Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் ! 26

அதிரைநிருபர் பதிப்பகம் | May 12, 2013 | , ,


அலுவலகங்களில் நிகழும் அன்றாட சூழலில் நிறைய பேருக்கு அதிகம் பரிச்சயமான அதே நேரத்தில் அனைவராலும் தேடப்படும் ஒரு நபர் தான் ஆஃபீஸ் பாய் !

ஆபீஸ் பாய்தானே, என்ன பெரிசா எடுபுடி வேலைதானே, கிளீனிங், டீ காஃபி போடுறதுதானே என்று அசாதாரணமாக நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு எந்த அலுவலகத்திலும் வேலை கிடைக்காது அவர் நினைத்தால் ! (அடக்கி வாசிங்க)!

அவருக்கென்ன மேலாளாருக்கெல்லாம் மேலாளர், சூப்பர்வைசருக்கெல்லாம் சூப்பர் வைசர், அலுவலக அரசாங்கத்தின் ராஜ தந்திரி, சானக்கியன் ! (புல்லரிக்குதா ?) இதுக்குமேலே சொல்லத் தேவையில்லை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் !

சாதாரணமாக வெளிநாட்டு அனுபவத்தில் நாமெல்லாம் ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வோம்? நம் அலுவலகத்தில். அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப அலுவலகங்களின் முறைப்படி லீவு அப்ளிகேஷன் கொடுப்போம், நமக்கு மேலே இருப்பவர் (சூப்பர் வைசரோ, மேனேஜரோ) அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் (அதை வாங்குவதற்குள் படும் பாடு அப்பப்பா !) அதன் பின்னர் அனுப்ப வேண்டிய டிப்ப்பார்ட்மெண்டுக்கு அனுப்பி வைத்த பின்னர் தான் ஒரு ரவுண்டு போயிட்டு அப்ப்ரூவ் / ரிஜெக்ட் / தேதியை மாற்று இப்படின்னுதானே வரும்.

ஆனால், ஆஃபீஸ் கதாநாயகன் விடுமுறையில் செல்ல வேண்டுமென்றால் அவரின் அப்ளிகேஷன் மட்டும் ரிவர்ஸில் வரும், முதலாளியிடமிருந்து (ஹாட் லைன்) அப்ருவல் வாங்கிக் கொண்டு மேலிருந்து கீழாக அவரே அப்ளிகேஷனை தன் கைப்பட எடுத்துக் கொண்டு ஹெச்.ஆருக்கு எடுத்துச் சென்று டிக்கட் காப்பியையும் கையில் வாங்கிக் கொண்டு வந்து விடுவார்.... அது என்ன மாயமோ தெரியலை... இதுதாங்க நடக்குது !

எது எப்படியோ ! தலைவரோட லீவு அப்ரூவ் ஆனதும்தான் ஆக்சனே துவங்கும்....

அவருடைய வேலைக்கு அவரே ஒருவரை தேர்ந்தெடுத்து (!!!??) டிரைனிங் (சில அலுவலங்களில் இவ்வாறான நடைமுறை விலக்காக இருக்கலாம்) ஓரிரு நாளோ அல்லது ஒருவாரமோ என்று தொடரும்...

அந்த டிரைனிங்க் பீரியட் தாங்க அசத்தலா இருக்கும் !

புதிதாக பணிமாற்றம் பெற இருப்பவர் அப்பாவியாக இருக்க வேண்டும், எதிர்த்து ஏதும் கேள்விகள் கேட்கக் கூடாது,"ம்ம்ம்"முதான் போடனும். இதற்கு மாறாக இருந்தால் கதாநாயகன் இவரை மறுத்து விடுவார் அவ்வளவுதான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று மீண்டும் பழைய வேலைக்கு அவர் செல்ல வேண்டும்.

இதுவரை அவர் அப்படியெல்லாம் நடந்ததை ஒருநாள் கூட பார்த்திருக்க மாட்டோம் ஒருவேளை மறந்திருப்போம். நம்ம கதாநாயகனின் அட்வைஸ், முதலாளியிடம் எப்படி பவ்யம் காட்டனும், டீயை எப்படி மிக்ஸ் செய்யனும், எப்படி ட்ரேயில் வைத்து எடுத்துச் செல்லனும்... இப்படியாக தொடரும்.

அலுவலகத்திலிருக்கும் டஸ்ட்பின்னில் இருப்பதை அகற்றுவதிலும் டேபிள் கிளீன் செய்வதில் கதாநாயகன் அனாயசமாக இருப்பார், பட்டும் படாமலும் வழக்கமான ப்ராட்காஸ்டிங்க் வேலையையும் செய்வார். ஆனால் புதியவர் பொருப்பேற்க இவர் சொல்லிக் கொடுக்கும் வேலைகளைக் கவணித்தால் இதெல்லாம நம கதாநாயகன் எப்போது செய்தார் என்று மூக்கில் விரலை வைப்போம்.

கதவு இடுக்கில் இருக்கும் தூசியைக் கூட துடைக்க கற்றுக் கொடுப்பார், யாரிடமும் லூஸ் டாக்கிங்க் வைத்துக் கொள்ளக்கூடாதுன்னு அவர் சொல்லும்போதும் ஒவ்வொருவரின் டேபிளுக்கு அருகில் வரும்போது புதியவருக்கு அவர் சொல்லிக் கொடுக்கும்போது இருக்கும் பவ்யம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் !

இவரா அவருன்னு ஆச்சர்யமாகக் கூட இருக்கும் !

உங்க ஆஃபீஸில் எப்படிங்க !?

அபூஇப்ராஹீம்

26 Responses So Far:

Unknown said...

பொதுவாக நான் பின்னூட்டத்தில் அதிகம் ஆர்வம் செலுத்த மாட்டேன்..பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் இன்னும் பயில வேண்டியது உள்ளது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் இந்தப் பதிவையொட்டி இன்று எனக்கு ஒரு சம்பவம் நடந்தது.

என் நிறுவனத்தில் எனக்கு தொடர்பில்லாத வேறொரு பிரிவின் மேலாளரின் மூலம் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியது இருந்தது. அதை செயலபடுத்த நான் கொடுக்க இருந்த சில ஆவணங்களை குறிப்பிட்ட மேலாளருக்கு சாயா போட்டுக் கொடுக்கும் மலையாள சேட்டனிடம் கொடுத்துவிட்டு போகலாம் என்று மேலாளர் கூறிவிட்டார்.

அப்பப்பா.. இன்று அந்த சாயா பாய்/டீ பாய்/ஆஃபீஸ்பாய்,ஒரு நாள் முதல்வர்போல ஒருநாள் மேலாளர் அளவுக்கு என்னை சுற்றலில் விட்டானே பார்க்கலாம்..

இதுவரை என் தேவை சக்ஸஸ் ஆகவில்லை அது வேறு விசயம்.

Unknown said...

இதை பார்த்தவுடன் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகின்றது.

நான் சவுதி அல்ஜுபைலில் ராயல் கமிஷன் ஒப்பந்தத்தில் , இப்ன் அல்-பைத்தார்
என்ற நிறுவனத்தில் பனி புரிந்த காலத்தில் , ஒரு ஸ்ரீலங்கா ஆபீஸ் பாய் இருந்தார்
அப்பொழுது, அவரிடம் ஒரு அரபி தினந்தோறும் ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்கு ஒரு முறை டீ கேட்டு தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருப்பார் .
இத்தனைக்கும் அலுவலகத்தில் அதிக வேலை இல்லாத ஆள் அவர்தான். டீ அதிகமாகக்கேட்டு தொந்தரவு செய்வதும் அவர்தான். இந்த ஆபீஸ் பாய் தமிழ் பேசக்கூடிய சிங்களம் மொழி தெரிந்த முஸ்லிம். என்னிடம் அவர் சொல்லும்போது.

சிங்களத்தில் : அந்த அரபியைப்பார்த்து, " பள்ளட்ட வெடகுத்ன இண்ட விலாவ குத்ன " இதன் பொருள் என்னவென்றால் : நாய்க்கு வேலையுமில்ல. நிக்க நேரமும் இல்ல.

இதை நினைத்தால் இன்றும் எனக்கு சிரிப்பு வரும்.

அபு ஆசிப்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆளுக்குத்தகுந்த மாதிரி நடந்துக்கிர்ரதுல இவன்வொல்ட்ட தான் நெறைய பாடம் படிக்கனும்....

பழைய ஆளு, கம்பெனி ஆளு என்றால் நல்லா ஆத்தி நொரையோட தேத்தண்ணி போட்டு குடுப்பானுவோ....அதே சமயம் புதுசா ஆளு வந்து டீ கேட்டா களனி தண்ணி மாதிரி வேண்டாவெறுப்பா போட்டு குடுப்பானுவோ....ஹெச்.ஆர். டிபார்ட்மெண்ட்டுக்கு மட்டும் கொஞ்சம் சூச்சியமா நடந்துக்கிடுவானுவோ...காரணம் ஓவர் டயம் கட்டாவாது...அப்புறம் லீவு அப்ளிகேசன் நெறப்பமா லீவு எழுதி கொடுத்து அப்புடியே ஸேன்ங்ஷன் ஆகும்......

அக மொத்தம் இவன்க விசயத்துல எல்லாருமே ரொம்ப கண்ணுங்கருத்துமா இருப்பாங்க. பொண்டாட்டிட்ட கொஞ்சம் கோபமா நடந்துக்கிர்ரவங்க கூட இவன்வொல்ட்ட கேர்ஃபுல்லா இருப்பாங்க. ஆம்மா...இல்லாட்டி தேத்த‌ண்ணியில‌ எச்ச‌த்துப்பி நொரையோட‌ நொரையா ந‌ல்லா ஆத்தி த‌ந்துட்டான்னா??????அதான்....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எஸ்பெசலி, மலையாளி ஆஃபீஸ் பாயிட்ட போயி பேச்சு வாக்குல நீ என்னா படிச்சிக்கிறாண்டு கேட்ட பி.ஏ.ண்டு ரொம்ப ச்சீப்பா சொல்வான். அங்கே பி.ஏ.வெல்லாம் ரொம்ப சல்லிசா கெடக்கும்மோ????

ZAKIR HUSSAIN said...

முன்பு எங்களிடம் 'நான் ஆபிஸ் பாய் [ முஸ்லிம்] இல்லை....ஆபிஸ் ஹிந்து" என்று ஒரு காமெடியன் வந்து சேர்ந்தான். எல்லா ஆங்கில வார்த்தையையும் தமிழில் மொழிபெயர்ப்பதே வேலை இவனுக்கு
மக்கள் டி வி மாதிரி. இப்போது பெரிய குடும்பஸ்தனாகிவிட்டதாக கேள்வி.

அவனுக்கு அசிஸ்டென்ட்டாக சேர்ந்த டிரைவர் பார்க் செய்திருக்கும் லாரியில் எல்லாம் வேனை விட்டு மோதியதால் வேலை "டர்" ஆக்கி அனுப்பிவிட்டார்கள். இப்போது நல்ல சம்பளத்தில் இங்கு உள்ள மின்சார வாரியத்தில் வேலை.

sabeer.abushahruk said...

ஷோ முடிஞ்சி ஆள் ஊருக்குப் போயிருப்பாரே இப்ப புதியவர் எப்படி இருக்கார், அபு இபு?

sabeer.abushahruk said...

எங்க ஆஃபீஸ் பாயும் மலையாளிதான். நெம்ப நல்லவன். யாரையுமே பகச்சிக்கமாட்டான். அப்படி பகச்சிக்கிட்டா அவன் கொண்டு வந்த அவன்ட தம்பி, தங்கச்சி மாப்ளே, நண்பன், மருமயன்னு அல்லாத்தையும்ல பாதிக்கும்? மேற்கொண்டு நாலஞ்சு பாஸ்போட் காப்பி வேற என்னேரமும் கைல இருக்கும்.

ஆஃபிஸ் அத்தனையும் அவன் குடும்பத்தின் பிடிமானத்தில்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

புதியவர் என்ன இப்ப‌ பேய் அரைஞ்ச மாதிரி தான் கொஞ்ச நாளைக்கு இருப்பார். இவருல்லாம் பவராவுரத்துக்கு கொஞ்ச நாள் எடுக்கும்ல....அதுக்குள்ளாட்டியும் கிட்டன்ஸ்ல சேந்த ஆள்ட்ட போயி டீயில ஃபினிஸிங் எதிர்பார்க்க முடியுமா யாங்காக்கா சபீர்,அபுஇபுறாஹிம்???

ஊருக்கு போன ஆளு ஊர்ல எப்படியெல்லாம் அவரப்பத்தி பீலா உட்டுக்கிட்டு இருப்பாரோ??? கம்பெனி டைரக்டரே நம்மள கண்டா நடுங்குவாருண்டு எதாச்சும் சொல்லிக்கிட்டு திரியிராரோ என்னம்மோ யாரு கண்டா????

அப்துல்மாலிக் said...

சாதாரண வைஸ் சேர்மன் டிரைவர் கம் ஆபீஸ்பாய், இவன் கம்ளெயிண்ட் கொடுத்து ஒரு ஐ.டி. அட்மினிஸ்ட்ரேடரை தூக்குன சம்பவமெல்லாம் நடந்திருக்கு. ஓனருக்கும் ஆ/பா உள்ள தொடர்பு அப்படி...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

புரெடக்சன் மேனேஜரே அவரின் சொந்தக் காரரின் பாஸ்போர்ட் காப்பியை ஆஃபீஸ் பாய் கையில் கொடுத்து.. "கரீப் ஆத்மி" ன்னு சொல்லியே விஷாவோடு வேலை வாங்கிய அனுபவமும் உண்டு !

புதுசா வந்தாரே அவர் இரண்டு முறை தேத்தனியை வெட வெடப்பில் ஆடிட் ரிப்போர்டில் ஒருமுறையும், என் வலது கரத்திலும் கொட்டிவிட்டு... நிற்கும்போது எனக்கு கோபம் வரவில்லை ! அவருடைய முகம் சொன்னது "நான் அவனில்லை" என்று !

sabeer.abushahruk said...

உலகத்திலேயே ஹைலி பெய்ட் ஆஃபிஸ் பாய் நாந்தேன். எனக்கான ட்டீயை நானே போட்டுப்பேன்ல.

காஃபி வித் நோ மில்க் நோ ஷுகருக்கெல்லாம் ஆஃபீஸ் பாய் எதுக்கு?

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

Office assistant or office boy is a multitasker, who works in pantry(kitchen) and in full office. He is one of the persons in the office having high pressure in the work. His face is familiar to all staff in the office. He has to satisfy all. Ofcourse he has influence to accomplish his own work through the staff.

One who know how to get things done should have good relationship not only with office boy, but all superiors and suboridates. Actually good manners and relationship with fellow human fetch so much advantage.

There is a tendancy in office boys that they have partiality with people. The treatment with manager is different from other staff based their power(to assist the office boy).

I observed when a new office boy is joined or new staff is joined, the staff is willing to give a bribe like gift to office boy in order to have high priority service. Then the office boy is committed to that particular staff more than any one else.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எனக்கு தெரிந்தது ஜாபர் பாய், நெய்னா பாய், சபீர் பாய் என்பது போன்றது தான்.
ஆபீஸ் பாய் ரேஞ்சுக்கு கும்பலாக பணிசெய்த அனுபவம் இல்லை.

---------------------------------------------------------------------------------

இன்று ரஜப் பிறை 1
ஹிஜ்ரி1434
ரமலானுக்கு 2 மாதங்கள்

Shameed said...
This comment has been removed by the author.
Anonymous said...

வெளிநாட்டில் ஆஃபிஸ் பாயாகவும் மற்ற வேலைகளும் பார்த்து விட்டு ஊரில் போய் பெருந்தன்மையாக நான் உயர்ந்த போஸ்ட்டிலும்,நல்ல சம்பளத்திலும் இருக்கிறேன் என்றல்லாம் கூறிக்கொண்டு இருப்பார்கள்.

ஆஃபிஸ் பாய் முதலாளி,மேனேஜர் இவர்களுக்கு எல்லாம் நன்றாகவே டீ, காபி, பூஸ்ட்,ஹார்லிக்ஸ் என்றல்லாம் போட்டுக்கொடுப்பார். ஏனென்றால் இவர்களுக்கு நன்றாக போட்டுக் கொடுத்தால் நமக்கு சம்பளமும்,கிம்பளமும் நல்லா கிடைக்கும் என்று. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கும் நல்லாவே கொடுப்பார்கள். முதலாளி மற்றும் மேனேஜர் இவர்கள் இரண்டு பேருக்கும் நல்ல ஜால்ற்றா அடித்து மற்றவரை எப்படியாவது தூக்கி விட்டு நாம் அந்த சீட்டில் போய் உட்கார்ந்து வேலையை செய்ய நினைப்பான் இதுதான் மனிதனுடைய இயல்பு.

ஊருக்கு லீவில் போனால் பயங்கரமான பில்டப் விட்டுட்டு திரிவான். நான்தான் எல்லாமே என்னுடைய ஆஃபீஸில் நான் இல்லாமல் ஒன்றும் நடக்காது என்று. நான் என்னுடைய ஆஃபீஸில் உயர்ந்த போஸ்ட்டில் இருக்கிறேன் எல்லாமே நான் நான் என்று கூறிக்கொண்டே இருப்பான். பிறகு அவனை பற்றி விசாரிக்கும் போது ஒன்றும் இருக்காது. அவன் அவனுடைய ஆஃபீஸில் டீ பாயை விட கேவலமான வேலையில் இருப்பான்.

ஒரு சாதாரண டீ பாய் கூட ஆஃபீஸில் என்னாமா ஆட்டம் போடுவான். அவனிடம் பதச்சிக்கிட்டா தேத்தண்ணி வராது கிளாசை களுவுன தண்ணி தான் வரும். அப்படியும் வந்தாலும் கூட தேத்தண்ணியோட எச்சிபோல் நுதைதண்ணி வரும்.

Shameed said...

இதை பார்த்தவுடன் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகின்றது.

நான் சவுதி அல்ஜுபைலில் ராயல் கமிஷனனில் சபீர் கூட இருந்தபோது ஒரு மலையாளி ஆபிஸ்பாய் இருந்தார் மலையாளத்தை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது ஆனால் முதலாளியிடம் என்ன மொழியில் தான் பேசுகிறானோ தெரியாது அவனுக்கு உண்டான காரியங்கள் கட்சிதமா நடக்கும்



முதலாளியின் கார் புறப்படும் வரை காரை நாக்கை போட்டு நக்கிக்கொண்டே (துடைத்துக்கொண்டே ) இருப்பான்

Yasir said...

ஆபிஸ் பையன்கள்தான் ஒவ்வொரு அலுவலகத்தின் ஆட்சியாளர்கள் அந்த அளவிற்க்கு அவர்களின் பங்கு ஆபிஸில் இருக்கும்....பெப்ஸியை நார்மலாக கேட்டதற்க்கு பிரிட்ஜில் கூலாக இருந்த பெப்ஸியை “நார்மலாக்க” ஓவனில் வைத்து கொதிக்க கொதிக்க கொண்டு வந்தார் எங்கள் அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த ஒரு ஆபீஸ் பாய் ஒருவர்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

I never had these kinda experience in my life as i never worked in gulf before, but over here if you need a coffee you go and make your own
poor me isn't it :P

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...


Dear Bro. Abu Ameeza,
It means, you are working in Europe (UK) without key person of the company. So, whoever making their own tea or coffee is the key person in your company. Isn't it?

Unknown said...

You are right Br மு.செ.மு. நெய்னா முஹம்மது ,actually i meant the tea boy experience

adiraimansoor said...

அபூ இப்ராஹிம்
அப்படியே நூத்துக்கு நூரு சரியாக டாகுமெண்டு தயாரித்துவிட்டாரே.
ஒரு வேலை அனுபவம் எதுவும் பேசுதோ?
உண்மையிலேயே ஆபீஸ் பாய்களின் நடவடிக்கைகளின் நிறைய பார்த்திருந்தாலும்
அதை அப்படியே எடுத்து சொல்லும்போது நகைச்சுவையாகத்தான் இருக்கின்றது

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்
ஜாஹிர் ஹுசைன்
என்னை மறந்திருக்கலாம்
உன்னுடைய போன் நம்பர்
என்னுடைய மெயிலுக்கு அனுப்பிவிடு
ஸ்கைப்பில் பேசலாம்
my skype Id adiraimansoor
mail ID adiraimansoor@yahoo.com

சபீர் உன்னுடைய ஸ்கைப் ID யையும் அனுப்பிவிடு.
இருவருடய தொடர்பும் எனக்கு இல்லை என்பதால் இந்த ஏற்பாடு
சகோதரர்கள் மன்னிக்கவும்

sabeer.abushahruk said...

வஅலைக்குமுஸ்ஸலாம் மன்சூர்.

ஜாகிர்: 0060193191275
சபீர்: 00971504826377

ஸாரி. ரெண்டு பேருமே ஸ்கைபி மற்றும் எந்த ச்சாட்டிலும் வருவதில்லை.
நேரமின்மைதான்,வேரொன்றுமில்லை.

Ebrahim Ansari said...

பல ஆண்டுகள் இவர்களுடன் ஊறிய நான் கருத்து எழுதாவிட்டால் எப்படி? கட்டுரையில் குறிப்பிடப் பட்டு இருக்கும் அனைத்தும் நடக்கும். அட்வான்சும் அடிக்கடி அப்ரூவல் ஆகும்.

முக்கியக் காரணம் : எம் டியின் மனைவியின் சிபாரிசு. அலுவலகம் முடிந்து போய் பார்த்துக் கொடுக்கும் வீட்டு வேலைகள். இறால் சுத்தம் பண்ணிக் கொடுப்பதில் இருந்து- பாத்திரம் கழுவிக் கொடுப்பதுவரை.

அது போகட்டும் இன்னுமொரு தனிப்பதிவு வேண்டும்.

ஒரு ஆபீஸ் பாய் ஊரில் உள்ளோர் துபாயில் என்ன வேலை செய்கிறாய் என்று கேட்டபோது போட்டாராம் ஒரு போடு " சுலைமானி ஆபரேட்டர் " என்று.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலுவலக கதாநாயகனைப் பற்றி பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

இ.அ.காக்கா சொன்னது போன்று, இங்கு பார்-துபாயில் ஒரு ஷாப்பிங்க் மால் பார்க்கிங்கில் இருக்கும் தடுப்பு கம்பு அதனை மேனுவலாக ஆப்ரேட் செய்பவர் (திர்ஹம் வாங்கனுமே மணி வாடகைக்கு) அவருடைய சொந்தக் காரருக்கு தான் செய்யும் வேலையை ஃபோனில் "பார்க்கிங் கிரேன் ஆப்ரேட்டராக" இருக்கேன்னு சொன்னது இன்னும் மறக்க முடியவில்லை !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு