இஸ்லாமிய வரலாற்றில் – குறிப்பாக, நபி வரலாற்றில் – மக்கா வெற்றி என்பது, முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றி மட்டுமன்று; மானம் காத்த வெற்றியுமாகும்! ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் இஸ்லாம் புத்தமைப்புச் செய்யப்பெற்ற தொடக்க காலத்தில், அவர்களின் உண்மை மார்க்கத்தில் இணைந்த ஒரு சிலர் நுகர்ந்த துன்பங்கள், சித்திரவதைகள் பற்றியெல்லாம் எழுதத் துணிந்தால் நம் கண்கள் குளமாகும்!
யாசிர் என்ற யமன் நாட்டு அடிமையைக் கயிற்றால் பிணைத்து அடித்தார்கள்! அதிலும் ஆறுதல் அடையாத மக்கத்துக் குறைஷிகள், இறுதியாக அவரின் இரு கால்களையும் இரண்டு ஒட்டகைகளில் கட்டி, அவற்றை எதிர் எதிர்த் திசைகளில் ஒட்டிவிட்டார்கள்! என்னவாகும்? இரு கூறாகக் கிழிக்கப்பட்டது அவரின் உடல்!
அவருடைய மனைவியை இரக்கப்பட்டு விட்டார்களா? இல்லை! அவரையும் கட்டிப் போட்டு, அவருடைய மறைவிடத்தில் அம்பெய்து கொன்றார்கள்! பெண்ணொருத்தியை வதை செய்வதன் உச்சகட்டமல்லவா இது?
இக்குடும்பக் கொழுந்தான அம்மார் என்ற சிறுவரையுமல்லவா கயிற்றால் பிணைத்துக் கசையடி கொடுத்தார்கள்! குடும்பமே துன்பத்தின் எல்லையில் துவண்டு போயிற்று! அந்த நிலையில், தமக்கு வேதனைகளிலிருந்து விடுதலை கிடைக்காதா என்றெண்ணி, நபியவர்களிடம் யாசிர் முறையீடு செய்தபோது, صبرا يا آل ياسر (யாசிரின் குடும்பத்தவரே! பொறுமை செய்க!) என்று மட்டுமே அந்த நபியால் ஆறுதல் சொல்ல முடிந்தது.
இப்படி, மக்கத்துக் குறைஷிக் கொடுமனத்தவர்களின் படுபாதகச் செயல்களால் வதை செய்யப்பட்டவர்களின் பட்டியல் – பிலால், கப்பாப், இப்னு மஸ்ஊத், அபூபக்ர், உஸ்மான், சுஹைப், அபூசலமா, உம்முசலமா என்று – நீண்டுகொண்டே செல்கின்றது! இத்தகைய தொல்லைகளை எல்லாம் விட்டு விடுதலை பெறுவதற்காக, அம்மக்களுள் பலர் புலம் பெயர்ந்து, கடல் கடந்து ஆபிரிக்காவின் அபிசீனியாவுக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள்! இப்படி, எட்டாண்டுகளின் போராட்டத்திற்கும் பொறுமைக்கும் பிறகு, ஒரு வெற்றி கிட்டுகின்றது என்றால்...?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினாயிரம் வீரர்களோடு, வெற்றி வீரராக மக்காவினுள் நுழைகின்றார்கள்! எனினும், உண்மையாகத் திருந்தி வந்தவர்களுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறார்கள்! கஅபாவினுள் நுழைந்தவர்களுக்குக் காவல் வழங்குகின்றார்கள்! இதற்கெல்லாம் பின்னரும் வழிக்கு வராத வன்மனத்தோரைத் தண்டிப்பது முஸ்லிம்களின் கடமையல்லவா? காலித் பின் வலீத், ஜுபைர் முதலான தம் தளபதிகளுக்கு மக்காவுக்குள் நுழையக் கட்டளை பிறப்பிக்கிறார்கள். அடுத்து நடந்ததோ, அருமையான தண்டனை! ‘செத்தோம், பிழைத்தோம்’ என்று தலை தெறிக்க ஓடுகின்றனர் குறைஷித் தலைவர்கள்!
அவர்களுள் சலமத் இப்னு மைலா என்பவரும் ஒருவர். இவர் மக்காவின் புறநகர்ப் பகுதியில் இருந்த தனது வீட்டுக்கு ஓடோடி வந்து நுழைந்து மூச்சிரைக்கத் தன் மனைவியிடம், “விரைந்து கதவை மூடு!” என்றார். “எங்கிருந்து இப்படித் தலை தெறிக்க ஓடி வருகின்றீர்?” என்ற மனைவியைப் பார்த்துக் கீழ்க்காணும் கவிதையடிகளைக் கூறுகின்றார்:

إنك لو شهدت يوم الخندمه ، إذ فر صفوان و فرعكرمة
وابو يزيد قائم كالموتمه ، واستقبلتهم بالسيوف المسلمة
يقطعن كل ساعد وجمجمة ، ضربا فلا يسمع إلا غمغمه
لهم نهيت خلفنا وهمهمه ، لم تنطقي في اللوم أدنى كلمة
இதன் தமிழ்க் கவியாக்கம்:
என்னடி பெண்ணே! அறிந்திலையோ?
இறையின் தூதர் வருகின்றார்!
மன்னர் போலே இப்புனித
மக்கா விற்குள் நுழைகின்றார்!
உன்னருந் தலைவர் உமையாவின்
ஒருமகன் சஃப்வான் ஓடுகிறார்!
இன்னொரு வர்அபு ஜகில்மைந்தர்
இக்ரிமா ஓடி ஒளிகின்றார்!
அதிர்ச்சி யுற்று நிற்கின்றார்
அம்ரின் மகனார் சுஹைலென்பார்!
முதிர்ச்சி யுற்ற பெருவீர
முஸ்லிம் வாட்கள் ஓங்கினவே!
விதிர்த்து நிற்கும் குறைஷிகளை
வெட்டிச் சாய்த்து மாய்க்கின்றார்!
எதிர்த்து நிற்க முடியாமல்
எங்கும் அச்சம் அச்சம்தான்!
இடிபோல் அங்கே ஒவ்வொருவர்
இதயம் அடித்துக் கொள்வதனால்
தடுமாற் றத்தில் நிற்கின்றோம்!
தடுத்து வைப்பார் யாருமிலை!
எடுத்துப் பேச எவருமிலை!
இழித்து ரைத்தால் பழியாகும்!
உடைந்த சிலைகள் ஒவ்வொன்றும்
ஒருசொல் கூடப் பேசவிலை!
(சான்றுகள்: சீரத்துன்நபி – இப்னு ஹிஷாம் / ஜாதுல் மஆத் – இப்னு கய்யிம்)
உயிர்ப் பிச்சை கேட்டு முஸ்லிம்களிடம் வந்தவர்கள், தலை தெறிக்க மலைகளின் மீது ஏறி ஓடியவர்கள், கஅபாவிற்குள் தஞ்சம் புகுந்தவர்கள், தத்தம் வீடுகளுக்குள் புகுந்து தாழிட்டுக்கொண்டவர்கள், அபூ சுஃப்யானின் வீட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் ஆகியோர் தவிர, மக்கா வெற்றிப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையோ மிகமிகக் குறைவு! வெறுமனே பண்ணிரண்டுதான்! இந்தக் கொலை நிகழ்வும்கூட, நபியவர்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு நிகழ்ந்தது! அந்த நாள்வரை, மக்கத்துக் குறைஷிகள் வதை செய்ததும் கொலை செய்ததுமாக, முஸ்லிம்கள் அடைந்த இழப்போ எண்ணிக்கையில் அடங்காதது! இதனால்தான், இத்தொடரின் தொடக்கத்தில், மக்கா வெற்றியை, ‘மாபெரும் வெற்றி’ என்றும் ‘மானம் காத்த வெற்றி’ என்றும் குறிப்பிட்டேன்.