Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை காட்டுப்பள்ளி கந்தூரிக் கமிட்டியினருக்கும், கலெக்டருக்கும் ADT கடிதம் ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | May 09, 2013 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த 25.4.2013 தேதியிட்டு, காட்டுப்பள்ளி கந்தூரிக் கமிட்டியினருக்கு அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக ஒரு மடல் எழுதி, அதைக் கமிட்டியினர் அனைவரையும் நேரில் சந்தித்துக் கொடுப்பதற்குக், கமிட்டியின் பொருளாளர் (துரியான்) ஷேக் தாவூது அவர்களைத் தொலைத் தொடர்பு கொண்டு நேரம் கேட்டிருந்தோம்.

பல நாட்களில் பல நேரங்கள் தந்தும், தந்த நேரத்தை உறுதி செய்து கொள்வதற்குப் பலமுறை முயன்றபோது அடுத்த நாள்/நேரம் கொடுக்கப்பட்டு, தொலைபேசியில் அழைத்து உறுதி செய்வதாக வாக்களிக்கப்பட்டும் ஒருமுறையேனும் நம்மை அழைக்கவில்லை.

இறுதியாகக் கடந்த 1.5.2013 புதன்கிழமை மாலை கீழத்தெரு சங்கத்தில் கந்தூரிக் கமிட்டிப் பொருளாளரை நேரில் சந்தித்துக் கேட்டபோது 3.5.2013 வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப் பின்னர் நமக்கு நேரம் ஒதுக்கியதாகத் தெரிவித்தார்.

அதுவும் நழுவிப் போனது. தொடர் மறுதலிப்புகள் நம்மைச் சந்திக்க, கந்தூரிக் கமிட்டியினருக்கு விருப்பம் இல்லை என்பதை உணர்த்தியது.

எனவே, அடுத்தநாள் 4.5.2013 அன்று காலை கந்தூரிக் கமிட்டி உறுப்பினர் (மான்) நெய்னா முஹம்மது அவர்களிடம் அதிரை தாருத் தவ்ஹீதின் மடலைக் கொடுத்து, கந்தூரிக் கமிட்டியினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

---------------
அடுத்த கட்ட நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியருக்கு அதே 4.5.2013 நாளிட்டு கந்தூரியை நிறுத்துவதற்கு ஆவன செய்யுமாறு வேண்டுகோள் மடலொன்று அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் எழுதப்பட்டது.



ஜமீல் M.ஸாலிஹ்
செயலாளர்
அதிரை தாருத் தவ்ஹீத்

21 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum,

Dear brothers and sisters,

The reality of stopping Handoori is a challenging one since it has established long time custom and culture there in Adirampattinam(since its not happening from 28th April 2013 similar to adirai cultural festival). Even if the brothers are taking religious preaching and persuation(long term) or legal actions(short term), from officers point of view its one of the religiously important events in secular country like India. So it may not be easier to abruptly stop Handoori by "Thadaaladi" approach, and would make unnecessary conflicts in the community(which we had already observed).

But it can be stopped gradually by making awareness to the concerned people(long term) whoever support the Handoori events. InshaAllah.

I wish and expect peace and harmony there.

May Allah lead us to straight path and save our community from unnecessary conflicts in the name of established regligion Islam where effective solutions and guidance are widely available to our practice.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

இவர்களுககு எத்தனை கடிதங்கள் எழுதினாலும் சரி. எத்தனை இறைவனின் எச்சரிக்கை நினைவூட்டல்கள் செய்தாலும் சரி அனைத்தும் எருமையின் மேல் மழையே.

இந்த மூட நம்பிக்கைமட்டும் ஆழமாக வேரூன்றிய ஒன்று. இதில் இருந்து மீண்டு வருவது என்பது .

ஒன்று இவர்கள் தானாக திருந்திவருவது,
அல்லது ஏதாவது ஒரு ரூபத்தில் இவர்களை திருந்த வைப்பது

இரண்டில் ஒன்று நடந்தால்தான் உண்டு.

அபு ஆசிப்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இன்சா அல்லாஹ் விரைவில் அனாச்சாரம் ஒழியட்டும். ADT யின் முயற்சிக்கு பலன் கிடைக்கட்டும்.

முயற்சி தொடரனும், அதன் மூலம் நாமலும் நிறைய அறிய முடிகிறது. முறையாக எடுத்துச் சொல்லும் போது படிப்படியாக மனமுருகி (கல்லும் கரைவது போல) அவர்கள் விளங்கிடும் நாள் விரைவில் வரட்டும். தொடர் முயற்சி, கூட்டு முயற்சிகளுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் இன்சா அல்லாஹ்.

இன்றைய கமிட்டியார் உணர்ந்து அடுத்த வருசம் இதை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் முதல் மனிதராக வர துஆ செய்வோம்.

sabeer.abushahruk said...

ஜமீல் காக்கா மற்றும் அஹ்மது காக்கா வழிகாட்டுதலில் அதிரை தாருத் தவுஹீது சாதிக்கவும் ஹந்தூரி நிறுத்தப்படவும் என் துஆ.

Meerashah Rafia said...

இந்த கடிதத்திற்கான பிரதிபலிப்பை காண அவா.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பொறுமையுடனும் நிதானத்துடன், எந்தவித அரசியல் நோக்கமும் இன்றி நன்மையை ஏவி தீமையை தடுக்கும் அதிரை தாருத் தவ்ஹீதின் சேவைக்குகு துணை நிறக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

இந்த கடிதத்தை கந்தூரி கமிட்டியில் உள்ள ஒருவராவது படித்து உணர்ந்து, அதிலிருந்து விலகுவார்கள் என்று நம்பலாம்.

இசை கூத்து கந்தூரி ஊர்வலமும் மார்க்கம் என்று அறியாமல் இருக்கும் மக்களுக்கு அல்லாஹ் தெளிவை கொடுப்பானாக.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸாலாமு அலைக்கும்,

நண்பர் அகமது அமீன்,

எந்த ஒரு செயலையும் எடுத்தேன் கவுத்தேன் என்று செயல்படுத்துவது சரியால என்று நீங்கள் பொதுவாக சொல்லும் கருத்து சரிதான்.

பொது அமைதிக்கும், சமூக கட்டுப்பாடுகளுக்கும், தூய இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் கேடு விளைவிக்கும் கந்தூரியை நிறுத்துங்கள் என்று கந்தூர் கமிட்டி சகோதரர்களுக்கு ADT அழைப்பு விடுத்ததையும் பிறகு கடிதம் கொடுத்தயும், கந்துரியை தடைசெய்ய அரசு ரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்படுவதை நீங்கள் தடாலடி செயல் என்று சொல்லவில்லை என்று கருதுகிறேன்.

தமிழகம் எங்கு அல்லாஹ்வுக்கு இணைவைக்க வேண்டாம் என்று மக்களுக்கு எடுத்து சொல்லும் பொதுக்கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள் விநியோகம், கருத்தரங்குகள் என்று பல அமைப்புகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இன்ஷா அல்லாஹ் நல்ல ஒரு மாற்றம் ஏற்படும்.

காலம் போறப் போக்கை பார்த்தால், நம்முடைய ஈமானை ஸ்டாங்காக வைத்துக்கொள்ள, நிறைய நாம் நம்முடையை நஃப்சுடம் போராட வேண்டியுள்ளது.

நயவஞ்சகத்தனம் செய்து, அப்பாவிகளை தங்களின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிட்டு வேடிக்கை காட்டும் பெயர் தாங்கி முஸ்லீம் அரசியல்வாதிகளும், அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் ஒரு சில சுயநலவாதிகளும் திருந்தினால் தான் கந்தூரி போன்ற அனாச்சாரங்களில் இருந்து விலகி நம் சமுதாயம் தலைநிமிரும்.

Ebrahim Ansari said...

பல வருடங்களாக வெறுமனே நமக்குள் பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தோம். இப்போது துறை ரீதியான நடவடிக்கை கேட்டு அவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வது தொடங்கி இருக்கிறது. ஒரு சரியான அணுகுமுறை .

இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் தலைவர் அஹமது காக்கா மற்றும் செயலர் சகோதரர் ஜெமீல் ஆகியோரின் முயற்சிகளின் வெற்றிக்கு இறைவன் துணை இருக்க து ஆச செய்வோம்.

சமுதாயத்தில் வேர்விட்டு நிற்கும் இந்த கந்தூரி எனும் காட்டுக் கருவையை வேரறுக்கத் துணை நிற்போம். இன்ஷா அல்லாஹ்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

Dear Br.Ahmed Ameen,

Assalamu alaikkum.

Will you please cite out here those words lead to aggressive approach?

My request is based on self correction and to avoid those words in future writings.

Thanks,
Jameel M. Salih
SEC-ADT

Anonymous said...

இது ஒரு நல்ல விஷயம் நன்மைகள் வளரட்டும் தீமைகள் ஒழியட்டும். எந்த ஒரு நல்ல விஷயத்திற்கும் நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும். கந்தூரி கமிட்டிகள் மேலே எழுதிள்ள கடிதத்தை பார்த்தாவது திருந்தட்டும்.

எந்த ஓர் நல்ல செயல் செய்யும் போது எதிர்ப்பு வரத்தான் செய்யும் நாம் நன்மையை ஏவி தீமையை தடுப்போம். இந்த மாதிரியான விஷங்களுக்கு எல்லாம் முயற்சி செய்பவர்களுக்கு இறைவன் நல் அருள்புரிவானாகவும். எந்த ஒரு நல்ல விஷயங்கள் செய்யும் போது நான் பெரியவனா அல்லது நீ பெரியவனா என்றல்லாம் ஈகோ பார்க்காமல் ஒன்று பட்டு செயல்பட வேண்டும். அல்லாஹ் திருமறை குர் ஆனிலும்,ஹதீஸ்களிலும் கூறியிருக்கிறான் நன்மையை ஏவி தீமையை தடுப்பீர்களாக என்று.

நமதூரில் ஆலிம்கள் கந்தூரி எடுப்பவர்களுக்கு எதிராக பயானில் கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதை யாரும் காது கொடுத்து கேட்பதில்லை. நல்ல விஷயங்களுக்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும் அதை நாம் மெது மெதுவாக கையாள வேண்டும். எடுத்தோம்,கவுத்தினோம் என்றல்லாம் இல்லாமல் முயற்சி செய்துக்கொண்டே இருக்க வேண்டும் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும்.

இதற்கு முயற்சி செய்த அதிரை தாருத் தஹ்ஹிதூக்கு என்னுடைய வாழ்த்துக்களும்,துஆக்களும்.

Anonymous said...

இது ஒரு நல்ல விஷயம் நன்மைகள் வளரட்டும் தீமைகள் ஒழியட்டும். எந்த ஒரு நல்ல விஷயத்திற்கும் நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும். கந்தூரி கமிட்டிகள் மேலே எழுதிள்ள கடிதத்தை பார்த்தாவது திருந்தட்டும்.

எந்த ஓர் நல்ல செயல் செய்யும் போது எதிர்ப்பு வரத்தான் செய்யும் நாம் நன்மையை ஏவி தீமையை தடுப்போம். இந்த மாதிரியான விஷங்களுக்கு எல்லாம் முயற்சி செய்பவர்களுக்கு இறைவன் நல் அருள்புரிவானாகவும். எந்த ஒரு நல்ல விஷயங்கள் செய்யும் போது நான் பெரியவனா அல்லது நீ பெரியவனா என்றல்லாம் ஈகோ பார்க்காமல் ஒன்று பட்டு செயல்பட வேண்டும். அல்லாஹ் திருமறை குர் ஆனிலும்,ஹதீஸ்களிலும் கூறியிருக்கிறான் நன்மையை ஏவி தீமையை தடுப்பீர்களாக என்று.

நமதூரில் ஆலிம்கள் கந்தூரி எடுப்பவர்களுக்கு எதிராக பயானில் கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதை யாரும் காது கொடுத்து கேட்பதில்லை. நல்ல விஷயங்களுக்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும் அதை நாம் மெது மெதுவாக கையாள வேண்டும். எடுத்தோம்,கவுத்தினோம் என்றல்லாம் இல்லாமல் முயற்சி செய்துக்கொண்டே இருக்க வேண்டும் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும்.

இதற்கு முயற்சி செய்த அதிரை தாருத் தஹ்ஹிதூக்கு என்னுடைய வாழ்த்துக்களும்,துஆக்களும்.

Unknown said...

Assalamu Alaikkum,

//Will you please cite out here those words lead to aggressive approach?//

Dear brother Mr. Jameel,

Aggressiveness is not in the words, but in the approach I meant. My observation of the brother's legal approach rather than persuation in this matter is aggressive. In response the brothers in Kandoori Committee would approach the same legal ways to resume the Kandoori. Hence it would be inffective and not result oriented, instead it my lead to conflicts between us(supporters and non supporters all are community people of Adirampattinam).

The people still involved in Kandoori are not aware that they are doing wrong. Thats why they are doing even now. I hope you understand where the real change is necessary. Their core beliefs!!!.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

அஹ்மது ரிதுவான் - துபாய். said...

கந்தூரியை நிறுத்துவது அவ்வளவு ஈசி கிடையாது, நிறுத்த முயற்சியும் நடக்குது, நம்மில் ஒற்றுமை இல்லையென்றால், எந்த சக்தியைக் கொண்டும் எதையும் சாதிக்க முடியாது என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும், முதலில் ஊரை ஒற்றுமை படுத்தனும், நமக்குள் இருக்கும் போட்டி, பொறாமை, எல்லாம் நீங்கனும், நீங்கள் செய்யும் இந்த முயற்சி வெறும் வீண் தானே ஒழிய வேறு இல்லை. ஜமீல் காகா அவர்களே இதை நீங்கள் முதலில் உங்கள் தெருவில் ஆரம்பிக்க வேண்டியதை விட்டுட்டு இங்கு வந்து ஏன்?

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

தகவலுக்கும் நன்றி.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Unknown said...

ஜமீல் சொன்னது…
Dear Br.Ahmed Ameen,

Assalamu alaikkum.

"Will you please cite out here those words lead to aggressive approach?"

Can you or Could you, would be nice

Unknown said...

Ahamed Ameen சொன்னது…
Assalamu Alaikkum,


"Aggressiveness is not in the words,"

Its in the words too,

hope you know the difference between Will you and could you

regards

Shameed said...
This comment has been removed by the author.
Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்

நன்மையை ஏவி தீமையை த்டுப்பது நல்ல முஃமீன்களின் கடமை என்பதை உணர்ந்து,கந்தூரி என்னும் தீமையை ஒழிக்க, அதிரை தாருத் தவ்ஹீத் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது.தூய முயற்சிக்கு அல்லாஹ் நற்கூலி கொடுப்பான்.

மரணித்த பெரியோர்கள் பெயரால் பல வருடங்களாக நடைபெற்று வரும் கந்தூரி முஸ்லிம்களின் புனித திருவிழா என்று தவறாக விளங்கிய ஒட்டு அரசியல்வாதிகள் கந்தூரிகளில் கலந்து கொள்வதும்,கபுருக்கு பொன்னாடை போர்த்துவதும், அதில் பூசுவதற்கு அரசு சார்பில் சந்தனக்கட்டை இலவசமாக வழங்கி வரும் இவர்களிடம் கந்தூரியை முழுமையாக தடை செய்வார்கள் என்று எதிர்ப்பாக்க முடியாது.அரசு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டலாம்.

கந்தூரி என்னும் வழிகேட்டினை நடத்தி வரும் கந்தூரி கமிட்டியினருக்கு சத்திய மார்க்கத்தை எடுத்து சொல்லி அவர்கள் மனம் திருந்தி அத்தீமையிலிருந்து விலக செய்யும் பெரும் பொறுப்பு உலமாக்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் அவர்களைதான் ஆலிம்சா,மெளலானா என்று மதிக்கிறார்கள். அதிரை உலமாக்கள் சபை தலைவர் உட்பட சில மெளலவிகள் கந்தூரியை ஆதரிப்பவர்களாகவும் அதில் பாத்திஹா ஓதி தொடங்கி வைப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
நம்மூரின் பழமையான மதரஸா கந்தூரியை ஆதரிக்கக் கூடியதாக இருக்கிறது.இக்கருத்தை மறுப்பவர்கள்,கந்தூரி 'ஹராம்' என்று ரஹ்மானியா மத்ரஸாவிலிருந்து "பத்வா" வாங்கி வலைத்தளங்களில் வெளியிடுவார்களா?

'தர்காவுக்கு செல்லும் வழி" என்று முச்சந்தியில் மலையாளத்தில் போர்டு வைக்கும் நிலைமை அதிரையில் ஏற்பட்டிருக்கிறது.

'கந்தூரி அனாச்சாரங்களை எதிர்க்கும் நல்ல இளம் உலமாக்கள் நம்மூரில் இருக்கிறார்கள்.அவர்கள் உலமாக்கள் சபையில் கந்தூரியை ஆதரிக்கும் ஆலிம்களுடன் கலந்துரையாடி சத்தியத்தை எடுத்து சொல்லி,கந்தூரி என்னும் தீமை ஹராம் என்று பத்வா கொடுக்க செய்ய்வேண்டும். அதற்கு உடன்படாவிட்டால் கந்தூரி ஆதரவாளர்களை அதிரை உலமாக்கள் சபையிலிருந்து நீக்க வேண்டும்.பொறுத்துக் கொண்டு அந்த சபையில் இருந்தால், தீமைக்கு துணை போவதாகும்.
அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்ச வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவரின் தூய முயற்சிகளுக்கும் வெற்றி அளிப்பானாக!

sabeer.abushahruk said...

brothers Ahmed Ameen, Canada Kader and Jameel kaka:

Would you mind if I interpret a bit on this aggression issues please?

According to hadheedh, if you happen to come across a sin you should FIRST try to stop that with your hand (which is very aggressive,in fact offensive); then with preaching as a SECOND ATTEMPT (polite a bit); and at least with your intention as the THIRD attempt (very very polite, almost equal to keeping quite,literally)

Now, although it has been permitted by hadheedh ADT did not try to STOP handhuri with their hands, but we call them aggressive. Secondly, they have narrated their efforts to meet the handhuri party many time but no use.

Poor ADT should do what else to stand in their principle? They were forced to approach legal authorities which is very very polite in my analysis.

Thanks for understanding.

(please note I am not a member yet in ADT)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு