Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை வர்த்தக மற்றும் கலாச்சார ? விழா - நடந்தது என்ன ? 26

அதிரைநிருபர் | May 04, 2013 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.


கடந்த ஒருமாத காலமாக அதிரையின் சாலைகளில் 'வர்த்தக, கலாச்சார விழா' நடக்கப் போவதாக ஃப்ளக்ஸ் விளம்பரங்கள் அறிவித்தன.
என்ன? எங்கு? எப்போது? என்பன பரம இரகசியமாக இருந்தன.
ஏப்ரல் இறுதி வெள்ளியில் விபரங்கள் வெளிவந்தன. கற்றோர் பலர் அதில் பொறுப்பு வகிப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அதிரையில் 'பெருஸ்ஸ்ஸ்ஸா' ஏதோ மாற்றம் வரப்போகிறது என்று பலரும் நம்பியதுபோல் நானும் நம்பினேன்.
அது எத்துணை மடத்தனம் என்பது 28.4.2013 மாலை தெரியவந்தது.
படித்தவர்கள் நடத்திய 'கலைச் சேவை'களை வீடியோவில் பார்த்து மனம் கனத்தது.
என்னைப் போலவே ஏமாறிப்போன சகோதரர்களுள் ஒருவரான 'மீடியா மேஜிக்' நிஜாமுத்தீன், 'வர்த்தகமாம்லோ ...' என்ற எண்ணத்தில் ஒரு ஸ்டால் போட்டிருந்தார். அது புத்திசாலித்தனமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அங்குள்ள அரங்கத்தில் நடைபெற்ற அசிங்கங்களை வீடியோ எடுத்துப் பத்திரப்படுத்தியது வெகு புத்திசாலித்தனம்.
இத்தனைக்கும் அரங்கக் கலை(?) நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறப்படவில்லை என்ற தகவலையும் அவர் நேற்று காவல் நிலையத்திலிருந்து தெரிந்து வந்து சொன்னார்.
அரங்கம், அசிங்கங்களை அரங்கேற்றிய முதல் நாளே விழாவின் ஜாயிண்ட் செக்ரட்டரி செய்யது அஹ்மது கபீர் அவர்களை சந்தித்துத் தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார் சகோ. நிஜாமுத்தீன். "சரி, சரி! பாட்டுகளைக் குறைத்துக் கொள்ளலாம்" என்ற அறிவுசீவித்தனமான பதில் கிடைத்திருக்கிறது. என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் அரங்கம் தொடர்ந்து அசிங்கமாகிக் கொண்டே வந்தது.
நேற்று 2.5.2013இல் அதிரை உலமாக்கள் சபை, கலாச்சாரத்தை(!) அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் பெரும் பொருட்செலவில் கலாச்சாரப் பொரட்சி நடைபெற்று வருவதால் "அரங்க நிகழ்ச்சிகளை நிறுத்தமுடியாது; யோசித்துச் சொல்கிறோம்" என்றெல்லாம் முட்டுக் கொடுக்கப்பட்டதை அறிந்த சகோ. நிஜாமுத்தீன் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் அனுப்பினார் (இணைப்பு).



இன்று மாலை ஐந்து மணியளவில் மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக் குழுவொன்று அதிரைக்கு வந்து, விழா இடத்தை ஆய்வு செய்யத் தொடங்கியது.
ஆய்வுக் குழுத் தலைவர் அழைத்ததன் பேரில் சகோ. நிஜாமுத்தீனோடு நானும் தம்பி ஜமாலுத்தீன் புகாரியும் விழாக் குழுவினரின் அலுவலகத்துக்குச் சென்றோம். "கோரிக்கைகள் யாவை?" எனக் கேட்டபோது,

1. பெண்களுக்கான தடுப்பு அல்லது சிறப்பு நேரம் அல்லது 'பெண்கள் மட்டும்' நாள் ஆகிய ஏதேனும் ஒன்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

2. கலாச்சாரக் கேடு விளைவிக்கும் அரங்க நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும்

3. தீயணைப்பு வண்டிகள் வேண்டும்.
4. ஆம்புலன்ஸ் வண்டி தயார் நிலையில் வேண்டும்.
5. பலமான பாதுகாப்பு ஏற்பாடு (செக்யூரிட்டி) வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை எழுதிக் கொடுத்து சகோ. நிஜாமுத்தீன் கையொப்பம் இட்டுக் கொடுத்தார்.
"பாட்டு, கூத்து, நாடகம் இனி அரங்கத்தில் நடக்காது. மற்றவை அனைத்தும் உடனடியாக ஏற்பாடு செய்யப்படும்" என அதிகாரி உறுதியளித்தார்.
"தடை செய்யப்பட வேண்டியவை இன்னும் வேறு பல இருக்கின்றன. சந்திப்போம்" எனக் கூறி விடைபெற்று மக்ரிபுத் தொழுகைக்கு விரைந்தோம்.
கடைசி நேரத்தில்தான் தெரியவந்தது. வந்த அதிகாரி நிஜாமின் காலேஜ்மேட்டாம்.

ஜமீல் M ஸாலிஹ்

26 Responses So Far:

Asif said...

கடைசியா அங்க என்னே சொல்றாங்க

Shameed said...

ஆட்சியர் வரைக்கும் புகார் செய்து நிறுத்தப்பட்ட அனாச்சார நிகழ்சிகளை ஒரு சிலர் கண்ணை மூடிக்கொண்டு ஏதேதோ உளறிக்கொண்டுள்ளனர்

Unknown said...

அஸ்ஸலாமு அழைக்கும்

மாஷா அல்லாஹ்,

ஆலிம்களால் பாட்டு பாடுவதை மட்டும் தான் தடுக்க முடிந்தது, அல்லாஹ் தன் அடியான்களை வைத்து எப்படியும் அனாசாரங்களை ("பாட்டு, கூத்து, நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்) தடுக்க முடியும் என்பதுக்கு அல்லாஹ்வே சாட்சி

எஸ். எம். அப்துல் காதர்

அதிரை அல்மாஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆட்சியார் வரைக்கும் எடுத்து சென்ற தம்பி நிஜாம் மற்றும் அவருக்கு உறு துனையாக நின்ற அனைவரும். அல்லாஹ் விடம் நாம் அனைவரும் பிராத்தனை செய்வோம்.

அன்புடன் : அதிரை அல்மாஸ்
அபுதாபி

Unknown said...

அனாச்சரங்களை தடுக்க வேண்டியது நம் கடமை என்பதை உணர்ந்து செயல்பட்டுயிருக்கிரீர்கள்,முறையான பாதுகாப்பு வசதியின்றி மார்க்க கட்டுப்பாடுகளை மீறி காசு பார்க்கும் நோக்கில் நடந்த(போலி வர்த்தக) கண்காட்சி கண்டிக்கத்தக்கது.
Sura:9, Ayah:11
فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ ۗ وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

9:11. ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைபிடித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்..
------------------
இம்ரான்.M.யூஸுப்

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

The news related to this topic are ambiguous. First the news came was showing that music and dance was stopped on request of few ulamas. According to adiraixpress.

Today there is another news is published here by showing that few community brothers attempted through legal ways to stop the cultural music and dance programmes.

Actually it makes readers confused and its not fair to trust this news also. Because this news is defending the previous news and tries to make self propaganda. We can expect another party would claim that they took their effort to stop this cultural programmes.

So, I request brothers and sisters(fellow readers) in this regard double check for the real fact. Please don't trust the news blindly and act on it.

"If the real efforts are taken by any party, May Almighty Allah reward for their true intentions - either ulama or party1 or party2 etc.

I request you brothers not to confuse the readers with ambiguous news.

Note: Same objection is also submitted in adiraixpress blog also.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Anonymous said...

maasha Allah

may Allah reward the brothers for their efforts to terminate the shattaanic activities in our home town.

-sabeer
-iqbal
-riaz
-zakir
-nijam
-noorani

sabeer.abushahruk said...

dear brother Ahmed Ameen,

I trust this news, i mean this only as it is written by Jameel kaka who has never had interest in personal benefits .

Moreover, i would suggest the readers of this forum to note 'who-writes-what' and then reach to a status on the concept.

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

பொதுமக்கள் நலன் கருதி செய்துள்ள இந்த மகத்தான சேவை பாராட்டாக்குரியது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போதும்.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

shamsul huq said...

தம்பி அமீனு இதை தானப்பா மீடியா செஞ்சிகிடுரூக்கு நம்மளை எல்லாம் குழப்பி அதிரையை சிங்கபோராக்குவோம் என்று சொல்லி சின்னா பின்னா
ஆக்கியதுதான் மிச்சம்

Ebrahim Ansari said...

நேற்று கடல் கரைத்தெரு பள்ளியில் ஜூம் ஆ தொழுகைக்குப் பிறகு அனிஸ் ஸ்டோர் யூசுப் காக்கா அவர்கள் மூலம் தலைவரின் ஒப்புதலின் பேரில் ஒரு அறிவிப்பு செய்யப்பட்டது என்று நேற்று அங்கு தொழச்சென்றவர்கள் கூறினார்கள்.

ஆலிம்கள் மற்றும் உலமாக்களின் அறிவுரையை ஏற்று இனி மார்க்கத்துக்கு விரோதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படாது என்பதே அந்த அறிவிப்பு.

இதே போல் மற்ற ஜூம் ஆ பள்ளிகளிலும் பயான் செய்தவர்கள் சொன்னதாக ஒரு செய்தி வருகிறது.

அனாச்சாரமான விஷயங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் மகிழ்ச்சியே.

Shameed said...

சகோ.நிஜாமின் அணுகுமுறை பாராட்டத்தக்கது.

சகோ.நிஜாம் அவர்களுக்கு தங்களின் இந்த மகத்தான பணியை ஒருசிலர் குதர்கமாவும் கோமாளித்தனமாகவும் கேள்விகேட்ப்பார்கள் இப்படி கேள்வி கேட்பவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தங்களால் இயன்ற சமுதாய நற்பணிகளைத் தொடருங்கள்...

அல்லாஹ் உங்களுக்கும் உங்களுக்கு துணை நின்றவர்களுக்கும் அருள்புரிவானாக

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒட்டு மொத்தமாக எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும், சைத்தானை சந்தோசப்படுத்தும் அனாச்சாரங்களை (இசை, கூத்துக்குகள்) அதிரை வர்த்தக கண்காட்சியில் நடைபெறமால் இருப்பது மட்டுமே. அது இப்போது இல்லை என்ற நிலை வந்திருப்பது மிகவும் வரவேற்க தக்கது.

இன்னாரின் முயற்சி, அன்னாரின் முயற்சியால் இசை நடன நிகழ்ச்சிக்கு தடையானது என்று பேசிக்கொள்ளும் தருணம் இதுவல்ல. இது போன்ற அனாச்சாரங்கள் அதிரையில் அரங்கேறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி கருத்தாடுவதே புத்திசாலித்தனம்.

Fareed said...

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்லது நடந்ததில் சந்தோஷம், இதற்காக உழைத்தவர்களுகு அல்லாஹ் நற்கூலியை கொடுப்பானாக.
ஆனால் இதை நாந்தான் செய்தேன் , இதில் உலமாக்களுக்கு சம்மந்தமில்லை என்று சொல்லி இதிலும் ஆலிம்களுக்கு எதிரான ஈகோவை கொண்டு வர வேண்டாம் என்று சொல்கிறேன்.

adirai express ல் நேற்று காலையிலேயே செய்தி வந்துள்ளது. ஆனால் கலெக்டர் ஆய்வுக் குழு நேற்று மாலைதான் வந்து ஆய்வு செய்துள்ளது. அப்படியிருக்கு கலெக்டர்தான் ஆடல் பாடல்களை தடுத்தார் என்று சொவது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.
அதுபோல 2 -ஆம் தேதி மனு கொடுத்து உடனே ஆக்‌சன் எடுத்ததாகவும் தெரியவில்லை. நல்லது நடந்துள்ளது. இதை யார் செய்தாலும் நண்மையே. இதில் ஒளிந்திருக்கும் உண்மையை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். என்பதால் மக்கள் குழம்ப வேண்டியதில்லை.

Ebrahim Ansari said...

//இன்று மாலை ஐந்து மணியளவில் மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக் குழுவொன்று அதிரைக்கு வந்து, விழா இடத்தை ஆய்வு செய்யத் தொடங்கியது.// என்று இந்தப் பதிவில் தகவல் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. அதாவது நேற்று மூன்றாம் தேதி மாலை ஐந்து மணிக்கு . ஆனால் நேற்று காலையே ஒன்பது மணிக்கு முன்பே இந்த நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டதாக அதிரை எக்ஸ்பிரசில் பதிவும் கருத்துக்களும் வரதொடங்கிவிட்டன. அத்துடன் கடல்கரைத்தெரு ஜூம் ஆ பள்ளியிலும் அறிவித்து இருக்கிறார்கள்.

எங்களைப் போல வெளியூரில் இருப்பவர்களுக்கு சற்றுக் குழப்பம். ஆனால் யார் அடித்தாலும் பாம்பு செத்தால் சரி என்பதே இங்கு குறிப்பிடப் படவேண்டியது.

Unknown said...

Assalamu Alaikkum
Dear Tajudeen,

//இன்னாரின் முயற்சி, அன்னாரின் முயற்சியால் இசை நடன நிகழ்ச்சிக்கு தடையானது என்று பேசிக்கொள்ளும் தருணம் இதுவல்ல. இது போன்ற அனாச்சாரங்கள் அதிரையில் அரங்கேறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி கருத்தாடுவதே புத்திசாலித்தனம்.
//

Thats the indication of genuine intention towards our community for the sake of Allah.

Jazaakkallah Khairan,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Ebrahim Ansari சொன்னது… எங்களைப் போல வெளியூரில் இருப்பவர்களுக்கு சற்றுக் குழப்பம். ஆனால் யார் அடித்தாலும் பாம்பு செத்தால் சரி என்பதே இங்கு குறிப்பிடப் படவேண்டியது. //

100க்கு 100 உண்மை காக்கா..

சைத்தானை விரட்டியது சாதனையல்ல, மீண்டும் அந்த சைத்தான் தலை தூக்காமல் இருக்க வைப்பதே சாதனை..

வரவிருக்கும் கந்தூரியில் சைத்தானின் சூழ்ச்சி அரங்கேராமல் இருக்க என்ன வழி என்பதை இசைக் கச்சேரி கூடாது என்ற உணர்ந்தவர்களும், ஜும் ஆ மேடைகளில் பிரச்சாரம் செய்தவர்களும் இதைவிட முயற்சிகள் மேற்க்கொள்ள வேண்டும் என்பதை நம் எல்லோரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...


சத்தியத்துக்கு ஆதரவாக ஜும்மா மேடைகளில் குரல் கொடுத்த உலமாக்களின் நெஞ்சுறுதியை அனைவரும் பாராட்ட வேண்டும். இதேபோல் இறைவழிக்கு முரணான அனைத்து காரியங்களிலும் நிமிர்ந்து நிற்க துஆச் செய்கிறோம், அதே நேரத்தில் உங்களின் நபிவழி செயல்கள் அனைத்திற்கும் நம் சகோதரர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் இன்ஷா அல்லாஹ்.

நடந்தேறுவது தவறு என்று எடுத்துச் சொல்லப்பட்டதும், பொருளாதாரத்தை முதலீடு செய்தவர்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடு அதனை முதன்மை படுத்தப்படுவது இயற்கையே, இதற்கு காது குத்தி மூக்கு குத்தி அழகு பார்ப்பது சரியல்ல

வர்த்தக பொருட்காட்சி நடத்துபவர்கள், தங்களின் பொருளாதாரத்தை தியாகம் செய்து நன்மைய நோக்காக கருதி இவ்வாறு செயல்பட்டதன் பலனை அல்லாஹ் வழங்குவானாக, அவர்களின் பொருளாதாரத்தில் அபிவிருத்தியைத் தருவானாக !

அதற்காக, கலாச்சார் காவலர்கள் என்று என்ன சொல்கிறார்கள் !? கேட்பதும் முட்டாள்தனம். இப்படியொரு கலாச்சாரம் இஸ்லாத்தில் இல்லை என்பதுதானே சகோதரர்களின் வாதமே தவிர காலாச்சாரத்தை காக்க வந்த காவலர்கள் என்ற பின்பாட்டு பொட்டைத்தனமானது !

இவ்வாறான சட்ட நடவடிக்கைகளுக்கும் உந்தப்படும் அளவுக்கு முராண்டும் பிடித்திருக்கக் கூடாது, களியாட்டம் அரகேற்றத்தை கண்டிக்காமல் அதற்கு வக்காலத்து வாங்கியவர்களையும் அதற்கு காட்டுகளாக அவர்கள் எடுத்த சிரத்தையையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

தவறென்று சுட்டிக்காட்டியதும்தான் இத்தனை விவாதங்கள், மற்றும் நீயா? நானா ?, யார் முயற்சி முதலில் என்பதெல்லாம் வருகிறது ! ஆரம்பத்திலியே நமதூர் உலமாக்கள் இவ்வாறான கலை நிகழ்ச்சிகள் நடக்கும் என்று அறிந்து தடுத்து நிறுத்த அவர்கள் எடுத்த ஆயத்தங்களை முடக்கியவர்கள் யார் !??

அப்துல்மாலிக் said...

அனாச்சாரங்களுக்கு எதிராக எந்த எதிர்ப்பார்ப்புமின்றி அல்லாஹ்விர்கு மட்டுமே பயந்து எடுக்கும் எந்த முயற்சியும் வரவேற்க பாராட்டத்தக்கது. இதற்கான அந்த குழுவிற்கு எனது பாராட்டுக்கள்...

Meerashah Rafia said...

நிறுத்த செய்தது நீயா, நானா என்று அடித்துக்கொள்வது முறையல்ல.. வீடு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்றாகிவிடும்..

நன்மையை அள்ளுவதில் முந்திக்கொள்ளலாம், தப்பில்லை..
அதனை தம்பட்டம் அடிப்பதோ, அல்லது இன்னொரு குழு சும்மா உப்புக்கு சப்பாணியாதான் இருந்தது என்பதுபோல் மாயை ஏற்படுத்துவோ தவறாகவே படுகின்றது.

எனினும் இசுலாமியர்களால் இசுலாத்திற்கு எதிரானது தடுத்து நிறுத்தப்பட்டது.வாழ்த்துக்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

2 ந் தேதி உலமா சபை முடிவை பெஸ்டிவல் கமிட்டி ஏற்றுக் கொண்டிருந்தால், 3ந்தேதி ஜூம்ஆவில் உலமாக்கள் இதுபற்றி ஏன் அதிக விமர்சனம் செய்தார்கள்.

எது எப்படி இருந்தாலும் நமக்கு இதெல்லாம் கூடாது என்ற அடிப்படை ஞானம் இருந்தும் ஆரம்பத்தில் இருந்தே பெஸ்டிவல் ஏற்பாட்டாளர்கள் இதையெல்லாம் செய்தது வருந்தக் கூடியதே!

Asif said...

கச்சேரி கலை நிறுத்தியது சரிதான்.. அதே போன்று பெண்களுக்கு தனி நேரம் அமைத்தால் பாரட்டகூடியது

Ebrahim Ansari said...

உலமாக்கள் மற்றும் ஆலிம்களின் அறிவுரையை காலம் கடந்தாவது ஏற்றுக் கொண்டு கலாச்சார (?) நிகழ்ச்சிகளை நிறுத்தியது போல் ஹன்தூரிகள் நடத்துபவர்களும் செவியுற்று திருந்திக் கொண்டால் நல்லது.

அடுத்த அனாச்சாரத்துக்கு தீவிர ஏற்பாடுகள் நடப்பதாகக் கேள்வி.

Unknown said...

Assalamu Alaikkum,

Dear brothers and sisters,

The reality of stopping Handoori is a challenging one since it has established long time custom and culture there in Adirampattinam(since its not happening from 28th April 2013). Even if the brothers(party1, party2, party3 etc) are taking similar religious persuation(long term) or legal actions(short term), from officers point of view its one of the religiously important events in secular country like India. So it may not be easier to abruptly stop Handoori by "Thadaaladi" approach, and would make unnecessary conflicts in the community(which we had already observed).

But it can be stopped gradually by making awareness to the concerned people(long term) whoever support the Handoori events. InshaAllah.

May Allah lead us to straight path and save our community from unnecessary conflicts in the name of established regligion Islam where effective solutions and guidance are widely available to our practice.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Adirai pasanga😎 said...

நன்மையைக்கொண்டு ஏவுவதிலும் தீமையைவிட்டும் தடுப்பதிலும் ஊர் ஒன்றுபட்டால் ஊரில் உள்ள அனைவருக்குமே நற்பலன் கிட்டும். மாறாக அதனை ஏவுவதிலும் தடுப்பதிலும் கூட நானா நீயா என்று பார்த்தால் சைத்தானுக்குதான் கொண்டாட்டம். என்றிருக்கும்போது தீமை நடக்க அதனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் சொல்லவே தேவையில்லை மனித சமுதாயத்திற்கே அழிவுதான்.

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…

//யார் அடித்தாலும் பாம்பு செத்தால் சரி என்பதே இங்கு குறிப்பிடப் படவேண்டியது.//

பாம்பை அடித்த கையோடு பாம்பை (செய்த்தானை )கொண்டுவந்து உள்ளே விட்டவனையும் ஒரு தட்டு தட்டனும் அப்போதான் மறுபடியும்(செய்த்தானை) பாம்பை உள்ளே கொண்டு வரமாட்டன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு