Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குருவி...! 37

ZAKIR HUSSAIN | May 20, 2013 | , , , , ,

இது முழுக்க முழுக்க லைட் ரீடிங் ..அதனால் யாரும் ட்யூப்லைட் போட்டு படிக்கனும்னு சொல்லவில்லை.

விசயம் சொல்லிக் கொள்வது மாதிரி பெரிசா ஒன்னுமில்லை என்றால் தன்னடக்கம் கருதி சின்னதாக சொல்வது மாதிரி விமான பயணம் என்பதில் நிறைய டெக்னிக்கல் விசயம் ஏதாவது இருக்கும் என்று நினைத்து படிப்பவர்களுக்கு நான் துண்டை போட்டு தாண்டி சொல்கிறேன், இதில் அப்படி ஒன்னும் விசயமில்லை. [தெரிஞ்சாதானே எழுதறதற்கு!!!].

எனவே உருப்படியான விசயம்தான் படிப்பேன் என்று 'மாகானதிபதி" முன் சத்யப்பிரமானம் எடுத்தவர்கள் வீட்டில் வெங்காயம் வெட்டிக் கொடுப்பது , துவைத்து வைத்த பிள்ளைகளின் துணியை காயப்போடுவது போன்ற பொறுப்பான வேலைகளில் ஈடுபட்டு அப்படியும் நேரத்த ஒட்ட முடியவில்லை என்றால் இதைப்படிக்களாம்.


1968 என நினைக்கிறேன். முதன் முதலில் என் வாப்பா திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியதை பார்க்க / அழைக்க போயிருந்தேன். அவ்வளவு சின்ன வயதில் அந்த விமான நிலையத்தில் ஒரு பட்டனை அழுத்தினால் ஐஸ் வாட்டர் வரும் [குவளை மிஸ்ஸிங்] அதை அழுத்தி குடித்ததில் ஜென்ம புண்ணியம் அடைந்ததாக நினைத்தேன்.

அப்போது வந்த விமானத்திற்கு "காத்தாடி' வெளியில் சுற்றியது. இப்போதைய டெக்னாலஜியை பார்க்கும்போது ரைட் பிரதர்ஸிடம் நமது இந்தியன் ஏர்லைன்ஸ் லீசுக்கு எடுத்த மாதிரிதான் தெரிந்தது. எங்கே இவனுக ரைட் பிரதர்ஸிடம் வம்புடியாக வாங்கிட்டு வந்துட்டானுகளா என நினைக்க தோன்றும்.

இந்திய முஸ்லீம்கள்  முன்பு பர்மா / சிலோன் என்று பிழைக்க போன காலத்திற்கு பிறகு பினாங்கு பிழைக்கும் தளமானது . [ஏதோ தமிழ்நாடு செய்தித்துறையின் பிளாக் & ஓயிட் ஃபிலிமில் தியேட்டரில் காண்பிக்கும் செய்தித் தொகுப்பு மாதிரி இல்லே!!].


பயணத்திற்கு  S.S ரஜூலா , M.V.சிதம்பரம் கப்பல்கள் வாழ்க்கையுடன் ஒன்றிப்போனது. [கப்பலில் நான் பயணம் செய்ததில்லை என்பதால் எனக்கு அதைப் பற்றி எழுத தெரியாது என்பதால் நீங்கள் தப்பித்தீர்கள்].

பிறகு துபாய் / சவூதிக்கு மக்கள் படையெடுக்க ஆரம்பித்தவுடன் வந்தது விமான பயணங்களின் பயன்பாடு. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று எல்லோரையும் ஏற்றிக் கொண்டு சென்றதில் தான் காமெடி. 

சிலர் கட்டிச் சோறிலிருந்து மாங்கா ஊறுகாய் வரை வாங்கிப்போய் துபாயில் சாப்பிட்டதாக ஆட்களை அழைக்கப் போகும்போது கேள்விப் பட்டதுண்டு.

ஆரம்ப காலத்தில் நீங்கள் விமான டிக்கெட் எடுத்திருந்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து ஒரு மினி வேன் அழைத்துச் செல்லுமாம். இப்போது 5 நிமிடம் அந்த விமான கம்பெனியின் மேனேஜிங் டைரக்டரே தாமதமாக போனாலும் "போடா பசுநெய்" என்று சொல்லிவிட்டு கேப்டன் புறப்பட்டு விடுவார். [ஏதாவது வித்யாசமா எழுதுங்க என்று அ.நி கட்டளை இல்லாவிட்டால் ' போடா வெண்ணே"  என்று சொல்லிவிட்டு கேப்டன்... என எழுதியிருக்களாம்.]

இதில் ப்ளேனில் கொண்டு போகும் பொருட்களும் அதை கையாளும்  ஆட்களும்தான் இன்னும் காமெடி. ஒருமுறை நான் காட்மாண்டுவில் விமானத்தில் ஏறி உட்கார்ந்ததும் அதில் வந்த சில நேப்பாளிகளையும் அவர்கள் வைத்திருந்த கூடை மாதிரி இருந்த பொருட்களை பார்த்ததும் எனக்கு தூக்கமே வரவில்லை. ஏதும் பாம்பு போட்டோ [படம்] எடுத்து ஆட ஆரம்பித்தால் என்ன செய்வதென்று ஒரே புலப்பம். தவிறவும் நாம் ஏதாவது பெண் பாம்பை வஞ்சித்திருக்கிறோமா என்று எனது நினைவுகளை ரிவர்சில் ஒட்டிப்பார்த்தேன். அப்புறம் பாட்டு பாடி நம்மை பழிவாங்குதெல்லாம் இருக்க கூடாதல்லவா?. இருந்தாலும் தனுஸ் எல்லாம் பாட்டுப் பாடுவதற்கு பாம்பு பாட்டு எவ்வளவோ தேவலாம்.

விமான பயணங்களில் விதிக்கப்படும் 20 கிலோ / 30 கிலோ லக்கேஜ் விதி தனது ரத்தத்தில் கொஞ்சம் கூட இந்திய ரத்தம் சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு இனத்தை சார்ந்தவன் ஏற்படுத்தியது என நினைக்கிறேன். தமிழ்நாட்டு முஸ்லீம்கள் வெளிநாட்டுக்கு வரும்போது பேரன் / பேத்தியின்   கல்யாணத்துக்கூட உழைக்கும் சோசியல் கான்ட்ராக்டில் கையெழுத்திட்டு வந்து உழைத்து லக்கேஜ்கள் வாங்கி செல்ல வேண்டியிருக்கிறது என்பது எழுதப்படாத விதி. உழைக்கும் ஆட்கள் கதவுக்கு வைக்கும் சக்கை மாதிரி மொபைல்போன் வாங்குவதும் பள்ளிக்கூடம் தாண்டாத பிள்ளைகளுக்கும் , நேராக கையெழுத்துப்போட தெரியாத வீட்டுப்பெண்களுக்கு சம்சங் கேலக்ஸி-3 வாங்குவதும்... என்ன கொடுமை சார் இது??.

லக்கேஜ் கொண்டு போவதற்கென்று இப்போது எவ்வளவோ வசதியான சக்கரம் வைத்த கேபின் பேக் எல்லாம் இருந்தும் சமீபத்தில் மலேசியா வந்த சபீர் ஒரு சூட்கேசுடன் வந்து இறங்கியவுடன் என் மனதில் தோன்றிய வசனம் ' பாஸ்.. இந்த அணு ஆராய்ச்சி குறிப்பெ வச்சு எந்த இடத்திலே நாம் அணு குண்டு வெடிக்கப் போறோம்??' என்ற கேள்விதான்.  நல்ல  வேலை  ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் எந்த புத்தர் கோயிலும் இல்லை..இருந்தால் ஆராய்ச்சிக்குறிப்பின் ஒரு பகுதி  அங்கு உள்ள மொசைக் கல்லுக்கு கீழ்தான் இருக்க வேண்டும் என்று காரை விட்டு இறங்கிவிட்டால் என்ன செய்வது. ??

சூட்கேஸ் பிதுங்க பிதுங்க லக்கேஜ் கட்டும் என் சொந்தக்காரர்களை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனித்திறமை.. எக்கோலாக் சூட்கேசில் 15 கிலோவுக்கு மேல் சர்வ சாதாரணமாக கட்டுவார்கள். இன்னும் சில பேர் பிளாஸ்டிக் கயிறை இழுத்துக்கட்டும் திறமை அலாதியானது. கட்டும்போது இடையில் உங்கள் விரல் மாட்டிக்கொண்டால் பிறகு ஏழுகடல் தாண்டி ஒரு தீவில் உள்ள கிளியிடம் போய் சொல்லி உயிர்பிச்சை கேட்டாலும் அந்த பிளாஸ்டிக் கயிற்றிலிருந்து உங்கள் விரலை எடுக்க முடியாது. அவ்வளவு ஸ்ட்ராங்காக கட்டுவார்கள் அந்த காலத்து நம் ஆட்கள்.

இந்தியாவில் தங்கம் கொண்டுவரலாம் என்ற சட்டம் வந்தவுடன் வரும் எல்லோரிடமும் "பாய் பிஸ்கட் கொண்டு வந்திருக்கீங்களா?' என்ற கஸ்டம்ஸ் ஆபிசரின் கேள்விக்கு வயதான ஒருவர் சொன்ன பதில் ' கிரீம் தடவியதா? இல்லை தடவாததா?' என்ற அப்ரானி பதிலிலேயே தெரிய வேண்டும் எப்படியாகப்பட்ட ஆட்கள எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்று.

நம் மக்கள் மலேசியா சிங்கப்பூருக்கு ஆரம்பத்தில் புறப்பட்டு செல்லும் காலங்களில் வயதை நிர்ணயிக்க கப்பலுக்குள் நுழையுமுன் கன்னத்தை தடவிப்பார்த்து [சவரம் செய்திருந்தால் “பெரியவன்”] அனுப்புவார்களாம். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் 'மிகப்பெரிய' கண்டுபிடிப்பு இது. கால ஓட்டத்தில் என்ன என்ன தடைகள் இருந்தாலும் மனித மூளை தப்பிக்க ஈசியாக ஒரு  தடம் போட்டுவிடும் என்பது சமயங்களில் எந்த அரசுக்கும் தெரிவதில்லை.

இப்போது வந்திருக்கும் பட்ஜட் ஏர்லைன்ஸ் அதிகம் விமான      பயணங்களை ஊக்குவித்தாலும் பயணிக்கும் போது பெரும் அவஸ்தைகளே மிஞ்சுகிறது என்று பட்டிமன்ற தீர்ப்பு மாதிரி சொல்லி விடலாம்.

புதுக்கல்லூரியில் படிக்கும்போது நாங்கள் வாங்கிக் கொடுத்த டிக்கட் OK  களும் தாதர் எக்ஸ்பிரஸ் டிக்கட்களின் மொத்த கூட்டுத்தொகையும் கின்னஸ் புக் கில் இடம் பெரும் அளவுக்கு அதிகமானது. [வெளிநாடு போய் இறங்கி ஒருவர் கூட 'கடுதாசி" போடாதது வேறு கதை]. பாஸ்போர்ட்டையும் டிக்கட்டையும் ரொம்பவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சொல்லி நம்மிடம் ரயில்வே ஸ்டேசனில் வந்து சொல்வார்கள். கடைசியில் ட்ரைன் நகறும் போது சத்தமாக ‘மாப்லெ மறந்துடாம சொன்ன தேதிக்கு டிக்கட் OK வாங்கிட்டு தாக்கல் சொல்லிடு என்று மறவக்காடு/தம்பிக்கோட்டை ஸ்டேசன் மாஸ்டர் காதில் விழும் அளவுக்கு கத்துவார்கள். ஒருமுறை  நான் கொஞ்சம் "ம்ம் ம்ம் சரி" என்று அவ்வளவு வெயிட் கொடுத்து பேசாததால் என் மச்சான் என்னைப்பார்த்து சொன்னது ' டேய் பாஸ்போர்ட்டை / டிக்கட்டை காணாக்கிடாதே ..அப்படி காணாக்கிட்டா வரும்போது  திருவாரூர் / திருத்துறைப்பூண்டி எங்காவது  எறங்கி ஏதாவது மளிகைக்கடையிலே போய் எனக்கு வேலை கேட்டு வாங்கிட்டு வா.. நான் நல்லா சுருல் போடுவேன்.”

நாம் கோபால் பல்பொடி மாதிரி  இலங்கை , மலேசியா, சிங்கப்பூர் என்று போன காலம் போய் கேள்விப்படாத நாட்டிற்கெல்லாம் போய் வருகிறோம். 

இன்னும் நமது மக்கள் தனது வேலைக்காக எங்கெல்லாம் போய் தனது வருமானத்திற்காக வாழ்க்கையில் பல வருடங்களை தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.

ஒரு வாரத்துக்குள் மலேசியா சிங்கப்பூர் வந்து   வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி இந்தியாவில் விற்கும் வியாபாரிகளை "குருவி"என்று சொல்வார்கள். நாம் எவ்வளவுதான் அதிக நாட்கள் தங்கினாலும் நாமும் ஒரு குருவிதான். கொஞ்சம்    “நாள் பட்ட குருவி”.

[அப்பாடா 'இந்தாளு தலைப்பு க்கு சம்பந்தம் இல்லாமெ எழுதறான்னு யாரும் சொல்லிடக்கூடாதல்லவா? ].

இதைப்படித்த பிறகு 'உண்மையிலேயே இதில் ஒன்னுமில்லேதான்" என்று சொல்பவர்கள்தான் உண்மையான விமர்சகர்கள்.

ZAKIR HUSSAIN

37 Responses So Far:

sabeer.abushahruk said...

(











)
-நல்ல விமர்சகன்.

Abdul Razik said...

//இதைப்படித்த பிறகு 'உண்மையிலேயே இதில் ஒன்னுமில்லேதான்" என்று சொல்பவர்கள்தான் உண்மையான விமர்சகர்கள்.//

உள்ளே இருக்கும் அழகான பயண கட்டுறையை மறந்த்துவிட்டு இதைப்படித்த பிறகு 'உண்மையிலேயே இதில் ஒன்னுமில்லேதான்" என்று சொல்பவர்கள் கட்டுறையை ரசித்து படிக்காதவர்கள். நல்ல கருத்துக்களை வெளியே சொல்லாமல் படித்தவுடன் கிழித்துவிடவும் என்று மட்டுமே எழுதி இருக்கிறது என்று வடிவேல் சொல்வது போல் உள்ளது.

பயணம் தொடரும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் Brother ZakirHussain

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// நல்ல விமர்சகன் சொன்னது...

(
) //

sabeer.abushahruk said...

அம்பி,
அந்த ப்ரீஃப் கேஸைப் பற்றி அத்தனை இலகுவாகச் சொல்லிச் செல்லாதே.  அது 15 வருடங்கள் பழமை வாய்ந்தது (பழசல்ல).  காலியாகவே 7 கிலோ எடைகொண்டது.  கோலாலம்ப்பூர் ஏர்ப்போர்ட்டில் நீ குறிப்பிட்ட கேட் நம்பர் 7 க்கு அந்த பெட்டியுடன் போய் நின்ற என் டிப்ளமேட்டிக் தோரணையைப் பார்த்த ஸ்ட்டாஃப் இன்ச்சார்ஜ்,
“காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்லாம் கேட் நம்பர் 3 க்குப் போங்க” ன்னு சொன்னாங்கன்னா பார்த்துக்கோயேன்.
 

Ebrahim Ansari said...

பேண்ட் பாக்கெட்டில் கொறிக்கக் கொஞ்சம் வாய்பிளக்க வறுத்த பட்டணிக் கடலை -

காலில் பொசு பொசு என்று அமுங்கும் ஷூ

நடந்துகொண்டே அசைபோட்டுப் பேச ஒரு நல்ல நண்பன் -

இதமான காற்று- சுற்றிலும் சோலைகள்

அப்படியே அனைத்தையும் மறந்து பசும புல் தரையில் ஹாயாக ஒரு வாக்கிங்க் போய்வந்தது போல் இருக்கிறது இதைப் படிக்கும்போது.

Unknown said...

இந்தக்குருவியைப்பார்த்தும் , ஆரம்ப கால கட்டத்துக்கு என்னைக்கூட்டிச்சென்றதை வைத்தும் சொல்கிறேன்.

1968 என்று நினைக்கின்றேன் என்ற மாத்திரத்திலேயே எனக்கு நினைவுக்கு வந்த ஒன்று எங்க வாப்பா சென்னையிலிருந்து , அதிராம்பட்டினத்திர்க்கு அரக்கிடா குதிரை வண்டியில் ( எத்தனை பேருக்கு இந்த குதிரை வண்டிக்கு சொந்தக்காரரை தெரியும் என்று எனக்கு தெரியாது) வந்ததை தவிர வேறொன்றும் நினைவில் வரவும் இல்லை மனதில் விமர்சனம் எழவுமில்லை.

ஆனால் அந்த காலம் திரும்பி வராதா என்ற ஏக்கம் மட்டும் உண்டு.


அபு ஆசிப்.

Unknown said...

நீ குறிப்பிட்ட கேட் நம்பர் 7 க்கு அந்த பெட்டியுடன் போய் நின்ற என் டிப்ளமேட்டிக் தோரணையைப் பார்த்த ஸ்ட்டாஃப் இன்ச்சார்ஜ்,
“காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்லாம் கேட் நம்பர் 3 க்குப் போங்க” ன்னு சொன்னாங்கன்னா பார்த்துக்கோயேன்.


இத நான் சுத்தமா நம்ப மாட்டேன்.
பொய்யா சொல்ற

ஜாகிரு, நம்பாதே சொல்லிப்புட்டேன் ஆமா...

முடி நரைக்கலண்டா அதுக்காக இப்படியா.

அபு ஆசிப்.

Yasir said...

ஒன்னுமில்லைதான் ஆனா எல்லாமே இருக்கு..நக்கல்/நாசூக்கு/நகைச்சுவை/நட்பு/நல்லது/கெட்டது...ஃபுலோ வருதா ?........பணிப்பிணைக்களுக்கு மத்தியில் ஸ்ரஸ் ஃபிர் மாத்திரை உங்கள் ஆக்கம்...சூப்பர் காக்கா

Yasir said...

*.*//stress free// ஸ்ரஸ் ஃபிரி

Yasir said...

//“காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்லாம் கேட் நம்பர் 3 க்குப் போங்க”// அப்படியா ச்சொன்னாங்க ..இல்லை ரொம்ப நாளா படிச்சு படிச்சு புக் வைத்து தேய்ந்துபோன 15 வருடங்கள் பழமை வாய்ந்த உங்க பெட்டியை பார்த்துவிட்டு”டுட்டோரியல் காலேஜ்” பசங்களெல்லாம் அந்தப் பக்கம் போங்கண்டாங்களே கவிக்காக்கா...உண்மைச் சொல்லிபுடுங்க

பின் குறிப்பு : நானும் எங்க வாப்ப கொடுத்த ஒரு டிப்ளோமேட்டிக் பெட்டியை 20 வருடமாக புதிதாக இன்னுமும் வைத்திருக்கின்றேன்

Yasir said...

//எத்தனை பேருக்கு இந்த குதிரை வண்டிக்கு சொந்தக்காரரை தெரியும் என்று எனக்கு தெரியாது// கண்ணைவிட்டு மறையும் உருவமா ? அது காக்கா...அதெப்படி சென்னையிலிருந்து அதிரைக்கு குதிரை வண்டியில் ..எத்தனை நாளா ஓட்டிக்கிட்டு வந்தாரு அரக்கிடா அன்கிள்....

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Zakhir Hussain,

Stories of kuruvies budding from 1968 to brother Mr. Sabeer's recent travel to Malaysia. The discrete collection of facts and funny comedies are unique by your own style of narration.

Pictures are nice add-ons for the stories of kuruvies.

Actually kuruvies(birds) are traveling, searching for food with their built in instinct. But we(kuruvies) have consciously chosen our travel to almost every country in the world.

“நாள் பட்ட குருவி” - This statement is reflecting reality of all the expatriates sitting in foreign countries.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

//அதெப்படி சென்னையிலிருந்து அதிரைக்கு குதிரை வண்டியில் ..எத்தனை நாளா ஓட்டிக்கிட்டு வந்தாரு அரக்கிடா அன்கிள்....//

தம்பி! கடந்த கால நினைவுகளுக்குள் சென்று விட்டதால் , அத்ராம்பட்டினத்தில் உள்ள புகை வண்டி நிலையத்தை நினைவுக்கு கொண்டுவர மறந்துவிட்டேன்.
மனிச்சுடுங்கோ தம்பி.

abu asif.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஜாஹிர் காக்கா, நாள்பட்ட குருவிகளை பிடிக்க சவுதி அரசாங்கம் பெரிய சுருக்கு/கண்ணியை வர்ர ஜூலை 3ந்தேதிக்கப்புறம் நாடு முச்சூடும் விரிக்கப்போகுதாம்.

கப்பலுக்கு போன மச்சான் கண்மாசியாக்காணாப்போன மச்சான்.....பாட்டுக்கும் இங்குள்ள புகைப்படங்களுக்கும் தொடர்பு இருக்குமோ?

நாள்ச்சென்டு வந்தாலும் நல்ல ரசனையான அனுபவக்கட்டுரை இது.

(சபீர்காக்கா, இந்தக்கட்டுரையை அப்படியே இங்க்லீஸில் ட்ரான்ஸ்லேட் செய்ய ஏதேனும் திட்டம் உண்டா?)

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி

ஆக்கம், புகைப்படம் மற்றும் தகவலுக்கும் நன்றி.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Yasir said...

//தம்பி! கடந்த கால நினைவுகளுக்குள் சென்று விட்டதால்// ஆமாம் காக்கா நினைவுகள் சுகத்தில் எழுத வந்ததை மறப்பது/அறியாமல் மாற்றி எழுதுவது எல்லாருக்கும் வாடிக்கைதானே காக்கா...அதுக்கு ஏன் இம்புட்டு பெரிய வார்த்தை.....அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக ஆமீன்

Ebrahim Ansari said...

மர்ஹூம் அரக்கிடா அவர்களை நினைக்கையில் கேள்விப்பட்ட ஒரு செய்தி.

முத்துப் பேட்டையில் இருந்து மூன்று பேர் அதிரை வந்தார்கள். மனோரா போய்விட்டு வரவேண்டுமென்று அரக்கிடா அப்பாவிடம் குதிரைவண்டி கேட்டார்கள்.

அப்போது நடந்த உரையாடல்

அப்பா மனோராவுக்கு வருவீங்களா?
போகலாம் வாப்பா இருநூறு ரூபாய் ஆகும்.
சரி தருகிறோம்.ஆனால் ஒரு சந்தேகம் வண்டியிலே நீங்களுமா வருவீர்கள்?
ஆமா பின்னே யார் ஓட்டுறது?
அதுசரிதான் ஆனா நாங்க எங்கே உட்காருவது? வண்டி உங்களுக்குத்தானே சரியாக இருக்கும்?

Shameed said...

குருவியை கருவியாய் வைத்து கட்டுரையை பறக்கவிட்டு விட்டுவிட்டீர்கள்

Shameed said...

Abdul Khadir Khadir சொன்னது…
//நீ குறிப்பிட்ட கேட் நம்பர் 7 க்கு அந்த பெட்டியுடன் போய் நின்ற என் டிப்ளமேட்டிக் தோரணையைப் பார்த்த ஸ்ட்டாஃப் இன்ச்சார்ஜ்,
“காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்லாம் கேட் நம்பர் 3 க்குப் போங்க” ன்னு சொன்னாங்கன்னா பார்த்துக்கோயேன்.


இத நான் சுத்தமா நம்ப மாட்டேன்.
பொய்யா சொல்ற

ஜாகிரு, நம்பாதே சொல்லிப்புட்டேன் ஆமா...

முடி நரைக்கலண்டா அதுக்காக இப்படியா. //

அபு ஆசிப்.



நான் நம்புறேன் ஆனால் ஒரு சின்ன மாற்றத்துடன் “காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்லாம் என்ற இடத்தில் “காலேஜ் புரபாசர் என்று சொல்லி இருப்பார்கள்!!!

Shameed said...

Yasir சொன்னது…
//எத்தனை பேருக்கு இந்த குதிரை வண்டிக்கு சொந்தக்காரரை தெரியும் என்று எனக்கு தெரியாது// கண்ணைவிட்டு மறையும் உருவமா ? அது காக்கா...அதெப்படி சென்னையிலிருந்து அதிரைக்கு குதிரை வண்டியில் ..எத்தனை நாளா ஓட்டிக்கிட்டு வந்தாரு அரக்கிடா அன்கிள்....//



சென்னையில் இருந்து அதிரைக்கு குதிரை வண்டியை அரக்கிடாஓட்டி வந்தாரென்றால் அவர் அரக்கிடாவா ஊர் வந்து சேர்ந்திருக்கா மாட்டார் முல்லு கிடாவாதன் ஊர் வந்து சேர்ந்திருப்பார்

sabeer.abushahruk said...

மலேசியாவில எல்லாம் கவர்ச்சியான பேரா இருக்கு ஆனா அப்பாலா இனி மச்சாங் ஒராங்?

உ. நாசி லீமா: ஆஹா பேரைக் கேட்கும்போது எச்சில் ஊறுதுல்லா? ஆனா சாப்பிடும்போதுதான் தெரீதுபா "அட, கருவாடுஞ் சோறும்"

(உருட்டுக் கட்டையோடு கதவைத்தட்டுறது தம்மாம் லண்டன்காரங்கதான். திறக்காதிய.) மேலே உள்ள மலாய் பாஷை பதிவுக்குத் தேவைப்பட்டதால்தான் மக்களே.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//. நாசி லீமா: ஆஹா பேரைக் கேட்கும்போது எச்சில் ஊறுதுல்லா? ஆனா சாப்பிடும்போதுதான் தெரீதுபா "அட, கருவாடுஞ் சோறும்"//

ஹமீதாக்கா சப்போட்டு தேவை.

Shameed said...

அடுத்தாப்புலே மலாய் கவிதை வருமோ!!

Riyaz Ahamed said...

சலாம்.ஒன்னுமே இல்லாமே இவ்வளவு சுத்துரிங்கலே போலசிபிங்க.பாய் பிஸ்கட் பழசானாலும் ருசி மறலேயே

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நாள்ச்சென்டு வந்தாலும் நல்ல ரசனையான அனுபவக்கட்டுரை இது.

//கட்டிச் சோறிலிருந்து மாங்கா ஊறுகாய் வரை வாங்கிப்போய் துபாயில் சாப்பிட்ட// காலம் போய் இன்று ஆட்டுதலெ, ஆட்டுகாலு, ஆட்டுகொடலு, ஸ்பேர் பார்ட்ஸ் என திருச்சி வழியாக துபாய் போவது புதிய ட்ரென்டாக உள்ளது.

அது மட்டுமல்ல தேங்கா அனுப்புற போக்கு ஒருபுறமிருக்க மதராசுலெ ரொட்டி விலை ஜாஸ்தியால் ஊருலேந்து அது கூட டெய்லி பார்சலாகி போய்க் கொண்டிருக்கிறது.


Ebrahim Ansari said...

தம்பி ஜகபர் சாதிக்!

அதேபோல் துபாயிலிருந்து வருபவர்கள் மந்தி , சுட்ட கோழி, KFC பார்சலும் வாங்கி கையில் பிடித்து வருவதும், வந்ததும் குடும்பத்தினருடன் திருச்சி விமான நிலையத்திலேயே ஒரு ஓரமாக புல் தரையில் உட்கார்ந்து பகிர்ந்து கொள்வதும் நடக்கிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்பாட! இதில் ஒன்னு மட்டும் இல்லை !

நான் மட்டும் தான் விமர்சனம் போடவில்லை !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா, அனுகுண்டு வெடிக்க வந்த உங்க பாஸ் கூட அப்புறம் என்னவெல்லாம் பேசுனீங்க அது ஒரு பதிவா வருமா ?

Unknown said...

//காக்கா, அனுகுண்டு வெடிக்க வந்த உங்க பாஸ் கூட அப்புறம் என்னவெல்லாம் பேசுனீங்க அது ஒரு பதிவா வருமா ?//

ஏற்க்கனவே நம் முஸ்லிம்கள் மேல் சும்மாவாச்சும் தீவிரவாதி தீவிரவாதி
என்று பொய்ப்பெயர் கட்டுரானுவோ, இதில் நீங்கலுவொ வேறு அடிக்கடி வெடி குண்டு வெடி குண்டு என்று பேசினீர்களே யானால், நிருபர் கூட்டத்தையே தூக்கி உள்ளபோட்டுடுவனுவோ பாத்துக்குங்க ஆமா சொல்லிபுட்டேன் ....

அப்துல்மாலிக் said...

//புதுக்கல்லூரியில் படிக்கும்போது நாங்கள் வாங்கிக் கொடுத்த டிக்கட் OK களும் தாதர் எக்ஸ்பிரஸ் டிக்கட்களின் மொத்த கூட்டுத்தொகையும் கின்னஸ் புக் கில் இடம் பெரும் அளவுக்கு அதிகமானது. [வெளிநாடு போய் இறங்கி ஒருவர் கூட 'கடுதாசி" போடாதது வேறு கதை]. //

மதராஸில் வேலை செய்யும் ஒவ்வொருவ்ருக்குக்கும் இது எழுதப்படாத விதி.

Canada. Maan. A. Shaikh said...

சிலர் கட்டிச் சோறிலிருந்து மாங்கா ஊறுகாய் வரை வாங்கிப்போய் துபாயில் சாப்பிட்டதாக ஆட்களை அழைக்கப் போகும்போது கேள்விப் பட்டதுண்டு.

மெயால்லுமே நானும் சாப்பிட்டு இருக்கிறேன் கொக்கு, சிரவி எல்லாம் நல்லா பெறட்டி கொடுத்து விடுவாங்க...

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர் அவர்களுக்கு உங்கள் மாமா எஸ். முகமது பாரூக் அவர்களின் கருத்து என் மூலமாக.

மருமகனே ஜாகிர்!

அது சோசியல் காண்ட்ராக்ட் அல்ல. பிழைக்க வெளிநாடு போனவனின் தலை எழுத்து. அ. நி. இடம் சொல்லி திருத்தவும்.

அதை ஏன் மருமகனே இப்ப கிண்டி கொல்றே?

ஆமா! ? மருமகன் சபீருக்கு மலேசியாவில் பேரன் பேத்தி யாரும் இல்லையா? ஒரே ஒரு சூட்கேசுடன் மட்டும் அங்கே வந்தாரே.

Shameed said...

குருவியை இப்படி துருவி துருவி பரவி விட்டுடியலே

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா,

தங்களின் எந்த ஒரு பதிவை படித்தாலும் மனதில் இருக்கும் stress நிச்சயம் குறைக்கிறது. ஜஸக்கல்லாஹ் ஹைர்.

யதார்த்தத்தை உங்களுக்கே உரிய பாணியில் சொல்லும் விதம் தங்களின் முதல் பதிவிலிருந்து அவதானித்து வருவது. தொடர்ந்து எழுதி எங்களின் stressயை குறையுங்கள்.

(ஜாஹிர் காக்காவை டாக்டராக்கா என்று கூப்பிட மறத்திட்டோமே என்று யாரோ சவுதிலிருந்து முணுமுணுப்பது இங்கு அமீரகத்துக்கு கேட்கிறது, விஞ்ஞானியாக்கா அந்த ஆளு நீங்களில்லை)

Shameed said...

தாஜுதீன் சொன்னது…

(ஜாஹிர் காக்காவை டாக்டராக்கா என்று கூப்பிட மறத்திட்டோமே என்று யாரோ சவுதிலிருந்து முணுமுணுப்பது இங்கு அமீரகத்துக்கு கேட்கிறது, விஞ்ஞானியாக்கா அந்த ஆளு நீங்களில்லை)

msmமா???

Shameed said...

Yasir சொன்னது…

//பின் குறிப்பு : நானும் எங்க வாப்ப கொடுத்த ஒரு டிப்ளோமேட்டிக் பெட்டியை 20 வருடமாக புதிதாக இன்னுமும் வைத்திருக்கின்றேன்//

இன்னும் பத்து வருஷம் கழித்து ஏதாவது மியூசியம் திறக்கும் எண்ணம் எதுவும் இருக்கா!!!

ZAKIR HUSSAIN said...

இங்கு கலகலப்பாக கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. தனித்தனியாக பெயர் சொல்லி எழுத முடியாத அளவுக்கு வேலைகள் அதிகமாகிவிட்டது.

மற்றொரு பதிவில் சந்திப்போம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு