அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்மையில் இந்திய ஊடகங்கள், எப்படி எல்லாம் செய்திகளை ஊதிப் பெரிதாக்குகிறார்கள். அப்படி பெரிதாக்கப்பட்ட செய்திகள் பின்னர் உப்புக்கு சப்பானியானதும் அதைப் பற்றி அடுத்தடுத்து கண்டு கொள்ளாமல் போவதையும் நாம் கண்டுவரும் அன்றாட ஊடக காமெடியாகிவிட்டது.
இந்திய உளவுத்துறை செய்து வரும் தவறுகளை மூடி மறைத்து அப்பாவிகளுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக அவர்கள் செய்து வரும் அட்டூழியங்களை அப்படியே சாதகமாக்கி அப்பாவிகளுக்கு எதிராக செய்திகளை அள்ளி வீசுவதை முனைப்புடன் செய்து வருகிறார்கள் தரிகெட்ட இந்திய ஊடகக் காமெடியர்கள்.
இதற்கு முன்னர் நம் அதிரைநிருபரில் மீண்டும் முஸ்லிம்களைக் குறிவைக்கும் காவித்துறைகள்! http://adirainirubar.blogspot.ae/2013/03/blog-post_121.html என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். இந்தியாவில் இந்த வருடம் நடைபெற்ற மிகப்பெரிய ஜனநாயக படுகொலை அப்ஸல் குருவின் தூக்கு தண்டனை மூலம் அரங்கேறியது. அப்சல் குருவுக்கு முறையான சட்ட உதவி செய்யப்படாமலேயே அவருக்கு அநீதியிழைக்கப்பட்டு தூக்கு தண்டனையை அவசரமாக வழங்கப்பட்டது.
ஒரு சில முஸ்லீம் தலைவர்கள் மட்டுமே இதனை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்கள். பாராளுமன்ற குண்டு வெடிப்பில் தவறாக கைது செய்யப்பட்ட அப்சல் குருவை, சித்திரவதை செய்து அவர் செய்யாத தவறை ஒப்புக்கொள்ள வைத்து, தொலைக்காட்சிக்கு பிரத்யோக பேட்டி கொடுக்க அனுமதித்து, கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் தூக்கு தண்டனை என்ற பெயரில் ஒரு கொலை செய்தது.
இந்திய உளவுத் துறையும், ஊடகத்துறையும், காவல்துறையிடம் உள்ள குற்றம் சாட்டப்பட்டவரை தொலைக் காட்சி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து பேட்டி கொடுக்க எந்த சட்டத்தில் அனுமதியுள்ளது? அப்சல் குருவுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் பெரிய அளவில் செய்திகளை பதிக்கவில்லை மேலும் பார்க்க: http://adirainirubar.blogspot.ae/2013/02/blog-post_16.html - http://www.inneram.com/opinion/politics/afzal-guru-political-murder-9037.html
அதிரைச் சகோதரர் தமீம் அன்சாரியை சந்தேகத்தின் பேரில் சென்ற வருடம் கைது செய்த தமிழ்நாடு காவல் துறை, அவர் மீது சம்பந்தமே இன்றி இல்லாத பொல்லாத அவதூறு வழக்குகளை போட்டு தேசிய மற்றும் தமிழ்நாட்டு ஊடகங்களில் பெரிய அளவில் பீற்றிக் கொண்டார்கள், ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் அவர் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்ட அப்பட்டமான தவறு என்று தீர்பளித்தது. ஆனால் இந்த செய்தியை எந்த ஒரு தேசிய ஊடகமும் வெளியிடவில்லை. ஒரிரு தமிழ் செய்தி ஊடகங்கள் மட்டுமே இந்த செய்தியை வெளியிட்டார்கள் மற்ற ஊடகங்கள் எதுவுமே இதனைக் கண்டு கொள்ளவே இல்லை. பார்க்க: http://www.inneram.com/news/tamilnadu-news/thamim-ansari-released-10507.html.
கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி காஷ்மீரை சேர்ந்தவர் செய்யது லியாக்கத் ஷா என்பரை டில்லி போலீஸார் உத்தர்பிரதேசத்தில் கைது செய்தார்கள். இவரிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்று தேசிய ஊடகங்கள் வழக்கம் போல் பிதற்றிக் கொண்டார்கள். இந்தியரான அந்த நபர் ஜம்மூ கஷ்மீர் மாநில அரசின் அனுமதியுடன் பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு தன்னுடைய குடும்பத்துடன் வாழ வந்துள்ளது தெரியவந்தது. நேற்று டில்லி கோர்ட்டில் அவருக்கும் ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. செய்யது லியாக்கத் ஷா ஜம்மு கஷ்மீர் அரசின் அனுமதியுடன் இந்தியா வந்துள்ளது நிரூபனமானதுடன், அவர் எந்த ஒரு ஆயுதமும் கொண்டு வந்த்தற்கான ஆதாரமும் இல்லை என்பதும் நிரூபனமானது. இந்த செய்தியையும் தேசிய ஊடகங்கள் 30 வினாடி செய்தியாகவே ஒலி ஒளிப்பரப்பியது. பார்க்க: http://www.ndtv.com/article/india/liyaqat-shah-suspected-hizbul-militant-granted-bail-by-delhi-court-368015?pfrom=home-india
இதுபோல் பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக அப்பாவி முஸ்லீம்களை பெங்குளூரு காவி காவல்துறை கிச்சான் புகாரி போன்ற 11 சகோதரர்களை கோவையில் கைது செய்துள்ளது. இந்த செய்தியை தமிழ் மற்றும் தேசிய ஊடகங்கள் பெரும் பரபரப்புடன் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு தங்களின் வயிற்று பிழைப்பை தேடிக் கொண்டார்கள். கைது செய்யப்பட்ட சகோதரர்கள் 11 பேர் மீது இதுவரை எந்த ஒரு தகுந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில், நேற்று முன் தினம் கோவையில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்ற போலீஸார், அவர்களே கொண்டு வந்த வெடிபொருட்களைக் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் வைத்துவிட்டு, அதை அங்கு கைப்பற்றியதாக ஊடகங்களுக்கு செய்தியை வெளியிட்டு தங்களின் காவிக் களாவானித்தனத்தை அரங்கேற்றியுள்ளார்கள்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சகோதரர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று இந்திய இறையான்மையின் ஆனிவேரான நீதிமன்றங்களின் தெள்ளத் தெளிவான தீர்ப்பு வரும் இன்ஷா அல்லாஹ். வழக்கம் போல் தமிழ் மற்றும் தேசிய செய்தி ஊடகங்கள் அந்த செய்திகளை நிச்சயம் வெளியிட மாட்டார்கள்.
ஊடக காமெடித் தீவிரவாதம் முஸ்லீகளுக்கு எதிராக காவல்துறை உதவியுடன் நடைபெற்று வரும் இந்த சூழலில். கிரிக்கெட் விளையாட்டில் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக கடந்த இரண்டு மூன்று தினங்களாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்திய கிரிக்கெட் வீரார்கள் பற்றிய செய்தியை இந்திய ஊடகங்கள் தங்களின் வயிற்று பிழைப்புக்காக வெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இலஞ்சம் என்பது இந்தியாவில் 24 மணிநேரம் நடைபெரும் ஒரு சாதாரன தினசரிக் குற்றம் (செய்தி வெளியிடும் கயவர்களே ஒப்புக் கொண்டது). இதற்கென்று ஒரு அடாவடித்தனமான முக்கியத்துவம் கொடுத்து ஒரு புறம் அந்த விளையாட்டு வீரர்களுக்கு அனுதாபமும் (குறிப்பாக மலையாள ஊடகங்கள்), இன்னொரு புறம் டில்லி காவல்துறையின் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து 24 மணிநேரமும் ஒரு பரபரப்பு சூழலையும் ஏற்படுத்தி வருகிறார்கள் இந்த கேடுகெட்ட இந்திய ஊடகங்கள்.
இறுதியாக இவை அனைத்தையும் நாம் கூர்ந்து அவதானிக்கும் போது, ஊடகத்துறையும் ஊழல்(!!!)துறையை (இந்திய அரசால் உருவாக்கப்பட்ட புதிய துறை) வைத்தே தங்களின் பிழைப்புகளை நடத்தி வருகிறார்கள் என்ற சந்தேகமே வலுக்கிறது.
• காவல்துறை விசாரணை கைதி நேரடியாக தொலைக்காட்சி நிகழ்சியில் பேட்டி கொடுக்க எந்த சட்டத்தில் அனுமதியுள்ளது? பேட்டி எடுத்த தொலைக்காட்சி சேனல் நிச்சயம் (காவி)காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அப்படிச் செய்ய முடியும் என்பது தெளிவாகிறது.
• பொதுவாக முன்னனி தேசிய மற்றும் தமிழ் ஊடகங்களில் வரும் செய்திகளை கவணித்தால் தெரியும், அடிக்கடி ஒரு வார்த்தையை சொல்வார்கள், காவல்துறையிடமிருந்து கிடைத்த அதிக்காரப்பூர்வமான செய்தி. ஆங்கிலத்தில் ‘THROUGH OUR SOURCES IN THE POLICE’ இப்படி ‘sources’ என்று அடிக்கடி சொல்லும் இந்தச் செய்தி ஊடகங்களுக்கு ரகசியமாக செய்தி கொடுக்கும் காவல்துறை அதிகாரிகள் இலவச சேவை செய்யும் முட்டாளாக இருக்க மாட்டார்கள். காவல்துறை வட்டாரத்திலிருந்து செய்தி சேகரிக்கப்படுவதற்கு நிச்சயம் பெரும் தொகைகள் லஞ்சமாக கொடுக்கப்படுவதுடன். காவல்துறை அதிகாரிகளிடம் வரைவுக் கேள்வி பதில் நிகழ்ச்சி (Press-meet drama) ஒன்றை ஏற்பாடு செய்து அந்த அதிகாரியை தொலைக்காட்சியில் பிரபலப்படுத்தி விடுகிறார்கள்.
குண்டு வெடிப்புக்கு மட்டும் தீவிரவாதம் என்று பெயர் வைத்து விடுகிறார்கள், ஆனால் ஊடகங்கள் செய்யும் அநியாயங்களை யாருமே கண்டு கொள்வதில்லை. பெரும்பாலும் ஒரு தவறை கண்டுப்பிடிக்க, அது தொடர்பான செய்தி தன் ஊடகத்துக்கு மட்டுமே கிடைக்க பெரும் தொகைகளை லஞ்சமாக (அன்பளிப்பாக) வாரி இரைக்கும் அவல நிலையை இந்திய ஊடகங்கள் செய்து வருகிறார்கள். இந்த கேவலமான நிலையையும் ஊடக ஊழல் தீவிரவாதமே!
லஞ்சம் கொடுத்து செய்தி சேகரித்து வெளியிடும் செய்திச் சேனல்களுக்கும், அன்பளிப்புகள் கொடுத்து சாதகமான செய்திகள் வெளியிடத் தூண்டும் காவல் (ஊழல்) துறை மட்டுமல்ல, இன்னும் அமைப்புகள் தனிமனித துதிகளுக்காக செதிகள் வெளியிடும் நேர்மையற்ற ஊடகங்களுக்கும் லஞ்சத்தை பற்றி பேச எந்த ஒரு அருகைதையும் இல்லை.
ஊடக தீவிரவாதத்துக்கு எதிரான குரல் தொடரும்.. இன்ஷா அல்லாஹ்..
அதிரைநிருபர் பதிப்பகம்
26 Responses So Far:
முதலாவதாக மீடியாக்களின் தான்தோன்றித்தனமான் கொஞ்சம்கூட மனிதாபிமானமில்லாத எவன் வாழ்க்கை எக்கேடு கெட்டால் என்ன நமக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லாத, அது உண்மையோ பொய்யோ, செய்தி வந்தால் சரி . அதன் மூலம் நம் ஊடகத்தின் பெயர் உச்சரிக்கப்பட்டால் சரி என்ற போக்கில் செல்லும் ஊடகங்களுக்கு கடுமையான சட்டத்தின் மூலம் வரையறைக்கு உட்பட்டு அந்த ஊடகத்தின் பொய்ப்பிரச்ச்சாரத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நபருக்கு அவர் மனக்கஷ்ட்டம் , துயரம், அனைத்தையும் தாங்கிய ஒரு மனு மூலம் தண்டனை பெற்றுக்கொடுக்க சமூகம் முன் வரவேணும்.
இந்தத்தண்டனை, எதிர் காலத்தில் அதே மீடியா மூலம் செய்தி சேகரிக்கச்செல்லும் நிருபர் கூட்டம் கொஞ்சம் ஜாக்கிரதையாக செய்தி சேகரிக்க பாடம் கற்றுக்கொள்ளும்.
தீவிரவாதிக்கு எழுதப்படாத இலக்கணமே "முஸ்லிம்" குல்லா , தலையில் ஏதாவது ஒரு துணி அல்லது தொப்பி என்றாகிவிட்ட நிலையில் , இவர்களிடம்
மனிதாபிமானத்தை (முஸ்லிம்கள்) எதிர்பார்ப்பது, கல்லில் நார் உரிப்பதற்கு சமம்.
உண்மையான உறுதியான ஈமானுடன் செயல்படும்போது, எந்த கொம்பனும் நம்மை அசைத்துப்பார்த்துவிட முடியாது. அந்த வரலாற்றுச்சுவடுகளுக்கு சொந்தக்காரர்களாக நாம் இருக்கும்போது, இந்த மீடியாக்க எல்லாம் உண்மை மு'மினின் காலுக்கு கீழ்தான்.
எத்தனை பொய்ப்பிரச்சார மேகங்கள் நம்மை சூழ்ந்தாலும், ஒருநாள் கதிரவன் அவைகளை கிழித்துக்கொண்டு தன் ஒளியை தருவதுபோல், உண்மை மு'மினின் ஈமான் பிரகாசமாக இருக்கும் வரை , இந்த தீவிரவாதம் என்னும் பழிச்சொல் நம்மை ஒன்றும் செய்து விடாது.
உண்மையான ஒரிரைச்சிந்தனை உள்ள எவனும் இதற்கு அஞ்சாமல் நெஞ்சை நிமிர்த்தி நம்முடைய கடந்த கால வரலாறை கொஞ்சம் புரட்டி, அதில் இந்திய திரு நாட்டின் விடுதலைக்காக இந்திய முஸ்லிம்கள் எத்துணை பேர் உயிர், பொருள், வீடு , வாசல் அனைத்தையும் இழந்தார்கள் என்ற செய்தியை உண்மைத்தீவிர வாதி யார் இந்திய எல்லைக்குள் எந்த போர்வையில் அவர்கள் ஒளிந்து கொண்டு இருக்கின்றார்கள் என்று பிரகடனப்படுத்த ஆயத்தமாக வேண்டும்.
அல்லாஹ் இவை அனைத்தையும் செயல் படுத்திக்கட்ட ஒற்றுமை என்னும்
கையிறை நம் அனைவரையும் பற்றிப்பிடிக்க வைப்பானாக!
ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
அபு ஆசிப்.
//Mr.Yasir சொன்னது…
ஆங்கில பாட வகுப்புக்கு வராதவங்க நாளைக்கு ஹாஜி சாரை அவங்க ரூம்ல போய்ப்பார்க்கணுமாம்....:)//
பார்த்துட்டு தான் இங்கே வர்றேன்.
புடிக்காதவங்கள் அமைதியான முறையில் (கண்டுகிடாத மாதிரி நடிச்சு) வெளிநடப்பு செய்வது தப்பில்லே ,ன்னு சொன்னார். அதுனாலெ தான் வரலெ.
//Mr.sabeer... சொன்னது…
தோழன் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டும் வராமல் வீம்பு பண்ணும் ஹமீது(MHJக்)களுக்கு பார்ஸே…ல்://
சபீராக்கா அனுப்பி உட்ட பார்சல் நல்லா ஈந்துச்சு, ஆனால் டெலிவரி பண்ணுனவன் லேட் பண்ணிட்டான் அதனாலெ டேஸ்ட் கொஞ்ச கம்மி. இருந்தாலும் ஓகே நன்றி.
நாம் இந்த ஊடகக் கோமாளிகளுக்கு மறுமொழி, எதிர்க்குரல் கொடுக்க வேண்டுமெனில் நாமும் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும். அப்பொழுதுதான் பதிலடி கொடுத்து நியாயத்தை வெளி உலகுக்குச் சொல்ல முடியும்.
எம் ஹெச் ஜே,
ட்டீ இன்னும் வரல.
நாம் இந்த ஊடகக் கோமாளிகளுக்கு மறுமொழி, எதிர்க்குரல் கொடுக்க வேண்டுமெனில் நாமும் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும். அப்பொழுதுதான் பதிலடி கொடுத்து நியாயத்தை வெளி உலகுக்குச் சொல்ல முடியும்.
//நாம் இந்த ஊடகக் கோமாளிகளுக்கு மறுமொழி, எதிர்க்குரல் கொடுக்க வேண்டுமெனில் நாமும் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும். அப்பொழுதுதான் பதிலடி கொடுத்து நியாயத்தை வெளி உலகுக்குச் சொல்ல முடியும்...//
நிச்சயமாக காக்கா...
according sources என்று வாசகத்துடன் சொல்லப்படும் செய்திகளே ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்துகிறது. எல்லோரும் நடிக்கிறார்கள்.
லஞ்சத்தை கண்டுபிடிக்க, லஞ்சம் கொடுத்து செய்தி சேகரிக்கப்படுகிறது.
//Mr.Yasir சொன்னது…
ஆங்கில பாட வகுப்புக்கு வராதவங்க நாளைக்கு ஹாஜி சாரை அவங்க ரூம்ல போய்ப்பார்க்கணுமாம்....:)//
ஒரே இங்ளிஸ்லே பேசி பேசி ஒன்னும் வெலைங்கி தொலைய மாட்டேன்குது அவங்க ரூமுக்கு போனாலாவது தமிழ்லே பேசுவாரா ?(ரூம்லே தங்கி இருப்பவங்க பாவம் ) நான் ஹாஜி சாரை சொன்னேன்
//Mr.sabeer... சொன்னது…
தோழன் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டும் வராமல் வீம்பு பண்ணும் ஹமீது(MHJக்)களுக்கு பார்ஸே…ல்://
பார்சலில் வந்த சாப்பாடு நொந்து (நூலா )போச்சு
sabeer.abushahruk சொன்னது…
//நாம் இந்த ஊடகக் கோமாளிகளுக்கு மறுமொழி, எதிர்க்குரல் கொடுக்க வேண்டுமெனில் நாமும் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும். அப்பொழுதுதான் பதிலடி கொடுத்து நியாயத்தை வெளி உலகுக்குச் சொல்ல முடியும்.//
சரியா சொன்னிங்க நல்ல மொழி ஆற்றல் (ஆங்கிலம் )தெரிந்தவர்களை காஷ்மீர் பக்கமும் தமிழ் தெரிந்தவர்களை தமிழ் நாட்டுப்பக்கம் ஊடகத்துறையில் பனி அமர்த்தி நியாயத்தை வெளி உலகுக்குச் சொல்ல வேண்டும்
//Shameed சொன்னது…
Mr.Yasir சொன்னது…
ஆங்கில பாட வகுப்புக்கு வராதவங்க நாளைக்கு ஹாஜி சாரை அவங்க ரூம்ல போய்ப்பார்க்கணுமாம்....:)
ஒரே இங்ளிஸ்லே பேசி பேசி ஒன்னும் வெலைங்கி தொலைய மாட்டேன்குது அவங்க ரூமுக்கு போனாலாவது தமிழ்லே பேசுவாரா ?(ரூம்லே தங்கி இருப்பவங்க பாவம் ) நான் ஹாஜி சாரை சொன்னேன்//
சூப்பர், புரிஞ்சிருச்சு, சிரித்தேன்!
//Shameed சொன்னது…
sabeer.abushahruk சொன்னது…
சரியா சொன்னிங்க நல்ல மொழி ஆற்றல் (ஆங்கிலம் )தெரிந்தவர்களை காஷ்மீர் பக்கம் //
லேட்டா புரிஞ்சிச்சு! வேனாம் காக்கா உட்டுடுவோமே!
இந்திய மட்டை பந்து சங்கத்தின் முதலாளிகள்
ராசீவ் சுக்லா - காங்கிரசை சேர்ந்த வட நாட்டு பார்ப்பனன்
சீனிவாசன் - தமிழ்நாட்டை சேர்ந்த பார்ப்பனன்
நரேந்திர மோடி - குசராத்தை சேர்ந்த காவி வெறியர்
ரவி சாவந்த் -- மும்பையை சேர்ந்த பார்ப்பனன்
சோதிராதித்ய சிந்தியா - காங்கிரசு கட்சியை சேர்ந்த அரச குடும்பத்தவர்
அருண் செட்லீ - பாசக வை சேர்ந்த பார்ப்பனன்
சக்மோகன் டால்மியா - கொல்கத்தாவை சேர்ந்த பனியா
சஞ்சய் சக்டலே -- மும்பையை சேர்ந்த பார்ப்பனன்
இந்திய மட்டை பந்து விளையாட்டின் நிர்வாக அமைப்பு மற்றும் அதோடு தொடர்புடைய ஊடக வர்ணனையாளர்கள் மற்றும் விளம்பர விற்பன்னர்கள் என எல்லாவற்றிலும் பார்ப்பனிய கும்பல் தான் முற்றிலுமாக கடைபரப்பி இருக்கிறது
இப்ப சொல்லுங்க மட்டைபந்து விளையாட்டில் நடக்கிற சூதாட்டத்திற்கு யார் பொறுப்பு என்று ...
ஆனால் பார்ப்பனிய ஊடகங்கள் கூச்சமே இல்லாமல் இந்த சூதாட்டத்திற்கும் தாவுத் இப்ராகிம் தான் காரணம் என்று வயாகராவை சாப்பிட்ட உணர்ச்சி பெருக்கில் கூச்சலிடுகின்றன ...... ஐயரே! நீங்க பண்ணிய காவாலிதனத்திற்கு எதுக்கு வேலியில கிடக்குற ஓணான் மீது கல்லெடுத்து அடிக்கிறீங்க .
//நாம் இந்த ஊடகக் கோமாளிகளுக்கு மறுமொழி, எதிர்க்குரல் கொடுக்க வேண்டுமெனில் நாமும் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும். அப்பொழுதுதான் பதிலடி கொடுத்து நியாயத்தை வெளி உலகுக்குச் சொல்ல முடியும்.//
அண்மையில் வெளியான் பிளஸ் டூ தேர்வு முடிவுகளுக்குப் பிறகு ஜெர்னளிசம் போன்ற படிப்புகளை படிக்க தேர்வு செய்தவர்கள் நம்மில் எவ்வளவு பேர் இருக்குமென்று நினைக்கிறீர்கள். பெரும்பாலும் சைபர்தான்.
ஜெர்னலிசத்தில் [ இந்தியாவில் ] முஸ்லீம்கள் வளர மிகப்பெரிய தொகையை தொடர்ந்து செலவளிக்க வேண்டியிருக்கிறது.
விஸ்வரூபம் திரைப்படம் விசயத்தில் முஸ்லீம்கள் இருந்த ஒற்றுமையும் / போராட்ட குணமும் இதிலும் தேவை.
இல்லாவிட்டால் நிறைய அப்பாவி இளைஞர்கள் தண்டிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இஸ்லாமிய பத்திரிக்கைகள் இன்னும் கைலி விளம்பரத்தையும் , பிழிய பிழிய கண்னீராய் கொட்டும் சோகக்கதைகளையும் நம்பி இருக்கும் சூழலை விட்டு இன்னும் வெளியில் வந்ததாக தெரியவில்லை.
தாயத்து பார்ட்டிகளிடம் வாசகர்களின் கேள்விக்கு பதில் வாங்கிப்போடுவதும். நடைமுறைக்கு ஒத்துவராத அறிவுரைகளை இளைஞர்களுக்கு வழங்குவதையும் தவிர்த்தாலே இஸ்லாமியர்கள் ஜர்னலிசத்தில் முன்னேர முடியும்.
திடீர்ண்டு ஒரு கேள்வி : சமீபத்தில் பாமாகாவால் நடத்தப்பட்ட மரக்காணம் கலவரமும், அதற்கு பின் அதன் நிறுவனரின் கைதால் தமிழகத்தில் தீ வைத்து கொளுத்தப்பட்ட பஸ்களும், வாகன உடைப்புகளும், உயிர்ப்பலிகளும், பொருட்சேதங்களும், குடிசை எரிப்புகளும் எதேச்சையாக சிறுபாண்மை இஸ்லாமிய சமூகத்தினர்களால் எதிர்பாராமல் நடத்தப்பட்டிருந்தால் இதுவரை துப்பாக்கிச்சூட்டில் பலியான அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் எத்தனை பேர்? சந்தேகத்தின் பேரில் பிடித்து தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் எத்தனை பேர்? கடை உடைப்பு, வீடு எரிப்பு எத்தனை, எத்தனை?
சமீபத்தில் காமக்களியாட்டங்கள் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் கையும்,களவுமாக பிடிபட்ட சிரிசாந்த் என்னும் ஒரு கேரளக்கயவனுக்கு பதிலாக ஒரு முஸ்லிம் விளையாட்டு வீரன் மட்டும் இந்நேரம் பிடிபட்டிருப்பானேயானால் அவன் தான் உசாமாவின் வீட்டு மருமகன் என்ற ரேஞ்சுக்கு இந்திய காவி ஊடகங்கள் இந்நேரம் தன் கட்டுக்கதைகளை கச்சிதமாக அரங்கேற்றி இருக்காதா?
சந்தேகங்கள் தொடரும்......
//Shameed சொன்னது…
sabeer.abushahruk சொன்னது…
சரியா சொன்னிங்க நல்ல மொழி ஆற்றல் (ஆங்கிலம் )தெரிந்தவர்களை காஷ்மீர் பக்கம் //
லேட்டா புரிஞ்சிச்சு! வேனாம் காக்கா உட்டுடுவோமே!
எம் ஹெச் ஜே / ஹமீது,
இந்தத் தாய்மொழி தமிழ் பின்னூட்டம் ஒரு அட்சரம் புரியல. ப்ளீஸ் ஹெல்ப் மி.
இப்படிக்கு:
- கள்ளங்கபடமற்ற பச்சப்புள்ள
2007-ம் ஆண்டில் லக்னோ, ஃபாசியாபாத் ஆகிய நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் காலித் முஜாஹித். இவர் ஒரு 'ஆலிம்' பட்டம் பெற்ற மதரசா அரபி ஆசிரியர்.
கைது செய்யப்பட்டபோதே, அவர் ஒரு அப்பாவி என மக்கள் கொந்தளித்ததையடுத்து, அன்றைய முதலவர் மாயாவதி, நீதிபதி R .D . நிமேஷ் தலைமையில் (நிமேஷ் கமிஷன்) அமைத்து அதே வாரத்தில் உத்தரவிட்டார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு (2012 ஆகஸ்டில்) வெளியான நீதிபதி நிமேஷ் கமிஷன் அறிக்கையில், கைது செய்யப்பட்ட காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காசிமி ஆகிய இருவருமே நிரபராதிகள் என தெளிவான சான்றுகளுடன் சொல்லப்பட்டுள்ளதாகவே செய்திகளில் தெரிகிறது.
எனவேதான்... கமிஷன் அறிக்கை தரப்பட்டு ஏழு மாதம் ஆகியும்... 'அது எங்கே உள்ளது என்று தெரியவில்லை; கைக்கு வந்து சேரவில்லை' என்று உபி அரசு கடந்த வாரம் சொல்லியுள்ளது போல..! கொடுமை..!
இந்நிலையில்.. இந்த வழக்கு விசாரணையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சனிக்கிழமை இவர் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டார்.
பின்னர் கோர்ட்டில் இருந்து மீண்டும் லக்னோ சிறைக்கு அவரை அழைத்துச் சென்றபோது 'திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக' போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர், 'வரும் வழியிலேயே இறந்துவிட்டார்' என்று அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறிவிட்டனர்.
ஆக... இது ஒரு போலிஸ் கஸ்டடி மரணம்..!
இது என்கவுண்டராகவும் இருக்கலாம் என்று காலித் குடும்பத்தாரும் வக்கீலும் சந்தேகம் கொள்கிறார்கள். இது தொடர்பாக காலித் முஜாஹித்தின் உறவினர், ஜாஹீர் ஆலம் போலீஸில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் மாநில காவல் துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்பட 42 பேர் மீது கொலை, கொலைச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. முஜாஹித்தின் உறவினர்களின் வலியுறுத்தலை அடுத்து மாநில அரசு இந்த பரிந்துரையை அளித்துள்ளது.
பெற்றோருக்கு ஒரே மகனான 30 வயது காலித் முஜாஹித், கைது செய்யப்படுவதற்கு ஒரு வருடம் முன்பு தான் திருமணம் செய்து கொண்டார்.
ஒரு வருடம் மட்டுமே கணவருடன் வாழ்ந்த அவரது இளம் விதவை மனைவியின் நிலையோ மிகவும் பரிதாபமாக உள்ளது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
( முகமது ஆஷிக் அவர்கள் முகநூலில் இருந்து)
முஸ்லிம்கள் என்றால் வரிந்து கட்டிகொண்டு கட்டுக்கதைகளை எழுதி தள்ளும் பத்திரிக்கைதுறையை கட்டுப்படுத்த வேண்டுமென்றால்...நாமும் ஒரு ஒன்றுமையான,வலுவான ஒரு பத்திரிக்கை குழுவை ஏற்ப்படுத்தி ..நம் தரப்பு உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும்....இது காலத்தின் அவசியம் அவசரம்...இப்ப ஆரம்பித்தால் கூட அது தாமதம்தான்.....நாம் முன்வர வேண்டும்
// கள்ளங்கபடமற்ற பச்சப்புள்ள சொன்னது..
எம் ஹெச் ஜே / ஹமீது,
//சரியா சொன்னிங்க நல்ல மொழி ஆற்றல் (ஆங்கிலம் )தெரிந்தவர்களை காஷ்மீர் பக்கம்//
இந்தத் தாய்மொழி தமிழ் பின்னூட்டம் ஒரு அட்சரம் புரிய ல. ப்ளீஸ் ஹெல்ப் மி.//
ஆங்கிலம் நன்கு அறிந்த சபீர் காக்கா அவர்களை காஷ்மீருக்கு அனுப்பி அங்கு நடக்கும் ஊடக பயங்கர வாதத்தை களைய பாடுபட வேனும் என்கிறார்கள் என்பது இந்த பச்சபுள்ள புரிந்தது.
இப்படிக்கு:
கள்ளங்கபடமற்ற பச்சப்புள்ளயின் புள்ளெ
///ஆனால் பார்ப்பனிய ஊடகங்கள் கூச்சமே இல்லாமல் இந்த சூதாட்டத்திற்கும் தாவுத் இப்ராகிம் தான் காரணம் என்று வயாகராவை சாப்பிட்ட உணர்ச்சி பெருக்கில் கூச்சலிடுகின்றன ...... ஐயரே! நீங்க பண்ணிய காவாலிதனத்திற்கு எதுக்கு வேலியில கிடக்குற ஓணான் மீது கல்லெடுத்து அடிக்கிறீங்க ./
ஹா ஹா ஹா... அதானே அவர்கள் திரும்பிப் பார்த்தால் இந்த மட்டை ஐயருங்க இருக்கிற இடம் தெரியாம ஒளிந்து கொள்வாய்ங்க !
நம்மவூரு ஒரு மூத்தவங்களுக்கு ஆதங்கம், தமிழ் நாட்டிலேயிருந்து ஐயங்காரை விட்டா வேற ஆளே இல்லையா ப்ளேயருங்க ? அப்போ யாங்க விடிய விடிய அதிரையிலெல்லாம் கிரிக்கெட் நடத்துறாங்க ? தெருவுல பெரீரீரீரீரீரீரீரீரீரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயயய ஸ்கிரினெல்லாம் போட்டு தேசிய சேவையெல்லாம் செய்றாங்க !
இன்று அதிகாலை எதேச்சையாக தெரு முனையில் இருந்த ஒரு தள்ளுவண்டிக்கு அருகில் தினமலர் பேப்பர் வாசித்துக் கொண்டிருந்தார் ஒருவர் அதில் பக்கம் ஆறு அங்கே கண்ட செய்தி....
"கிரிக்கெட் சூதாட்ட கும்பலுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு? பிரசாந்த் பிடிபட்டால் அம்பலமாகும் !"
இந்த தலைப்பை போட்டு எங்கே வந்து முட்டுறானுங்க...
பெங்களூர் குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கும், ஐபிஎல் சூதாட்ட கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கியூ பிராஞ்ச் அதிகாரி(!!!????) ஒருவர் தெரிவித்தார்... இப்படி தொடங்கும் அந்த செய்தியில்...
பெங்களூர் பா.ஜ. அலுவலக்ம அருகில் கடந்த 17ம் தேதி குண்டு வெடித்த வழக்கில் கோவை, மேலப்பாளையம், மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் மேலப் பாளையத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து சில ஆவணங்களை கியூ பிராஞ்ச் போலிசார் கைப்பற்றினர். அதில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடப்பது குறித்த தகவல்கள் இருந்தன... இப்படி நீளும் செய்தியில்..
கியூபிராஞ்ச் போலிசார்தான் தீவிராவதிகளுக்கு தொடர்பு இருப்பதை அரசுக்கு முதன் முதலில் (!!!??) தெரியப்படுத்தியதாம்...
//கிரிக்கெட் சூதாட்டத்தில் கையும்,களவுமாக பிடிபட்ட சிரிசாந்த் என்னும் ஒரு கேரளக்கயவனுக்கு பதிலாக ஒரு முஸ்லிம் விளையாட்டு வீரன் மட்டும் இந்நேரம் பிடிபட்டிருப்பானேயானால் அவன் தான் உசாமாவின் வீட்டு மருமகன் என்ற ரேஞ்சுக்கு இந்திய காவி ஊடகங்கள் இந்நேரம் தன் கட்டுக்கதைகளை கச்சிதமாக அரங்கேற்றி இருக்காதா?// இரண்டு நாட்களுக்கு முன் நான் நினைத்ததை எழுதி இருக்கின்றீர்கள்
அதை சமையம் நம் முஸ்லிம் கிரிக்கெட் வீரராக இருந்திருந்தால் அல்கொய்தா தீவரவாதி என்றல்லாம் ஊடகங்களிலும்,செய்தித்தாள்களிலும் வெளியிட்டு இருந்திருப்பார்கள்.
இப்பொழுது சிரி சாந்த் லஞ்சம் வாங்கியிருப்பதை குற்றம் என்று கூட சொல்ல வில்லை. இன்னும் சரியான ஆதாரம் கிடைக்க வில்லை அப்படி சரியான ஆதாரம் கிடைத்தால் அவர்களுக்கு தண்டனை கொடுப்போம் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். அதை சமையம் நம் முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்த கிரிக்கெட் வீரர் லஞ்சம் வாங்கியிருந்தால் அவன் மிக பெரிய குற்ற வாலி அவனுக்கு அல்கொய்தாவில் மற்றும் அவன் தீவிரவாதி என்றல்லாம் பத்திரிகைகளில் வெளியிட பட்டியிருக்கும்.
எல்லாவற்றியிலும் சூதாட்டமாக போய் விட்டது கிரிக்கெட் ஒன்றில் மட்டும் தான் இல்லாமல் இருந்தாது இப்பொழுது அதிலும் வந்து விட்டது. எதில் தான் சூதாட்டம் இல்லாமல் இருக்கிறது அரசாங்கத்திற்கு இப்பொவல்லம் லஞ்சம் என்றாலே சகஜமாக போய் விட்டது.
கன்னத்தில் அறை வாங்கிய "நம்மோட" ஸ்ரீசாந்தன் வாங்கியதில் பகுதியை அளக்க வேண்டியவர்களுக்கு அளந்துவிட்டால் இந்த கேசில் வீசப்பட்ட ஊழல பந்து பவுண்டரி லைனில் கேட்சாகிவிடும்.
இ.அ.காக்கா சொல்வது போன்று நடக்கனும்...
இருந்தாலும் மலையாள தாரம் ஆவியோட பேசிகிட்டு இருந்திருப்பார் நம்ம ஸ்ரீசாந்த், மறு கன்னத்தையும் தடவமாட்டாய்ங்களானு இருந்திருக்கலாம் !
Assalamu Alalikkum
Every individual and organization(business for profit, non-profit) should have been moulded by good characters and attitudes basically.
Actually the religious frameworks are giving right directions for ethical living based on sound principles which primarily establishes justice for human living.
If the nature of basic characters and attitudes are evil dominated, honest religious practices become not feasible for them. So, unethical behaviour and activities can be prevalent among them.
(Not only in media but in all fields where there are human to human relationships).
May God Almighty show us the straight path and save us from evils.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
Post a Comment