யார் திவிரவாதின்னு உலக மெகா(!!) இணைய அறிவாளியான விக்கிப்பீடியா கட்டற்ற கலைக் களஞ்சியம் அண்ணாத்தை சொல்றாரு "அல் காயிதா உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் மற்றும் இன்னும் பல" இவய்ங்க அமைப்பிலுள்ளவங்கள்னு பகுத்தெடுத்து பாடம் நடத்துகிறது.
அந்த கட்டற்ற கலைக்களஞ்சியமான(!!??) விக்கிபீடியாவில் "பயங்கவராதம், தீவிரவாதம், அடிப்படைவாதம்" என்ற பதத்திற்கு இப்புடி சூட்டுறாய்ங்க:-
பயங்கரவாதம் (Terrorism) என்பது ஒரு மரபுசாராப் போர்முறையும், உளவியற் போர்முறையும் ஆகும்.
இச்சொல் அரசியலோடும் உணர்வுகளோடும் தொடர்புபட்டிருப்பதால் இதனைச் சரியாக வரையறுப்பது கடினமானது.
1988 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை நடத்திய ஓர் ஆய்வின்படி பயங்கரவாதத்துக்கு நூற்றுக்கு மேற்பட்ட வரைவிலக்கணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஒருவர் "பயங்கரவாதி" எனப்படுவார்.
பயங்கரவாதத்தைப் பல வகையான அரசியல் இயக்கங்கள் தமது நோக்கங்களை அடைவதற்காகப் பயன்படுத்துகின்றன.
இவற்றுள் இடதுசாரி, வலதுசாரி இயக்கங்கள், மதக் குழுக்கள், புரட்சியாளர்கள், ஆளும் அரசுகள் போன்ற பலவும் அடங்கும். அரசு அல்லாத குழுக்கள் பரவலான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பது போர்ச் சட்டங்களைப் பயன்படுத்துவதில் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.
பயங்கரவாதம், தீவிரவாதம் (Extremism) மற்றும் அடிப்படைவாதம் (Fundamentalism) ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. அடிப்படைவாதம் தமது கருத்தை பிறர் அடியொற்றி பின்பற்ற வேண்டுமெனும் நோக்கில் வன்முறை சார்ந்தோ அல்லது அதிகாரத்தின் வழியோ மேற்கொள்வது. தீவிரவாதம் எனப்படுவது அச்சமூட்டும் வன்முறை நடவடிக்கை. தீவிரவாதம் மென்பயங்கரவாதத்தின் குழந்தையாகும். மென் பயங்கரவாதம் அதிகரிக்கும் போது அதை எதிர் கொள்ள வேறு வழியின்றி நாடும் செயல்.
மேற்சொன்னவை அனைத்தும் கட்டற்ற கலைக்களஞ்சியம் (!!?) விக்கிபிடீயாவில் வெட்டி ஒட்டிப் போட்டவைகள்...
சரிங்க, நமதூரில் ஒருவரைத் தீவிரவாதச் செய்களில் ஈடுபடுகிறார் என்றும் அதனால் அவர் தீவிரவாதி என்றும் வாய்க்கூசாமல் / எவ்வித மன உறுத்தல்களும் இல்லாமல் வழக்கே போட்டிருப்பது சங்க் பரிவார் அமைப்பல்ல, போலிசாரும் அல்ல மாறாக சங்கங்களின் பரிவாரங்களை ஒன்றினைத்து இரண்டு சங்கங்களின் பரிந்துரையோடு, ஒரு பள்ளி நிர்வாகத்தின் துணையுடன் செய்திருக்கிறது. அவரைத் தீவிரவாதியென்று முத்திரை குத்தி முடக்கவே இந்த ஆயத்தங்கள்.
இஸ்லாமிய மார்க்க வரம்புக்குள் நன்மையை ஏவி தீமையத் தடுக்கும் பிரச்சாரம் செய்பவர் தீவிரவாதியா ?
நன்மையான விஷயங்களை சொல்பவர் தீமையான விஷயங்களிருந்து விலகியிருக்கச் சொல்பவர் அதனைக் காது கொடுத்து கேட்கும் மக்களை நோக்கிச் செய்யும் பிரச்சாரம் மூளைச் சலவையா ?
தவறிழைப்பவனுக்கு தண்டனை அல்லாஹ் மறுமையில் (இறப்புக்கு பின் எழுப்படும் நாளில்) தருவான் என்று சொல்வது தீவிரவாதக் குற்றமா ? நன்மை செய்பவனுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவான் என்று சுபச் செய்தி சொல்வது தடைசெய்யப்பட்ட செயலா ?
நீதியை நிலைநாட்டுங்கள், அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். படைத்தவனை மட்டுமே வணங்குங்கள் படைப்பினங்களை போற்றாதீர்கள் என்று இறை கட்டளையை நேர்பட எடுத்துச் சொல்வது நேர்மையற்ற செயலா ?
வாருங்கள் விவாதிக்கலாம் !
அதிரைநிருபர் பதிப்பகம்
21 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இக்காலச் சூழ் நிலைக்கு ஏற்ற அவசியமான விவாதக்களம். உலக அளவிலும், நாட்டளவிலும், மா நில அளவிலும் என பல்வேறு வட்டங்களில் உண்மை மார்க்கத்திற்கு எதிராக மானுட சமுதாயத்தின் அமைதிக்கு எதிராக ஒரு சதி பின்னப்பட்டுள்ளது. இது ஒருவகையான சைத்தான்களின் கூட்டாளிகளின் சங்கமத்தின் வெளிப்பாடாகும். விவாதிக்க மட்டுமல்ல விடைகண்டு விழிப்படையவேண்டிய தருணமிது. அதற்கும் சேர்த்து விடை கண்டால் நலம்.
எனக்குத்தெரிந்து பகிரங்கமாகவும், ரகசியமாகவும் , தன் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் உலகில் தீவிரவாதம் பரவக்காரணம் ஒரே சொல்லில் சொல்லிவடலாம்
அதுதான் "அமெரிக்கா"
வேறொன்றும் சொல்வதற்கில்லை.
இந்தியா சுதந்திரம் அடைய போராடியவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் "தீவிரவாதி" என்றுதான் அழைக்கப்பட்டார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு அவர்கள் 'சுதந்திர போராட்ட வீரர்கள்" என்றும் 'தியாகிகள்" என்றும் அழைக்கப்பட்டனர்.
குறிப்பிட்ட சில பிரிவினரின் எண்ணத்தோடு ஒன்றாமல் இருப்பவர்கள் 'திட்டப்படுவது" மாதிரிதான் இந்த பெயர் வைக்கும் படலம்.
காலம் மாறலாம் கருத்தும் மாறலாம்...நாமும் மாற வேண்டும்
மன்னிப்பு என்னும் மகத்தான மாண்பு மார்க்கத்தில் இருக்க, பழி வாங்கனும், தீர்த்துக் கட்டனும் என்ற ஒரே நோக்கில் நாமே நம்மில் ஒருவரை அநியாயமாக தீவிரவாதி என பழிசுமத்தி அநியாயமாக போட்டுக் கொடுக்கும் ஆட்கள் இருக்கும்போது, மாற்றார் நம்மை அநியாயமாக தீவிரவாதி என பழி சுமத்துவதை நம்மால் தடுக்கவே முடியாது.
இந்த தீவிரசெயலில் மார்க்கம், மனிதம் தெரியவில்லை. பணபலமே இத்தீவிரத்தில் முதலிடம் தெரிகிறது. 'மைக்கையும்', மேஜையையும் பணபலம் தடுத்து வைத்துள்ளது. இறையில்லத்தில் மார்க்க பேச்சை தடுக்க எதிலும் வழிதெரியாமல் மார்க்கத்தோடு மல்லுகட்ட பணபல வர்க்கம் அரசு பலத்தை நாடி பழி சுமப்பதாக தெரிகிறது.
இன்னும் இந்த சீக்கு அதிரையில் தொடராமல் இருக்க பணபலம், அதிகாரபலம் இவற்றை முறியடித்து மார்க்கத்தை உணமையை நிலைநாட்ட ஒரே வழி இன்றைய இளைய ஆலிம்கள் ஒரு சேர குரல் கொடுக்க வேண்டும்!
யா அல்லாஹ் இக்கருத்தில் பிழை இருப்பின் மன்னிப்பாயாக!
Assalamu Alaikkum
Dear brothers and sisters,
Extremism is in anything not a healthy one.
According to Prophet Muhammed Peace be upon him, "Medium" is a recommended approach and practice in any aspect of life from eating, living and sleeping, etc. Its kind of balancing.
One who is at extreme instead of medium approach is extremist.
Even an individual who has addiction to sleep more is an extremist.
Extremism brings unhealthy condition in soul, body, and mind.
Terrorism is an activity of threat.
We can say, one who is attempt to kill or killing other human being(s) is a terrorist.
One who is a threat to survival of a community, country, or world is also called a terrorist.
Terrorist can be an individual or a group.
Fundamentalism is strictness in implementing rules and regulations
A fundamentalist is focusing on the rules and regulations of a religious or cult group. He/she might be giving extreme higher prioirity in implementing and following rules rather than focusing on peace and harmony of a community, country, or the world.
Common people(actually wikipedia is common man's contribution) can just use those words(extremist, terrorist, and fundamentalist) just to express their bitterness, anxiety or fear against those personalities or organizations(religious,political,or cult group etc).
The ultimate solution to all kinds of issues and problems are available in Islam. Its balancing things and medium in approach and actions.
May Allah show us straight path and save us from evils.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
அன்புள்ள ஆசிரியருக்கு.
தலப்பெ மாத்துங்க!
"இன்று அதிரையில் எந்த வகை தீவிரவாதம்?
//சரிங்க, நமதூரில் ஒருவரைத் தீவிரவாதச் செய்களில் ஈடுபடுகிறார் என்றும் அதனால் அவர் தீவிரவாதி என்றும் வாய்க்கூசாமல் / எவ்வித மன உறுத்தல்களும் இல்லாமல் வழக்கே போட்டிருப்பது சங்க் பரிவார் அமைப்பல்ல, போலிசாரும் அல்ல மாறாக சங்கங்களின் பரிவாரங்களை ஒன்றினைத்து இரண்டு சங்கங்களின் பரிந்துரையோடு, ஒரு பள்ளி நிர்வாகத்தின் துணையுடன் செய்திருக்கிறது. அவரைத் தீவிரவாதியென்று முத்திரை குத்தி முடக்கவே இந்த ஆயத்தங்கள்.//
(இரண்டு சங்கம் ஒரு பள்ளி நிர்வாகம்) இது ஒரு கூட்டு தீவிரவாதம். இந்த தீவிர "வாதம்" வந்தவர்கள் தொழுகை பள்ளியை பூட்டி சீல் வைத்து விட்டு அதற்க்கு பகரமாக நரக நெருப்பை சுவைக்க துடிக்கின்றார்கள்
Assalamu Alaikkum
Dear brothers and sisters,
Islam has been growing not at the point of knife, but with beautiful manners and approaches.
Now every muslim's responsibility is to make Da'awa (invite) non muslim brothers and sisters towards Islam.
Actually making bayans, speaking to muslims, and writing for muslims are not Da'awa, not invitation, but Islah which means reformation-reforming ourselves.
Both Da'awa and Islah should be having good manners and beautiful approach. There is no compulsory in religion.
In the case of muslim no one is controlling an individual while he is fasting, instead he/she has the knowledge and consciousness of God Almighty to fast himself for the sake of Him without eating/drinking. Same with all activities of following a religion and spirituality.
In the case of non-muslims, we cannot force any nonmuslim to become muslim even in a muslim country.
Exreme approach for making changes won't give positive results. Instead, it would become counter productive. Actually any kind of change needs enough time, because change of anything has resistant nature.
May Allah show us straight path and save us from evils.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.
அடுத்தவர் உரிமைகளில் பாதிப்பு ஏற்படுத்தாதவரை தீவிரவாதம் தவறில்லை. ஈமானைப் பாதுகாத்தல், ஹராம் ஹலால் பேணுதல், வணக்க வழிபாடுகள், இரக்கம், ஈகை, அன்பு காட்டுதல், அரவனைத்தல், உதவுதல், பாசம், பரிவு போன்ற நற்குணங்களில் தீவிரமாக இருத்தல் தனி மனிதனையும் தான் சார்ந்த சமூகத்தையும் மேம்படுத்தும்.
மாறாக ஆசை, வெறுப்பு, போர்க்குணம், பழிவாங்குதல், தகுதியுல்லாமல் போட்டி, பொறாமை, பிறர் உரிமைகளை மதிக்காதது, பிடிவாதம், பேராசை, பணவெறி, இவ்வுலக வாழ்வில் பற்று, சட்டத்தைக் கையில் எடுத்தல் போன்ற தீய குணங்களின்மீதான தீவிரவாதம் தன்னையும் தாழ்த்தி தான் சார்ந்த சமூகத்தையும் தகர்த்தி அழித்துவிடும்.
ஊடக அதர்மத்தால் இஸ்லாமியர் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ள தற்கால நிலைமையை மாற்ற நாம் போராட வேண்டும்.
//சரிங்க, நமதூரில் ஒருவரைத் தீவிரவாதச் செய்களில் ஈடுபடுகிறார் என்றும் அதனால் அவர் தீவிரவாதி என்றும் வாய்க்கூசாமல் / எவ்வித மன உறுத்தல்களும் இல்லாமல் வழக்கே போட்டிருப்பது சங்க் பரிவார் அமைப்பல்ல, போலிசாரும் அல்ல மாறாக சங்கங்களின் பரிவாரங்களை ஒன்றினைத்து இரண்டு சங்கங்களின் பரிந்துரையோடு, ஒரு பள்ளி நிர்வாகத்தின் துணையுடன் செய்திருக்கிறது. அவரைத் தீவிரவாதியென்று முத்திரை குத்தி முடக்கவே இந்த ஆயத்தங்கள்.//
Apparently this is pure conflict between the religious preacher and the administrations of Masjids and their supporters. As we are all muslims in a same community, let them please sit and talk together and find resolution. Thats it.
We know that the particular religious preacher in our community is a well respected and most desirable among individuals in our community.
May Allah help us resolving this conflict and save us from evils.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.
Oh my days...these people never going to change
பாவம் ! அந்த மனிதர், மார்க்க சொற்பொழிவுகள் இல்லாத சாதாரன நேரங்களில் கடினமாகவோ அல்லது சங்கங்களுக்கும் அதன் அங்கங்களுக்கும் எதிராகவோ பேச விரும்பாதவர், அவ்வாறு எவேறேனும் கருத்தை தெரிவிக்க விரும்பினால் விட்டுவிடுங்கள், சேற்றை அள்ளி இறைத்து விட்டார்கள் காழ்புணர்ச்சியால் ஒருசில தனிமனிதர்களின் குரோதம் அது, திருப்பி சங்கங்களை துணைக்கு இழுத்துக் கொண்டு செய்கிறார்கள் என்று ஆதங்கப்படுகிறார்.
எய்தன் இருக்க அம்பை நோவதேன் !
தெருவில் சென்ற ஓனானை பிடித்து மடியில் போட்டுக் கொண்டுவிட்டனர், இனி அவர்கள் பாடுதான் !
நமது ஊரில் ஒரு காலத்தில் ஒரு இரவில் ஒரு கலவரம் நடந்தது. அது நடு இரவில் நடந்தது. காரணம் சாராயக்கடையில் உட்காரும் பிரச்னை. சொந்தக் காரணங்களுக்காக நடந்த அந்தக் கலவரத்தில், கலவரத்தை நடத்தியவர்கள் நம்மவர்கள் இரவு முழுதும் குடித்துவிட்டு படுத்து உறங்கிக் கொண்டு இருந்தனர்.
ஆனால் காவல் துறை என்ன செய்தது? முஸ்லிம்களில் சிலரை கைது செய்து புள்ளி விவரம் காட்ட வேண்டும் என்பதால் விடியற்காலை பஜ்ர் தொழுவதற்காக வந்த நல்லவர்களை இப்படி ஒரு கலவரம் நடந்து இருக்கிறது என்றே தெரியாத அப்பாவிகளை துளுக்கா பள்ளி வாசலில் வைத்து கைது செய்து வழக்குப் போட்டது. பல காலம் இந்த வழக்கு நடந்தது.
உண்மையில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வழக்கம்போல் சாராயக்கடைகளில் நின்று கொண்டிருந்தார்கள்.
இவர்கள் செய்த அட்டூழியத்துக்காக அப்பாவிகள் வழக்குக் கூண்டில் நின்று கொண்டிருந்தார்கள்.
இது போல் காவல்துறை இட்டுக்கட்டிப் போட்ட வழக்குகள் ஏராளம்! ஏராளம்.
ஆனால் ஒரு சிலர் உலக இலாபத்துக்காக சில பணம் படைத்தவர்கள் நம்மிலே குறிப்பிட்ட சிலர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இட்டுக்கட்டிய புகார்களைக் கொடுத்துக் காட்டிக் கொடுப்பது தீவிர கண்டனத்துக்குரியது.
முதலில் இத்தகைய விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் , இந்த சமுதாயத்திலேயே ஒரு தீவிரவாதி இருக்கிறார் என்று அரசுக்கோ உலகுக்கோ அடையாளம் காட்டும் பொதுனலவாதிகளாக இருந்தால் அதற்கும் முன் அல்லாஹ்வின் சொத்துக்களை தாங்கள் சுருட்டி வைத்திருப்பதை ஒப்படைத்துவிட்டு தங்களை சுத்த சுயம்புகள் என்று நிருபித்துவிட்டு அதைச் செய்யட்டும். இதற்குத் துணையாக இருப்போர்கள் இது பற்றி அஞ்சிக் கொள்ளட்டும்.
தங்களின் கரங்களில் களங்கச் சேற்றை சுமந்து கொண்டு அடுத்தவர்களை அநியாயமாக காட்டிக் கொடுப்பவர்கள் அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதை வசதியாக மறந்து இருக்கலாம். ஆனால் அது நடக்கும்போது காப்பாற்ற ஆள் இல்லாமல் டூ லேட் ஆகிவிடும்.
இப்போதைய நில நிரந்தரம் என்று எவரும் நினைக்க வேண்டாம். உலகையே ஆட்டிப் படைத்த ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டான் .
அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரை நிருபர் குழு நல்ல தலைப்பில் ஒரு பதிவை பதிவதற்கு தீவிரம் காட்டி இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
உண்மையான மார்க்க போதனையை செவிதாழ்த்தி கேட்பதில் நான் தீவிரமானவன் .
எனக்கு பிடித்தமானவர்களிடம் அதிக நட்புக் கொள்வதில் நான் தீவிரனானவன்.
நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழி முறைகளை பின் பற்றுவதில் நான் தீவிரமானவன்.
சரிங்க, நமதூரில் ஒருவரைத் தீவிரவாதச் செய்களில் ஈடுபடுகிறார் என்றும் அதனால் அவர் தீவிரவாதி என்றும் வாய்க்கூசாமல் / எவ்வித மன உறுத்தல்களும் இல்லாமல் வழக்கே போட்டிருப்பது சங்க் பரிவார் அமைப்பல்ல, போலிசாரும் அல்ல மாறாக சங்கங்களின் பரிவாரங்களை ஒன்றினைத்து இரண்டு சங்கங்களின் பரிந்துரையோடு, ஒரு பள்ளி நிர்வாகத்தின் துணையுடன் செய்திருக்கிறது. அவரைத் தீவிரவாதியென்று முத்திரை குத்தி முடக்கவே இந்த ஆயத்தங்கள்.//
பாரம்பரை மிக்க சங்கம் என்று வாயளவில் பிதற்றிக் கொள்ளும் சம்சுல் இஸ்லாம் சங்கம் சங்பரிவார் கும்பலுக்கு அருவடியாக மாறிவிட்டதா?என்று என்னும் அளவிற்கு அவர்களின் ஈனச் செயல் நமக்கெல்லாம் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மார்க்க போதகர் மீது இழிச்சொல் வழக்கு தொடரப்பட்டு இருப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் அதிரையில் உள்ள மற்ற உலமாக்கள் மௌனம் சாதிப்பது ஏன்.
அவர்கள் யாரை திருப்திப்படுத்த ஊமையாக இறக்கிறார்கள்?
உலமாக்கள் ஊமையாக இருந்தால் ஊதாரிகளுக்கு கூத்துத்தான்.
உலமாக்களே இனியும் மௌனம் சாதிக்காதீர்கள் உலமா என்றால் தீவிரவாதி என்ற வார்த்தையை அநியாயக்காரர்கள் வழிக்காட்டி விட்டார்கள்.நாளை உங்கள் மீதும் இந்த வார்த்தை பாயும் என்பதில் சந்தேகமில்லை
மார்க்கத்தை கற்ற நீங்கள் பிறருக்கு அடிப்பனியாதீர்கள்.
படைத்த ஒருவனுக்கே அஞ்சுங்கள்.
மவுத்திற்குப்பின்னால் திருந்துவதற்கு ஒரு பிரத்யேக வாய்ப்பு இறைவனால் இவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் போலும்????
அஸ்ஸலாமு அலைக்கும்
அவசியமான விவாதம்
இன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு எதிரான போக்குதான் தீவிரவாதம் என்று வகைப்படுத்தபடுகின்றது.தனி நபரே ஒரு அமைப்பு ஒரு வாதத்தில் தீவிரமாக செயலாற்றினால் அது தீவிரவாதம்.கருத்தியலுக்கு முரண்பட்டு மக்களுக்கும் தேசத்திற்கும் கேடு விளைவிக்கும் போக்குதான் கண்டிக்கப்பட வேண்டியதே.காந்தியின் அகிம்சையும் நேதாஜியின் வீரியமான போக்கும் தீவிரவாதம் தான்.ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலை நசுக்கும் உடமைத்தான் தீவிரவாதம் என்கிற சொல்.தேச தந்தை காந்தியை கொலை செய்தது நாட்டை ஆட்சி செய்த சங்பரிவார கும்பல் எந்த உரிமை போராட்டத்தின் கீழ் செயல்பட்டு கொண்டு இருக்கின்றது.காஷ்மீரில் சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் செய்வது தீவீரவாதமா? மிதவாதாமா?
தேசத்திற்காக தங்கள் கல்வி,பொருளாதாரம்,வேலை வாய்ப்புகள் அனைத்தையும் இழந்தது தீவிரவாதத்தின் பழிசொல்லை சுமத்து கொண்டியிருக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தியாக தழும்புகள் தேசத்தின் வரைப்படமாய் மின்னிக்கொண்டியிர்க்குகிறது
----------------
இம்ரான்.M.யூஸுப்
எனக்குத்தெரிந்து பகிரங்கமாகவும், ரகசியமாகவும் , தன் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் உலகில் தீவிரவாதம் பரவக்காரணம் ஒரே சொல்லில் சொல்லிவடலாம்
அதுதான் "அமெரிக்கா" இதுதான் உண்மை என எல்லோரும் சொல்வார்க்கள்
வேறொன்றும் சொல்வதற்கில்லை.
ஹைதர் ஆலிம் அவர்கள் சேவை நம்மூரூக்கு தொடர் தேவை. இல்லாததை இட்டுக்கட்டி வெளிப்படுத்த நினைப்போர் இவ்வுலகில் நிச்சயம் அவமானப்படுவார்கள்.
தீவிரவாதம் பற்றி இருவகையாக கருத்திட்டுள்ளார்கள்.
எதுபற்றிய விவாதம் என்பது புரியவில்லை.
கருவை தெளிவாக விளக்கினால் நல்லது.
அன்பின் சகோதரர் அதிரை அசினா அவர்கள் இந்தப் பதிவின் நிறைவுப் பகுதிகளைப் படித்தால் // எது பற்றிய விவாதம் // என்பது புரியும் என நினைக்கிறேன்.
Post a Comment