Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

புன்னகை 17

அதிரைநிருபர் பதிப்பகம் | May 08, 2013 | , ,



’தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.’

மதிய உணவு இடைவேளையில் நண்பர் அழகாக பாடிக்கொண்டிருந்தார்.

பொதுவாக, ”தர்மம் இருக்கப்பட்டவனுக்குப் பொருந்தும்; என்றும் இல்லதாவன் நிலை என்ன?  அவன் தலையைக் காப்பது கேள்விக்குறியோ?? என்று விவாதம் சூடிபிடித்தது.

தர்மம் என்பது அனைத்து மதத்திலும் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு வழிமுறை. ஒரு அரைத்துண்டு பேரிச்சம் பழத்தினையாவது தர்மம் செய்து அதன் மூலம் இந்த உலகில் மட்டும் இல்லை, மறுஉலக வாழ்விலும் நரக நெருப்பிலிருந்து தலையைத் தக்கவைத்துக் கொள்ளும் சூட்சுமம் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது அட அது இதுன்னு ஒன்றுமே இல்லையா.. கவலையே வேண்டாம், ஒரு புன்னகை ஒரே ஒரு புன்னகை நம் எதிரிலிருப்போரைப் பார்த்து புன்னகை செய்தாலே போதும் தர்மம் செய்த புண்ணியம் நிச்சயமுண்டு என்று நபிமொழியினை மேற்கோளிட்டும் விவாதம் தொடர்ந்து நடந்தது கொண்டிருந்தது.. 

’அதெப்படீங்க.. நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைத்தால் பதிலுக்கு அவரும் புன்னகைப்பார் அவ்வளவுதான். எப்படி.அது தர்மமாகும்? லாஜிக் இடிக்குதே?’  இது ஒரு நண்பர்.

‘இதிலே தலைகாக்கும் தந்திரம் எங்கிருக்கிறது?’ இது மற்றொரு நண்பர்.

அறிவியல் பேசலாமா? அவர்களின் கவனத்தைத் திருப்பினேன்.


உண்மைதான், நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைத்தால் பதிலுக்கு அவரும் புன்னகைப்பார். அப்போது நம் தலையை மட்டுமல்ல அவரின் தலையையும் நம் புன்னகை காக்கிறது நாம் கருவில் இருக்கும் போதே கற்றுக்கொண்டதுதான் புன்னகை. ஆம், முப்பரிமான அல்ட்ராஸோனிக் தொழில்நுட்பம் மூலம் கருவறையில் இருக்கும் சிசு புன்னகைப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாம் பிறக்கும் போதும் புன்னகைக்கிறோம், பிறந்தபின்னும் புன்னகைக்கிறோம். பிறந்த குழந்தைகள் தூக்கத்திலும் புன்னகைப்பதைப் பார்த்திருப்போம். கண்பார்வை இல்லாத குழந்தைகள் கூட மனிதர்களின் குரலறிந்து புன்னகை புரிகின்றனர். 

மனிதர்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்த சார்லஸ் டார்வின் எழுதிய The Origin of the Species என்ற நூலில் முகத்தில் உள்ள தசைகள் ஏற்படுத்தும் மாற்றங்களின் விளைவுகள் குறித்த கோட்பாடுகள் வரும்போது புன்னகை பற்றி பேசப்படுகிறது.

ஒரு மனிதன் புன்னகை புரியும் நேரத்தில் அவனின் முகத்தசைகளின் மாற்றங்களின் மூலம் தான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாய் உணர்கிறான் என்று டார்வின் சொல்கிறார்,

அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், 2009ம் ஆண்டில் ஜெர்மனியில் ஒரு ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் புன்னகை புரிவதின் மூலம் மூளையில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டபோது. புன்னகை மகிழ்வான மனநிலையினைத் தருவது உறுதியானது.

இந்த புன்னகை என்ன விலை தெரியுமா? நாம் புன்னகை செய்யும் நேரத்தில் நம் மனதில் (மூளையில்) ஏற்படும் மகிழ்ச்சித் தூண்டலினால் 2000 சாக்லேட்டுகள் சாப்பிட்ட அளவிற்கு மகிழ்வு ஏற்படுகிறதாம். காசைப்பார்த்து தான் காந்தி தாத்தா போல புன்னகை புரிவேன் என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையாக தூய மனதோடு புன்னகைத்தால் 16,000 பவுண்ட் ( ஏறத்தாழ 13 இலட்சம் ரூபாய்) நம் கையில் இருந்தால் ஏற்படும் அளவுக்கு மகிழ்வு ஏற்படுகிறதாம். (போலியான புன்னகையினை மூளை அங்கீகரிப்பதில்லையாம்)

அளவுக்கு மிஞ்சிய சாக்லேட்டுகள் வேண்டுமானால் உடலுக்கு தீங்கு தரலாம். ஆனால் அளவுக்கு மீறிய புன்னகைகள் உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும். மனஅழுத்தம், இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்கிறது. மனதையும் உடலையும் இதமாக வைத்துக்கொள்ள உதவும் ’எண்ட்ரோஃபின்ஸ்’ அளிக்கிறது.

புதுப்பணக்காரர் மார்க் ஸூக்கர்பெர்க் முகத்தில் தவழும் புன்னகையும், பணமென்றால் என்னவென்றே அறியாத புதுக்குழந்தையின் முகத்தில் தவழும் புன்னகையும் ஒரே மாதிரியாய் இருக்கும், ஏன் தெரியுமா? குழந்தை ஒருநாளைக்கு 400 முறை புன்னகைக்கிறதாம்.

ஒரு சிறு புன்னகை அனைத்தையும் விட மாபெரும் தர்மம் தானே??

அனைவரின் முகத்திலும் பூத்தது புன்னகை!

புதுசுரபி

17 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Rafeeq,

Thanks for sharing the article on smiling with smile.

Regarding the following claim by Darwin whose hypotheses and discoveries have been criticized for being faulty and against birth of first human being Adam(Alaihissalam).

"ஒரு மனிதன் புன்னகை புரியும் நேரத்தில் அவனின் முகத்தசைகளின் மாற்றங்களின் மூலம் தான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாய் உணர்கிறான் என்று டார்வின் சொல்கிறார்,"

This observation of Darwin also seems defected. Because each feeling of mental condition (sad or anxiety or fear or happy) is sensed through heartbeats vibrations(not facial tissues) in different variations for each mental state.

Although real sense is actually happening in brain, the heartbeats are literally expressing the feelings when we observe.

I would like to encourage all brothers and sisters to experiment and give your feedback.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

புன்னகை பற்றிய பொன் கருத்துக்கள்!

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

புன்னகையும் அதனால் ஏற்படும் நன்னகையும் அறியத் தந்த தகவலுக்கும் நன்றி.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Ebrahim Ansari said...

புன்னகையுடன் படிக்க வைத்து இருக்கிறீர்கள்.

சிரித்த முகம் சிறப்புகளைக் கொண்டு வரும் என்பது பொதுக் கோட்பாடு.

மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம்.

உம்மணா மூஞ்சிகள் பக்கத்தில் யாருமே நெருங்க மாட்டார்கள்.

Unknown said...

முகத்தில் என்றெண்டும் கடுகடுப்பையே கொண்டிருப்பவர்களுக்கு ஒரு அருமையான தலைப்பு தங்களை மாற்றிக்கொள்ள..

சகோ புது சுரபி, இதேபோல் நல்ல சிந்தனைக்குரிய தலைப்புகளை தங்களிடமிருந்து
எதிர்பார்க்கும்

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...


என்றோ எங்கோ படித்ததில் பிடித்தது! பகிர நினைப்பது. பிடித்திருந்தால் புன்னகை சிந்துங்கள் .
=================================================

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்

கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்

மகிமையில் சிரிப்பவன் மன்னன்
தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி

தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி

நிலை கண்டு சிரிப்பவன் காரியவாதி

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்

கொடுக்கும் பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்

வெற்றியில் சிரிப்பவன் வீரன்

விளையாமல் சிரிப்பவன் வீணன்

தற்பெருமையால் சிரிப்பவன் கோழை

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி

அன்பால் சிரிப்பவள் அன்னை

காதலால் சிரிப்பவள் மனைவி

நிலை மறந்து சிரிப்பவள் காதலி

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்

நினைவோடு சிரிப்பவன் அறிவாளி

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி

கும்மி அடித்து சிரிப்பவன் இதய கசடுள்ளவன்

அகம் மகிழ்ந்து சிரிப்பவன் உண்மை நண்பன்

துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.

அப்துல்மாலிக் said...

பொன் நகைக்கும் மேல் இந்த புன்னகைனு சொல்லுறீங்க...

நன்றி

sabeer.abushahruk said...

புன்னகையின் அவசியத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் :-)

விலை மதிப்பில்லாத புன்னகைக்குக்கூட விலை நிர்ணயிக்க முயல்வது புன்னகை வர வைக்கிறது :-)

உம்மணாம்மூஞ்சிகள் திருந்தவும் :-)

வாழ்த்துகள் சகோ.

:-) :-) :-)

sabeer.abushahruk said...

இப்றாகீம் அன்சாரி காக்கா அவர்களின் சிரிப்புப் பட்டியல் பிரமிக்க வைக்கிறது. இந்தப் பதிவுக்கு சிறப்பைச் சேர்க்கிறது.

என் எஸ் கேயின் சிரிப்பு வகையும் நினைவுக்குவருகிறது.

:-):-):-)

Anonymous said...

புன்னைகையை பற்றி மிக அழகாக இங்கு பதிந்துள்ளீர்கள் புதுசுரபி அவர்களே? ஒரு மனிதன் எப்பொழுது தன்னுடைய புன்னைகையை வெளிப்படுத்துவான் என்றால் அவனுக்கு அதிகமாக பணம்,காசு அல்லது வேற வழியில் மிக சந்தோசம் ஏற்பட்டால் அவனுக்கு புன்னைகை வரும். இன்னும் சொல்ல போனால் ஒரு மனிதனுக்கு எப்பொழுது புன்னைகை வரணும் என்றால் அல்லாஹ்வுக்கும்,அவனுடைய திருத்தூர் நபி (ஸல்) அவர்களுக்கும் கீழ்படிந்து நடக்கும் போது தான் புன்னைகை வர வேண்டும்.

தர்மம் என்பது அடுத்தவர்களுக்கு தெரியாமல் கொடுப்பது அப்படி கொடுத்தாலும் கொடுத்ததை சொல்லிக்காட்டக்கூடாது. தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள் தர்மம் செய்தால் தலை மட்டும் காக்காது மற்ற எல்லாவற்றையும் காக்கும். நம்மில் பல பேருக்கு ஒரு சில பழக்கங்கள் உண்டு கொடுத்ததை சொல்லி காட்டுவார்கள். தர்மமாக இருந்தாலும் சரி அல்லது வேற எதுவாக இருந்தாலும் சரி அல்லாஹ்வுக்காக ஒரு செயலை செய்ய நாடி விட்டால் அதை வெளிப்படுத்தக்கூடாது. அப்படி வெளிப்படுத்தும் சமையத்தில் நீங்கள் செய்த நன்மைகள் எல்லாம் அழிந்து விடும் தர்மத்தை கொடுத்து செல்வத்தை வளருங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

புன்னகைக்க மறந்த தருணங்கள் ஏராளம்
புன்னகையால் மகிழ்ந்த தருணங்கள் தாராளம் !

எதுக்கோ எப்போவோ எழுதியது ஏன் இப்போது நினைவுக்கு வருகிறது !

புன்னகையுங்கள் ! :)

sabeer.abushahruk said...

ஏராளம்
தாராளம்

ஹய்ய்ய்யோ!!!

நார்வே கவி அபு இபு அவர்களே கலக்குறீங்க.

இதத் தவிர, வேற மாதிரி தமிழே இல்லயா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா,

அவ்வ்வ்ளோ நல்ல்ல்லாவா இருக்கு !?

புன்னகைங்கன்னுதானே சொன்னேன்...

அதன் சாயலைக் கேட்டால் கிரவ்னுக்குத்தான் தெரியும்... !

Ebrahim Ansari said...

//அதன் சாயலைக் கேட்டால் கிரவ்னுக்குத்தான் தெரியும்... !//

தூண்டிலில் ஒரு வகை. தூண்டலில் ஒரு வகை என்றும் சொல்லலாம்.

Ebrahim Ansari said...

//என் எஸ் கேயின் சிரிப்பு வகையும் நினைவுக்குவருகிறது.//

ஆமாம் தம்பி அதிலும் அந்த சங்கீத சிரிப்பு.

Ahamed irshad said...

புன்னகை பற்றிய இப்பதிவு அருமை.. வாழ்த்துக்கள் சகோ.. ;)

புதுசுரபி said...

புன்னகை புரிந்த அனைவருக்கும் நன்றி. :) :) :)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு