Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் ATCO வர்த்தக பொருட்காட்சி ஏன்? 14

அதிரைநிருபர் பதிப்பகம் | May 06, 2013 | , ,


 Date : 05-05-2013

அதிரையில் கடந்த 28-04-2013 முதல் கா.மு.மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் கலாச்சாரம் மற்றும் வர்த்தக பொருட்காட்சி பற்றிய தவறான செய்திகளை உள்நோக்கத்தோடு சிலர் திட்டமிட்டு பரப்புவதோடு, வெளிநாட்டில் வசிக்கும் அதிரை மக்களையும் குழப்பி வருவதைத் தொடர்ந்து,சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

ATCO பொருட்காட்சி ஏன்?

நம் முன்னோர்கள் பல அண்டை நாடுகளுடன் பாரம்பரிய வணிகத் தொடர்புகள் கொண்டிருந்தபோதும், அதிரையில்  குறிப்பிட்டுச் சொல்லும்படியான உள்ளூர் வியாபார நிறுவனங்கள் ஏதுமில்லை. 

அதிரை இளைஞர்கள் பள்ளிப்படிப்பு முடிக்கும் முன்பே பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு அனுபவம் இல்லாமல் செல்கின்றனர். உள்ளூரில் இருப்பவர்கள் எத்தகைய தொழில் செய்வது? எப்படி, எங்கு அணுகுவது? போன்றவற்றை அறியாமல் தொழில்களைத் தொடங்கி நஷ்டமடைந்து மீண்டும் வெளிநாடு செல்வது அல்லது வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு, உள்ளூரில் தொழில் தொடங்கியும் அவற்றை முறையாக சந்தைப்படுத்தும் வழிகளின்றி பத்தோடு பதினொன்றாக இருப்பதை கவனத்தில் கொண்டு,

1) உள்ளூர் நிறுவனங்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவித்து, சுற்றுவட்டார மக்களிடம் அவர்களது  பொருட்களை அறிமுகப்படுத்தவும்,

2) சாதாரண பட்டுப் புடவைக்குக்கூட திருச்சிக்கும், சென்னைக்கும் செல்லும் வீண்விரயத்தை தவிர்த்து, உள்ளூரில்  அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அனாவசிய செலவுகளை தவிர்ப்பதோடு, வெளியூருக்கு தனியாக  செல்வதால் ஏற்படும் சிரமங்களிலிருந்து நமது பெண்களை பாதுக்காக்கவும்,

3) பள்ளி விடுமுறை நாட்களில் வெளியூர்களுக்கு குடும்பத்தோடு சுற்றுலா செல்வதைத் தவிர்த்து,பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான பொழுதுபோக்கு, விளையாட்டு அம்சங்களுடன் கூடிய ஓர் நிகழ்வை ஏற்பாடு செய்வதும்,

4) அதிரை மட்டுமின்றி சுற்றுவட்டார ஊர்களில் நடக்கும் கந்தூரிகளுக்குச் செல்பவர்கள் "நாங்கள்  இணைவைக்கவோ / பிறவிசயங்களுக்காகவோ செல்லவில்லை,அங்கு விற்கப்படும் பொருட்கள் வாங்குவதற்கே செல்வதாகவும் சொல்பவர்களும் உண்டு. இதன் காரணமாகவும் கந்தூரிக்குச் செல்வதிலிருந்து ஊர்மக்களை மீட்க முடியவில்லை என்பதனையும் கருத்தில் கொண்டு, அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவும் வர்த்தக பொருட்காட்சியை அதிரையில் நடத்துவது என்று உள்ளுர் மற்றும் வெளிநாடுவாழும் அதிரையர்களின்  ஆலோசனையுன் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்பாராத தடைகள்

5) குறிப்பாக இதனை குறிப்பிட்ட முஹல்லாவில் சிறிதளவில் நடத்துவது என்று முதலில் தீர்மானிக்கப்பட்டது.  பின்னர் மேலும் சிலமுஹல்லாவாசிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து மேற்கண்ட நோக்கங்களை ஊரளவில்  நடாத்தலாம் என்று கருதி,அனைவரும் எளிதில் அணுகும் வகையில் கா.மு.பள்ளி மைதானத்தில் நடத்துவதென  பல மாதங்களுக்கு முன்பே அனுமதி பெறப்பட்டது. 

6) ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்ததால் தேர்வுகள் முடியும்வரை மாணவர்களின் கவனம் சிதறிவிடக்கூடாது  என்று விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகே மைதானம் & அரங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திடீரென பெய்த மழையால் மைதானத்தில் நீர்தேங்கி சகதியானதும் மிகுந்த சிரமத்திற்கிடையே சீர்செய்யப்பட்டது.

7) பிறமத சகோதரர்கள் நம் தூய மார்க்கத்தை அறிந்துகொள்ள ஏதுவாக, இலவச புத்தகங்கள் மற்றும் இதர பிரசுரங்களுக்கு பிரத்தியோக இடம் ஒதுக்கி செய்வதாக இருந்தோம், கடைசி நேர மழையால் செய்யமுடியாமல் போனது, இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இதனை அனைவரின் ஒத்துழப்புடன் செய்வோம்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

8) வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வேண்டி தீயணைப்பு வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டது. வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

9) பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு,  பாதுகாப்பு ஊழியர்களும் பொதுமக்களோடு ஊடுறுவி கண்காணித்து வருகின்றனர்.

10) நுழைவுக்கட்டணமின்றி இலவசமாக அனுமதிக்கும்போது சமூக விரோதிகளும் வரக்கூடும் என்பதால் குறைந்த  கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு திருடர்கள் மற்றும் சமூக விரோதிகள் கலந்துவிடாதபடி நுழைவாயிலில் மட்டுறுத்தி  அனுப்பப்பட்டனர்.

சிறப்பம்சங்கள்:

11) அனைத்து தரப்பு மக்களும் எளிதில் வந்துசெல்லும் வகையில் சமயசார்பற்ற நிகழ்வாக இஃது அமைந்துள்ளது.  மேலும், இதன்மூலம் அதிரையின் பாரம்பரிய கலாச்சாரமும் சமூக ஒற்றுமையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

12) கந்தூரிகளில் கடைவைக்க தயங்கியவர்களும் தங்களது நிறுவனங்களை தயக்கமின்றி வைத்துள்ளனர்.

13) மாணாக்கர்களின் திறமைகளை ஊக்குவித்து பல்வேறு போட்டிகளும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

குறைகளும் குற்றச்சாட்டுகளும்

14) பல நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் வெகுசில சினிமா பாடல்களும், இசையும் இருந்தது. இதனை தவிர்த்துக் கொள்ளும்படி கண்ணியத்துக்குரிய அப்துல்காதர் ஆலிம் தலைமையில் அதிரை உலமாக்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் 03-05-2013 முதல் இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளதை காலை 8:30 மணிக்கு அறிவித்திருந்தோம். 

15) இந்நிலையில் ஒரு சிலர் இந்த பொருட்காட்சி சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் என்று மாவட்ட  ஆட்சியருக்கு அனுப்பிய மனுவின்பேரில் 03-05-2013 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் கலெக்டரின்  PRO பொருட்காட்சி அரங்கைப் பார்வையிட்டு சென்றார்.

(“உலகிலேயே மிக எளிமையானது பிறரிடம் குறை கான்பது. உலகிலேயே மிக கடினமானது தன் குறை உணர்வது”)

வேண்டுகோள்:

16) நமதூரில் எதைச் செய்தாலும் அதில் குறைகாணவும், குற்றஞ்சொல்லவும் சிலர் இருக்கிறார்கள். உலமாக்கள்  வேண்டுகோளின் பெயரில் இசை நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கண்ட நோக்கங்களை அறியாத சிலர், பல்வேறு வகைகளில் குறிப்பாக இலைத்தளத்தில் அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மேலும் எந்த ஒரு நல்ல நிகழ்வு யார் மூலமாக நடந்தால் என்ன என்று இல்லாமல் இது எங்களால்தான் நடந்தது என்ற புகழ் எதிர்பார்ப்பு ஏன்? அவர்களின் கூற்றை பொய்பிக்கும் முகமாக, அவர்களின் தூண்டுதோலுக்கு இணங்க மீண்டும் சினிமா பாடல்கள் இடம்பெரும் சூழல் ஏற்பட்டால் அவர்களே இதற்கு பொருப்பாவார்கள்.

17) நீண்டகால திட்டத்துடன் லாபநோக்கின்றி, தன்னார்வலர்களின் ஆலோசனையுடன் செய்யப்பட்டு முறையான  அனுமதிகளுடன் செயல்பட்டு வரும் இந்த முயற்சி, நிச்சயம் மார்க்கத்திற்கும், நம்நாட்டு சட்டத்திற்கும் நமதூர்  கலாச்சாரத்திற்கு எதிராகச் செயல்படாது என்று உறுதியளிக்கிறோம்.

18) ஆகவே, தயவுசெய்து பொய்ப்பிரச்சாரங்களை நம்பாமல்,உங்கள் மேலான ஆலோசனை மற்றும்  கருத்துகளை பொருட்காட்சி நிர்வாகிகளிடமோ (அ) Email  மூலமோ தொடர்பு கொண்டு தெரிவித்தால், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் மேற்கண்ட  நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஏதுவாக அமையும்.

குறிப்பு: மேற்கண்ட விளக்கம், வெளிநாடுவாழ் பெரும்பாலான நல் உள்ளங்கள் கேட்டுக் கொண்டதற்காகவே அன்றி பதிலுக்கு பதில் என்ற அடிப்படையில் விதண்டாவாதத்திற்கு எங்களுடைய நேரத்தை வீணடித்து மீண்டும் இதுபோன்ற பதில் தருவது அவசியமற்றதாக இருக்கும் என்று நம்புவோம்.

இவண்,
ஒருங்கிணைப்பாளர்,
அதிரை வர்த்தகம் மற்றும் கலாச்சார அமைப்பு (ATCO)
தொடர்புக்கு: EMAIL: adiraifestival@gmail.com.

14 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum
Dear brothers and sisters,

I think the previous(article: அதிரை வர்த்தக மற்றும் கலாச்சார ?
விழா - நடந்தது.. ) rational conversations through comments have
induced to bring this article by the concerned organizers of the
events and their statements based on facts.

Admitting our mistakes helps to correct ourselves. If we don't admit our mistakes and try to justify our mistakes then there is no way for correcting.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

sabeer.abushahruk said...

இந்தப் பதிவை நான் வரவேற்கிறேன்.  ஏகப்பட்ட சந்தேகங்களை இந்தப் பதிவை தீர்த்து வைக்கிறது.  இப்படித்தான் ஒவ்வொரு காரியத்திலும் பேசி, விவாதித்து, அலசி தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.
 
யார் சாதித்தார்கள் என்று குழப்புவதைவிட சாதித்த அனைவருக்கும் சம்மதித்த நிர்வாகத்தினருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
வர்த்தகப் பொருட்காட்சி மேலும் மேலும் மெருகேறி வகுக்கப்பட்ட எல்லைகளுக்குள் நடந்தேற என் துஆ.
 
ஒரு சிறிய பின் குறிப்பு: குறைகளைச் சுட்டிக் காட்டுவது நம் சகோதரர்கள் தம் புகழ் நீட்டிக்க அல்ல. சுட்டிக்காட்டப்படாவிட்டால் அநாச்சாரங்கள் தொடர்ந்து விடுமோ என்கிற பயத்தினால்தான்.  இதில் உள்ள விளக்கங்கள் போதுமானது.  பினக்குகளை விடுவோம். ஒன்றுபட்டு உயர்வோம்.
 

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// நீண்டகால திட்டத்துடன் லாபநோக்கின்றி, தன்னார்வலர்களின் ஆலோசனையுடன் செய்யப்பட்டு முறையான அனுமதிகளுடன் செயல்பட்டு வரும் இந்த முயற்சி, நிச்சயம் மார்க்கத்திற்கும், நம்நாட்டு சட்டத்திற்கும் நமதூர் கலாச்சாரத்திற்கு எதிராகச் செயல்படாது என்று உறுதியளிக்கிறோம்.//

இந்த உறுதி மொழியில் நிலைத்திருக்கவும் இன்ஷா அல்லாஹ் !

வர்த்தக பொருட்காட்சியில் தொடர்ந்து பங்கெடுக்கும் சிறு வர்த்தகர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களில் வியாபாரம் பெருகவும், அவர்களின் நற்சிந்தனைகள் சிறக்கவும் வாழ்த்துகிறோம் !

எக்காலத்திலும் அவசியமற்ற கேளிக்கையில் துளியும் கலக்காமல், அறியாமல் கலந்தால் கலைந்திடவும் வேண்டுகிறோம்.

மினி-குறிப்பு : தவறென்று சுட்டிக் காட்டியதும் இந்த தளம் தான், அதனை திருத்திக் கொண்டதும் நமது சகோதர்கள்தான்... இதற்கு மேலும் செய்ததை நியாயப் படுத்த துடிப்பவர்களுக்கும் அல்லாஹ் தெளிவைக் கொடுப்பானாக !

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers in Editor of Adirai Nirubar,

I would like to appreciate and highlight here as being fair, neutral in giving news and knowledge with social responsibilities through this forum.

May Allah reward you brothers.

Jazakkallah Khairan.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

Meerashah Rafia said...

தன்னிலை விளக்கமளித்ததற்கு பாராட்டுக்கள்.

பலர் தனது நேரத்தையும், பொருளையும்,உழைப்பையும் கொடுத்து நடத்தப்படும் இத்தகைய பொருட்காட்சிகள் இனி வரும் வருடங்களில் முதல் முறை நிகழ்ந்த தவறுகள் களைந்து இனி வரும்காலங்களில் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களும்,துஆவும்.

உள்ளூர் வியாபாரம் பெருகவேண்டும், செழிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகவும் வரவேற்கத்தக்கது.. வெளிநாட்டிலிருந்து பலர் ஊருக்கு திரும்பி வந்து வியாபாரம் செய்ய முனையும்போது ஏதோ ஓன்று அவர்களை தடுக்கின்றது.. அந்த தடைகள் இத்தகைய ஒருங்கிணைந்த வியாபார யுக்திகல்மூலம் சாதிசாதிக்கலாம்..இன்ஷா அல்லாஹ்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல நோக்கம், ஆகுமாக்கப்பட்ட செயல்கள் மூலம் அமைப்பின் நிய்யத் சிறக்கட்டும்!

சில சந்தேகம்,
//(தர்காவின்)கந்தூரிக்குச் செல்வதிலிருந்து ஊர்மக்களை மீட்க முடியவில்லை என்பதனையும் கருத்தில் கொண்டு,//
உயர்ந்த எண்ணம் ஆனால் ஆலிம் / அரசு தலையிடும் வரை தர்காவுக்கு இணையான கச்சேரி பாடல்கள் நடத்தப்பட்டதே! ஆகாதவையாக இருந்தாலும் தர்காவில் இஸ்லாமிய பாடல்கள்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கும். ஆனால் இங்கே "50KG தாஜ் மஹால் உனக்கே" என்ற பாடல் வரை ஒலித்ததாமே!


//பிறமத சகோதரர்கள் நம் தூய மார்க்கத்தை அறிந்துகொள்ள ஏதுவாக,//
அவங்க திருவிழாவும் நம்ம இத் திருவிழாவும் ஒன்று தான் என்று சொல்லும் அளவுக்கு அன்று வரை இருந்தது. இன்று முழுக்க நம் தூய மார்க்கப் படி இருந்தால் மகிழ்வே!

// கந்தூரிகளில் கடைவைக்க தயங்கியவர்களும் தங்களது நிறுவனங்களை தயக்கமின்றி வைத்துள்ளனர்.//
தயக்கமின்றி தான் வைத்தார்கள் ஆனால் ஆகாத செயல்களை பார்த்து மனவருத்தப்படவும் எதிர்க்க வேண்டிய சூழலும் உண்டானதே!

//நீண்டகால திட்டத்துடன் லாபநோக்கின்றி,//
சில தனியார் அமைப்புகளால்( லாப நோக்கின்றி) தொடர முடியாது. சேவை நோக்குடன் தொடந்து செய்ய அல் முஹல்லா அமைப்பு, பைத்துல்மால் போன்ற பொது அமைப்புகளால் செய்யப்பட்டால் கட்டுப்பாடு மற்றும் சேவை நோக்கம் அதிகம் இருக்கும்.

கருத்துக்கள் குறை கண்டு எழுதினாலும் நாளை நல்லதாக இருக்கனுமே என்று தான்!

Anonymous said...

// உலகில் மிக எளிமையானது பிறர் குறை காண்பது,உலகில் மிக கடினமானது தன் குறை உணர்வது //

நீங்கள் மேலே குறிப்பிட்டது எல்லாம் சரிதான் இஸ்லாத்திற்கு எதிரான ஆடல்,பாடல் என்று இந்த பொருட்காட்சியில் வைத்து உள்ளீர்கள் அது மட்டுமல்லாமல் ஆண்களும்,பெண்களும் ஒரே நேரத்தில் ஒன்று கூடி இந்த பொருட்காட்சிகளை சிறப்பித்து வையுங்கள் என்று. ஆண்களுக்கு ஒரு சில நாட்களும்,பெண்களுக்கு ஒரு சில நாட்களும் வைத்திருந்தாள் நன்றாக இருதி க்கும். ஆணும்,பெண்ணும் ஒன்று பட்டு ஒரே நேரத்தில் சேராமல் தனித்தனியாக வைத்திருந்தாள் பெண்களுக்கு பொருட்காட்சிகளை பார்ப்பதற்கு மிக எதுவாக இருக்கும்.

நான் இங்கே சொன்னது எல்லாம் குறை கூறவோ,குற்றம் சொல்லவதற்கோ இல்லை. நீங்கள் பொருட்காட்சி ஆரம்பிக்கும் முன்னேரே பாதுகாப்பு எதுவும் இல்லாமல் தான் ஆரம்பித்தீர்கள். முதலில் நம் சமுதாயத்திற்கு பாதுகாப்பு தான் முக்கியம் நல்லது நடக்கும் போது யார் பெயரையும் குறிப்பிடாமல் இருப்பது தான் நல்லது. என்னாலே தான் இது நடந்துச்சி,அது நடந்துச்சி என்றெல்லாம் மோளம் கொட்டாமல் யார் நல்லது செய்தாலும் நல்லதாகவே இருக்கட்டும். யார் என்ன சொன்னாலும் குறையாக நினைக்காமல் நிறையாக நினையுங்கள் அப்படி இல்லா விட்டால் நம்மவர்களுக்குள் இடையில் ஒரு பிரிவினை ஏற்படும். இன்னும் மீதமுள்ள நாட்களில் இந்த பொருட்காட்சி நல்ல படியாக நடக்கட்டும். இனி வரும் காலங்களில் பெண்களுக்கு தனியாகவும்,ஆண்களுக்கு தனியாகவும் வைத்தால் மிக நன்றாக இருக்கும். மிக முக்கியமான ஒன்று முதலில் எல்லா விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்.

Unknown said...

தன்னிலை விளக்கத்திற்கு நன்றி
அதிரையில் தொழில் முனைவோரை உருவாக்கவும் வர்த்தக ரீதியில் நம்மக்களிடையே விழிப்புணர்வுக்காக இப்பொருட்காட்சி பயன்பட்டுயிருந்தால் நன்மையே,மேலும் கலாசார சீர்கேட்டிற்கு வழிவகுக்கக்கூடாது என்பதுதான் அனைவரின் (சகோ நிஜாம் புகார் சம்மதமாக) விருப்பம்.குறை காண்பது ஒன்றும் குற்றமல்ல,மற்றபடி அதிரையின் மீதும் மக்களின் மீதும் அனைவருக்கும் பொறுப்பும் கவனமும் தேவை என்பதும் பொது நிகழ்ச்சியில் இஸ்லாமிய நாகரிகம்,கலாசாரம் காக்கப்பட வேண்டும் ஏற்கிற எதிர்பார்ப்பு ஒன்றும் தவறில்லை.இறைவனின் அருளும் சாந்தியும் நம்மனைவர் மீதும் நிலவட்டுமாக,,,,
-------------------
M.இம்ரான் கரீம்
மக்கள் தொடர்பு செயலாளர்,
அமீரக சமூகநீதி அறக்கட்டளை.
மின்னஞ்சல்:imran2mik@gmail.com
வலைத்தளம்:www.samooganeethi.org

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இசைக் கச்சேரி வைத்தது தவறு என்று ஏற்பட்டாளர்கள் உணர்ந்துள்ளது வரவேற்கதக்கது.

ஆலிம்கள் கேட்டுக்கொண்டதால் நாங்கள் இசை கச்சேரியை நிறுத்தினோம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறியிருப்பதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது, நம்மூர் ஆலிம்கள் அனாச்சாரங்களுக்கு எதிராக இது போல் அனாச்சாரம் செய்பவர்களை கண்டிக்க வேண்டும் என்று.

இசை கச்சேரி கூத்து கும்மாளமில்லாததால் கூட்டம் அதிகரித்து வருவதாகவும், கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் மிக்க மகிழ்ச்சியில் இருப்பதாகவும் அதிரையில் இருக்கும் நண்பர்கள் மூலம் அறிய முடிகிறது.

ஒன்று மட்டும் நிச்சயம்... வர்த்தக கண்காட்சி என்றால் இசை நிகழ்ச்சி இருக்கத்தான் செய்யும், ஆட்டல் பாடல் இருக்கத்தான் செய்யும், என்று ஒன்றுக்கும் உதவாத வெட்டி வியாக்கியானம் பேசியவர்கள் இனியாவது நிதானத்தை கையாளுவார்கள் என்று நம்பலாம்.

ஆலிம்களின் திருப்திக்காக மட்டுமல்லாமல் அல்லாஹ்வின் முழு திருப்திக்காக, அனாச்சாரங்களை ஏற்பட்டாளர்கள் நிறுத்தி இருந்தால் நிச்சயம் அல்லாஹ் நஷ்டம் ஏற்படுத்த மாட்டான் என்ற நம்பிக்கை நம் எல்லோருக்கும் உண்டு.

பெண்களுக்கு என்று தனி நேரம் ஒதுக்குவதற்கு ஏற்பட்டாளர்கள் முழு முயற்சி செய்ய வேண்டும்.

நம்முடை ஈமானின் அஸ்திவாரம், நம்முடைய தக்வா வலுவாக இருந்தால் எந்த சைத்தானிய சூழ்ச்சியிலும் நாம் சிக்கும் வாய்ப்பு குறைவு. நாமுடைய தக்வாவை அதிகரிக்க நாம் எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும். அல்லாஹ் நம் எல்லோரையும் சைத்தானுடைய வலையில் சிக்காமல் பாதுகாப்பானாக.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//16) நமதூரில் எதைச் செய்தாலும் அதில் குறைகாணவும், குற்றஞ்சொல்லவும் சிலர் இருக்கிறார்கள். உலமாக்கள் வேண்டுகோளின் பெயரில் இசை நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கண்ட நோக்கங்களை அறியாத சிலர், பல்வேறு வகைகளில் குறிப்பாக இலைத்தளத்தில் அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மேலும் எந்த ஒரு நல்ல நிகழ்வு யார் மூலமாக நடந்தால் என்ன என்று இல்லாமல் இது எங்களால்தான் நடந்தது என்ற புகழ் எதிர்பார்ப்பு ஏன்? அவர்களின் கூற்றை பொய்பிக்கும் முகமாக, அவர்களின் தூண்டுதோலுக்கு இணங்க மீண்டும் சினிமா பாடல்கள் இடம்பெரும் சூழல் ஏற்பட்டால் அவர்களே இதற்கு பொருப்பாவார்கள்.//

மேலே BOLD எழுத்தில் உள்ளவைகள் என்னவென்று புரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் விளக்குங்களேன்.

நம்மூரில் மட்டுமல்ல உலகம் முழுக்க எதை எடுத்தாலும் குறை கூறவும் குற்றம் சொல்லவும் பலர் உள்ளார்கள். குறையில்லாக நிகழ்வை அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நிகழ்த்த முடியும்.

எங்களால் மட்டும் தான் எல்லாம் நடந்தது என்று இணையதளங்களில் யாரும் வெளிப்படையாக பெருமையடித்துக் கொள்வதாக எனக்கு தெரியவில்லை.

எல்லாம் அல்லாஹ்வின் செயல்..

Ebrahim Ansari said...

பெரியவர் எஸ். முகமது பாரூக் அவர்களின் கருத்து:

ஆக மொத்தம் நமது ஊருக்கு அடை மொழியாக சொல்லப்படும் ஆட்டைக் கழுதை ஆக்குவது என்பது நடைபெறுகிறது. அப்பாடா இப்போதான் நமக்கு நிம்மதி

- எஸ். முகமது பாரூக்.

Unknown said...

ஒரு அழகிய விளக்கமளித்த ஒருங்கிணைப்பாளர் வர்த்தக பொருட்காட்சியின் அவசியத்தையும் அதன் மூலம் பொது மக்களுக்கும், வியாபார பெருமக்களுக்கும் ஒரு நல்ல தொழில் ஆலோசனை மற்றும் வியாபார நுணுக்க முறைகள் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றி அருமையான விஷயத்தை முன்னிறுத்தி விளக்கம் தந்தமைக்கு பாராட்டுக்கள்.

இதேபோல் இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் அல்லவைகளை நீக்கி மேலும் சில நல ,விஷயங்களை புகுத்தி ஆக்க பூர்வமாகவும், மற்றும் அதிரையையும் அதன் சுற்றுவட்டார மக்களையும் கவரும் வண்ணம் மேலும் செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள்.

அபு ஆசிப்.

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Ebrahim Ansari,

//பெரியவர் எஸ். முகமது பாரூக் அவர்களின் கருத்து:

ஆக மொத்தம் நமது ஊருக்கு அடை மொழியாக சொல்லப்படும் ஆட்டைக் கழுதை ஆக்குவது என்பது நடைபெறுகிறது. அப்பாடா இப்போதான் நமக்கு நிம்மதி

- எஸ். முகமது பாரூக்.
//

Mr. எஸ். முகமது பாரூக்'s statement is really funny and clarifying the truth.

Although,I wish we should avoid this negative reputation for our town(at the end actually to our people). Its kind of bad name(pattappeyar) given to a person which is not desirable even according to hadees.

I wish our people of Adirampattinam would obtain reputation of one who convert a donkey to a horse. I mean that we(people of Adirampattinam) would make only positive impacts. InshaAllah.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

அப்துல்மாலிக் said...

கடந்த 6 மாத கால திட்டமிடல் நல்லதுதான், அதே சமயம் ஆண்/பெண் களுக்கு தனி தனி நாட்கள் தெரிவு செய்வது பற்றியும் யோசிக்கனும். இனி வரும் காலங்களில் இதை கருத்தில் கொண்டு செயல்பட என் வேண்டுகோள்

இந்த வர்த்தக விழா வெற்றியடைய வாழ்த்துக்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு