Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஓடி விளையாடு ஊரோடு உறவாடு ! – AFFA – ஒரு பார்வை ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | May 03, 2013 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

Adirai Friends Football Association (AFFA) அதிரை நண்பர்கள் கால்பந்தாட்ட கழகம். இந்த பெயரை எங்கோ என்றோ கேள்விபட்டது போன்றதொரு நினைவு வருகின்றதா!? ஆம் ஆண்டுக்கு ஒரு முறை கோடை விடுமுறை நாட்களில் (சம்பிரதமாய்) பொழுதைக் கழிப்பதற்காக கால்பந்து போட்டியை நடத்தும் குழுவின் பெயர் என்ற எண்ணங்களை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்றால் அதனை சற்றே ஒரு ஓரமாக தூக்கி வைத்து விட்டு தொடர்ந்து வாருங்கள் மேலும் நமது பார்வையை விரிவுபடுத்துவோம்.

AFFA - வின் தோற்றத்தையும் அதன் தொடர் வளர்ச்சியையும் என் நினைவுக்குள் எட்டியதை இங்கே ஒரு பதிவாக அறியத் தருகிறேன்.

தொடக்கமாக துடிப்பான இளம் கால்பந்து வீரர்களை கொண்டு ஒருங்கிணைந்த கால்பந்து அணியாக மட்டுமே கட்டமைக்கப்பட்டது. இதன் அமைப்பாளர்களில் ஒருவனாகவும் ஆரம்பகாலத்தில் அணித் தலைவராகவும் நான் பொறுப்பில் இருந்தேன். இந்நிலையில் நமது கால்பந்து அணிக்கு என்று ஒரு நல்ல பெயர் வைத்து அழைக்க முடிவு செய்தோம். அணியில் இருந்த நண்பர்களிடம் தெரிவித்தேன், அவர்களும் ஒப்புதல் தந்தார்கள். அதன் பின்னர் அதிரை நண்பர்கள் கால்பந்தாட்ட கழகம் - அதிரை ஃப்ரெண்ட்ஸ் ஃபுட்பால் அஷோசியசன் - AFFA என்ற பெயர் நிலைத்தது. 
  • கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் நமதூரை எல்லா வகையிலும் முன்னிலை படுத்த வேண்டும்.
  • அனைவரோடும் நட்பு பாராட்ட வேண்டும். 
  • எளிதில் அறியக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.
  • சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA)-வைப் போன்று தொடர்புடைய பெயராய் இருக்க வேண்டும்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக நாம் அறிந்த வகையில் பெரும்பாலான கால்பந்து அணிகளின் பெயரில் ஏதாவது ஒரு வகையில்''கிளப்'' வார்த்தை இடம்பெற்று விடுகிறது. இதற்கு மாறாக சற்றே வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றும்,''கிளப்'' என்றால் பெரும்பாலும் தவறுகளும், அனாச்சாரங்களும் நடைபெறும் இடம் என்று அறியப்படுத்தப்படிருப்பதாலும் இதற்கு மாற்றமாக''அசோசியேசன்'' என்று தேர்வு செய்தோம். இதுதான் ''AFFA''வின் பெயர் உருவானதின் சுருக்கம்.
தோற்றம்:

AFFA - 2003 ஆம் ஆண்டு கால்பந்தாட்டத்தில் ஆர்வமுள்ள நண்பர்கள் சிலர் ஒன்று கூடி துவங்கப்பட்டது. 

அமைப்பாளர் மற்றும் அணித் தலைவர் - S.முகம்மது புஹாரி
AFFA-வின் தலைவர் - N.சேக்தம்பி

மற்றும் குழு உறுப்பினர்களாக 
(1) இக்பால்
(2) அப்சர்
(3) அகமது அஸ்லம்
 (4) அகமது ராசிது 
(5) அகமது அஸ்ரப் 
(6) முகம்மது இபுறாஹிம் 
(7) முகம்மது சம்சுதீன் 
(8) தாரிக் உதுமான் 

சட்டென்று நினைவுக்குள் வந்ததும் வராததுமாக இன்னும் சில  சகோதர்களைக் கொண்டு இது வலுப்பெற்றது. AFFA சிறந்து விளங்க வேண்டும் என்றும் இது சீரான வளர்ச்சியை அடைய தனகென்று ஒரு நல்ல கட்டமைப்புடன் கூடிய ஒரு நிர்வாகத்தை ஸ்திரமாக அமைத்துக்கொண்டது.

நிர்வாகத்திற்கான பொறுப்பாளிகளாக ஆரம்ப காலத்தில் நியமிக்கப்பட்டவர்களின் விபரம்.

தலைவர்; S.முகம்மது தமீம் 
துணைதலைவர்  -  அகமது அஸ்லம் 
செயளாளர்  -  S.முகம்மது புஹாரி 
துணை செயளாளர்  -  அகமது அஸ்லம் 
பொருளாளர்  -  S.சர்புதீன்

இவர்களைக் கொண்டு முறையான முதல் நிர்வாகக்குழு அமைக்கப்பட்டது.

செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என்றும் முறையே சேர்க்கப்பட்டது.

'AFFA''-விற் கென்று நெறிமுறைச் சட்டங்கள் ''BYLAW' உருவாக்கி தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் விதிகளின்படி மாவட்ட சங்கப் பதிவாளர் அலுவலகத்தில் AFFA-வை பதிவு செய்து ஒரு முழுமையான அமைப்பாக செயல்பட்டு வருகிறது. 

இது ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும்,மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செயற்குழுவையும் தேவைக்கு ஏற்ப AFFA-வின் ''பைலா'' வில் விதிப்படி சிறப்பு செயற்குழுவையும், அவசியமேற்படும்போது சிறப்பு பொதுக்குழுவையும் கூட்டி அவ்வப்போது ஏற்படும் நிகழ்வுகளுக்க்ய் ஏற்ப AFFA-வின் வளர்ச்சியையும்,நோக்கத்தையும் அடைய பல முடிவுகள் எடுக்கப்படுகின்றது. மேலும் நிர்வாக மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிபடையில் நிர்வாகிகள் மாற்றம் செய்படுகின்றன.

AFFA-வின் தற்போதைய நிர்வாகிகள்

(1) தலைவர் : செய்யது முகம்மது புஹாரி 
(2) துணைதலைவர் :  முகம்மது தமீம் 
(3) செயளாளர் : சமியுள்ளாஹ் 
(4) துணை செயளாளர் : முகம்மது அனஸ் 
(5) பொருளாளர் : அபுல் ஹசன் சாதுலி

AFFA-வின் நோக்கம்;
  • AFFA-வை மிகவும் வலுவான தலைசிறந்த கால்பந்தாட்ட அணியாக உருவாக்குவது.
  • அதிரையில் கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை மிகச் சிறந்த வீர்ர்களாக்குவது.
  • கால்பந்து விளையாட்டின் மூலம் அதிரையின் பெருமையை உலகறியச் செய்வது.
  • அதிரை கால்பந்து வீரர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறையிலும் வேலை வாய்ப்பை பெற்று தர முழு முயற்சிகள் எடுப்பது அதற்காக ஒத்துழைப்பது.
  • வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவது.
  • கால்பந்து விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும்  தான் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்கும், ஊருக்கும், தாய்நாட்டிற்கும் பெருமை தேடித்தர ஊக்கமளிப்பது.
  • அதிரையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரி கால்பந்து வீரர்கள் திறம்பட விளையாடுவதற்கு AFFA தேவையான அனைத்து உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவது. 
  • பண்பட்ட துடிப்பான ஆரோக்கியமான இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவது.
  • சார்ந்துள்ள சமூகத்திற்கு எல்லா வகையில் நற்பெயரை பெற்றுத் தருவது.
  • விளையாட்டோடு மட்டும் இருந்திடாமல் நல்ல ஆரோக்கியமான கல்வியை விளையாட்டு வீரர்கள் பெற ஊக்குவிப்பது.
  • கால்பந்து போட்டிகளை அதிரையில் நடத்தி நமதூர் கால்பந்து ஆர்வளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு போட்டிகளை வழி நடத்தி பங்களிப்பார்களுக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் மற்றும் வீர்ர்களுக்கு பரிசுகளை வழங்குவது. 
  • AFFA-வின் வீரர்களை மாவட்ட,மாநில,இந்திய அளவிளான போட்டிகளில் பங்கேற்க செய்வது.
AFFA-வின் செயல்பாடுகள் அன்றும் இன்றும்;-

AFFA-தினந்தோறும் மாலை நேரத்தில் கால்பந்து விளையாட்டின் மூலம் அதிரையில் கால்பந்து விளையாட்டை தடையின்றியும் திறம்பட விளையாட ஏதுவாக மாலை நேரத்தில் பயிற்சி விளையாட்டை தொடர்ச்சியாக  நடைத்தி வருகின்றது.

AFFA-கால்பந்து அணி தனது ஆரம்ப காலத்தில் அதிரையை சுற்றிள்ள சில ஊர்களில் நடைபெறும் கால்பந்து தொடர் போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டு வந்துள்ளது ஆனால் தற்பொழுது AFFA கால்பந்து அணியின் முறையான பயிற்சியினால் AFFA அணியின் தரமான விளையாட்டின் மூலம் தமிழகத்தில் பல பகுதிக்குச் சென்று பல்வேறு கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு அதிரைக்கு சிறப்பு சேர்த்து வருகின்றது.

முறையான பயிற்சி, சீருடைகள், கால்பந்தாட்ட காலணி, என்று நேர்த்தியான வலுவான அணியாக AFFA நிமிர்ந்து நிற்கிறது. இந்த மாற்றத்தை AFFA குழுவினர்கள்தான் சிறப்புடன் செயல்படுத்தி காட்டியிருக்கின்றனர். நமது அணி AFFA முழுமையாக கால்பந்து விளையாட்டின் நுணுக்கங்களை உள்வாங்கி விளையாடி வருகிறது எனவே நம் (AFFA) அணி தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று தடம் பதிக்க ஏதுவாக இருக்கின்றது.

தொடரும்…
S. முகம்மது புஹாரி
முன்னால் செயாளாளர்,(AFFA)
மற்றும்
தஞ்சை மாவட்ட கால்பந்து சங்க செயற்குழு உறுப்பினர்

6 Responses So Far:

Shameed said...

AFFA-வின் பகுதி நேர ஆட்டம் முடிந்துள்ளது இதில் எந்த அணியும் கோல் போடவில்லை (தொடரும் என்பதைத்தான் இப்படி சொல்ல வந்தேன் )
அடுத்துவரும் ஆட்டம் மிக விறுவிறுப்பாய் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்காது

Unknown said...

Assalamu Alaikkum,

Brother Mr. S. Muhammad Buhari has shared detailed information about Adirai Friends Football Association (AFFA). Thanks for a lot brother.

I would like to know the coach of AFFA (similar to professional coaches in other football clubs in national and international level).

Actually any football team can become growth oriented one, if they have a professional coach. I think captain of a football team acting as coach would not be sufficient.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.
www.dubaibuyer.blogspot.com

அப்துல்மாலிக் said...

நிச்சயம் இது போல் ஒரு அமைப்பு மிக அவசியம். நம்மூரில் மிகச்சிறந்த வீரர்கள் உள்ளனர் அவர்களை கடைந்தெடுத்து உலகத்தரத்திற்கு கொண்டுசெல்லனும் என்பது என் நீண்ட நாள் ஆசை. நம் மக்கள் சும்மா பொழுதுபோக்கிற்கு மட்டுமே விளையாடிக்கிட்டிருக்காங்க. அதை மீறி அதுதான் வாழ்க்கை என்ற நிலை உறுவாகனும். நாங்களும் “மாஹியா” என்ற அணியை இதே கனவுடன் உருவாக்கி பின் பொருளாதாரம் தேடவேண்டும் என்ற வெள்ளத்தில் அடித்து சென்றுவிட்டது.

AFFA வின் அங்கத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அப்துல்மாலிக் சொன்னது… நாங்களும் “மாஹியா” என்ற அணியை இதே கனவுடன் உருவாக்கி பின் பொருளாதாரம் தேடவேண்டும் என்ற வெள்ளத்தில் அடித்து சென்றுவிட்டது.//

மாஹியா அணிக்கு எதிராக விளையாடும் போது எப்போதும் ஒரு திரில் தான்... அந்த நாட்களை மறக்க இயலாது சகோ. மாலிக்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

விளையாட்டு முக்கியம், ஆனால் தொழுகைக்கு பாங்கு சொல்லிவிட்டால் விளையாட்டைவிட விளையாட்டு பரிசளிப்பு நிகழ்ச்சிகளைவிட தொழுகையே மிக முக்கியம் என்பதையும் AFFA தங்களின் வீரர்களுக்கு அடிக்கடி நினைவுருத்த வேண்டும்.

மேலும் விளையாட்டு போட்டிகளை AFFA நடத்தும் போது, இசை பாடல்கள் ஒலிப்பதை தடை செய்து முன்னுதாரமாக இருக்க வேண்டும்.

Anonymous said...

// விளையாட்டு முக்கியம், ஆனால் தொழுகைக்கு பாங்கு சொல்லிவிட்டால் விளையாட்டைவிட, விளையாட்டு பரிசளிப்பு நிகழ்ச்சிகளைவிட தொழுகையே மிக முக்கியம் என்பதை //

நான் இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் தொழுகைக்கு பாங்கு சொல்லி விட்டால் எல்லா நிகழ்ச்சிகளையும் நிறுத்தி விட்டு முதலில் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பரிசளிப்பு விழா நடுத்தும் போது ஏராளமானோர் மஃரிப் மற்றும் இஷா தொழுகையையும் விட்டு விடுகின்றனர். இனி வரும் காலங்களில் AFFA தலைவரும்,பொருளாளரும் சேர்ந்து தொழுகைக்கு என்று நேரத்தை ஒதுக்கு வதற்கு ஏற்பாடு செய்யவும்.

துவக்க நாள் அன்று ட்ரம் சத்தம் மற்றும் இசையொழி இல்லாமல் கால்பந்தாட்டத்தை துவக்க வேண்டு.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு