரத்தில் கருவை மரத்தில் சீரியல் செட் லைட் கட்டியது போல் இருந்தது மழை துளி
Sஹமீது
மின்னஞ்சல் வழி கருத்து
----------------------------------------
sabeer.abushahruk சொன்னது…
தேயிலைத் தோட்டத்தில் நடைபாதை:
//சற்றே
உதறிவிட்டு விரித்திருக்கலாம்
பச்சைக்கம்பளத்தில்
சுருக்கங்கள்.//
உதறி விட்டு விரித்திருந்தால்
தேயிலை பரிப்போரின்
வயிற்றில் விழுந்திருக்கும்
சுருக்கம்
Sஹமீது
பச்சைப் போர்வையை உதறியதால்
சிதறியதுதான் அந்தத் துளிகள் கருவேலை மரத்தில் தொங்கும் துளிர்கள் !
Super.. :)
ஒற்றைப்பனை:
தள்ளிவைத்தாலென்ன
வயலில் விழுந்து
ஊரைநோகி நீளும்
என்
நிழலை என்ன செய்வர்
கருவேலமரம்:
முட்களோடு
சில
மொட்டுகளையும் வளர்த்தது
மழை
வானவில்:
ஒருமுறையாவது
என்
வாசலில் வரையாதா
இந்த வெயில்மழை!
சகித்துப்போ:
ஆழிப்பேரலை
அடித்துப்போனாலும்
நாழியில் தலைதூக்கும்
நாணல்!
கரைகள்:
தென்னையைமட்டுமல்ல
கண்ணையும்
வருடிச் செல்கிறது
நதி
மணிமுத்தாறு பாலம்:
பாலத்தின் அடியிலும்
பாலத்தின் மடியிலும்
நதி
//உதறி விட்டு விரித்திருந்தால்
தேயிலை பரிப்போரின்
வயிற்றில் விழுந்திருக்கும்
சுருக்கம்//
...smart thought Hamiid. i like it
பதிவுக்குள் வரவேண்டிய கவிதை வரிகள் கருத்துக்குள் கலக்கலாக துளிர்கிறதே !
////உதறி விட்டு விரித்திருந்தால்
தேயிலை பரிப்போரின்
வயிற்றில் விழுந்திருக்கும்
சுருக்கம்//
...smart thought Hamiid. i like it
///
மெய்யாலுமே... முதல் வாசிப்பிலே வாயிற்றை கைவைத்துப் பார்த்தேன்... !
வானவில்லை வளைத்திட்டேன்னு யாரவது சுயம்வரம்னு சொல்லி வந்திடுவாங்களோ !?
sabeer.abushahruk சொன்னது…
//உதறி விட்டு விரித்திருந்தால்
தேயிலை பரிப்போரின்
வயிற்றில் விழுந்திருக்கும்
சுருக்கம்//
//...smart thought Hamiid. i like it //
அபுஇபுறாஹீம் சொன்னது…
//மெய்யாலுமே... முதல் வாசிப்பிலே வாயிற்றை கைவைத்துப் பார்த்தேன்... !//
சொல்வதை சுருங்க சொன்னால் எல்லாமே நல்லாருக்கும்
எங்கே நம்ம சகோதரர்களை காணோம் ! போட்டோ எடுத்த இடத்தை தேடி சென்று விட்டார்களோ !
வரி வரியா
நல்லாருக்கு
அந்தந்த ஃபோட்டோவுக்கு கீழே வரிகளை போட்டிருந்தால் ரசித்து சிலாகிக்க ஏதுவாக இருந்திருக்கும் :)
கிளி க்கியவருக்கு வாழ்த்துக்கள்
இயற்க்கை அழகை நேரில் ரசித்ததைகாட்டிலும் உங்கள் கேமரா வழியாக பார்த்தது...பரவசத்தை ஏற்படுத்தியது...அருமையான புகை??ப்படங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும். மேதைகளேல்லாம் எழுதியபிறகு இப்போதைக்கு நாம் எழுத ஒன்றும் இல்லை என்று இருந்தேன். இப் "போதை"க்கு நானும் ரசிகனாகிவிட்டதால் இயற்கையின் பாதையில் பச்சை கம்பளம் விரித்திருக்கும் அழகை ரசித்து இருவரி எழுத வந்தேன். இயற்கையின் முகவரியே , காவேரி ஆனாலும் ,கங்கை ஆனாலும் பச்சை என்பது முதல் இடம் பிடிக்கும். அவை பசைபோல கண்ணில் ஒட்டி கொள்ளும்.அருமையான காட்சிகள். அருமையான படபிடிப்பு!கேமிரா பிரியருக்கு சகோ. சாகுல் எடுக்கலாம் வகுப்பு.மொத்தத்தில் நல்லதொரு காட்சி அமைப்பு அதிரை நிருபரில் சிறப்பு தொகுப்பு.
சகோ. ஹமீது அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
மாஷா அல்லாஹ்!
வல்ல அல்லாஹ்வின் படைப்புகளில்
ஒவ்வொன்றும் அழகுதான்!
கண்களில் ஒட்டிக்கொள்ளும் பசுமை!
அதை படம் எடுத்த விதம் அருமை!
கண்ணுக்கு விருந்தானது
கவிதைகு விதையானது
மண்ணின் மீது காட்சி
மாபெரியோனின் ஆட்சி
Post a Comment