Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை மக்களுக்கு அன்பான வேண்டுகோள் ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | May 10, 2013 | , , , , , ,


அஸ்ஸலாமு அலைக்கும்.

நேற்று மாலை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கந்தூரிக் கமிட்டியினருக்கும் தாருத் தவ்ஹீத் அமைப்பினருக்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் விபரங்கள் தொகுக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் தனிப்பதிவாக வரும்.

பேச்சுவார்த்தையின்போது, கந்தூரிக்குப் பொதுமக்கள் ஆதரவு பெருவாரியாக இருப்பதாகவும் எங்களைப் போன்ற நாலைந்து பேர்கள்தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் க.கமிட்டியின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.

அது போலியானது என்பதை உணர்த்த கந்தூரியை எதிர்க்கும் ஒவ்வொருவருக்கும் அரிய வாய்ப்பு.

கீழ்க்காணும் மாதிரி மின்னஞ்சல் அல்லது உங்களுக்குத் தோன்றுவதை ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதி,  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகளான

collrtnj@nic.in, மற்றும் spthanjavur@yahoo.com

எனும் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாதிரி:
______________

SUBJECT: REQUEST TO BAN KANDURI IN ADIRAMPATTINAM.

Dear Sir,

Kanduri is Un-Islamic. I register my protest for Kanduri which will take place on 11th May 2013 in Adirampattinam.

Thanks,
______________

கந்தூரியை வீழ்த்த வேண்டுமாயின் அதன் பொருளாதார வேரைப் பிடுங்க வேண்டும்.

(1) கந்தூரி என்பது ஹராம் என்று நம்புபவர்கள், கந்தூரி வசூல் எனக் கேட்டு யார் வந்தாலும் ஹலால் சம்பாத்தியப் பணத்தை ஹராமுக்குக் கொடுப்பதை ஹராமாக்கிக் கொள்ளவேண்டும்.

(2) மலிவு விலையில் சாமான் வாங்கப் போவதாகக் கந்தூரிக்குக் கடைக்குச் செல்வதற்குக் காரணம் கூறுபவர்களிடம், சற்றே விலை கூடுதலாக இருந்தாலும் வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்த வேண்டும்.

இந்த இரண்டிலும் நாம் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. ஈட்டியைச் சரியான இலக்குக்கு எறிந்தால் மட்டுமே இன்ஷா அல்லாஹ் வெற்றி கிட்டும்.

உறுதியுடன் முயல்வோம்; அல்லாஹ் துணை நிற்பான்.

ஜஸாக்கல்லாஹு கைரா!

SEC-ADT

21 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்று காலை கணினி முன்னால் அமர்ந்ததும் முதல் வேலையாக நான் செய்தது...

collrtnj@nic.in, மற்றும் spthanjavur@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்பியதுதான் !

Dear Sir,

Kanduri is Un-Islamic. I register my protest for Kanduri which will take place on 11th May 2013 in Adirampattinam.

Thanks

M. Naina Thambi
S/o. M.I. Mahmood [LMS]
Middle Street
Adiraimpattinam 614701

Unknown said...

கந்தூரியை வீழ்த்த வேண்டுமாயின் அதன் பொருளாதார வேரைப் பிடுங்க வேண்டும்.

சரியாகச்சொன்னீர்கள்

அபு ஆசிப்

அதிரைக்காரன் said...

வ அலைக்கும் சலாம்.

அதிரையின் அனைத்து ஜும்ஆ பயானிலும் இன்றைய பேசுபொருள் கந்தூரியை கண்டிப்பதாக இருக்கட்டும்.

ஜும்மா தொழுகையாளிகளிடமும் ஆலிம்களிடமும் கந்தூரியை தடைசெய்யும் பொதுமக்களின் கோரிக்கை அடங்கிய கையெழுத்துகளைப் பெற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க அவசர ஏற்பாடுகளைஇன்றே முன்னெடுக்க வேண்டும்.

அதிரை தாருத் தவ்ஹீதுடன் அல்லாஹ்வுக்கு அஞ்சும் அனைத்து சமுதாய இயக்கங்களும் கரம்கோர்க்க வேண்டும்.

அமைதியான வழிகளில் சுமூக தீர்வுகாண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

sabeer.abushahruk said...

Done as below:

Dear Sir,

Kanduri is Un-Islamic. I register my protest for Kanduri which will take place on 11th May 2013 in Adirampattinam.

Thanks,

On behalf of my family living in door numbers 518 & 520, MSM lane, Adham nagar, college road, Adirampattinam.

B. Sabeer Ahmed
S/o. K. Bawa shahib

அதிரைக்காரன் said...

தஞ்சை மாவட்ட ஆட்சியர் & காவல்துறை உயரதிகாரிக்கு நானிட்ட மடலின் உள்ளடக்கம்.




Respected Sir,



I hereby would like to register my protest to BAN KANDORI IN ADIRAMPATTINAM which is against our basic religious belief.



Kindly do the needful to STOP this unreligiuos event which would take place in our town on 11-May,2013 and onwards asap.



Thanking you,Sir,





With Best Regards,



N.JAMALUDEEN

ADIRAMPATTINAM

adiraimansoor said...

நான் கலெக்டருக்கு அனுப்பிய மடல்

அன்புக்குரிய தஞ்சை கலெக்டர் அவர்களுக்கு

தஞ்சை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் உங்கள் பனிகள் பாராட்டுக்குரியவை
உங்களுக்கு நன்றி சொல்ல நாங்கள் பெரிதும் கடமை பட்டுள்ளோம்

நான் அதிராம்பட்டினத்தில் வாழும் இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்தவன்
எங்களூரில்
இஸ்லாத்தில் இல்லாத செயலான தர்காவில் நடத்தப்படும் கந்தூரி என்ற பெயரில் சிலபேர் சொந்த வருமானத்திற்காக களியாட்டங்கள் நடத்துகின்றனர்.இஸ்லாமிய மதத்தின் பேரால் நடத்தப்படும் இந்த கந்தூரி நிகழ்சிகளுக்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிட தக்கது
அது சமையத்தில் குடி, குட்டி,சூது போன்ற இஸ்லாத்தில் வண்மையாக கண்டிக்க கூடிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இஸ்லாமிய பெயர்தாங்கிகள் வருடா வருடம் இஸ்லத்திற்கு களங்கம்கற்பித்துக்கொண்டுள்ளனர்.இதனால் வருடா வருடம் கலவரங்களும் நடக்கின்றன. மக்கள் மீது அன்பு கொள்ளும் தாங்கள் இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் இந்த ஈனச்செயளை நடக்க விடாமல் தடுத்து நிறுத்துமாறு அதிராம்பட்டினம். இஸ்லாமியர்கள் சார்பிலும் என்னுடைய சார்பிலும் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அதிரைமன்சூர்
ரியாத்

Unknown said...

கந்தூரி எடுக்கும் சகோதரர்களுக்கு உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படவேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன் :

சகோதரர்களே, நீங்கள் எடுக்கும் இந்த கந்தூரிக் விழா உண்மையிலேயே , இஸ்லாமிய மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட ஒன்று என்று எடுக்கின்றீர்களா ?
அல்லது நம் முன்னோர்கள் நமக்கு தவறான வழியை காட்டிவிட்டுச்செள்ளவில்லை என்று எடுக்கின்றீர்களா?
அல்லது இதனால் அல்லாஹ்விடம் நமக்கு நாளை மஹ்ஷரில் அவ்லியாக்களை கண்ணியப்படுத்திய நன்மை கிடைக்கும் என்று எடுக்கின்றீர்களா ?
அல்லது , நீங்கள் கேட்டால் அவ்லியாக்கள் காது கொடுத்துக்கேட்கின்றார்கள் நமக்கு பதில் தருகின்றார்கள் என்று எடுக்கின்றீர்களா ?
அல்லது நம்முடைய அதிகரித்துவிட்ட பாவங்களின் காரணமாக அல்லாஹ் நம் இறைஞ்சுதலை செவியேர்க்கமட்டான் என்று நினைத்து இவர்களை இடைத்தரகர்களாக வைத்து கண்தூரியின் மூலம் அல்லாஹ்வை நெருங்க எடுக்கின்றீர்களா ?
அல்லது பரம்பரை பரம்பரையாக நடந்துவரும் இந்த விஷேஷ விழாவை எவன் சொல்லியும் நாம் விடுவதில்லை என்று எடுக்கின்றீர்களா ?
இது அந்நிய மதத்திலருந்து நம் இஸ்லாம் மதத்திற்கு தாவிவிட்ட ஒரு வேரோடு அழிக்கப்பட வேண்டிய ஒரு விழா என்று தெரியாமல் எடுக்கின்றீர்களா ?
அல்லது, சென்றுவிட்ட நம் முன்னோர்கள் அறியாமையின் காரணமாக அன்று இஸ்லாத்தின் மேன்மையை உணர்ந்து மாற்று மதத்திலிருந்து வந்த வர்களுக்கு உண்மையான இஸ்லாத்தினை போதிக்காததின் காரணமாக, தவறுதலாக நம்மோடு இஸ்லாத்தின் பெயரில் நம்மோடு ஒன்று கலந்துவிட்ட இந்த மாற்று மத
சடங்குகளின் காப்பி தான் இது என்று தெரியாமல் எடுக்கின்றீர்களா ?
அல்லது ஐந்து வேலை தொழுகையின் வக்துக்கும் வேட்டு வைக்கும் இந்த செயல் தொழுகைக்கு மாற்றாக அல்லாஹ்வின் கேள்விக்கு நாம் பதில் சொல்ல இந்த கந்தூரி ஒன்று போதும் என்று நினைத்து எடுக்கின்றீர்களா ?
முத்தாய்ப்பாக ஆண் பெண் இரு பாலர் கலந்து உறவாட வழி வகுத்துக்கொடுக்கும்
இந்த செயல் உண்மையிலே மனசாட்சி உள்ள தன தாயும், சகோதரிகளும் பெண்கள்தான் என்று நினைத்தும் தான் இந்த செயலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றீர்களா ?

இதில் என்ன காரணம் சொல்லப்போகின்றீர்கள்,?
மனசாட்சி உள்ள கந்தூரி கனவான்களே கொஞ்சம் உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் .

இது வீண் பிடிவாதத்திற்கா?
இதனால் தங்கள் கௌரவம் போய்விடும் என்ற நினைப்பா?
இவர்கள் சொல்லி நாம் என்ன கேட்பது ? என்ற ஈகோவா?

எதுவாக இருந்தாலும், அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, ஒரு கணம், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் கண் முன்னே நிழலாடவிட்டு
யோசியுங்கள்.

நிச்சயமாக நல்வழி பெறுவீர்கள்.
அல்லாஹ் உங்கள் பாவங்களையும், எங்கள் பாவங்களையும் மன்னிக்க போதுமானவன்.

ஆமீன்
அபு ஆசிப்.



தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கலெக்டருக்கான மின்னஞ்சல் நானும் அனுப்பிவிட்டேன்.

ADTயின் முயற்சியை அல்லாஹ் வெற்றியாக்குவானாக..

தாஜுதீன் (THAJUDEEN ) said...


//கந்தூரியை வீழ்த்த வேண்டுமாயின் அதன் பொருளாதார வேரைப் பிடுங்க வேண்டும்.

(1) கந்தூரி என்பது ஹராம் என்று நம்புபவர்கள், கந்தூரி வசூல் எனக் கேட்டு யார் வந்தாலும் ஹலால் சம்பாத்தியப் பணத்தை ஹராமுக்குக் கொடுப்பதை ஹராமாக்கிக் கொள்ளவேண்டும்.

(2) மலிவு விலையில் சாமான் வாங்கப் போவதாகக் கந்தூரிக்குக் கடைக்குச் செல்வதற்குக் காரணம் கூறுபவர்களிடம், சற்றே விலை கூடுதலாக இருந்தாலும் வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்த வேண்டும்.

இந்த இரண்டிலும் நாம் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. ஈட்டியைச் சரியான இலக்குக்கு எறிந்தால் மட்டுமே இன்ஷா அல்லாஹ் வெற்றி கிட்டும்.

உறுதியுடன் முயல்வோம்; அல்லாஹ் துணை நிற்பான்.//



இன்ஷா அல்லாஹ்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அனுப்பியாச்சு, இன்சா அல்லாஹ் பலன் கிடைக்கும்.
----------------------------------------------------------

Jahabar Sadhik
7:52 AM (0 minutes ago)

to collrtnj, spthanjavur

மேதகு தஞ்சை கலெக்டர் அவர்களுக்கு,

எங்கள் மாவட்டத்தில் உங்களின் பணி திருப்தி அளிக்கிறது.

இந்த மாவட்டத்தின் பிரதான ஊராகிய அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி என்ற தர்காவில் ஆண்டு தோறும் இஸ்லாமிய மாத அடிப்படையில் திருவிழா (கந்தூரி) என்ற பெயரில் இஸ்லாமிய மார்க்கத்தில் அறவே சொல்லப்படாத சமாதியை வணங்குதல், அதன் அருகே ஆடல் பாடல் என இன்னும் பல சமுதாய துரோக செயல் நடத்தப்பட்டு எங்கள் கலாச்சாரங்களுக்கு இழுக்கு தரக்கூடிய வகையில் அங்கு செயல்படுகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாததால் பாவங்கள், குற்றங்களை தடுக்கும் வகையில் இதை உடனே தடுத்து நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றியுடன்

10-05-2013

ஜஹபர் சாதிக்,
s/o M.A.M.முஹம்மது ஹனீபா ,
நடுத்தெரு,
அதிராம்பட்டினம்.

அஹ்மது ரிதுவான் - துபாய். said...

கந்தூரியை நிறுத்துவது அவ்வளவு ஈசி கிடையாது, நிறுத்த முயற்சியும் நடக்குது, நம்மில் ஒற்றுமை இல்லையென்றால், எந்த சக்தியைக் கொண்டும் எதையும் சாதிக்க முடியாது என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும், முதலில் ஊரை ஒற்றுமை படுத்தனும், நமக்குள் இருக்கும் போட்டி, பொறாமை, எல்லாம் நீங்கனும், நீங்கள் செய்யும் இந்த முயற்சி வெறும் வீண் தானே ஒழிய வேறு இல்லை. ஜமீல் காகா அவர்களே இதை நீங்கள் முதலில் உங்கள் தெருவில் ஆரம்பிக்க வேண்டியதை விட்டுட்டு இங்கு வந்து ஏன்?

Unknown said...

மாவட்ட ஆட்சியருக்கு நான் எழுதிய மடல்

அன்புள்ளம் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் , அதிராம்பட்டினத்தைசேர்ந்த
அப்துல் காதிர் எழுக்கொள்வது என்னவென்றால்.

இன்னும் ஒருசில தினங்களில் நடைபெற இருக்கும் இந்த கந்தூரி விழா என்னும் அனாச்சாரம் ஒவ்வரு வருடமும் கலவர மேகங்கள் அதிரையை சூழ்ந்து கொள்ளுமோ என்று பொது மக்கள் மனதில் அச்ச்சமூட்டுபவையாகத்தான், கந்தூரிக்கு ஒரு நாள் முன்னதாக நடைபெறும் இந்த ஊர்வலம் ஏற்ப்படுத்திக்கொண்டு இருக்கின்றது.

இது ஒவ்வரு வருடமும் அதிராம்பட்டினத்தில் இரண்டு அவ்லியாக்கள் (இறை நேசர்கள்) கண்ணியப்படுத்துகின்றோம் என்ற பெயரில் அந்த அவ்லியாக்களே சொல்லிவிட்டு போகாத விஷயங்களை , அவர்களே தடுத்த விஷயங்களை, இதை செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டுச்சென்றவைகளை, தவறுதாலாக நம் முன்னோர்கள் புரிந்து கொண்ட வைகளை, இஸ்லாம் மார்க்கத்திற்கு முரனானவைகளை , ஒரே சமுதாயத்தைச்க்கேர்ந்தவர்களிடையே பிணக்குகளும், கோபதாபங்களும், சண்டை சச்சரவுகளும் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம் என்று தெரிந்தும், வீணுக்காக, பொது அமைதியைக்குளைக்கும்வண்ணம் நடத்திக்கொண்டு வருகின்றார்கள்.

இந்த ஊர்வலம் நடந்து முடிந்தவுடன், கந்தூரி விழா என்னும் அனாச்சார (10 நாட்கள்) இறை நேசரை போற்றுகிறோம் என்ற பெயரில் சந்திப்புகள் , சட்டபூர்வமற்ற முறையில் ஆன் பெண் கலந்துறவாட , அது விபச்சாரம் வரை கொண்டுபோக தூண்டுதலாக சில அசம்பாவித நிகழ்வுகளும்
அங்கு நடந்தேற வாய்ப்புகளை, கந்தூரி நடத்துகிறோம் என்ற பெயரில் இவர்களை அறியாமலேயே ஏற்ப்படுத்திகொடுக்கின்றார்கள்.

உண்மையைச்சொல்லப்போனால் , இவர்கள் இஸ்லாத்தில் முஸ்லிமாக இருந்துகொண்டே, இஸ்லாத்தின் தூய வடிவத்தை குழி தோண்டி புதைக்கக்காரனமாக இருந்துகொண்டு, அதை மாற்றுமத நண்பர்களுக்கு தவறான முறையில்(உண்மையான இஸ்லாத்தை போதிக்காமல்) அறிமுகம் செய்துகொண்டு இருக்கின்றார்கள்.

இதை நடத்த இவர்களிடம் உண்மையிலேயே உருப்படியான காரணம் எதுவும் இல்லை. மேலும் இதன்மூலம் இவர்கள் என்ன நாடுகிறார்கள், என்று இவர்களுக்கே தெரியாது. இது உண்மையிலே இஸ்லாத்தின் பெயரால் நடைபெறும் ஒரு பகிரங்க இஸ்லாத்திற்கு எதிரான ஒரு மோசடி. இதன் மூலம்
வருடா வருடம், அதிராம்பட்டினத்தில் தெருவுக்கு தெரு, வார்டுக்கு வார்டு , சண்டை சச்சரவுகளும், வீண் விவாதங்களும் ஏற்பட்டும் ஊரின் அமைதி கெட்டுக்கொண்டு இருப்பதுதான் நடைபெறுகிறது.

இதுவன்றி மேலும் முதல்நாள் ஊர்வலம் வரும்போது, ஊரின் மத்தியில் பெண்களின் aabaasa நடனங்கள், மற்றும் அருவருக்கத்தக்க வசனங்களை பேசிக்கொண்டு , பெண்கள் இருக்கும் பகுதியில் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் வாடிக்கையாய் இருந்து கொண்டு வருகிறது. மொத்தத்தில் இந்த ஊர்வலமும், இந்த 10 நாட்கள் சந்திப்புகளும் உடன் நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆதலால் ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவது என்னவென்றால், இனி எந்த வருடமும் இந்த ஊர்வலம் இவ்வூரில் நடைபெறாவன்னமும், அந்த 10 நாட்கள் பாத்திகா என்ற பெயரில் நடக்கும் சந்திப்புகள் நடைபெராவன்னமும் தங்கள் மூலம் ஒரு அதிரடி தடையை எதிர் பார்க்கின்றோம். மேலும் இந்த தடையை மீறி நடக்கும் ஊர்வலங்களை காவல் துறை கொண்டு கட்டுப்படுத்த தங்கல்மூலம் அரசாணையை எதரி பார்க்கின்றோம்.

தங்களின் பல அலுவல்களுக்கிடையில் இதை ஒரு அவசரகால நடவடிக்கையாகக்கருதி , தங்கள் நடவடிக்கையை எதிர்நோக்கியவனாக

அப்துல் காதிர்
அதிராம்பட்டினம்

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

தகவலுக்கும் நன்றி.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Shameed said...

கலெக்டருக்கான மின்னஞ்சல் நானும் அனுப்பிவிட்டேன்.

ADTயின் முயற்சியை அல்லாஹ் வெற்றியாக்குவானாக..

Yasir said...

கலெக்டருக்கான மின்னஞ்சல் நானும் அனுப்பிவிட்டேன்.

ADTயின் முயற்சியை அல்லாஹ் வெற்றியாக்குவானாக..

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கலெக்டருக்கான மின்னஞ்சல் நானும் அனுப்பிவிட்டேன்.

ADTயின் முயற்சியை அல்லாஹ் வெற்றியாக்குவானாக..

sabeer.abushahruk said...

// ஜமீல் காகா அவர்களே இதை நீங்கள் முதலில் உங்கள் தெருவில் ஆரம்பிக்க வேண்டியதை விட்டுட்டு இங்கு வந்து ஏன்?//

சகோதரா,
ஜமீல் காக்கா தெருவில் தர்ஹாவே இல்லையே, அப்புறம் கந்தூரி யார் எடுக்க; எப்படித் தடுக்க?

சகோதரர் "உங்களுக்கு நண்பன்": மேலே பின்னூட்டங்களில் சகோதரர்கள் நிறைய கேள்விகள் கேட்டுள்ளனர். அதற்கெல்லாம் பதில் சொன்னீர்கள் என்றால் உங்கள் கேள்விக்கும் பதில் கிடைக்கும். தவிர, கந்தூரி வேண்டாம் என்பவர்கள் எல்லோருமே சொந்தப் பெயரில் தைரியமாக வரும்போது தாங்கள் மட்டும் புனைப்பெயரில் ஏனோ? வெட்கமாக இருக்கிறதா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//unkalukku nanban சொன்னது…
அமைதியாக இருப்பதுதான் நல்லது.//

தவறுகளை வேடிக்கை பார்த்து அமைதி காக்கனுமா?
நல்லதை ஏவி தீயதை தடுக்கனும் என்பது தெரியாதா?



//ஏனென்றால்! நீங்கள் வேறு. அவர்கள் வேறு.//

அப்படின்னா நீங்க யாரு, உங்களுக்கு நண்பன் யாரு?

Canada. Maan. A. Shaikh said...

இன்னும் நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும் வரம்பு மீறுவதிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்"
(அல்குர் ஆன் 05:2)

Done as below:

Dear Sir,

Kanduri is Un-Islamic. I register my protest for Kanduri which will take place on 11th May 2013 in Adirampattinam.

Thanks & Regards

Maan.A. Shaikh

East St

Adirampattinam

Camp: Canada

அப்துல்மாலிக் said...

DONE

Its not a simple matter to PROTEST, but we try our level best. If its NOT this year it may happen in forthcoming years, In Shaa Allah

adiraimansoor said...

அஹ்மது ரிதுவான் – துபாய்
என்ற சகோதரர் அதிரை எக்ஸ்பிரஸ் லோகோவின் கீழ் சிலவாசகங்கள் எழுதி அதில் தமது அறியாமையை பதிவு செய்து இருந்தார்.

“கந்தூரியை நிறுத்துவது அவ்வளவு ஈசி கிடையாது, நிறுத்த முயற்சியும் நடக்குது, நம்மில் ஒற்றுமை இல்லையென்றால், எந்த சக்தியைக் கொண்டும் எதையும் சாதிக்க முடியாது என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும், முதலில் ஊரை ஒற்றுமை படுத்தனும், நமக்குள் இருக்கும் போட்டி, பொறாமை, எல்லாம் நீங்கனும், நீங்கள் செய்யும் இந்த முயற்சி வெறும் வீண் தானே ஒழிய வேறு இல்லை”

அதற்கு நான் மறுப்பு மடல் எழுதினேன்.
அந்த மறுப்பு மடலை வெளியிடாமல் அதிரை எக்ஸ்பிரஸ்.இஸ்லாத்திற்குள்ளேயும் சில பார்ப்பனர் ஊடகங்கள் போன்று இருட்டடிப்பு செய்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சாமல் மனிதற்களுக்கு அஞ்சுவார்களையானால்.அதை இழுத்து மூடுவது நல்லது
என்னுடய மறுப்பு மடல் கீழே உள்ளது. அதிரை எக்ஸ்பிரசில் வெளியிடாடததால் இந்த செய்தி மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதினால் வேறு சம்பந்தமில்லாத தலைப்பின் கீழ் பின்னூட்டமாக இடுவதை மன்னிக்கவும்.

அஹ்மது ரிதுவான் சொல்வது தவறு.

தாருத்தவ்ஹீது செய்யும் முயற்ச்சி கண்டிப்பாக வீன் போகாது இன்றில்லை என்றால் என்றாவது அது நடக்கும்
இஸ்லாத்தை அவ்வளவு ஈசியாக வளர்க்க முடியாது என்று நபிகள் நாயகம் ரசூலே கரீம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் இன்று அஹ்மது ரிதுவான் என்றும் முஹம்மது மன்சூர் என்றும் பெயர் சூட்டி இஸ்லாமியனாக வளம் வந்திருக்க முடியாது. நபிகள் நாயகம் ரசூலே கரீம் (ஸல்) அவர்கள் காட்டி தந்தவழி முறைகளைவிட்டு விட்டு அறியாமையில் மூழ்கி கிடக்கும் சகோதரர்களுக்கு இஸ்லாத்தை நன்கு விளங்கிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பொறுப்பு உண்டு.அதைத்தான் அறிந்தவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். இதில் அஹ்மது ரிதுவானுக்கும் பொறுப்பு உண்டு.

இஸ்லத்திற்கு எதிராக நடக்கும் அனாச்சாரங்களை தடுத்து நிறுத்துவதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் கடமை பட்டுள்ளோம். இது போன்ற அனாச்சாரங்களை தடுத்து நிறுத்த அஹ்மது ரிதுவானுக்கு சக்தி இல்லை என்றால்.சக்தி உள்ளவர்களோடு கை கோர்த்து வெற்றி காணவேண்டுமே தவிற இஸ்லாத்திற்கு எதிரன அனாச்சாரங்களை தடுத்து நிறுத்த முயற்ச்சிப்பவர்களை கேலிக்கூத்தாக்குவது இஸ்லத்திற்கு எதிராக போரிடுவதற்கு சமம்.

முயற்சிகள் என்றும் வீன் போனதில்லை. நல்லவர்களின் முயற்சியால். இந்த வருடம்
கந்தூரி ஊர்வலம் வீறீயம் குறைந்து 18 அயிட்டங்கள் வர இருந்தது அது எட்டாக குறைந்தது என்பது குறிப்பிட தக்கது இன்ஷா அல்லாஹ் படிப்படியாக அல்லாஹ் ஒன்றுமில்லாமல் ஆக்கி தறுவான்.

நாம் முயற்சி செய்தால் அல்லாஹ் அதை நடத்தி தருவான். இந்த மாதிரி அநாச்சாரங்களை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு ஊர் ஒற்றுமை என்ற சாயம் இதற்கு பூசக்கூடாது. ஊர் இரண்டானாலும் பரவாயில்லை .அனாச்சாரங்களை தடுப்பதில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை இருக்கின்றது என்பதை நினைவூட்டுகின்றேன்.

இந்த மாதிரி இஸ்லாத்திற்கு எதிரான செயள்களை கண்டு கொள்ளாமல் இருப்பவன் இஸ்லாத்தில் இருந்து என்ன பயன்.

ஊரா? இஸ்லாமா? என்றால் இஸ்லாம்தான் என்று தேர்ந்தெடுக்கும் மன துணிவு வேண்டும். இதற்கு எக்காரணத்தைகொண்டும் தெரு சாயம் பூசக்கூடாது. தெரு சாயம் பூசினால் மட்டும் ஊரின் ஒற்றுமையை காத்திட முடியுமா?
சில அறிவிலிகளால் தெருக்களுக்கு சமீபகாலமாக மீன்சாயம் பூசப்படுகின்றது. என்னமோ பன்னாமீனை ருசிக்காதவர்கள் மாதிரி அநாகரிகமான வர்னனை செய்பவர்கின்றார்கள். இப்படி மீன் பெயரை சொல்லி அனாகரிகமாக வசைபாடுபவர்கள்.அதிரையை சார்ந்தவர்களாக இருக்க முடியாது. அப்படி அதிரையை சர்ந்தவர்களாக இருந்தால் பன்னாமீனை ருசிக்காமல் இருக்க முடியாது. வசை சொல்லுகின்றவருக்கும் அந்த வசை பொருந்தும் என்பது நினைவில் இருக்கட்டும். அப்படி ருசிக்கவில்லை என்று யார் வாதம் பான்னினாலும் அவர்கள் பொய்யர்களாகத்தான் இருக்க முடியும்.

பொதுவாக இந்தமதிரி அநாச்சாரங்களை தடுக்க முடியாத சகோதரர்கள் அநாச்சாரங்களை தடுப்பவர்களுக்கு இடையூராக இருப்பதைவிட்டும் தயவு செய்து தூரமாகி அல்லாஹ்வின் கோவப் பார்வையிலிருந்து உங்களயும் எங்களையும் காப்பாற்றுங்கள். தயவு செய்து இது விஷயமாக மேலும் மேலும் தற்கிக்க வேண்டாம் என்று சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோளை சமர்பிக்கின்றேன்.

அதிரைமன்சூர்
ரியாத்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு