அந்த காலத்தில் வீட்டை விட்டு வெளியே போகும் போது உம்மம்மா வாப்புச்சா சொல்லுவாங்க பார்த்து போ வாப்பா வீதரோடு கல்லு எதாச்சும் காலுலே அடிச்சிரம என்று அது போல இப்போது பேப்பர் செய்தியைப் பார்த்தா கொல நடுங்குது அதுக்கு காரணம் வரும் வெள்ளிக்கிழமை (இன்று) விண்கல் ஒன்று பூமிக்கு ரொம்ப கிட்டக்க வந்து கடந்து போக உள்ளதாம் இது பூமியைத் தாக்கும் ஆபத்து இருக்கும்ன்னு சொல்றாங்க இல்லைன்னும் சொல்றங்க மழை வரும் ஆனால் வராமலும் இருக்கும் என்பதுபோல்.
இந்த கல் பூமிக்கு அருகே பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்வதால் மேலே சுத்திக்கொண்டிருக்கும் ஒரு சில (ராக்கெட்) செயற்கைக் கோள்களுக்கு ஆபத்து நேரக்கூடும் என சில விஞ்ஞானிகள் கருத்து சொல்லி உள்ளனர் என்ற இந்த விண்கல் 45.7 விட்டம் கொண்டது.
இது பூமியின் மீது மோதலாம் என கருதப்பட்டது . ஆனால், அதற்கான வாய்ப்பே இல்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா அறிவித்து உள்ளது.
'1998 கியூஇ2' இந்த விண்கல் பூமியை 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லப் போகிறது. இது அண்டவெளியில் அளவுகளோடு கணக்கிட்டு பார்க்கையில் இது ஒரு ஜுஜுபி கிலோ மீட்டர்தான்.
வருகிற (மே) 31-ந்தேதி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு இந்த விண்கல் பூமியிலிருந்து 5.8 மில்லியன் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லப் போகிறது. இது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரத்தைப் போல 15 மடங்காகும்.
இது பூமியில் வந்து விழப் போவதில்லை இருந்தாலும் பூமிக்கு மேலே சுமார் 35,406 கி.மீ உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளின் நூற்றுக்கணக்கான தொலைத் தொடர்பு, வானிலை, உளவு செயற்கைக் கோள்களில் ஏதாவது ஒன்றின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது.
வரும் வெள்ளிக்கிழமை பூமியை 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லப் போகும் இந்த விண்கல்லை உலகின் பல்வேறு வானியல் தொலை நோக்கிகளும், வானில் சுற்றும் ஹப்பிள் தொலைநோக்கியும் கண்காணித்துக் கொண்டுதான் உள்ளன.
இந்த விண்கல் மணிக்கு 30,000 கி.மீ. வேகத்தில், அதாவது ஒலிவை விட 8 மடங்கு வேகத்தில் சீறி பாய்ந்து கொண்டு பூமியை கடந்து செல்ல உள்ளது.
Sஹமீது
7 Responses So Far:
எந்த ஆபத்தும் இறைவன் விதித்த நியதிப்படியே நடைபெறும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட எவரும் இதை பெரிதாக என்ன வேண்டியதில்லை.
முன்பொருமுறை ஸ்கைலாப் என்னும் செயற்கைக்கோள் விண்ணிலிருந்து சீறிப்பாய்ந்து வந்து பூமியில் விழுந்து ஆபத்து விளைவிக்கப்போகின்றது என்று அனைவரும் பீதியில் உறைந்து கிடந்தனர் . அது கடலில் விழுந்து ஒன்று மில்லாமல் ஆகிப்போனதாக செய்திகள் கிடைத்து பெருமூச்சு விட்டனர்.
ஆதலால்
இறைவன் தடுத்ததை விதிப்பதர்க்கோ அல்லது அவன்
விதித்ததை தடுப்பதற்கோ உலகின் படைப்பினம் எவற்றுக்கும்
சக்தியில்லை என்பதை நம்பி வாழ்வோம், நம்பியே இவ்வுலகை
விட்டு விடை பெறுவோம்.
அபு ஆசிப்.
//இது பூமியைத் தாக்கும் ஆபத்து இருக்கும்ன்னு சொல்றாங்க இல்லைன்னும் சொல்றாங்க //
அப்ப நீங்க என்ன சொல்றீங்க!
வெள்ளிக்கிழமை போயிருச்சே!
அந்த கல்லு எதையாச்சும் கடந்துருச்சா?
இப்படி எந்தக் கல்லையாவது அடிக்கடி தூக்கிப் போடுபவர்களுக்குப் பெயர்தான் விஞ்ஞானிகள்.
அபூ ஆசிப் அவர்களின் கருத்தில் உடன்படுகிறேன்.
வழக்கமாக எத்தனையோ சிறிய விண்கற்கள் பூமியை தாக்க முற்படும்போது அவைகள் புவியின் வாயுமண்டலத்தில் எரி நட்சதிரங்களாக சாம்பலாகிவிடுகின்றன ஆனால் பருமனில் பெரிதானதால் இது வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகும் சாத்தியம் இல்லை மாறாக கல்பாறையாகவே பூவியில் விழ வாய்ப்புக்கள் அதிகம் .
கல்லு மொளவா செலவும், நச்சிரமிஞ்சிரமும் தடவி நெருப்புல சூடு காட்ன கவாப் மாதிரியில்ல இருக்குது....
அது ஒன்னுமல்ல மாங்கா சிசன்ல! யாரோ ஒரு மசக்கைகாரி ஆசைப்பட்டு 'கல்' எறிஞ்சு இருக்கா; குறி தப்பிடுச்சு. பயபடாதிங்க.
S.முஹமதுபாரூக். அதிராம்பட்டினம்
மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
//கல்லு மொளவா செலவும், நச்சிரமிஞ்சிரமும் தடவி நெருப்புல சூடு காட்ன கவாப் மாதிரியில்ல இருக்குது....//
கல்லு (கவாப்) துண்டு போட்டதுதான் அல்லாரி சில்லாரியா ஈக்கிது
Post a Comment