Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வெற்றியும் அதனைத் தொடரும் புகழுரைகளும் ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2011 | , ,

சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் ஒரு சாராரை ஆனந்தத்திலும் மற்றொரு சாராரை சோகத்திலும் ஆழ்த்தியிருப்பது எல்லோரும் அறிந்ததே.

வெற்றி கண்டவர்கள் இனிவரும் நாட்களில் அந்த வெற்றியை மேலும் தக்கவைத்துக் கொள்ளவும், எந்த நோக்கத்தினை மனதில் வைத்துக் கொண்டு அல்லது மக்கள் மன்றத்தின் முன் முன்னிருத்தி அவர்கள் களம் கண்டார்களோ அந்த நோக்கம் நிறைவேறிட எவ்வகையிலெல்லாம் முயற்சிக்கப் போகிறார்கள் என்று வாக்களித்து அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களும் தோல்வியைத் தழுவிய தோழர்களும் காத்திருப்பார்கள். காரியங்கள் துவங்குமா ? அல்லது காரணங்கள் சொல்லப்படுமா ? என்று எண்ணிக்கையற்ற வினாக்கள் விக்கித் தவிக்கும் பெரும்பாலோனோர் மனதிலும்.

அதிரை பேரூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பாலான மக்களின் கோரிக்கைகளில் ஒன்றாக எழுந்த ஒருமித்த குரல் சுகாதாரம் என்பதே, அதனையே வெற்றி பெற்ற பேரூராட்சித் தலைவரும் வெற்றிக்கு முன்னரும், அதன் பின்னரும் தொடர்ந்து பதவி ஏற்பு மேடையிலும் எடுத்துரைத்தார்கள். ஊரின் சுகாதாரம் உங்களின் (மக்களின்) சுகாதாரம், மக்களின் சுகாதாரம் உங்களின்(மக்களின் செழிக்கும்)வாழ்வாதாரம். நோய்கள் அற்ற சமுதாயமாகவும் மருத்துவச் செலவுகளை குறைத்த மக்களாகவும் இருந்திடலாம் என்ற ஆறுதல் வார்த்தைகள் அதிரை மக்களை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது.

தேர்ந்தெடுத்த மக்களும் அறிந்திடுவர், அரசியல் கண்கானிப்பாளர்களும் நன்கறிவர் மத்தியில் ஒரு கட்சியின் கூட்டணி, மாநிலத்தில் வேறு கட்சி, பேரூராட்சியில் ஒரு கட்சி ஆட்சி செய்வதில் ஒத்துழைப்பும் / இடையூறுகளும் சங்கிலித் தொடர் போல்தான் இருக்கும். இதுதான் சவாலான காலமும் பொறுப்பான பணியும் இதுவாகத்தான் இருந்திடும். இதிலும் வென்றெடுக்க வேண்டியதை வென்றெடுத்து சாதிக்க மன உறுதியும் ஆளும் ஆட்சியாளர்களுடன் ஒத்துழைப்பும், அருகில் சுற்றியிருப்பவர்களின் பக்கபலமான ஆதரவும் இருப்பதே சாலச் சிறந்தது.

வெற்றிக்குப் பின்னர் தொடரும் புகழாரங்களும், அரவணைப்புகளும் எங்கேயிருந்தார்கள் இம்மக்கள் என்று பார்வையாளர்களையும் வியக்க வைக்கும் வைபவங்கள் தொடர்ந்தாலும், அவைகளுக்கு ஓர் எல்லை வகுத்து ஏற்றிருக்கும் அதிரை மக்களுக்கான தொண்டு இடறாமல் தொடரவேண்டும்.

சான்றோர்களும் சட்ட வல்லுநர்களும் நலன் நாடும் பெரியவர்களும் எடுத்துரைத்ததைப் போல் பேரூராட்சி மன்றத்தின் திட்டங்களையும் விதிமுறைகளையும் நன்கறிந்து, அதிரை பேரூராட்சிக்கு ஏற்ற தலைவர் என்று பரைசாற்ற வேண்டும் அதன் பின்னர் தேடிவரும் வெற்றியை பகிர்ந்திட மக்கள் மன்றம் முன்னால் நின்று மனம் விட்டு பேச வேண்டும் அங்கே அவர்களின் குரலைக் காது கொடுத்து கேட்டிட வேண்டும்.

என்றும், எதிர்பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் !

- அதிரைநிருபர்-குழு

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நேற்றைய தினம் நடந்து முடிந்த துணைத் தலைவர் தேர்தல் அதிரை நலன் விரும்பும் பெரும்பாலோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ஆளும் கட்ட்சியின் அதிரை நகரச் செயலாளர் பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டது ஆறுதல் மட்டுமல்ல, ஆரோக்கியமும் கூட !

நீண்ட நாட்களாக அதிரைமக்கள் எதிர்பார்த்திருக்கும் சுத்தமான (எல்லா வகையிலும்!!) பேரூராட்சி நிர்வாகம் இருக்கும் என்றும் நம்புவோமாக..!

ஊருக்கு நல்லது செய்யத்தான் தேர்தலில் போட்டியிட வந்தேன் ஏனோ மக்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட சகோதரர் அஜீஸ் அவர்கள் கருத்து தெரிவித்திருப்பதனை நிருபிக்கும் விதமாக அவரின் ஒத்துழைப்பும் அவசியம் இருக்க வேண்டும், இவ்வளவு குறுகிய காலத்தில் கட்சியின் மேலிடம் வரை எட்டிப் பிடிக்க முடிந்தவருக்கு ஊருக்காக நிச்சயம் நிறைய செய்யலாம், இனி வரும் காலங்களை மனதில் வைத்துக் கொண்டு செயல்களில் ஈடுபடலாமே !

இதனையும் எதிர்பார்ப்போமே...

ZAKIR HUSSAIN said...

ஊரில் குப்பை / கொசு / சாக்கடை / பாலிதீன் பைகளை குளக்கரைகளில் வீசி அடித்திருக்கும் பழக்கம் இவைகளை ஒழித்து விட்டாலே ஜெயித்த வேட்பாளர்கள் தொடர்ந்து போட்டியிட்டு ஜெயிக்களாம்.

Anonymous said...

அதிரை பேரூராட்சி துணை தலைவராக அ.தி.மு.க.வில் உள்ள பிச்சை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவரை அக்கட்சியில் உள்ளவர்கள் பாராட்டி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் வெடி வெடித்து கொண்டாடினர் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டியிருந்தனர் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று.ஆளுங்கட்ச்சியாக இருப்பதால் துணை தலைவர் பிச்சை அவர்கள் தலைவர் அஸ்லம் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிரை மக்களுக்கு நல்ல செயல்களை செய்ய வேண்டும்.இரு தலைவர்களும் ஒற்றுமையாக இருந்தால் தான் சாத்திக்க முடியும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//ஒரு சாராரை ஆனந்தத்திலும் மற்றொரு சாராரை சோகத்திலும் ஆழ்த்தியிருப்பது எல்லோரும் அறிந்ததே//

சோகமெல்லாம் நேற்றைய துணைத்தேர்தல் வெற்றிமூலம் மறைந்துவிட்டதாம்.
எனவே வென்றோம் வெல்லவில்லை என்றெல்லாம் பார்க்காமல் சகோதரர்களான மரியாதைக்குரிய அஸ்லம் ,அஜீஸ், பசீர், முனாஃப் ஆகிய நால்வர்களும் ஊர் நலனே எங்கள் நலன் என்று மனதார நிய்யத் செய்யுங்கள்.அடுத்த தேர்தல் வரை பிறந்த மண் செழிக்கட்டும்
தேர்தல் நேரத்தில் வழக்கம்போல நாயன் நாட்டப்படி பிரிவதை யோசித்துக் கொள்ளலாம்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது சேர்மன் அவர்கள் பதவி பிரமாணம் முடிந்த அடுத்த நாளே! துப்புரவு பணியாளர்களை மேலேத் தெருவுக்கு அனுப்பி எம்.எம்.எஸ் வாடிக்கு பின்புறமாக குப்பைகளை அல்ல சொல்லி அனுப்பிவைத்ததை நினைத்தால்.யாரையும் தோற்கடித்து ஆணவம் கொள்ள வரவில்லை.மகத்தான சேவைகள் செய்யவே வந்திருக்கிறேன்.என்பதை பறைச் சாட்டுகிறது.

Anonymous said...

அதிரை பேரூராட்சி துணை தலைவராக அ.தி.மு.க.வில் உள்ள பிச்சை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவரை அக்கட்சியில் உள்ளவர்கள் பாராட்டி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் வெடி வெடித்து கொண்டாடினர் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டியிருந்தனர் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று.ஆளுங்கட்ச்சியாக இருப்பதால் துணை தலைவர் பிச்சை அவர்கள் தலைவர் அஸ்லம் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிரை மக்களுக்கு நல்ல செயல்களை செய்ய வேண்டும்.இரு தலைவர்களும் ஒற்றுமையாக இருந்தால் தான் சாத்திக்க முடியும். நமக்குள் ஏன் சண்டை போட்டுக்கொள்ள வேண்டும் யார் வந்தாலும் அதிரை நகருக்கு நல்லது செய்தால் மக்கள் அனைவருக்கும் சந்தோசம் தான். ஆளுங்கட்ச்சியாக இருப்பதால் தேவையானதை சாதித்துக் கொள்ளலாம்.மற்றொரு தரப்பில் பார்த்தால் ஒரு சில பேர் செய்ய நினைப்பதை செய்ய விடாமல் தடுப்பது.ஏன் என்றால் அவன் பெரியவனா,நான் பெரியவனா என்றல்லாம் பால்ட்டிக்ஸ் பார்ப்பார்கள்.அதை எல்லாம் பார்க்காமல் இரு தலைவருகளும் அதிரை மக்களுக்கு போய் சேர வேண்டிய பொருட்கள் சேர்ந்து இருக்கிறதா?என்று பார்க்க வேண்டும். பாகுபடியின்றி அவர் அவர் அவருகளுடைய பணிகலை செய்ய வேண்டும். அஸ்லம் அவர்கள் அவருடைய பணியை தொடிங்கி விட்டார் மேலத் தெருவில் குப்பையை அள்ளுவதற்கு உத்தரவிட்டார் அதன் படி அல்லிவிட்டார்கள்.

sabeer.abushahruk said...

ஆளும் கட்சியிலிருந்து துணைத்தலைவர் அதிரைக்கு நல்லது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

அப்துல்மாலிக் said...

அதிரை நிருபரின் தலையங்கம் - அருமை

இன்ஷா அல்லாஹ் தொடரட்டும் வெற்றியாளர்களின் செயல்பாடுகள்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு