Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சோதனைகளை சாதனைகளாக்கிய மாணவன் யூனுஸ் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | May 11, 2013 | , , , ,


நூறாண்டு பழமையான மதறஸா, 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படும் பள்ளி/கல்லூரி. கல்விக்காக வாரிவழங்கும் செல்வந்தர்களுக்குப் பஞ்சமில்லாத ஊர்.தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான அதிராம்பட்டினம்தான் அது. அதிரையிலிருந்து ஆண்டுதோறும் நூற்றுக்கணக்காணோர் அரசு பொதுத்தேர்வு எழுதி சராசரியாக 85-90% தேர்ச்சி விகிதம் பெற்றபோதிலும் மாநில அளவில் அதிரையைச் சார்ந்த எவரும் இதுவரை சாதனைபடைக்கவில்லை என்ற அதிரையர்கள் பெரும்பாலோருடைய ஏக்கத்திற்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

சென்னை மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவிலுள்ள மியாஸி மெட்ரிகுலேசன் பள்ளியில் +2 கணிதப்பிரிவு  படிக்கும்  யூனுஸ் அரபுமொழிப் பாடத்தில் 192 மதிப்பெண்களுடன் தமிழக அளவில் மூன்றாம் இடம் பெற்று, மாநில அளவில் முத்திரை பதித்த அதிரையைச் சார்ந்த முதல் மாணவன் என்ற சிறப்பைப் பெற்றுத்தந்து உள்ளார்.

மர்ஹூம் அபூபக்கர் ஆலிமின் கொள்ளுப்பேரனும், மர்ஹூம்.அப்துல் ரஹ்மான் (லக்கி) ஹாஜியார், மர்ஹூம். முஹம்மது அலிய் ஆலிம் இவர்களின் பேரனுமாகிய  யூனுஸ், சென்னை அங்கப்பன் தெருவிலுள்ள ஸலாமத் பதிப்பக குழுமத்தைச் சார்ந்த ஹாபிழ்.முஹம்மது இலியாஸின் மூத்த மகன். யூனுஸின் பெற்றோர்கள் அதிகம் படித்தவர்களல்லர் என்றபோதிலும் மாநில அளவில் தங்கள் மகனை தேர்ச்சிபெறச்செய்துள்ள வகையில்  பெரும்பாலான அதிரை பெற்றோர்களுக்கு நல்ல முன்னுதாரனமாகத் திகழந்து,சாதனை படைக்க பெற்றோர்களின் ஊக்கம் இருந்தாலே போதும் என்ற செய்தியைத் தந்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர் யூனுஸ் கூறுகையில்,"பத்தாம் வகுப்பில் 500 க்கு 440 மதிப்பெண்கள் பெற்றபோது +2வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கத் திட்டமிட்டிருந்தேன். எனினும், அல்லாஹ்வின் நாட்டப்படி அரையாண்டுத் தேர்வு சமயத்தில் மஞ்சல்காமாலை நோயால் பாதிக்கப் பட்டு அதற்கு சிகிச்சை பெற்றபோது, ஓய்வெடுக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தியதால் பள்ளி செல்ல முடியாமல் கொஞ்சம் மதிப்பெண்கள் குறைந்தது. எங்கள் உம்மா-வாப்பா அதிகம் படித்திருக்கவில்லை. அனேகமாக எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி நானாக இருப்பேன். +2 வுக்குப் பிறகு யூனானி மருத்துவத்தில் பட்டப்படிப்பு படிக்க திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

+2 முடித்துவிட்டு ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்தோ முடிக்காமலோ வெளிநாடு செல்லும் அதிரையர்களுக்கு மத்தியில் பெற்றோரின் ஊக்கத்தால்,அதிரையர்கள் அதிகம் தொடாத அரபு மொழிப்பாடத்தில் மூன்றாமிடம் பெற்று மாநிலளவில் சாதித்துள்ள யூனுஸ் அதிரைக்கு முன்மாதிரி என்றால் மிகையில்லை.

அதிரை கல்வி நிலையங்களிலிருந்து மாவட்ட/மாநில அளவில் சாதனை படைக்கும் மாணாக்கர்களை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் 'அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்கள்' சார்பில் கடந்த ஆண்டு முதல் கல்விவிருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நமதூர் கல்வி நிலையங்களில் படிக்கவில்லை என்றாலும், அதிரையிலிருந்து மாநில அளவில் முத்திரை பதித்ததைப் பாராட்டி, அதிரை எக்ஸ்பிரஸின் திட்டத்திற்கு உந்துதலாக இருக்கும் மாணவர் யூனுஸுக்கு 2012-13 ஆம் ஆண்டுக்கான கல்வி விருது நிகழ்ச்சியில் சிறப்பு பரிசு வழங்கப்படும்.

தேர்வு முடிவு வெளியான நேரம் மாணவர் யூனுஸ் கோவையில் ஜமாஅத்தில் இருந்துள்ளார். முடிவை இணையத்தில் பார்த்துள்ளார். அதே நேரம், அவரது பள்ளி ஆசிரியர் தொலைபேசியில், யூனுஸ் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த செய்தியை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, தினமலர் செய்தியாளர் மியாஸிக்குச் சென்று மாணவனைப் பற்றி விசாரித்துள்ளனர். அப்போது செல்ஃபோன் மூலம் ஜமாத்தில் இருந்த யூனுசிடம், தொலைபேசியிலேயே நேர்காணல் செய்துள்ளனர். அவரைப் பற்றி தினமலர் சென்னைப் பிரிவில் வந்த செய்தி இணைப்பு:


மேலும் இதுகுறித்து இந்நேரம் செய்தித் தளத்தில் வந்த இணைப்பு:


நமதூருக்குப் பெருமை சேர்த்துள்ள மாணவன் யூனுஸுக்கு 9566716169 எண்ணில் வாழ்த்துசொல்லி ஒரு குறுஞ்செய்தியை (SMS) தட்டிவிடலாமே!

7 Responses So Far:

Unknown said...


السلام عليكم

ألف مبروك!!!

أحمد أمين من إمارة دبي

www.dubaibuyer.blogspot.com

sabeer.abushahruk said...


السلام عليكم

ألف مبروك!!!

Ditto

Unknown said...

م

ألف مبروك!!!

Ditto

abu asif

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரைக்கு பெருமை சேர்த்த மாணவனும் பெற்றோரும் நினைத்தபடி நல் நிய்யத்துகள் எல்லாம் நிறைவேற வாழ்த்தும், துஆவும்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ், மருமகன் யூனுஸ் அவர்களின் மாநில அளவிலான இந்த சாதனை, நிச்சயம் வரும் அதிரை தலைமுறைக்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கும். இன்ஷா அல்லாஹ்.

இந்த பிள்ளையை பெற்ற பெற்றோர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக..

இந்த இளம் கல்வியாளருக்கு அல்லாஹ் மேலும் கல்வியில் வெற்றியை தந்தருள்வானாக..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தகவலுக்காக...

மாநில அளவில் இதற்கு முன்பு ஓர் அதிரை சகோதரர் அரபி பாடத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்த ஜமால் முஹம்மது (ரயல் ஸூ மார்ட் குடும்பத்தை சேர்ந்தவர்), 1992-93ல் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அரபி பாடத்தில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். இவர் கும்பகோணம் அல் அமீன் பள்ளியில் தன்னுடைய பள்ளி படிப்பை படித்தார். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். +2 தேர்விலும் மாநில அளவில் அரபி பாடத்தில் ரேங்க் எடுத்ததாக ஞாபகம், ஆனால் ஊர்ஜிதமாக எந்த ரேங்க என்பது எனக்கு தெரியவில்லை. இது தொடர்பாக மேலும் தகவல் உள்ளவர்கள் இங்கு பகிர்ந்துக்கொள்ளலாம்..

நண்பர் ஜமால் முஹம்மது அவர்கள் 20 வருடங்களுக்கு முன்பு செய்த சாதனைக்கு பிறகு மருமகன் யூனுஸ் மாநில அளவில் அதிரையின் பெயரை தலைநிமிர செய்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் கல்வியின் மூலம் அதிரையர்கள் சாதனை பட்டியல் தொடரும் என்று நம்பலாம். அதற்கு அல்லாஹ் நம் வருங்களால சந்ததிகளுக்கு நல்லருள் புரிவானாக.

sali said...

masha allah


Sathik Ali
Madukkur

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு