கவனமாக இருங்கள்!
பாலியல் வன்முறைகளுக்கெதிராக என்னதான் மக்கள் ஆர்பரித்தெழுந்தாலும், நாடு தழுவிய போராட்டங்களை நடத்தினாலும், குழு அமைத்து ஆய்வு செய்தாலும், சட்டத்திருத்தம் கொண்டு வந்தாலும், ஆயுள் தன்டனை, ஆண்மை நீக்கம் என்று அரட்டிக் கொன்டாலும் அன்றாடம் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. மாறாக அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. சத்திய மார்க்கம் தளத்தில் வெளியான ஒரு கட்டுரையில், ஊடகங்களில் "இன்றைய வன்புணர்வுச் செய்திகள்" என்று தனிப்பக்கங்கள் ஒதுக்குமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது” என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார் KATKA கட்டுரையாளர்.
இந்தியாவின் தலை நகரான டெல்லி பாலியல் குற்றங்களுக்கும் தலை நகரமாக முன்னேற்றம் அடைந்துள்ளதை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாது. பாலியல் குற்றங்களுக்கு கலாச்சார சீர்கேடு ஒரு முக்கிய காரனமாக இருந்தாலும், மக்களின் கவனக்குறைவும் ஒரு முக்கிய காரனியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் அறிமுக மற்றவர்களால் நிகழ்த்தப் படுவதில்லை. மாறாக நன்கு அறிமுக மானவர்களாலேயே அரங்கேற்றப் படுகிறது. அறிமுக மற்றவர்களால் ஏற்படுத்தப்படும் பாலியல் குற்றங்கள் வெகு சொற்பமே. அது ஒரு சதவிகிதம் கூட இருக்காது என்பதை உறுதியாகச் சொல்லலாம். ஆனால் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் நெருங்கிய உறவினர்களால், அண்டை வீட்டினரால், நண்பர்கள், காதலர்கள், சகமாணவர்கள், சகபணியாளர்கள், மேலதிகாரிகள், முதலாளிகள் என அன்றாட வாழ்கையில் தொடர்புள்ளவர்களாலேயே அரங்கேற்றப் படுகிறது.
பெரும்பாலான பாலியல் குற்றங்கள் வழக்கு மன்றங்களுக்கு வருவதில்லை என்று புள்ளி விவரங்கள் தெறிவிக்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்களிருப்பினும் அறிமுகமானவர்களால் குற்றங்கள் இழைக்கப்படுவதும் ஒரு முக்கிய காரணமாகும். மேலும் அறிமுகமானவர்களால் இழைக்கப்படும் பாலியல் வன்முறைகள் நன்கு திட்டமிடப்பட்டே அரங்கேற்றப்படுவதால் அதிலிருந்து தப்பிப்பதும் முடியாமலாகிவிடுகிறது.
சமீபத்திய செய்தியிகளிலிருந்து சில உங்கள் சிந்தனைக்காக!
காதலர்கள் வீட்டிலிருந்து வெளியேறி கோவிலிலே தாளிகட்டிக்கொள்கிறார்கள். பிறகு பதிவுத்திருமனம் செய்துகொள்ளலாம் என்று காரில் ஏற்றி, குலிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து காரிலேயே தன் உறவினர்களோடு சேர்ந்து கற்பழித்திருக்கிறான் ஒரு கபோதி.
இரவில் குப்பைத்தொட்டியில் குழந்தை அழும் சப்தம் கேட்க, குழந்தை மீட்கப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. காலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் தன் மகளோடு சென்று குழந்தை எங்களுடையது தான் என்று கேட்க, எழுதி வாங்க்கிக்கொண்டு குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அங்கே காவல் நிலைய வியரனையில் அந்த தாய் சொன்ன செய்தி – இக்குழந்தை என் மகளுடையதுதான். பள்ளி விடுமுறையில் தன் அத்தை வீட்டுக்குச் சென்றிருந்தபோது அத்தை மகனோடு உறவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குப்பையில் போட்டுவிட்டோம்.
9ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் கோவை மாவட்டம் ராமநாதபுரத்திலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார். அங்குகிருந்த 59 வயதான அந்த மாணவியின் உறவினரும், அவருடைய நண்பரும் அந்த சிறுமியை சுமார் ஓராண்டு காலமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளனர். அதனால் அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவே, அவர்களுடைய 70வயது நண்பரான, ஓய்வுபெற்ற மருத்துவரின் உதவியை நாடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த 70 வயதான மருத்துவரும், இன்னும் இருவரும் சேர்ந்து அந்த சிறுமிக்கு தொடர்ந்து வன்கொடுமை இழைத்துள்ளனர். அதனால், பாதிப்படைந்த சிறுமி கோவை மாநகராட்சி காவல் துறை ஆணையரிடம் புகாரளிக்கிறார். விசாரணையில் சிறுமியை மிரட்டியும், மயக்க மருந்து அளித்தும் அவர்கள் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
இப்படி ஏராளமான காட்டுகளை சுட்டிக் காட்டிக்கொண்டே இருக்கலாம். இதுபோன்ற வன்முறைகளில் பெறியவர்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும் பெரியவர்களின் இழப்பு அவர்களின் நடத்தையின் காரணமாக அவரவர்கள் தேடிக்கொள்வதே அதிகம். ஆனால் பாவம் குழந்தைகள் என்ன குற்றம் செய்தார்கள். இந்தக் காமுகர்களின் கழுக் கண்கள் அவர்களுக்கு விளங்குமா? இந்த அநியாயத்தை பாருங்கள்
டெல்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 15-ம் தேதி வீட்டினருகே விளையாடிக்கொண்டிருந்தவள் காணாமல் போய் 17-ம் தேதி அச்சிறுமியின் வீட்டிற்குக் கீழுள்ள மற்றொரு வீட்டில் உடல் முழுதும் காயங்களுடன் கண்டுபிடிக்கப்படுகிறாள். கீழ் வீட்டுக்காரனின் மனைவி தாய்வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் அந்த மிருகம் இக்கொடுமையைச் செய்துள்ளதாக செய்திகள் தெறிவிக்கின்றன.
இரண்டு நாள் அந்தக் காமுகனின் கொடுஞ்சிறையில் அந்த பிஞ்சு எத்துனை வேதனையை, இன்னல்களைச் சந்தித்திருக்கும். அந்தக் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும். காப்பாறுவோர் எவரும் உண்டா என்று அந்தப் பிள்ளை எவ்வளவு ஏங்கியிருக்கும். நினைக்கும் போதே உள்ளம் நடுங்குகிறது. பிறருடைய வேதனைகளை நாம் யூகிக்கத்தான் முடியும். உண்மையில் முழுமையாக உணரமுடியாது. ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் அதை உணரும்போது அவர்களின் உள்ளம் வெடித்துச் சிதறிவிடாதா?
இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது சட்டமும் ஒழுங்கும், குற்றவாளிகளைக் காப்பதற்கே, குடிமக்களைக் காப்பதற்கல்ல! என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகின்றன.
நம்மைக் காப்பாற்ற யாரும் வருவார்களென்று இருக்காமல் நம்மையும் நம்மைச் சுற்றியிருப்போரையும் நாம்தான் காக்க வேண்டும் என்று கவனமாக இருந்தால் இறையருளால் இயன்றவரை அனேக ஆபத்துக்களிலிருந்த்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அரசாங்கம் சட்டம் இயற்றி நம்மை காப்புற்றும் என்று எண்ணியிருந்தால் ஏமாந்து போய்விடுவோம்.
- நம்மைச் சுற்றி நடப்பதைக் கண்கானியுங்கள்!
- பிள்ளைகள் அதிகநேரம் ஃபோனிலே பேசினால் விசாரியுங்கள்!
- பிற வீடுகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் பிள்ளைகளை அனுப்பாதீர்கள்!
- கனவன் மனைவி மட்டும் (பெரிவர்கள் இல்லாமல்) இருக்கும் வீடுகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் டியூசனுக்கு அனுப்பாதீர்கள்!
- பருவப் பெண்களுக்கு சக பருவப் பெண்களையே பாதுகாப்பெனக் கருதாதீர்கள்!
- வீட்டிற்கு வரும் உறவினர்களானாலும் கண்கானியுங்கள்!
- மூத்த அன்னியப் பெண்களோடு பிள்ளைகள் பழகுவதற்கு அனுமதிக்காதீர்கள்!
- பாலியல் தொல்லைகள் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் உண்டு என்பதை அறிந்துகொள்ளுங்கள்!
- கண் பார்வையிருந்து குழந்தைகள் சற்றே மறைந்தாலும் உடனே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள்!
எத்துனைக் கோரச் சம்பவங்கள் நிகழ்ந்தாலும் வாசிப்போருக்கும், செவியேற்போருக்கும் செய்தி. ஆனால் பாதிப்புக்குள்ளானோருக்கு? சிந்தித்துணரும் மக்களுக்கு இதில் படிப்பினைகள் இருக்கின்றன. என்ன நடந்தாலும் அரசாங்கம் ஒன்றும் பெரிய தீர்வுகளைக் கொண்டுவரப்போவதில்லை. மக்களின் கோபத்தைக் குறைக்க ஒரு குழு அமைக்கும். தவிற பெரிய மாற்றங்கள் எதையும் கொண்டுவரப்போவதில்லை. கற்பழிப்புக் குற்றங்கள் இல்லாமலாக்க கற்பழிப்பு குற்றமில்லை என்று சட்டம் இயற்றச் சொல்லும் கோமாளிகளே பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
எல்லாம் வல்ல ஏக இறைவனான அல்லாஹ் நம் அனைவரையும் துற்பாக்கியங்களிலிருந்து தூரமாக்கி ஈருலக வாழ்வையும் அழகாக்கித் தருவானாக! மேலும் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக!
இன்ஷா அல்லாஹ் தொடரும்
அபு நூரா
12 Responses So Far:
இந்தக்கட்டுரைக்கு ஒரே தீர்வு,
தூய இறைவனின் குற்றவியல் சட்டமே.
இதைவிட்டால் எத்தனை நூற்றாண்டுகள் உருண்டோடினாலும் , இதைவிட குற்றங்கள் அதிரகரிக்க வாய்ப்பே ஒழிய , குறைவதர்க்குண்டான சாத்தியக்கூறுகளே இல்லை.
குரானின் கூற்றுப்படி கண்ணுக்குக்கண், பல்லுக்குப்பல் ,
இதுதான் குற்றவியல் சட்டம். பாதிக்கப்பட்டவனின்
நிலையிலிறிந்து பார்க்கும் சட்டம்.
உலகமுடிவு நாள் வரை எவனாலும் மாற்றமுடியாத சட்டம்.
அபு ஆசிப்.
சிறந்த ஆய்வு. தேவையான எச்சரிக்கையூட்டும் தகவல்கள். நினைவில் நிற்கும் தொடர். பாராட்டுக்கள்.
விழிப்பூட்டும் தடுப்பூசி கருத்துக்கள்!
கடுமையான தண்டனைகளைக் கொண்டே இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க முடியும்.
தற்காலச் சூழலுக்கு அவசியமான தொடர்.
வாழ்த்துகள் காதர்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
//நம்மைச் சுற்றி நடப்பதைக் கண்கானியுங்கள்!
பிள்ளைகள் அதிகநேரம் ஃபோனிலே பேசினால் விசாரியுங்கள்!
பிற வீடுகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் பிள்ளைகளை அனுப்பாதீர்கள்!
கனவன் மனைவி மட்டும் (பெரிவர்கள் இல்லாமல்) இருக்கும் வீடுகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் டியூசனுக்கு அனுப்பாதீர்கள்!
பருவப் பெண்களுக்கு சக பருவப் பெண்களையே பாதுகாப்பெனக் கருதாதீர்கள்!
வீட்டிற்கு வரும் உறவினர்களானாலும் கண்கானியுங்கள்!
மூத்த அன்னியப் பெண்களோடு பிள்ளைகள் பழகுவதற்கு அனுமதிக்காதீர்கள்!
பாலியல் தொல்லைகள் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் உண்டு என்பதை அறிந்துகொள்ளுங்கள்!
கண் பார்வையிருந்து குழந்தைகள் சற்றே மறைந்தாலும் உடனே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள்!//
நல்ல விழிப்புணர்வு தகவல் மற்றும் ஆலோசனை..
சட்டம் தண்டனை இதெல்லாம் ரெண்டாம்பட்சம். முதலில் கொடூரனின் கண்களிலிருந்தே பாதுகாப்பு தேவை.
அதிக நேரம் பெண் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசனும், அப்படியே அந்த குழந்தை எதையோ சொல்ல பயந்து மறைக்க முற்பட்டாலும் ஆருதல் வார்த்தைகள் கூறி நடந்ததை அப்படியே கேட்டுப்பெறவேண்டும், இதுவே 75% இதுமாதிரி கொடுமையிலிருந்து பாதுகாக்க ஏதுவாக இருக்கும். இது ஒவ்வொரு தாய்மார்களின் தலயாய கடமை. செய்வார்களா?
//எத்துணைக் கோரச் சம்பவங்கள் நிகழ்ந்தாலும் வாசிப்போருக்கும், செவியேற்போருக்கும் செய்தி. ஆனால் பாதிப்புக்குள்ளானோருக்கு? சிந்தித்துணரும் மக்களுக்கு இதில் படிப்பினைகள் இருக்கின்றன.//
எந்தவொரு விடயத்திற்கு பொருந்தும் !
எச்சரிக்கையூட்டும் தகவல்கள்
பதிவுக்கு நன்றி.
//அதிக நேரம் பெண் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசனும், அப்படியே அந்த குழந்தை எதையோ சொல்ல பயந்து மறைக்க முற்பட்டாலும் ஆருதல் வார்த்தைகள் கூறி நடந்ததை அப்படியே கேட்டுப்பெறவேண்டும், இதுவே 75% இதுமாதிரி கொடுமையிலிருந்து பாதுகாக்க ஏதுவாக இருக்கும். இது ஒவ்வொரு தாய்மார்களின் தலயாய கடமை. செய்வார்களா?//
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
கடுமையான தண்டனைகளைக் கொண்டே இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க முடியும்.
தற்காலச் சூழலுக்கு அவசியமான தொடர்.
Assalamu Alaikkum
Dear brothers and sisters,
//பாலியல் தொல்லைகள் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் உண்டு என்பதை அறிந்துகொள்ளுங்கள்!//
Actually children(boys) are also get abused by paedophiles.
There is a news today about new sexual disease called "HO41 Gonaria" which is more severe than AIDS. The disease is found in Japan where uncontrolled pornography and cultural pollution are prevailing. No medicine invented yet. So, the affected person will die within few days.
Its another warning and threat for one who is involving in wrong sexual relationships.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
வாசித்த, கருத்தளித்த, அனைவருக்கும் நன்றி
Post a Comment