நம் தமிழகத்தில் பரவலாக பள்ளிவாசல்களில் அதிகாலைத் தொழுகைக்குப் பிறகும் அந்தி வேளைத் தொழுகைக்குப் பிறகும் அனைத்து பிறமத சகோதர சகோதரிகள் (சமயத்தில் கைக் குழந்தைகளுடன்) வரிசையாக நின்றிருப்பார்கள். அவர்களின் பிணி. துயரம் அல்லல்களை அல்லாஹ் நீக்குவான் என்ற நம்பிக்கையுடன் வாசலில் காத்திருப்பார்கள். அதுபொழுது நினைத்ததுண்டு, சிலசமயங்களில் நிர்வாகிகளிடம் கேட்டதுமுண்டு.
”ஏன் இந்த பள்ளிநிர்வாகம் இதுபோன்று வருபவர்களை முறையாக உபசரிப்பதில்லை?,
அவர்களிடம் ஏன் நல்ல முறையில் அன்புடன் கனிவுடன் பேசுவதில்லை?
ஏன் அவர்களுக்கு நம் வணக்க வழிபாட்டினை விளக்குவதில்லை?
அவர்களை வரிசையாகவோ அல்லது பாதையில் இடையூறில்லாமல் நிற்கும்படி சொல்வதைக்கூட கடிந்துகொள்ளாமல், கனிவுடன் சொல்லலாமே?”
என்று பல கேள்விகள் தொடுத்ததும் உண்டு.
இருதினங்களுக்கு முன் படித்த செய்தியொன்று தூக்கிவாரிப்போட்டது.
செய்தியினை முழுவதும் படித்துமுடித்தவுடன் கண்கள் குளமானது.
முஸ்லீம்களென்றால் தீவிரவாதிகள், திருக்குர்ஆன் போதிப்பது தீவிரவாதம், முஸ்லீம்களல்லாதோரைக் கொல்வதே புனிதப்போர் என்று எள்ளளவும் உண்மையற்ற, மேல்நாட்டினரின் கீழான சிந்தனைகளை உள்ளிருத்தி 2008ம் ஆண்டு (FITNA) விதைத்த விதை 2013ல் தமிழ் நடிகரின் மூலம் (விஸ்வரூபமாய்) விருட்சம் கண்டபோது உலகளாவிய தமிழ்பேசும் முஸ்லீம்களல்லாது பொதுபுத்தி கொண்டோரையும் வெகுண்டெழச் செய்த படவிவகாரம் உலகறியும்.
அந்த விதை பரவ காரணமாக இருந்த நெதர்லாந்து (டச்சு) நாட்டின் பாரளுமன்ற உறுப்பினர் ஆர்நோத் வான் டோர்ன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்பதே அந்தச் செய்தி.
”எப்படி நீங்கள் போய்.............?” என்ற கேள்விக்கு,
“பள்ளிவாசலில் எனக்குக் கிடைத்த கனிவான வரவேற்பே இஸ்லாத்தைப் பற்றி மேலும் அறியத் தூண்டியது......” என்ற பதில் என் கண்களை குளமாக்கியது.
இஸ்லாத்தின் எதிரிகள் என்று பட்டம் சூட்டப்பட்ட பலர் இஸ்லாத்தினைத் தழுவினர் என்ற செய்தி, நமக்கு வேண்டுமானால் இஸ்லாத்தின் தொடக்க வரலாற்றுப் பக்கங்களில் உமர் (ரலி) அவர்கள் தொட்டு பழக்கமானதாய் அறிந்திருக்கலாம்.
நம் ஈருலக நாயகர் பெருமானார் (ஸல்) அவர்களின் உயிரை மாய்க்க வந்த உமர் அவர்கள், உடன்பிறந்தவள் உரைத்த திருவசனம் கேட்டு, ’உண்மைதான் இது உண்மைதான்’ என்று பொருளறிந்து ஓடோடி உத்தம நபியின் முன் சத்திய மார்க்கத்தினை ஏற்றுக்கொண்டார்.
முஸ்லீம்களாகிய நம்மிடையே நித்தம் ஐவேளை திருவசனங்கள் மொழியப்பட்டும் ஏதும் பொருளுணராததால் எந்த மாற்றமும் திடுக்கமும் ஏற்படுத்தாத சூழலில், ஆர்நோத் வான் டோர்ன் போன்றோருக்கு இஸ்லாத்தினை இழிவுபடுத்துதலே புனிதம் என்று கற்றுக் கொடுத்திருக்கும் போது திருவசனங்கள் கேட்டும் என்ன மாற்றங்கள் நேர்ந்திருக்கும்?
உலகில் நடந்த விரும்பத்தகாத குற்றச்செயல்களையும், அதன் பின்னுக்கு இருந்தவர்களையும், நியாயம் கோரி போராடுபவர்களை தீவிரவாதிகளாகவும் இறைமறை வசனங்களின் உண்மையறியாமல் இவர்களாக பொருள் தேடி, சில பல வசனங்களை ஒலிக்கச் செய்தும் மேற்கோளிட்டும், இஸ்லாமியர்களுக்குச் சான்றாய் மூன்றரை வயது குழந்தையிடம் பேட்டி(!)கண்டும், பெண்களுக்கு சுதந்திரமில்லை என்றும் இவை அனைத்திற்கும் மேலாக இஸ்லாத்தினை மனித குலத்திற்கே எதிரானதாக சித்தரித்தும் படங்கள் தயாரிப்பதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
ஆர்நோத் வான் டோர்ன் இன்று கதறுகிறார்........ யாரிடம்?
படைத்த வல்ல அல்லாஹ்விடமும் அவனின் திருத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடமும் கண்ணீர் வடிக்கிறார். ”இறைத்தூதரே என் அறியாமையால் நான் வெளியீடு செய்த படத்தை நினைத்து வருந்துகிறேன்” என்று கலங்கி நிற்கிறார்.
”கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக ஊடகம் தான் எனக்கு இஸ்லாத்தினை இவ்வளவு கொடூரமாக அறிமுகப்படுத்தியது. இஸ்லாம் என்பது வன்முறை போதிக்கும் மதம் என்றும், பெண்களை அடிமைப்படுத்தும் மதம் என்றும் சமூகத்திற்கெதிரானது” என்று மட்டுமே அறிந்திருந்ததாக சொல்கிறார் டோர்ன்.
ஃபித்னா படத்திற்கு உண்டான எதிர்ப்பு, வெளியான அரைமணி நேரத்திலே தடைசெய்யப்பட்ட நிகழ்விற்குப் பின் இஸ்லாத்தினை மேலும் அறிந்துகொள்ள நினைத்த போது, அவரின் நண்பர் அபு ஹுலானி உள்ளூர் பள்ளிவாசலுக்கு அழைத்துச்சென்றிருக்கிறார், அங்கு அவருக்குக் கிடைத்த சிறப்பான உபசரிப்பும், வரவேற்பும் ஆச்சர்யமளித்திருக்கிறது. தாம் நினைத்திருந்ததிற்கு முற்றிலும் எதிராக நடக்கிறதே என்று இஸ்லாத்தினை அறிய அதிக ஆர்வம் பிறந்திருக்கிறது.
திருக்குர்ஆன், ஹதீஸ் தொகுப்புகள் மற்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை ஓராண்டு ஆராய்ந்து கற்றுத்தேர்ந்து, உலகின் உன்னதமான மார்க்கம் இஸ்லாமே என்று ஓங்கியொலித்து உறுதியோடு ஏற்றுக்கொண்டுள்ளார் டோர்ன்.
உலகமே இதை நம்ப மறுத்திருக்கையில், நகர மேயரைச் சந்தித்து தான் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டதை முறையாக அறிவித்து, தனக்கும் மற்ற முஸ்லீம்களைப் போலவே அலுவலக நேரத்தில் தொழுகைக்கான நேரத்தில் தொழுவதற்கு அனுமதிகோரியுள்ளார்.
புனித இறையில்லம் மற்றும் இறைத்தூதரின் பள்ளியினைத் தரிசிக்க வந்த அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் உலகுக்குச் சொன்னது,
”யார் நம்ப மறுத்தாலும், இது (இஸ்லாத்தினை ஏற்றிருப்பது) எனது வாழ்க்கையில் ஓர் முக்கியமான முடிவாகும். இதுநாள் வரையிலும் மற்றவர்களைப் போலவே நானும் நிறைய தவறுகள் பாவங்கள் செய்திருக்கிறேன். அதனால் நிறைய பாடம் கற்றுக்கொண்டிருக்கிறேன். இப்போது அல்லாஹ் எனக்கு நேர்வழியினைக் காட்டியிருக்கிறான். இந்த நேரான வழியில் செல்லும் என் வாழ்க்கையின் புதிய தொடக்கத்தில் கற்றுக்கொள்ள வேண்டியதோ கடலளவு.
’தீமையினை நன்மையைக் கொண்டு மாற்றவேண்டும்’ என்ற இறைவசனத்திற்கேற்ப, அறியாமையினால் இஸ்லாத்தினை தவறாகச் சித்தரிக்கும் படம் கொடுத்த இந்த உலகிற்கு, இஸ்லாத்தின் மாண்பையும், ஈருலக நாயகர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் புனித வாழ்வினையும் சொல்லும் படம் தயாரித்து வெளியிடுவேன்.”
நமது பள்ளிவாசல்கள் உள்ளூரில் செய்யப்போகும் புதிய தொடக்கம் எப்போது?
புதுசுரபி
29 Responses So Far:
அல்லாஹு அக்பர்
Assalamu Alaikkum,
Dear brother Mr. Rafeeq,
Thanks for sharing an inspiring article "A New Starting".
If a person is in a venture of searching for truth may end up reverting to Islam.
Mr. Arnoud van Doorn said: “I have heard many negative stories about the Islam, but I am not a person who follows opinions of others without doing my own research and forming my own opinion.
Therefore, I have actually started to deepen my knowledge of the Islam out of curiosity.
http://islamstory.com/en/arnoud-van-doorn-islam
Actually the minds are impacted positvely by good manners and positive actions.
Jazakkallah Khairan,
Best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
அஸ்ஸலாமு அலைக்கும்
அஹமது அமீன்
உங்களது பின்னூட்டங்களை நான் படிப்பதில்லை
காரணம் ஆங்கிலத்தில் இருப்பதுதான்
தம்பி நீங்கள் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவராக இருக்கலாம்
உங்கள் பின்னூட்டம் எல்லோருக்கும் போய் சேரவேண்டும் என்று
விரும்பினால் நமது தாய் மொழியிலேயே பின்னூட்டமிடலாம் என்பது எனது
அன்பான வேண்டுகோள்.
ஆங்கிலம் என்பது மொழியே த்விற அறிவல்ல என்பதை புரியாதவர்கள் புரிந்து கொள்ளவும்.
அதிரைமன்சூர்
ரியாத்
அமீன்
நான் கொடுத்திருக்கும் கடைசி வாசகம் கண்டிப்பாக உன்னை குத்திக்காட்டி எழுதியதாக என்னிவிடவேண்டாம்.
அதிரைமன்சூர்
ரியாத்
ஹிதாயத் ( நேர்வழி) என்பது இறைவன் கையில்.
அபு ஆசிப்.
//ஹிதாயத் ( நேர்வழி) என்பது இறைவன் கையில்.
அபு ஆசிப்//
சரியாகச் சொன்னாய்.
புது சுரபி, ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.
Masha Allah.
For couple of days, I doubted about this incident(reverted to Islam) while it was circulated in Facebook by many. But,now I have to believe, as this is published in Adirai Nirubar who usually do research b4 publishing.
உலகெங்கிலும் உள்ள இஸ்லாத்திற்கு எதிரான நச்சு ஊடகங்களின் சாயம் வெளுக்க செய்யும் அளவுக்கு இஸ்லாத்தின் ஜோதி உலகெங்கும் பரவ அல்லாஹ் இவரை காரணமாக ஆக்கிவைப்பானாக.
முஸ்லிம்களும் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாட்டால் இறை நிராகரிப்பாளர்களைப் போல் தங்களுக்குள்ளே பகைமைப் பாராட்டிக்கொள்வதும் இஸ்லாமிய வீழ்ச்சிக்கு ஒரு காரணமென்றால் மிகையல்ல.
அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதரின் நடைமுறையை பின்பற்றுவதிலும் உள்ள மெத்தனமும் நமக்கு நாமே செய்து கொள்ளும் அ நீதமாகும்
சகோதரர் மன்சூர் அவர்களே ,
அமீன் அவர்கள் ஆங்கிலத்தில் தான் எழுதுவார் , இது சம்பந்தமாக ஏற்கனவே நிறைய பேசியாகி விட்டது ...
வேண்டும் என்றால் யாரவது அதை தமிழில் மொழி மாற்றம் செய்து இங்கே போஸ்ட் செய்ய கோருங்கள் அல்லது நீங்கள் ஆங்கிலம் கற்று கொள்ளுங்கள் ..
LEARNING ENGLISH IS NOT A CRIME !!!
இது நான் கற்று கொண்ட பாடம் இங்கே..
So either you learn English or skip his comments and ignore him
அல்ஹம்துலில்லாஹ், நல்ல தொடக்கம். நல்ல தகவலுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர். இறை நேசராகி விட்ட அவரின் நல் நிய்யத் வெற்றியடையட்டுமாக. ஆமீன்.
ரசூல் (ஸல்) அவர்களின் தலையை கொய்து கொண்டு வருகிறேன் என்று அவர்கள் சம காலத்தில் வாழ்ந்து ஆர்ப்பரித்த ஒருவருக்கே ( உமர் (ரலி) ) நேர்வழியைக்காட்டிய இஸ்லாம் , ரசூ (ஸல்) மறைந்து 1400 வருடங்களுக்கு மேலாகி இன்று கேலி செய்த ஒருவருக்கு நேர்வழியைக்காட்டாதா?
குப்பையை தலையில் கொட்டிய பெண்மணிக்கு நேர்வழியைக்காட்டிய இஸ்லாம்
கேலிசெய்த ஒருவருக்கு நேர்வழியைக்காட்டுவது எம்மாத்திரம்?
நூஹு நபியுடைய மனைவியையும், லூத்து நபியுடைய மனைவியையும் நரகவாதிகள் என்று கூறும் அல்லாஹ்தான்
கொடியவனான பிர் அவுன் மனைவியை சொர்க்கவாதி என்று சொல்கிறான்.
கற்ப்புக்கு இலக்கணமாக இரண்டு பெண் மணிகளை சொல்லும்போது, மரியம் (அலை) அவர்களையும் பிர் அவுன் மனைவியும் சொல்கின்றான்.
ஆதலால் ஹிதாயத் என்னும் அந்த நேர்வழிக்கு அல்லாஹ் நம்மையும்
இறுதிவரையில் அழைத்துச்செல்லட்டும்
நாம் அனைவரும் இறைவனின் நேர்வழியைப்பெருவோமாக!
ஆமீன்.
அபு ஆசிப்.
கனடா காதர் அவர்களே
நான் ஆங்கில மொழி படிப்பதற்கு எதிரானவன் அல்ல
யாரும் வேறு மொழியை கற்பது க்ரைம் என்று இந்த காலத்தில் சொன்னது கிடையாது
ஒரு காலம் இருந்தது ஆங்கிலேயர்கள் மீது உள்ள வெறுப்பில் ஆங்கிலையனை நாட்டை விட்டு விறட்டும் முகமாகவும் இந்திய நாட்டின் மீது இருந்த பற்றை வெளிக்காட்டும் விதமாகவும் நமது ஆலிம்கள் ஆங்கிலம் படிப்பது ஹராம் என்றே தீர்ப்பழித்து அந்த தீர்ப்பை முஸ்லீம்கள் மட்டும் நடைமுறை படுத்தி வந்ததின் காரணமாக எனது தந்தை வாழ்ந்த கால கட்டங்களில் ஆங்கில மொழி கற்க தடை இருந்தது. ஆனபடியால் எங்களால் அந்த மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லை. நான் படிக்கும் கால கட்டத்தில் எ பி சி டியே 3ஆம் கிலாசில்தான் ஆரம்பித்தார்கள் பி யு எஸ்= ப்ஸ் என்ற வார்த்தையே 5ஆம் கிலாசில்தான் ஆரம்பம் செய்தார்கள். இதன் காரணமாகவே ஆங்கில மொழியில் எங்களால் சரலமாக படிக்க முடியாது. நான் மட்டுமல்ல என்னை போன்ற ஆங்கிலம் படிக்க தெரியாத சகோதரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். காலம் கடந்தபின் ஆங்கில மொழி எல்லோராலும் படிக்க முடியாது. ஆங்கிலம் படிக்கத்தெரியவில்லை என்று ஆங்கிலத்தின் எழுதும் சகோதரர்களின் பின்னூட்டங்களை படிக்காமல் இக்னோர் செய்யவும் முடியாது. என்பதற்காகவே தமிழ் பின்னுட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எல்லொருக்கும் சொந்தமொழியில் கருத்துக்கள் போய் சேரவேண்டும் என்பதினால்தானே அதிரைநிருபரும் இனையத்தை தமிழில் இயக்குகின்றனர். தெரியாமல்தான் கேட்கிறேன்.தமிழில் நடத்தப்படும் இனைய தளத்திற்கு எதற்கு மாற்று மொழி ஒரு வேளை காதர் அவர்களுக்கு தமிழ் தெரியாதா?
இது எப்படி இருக்கின்றது என்றால் கனாடியென்சை பக்கத்தில் வத்துக்கொண்டு அவனை தமிழில் திட்டுவதுபோன்று இருக்கின்றது
ஆங்கிலத்தில் பின்னூட்ட்மிடுபவர்கள் நான் இடும் பின்னூட்டத்தை பார்த்து கனடா காதர் போன்று ஆங்கிலத்தில் மறுப்பு பின்னூட்டமிட்டால் எனக்கு அது எப்படிதெரியும் கனாடியென்சை தமிழில்திட்டுவது போன்றுதான் இருக்கும்.அல்லது எருமை மாட்டில் மழை பெய்ததுபோல் இருக்கும்.
அமீன் அவர்கள் ஆங்கிலத்தில் தான் எழுதுவார் , இது சம்பந்தமாக ஏற்கனவே நிறைய பேசியாகி விட்டது ... என்று தாங்கள் எழுதுவதிலிருந்தே தெரியவில்லையா ஆங்கலம் தெரியாதவர்கள் நிரையபேர் இருக்கின்றார்கள் என்று.
இருதியாக கேட்கின்றேன், தமிழில் எழுதினால் தமிழ் வராதா? ஏன் இந்த கொலவெறி?
அதிரைமன்சூர்
ரியாத்
சகோ. ஆர்நோத் வான் டோர்ன், மதீனமாநகரம் வந்து புனித ஹரம் ரவ்ளா ஷரீஃபில், யா ரசூலல்லாஹ்! நான் உங்கள் மீது திரைப்படம் மூலம் அவதூறு பரப்பினேன். என்னை மன்னித்தருளுங்கள் என கதறி அழுததாக ஊடகத்தகவல் மூலம் கேள்விப்பட்டேன்.
சமீபத்தில் ஃபேஸ் புக்கில் வந்த செய்தி: பிரபல பாலிவுட் திரையுலகின் நாயகியாகத்திகழ்ந்த மம்தா குல்கர்னி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அவரை தொடர்பு கொண்டு மேடை விழாவிற்கு அழைத்ததற்கு இஸ்லாத்தை வாழ்க்கைநெறியாக ஏற்றுக்கொண்டு தன் கணவரும் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் இனி மேல் இது போன்ற மேடை விழாக்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் தெரிவித்து விட்டதாக செய்தி வந்திருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் விரைவில் பிரவீன் தொகாடியா, நரேந்திர மோடி, அத்வானி, சுஸ்மா, முரளி மனோகர் ஜோஷி மற்றும் அயோத்தியில் பாபர் மசூதி காவிக்கூட்டங்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டு நிர்வாண நடனமாடிய கூத்தாடிகளெல்லாம் மேனி மறைத்து நாணம் காக்கும் இஸ்லாம் போதிக்கும் புர்கா அணிந்து புனித மக்கா, மதீனா நகரங்கள் வந்து அல்லாஹ்வின் இல்லங்களை தரிசித்துச்செல்லச்செய்ய இறைவனுக்கு பெரும் பொருட்டல்ல......
இறை நிராகரிப்போர் அவர்கள் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்குள் பிரவேசிக்கிறார்களோ இல்லையோ அவை நமது கைகளில் இல்லை அல்லாஹ்வின் நாட்டம். ஆனால் இஸ்லாமிய சமுதாயத்திற்குள் பரம்பரை,பரம்பரையாக இருந்து வருவோரின் அநியாய, அக்கிரம, அட்டூழியங்கள் படைத்த அல்லாஹ்விற்காக நிறுத்தப்பட வேண்டும்.
Alhamthulillah, The foes of Islam will observe the right way ordered by Allah and way of Prophet (PUB) soon after learning the deep aspect of our policies. We will see big Islamic environmental world insha allah.
Dear Mansour Kaka, Please inspire the English writers. Read my below comment to understand the important of English for our society. The same comment I have written for an older post too.
இன்று உலகில் இஸ்லாத்தைப் பற்றி தவரான கருத்துக்கள் மீடியாக்கள் மூலம் பரப்பப் படுகின்றன. இதில் உலக அலவில் தோராயாமாக 70% ஆங்கில மீடியாக்களூம் மீதி 30% தமிழ் மற்றும் இதர மீடியாக்களூம் வெளியிடுகிறன. இச்சூழ்நிலையில் ஆங்கில மீடியாக்களுக்கு எத்தனை பேர் எதிர்ப்பு கமெண்ட்ஸ் கொடுத்து அச்செய்திகளை திரும்பப்பெற வைத்துள்ளார்கள் என்று தெறியுமா? அப்படி குறல் கொடுக்காவிட்டால் அவர்களுடய தாக்குதல் அதிகரிக்கும். இதற்கு ஆங்கில அறிவு அவசியம் இல்லையா? இன்று யுகே மற்றும் யு எஸ்ஸில் இருந்து வெளியாகும் அனேக பத்திரிக்கைகளும் இஸ்லாத்திற்கு எதிரான செய்திகளை போட்டி போட்டு பரப்பிக்கொண்டிருக்கின்றன. இவைகளுக்கு அவ்வப்பொழுது நம்மில் சிலரும் உலகின் பல மூலைகளிலிருந்து சிலரும் எதிர்ப்பு கம்மெண்ட்ஸ் கொடுதுக்கொண்டு இருப்பதால் அந்த செய்திகள் திரும்பப்படுகின்றன. இவைகளுக்கு ஆங்கில அறிவு மிக அவசியம் என்பதை அறிய வேண்டும்.
ஆங்கில அறிவின் அவசியம் பற்றி எழுதுவதாக இருந்த்தால், நிறைய எழுதலாம். இங்கு போட்டி நடக்கவில்லை. எனவே நம் சமுதாய இளைஞர்கள் அவர்களுடைய எதிர்கால தொழில், வேலை வாய்ப்பு மற்றும் சமுதாயப்பனி இவைகளை கருத்தில் கொண்டு, ஆங்கில பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றளுக்கும் அவசியம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.
Abdul Razik
Dubai
அல்லாஹுத்தலா சகோ. ஆர்நோத் வான் டோர்ன் கொடுத்த ஹிதாயத் இவ்வுலத்தில் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் அனைத்து பிற மத சகோதர்களுக்கும் (ஹிதாயத்) தந்தருள்வானாக....
சகோ.புது சுரபி, ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.ஏஞ்ஜலினா ஜோலியும் இஸ்லாத்தை தழுவிட்டதாக கேள்வி...ஆஃப்கான் மற்றும் சிரியாவில் போரின் காரணமாக அனாதையாக விடப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்விற்க்காக அவர்கள் செய்துவரும் தொண்டு பாராட்டதக்கது
யாரும் நமது பள்ளிகளில் நாம் செய்ய வேண்டிய ‘புதிய தொடக்கத்தை’, ‘புதிய அணுகுமுறை’களைப் பற்றி விவாதிக்கவில்லையே?????
நமது பள்ளிவாசல்களை, இஸ்லாமிய மற்றும் பிறமத சகோதர சகோதரிகளின் அறிவு திறக்கும் வாசல்களாக மாற்றுவதைக் குறித்து விவாதிக்கலாமே?
கட்டுரையின் நோக்கமே - ஆர்நோத் போன்று நிறைய மனமாறங்களை (மதமாற்றமல்ல) நமது பள்ளிவாசல்களும் உருவாக்க வேண்டும் என்பதே!
இணையத்திலும், ஃபேஸ்புக்கிலும் இஸ்லாத்தின் மீது அவதூரு பரப்புவர்களும் கூடிய சீக்கிரம் இதற்காக வருந்துகிறேன் என்று கண்ணீர்விட்டு அழப்போகும் காலம் வெகுதொலைவில் இல்லை..
அல்லாஹு அக்பர்..
//புதுசுரபி சொன்னது…
யாரும் நமது பள்ளிகளில் நாம் செய்ய வேண்டிய ‘புதிய தொடக்கத்தை’, ‘புதிய அணுகுமுறை’களைப் பற்றி விவாதிக்கவில்லையே?????
நமது பள்ளிவாசல்களை, இஸ்லாமிய மற்றும் பிறமத சகோதர சகோதரிகளின் அறிவு திறக்கும் வாசல்களாக மாற்றுவதைக் குறித்து விவாதிக்கலாமே?
கட்டுரையின் நோக்கமே - ஆர்நோத் போன்று நிறைய மனமாறங்களை (மதமாற்றமல்ல) நமது பள்ளிவாசல்களும் உருவாக்க வேண்டும் என்பதே!
//
Assalamu Alaikkum,
Actually we go the masjid to pray and do zikr. We are calm and quiet in Madjid and listening to speeches of Ulamas.
I mentioned in my previous comment.
"Actually the minds are impacted positvely by good manners and positive actions.".
What we gain by sitting in majid should be practiced outside also.
Islamic prayers are beyond the routine rituals.
We muslims have responsibilities of inviting non-muslim brothers and sisters towards Islam, buy introducing concepts of God, introducing Holy Quran and by practicing our true islamic way of living.
Shaikh Ahmed Deedat (an invitor to Islam) had invited non muslim brothers and sisters into Madjid in SouthAfran city, Darban and introduced them to Madjid and Islam.
அஸ்ஸலாமு அலைக்கும்
நாம் தொழுவதற்காகவும் தியானம் செய்வதற்காகவும் பள்ளிவாசல்களுக்கு செல்கிறோம்.
பள்ளியில் பெறும் பலன்களை நம் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும். இஸ்லாமிய வழிபாடுகள் திரும்பத் திரும்பச் செய்யும் சடங்குகள் அல்ல. மாறாக அவை இறைவனின் பொருத்தம் பெறும் வழிவகைகள்.
முஸ்லீம்களான நாம் மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு உண்மையான இறைநம்பிக்கை பற்றியும், இறைவனின் வார்த்தைகளான புனித குர் ஆன் பற்றியும், இஸ்லாமிய வாழ்வியல் முறைகள் பற்றியும் அறிமுகம் செய்யக் கடமைப்பட்டுள்ளோம். இதற்கு பள்ளிவசல்கள் தலைவாயில்கள். இறை இல்லங்கள் மனமாற்றங்கள் ஏற்பட ஏதுவானவை.
ஷைக்ஹ் அஹ்மட் டீடாட்(இஸ்லாமிய மார்க்க அழைப்பு விடுக்கும் அறிஞர்) அவர்கள் தென் ஆப்பிரிக்கா டர்பன் நகரில் மாற்றுமத சகோதர சகோதரிகளுக்கு பள்ளிவாசலினுள் அனுமதித்து பள்ளிவாசலையும் இஸ்லாத்தையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com.
புதுசுரபி சொன்னது…
"யாரும் நமது பள்ளிகளில் நாம் செய்ய வேண்டிய ‘புதிய தொடக்கத்தை’, ‘புதிய அணுகுமுறை’களைப் பற்றி விவாதிக்கவில்லையே?????
நமது பள்ளிவாசல்களை, இஸ்லாமிய மற்றும் பிறமத சகோதர சகோதரிகளின் அறிவு திறக்கும் வாசல்களாக மாற்றுவதைக் குறித்து விவாதிக்கலாமே?
கட்டுரையின் நோக்கமே - ஆர்நோத் போன்று நிறைய மனமாறங்களை (மதமாற்றமல்ல) நமது பள்ளிவாசல்களும் உருவாக்க வேண்டும் என்பதே! "
TNTJ சிறப்பாக செய்து வருகிறது
அதிரை நிருபரில் வெளியாகும் எந்த ஒரு கட்டுரைக்கும், அதற்கு பொருந்தாத / சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை நீக்குமாறு ஆசிரியக்குழுவுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
அதிரைநிருபரின் வளைத்தளத்தின் நோக்கம் நல்லபல கருத்துக்களை அனைவருக்கும் சேர்ப்பதே என்று நம்புகிறேன்.
வல்ல அல்லாஹ் நம்மை நன்மையல்லாத காரியங்களிலிருந்து காப்பாற்றுவானாக!
I request Editorial team to remove an inappropriate comments which was not at all related to the posted article/event.
I hope that the intention behind the blogs is to cater the valuable information to the people.
May Allah almighty protect us from the undesirable deeds.
புதுசுரபி சொன்னது…
//அதிரை நிருபரில் வெளியாகும் எந்த ஒரு கட்டுரைக்கும், அதற்கு பொருந்தாத / சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை நீக்குமாறு ஆசிரியக்குழுவுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
அதிரைநிருபரின் வளைத்தளத்தின் நோக்கம் நல்லபல கருத்துக்களை அனைவருக்கும் சேர்ப்பதே என்று நம்புகிறேன்.
வல்ல அல்லாஹ் நம்மை நன்மையல்லாத காரியங்களிலிருந்து காப்பாற்றுவானாக!//
இந்த கருத்தை முழுமையாக ஆதரிக்கின்றேன்.
எந்த ஒரு கட்டுரை ஆசிரியரும் தன் கட்டுரைக்கான பின்னூட்டத்தை மட்டுமே எதிர்பார்த்திருப்பாரே தவிர அனாவசியமாக கட்டுரைக்கு சம்மந்தமில்லாத பின்னூட்டமிட்டு பதிவின் சாராம்சத்தைவிட்டு திசை திருப்பும் எதையும் பொறுத்துக்கொள்ளமுடியாத ஒன்று.
சம்மந்தமில்லாமல் விவாதம் செய்ய மல்லுக்கட்டுபவர்கள், சண்டை மூட்டிவிட்டு குளிர்காய நினைப்பவர்களது எந்த ஒரு பின்னூட்டத்தையும் சிறுது நாளைக்கு நிருத்திவைத்தால்தான் திருந்த வாய்ப்புண்டு என்று நினைக்கின்றேன்.
நம்மை நாடி வருபவர்களுக்கு நம்மைப் பற்றிய விஷயங்களை எடுத்துரைக்க வேண்டுமென்ற கருத்து சிந்திக்கக் கூடியது செயல் படுத்த வேண்டியது.
நாம் பெரும்பாலும் பள்ளியை தொழுகைக்காகவே பயன்படுத்துகிறோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர் பள்ளியை தொழுகைகு மட்டுமல்லாது ஒரு தலைமை அலுவலகமாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள். அதே போல் நாமும் பள்ளியை சமூக சேவை மையமாக பயன்பத்தினால் பிற சமயத்தவரல்லாது முஸ்லிம்களையும் பள்ளியோடு தொடர்புள்ளவர்களாக உருவாக்க முடியும்.
அவ்வாறு ஏழை, பணக்காரன், தலைவன், தொண்டன் என்று அனைவரும் ஒன்று கூடும்போது பிறர் தேவையறிந்து உதவுவதன் மூலம் சமூக நலன் பேன முடியும்.
அல்லாஹ் நம் மக்களுடைய மனதையும் விசாலமாக்கி அல்லாஹ்வின் தூதர் எதற்கெல்லாம் பள்ளியை பயன்படுத்தினாகளோ அதேபோல நாமும் பயன்படுத்தி கூட்டு வாழ்க்கையின் முழுப்பயனையும் அடைந்துகொள்ள அருள்வானாக!
சகோதரர்களுக்கு கருத்துபரிமாற்றம் என்று உங்கவர்களின் பொன்னான நேரத்தை நீண்ட பின்னூட்டங்கள் மூலம் வீணாக்க வேண்டாம். More over no comments.....
Ebrahim Ansari சொன்னது…
நம்மை நாடி வருபவர்களுக்கு நம்மைப் பற்றிய விஷயங்களை எடுத்துரைக்க வேண்டுமென்ற கருத்து சிந்திக்கக் கூடியது செயல் படுத்த வேண்டியது.
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நானும் இதை வழிமொழிகிறேன்.
தம்பி கிரவுன் அலைக்குமுஸ் ஸலாம். ஜசக்கலாஹ்.
அல்லாஹு அக்பர்!அல்லாஹ் தான் நாடியோர்க்கு நேர்வழி காட்டுபவனாக இருக்கிறான்.....பதிவுக்கு நன்றி!!
இப்பதிவை படிக்கும் போது நமக்கு இறைவன் நேர்வழியை தர வேண்டும் என்று பிராத்தனை செய்ய மனம் எண்ணுகிறது.கட்டுரையாளர் விரும்பும் புதிய தொடக்கம் அனைத்து பள்ளில்களில் வர வேண்டும்.
நல்ல பதிவுகளை தரும் அதிரை நிருபர் குழுவிற்கு பாரட்டுகள்
சாதிக் அலி - மதுக்கூர்
Post a Comment