Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அடப் பாவிங்களா !? (மற்றுமொரு அனுபவம் பேசுகிறது !) 27

அதிரைநிருபர் பதிப்பகம் | May 05, 2013 | , , , ,


ஒரு சனிக்கிழமை மத்தியான நேரம், மீன் ஆணம் ரசம் சூடா சோறு சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கத்தை போடலாம்னு எத்தனிக்கும்போது அபுதாபியிலிருந்து ஒரு ஃபோன் கால், சார் மாலிக்குங்களா? போன வாரம் நீங்க லுலு செண்டர்லே கூப்பன் எழுதிப்போட்டதுலே நீங்க ஜெயிச்சிருக்கீங்க (இது மாதிரி கூப்பன் எழுதி கை வலிச்சதுதான் மிச்சம்) என்ற சந்தோஷமான செய்தி கேள்விப்பட்டவுடன் வந்த கொட்டாவியெல்லாம் போன இடம் தெரியலே. உடனே சுறுசுறுப்பாகி அப்புறம் சொல்லுங்க சார் என்று கேட்டதுதான் மிச்சம். நீங்க உங்க குடும்பத்தோடு 7 நாள் கோவா சுற்றுலா செல்லலாம், இந்த வருஷத்துக்குள்ளே பயன்படுத்திக்கனும், விமான டிக்கெட் நீங்களே எடுக்கனும் என்றும் அங்கே இறங்கியவுடன் 3 ஸ்டார் ஹோட்டல் மற்றும் முழு சுத்திக்காட்டும் செலவும் இந்த கூப்பனில் அடங்கும் என்றும் சொன்னார். அந்த கூப்பனை வாங்கனும் என்றால் ஒரு பெரீய காரியம் செய்யனும். அதாவது துபாய்- ஷார்ஜா ரோட்டில் உள்ள அலுவலம் அன்றே மாலை சரியாக 6 மணிக்கு மனைவி, குழந்தையுடன் சென்று அதற்கான சின்ன(?) புரோகிராம் நடக்கும் அதுலே கலந்துக்கொண்டவுடன் வெற்றிப்பெற்றதற்கான கூப்பன் கிடைக்கும் என்றார்.


சரி வந்த அந்த ஒரு நல்லதையாவது போய் வாங்கிடலாம் என்று தூக்கம் தொலைத்து 6.10க்கே போய் ஒரு ஃபில்டிங்க்லே 13 வது ஃபிளாட்டில் ஆஃபீஸ் இருக்கு என்று கண்டு பிடித்து போனால் மயான அமைதி. விபரம் சொன்னவுடன் ரெஜிஸ்டர் செய்துட்டு இங்கே புரோகிராம் குறைந்தது 3 மணிநேரம் முழுதா இருக்கனும் என்ற உத்திரவாதம் வாங்கிட்டு பிள்ளைகள் விளையாடுவதற்கும் பார்ப்பதற்கும் டாம்/ஜெர்ரி வீடியோவை போட்டு அவங்களை அங்கே தள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். 

சிறிது காத்திருப்பிற்கு பிறகு அழைப்பு வந்தது, நீங்க இங்க்லீஸா/ஹிந்தியா என்றார்கள் நான் தமிழ் ஆனால் இங்க்லீஸை தேர்ந்தெடுத்து உள்ளே சென்றோம். அங்கே...

ஒரு பெரிய ஹால், கிட்டத்தட்ட ஒரு மேசைக்கு மூனு நாற்காலிப்போட்டு அந்த காலத்து டி.ராஜேந்தர் படத்துலே டிஸ்கோ டான்ஸ் பாட்டு நடந்தால் எப்படி இருக்குமோ அது மாதிரி (மேடை மட்டும் மிஸ்ஸிங்), பக்கத்துலே உள்ளவங்களிடம் காதோடு காது வைத்து பேசினால்தான் விளங்கும் என்றளவுக்கு அதிரடி மியூஸிக் சிஸ்டம் அதிர்ந்துக்கொண்டிருந்தது. எங்களுக்கான இருக்கை மிக நெருக்கமாக போடப்பட்டு தலையோடு தலை ஒட்டி பேசினால்தான் விளங்கும் என்ற அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒருவர் ஹைதராபாத் காரராம், தன் பெயர் காதர் Welcome to Country Club என்று ஆரம்பித்து ஃபோனில் சொன்ன அதே வார்த்தைகளை இவரும் ரிப்பீட்டு செய்தார். மேலும் சன் டீவிலே கேட்பது மாதிரி லவ் மேரேஜா, சொந்தமா, யாரு சமைப்பா, என்னா படிச்சிருக்கீங்க, எத்தன குழந்தைகள், இருவருக்கும் என்னா சமையல் புடிக்கும், யாரு சமைச்சா புடிக்கும் இப்படி நிறைய கேட்டு கேட்டு சொல்லி சொல்லி இப்போது 45 நிமிடம் கடந்துவிட்ட்து. 

திடீர்னு ஒரு மேசையில் உள்ளவர் எழுந்து Dear Ladies and Gentle man, Pleased to welcome to join our club Mrs & Mrs X and just they signed our contract அப்படினு சொன்னவுடன் மற்ற மேஜையிலுள்ளவங்க கைதட்டினர், நமக்கும் எதுவுமே புரியவில்லை இருந்தாலும் மேனர்ஸ் கருத்தில் கொண்டு நாமும் பேருக்கு தட்டினோம்.

சரி, எங்களுக்கான ஆள் (காதர்), இப்போ உலகத்துலே சுற்றுலா செல்லவேண்டுமானால் எங்கே செல்ல புடிக்கும்? இப்படி ஒரு கேள்வி, நாங்களும் ஏதோ ஒன்னு சொன்னோம், அதுக்கு அங்கே போகனும் என்றால் பெண்சில் கால்குலேட்டர் வைத்து ஒரு கால்குலேஷன் செய்து இவ்வளவு திர்ஹாம் செலவு ஆகும், அதே எங்களுக்கான மெம்பர்ஷிப் அட்டை காண்பித்தால் அதுலே பாதிதான் வரும், எது பெட்டர் என்றார்.யோசித்தோம், இடையிடையே தேனீர், ஜூஸ் இப்படி சப்ளை வேறு.

இடையிடையே ஒவ்வொரு 20 நிமிஷத்துகு ஒரு தடவை அதே மாதிரி ஒவ்வொரு மேசையா ஒருத்தர் எழுந்து அதே வசனத்தை ஓதி கைதட்டு வாங்கினர். அதற்குபிறகு என்ன நடக்குது என்பதை உணர்வதற்கு கால அவகாசம் தரவில்லை.

பழைய ரெஸ்டாரண்ட்லே அடிப்பட்ட மெனு கார்ட் மாதிரி ஒரு புத்தகத்தை கொடுத்து இதுலேயுள்ள ரிஸார்ட் எல்லாம் எங்க கம்பெனியோடது, இந்தியாவுலே உள்ள எந்த மாநிலத்துக்கு சென்றாலும் அங்கே 3 அல்லது 5 ஸ்டார் ரிசார்ட் இருக்கு நீங்க தங்கிக்கலாம் என்றார். அதற்கு நான் நான் ஏண்டா நடுராத்திரிலே சுடுகாட்டுக்கு போகப்போரேனு வடிவேலு ஒரு படத்துலே கேட்பார் அதுமாதிரி சுற்றுலா செல்பவங்க கிடைக்கும் நேரங்களில் முடிந்தளவு எல்லா இடங்களையும் பார்த்து அனுபவித்து சந்தோஷப்படத்தான் தவிர படுத்து தூங்குவதற்கு இல்லையே. எனவே சாதாரண கட்டணத்தில் அறை போதுமானது என்றவுடன் சின்ன சிரிப்புடன் சமாளித்துவிட்டு இவங்களோட மெம்பர்ஷிப் கார்ட் வாங்கினால் கராமாவில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு வாரம் ஒரு முறையும், ஏதாவது கோலிவுட் பட்டாளம் வந்து செய்யும் புரோகிராமுக்கு டிக்கட்டும் இலவசமாக கிடைக்குமாம்.

சரி, முடிவா மெம்பர் ஆவதற்கு எவ்வளவு என்று இடையிடையே கேட்டாலும் அதை கடைசி 30 நிமிடத்தில்தான் வெச்சிருக்காங்க ட்விஸ்ட், இதை பற்றி விலாவாரியா மேனேஜர் சொல்லுவார் என்று இன்னொருவர் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு 10 நிமிஷம் அதே வேதம் ஓதினார். கடைசியில் மற்ற நேரங்களில் சேரனும்னா 45,000 திர்ஹாம் வருமாம், இன்னிகு அது ஆஃபராம் அதாவது 27,000 திர்ஹாம் வருவாம். அதிலேயும் இன்ஸ்டால்மெண்ட் ஸ்கீம் இருக்காம் அதாவது 9,000 திர்ஹாம் இப்போ உடனே கட்டிவிட்டு அடுத்த 2 மாசத்தில் மீதியை செலுத்தனுமாம். 

இதைவிட கொடுமை என்னவென்றால், கொடைக்கானலில் ஒரு பிளாட் (காலி மனை) தருவாங்களாம், அதுலே இவங்களே வில்லா கட்டி வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் 50% தருவாங்களாம், மேலும் 9,000 திர்ஹாம் கட்டியது போக மீதி பணம் ADCB பேங்க் மூலம் சேலரி ட்ராண்ஸ்பர் இல்லாமல் லோன் வாங்கி தருவாங்களாம்.. அத்தோடு விட்டாங்களா இப்போ பணம் இல்லை, சம்பளம் வாங்கியதும் திரும்ப வருகிறேன் இல்லேனா 2 நாள் கழித்து யோசித்து வருகிறேன் என்றதுக்கு இங்கேயே இப்போவே கொடுக்கனும் இல்லேனா முன்னர் சொன்னா மாதிரி 45,000 கொடுக்கும்படியாகிடும் என்றார்கள்.  வேணும்னா ஒரு ஆளை கூடவே அனுப்புறேன் பணம் கொடுத்துவிடுங்க என்றர்கள். சுதாரிச்சுக்கடா என்று அப்பப்போ எனக்குள்ளே நானே சொல்லிக்கிட்டேன். 

நேரம் இரவு 10 ஆகிவிட்டது, நாங்கள் மட்டுமே மீதி அவர்களும் விடுவதாக இல்லை கடைசியாக 1000 திர்ஹாம் அட்வாஸா கொடுங்கள் அப்புறம் 2 நாள் கழித்து மீதியை கொடுங்க என்று பிச்சை எடுக்கும் ரேஞ்சுக்கு வந்துட்டாங்க. இவ்வளவு பேசி சும்மா வர மனசு இடம் தரலே, கடைசிலே என் நண்பனுடைய கிரடிட் கார்டை கொடுத்து அதுலே எடுத்துக்க என்று கொடுத்தவுடன் பரபரப்பான வேலைகள் நடந்தன, என்னை அங்கேயே பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுத்து அந்த கூப்பனில் பிரிண்ட் செய்து கையிலே கொடுத்தாங்க. அதே நேரம் இறைவனின் கிருபையால் அந்த கடன் அட்டையை தேய்க்கும்போது Insufficient Money என்று ரிசல்ட் வந்துவிட்டது. அத்தோடு தலைக்கு வந்த்து தலைவலியோடு மட்டும் திரும்பிவிட்டேன்.

சில நாள் கழித்து நண்பரிடம் பகிர்ந்துக்கிட்ட போது, அங்கே நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் சொல்லிக்காட்டினார். இடையிடையே எழுந்து சொன்னதும் கைதட்டியது எல்லாமே அவர்களின் செட்-அப் என்றார். அடங்கொய்யாலே.... அப்போ ”எனக்கு ரத்தம் கக்கி சாவே” என்று மயில்சாமி சொன்ன ஜோக்தான் ஞாபகம் வந்த்து...

சில நாள் கழித்து எதார்த்தமா என் நண்பனுக்கு ஃபோன் செய்தேன். இதுவும் இறைவன் நாடியது, இப்போ அவசரமா ஒரு மீட்டிங்க் கிளம்பிக்கிட்டிருகேன் அப்புறமா ஃபோன் செய்றேன் என்றான், என்னானு விசாரிச்சா அவனும் ரத்தம் கக்கி சாவ ரெடியாகிட்டான், அடப்பாவி மக்கா பாயிண்ட் பாயிண்டா விளக்கி அங்கே போகவேனாம் என்று தடுத்த புண்ணியம் கிடைத்தது. இனிமேலாவது மக்கள் உஷாராவாங்களா?

இரண்டு காரியம் புரியவில்லை

எப்படி இந்தநாட்டு அரசாங்கம் இதை கண்டுக்காம இருக்கு !?

எப்படி இவ்வளவு ஓப்பனா ஏமாத்துறாங்க. !?

எகிப்தை மையமாக வைத்து இயங்கும் International Tourism club

இந்தியர்கள் நடத்தும் Country Club…

என்ற இரண்டும் இங்கே செயல்பட்டுக்கிட்டிருக்கு...

அப்துல் மாலிக்

27 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Abdul Malik,

Thanks a lot for sharing your real experience on one of the "Killer Offers" in Dubai.

I read about "Vacation International" based on Egypt, in Gulf News with lot of comments by the readers and their experience.

Brother Mr. Sabeer AbuShahruk along with Mr. Abu Ibrahim also recently shared the similar stories.

I observed the guys from "Vacation International" are publicly have booth in Al Khaleej Center, City Center while we go to Splash, Al Reef Mall.

When we go along particularly with family and kids, they catch us as fishes by giving some brochers and collect our mobile numbers. Then they will call us. I think you had registered in one of these booths somewhere in UAE, not not from Lulu.

Anyway my first article in Adirai Nirubar gave some informative warning to escape from killer offers generally. I would like to suggest fellow readers to go and check and refresh those ideas too.

Please click the link to read about
Beware of killer offers in Dubai - எச்சரிக்கை ! http://www.adirainirubar.blogspot.ae/2012/11/beware-of-killer-offers-in-dubai.html

Simply put, where there is an offer there is a trap. Lets beware of it.


Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai

www.dubaibuyer.blogspot.com

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இந்த மாதிரி அவன்கள் செட்டப்பண்ணி உன்னை சுரண்ட நினைக்கும் பொழுது நீயும் உடனே சுதாரித்துக்கொண்டு உன் மனைவியிடமோ அல்லது பிள்ளைகளிடமோ கண் சைகையில் பேசி தீடீர்ண்டு மயக்கம்/வலிப்பு வந்தது போல் (நல்லா நடிக்கத்தெரியனும். இதெல்லாம் நீ உட்லேர்ந்து கெழம்பும் பொழுதே சும்மா லைட்டா ரிகர்சல் பார்த்து இருக்கனும்) நடித்து நான் உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லவேண்டும். உங்கள் புரோகிராமை நான் நிச்சயம் தொடர்வேன் என பொய் வாக்குறுதி கொடுத்து விட்டு இந்த எதிர்பாராத, அசாதாரன சூழ்நிலையால் நீ மனம் வேதனையடைந்தது போலும் அதற்காக பொய் மன்னிப்பு கூட கேட்டு அந்த இடத்தை விட்டு எவ்வளவுக்கு வெரசன கெழம்ப முடியுமோ அவ்வளவுக்கு சீக்கனம் கெழம்பி இருக்கனும் நீ......இந்த நேரத்துல வெக்கமாவது மண்ணாங்கட்டியாவது????

சொந்த‌த்தில் கேள்விப்ப‌ட்ட‌ ஒரு சேதி : ஒரு முறை சொந்த‌க்கார‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் த‌ந்தையை துபாய் செல்ல திருச்சி விமான‌ நிலைத்திற்கு காரில் வ‌ழிய‌னுப்ப‌ சென்று கொண்டிருந்த‌ன‌ர். வ‌ழியில் ஏதோ ஒரு கிராம‌த்தில் சென்ற‌ அம்பாசிட‌ர் காரில் ஆடோ, மாடோ கொஞ்ச‌ம் அடிப‌ட்டு விட்டது. காரை சுற்றி அங்கு கூடியிருந்த‌ ஊர் ச‌ன‌ங்க‌ள் ஆவேசத்துடன் நஷ்ட ஈட்டிற்காக மொய்க்க‌ ஆர‌ம்பித்து விட்ட‌ன‌ர். பிற‌கு காரில் இருந்தவர்க‌ள் சுதாரித்துக்கொண்டு காரில் வ‌ந்த‌ ஒரு பெண்ணுக்கு உட‌ல்ந‌ல‌க்குறைவு ஏற்ப‌ட்டு ம‌ய‌க்க‌நிலையில் இருப்ப‌து போல் ஆக்கி அத‌னால் உட‌னே ம‌ருத்துவ‌ம‌னைக்கு செல்ல‌ வேண்டும் என‌ முறையிட்டு கொஞ்ச‌ம் ப‌ண‌ம் ம‌ட்டும் கொடுத்து விட்டு அங்கிருந்து ந‌க‌ர்ந்த‌தாக‌ கேள்விப்ப‌ட்டேன். (ஒரு ஆட்டிற்கு ஈடாக‌ அம்பாசிடர் காருக்குள்ள காசை கேட்டால் எப்படி கொடுக்க முடியும்?)

பொய் இஸ்லாத்தில் அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை. அதே வேளை ஏமாற்றுக்கார‌ர்க‌ளிட‌மிருந்து த‌ப்பிக்க‌ சில‌ வ‌ழிவ‌கைக‌ளையும் நியாயமான முறையில் நமக்கு க‌ற்றுத்த‌ராம‌ல் இல்லை.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother MSM Naina Mohammed,

//இந்த மாதிரி அவன்கள் செட்டப்பண்ணி உன்னை சுரண்ட நினைக்கும் பொழுது நீயும் உடனே சுதாரித்துக்கொண்டு உன் மனைவியிடமோ அல்லது பிள்ளைகளிடமோ கண் சைகையில் பேசி தீடீர்ண்டு மயக்கம்/வலிப்பு வந்தது போல் (நல்லா நடிக்கத்தெரியனும். இதெல்லாம் நீ உட்லேர்ந்து கெழம்பும் பொழுதே சும்மா லைட்டா ரிகர்சல் பார்த்து இருக்கனும்) நடித்து நான் உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லவேண்டும். உங்கள் புரோகிராமை நான் நிச்சயம் தொடர்வேன் என பொய் வாக்குறுதி கொடுத்து விட்டு இந்த எதிர்பாராத, அசாதாரன சூழ்நிலையால் நீ மனம் வேதனையடைந்தது போலும் அதற்காக பொய் மன்னிப்பு கூட கேட்டு அந்த இடத்தை விட்டு எவ்வளவுக்கு வெரசன கெழம்ப முடியுமோ அவ்வளவுக்கு சீக்கனம் கெழம்பி இருக்கனும் நீ......இந்த நேரத்துல வெக்கமாவது மண்ணாங்கட்டியாவது????//

Actually there is a psycological weakness playing here. When a person is taking his family outside when they find something genuine or fraud offers similar to this, the head of the family instead of becoming alert he becomes hero and just to show his family sometimes he would involve in registering and getting brochures(heroic activities just for free).

Then his greediness in his mind's corner will start playing against him. The cheaters are trying to use people's this weakness.

Unless until the brothers/sisters tackle this weakness of greediness(getting something for free) and have their own purchasing policy of not wishing at all for any offers, then they are in safe side.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

//CORRECTION:
Unless until the brothers/sisters tackle this weakness of greediness(getting something for free) and have their own purchasing policy of not wishing at all for any offers, then they are NOT in safe side.

அப்துல்மாலிக் said...

Dear Bro Ameen// now they were extended into Lulu as well, they find and catch those who comes along with family, Its an awareness article which we may escape easily..

நம்மூரு பொண்ணுங்க ஈஸியா பாவப்பட்டுடுவாங்க, தொண்டைகிழிய பேசியதுக்காகவேண்டியாவது பாவங்க பணம் கட்டுவோம் என்றதால்தான் என் நண்பரின் கிரெடிட் கார்ட் கொடுத்தேன்...

அப்துல்மாலிக் said...

நெய்னா@ அந்த கடைசி 30 நிமிடத்துலேதான் என்னாதான் அவனுங்களுக்கு வேணும் என்பதே தெரியவந்தது. அதே மற்றொரு அழைப்பான எகிப்துகாரவங்க நடத்தியதுக்கு சென்று 30 நிமிடத்துலே திரும்ப வந்துட்டேன்...,

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Abdul Malik,

They can make stall anywhere since its just a podium like bench or a table and two three guys standing - mostly egyptian guys with tip top suits standing where a croud is moving a lot.

//நம்மூரு பொண்ணுங்க ஈஸியா பாவப்பட்டுடுவாங்க, தொண்டைகிழிய பேசியதுக்காகவேண்டியாவது பாவங்க பணம் கட்டுவோம் என்றதால்தான் என் நண்பரின் கிரெடிட் கார்ட் கொடுத்தேன்... //

Its not empathy as you mentioned, but its the deep greediness which is nature for women generally.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

Assalamu Alaikkum
Dear brothers and sisters,

Please go through the following article about Vacation International scam and it received 113 comments from various people.

Time-share scam targets gullible customers : click the following link to view the article and the comments(113)

http://gulfnews.com/about-gulf-news/al-nisr-portfolio/xpress/uae-customers-conned-in-time-share-scam-1.1105308


And another article in gulf news.



UAE customers conned in time-share ‘scam’

http://gulfnews.com/about-gulf-news/al-nisr-portfolio/xpress/uae-customers-conned-in-time-share-scam-1.1105308



Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Shameed said...

சம்பவங்களை அழகா தொகுத்து சொன்னீங்க ஆனாலும் நீங்க ரொம்ப உஷார்தான்

Shameed said...

மீன் ஆனமுன்னு சொன்ன நீங்க என்ன மீன் ஆனமுன்னு சொல்லலையோ ஏன் மீன் பெயரை சொன்னா ஊர்க்காரன் கோபித்துக் கொள்வாண்டா?

sabeer.abushahruk said...

இந்த மாதிரி ஏமாற்று வேலைகளைத் தடுக்க, குறைந்த பட்சம் துபயில் உழைக்கும் மக்களை காப்பாற்ற துபை அரசாங்கம் ஏதாவது செய்தாக வேண்டும்.

அதற்காக யாராவது இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஆவண செய்தல் நலம்.

நேரோ எஸ்கேப், அப்துல் மாலிக்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கள்ளம், கபடமான ஆட்ட அரங்கம் அரங்கேறி வருகிறது என நமக்கு மெல்லத்தெரிய வந்தால் உடனே "தும்க்கை" என்று நம்மூர் பாஷையில் சொல்லி விட்டு ஆட்டத்திலிருந்து சீக்கிரம் ஜூட் உட்ர வேண்டியது தான்..........

இது ஒரு வர்த்தக தீவிரவாதம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்ல விழிப்புணர்வு பதிவு சகோ. மாலிக்

முகமூடாத பிச்சக்கார பட்டபகல் கொள்ளையர்கள்...

குலுக்களில் ஃபீரியா ஏதாச்சும் கிடைக்கப்போவுது என்று நம் பெயர் அலைப்பேசி எண்களை கொடுக்கக்கூடாது என்பது மட்டும் புரியுது,

இந்த நாட்டில் (UAE) வெளிப்படையாக நவீண யுக்திகள் வைத்து ஏமாற்றுவது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது.

sheikdawoodmohamedfarook said...

இந்த மாதிரி தலையை தடவும் அலிபாபா திட்டம் போட்டதற்கு அவர்கள் கேட்ட இருபத்தி ஒன்பது ஆயிரம் திர்ஹம் ரெம்ப சீப் என்று னினைக்கிறேன். இருந்தால் அறுபத்து ஒன்பது ஆயிரம் கூட கொடுக்கலாம். ஒன்றும் தப்பில்லை. ஆனால் அந்தப் பணமோ நம்மிடம் இல்லையே என்பதே என் மன வருத்தம்.

Unknown said...

Assalamu Alaikkum,

Dear brother Mr. Sabeer Abushahruk,

//இந்த மாதிரி ஏமாற்று வேலைகளைத் தடுக்க, குறைந்த பட்சம் துபயில் உழைக்கும் மக்களை காப்பாற்ற துபை அரசாங்கம் ஏதாவது செய்தாக வேண்டும்.//

Dubai government has done something to resolve issues related to consumer rights.

Brothers and sisters in Dubai particularly can approach consumer rights in Dubai. Sometimes back there were campaigns going on in order to make awareness to people and businesses here. So many shops have the yellow compaign stickers with toll free numbers.

The details.

Website : http://www.consumerrights.ae/: Please go through the details on what are the rights of consumers in Dubai and how can we claim our rights.

Call ´Ahlan Dubai´ +971 600 545555

Fax +971 4 450 3996

Email consumerrights@dubaided.gov.ae

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com


m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அறுபத்து ஒன்பது ஆயிரம் கூட கொடுக்கலாம். ஒன்றும் தப்பில்லை. ஆனால் அந்தப் பணமோ நம்மிடம் இல்லையே என்பதே என் மன வருத்தம்.//

ஹா ஹா... !

எவ்வளவுதான் குட்டிக் கரணம் போட்டாலும் அதை கடைசி வரைக்கும் அவய்ங்ககிட்டே சொல்லவே கூடாது ! :)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல விழிப்பு தரும் பதிவு!
நீங்களுடம் காசே இல்லாத நண்பருடைய கடன் அட்டையோட போனதும் அட்வாண்ஸ் விழிப்புள்ள ஆள் தான்.

adiraimansoor said...

இந்த பதிப்பை உங்கள் இந்த அனுபவத்தை பொது மக்கள் வேறு யாரும் இந்த பகல் கொள்ளையர்களிடம் சிக்கிவிடாமல் இருக்க நோட்டீசாகவோ, சிரிய புத்தக பிரசுரமாகவோ அல்லது ஜெராக்ஸ் காப்பியாகவோ தயவு செய்து துபாய் சகோதரர்களுக்கு பரப்பிவிடுங்கள். ஜெராக்ஸ் காப்பி என்பது இலகுவானது. பதிப்பின் கீழே குறிப்பு போட்டு
படிக்கும் நண்பர்கள் இதை ஜெராக்ஸ் எடுத்து உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள்
என்ற வாசகத்தை குறிப்பிட தவறி விடாதீர்கள் இந்த செய்தி வலைத்தளம் உபயோகிக்காதவர்களுக்கும் அதிரை நிருபர் வலைத்தலத்திற்கு வர வாய்பற்ற அதிரை சகோதரர்களுக்கும் வெளியூர் சகோதரர்களுக்கும் கிடைப்பதோடு அல்லாமல் உங்களுக்கு நண்மையும் கிடைக்கும் "ஏமாற்று பேர்வழிகளிடம் உஷார்" என்று தலைப்பிடுங்கள்.
இதை சம்பந்தபட்ட அப்துல் மாலிக் செய்யவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

அதிரைமன்சூர்
ரியாத்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

//ஜெராக்ஸ் காப்பி என்பது இலகுவானது. பதிப்பின் கீழே குறிப்பு போட்டு
படிக்கும் நண்பர்கள் இதை ஜெராக்ஸ் எடுத்து உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள்
என்ற வாசகத்தை குறிப்பிட தவறி விடாதீர்கள்//

இதை 100 நகல் எடுத்து இலவசமாக வெளியிடுபவர்களுக்கு விரைவில் நல்ல சம்பவங்கள் நடந்தேறும். கம்பெனியில் நல்ல போஸ்ட்டும், சம்பள உயர்வும் கிடைக்கும். செல்வம் கொழிக்கும், பணப்புழக்கம் அதிகரிக்கும், வாகன வசதிகள் பெருகும், வீடு,மனைகள் சிறக்கும், பிள்ளைச்செல்வங்கள் மூலம் சந்தோசம் திளைக்கும் என்றெல்லாம் போட்டு கடைசியில் இதை உதாசீனப்படுத்துபவர்களுக்கு கை,கால் வெளங்காமல் போய் விடும் என சிறுபிள்ளையில் மக்காவில் கண்ட கனவாக எவரோ ஒருவர் நோட்டீஸ் அடித்து வெளியிட்டு அதை பரப்பிய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

அப்துல்மாலிக் said...

//நேரோ எஸ்கேப், அப்துல் மாலிக்.// காக்கா நீங்களெல்லாம் எஸ்கேப்புனா எங்கள மாதிரி இளைஞர் கூட்டத்துக்கு வழிகாட்ட யாரு இருக்கா?

//மீன் ஆனமுன்னு சொன்ன நீங்க என்ன மீன் ஆனமுன்னு சொல்லலையோ ஏன் // ஹமீது காக்கா கெலக்க மீனு ஆணம்... இப்படி சொல்லி எனக்கு வயித்தவலி உண்டாக்கிக்க விரும்பலே ஹா ஹா

//உடனே "தும்க்கை" என்று நம்மூர் பாஷையில் சொல்லி விட்டு ஆட்டத்திலிருந்து சீக்கிரம் ஜூட் உட்ர வேண்டியது தான்........// நெய்னா அப்படி தும்க்கை சொல்லிதான் ரெண்டாவது ஆட்டத்துலேர்ந்து வெளிவந்தேன், 3 மணிநேரம் கண்டிப்பா இருக்கனும்னு என்று சண்டையெல்லாம் போட்டாங்க தெரியுமா


//இருபத்தி ஒன்பது ஆயிரம் திர்ஹம் ரெம்ப சீப் என்று னினைக்கிறேன்// தமிழ் குடும்பம் அதிகம் ஏமாந்திருக்கு என்பதுதான் வேதனையான விசயம்

அப்துல்மாலிக் said...

//இதை சம்பந்தபட்ட அப்துல் மாலிக் செய்யவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

அதிரைமன்சூர்
ரியாத்//

இன்ஷா அல்லாஹ், பெரும்பாலான நம் மக்கள் பிளாக் படிக்கிறாங்க ஆனால் கமண்டிடுவதில்லை என்பது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும்?

sabeer.abushahruk said...

//. //நேரோ எஸ்கேப், அப்துல் மாலிக்.// காக்கா நீங்களெல்லாம் எஸ்கேப்புனா எங்கள மாதிரி இளைஞர் கூட்டத்துக்கு வழிகாட்ட யாரு இருக்கா?//. //

இல்ல மாலிக். நீங்கள்தான் மாட்டிக்காம "narrow escape" என்று சொன்னேன்.

(என் இங்கிலீஷை மண்ணெண்ணெய் வச்சிக் கொளுத்த)

ZAKIR HUSSAIN said...

அப்துல் மாலிக் இப்படி அழகாக விவரிக்கும் உங்கள் திறமையை ஏன் இவ்வளவு நாள் பூட்டி வைத்து இருக்கிறீர்கள்?. நிறைய எழுதுங்கள்...உங்களுக்கு என்று ஒரு தனி வாசகர் வட்டம் உருவாகும்.

அப்துல்மாலிக் said...

நன்றி ஜாஹிர் காக்கா, நீங்களே ஒரு வாசகரா இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்..

sali said...

ஒரு விழிப்புணர்வு தர கூடிய ஒரு பதிவை நகைச்சுவையாக கொடுத்துள்ளார் மாலிக் பாய்.ஒரு வேளை நண்பரின் கார்டில் பணம் இருந்து இருந்தால்..மாலிக் பாய் ஏதாவது ஒரு நாட்டில் நல்ல ஒட்டலில் தங்கி இருந்து கொண்டு இருப்பார் இல்லையா...

அப்துல்மாலிக் said...

sali பாய்@ நன்றி தாங்கள் கருத்துக்கு, என்னா ஒரு நக்கலு ஹா ஹா

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

There is a hot news related to new scam found in Dubai.

http://gulfnews.com/news/gulf/uae/crime/more-than-6-000-families-hit-in-dubai-s-biggest-scam-1.1181130

Just follow the comments and future related news.(so far 26 comments)

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு