Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நான்காவதுத் தமிழ் 40

அதிரைநிருபர் பதிப்பகம் | May 08, 2013 | , , ,

செம்மொழியான எம்மொழி தமிழ்
தொன்மையானது
திண்ணமானது

வார்த்தைகளுக் குண்டான
அர்த்தம் சிதைக்காமல்
வாக்கியம் செழித்தால்
இயற்றமிழ்

வார்த்தைக ளுடைத்து
சந்தங்கள் அமைத்து
இனிப்போ கசப்போ
எதுகை மோனைக்குள்
இழுத்துப் பிடித்து
சிந்தை மயக்கும்
செய்யுள் அமைத்தால்
இசைத்தமிழ்

பாவம் கெடாத
வார்த்தைகள் கொண்டு
வசனங்களாகவே
வாழ்க்கையைச் சொல்லவே
நாடகத்தமிழ்

இயல் இசை நாடகம்
முத்தமிழ் எனில்
நான்காவதுத் தமிழே
நானெழுதும் மொழி

ஏழாம் அறிவைத்
தேடும் மனிதன்
முத்தமிழுக்குள்
முடங்குதல் அழகோ

புதிது புதிதாக
பிறக்கும் உலகில்
புத்தம்புது பிறப்பே
நான்காவதுத் தமிழ்

இதுவே
இளய மகவு
செம்மொழி தமிழின்
நவீனப் படைப்பு

நான்காவதுத் தமிழில்
வார்த்தைகளுக்குள்
வாழ்வியல் இருக்கும்
வழிமுறை விளங்கும்

சொற்களின் கோர்வையில்
சுரணை இருக்கும்
லயமும் நயமும் நிலவும்
பயமிலாது

நான்காவதுத் தமிழில்...

காதலைச் சொன்னால்
கனவுகள் இலவசம்
கடமையைச் சுட்டினால்
கைகள் முருக்கேறும்

சிந்தனை விதைத்தால்
விந்தைகள் விளையும்
சீர்திருத்தம் சொன்னால்
புரட்சிப் பரவசம்

வாழ்வியல் சொன்னால்
மனிதம் பெருகிடும்
ஆன்மீகம் பயிற்றுவித்தால்
சுவர்க்கம் நெருங்கிடும்

சட்டாம்பிள்ளைகளின்
சட்ட திட்டங்களுக்கோ
உருட்டல் மிரட்டலுக்கோ
கட்டுப்படாது என் தமிழ்

நான்காவதுத் தமிழ்
அழுது வழியாத
பொழுதென விடியும்

தீர்வுகள் சொல்லத்
திணறத் தெரியாத
மொழி…
புன்னகை புரிய
நான்காவதுத் தமிழையே
தெரிவு செய்கிறது.

நான்காவதுத் தமிழில்
தனித்தனி வார்த்தைகள்
அதனதன் அர்த்தம் கொள்ள
வாக்கியங்களுக்குள்அவற்றை
வார்த்தெடுக்கையில்
தனித்தன்மை இழக்கும்!
வார்த்தைகளின் கூட்டணி
உணர்வுகளின் சூழ்கொண்டு
உயிர்பெறும் தமிழ்

மழைதரும் மேகத்திற்கு
வரம்புகளுண்டா
இந்த இடத்தில்
இவ்வாறு பெய் யென்னும்
இலக்கணம் உண்டா
பெய்து முடித்ததும்
குறிப்புக ளெடு
இலக்கணம் வகு!

தமிழொன்றும்
பரம்பரை ஆபரணமல்ல
பெட்டிக்குள் பூட்டி
நல்லநாள் பெரியநாளில்
திறந்து பார்க்க
கிறங்கிச் சொக்க

மொழியினை முடக்கும்
கட்டுக ளவிழட்டும்
கடல் கடக்கட்டும் தமிழ்
தரணியெங்கும்
தமிழ்மய மாகட்டும்

முத்தமிழைக் கொஞ்சம்
புதுப்பிக்கும் வரை
நான்காவதுத் தமிழ் வளர்ந்து
நம்மொழி சிறக்கட்டும்
ஐந்தாவதாயொரு தமிழ்
அண்மையில் வாய்க்கட்டும்

வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!

அதிரை நிருபர் தளத்தில் பதிக்கப்பட்டதொடர்புடைய பதிவுகள்:
01) பதிவிலக்கணம்!
02) எது கவிதை?
03) எண்ணமும் எழுத்தும்!
04) கவிதை ஒரு கோணல் பார்வை..

Sabeer AbuShahruk

40 Responses So Far:

Ebrahim Ansari said...

//முத்தமிழைக் கொஞ்சம்
புதுப்பிக்கும் வரை
நான்காவதுத் தமிழ் வளர்ந்து
நம்மொழி சிறக்கட்டும்
ஐந்தாவதாயொரு தமிழ்
அண்மையில் வாய்க்கட்டும்// கவிதையின் ஆரம்பம் நிமிர வைத்தது. நிறைவுப் பகுதி கைதட்டிக் களிக்க வைத்துள்ளது.

நாம் பழகும் அனைத்துத் தமிழ்ப் பேராசான்களுக்கும் அனுப்படவேண்டிய கருத்துள்ள கவிதை. அன்பான பாராட்டுக்கள் தம்பி சபீர்.

Riyaz Ahamed said...

சலாம். கவி, முத்து
என் , நட்பு.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahruk,

An amazing poem on Tamil, reflecting innovation and forward thinking.

I like and appreciate revolutionary expressions of the "Fourth Tamil" which are...

//புதிது புதிதாக
பிறக்கும் உலகில்
புத்தம்புது பிறப்பே
நான்காவதுத் தமிழ்

இதுவே
இளய மகவு
செம்மொழி தமிழின்
நவீனப் படைப்பு

நான்காவதுத் தமிழில்
வார்த்தைகளுக்குள்
வாழ்வியல் இருக்கும்
வழிமுறை விளங்கும்

சொற்களின் கோர்வையில்
சுரணை இருக்கும்
லயமும் நயமும் நிலவும்
பயமிலாது

நான்காவதுத் தமிழில்...

காதலைச் சொன்னால்
கனவுகள் இலவசம்
கடமையைச் சுட்டினால்
கைகள் முருக்கேறும்

சிந்தனை விதைத்தால்
விந்தைகள் விளையும்
சீர்திருத்தம் சொன்னால்
புரட்சிப் பரவசம்

வாழ்வியல் சொன்னால்
மனிதம் பெருகிடும்
ஆன்மீகம் பயிற்றுவித்தால்
சுவர்க்கம் நெருங்கிடும்

சட்டாம்பிள்ளைகளின்
சட்ட திட்டங்களுக்கோ
உருட்டல் மிரட்டலுக்கோ
கட்டுப்படாது என் தமிழ்

நான்காவதுத் தமிழ்
அழுது வழியாத
பொழுதென விடியும்

தீர்வுகள் சொல்லத்
திணறத் தெரியாத
மொழி…
புன்னகை புரிய
நான்காவதுத் தமிழையே
தெரிவு செய்கிறது.

நான்காவதுத் தமிழில்
தனித்தனி வார்த்தைகள்
அதனதன் அர்த்தம் கொள்ள
வாக்கியங்களுக்குள்அவற்றை
வார்த்தெடுக்கையில்
தனித்தன்மை இழக்கும்!
வார்த்தைகளின் கூட்டணி
உணர்வுகளின் சூழ்கொண்டு
உயிர்பெறும் தமிழ்
//

Whoever read and grasp your thoughts through this poem would also become catalist for revolution in Tamil community all over the world. InshaAllah.

Jazalallah khairan,

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

ஏணியை கூரை மேல் போடாதே, வானில் போட்டு ஏறி செல் என்பார்களே இது தானோ அது, கவிகரே - தூள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மொழியினை முடக்கும்
கட்டுக ளவிழட்டும்
கடல் கடக்கட்டும் தமிழ்
தரணியெங்கும்
தமிழ்மய மாகட்டும்//

அருமை !

இது சமீபத்திய பேசு பொருளுக்கும் பொருந்தும் !

//மழைதரும் மேகத்திற்கு
வரம்புகளுண்டா
இந்த இடத்தில்
இவ்வாறு பெய் யென்னும்
இலக்கணம் உண்டா
பெய்து முடித்ததும்
குறிப்புக ளெடு
இலக்கணம் வகு!//

துளிர்க்கிறது நம்பிக்கை
கவிதையும் கைகோர்க்கும் !
என்று...

ஜஸாக்கல்லாஹ் காக்கா !

Yasir said...

பேராசைக் கொள்ள வைக்கும் கவிக்காக்காவின் கவிவரிகளும் ..சிந்தனையும்...நான்காவது ,ஐந்தாவது தமிழ் சாத்தியமே..சங்கத்தமிழை எத்தனை நாளைக்குதான் கொஞ்சிக் கொண்டிருப்பது..தமிழ் வாழ்க அது மொழியேதான் அன்றி நமக்கு உயிர் அல்ல

Ebrahim Ansari said...

பேராசிரியர் அப்துல் காதர் அவர்களுக்குப் படித்துக் காட்டினேன்.

நான்கு முறை அடடா மூன்று முறை ஆஹா என்று சொன்னவர்

//தமிழொன்றும்
பரம்பரை ஆபரணமல்ல
பெட்டிக்குள் பூட்டி
நல்லநாள் பெரியநாளில்
திறந்து பார்க்க
கிறங்கிச் சொக்க// என்கிற வரிகளைப் படிக்கும்போது சொக்கிப் போனார். எப்படியப்பா இப்படியெல்லாம் அற்புதமாக எழுதுகிறார் என்ற கருத்தையும் சொன்னார்.

பேராசிரியர் தி. மு. அ. காதர் அவர்களை அலைபேசியில் தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன்.


ZAKIR HUSSAIN said...

தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படும் கவிஞர்களின் பெயருடன் உன் பெயரும் உச்சரிக்கப்படும்.

உன் பெயர் அரங்குகளில் ஒலிக்க இன்னும் சில நாட்களே இருப்பதாக " பட்சி" சொல்கிறது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் சபீர் காக்கா,,

நிச்சயம், நிறைய தமிழர்களை போறாமை கொள்ளவைக்கும் நான்காம் தமிழின் அத்துனை வரிகளும்..

தமிழ் என் பேச்சு, தமிழ் என் மூச்சு, என்று கர்ஜிக்கும் சிலர் அதிரை கவியின் நான்காம் தமிழை ஒரு முறையல்ல பல முறை வாசிக்க வேண்டும்.

அதிரை.மெய்சா said...

தமக்குள் இருக்கும் தமிலூற்றை எங்களுக்கும் அருகத் தந்து தரம்பட அதனை ச்சொல்லி மேலும் தமிழை தலைநிமிரச்செய்த விதம் அருமை .அன்பு நண்பனே.!

வாழ்த்துக்கள்.!

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

நான்காவது தமிழ். கவிதை மிகவும் அருமை.
என்னை சுண்டி இழுத்த பகுதி.

//சிந்தனை விதைத்தால்
விந்தைகள் விளையும்
சீர்திருத்தம் சொன்னால்
புரட்சிப் பரவசம்//

வாழ்த்துக்கள் உங்களுக்கு.
தொடர்ந்து எழுதுங்கள்.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Shameed said...

//சட்டாம்பிள்ளைகளின்
சட்ட திட்டங்களுக்கோ
உருட்டல் மிரட்டலுக்கோ
கட்டுப்படாது என் தமிழ்//

கரைபுரண்டோடும் நான்காம் கவி ஆற்றில் எனக்கு பிடித்த வரிகள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அறியாத கனடாக்காதர் அவர்கள் குரல் கொடுக்க இடையில் நானும் தமிழ் காக்க ஆதரவேயின்றி களம் இறங்கி அதனால் எனக்கு கிடைத்த வெற்றிக் கவிதையாக இதை நான் ஏற்று மகிழ்கிறேன்.

இதன் காரணக்கடல் கருணை கவித் தமிழ் மகான் என் நேசர் கவிஞர் சபீர் அவர்களை மனதார புகழ்கிறேன்.
வாழ்க கவிஞர்!
வளர்க தங்கள் தமிழ்த் தொண்டு!

Unknown said...

சபீர்!
எங்கிருந்து இந்த வாரதைகளைக்கொட்டுகிறாய் ?

அந்த ஆரம்ப இடத்தை எனக்கும் காட்டு

அபு ஆசிப்.

Ahamed irshad said...

உங்க கைகளை பற்றனும் காக்கா.. தமிழால் ஆள்கிறது காக்கா இந்த வரிகள்.. ரெண்டாவது தடவையாக படித்தாலும் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் விளங்க விளங்க அவ்வளவு பிடித்திருக்கிறது.. மேலே ஜாஹிர் காக்கா சொன்னதும் உண்மை.. இருங்க இன்னொரு தடவை படிச்சிட்டு வர்றேன்...

Unknown said...

உன் மூளை என்ன தமிழ் வார்த்தைகளின் அமுத சுரபியா ? அல்ல அல்ல குறையாமல் வரும்போல் தெரிகிறதே ?

முத்தமிழ் போதும் என்று முடங்கிக்கிடந்த எங்களை , நான்காவது தமிழுக்குள்
நுழையச்செய்து , எங்களுக்கு அறிமுகம் செய்த உன் கவி அழகே அழகுதான்.

வாழ்க உன் கவித்திறம்,
வளரக உன் நான்காவது தமிழ் என்று போற்றி,

ஐந்தாவது தமிழுக்கு என்று உன் விரல்கள் விளையாடும் என்று எதிர் நோக்கி
காத்திருக்கும் உன் நட்பு

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இது ஏற்புரையல்ல, நன்றி நவிழ்தல். காரணமுண்டு. நம் தாய்மொழி தமிழைக் குட்டானைப் போட்டு கவிழ்த்தி மூடி வைத்துவிட்டு "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று புலம்புபவர்களுக்கு இந்தப் பதிவு எரிச்சலைத் தரலாம்.

தமிழை ஆவணப் படுத்தும் குமாஸ்தாவாக இல்லாமல் செம்மொழியை விரிவாக்கவும் தமிழ் மொழியின் ராஜ்ஜியத்தை விரிவு படுத்தவும் போர்வீரனாக இருக்கவே விழைந்து  இதை எழுதினேன்.

ஏற்றுக்கொள்ளப்படுமா என்கிற பயம் இருந்தது உண்மை. ஆனால் முதல் கருத்தே...

மதிப்பிற்குரிய இப்றாகீம் அன்சாரி காக்கா,

நீங்கள் தட்டிக் கொடுத்தாலே போதும் என்னும் எதிர்பார்ப்பே இருந்தது. ஆனால், தங்களின் இயல்பான தங்க குணத்தினால் தூக்கி நிறுத்திவிட்டீர்கள். மதிப்பிற்குரிய பேராசிரியர் சாருக்கும் தங்களுக்கும் நன்றியும் து ஆவும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்காமார்களே.

sabeer.abushahruk said...

ரியாஸ்,
வ அலைக்குமுஸ்ஸலாம்.

என் நட்பை எண்ணி நீ பெறுமிதம் கொள்ளத் தகுதியானவனாக என்னை ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

கோலாலம்ப்பூரில் வாசித்துக் காட்டும்போதே ரொம்ப மெச்சினாய். இப்ப கருத்துச்சொல்ல "வெறும் காத்து மட்டும்தான் வருதா?"

va alaikkumussalam bro Ahmed Ameen,

Thanks for liking this poem. 

Understanding my point of view is bit of tough I guess but it will certainly catch the sense of those who got 'lateral thoughts' in their characteristics  and you are one of those.

People claim Tamil will grow if we strengthen the binds of it such as strict obligation to the grammar. But, I believe we can grow our mother tongue only if we spread it simplified.

thanks.

sabeer.abushahruk said...

சகோ மன்னு சல்வா,
ஒன்னு சொல்லவா?
நீங்கள் சொல்லும் அதேதான் நோக்கம். பாராட்டுக்கு நன்றி.

அபு இபு,
உங்களிடம் பேசிப்பேசியே இதை முழு வடிவத்திற்குள் அடக்கி எழுதி முடித்தேன். உதவிக்கு நன்றி.

தம்பி யாசிர்,
ஆவணங்களைப் பராமறிப்பதிலும் ஆணவத்தை தக்க வைப்பதிலும் ஆர்வமுள்ள மனிதர்களுக்கு மத்தியில் எளிமையானவர்களே "அடுத்தது என்ன?" என்கிற நிலைக்குச் சிந்திக்கிறார்கள். 

அத்தகைய சிந்தனைகளில், என்னுடன் உங்கள் கருத்து கைகோப்பதைப் பல முறை கண்டிருக்கிறேன். உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.  நன்றி யாசிர்.

sabeer.abushahruk said...

ஜாகிர்,

தமிழ்நாட்டில் என் பெயர் அறியப்படுவதைவிட, தமிழ்நாடு தாண்டியும் இந்தியா தாண்டியும்  தரணியெங்கும் தமிழ் மயமாக வேண்டும் என்பதே அவா.

இது, தமிழை அலங்கரித்து வைப்பதால் சாத்தியப்படாது. தமிழுக்குள் உணர்வுகளைப் புகுத்த வேண்டும், செய்தியைச் சொல்ல வேண்டும், அவசியமான வழிமுறைகளைச் சொல்ல வேண்டும். அதற்கு மொழி எளிமையாயிருக்க வேண்டும்.

அப்பாலா? 

தாஜுதீன்,
அதெல்லாம் சும்மா உதார். உண்மையாகவே தமிழை நேசிப்பவர் தவறைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வர். சொத்தையான தட்டையான சோகையான எழுத்துகளை ஆஹா ஒஹோ என்று புகழ மாட்டார். சரியாக எழுத கற்பிப்பர்.  சடங்குக்காக கருத்திடமாட்டார். 

இந்தப் பதிவை வாசித்தமைக்கு நன்றி.

ஹமீது,
தங்களுக்குப் பிடித்த வரிகள்தான் தமிழின் திமிறு, ஆணவமல்ல. ரோசக்காரவய்ங்களுக்கு இது ரொம்பப் பிடிக்கும். நன்றி ஹமீது.

Ebrahim Ansari said...

பெரியவர் மதிப்பிற்குரிய எஸ். முகமது பாரூக் அவர்கள் அலை பேசியில் அழைத்துப் பதியச் சொன்னது

//சிந்தனை விதைத்தால்
விந்தைகள் விளையும்
சீர்திருத்தம் சொன்னால்
புரட்சிப் பரவசம்//

மருமகன் சபீரின் வரிகள் என் நெஞ்சை உலுக்கிய மின்னல் வரிகள். இது நான்காம் தமிழல்ல புரட்சித்தமிழ் என்று சொன்னால் அது "தீட்டு" ஆகுமோ?

சும்மா கிடந்த என்னை அவரின் கவிதை வரிகள், "மருமகனே சபீர்! உன் கவிதைத் திறனுக்கு ஒளி மயமான எதிர்காலம் காத்திருக்கிறதுஎன்று சொல்" என்றது. அதன் கட்டளைக்குப் பணிந்தே இந்த வரிகளை வரைந்தேன்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.

எஸ். முகமது பாரூக்.

crown said...

செம்மொழியான எம்மொழி தமிழ்
தொன்மையானது
திண்ணமானது
-------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் கவிதை எழுதினால் அது மென்மையானதும் கூட!

crown said...

வார்த்தைகளுக் குண்டான
அர்த்தம் சிதைக்காமல்
வாக்கியம் செழித்தால்
இயற்றமிழ்
------------------------------------
இதுலேயே உண்டான என்பது குண்டான என எழுத்துமாறிவரும்போதும் ஒரே அர்த்தம் கற்பிக்கும் அதிசய மொழி தமிழ்(என்றும் குண்டாகி போசாக்குடந்தான் இருக்கிறது)

crown said...

வார்த்தைக ளுடைத்து
சந்தங்கள் அமைத்து
இனிப்போ கசப்போ
எதுகை மோனைக்குள்
இழுத்துப் பிடித்து
சிந்தை மயக்கும்
செய்யுள் அமைத்தால்
இசைத்தமிழ்
---------------------------------
அரிசி,பருப்பு ஆகியவை புடைத்து(சுத்தம் செய்து)அதை (மோ)பானையில் இட்டு தேவையான சுவைக்கு ஏற்ற பதார்த்தம் படைக்கும் சுவையாக உங்கள் கவிதை வரிகளே இசைத்தமிழை அழகுற செய்கிறது.

crown said...

பாவம் கெடாத
வார்த்தைகள் கொண்டு
வசனங்களாகவே
வாழ்க்கையைச் சொல்லவே
நாடகத்தமிழ்
---------------------------------------
பாவம் செய்யாத வார்தையும்(அருமை)பாவம் காட்டாத( நடித்து)செய்கையும்,உண்மை பேசும் வசனங்களாகவே சிந்திக்கும் கருத்தைச்சொல்வதே இயல்பான நாடகத்தமிழ்.

crown said...

இயல் இசை நாடகம்
முத்தமிழ் எனில்
நான்காவதுத் தமிழே
நானெழுதும் மொழி
---------------------------------
கலப்படமில்லாத, கருனையின் வாய்பாடாக இருக்கும் இந்த நான்காம் தமிழை நீங்கள் தான் எழுத முடியும் . மற்றவர்களேல்லாம் நீங்கலாக(தவிர)!!!அல்ஹம்துலில்லாஹ் என் இனம் சார்ந்த , என் மார்கம் சார்ந்த மூத்த சகோதரன் எழுதும் நான்காம் தமிழை,வரும் சமுதாயம் எட்டும் திசைக்கும் எட்டும் படி இதின் மதிப்பு இரட்டிப்பாய் மாற்றி எட்டாம் தமிழாக செய்ய வேண்டுகிறேன்.

crown said...

நான்காவதுத் தமிழில்
தனித்தனி வார்த்தைகள்
அதனதன் அர்த்தம் கொள்ள
வாக்கியங்களுக்குள்அவற்றை
வார்த்தெடுக்கையில்
தனித்தன்மை இழக்கும்!
வார்த்தைகளின் கூட்டணி
உணர்வுகளின் சூழ்கொண்டு
உயிர்பெறும் தமிழ்
---------------------------------------
ஆஹா! சமத்துவம் சொல்லும் சங்கதி!கூடிவாழ்ந்தால் மில்லின்(மிலினியம்) நன்மை என முழங்கும் நம்பிக்கை!துருவ நட்சத்திரமாய் மின்னப்போகும் வாக்குறுதி! அல்ஹம்துலில்லாஹ்! சீரிய சிந்தனை!

crown said...

முத்தமிழைக் கொஞ்சம்
புதுப்பிக்கும் வரை
நான்காவதுத் தமிழ் வளர்ந்து
நம்மொழி சிறக்கட்டும்
ஐந்தாவதாயொரு தமிழ்
அண்மையில் வாய்க்கட்டும்
----------------------------------------------------
நம்பிக்கை தோட்டத்தில் போடப்படும் விதை! கூடிய விரைவில் ஐந்தாம் தமிழ் தவழ்ந்துவரும்,பின் நடந்து சருக்கென சீரிவரும் கம்பீரமாக!(அபு)சாருக்காக)

அப்துல்மாலிக் said...

எல்லோரும் பாராட்டி சீராட்டியாச்சு உங்க தமிழ் வரிகளின் கோர்வை கண்டு

நானும் படித்து சிலாகித்தேன் என்பதை இங்கே பதிவு செய்கிறென்

வாழ்த்துக்கள் காக்கா

sabeer.abushahruk said...

கிரவுன்,

உங்களுக்கான கருத்துப்பெட்டியின் இடங்களை வெற்றிடமாக வைக்க அ.நி.யிடம் கேட்டுக்கொள்ளலாம் என இருந்தேன். சிறப்புப்பேச்சாளர் வராத மேடைப்பேச்சென என் ஆக்கம் ஊணமாகிவிடாமல் இருக்க இதோ வந்துவிட்டீர்கள்.

இனி, நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள் உங்களுக்கான இட ஒதுக்கீட்டை.

crown said...

கிரவுன்,

உங்களுக்கான கருத்துப்பெட்டியின் இடங்களை வெற்றிடமாக வைக்க அ.நி.யிடம் கேட்டுக்கொள்ளலாம் என இருந்தேன். சிறப்புப்பேச்சாளர் வராத மேடைப்பேச்சென என் ஆக்கம் ஊணமாகிவிடாமல் இருக்க இதோ வந்துவிட்டீர்கள்.

இனி, நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள் உங்களுக்கான இட ஒதுக்கீட்டை.
-----------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! இப்ப தந்திருக்கும் இடமே போதும். இடம் கொடுக்கும் பெரியமனசுகாரங்க நீங்களேல்லாம்! ஆனால் ஒதுக்கீடு என்பதை மட்டும் வாழ்வில் ஒருனாலும் செய்துவிடாதீர்கள் நீங்களேல்லாம் சேர்ந்துதான் நான்! நானும் ஒருவன் நீங்களில், அப்பொழுதுதான் நீங்கள் நாம் என சொல்ல முடியும் அளவிற்கு அன்பில் முடிந்து வைத்திருப்பவன் என்னைவெட்டி விடமுடியாது!

crown said...

நான் ஒருக்கால் ஊணமாகிவிட்டாலும், என் மூற்றாவது காலாக உங்களைப்போன்ற ஊண்று கோல் இருப்பதால் வரும் காலம் " நடப்பதை" நான் பதைப்பதைப்புடன் காத்திருக்கவில்லை! நடப்பது நடக்கட்டும் நல்லவையாகவே நடக்கும் என் நட்பின் ஊண்று கோலின் மூலம் கூட!

sabeer.abushahruk said...

அதிரை மெய்சா,

உன் பராட்டுக்கு மிக்க நன்றி நண்பா.

அபு ஆசிஃப்,
காதரு. அது ஒண்ணுமில்லேடா. உண்மையிலேயே ஒண்ணுமில்லே. அதான் ஏற்கனவே சொன்னேனே, அப்படி எழுதிப்பார். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

இது நீ எழுதியதுதான்:

//முத்தமிழ் போதும் 
என்று 
முடங்கிக்கிடந்த எங்களை , நான்காவது தமிழுக்குள்
நுழையச்செய்து...// அவ்ளோவ்தான்டா.

மெய்சா: காதரு யாருன்னு தெரியுதா? 
காதரு: மெய்சா யாருன்னு தெரியுதா?

கே எம் ஏ ஜமால் காக்கா அவர்கள்,

தங்களின் உற்சாகமூட்டும் கருத்துக்கு மிக்க நன்றி. 

Unknown said...

Assalamu Alaikkum

Dear Mr. Crown Dasthakir,

//நான் ஒருக்கால் ஊணமாகிவிட்டாலும், என் மூற்றாவது காலாக உங்களைப்போன்ற ஊண்று கோல் இருப்பதால் வரும் காலம் " நடப்பதை" நான் பதைப்பதைப்புடன் காத்திருக்கவில்லை! நடப்பது நடக்கட்டும் நல்லவையாகவே நடக்கும் என் நட்பின் ஊண்று கோலின் மூலம் கூட! //

I am able to sense and have little shock in my mind from your comment that is revealing some real condition about your health. Am I right? I hope all are fine.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
ameenspirit@gmail.com

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய இப்றாகீம் அன்சாரி காக்கா அவர்களுக்கு,

ஃபாரூக் மாமாவை நானும் ஜாகிருடனும் சாவண்ணாவுடனும் முகமதலியுடனும் பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால், அவர்களுக்கு என்னை ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் அந்த முகத்தின் தேஜஸ் என்னை ஈர்க்கும். அப்பேர்பட்ட அவர்களா என்னைப் பாராட்டினார்கள்?!

அல்ஹம்துலில்லாஹ்!

என் நன்றியையும் து ஆவையும் தயை செய்து தெரிவித்துவிடுங்கள் காக்கா. இந்தப் பதிவை அவர்களுக்கு எத்திவைத்த தங்களுக்கு மீண்டும் நன்றி.


எம் ஹெச் ஜே,

விரும்பி வாசித்தமைக்கு மிக்க நன்றி (இன்னும் ஹந்தூரி கலக்கத்திலிருந்து வெளியே வரலயா?  "காரணக்கடல்". :-)

இர்ஷத்,
உணர்வுபூர்வமான கருத்துக்கு நன்றி. எத்தனை முறை வாசித்தாலும் இனித்தால் அதுதான் உண்மையில் தமிழில் எழுதப்பட்டுள்ளதாக அர்த்தம்.

அப்துல் மாலிக்,

ரசனை மிக்கோரால் வாசிக்கப்படும்போதுதான் எழுதியவன் மகிழ்கிறான். நன்றி.

(I need time to respond for crown)

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahruk,

//People claim Tamil will grow if we strengthen the binds of it such as strict obligation to the grammar. But, I believe we can grow our mother tongue only if we spread it simplified.//

Actually as sons and daughters of Mother Tamil, we need to crawl, stand, run and fly and reach the sky by adapting universal knowledge and ideas. Such adaptability is found in English language, so its dominating all over the world we see.

Most of the science and technologies, research and innovations are thought out and written in English. I wish each Tamil(Tamilan) should be creative and innovative enough to reach that level.

Your 4th Tamil lines has the "secret sause - revolutionary thought force" to induce our minds.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Yasir said...

கிரவுனின் வார்த்தைகளும்,வரவும் மகிழ்ச்சியூட்டுகின்றது

அதிரை.மெய்சா said...

சபீரு..>.காதர்..??? அப்துல் காதர் தானே..! நமது பள்ளிப்படிப்பின் போது பாட்டுப்போட்டியில் முதலிடம் வரும் காதர் தானே.? எங்கே இருக்கிறார்..? நான் பள்ளிப்பருவத்தில் பார்த்ததுதான். அதற்குப்பிறகு சந்திக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது. மறக்கமுடியாத மறந்து போன நாட்கள் அது.

sabeer.abushahruk said...

கிரவுன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
 
எப்போதும், பின்னூட்டத்திற்கேப் பின்னூட்டம் இடத்தூண்டும் பின்னூட்டம் தங்களுடையதுதான்.  எல்லோரும் இந்தப் பதிவைப்பற்றிப் பேசும்போது நீங்கள் மட்டும் பகுதி பகுதியாகப் பேசுவீர்கள். ஒவ்வொரு வார்த்தையையும் வைத்துக்கொண்டு வகைவகையாய் வர்ணிப்பீர்கள்.  எந்த எழுத்தாளனும் உங்களின் இந்த அனுகுமுறையில் மயங்கியேப் போவான்.  மீண்டும் மீண்டும் வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பான். நான் மட்டும் விதி விலக்கா என்ன?
 
இங்கு, அபு இபுறாகீமிடம், “ஏன் இன்னும் கிரவுன் வரல்?” என்று பிராண்டி எடுத்துவிடுவேன்.  ஏற்புரைகளைத் தாமதப்படுத்துவதற்கும் நீங்கள் வரும்வரை காத்திருப்பதுதான் காரணம்.
 
இந்தப் பதிவில் நீங்கள் ரசிப்பீர்கள் என்று எழுதியவற்றுள், :
 
நான்காவதுத் தமிழில்
 
காதலைச் சொன்னால்
கனவுகள் இலவசம்
 
சிந்தனை விதைத்தால்
விந்தைகள் விளையும்
 
ஆகிய வரிகளை நீங்கள் ரசித்தீர்களா?
 
உண்டானதைக் “குண்டானதாக” திரித்து அர்த்தம் காண்கிறீர்களே… உண்டானால் பெண்டிர் குண்டாவர் என்பதாலா?
“அரிசி பருப்பை புடைத்து மோனைப் பானையில் பதார்த்தம் படைக்கும்” கற்பனை அருமை
பாவத்தையும் பாவத்தையும் குழைத்து எழுதிய கருத்து ஈர்த்தது.
நான்காம் தமிழை எட்டு திசைக்கும் எட்டும்படி எட்டும்படி…. கிரவுனின் தமிழ் செழிப்பானது.
 
உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள், வஸ்ஸலாம்.
 
 

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு