Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இங்கே ட்விட்டுங்கள்...! 39

அதிரைநிருபர் பதிப்பகம் | May 21, 2013 | , , , , , , ,


ட்விட் (tweet) இதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று போஸ்டர் அடித்துச் சொல்ல வேண்டியதில்லை இரண்டு வார்த்தைகளில் தட்டிவிட்டாலே உலகைச் சுற்றிவரும் அதிவேக மற்றுமொரு வரம். தற்போது நடந்து வரும் ஐ.பி.எல்.மேட்சில் டிவிட் கவுண்ட் போட்டுக் காட்டும்போது நமதூரில் இருந்தும் இல்லாமல் இருக்கும் மின்சாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மீட்டரில் ஓடும் வேகத்திற்கு டிவிட்டுகள் வினாடிக்கு வினாடி எகிரிக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிரம்மை.

அந்த அளவுக்கு பிரம்மையெல்லாம் இங்கே கொடுக்காவிட்டாலும் இது போல நீங்களும் ட்விட்டுங்களேன்.

ஏர் லங்க்கா விமானத்தில் பணிபுரிய ஏர் ஹோஸ்ட்டஸ்கள் தேவை. சித்தாளாகவோ ரோட்டில் தார் ஊற்றும் வேலையிலோ முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மலேசியாவை விசிட் செய்யும் ட்டூரிஸ்ட்களுக்கும் முதற் தகுதியா ’24 மணி நேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்’ சக்தி மேன்டேட்டரி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேநீர் உலகப் பிரசித்தி பெற்றது, மலிவானது.  இருப்பினும் ஒரு கப் ட்டீ 130 ரூபாய்ங்கோ.

கர்நாடகாவில் பாரதிய ஜனதாவின் படுதோல்விக்குக் காரணம் உட்கட்சி சண்டை என்பது அபாண்டம்; அம்பூட்டும் வெளியே தெரிகிற மாதிரியே ரணகளப் பட்டதை நாடு அறியும்.

ஜெயிப்பதற்கான எந்த முகாந்திரமுமின்றித் தடுமாறிய காங்கிரஸை கர்நாடகாவில் வெற்றியடைய வைத்த பாரதிய ஜனதாவுக்கு நன்றி பாராட்டும் விழாவை காங்கிரஸ் எடுக்கும்.

ராஜஸ்தான் ராயலிடம் சென்னை சூப்பர் கிங் தோற்றதற்குக் காரணம், ‘பந்து பேட்டுக்கு வராததே” என்று டோனி விளக்கம்.

தீவிரவாதிகள் பிரமுகர்களாக்கும் சம்பவம், படிப்பது இரமாயணம் இடிப்பது பாபரி மஸ்ஜித் என்பது போல்தான் இருக்கிறது !

சமீபத்தில் (ஜெ)அம்மா போட்ட லிஸ்டில் மரம் வெட்டிய டாக்டருக்கு நிறைய மருந்துகள் ரெடியாகிக் கொண்டிருப்பதாக சொன்னார் !

எதிர்ப்பது நீயாக இருப்பதால்தான் நீ எதிர்ப்பதையெல்லாம் எதிர்க்கிறோம் என்ற கொள்கை முடிவும் அதிரைக்கு மட்டும் விதிவிலக்கா என்ன ?

அப்பாவியான தன்னை ஐ பி எல் சூதாட்டத்தில் தன் நண்பன்தான் ஈடுபடுத்தினான். அவனிடம் டூ விட்டுவிடுகிறேன். என்னை விட்டுவிடுங்கள் – ஸ்ரி சாந்த்.

இனி நீங்களும் ட்விட்டலாம் !

அபூசாஹ்ரூக் - அபூஇப்ராஹீம்

39 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இது அதிரையின் ட்விட்டர்!

கந்தூரி கமிட்டி நஜாத் காரர்களை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இஸ்லாத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறது.

நஜாத் காரங்களை சிறப்பாக எதிர்க்க இப்ப புதிய ட்ரென்டு மொவ்லத்து ஓதுவதும் தர்காவில் விழா நடத்துவதுமாக உள்ளது.

தக்வா பள்ளியில் ஆலிமுக்கு மைக்கு கொடுக்காமே அதிகாரம் உண்டு என்ற போர்வையில் இஸ்லாத்துக்கு எதிராக சின்னப்புள்ளெ வெளையாட்டு நடந்து கொண்டிருக்கு.

ஆக புடிக்காதவங்களெ எதிர்க்க மார்க்கத்தை பார்ப்பதில்லை. எதிர்களை எரிச்சலூட்டனும் இதுவே அறிந்தும் அறியாதவராய் நடிக்கும் அதிரைக்காரங்க சிலரின் போக்காக உள்ளது.

ZAKIR HUSSAIN said...

டி வி யில் வரும் சீரியல்களில் பெண்கள் அழுவதும், ஆண்கள் திருவாலித்தனம் செய்வது நின்ற அன்றைக்கு உலகத்தின் இறுதி நாள் அறிவிக்கப்பட்டு இருக்கும்.

ZAKIR HUSSAIN said...

நான் சொன்ன "ஜோக்' கேட்டு எல்லோரும் சிரிக்கும்போது என் மனைவி மட்டும் எப்படி ராமராஜன் மாதிரி முகத்தில் ஒரு ரியாக்சனும் இல்லாமல் இருக்க முடிகிறது. -

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

முக்கியமான ட்விடட்ர் செய்தி.

இன்றோடு காட்டுதர்கா கந்தூரி ஹத்தம். இன்னும் 193 நாளில் மறுபடி கடற்கரை தர்கா சமாதியில் எதுவுமே நடக்காமல் அதிரை மனம் மாற இன்றிலிருந்தே தீவிர முயற்சி செய்வோம்.

ரஜப் பிறை 10 /1434

ZAKIR HUSSAIN said...

ஆனந்தவிகடனில் ரசித்த ட்விட்:

இன்றைக்கும் தோசைதானா என்று கேட்டது தப்பா?..இந்த உப்புமாவில்தான் தண்டிக்கனுமா?

ZAKIR HUSSAIN said...

டாக்டருங்க மட்டும் ஏன் Practicing என்று சொல்கிறார்கள். பயிற்சியில் தவறு சகஜம்தானே என்று தப்பிக்க

ZAKIR HUSSAIN said...

நகைக்கடையில்[ என் மனைவிக்கு] வில்லனாக தெரிவது நான்..நான் மட்டுமே அன்றி வேறு யாருமில்லை.

ZAKIR HUSSAIN said...

ஒரு வீட்டில் சாப்பிடும் நமக்கு மட்டும் ஏன் இத்தனை வயிற்றுப்பிரச்சினை...அதற்கு மருந்து சாப்பிடலாம் என்கிறீர்களா.....

மோட்டிவேசன்: பிச்சைக்காரனைப்பார்....வயிறு இனிமேல் பிரச்சனையே செய்யது.

ZAKIR HUSSAIN said...

பாடல்: "உலகம் சமநிலை பெற வேண்டும்...உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்"

" உங்க வீட்டு டாய்லெட் அடைச்சிக்கிட்டா யாரை சார் கூப்பிடுவீங்க"

ZAKIR HUSSAIN said...

கல்லூரி அட்மிசனில் லஞ்சம் கொடுத்து சேரும் மாணவனை லஞ்சம் தவறு என்று ப்ரைன்வாஸ் செய்யமுடியும்னு நினைக்கிறீங்களா?

ZAKIR HUSSAIN said...

கல்யாணம் ஆன நேரத்தில் தூரத்தில் நடந்து வரும் மனைவி எப்படி பல வருடம் ஆன பிறகு பக்கத்தில் நடந்து வந்தால் கூட கண்ணுக்கு தெரிவதில்லை.

Shameed said...

ஃபேஸ் புக்கில் வரும் நிறைய பேருக்கு புக்குத்தான் இருக்கே தவிர ஃபேஸ் இல்லை

Yasir said...

Power of Nature
http://www.bbc.co.uk/news/world-us-canada-22608754

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இந்தியகாட்டில் புலிகள் எண்ணிக்கை குறைவதால், வைகோ கவலை!

crown said...

அபுஇபு(எடிட்டராக்கா)வின் ஆக்கங்களை யார் எடிட் செய்வது?????

Unknown said...

எனக்கு ட்விட்ட யாருமே பழக்கித்தரலே
அதனாலே , சபீரோடவும் "டு"
இந்த ட் வீடரோடவும் "டு "

அதுசரி,
பின்னூட்டம் பூரா ஒரே ஜாகிர் படமாவே இருக்குது
இன்று பூரா டிவிட்டியே நேரம் போய் இருக்குமே.

ZAKIR HUSSAIN said...

காதராக்கா...யான் இப்டி ட்விட்டையும் பின்னூட்டம்னு நம்பி இப்படி அப்ரானியா ஈக்கிரிய...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

தமிழகத்தில் மயில்கள் வேட்டையாடப்பட்டு அழிந்து வருவதால் வாகனத்தட்டுப்பாடு வருங்காலத்தில் வந்து விடுமோ என அறுபடை முருகன் கவலை.

அதிரைக்கும், மதுரைக்கும் என்ன வித்தியாசம்? அதிரை "அ"வில் ஆரம்பிக்கிறது மதுரை "ம"வில் ஆரம்பிக்கிறது.

வெயில் கால வறட்சியில் சந்தோசப்படும் ஒரே சங்கம் "கடல் உப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்".

தமிழக மின்வெட்டால் ச‌ந்தோச‌ப்ப‌டும் ச‌ங்க‌ம் "த‌மிழ்நாடு மெழுகுவ‌ர்த்தி உற்ப‌த்தியாள‌ர்க‌ள் ச‌ங்க‌ம்".

எல்லோரையும் மரியாதையாக அழைக்கும் நபர் ஒருவர் தன் வீட்டிற்குள் புகுந்த திருடனைக்கூட திருடர் என்று தான் அழைப்பாராம்.

த‌மிழ‌க‌த்தில் "அவ‌தி" கேர‌ள‌த்தில் கொண்டாட்ட‌ம் (அவ‌தி-விடுமுறை).

க‌ந்துரியால் ந‌ட‌க்கும் அவ‌ல‌ங்க‌ளால் அந்த அவுலியாக்க‌ளே எந்திரித்து வ‌ந்துவிட‌ப்போகிறார்க‌ள்???

வெறும் இருப‌து ல‌ட்ச‌ங்க‌ளுக்காக‌ ப‌த‌ய‌த்துப‌ட்டுப்போன‌ சிரிசாந்த்.

Yasir said...

மலேசியாவில் இன்று அடைமழையாம்..ஜாஹிர் காக்கா ஆபிஸ் போகாம அதிரைநிருபரை அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றார்களாம்

Yasir said...

மலேசியாவில் இன்று அடைமழையாம்..ஜாஹிர் காக்கா ஆபிஸ் போகாம அதிரைநிருபரை அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றார்களாம்

Yasir said...

கமெண்டஸ் -நான் ஒன்னு சொன்னா இரண்டாக போகும் மர்மம் என்ன.....//”ப‌த‌ய‌த்துப‌ட்டுப்போன‌”// சகோ நெய்னா நிகர் நெய்னாதான்

Unknown said...

/காதராக்கா...யான் இப்டி ட்விட்டையும் பின்னூட்டம்னு நம்பி இப்படி அப்ரானியா ஈக்கிரிய//

ஏன் அதிரை அடுப்பங்கரை தமிழுக்கு திடீரென்று இறங்கிட்டியே, ட்விட்டுங்கோ
வேணாமென்று சொல்லவில்லை. வலைதளத்தை பொருத்தவரை , முதலில் வந்ததுதான் ட்விட்டர் . மற்றதெல்லாம் ( அஹது ட்விட்டராக இருந்தாலும் அது பின்னூட்டமே) .

அது சரி, நாங்க உங்களுக்கு காக்காவா. (அதோ சொல்லிட்டு போகட்டும்.)

உன் தமிழை கேட்டவுடன், நீ காதிர் முஹைதீன் மேல் நிலைப்பள்ளியில் , நாடகத்தில் , "குறவன்" வேசம் போட்டது ஞாபாகத்துக்கு வந்துருச்சு.

Unknown said...

இஸ்லாத்தில் இல்லாத சட்டம்,இஸ்லாத்தின் பெயரில் இஸ்லாமிய புத்தகங்களில் (மத்ஹபு) இருக்கின்றது தெரியுமா ?

அதாவது இருவர் ஒரு வீட்டுக்குத்திருடச்சென்றால், ஒருவர் வீட்டின் உள்ளே இருந்துகொண்டு , அங்குள்ள பொருள்களை எடுத்து வெளியில் காத்திருப்பவனிடம் கொடுத்தால். இருவருக்குமே திருட்டுக்குற்றம் சுமத்தப்படாது.

ஏன் தெரியுமா ?

உள்ளே சென்றவன் வெளியில் பொருளை எடுத்து வரவில்லை
வெளியில் நின்றவனோ உள்ளே இருந்து பொருளை எடுக்கவில்லை.

"இது எப்படி இருக்கு"

Meerashah Rafia said...

எடிடர் மாமா, ஒரு விஷயத்தை சொல்லவும், செய்யவும் மறந்துபுட்டியோலே!!
ட்விட்டரில் 140 எழுத்துக்களுக்கு மேல் எழுத முடியாது..(உங்களின் 9 ட்விட்டுகளில் 6 சரி, 3 தவறு :).

அதனாலையோ என்னவோ, பின்னூட்ட சகோக்களும் ஃபேஸ்புக் என்று நினைத்து வழக்கம்போல் பேஸா பின்னி எடுக்கின்றார்கள்..

Ooops!!Am I did that again.Hope so.I too forgot to tweet to editor in 140 characters.OMG..Better luck next time..நான் என்னை சொல்லிகிட்டேன்..(140 Char ends)

sabeer.abushahruk said...

//உன் தமிழை கேட்டவுடன், நீ காதிர் முஹைதீன் மேல் நிலைப்பள்ளியில் , நாடகத்தில் , "குறவன்" வேசம் போட்டது ஞாபாகத்துக்கு வந்துருச்சு.//

ஹாஹ்ஹா ஹா

காதரு, அன்னிக்கு அவன் கொஞ்சம்கூட மேக்கப் போடல. அது வேஷம் இல்ல. ஒரிஜினல்.

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
Unknown said...

//காதரு, அன்னிக்கு அவன் கொஞ்சம்கூட மேக்கப் போடல. அது வேஷம் இல்ல. ஒரிஜினல்.//

ஹாஹ்ஹா ஹாஹாஹ்ஹா ஹாஹாஹ்ஹா ஹாஹாஹ்ஹா ஹா
ஹாஹ்ஹா ஹாஹாஹ்ஹா ஹாஹாஹ்ஹா ஹாஹாஹ்ஹா ஹா

ZAKIR HUSSAIN said...

//உன் தமிழை கேட்டவுடன், நீ காதிர் முஹைதீன் மேல் நிலைப்பள்ளியில் , நாடகத்தில் , "குறவன்" வேசம் போட்டது ஞாபாகத்துக்கு வந்துருச்சு.//

ஹாஹ்ஹா ஹா

காதரு, அன்னிக்கு அவன் கொஞ்சம்கூட மேக்கப் போடல. அது வேஷம் இல்ல. ஒரிஜினல்.

பாஸ் நான் இப்போ கூட அப்படித்தான் இருக்கேன்னு வீட்லெ சொல்லும்போதே............. உங்க கமென்ட்....என்னே ஒரு புத்திசாலித்தனம்...



ZAKIR HUSSAIN said...

//மலேசியாவில் இன்று அடைமழையாம்..ஜாஹிர் காக்கா ஆபிஸ் போகாம அதிரைநிருபரை அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றார்களாம் //

இன்னிக்கு உறுப்படியான அப்பாயின்ட்மென்ட் ஒன்னும் இல்லே...மற்றபடி இங்கும் வெயில்தான். சமீபத்தில் தோஹாவிலிருந்து வந்த நூராணி மலேசியாவில் பெய்யும் மழையை பார்த்து திருஷ்டி போட்டுட்டாப்லெ.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அபுஇபு(எடிட்டராக்கா)வின் ஆக்கங்களை யார் எடிட் செய்வது?????//

கிரவுனு !
கண்ட்ரோல் சி மற்றும் கண்ட்ரோல் வி ஆபரேட்டருக்க்கு எடிட்டை கிளிக் செய்யாமல் முடியாதாமே !

Unknown said...

Where about in Malaysia you from Br Zakir?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எடிடர் மாமா, ஒரு விஷயத்தை சொல்லவும், செய்யவும் மறந்துபுட்டியோலே!!

ட்விட்டரில் 140 எழுத்துக்களுக்கு மேல் எழுத முடியாது..(உங்களின் 9 ட்விட்டுகளில் 6 சரி, 3 தவறு :). //

மருமொவன...!

ஆங்கிலத்தில் 24 எழுத்துக்கள்தான் உள்ளது என்று கொடி தூக்கவும்.... தமிழில் 247 எழுத்துக்கள் இருக்கிறதே என்று கொடி தூக்கவும்... வாய்ப்புகளிரு்ந்ததால்....

140 மேட்டரை மறைச்சுடலாம் ! :)

sabeer.abushahruk said...

ஜாயிரு, கலக்கல் ட்விட்டர்ஸ்! பதிவை மிஞ்சிடிச்சு.

தமிழர்களே தமிழர்களே... என்னைத் தூக்கிக் கூடங்குளம் அனு உலையில் போட்டாலும் கெமிக்கல் மாஸ்க்காகி தமிழர்களைக் காப்பாற்றுவேன் டிகம்ப்போஸ்ஸாகிவிடமாட்டென்.

Thameem said...

உலகத்துலேயே அதிகமா வலிய தாங்கக்கூடிய சக்தி நாம முகம் பாக்குற கண்ணாடிக்குத்தான் இருக்கு!!

ZAEISA said...

காசு வரணுமா....?கட்டு கல்லூரி......இல்ல...சமாதி.அதுலே டொனேஷன் இதுலே..உண்டியல்...

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

இது என்னுடைய ட்விட்

- நேற்று மேலதெருவில் ஒரு மைய்யத்தை வைத்துக்கொண்டு மிக அதிக சவூண்டுடன் ஆடல்,பாடல்களுடன் கந்தூரி என்னும் திருவிழா நடைபெற்றது

அதில் பெரும் வருத்தக்குரிய விஷயம் என்னவெனில் இரவு தேர் எடுக்கும் நேரத்தில் சுமார் 30-45 நிமிடம் இடைவிடாது வானவேடிக்கை நிறைவேற்றினர் இவர்களை அல்லாஹ் தான் நேர்வழி படுத்தணும்.

ZAKIR HUSSAIN said...

To Bro Abu Ameeza

Where about in Malaysia you from Br Zakir?

= Kuala Lumpur

அப்துல்மாலிக் said...

பெட்டு கட்டியாடும் பிளேயர்களுக்கு ஸ்பெஷலா பெட்டுரத்னா என்ற விருதை இந்தியரசு கொடுத்தா என்னே...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு