Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கந்தூரிக் காதலர்கள் ஊரிலா வெளிநாட்டிலா ? - விவாதக்களம் ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | May 07, 2013 | , , ,


ஒரு சாராருக்கு (உண்மையச் சொல்வதென்றால்) சிறுபிராய காலங்களில் கந்தூரி என்று ஊரில் நடந்தால் அங்கே சென்று விட்டு திரும்பி வீட்டுக்குள் நுழைய குடல் நடுங்கும், அதிலும் தெருக்காரர்கள், பெரியவர்கள் யாரும் பார்த்து விட்டால் என்ன நடக்குமோ என்று கூனிக் குறுகிய காலம் அது.

மற்றொரு சாராருக்கு அந்தச் சிறுபிராயத்திலும் அவர்களின் குழந்தைகளின் குதூகலமும் அந்தக் கந்தூரியைச் சுற்றியே இருக்கும் அதில் வயது பேதமின்றி ஒரு சம்பிரதாயமாகவே சிரத்தை எடுத்து சென்று வருவர் அங்கே நடந்தேறும் அனைத்திலும் உற்சாகத்துடன் கலந்து கொள்வர்.

இருசாராருக்கும் நிரம்ப வித்தியாசம் இருப்பினும், முதல் ரகம் மார்க்கம் தடுத்திருக்கிறது என்று அறிந்திருந்தும் ஆவல் மிகுதியாலும் அங்கே காணக் கிடைக்கும் களியாட்டத்திற்காகவும் / விரிக்கப்பட்டிருக்கும் வலையில் பட்டும்படாமல் சிக்கிவிட்டு வருகிறார்கள். இரண்டாம் ரகம் மார்க்க தடுத்திருக்கிறது என்று முறையாக அறிந்திராதவர்களாகவும் தீமையென்று முறையாக எடுத்துச் சொல்லப்படாமல் அல்லது சொல்லியும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பவர்கள்.

இந்தக் கட்டங்களையும் தாண்டி, எதிர்ப்பாளர்கள் ஆதரவாளர்கள் என்று இருசாராராகி இருக்கிற இன்றைய காலகட்டத்தில், ஏவியவன் இருக்க அம்பை நோவும் காலமும் மலையேறி விட்டது என்று சொல்லும் அளவுக்கு கந்தூரிக் காதலர்களும், அதிலும் கள்ளக் காதலர்களும் தங்களது உலக ஆசைகளைத் திருப்தி படுத்தவும். அரசியல் ஆதாயம் தேடியும், பழிவாங்கும் களமாகவும் மாற்றி வருகின்றனர்.

இதில் உள்ளூர் வெளிநாடு என்ற பேதம் பார்க்கும் அளவுக்கு கந்தூரிக் காதலர்கள் மலிந்து விட்டார்கள் !

இப்போ சொல்லுங்க கந்தூரிக் காதலர்கள் உள்ளூரிலா / வெளிநாட்டிலா ?  

விவாதிக்கலாம் வாருங்கள் !

அதிரைநிருபர் பதிப்பகம்

18 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

உள்ளே / வெளியே.......

கந்தூரிக்கடையை பற்றிய முழுமையான‌ மார்க்க விழிப்புணர்வுடன் தானும் செல்லாமல் தன் குடும்பத்தினர்களையும், சிறுவர்களைக்கூட‌ அங்கு செல்லாமல் அன்றே தடுத்தார்களே அவர்களே உண்மையானவர்களாக, இஸ்லாமியப்பற்று மிக்கவர்களாக இருக்க முடியும்.

காரணம் இன்று எவ்வளவோ அது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மார்க்க மேடைகளிலும், ஊடகங்களிலும், இணைய, வலையதளங்களிலும், அன்றாட பயான்களிலும், ஜும்மா மேடைகளிலும் அடிக்கடி, நொடிக்குநொடி சிறப்பான முறையில் சிறு பிள்ளைக்கு கூட எளிதில் விளங்கும் வண்ணம் இன்றைய மார்க்க அறிஞர் பெருமக்களால் நல்ல முறையில் இஸ்லாமிய மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கப்படுகின்றன. அதனால் ஒரு நேரத்தில் காடுப்பள்ளி கந்தூரி வராதா? கடக்கரைப்பள்ளி கந்தூரி வராதா? அதனால் பள்ளி விடுமுறை வராதா? முட்டாசு திண்ங்கமாட்டோம்மா? முட்ட ரொட்டி உங்கமாட்டோம்மா? ஊக்குரி வாங்கி ஊத மாட்டோம்மா? அபிநயா நீக்ரோ பாய்ஸ் நடன நிகழ்ச்சி பார்த்து வரமாட்டோம்மா? என ஒரு காலத்தில் ஏங்கித்தவித்த நம்மில் எத்தனையோ பேர் ஓரள‌வுக்கு இன்று மார்க்க‌ தெளிவு அடைந்து இன்று அது பற்றி காரசாரமான விவாதங்கள் நடத்தி அதற்கு எதிராக கச்சல் கட்ட வைத்திருப்பது அல்லாஹ் நமக்கெல்லாம் செய்த நற்கிருபையாகும் என சொல்லி என் சிற்றுரையை முடித்துக்கொள்கிறேன்.

sabeer.abushahruk said...

ஏ உரூஸ் ஜோ ஹே, பில்குல் பந்த் கர்னா ச்சாயியே. இன்லோகோன்கோ அல்லாஹ்ஸே டர் நஹீஹே. ஆகிர்கா க்யால் நஹீ ஹே. சிர்ஃப் இஸ் துனியாகா க்யால்ஹே.

இஸ் ஷிர்க்ஸே மேரா பாய் பேகன்கோ பச்சாவ் யா அல்லாஹ்.

(தமிழ் இங்லீஷ் ரெண்டுலயும் சொல்லியாச்சு. கேட்கிறமாதிரி தெரியல. அதான் ஹிந்தியில...)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஐயய்யோ !! மலையாளத்திலும் சொல்லுங்க ஹாக்கா.... அதுலதான் போர்டு வச்சிருக்காய்ங்க !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த தடவை நடத்துறவங்களே தனாக முன் வந்து நீங்களெல்லாம் என்னத்த சொல்றது... நாங்களாகவே நிறுத்திட்டோம்னு கந்தூரி எதிர்ப்பு கமிட்டிக்கு ஷாக் கொடுக்கப் போறாங்க !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

குறிப்பாக வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒரு சிலர் கந்தூரிக்கு நிதி உதவி செய்கிறார்கள். இதில் வீம்புக்காகவும், கவ்ரவத்திற்காகவும் கொடுப்பவர்களே அதிகம்.

ஊரில் இருக்கும் நிறைய சகோதரர்கள் கந்தூரி தவறு தெரிந்திருந்தும், ஏதோ வழக்கம் போல் செய்கிறோம், இந்த வருடம் செய்யவில்லை என்றால் தங்களின் கவுரம் குறைந்துவிடும் என்றே இவைகளை தொடர்ந்து நடத்துகிறார்கள்.

கந்தூரியை முன்னின்று நடத்துபவரின் வீட்டை பார்த்தால் கந்தூரிக்கு எதிரானவர்களே அதிகம் இருப்பர்..

அல்லாஹ்வுக்காக என்ற நிலையைவிட மனிதனுக்காகவே என்ற செயல் தற்பொருமையுடைய ஈகோ என்ற மனநோய் தான் காரணம் இது போன்ற கந்தூரி கல்சடைகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு.

50 / 50

தாஜுதீன் (THAJUDEEN ) said...

கந்தூரிக்கு காதலர்களைவிட கள்ளக் காதலர்களே அதிகம்.

கந்தூரிக்கு நேரடியாகவும் மறைமுகமாக உதவிகள் செய்பவர்களை இங்கு குறிப்பிட்டேன்..

sabeer.abushahruk said...

யார்ட்ட கேட்டாலும் ச்சேச்சே கந்துரியா உவேக்ன்றாய்ங்க. ஆனா விமரிசையாச் செய்றாய்ங்க.

சவுதி துபைய்லிருந்து மண்டகப்படி வராத குறைதான்.

அழுத்திச் சொன்னா வைறாய்ங்க அப்பு.

عبد الرحيم بن جميل said...

@சபீர் மாமா!! என்ன இதுலாம்??

நானும் எனது நண்பர்களின் வர்புருத்தலால் ஒரு காலத்தில் சென்றிருக்கிறேன்.அங்கு எவ்வளவு கேவலம் நடக்கும் என்று எனக்கு நன்கு தெரியும்.....போன் நம்பரை கையில் எழுதி வைத்துக் கொண்டு திரியுவானுங்க,யார்கிட்ட இருந்து சிக்னலுக்கு ரிப்ளை வருதோ அவங்களை க்ராஸ் பன்ர மாரி கையில் போன் நம்பரை கொடுத்து விடுவானுங்க....அப்ரம் என்ன??நெக்ஸ்ட் ஸ்டெப் லாம் என்ன னு எல்லாருக்குமே தெரியும்...... ஜஸ்ட் கடைக்கு போரோம்னு கூட யாரும் தங்கள் வீட்டு பெண்களை அனுப்ப வேண்டாம் ப்ளீஸ்......

அப்துல்மாலிக் said...

sabeer காக்கா@ ஹிந்தி லாங்குவேஜ்லேயே சொல்லனும்,ஹிந்தமிழ் வேணாம். வருகிற வாரம் அஜ்மீர் கோலாகாலம் ஆரம்பமாம் இப்போதான் படிச்சேன்


எனக்கு ஒரு டவுட்டு.. இறந்தவங்கள அங்கேதான் மெய்யாலுமேதான் அடக்கம் செய்திருக்காங்களா? இல்லே சும்மானாச்சுக்கும் நம்மூருலேயும் ஒரு தர்ஹா இருக்கனும் என்று ஏதோ ஒரு அவுலியா பெயரில் கட்டடம் கட்டிருக்காங்காளா?

கழுதையை ஃபிரீயா நடக்கவுட்டுப்புட்டு வீம்புக்காகவேண்டியாவது பொதியை சுமக்குறாய்ங்க (வெளிநாட்டிலேர்ந்து பணத்தை அனுப்புவதை சொன்னேன்), கந்தூரி நேரம் பார்த்து தன் வெக்கேஷனை மாற்றியமைத்துக்கொண்டவர்களெல்லாம் உண்டு...

அனைத்து அனாச்சாரங்களையும் இழுத்து மூடி சீல் வைக்கப்படுமா?


Shameed said...

கந்துரி கலாட்டா

ஒரு காலத்தில் இந்த கந்துரிக்காக வேண்டி (பச்சை பெல்ட் கட்டி) வெளிநாட்டில் இருந்து வந்து இறங்குவார்கள் அப்படி இறங்கியவரில் ஒருவர் கொடிமர கயிரு இலுக்கும் போது கயிரு அறுந்து கிழே விழுந்ததில் அவர் மேல் பலரும் விழுந்து அவருக்கு அடிபட்டு விட்டது கூட்டத்தில் நின்ற ஒருவர் கிழே விழுந்தவரின் நெத்திப்பொட்டு வீங்கி இருப்பதை பார்த்து விட்டு வீங்கிய இடத்தை கைவைத்து சூடு பறக்க தேய் க்க ஆரம்பித்து விட்டார் (அது அடிபட்டதில் வீங்கியது என்று எண்ணி )அடிபட்டவரோ அரை மயக்கத்தில் கையை அசைக்கின்றார் அங்கே வீங்கிய இடத்தை தேய்க்க வேண்டாம் என்று சைகை காட்டுறார் ஆனால்தேய்ப்பவர் விடுவதாக இல்லை தொடர்ந்து நெத்தியை தேய்த்துக்கொண்டே இருந்தார் தூரத்தில் நின்ற கிழே விழுந்தவரின் சொந்தக்காரர் ஓடி வந்து அந்த வீக்கம் இப்போது உள்ளதல்ல அது அவருக்கு வெகு நாட்களாக உள்ள கழலை என்று சொன்னதும் நெத்தி பொட்டை தேய்த்தவர்போன இடம் தெரியவில்லை

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இப்போதெல்லாம் இந்த தர்கா சமாச்சாரங்கள் சடங்காக செய்வதாக தெரியலெ!
இயக்க / கட்சி எதிரிகளை பழி வாங்கும் முகமாக கள்ளத்தனமாக பணம் கொடுத்து செய்வதாகவே தெரிகிறது,
அங்கே தக்வா பள்ளிவாசல்லெ மொவ்லத்து ஓதுன மாதிரிதான் இதுவும் நடக்குது!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இப்போதெல்லாம் இந்த தர்கா சமாச்சாரங்கள் சடங்காக செய்வதாக தெரியலெ!
இயக்க / கட்சி எதிரிகளை பழி வாங்கும் முகமாக கள்ளத்தனமாக பணம் கொடுத்து செய்வதாகவே தெரிகிறது,
அங்கே தக்வா பள்ளிவாசல்லெ மொவ்லத்து ஓதுன மாதிரிதான் இதுவும் நடக்குது!

Ebrahim Ansari said...

உள்ளூரில் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் சிலரால்தான் கந்தூரிகள் நடத்தப் படுகின்றன.
முதல் காரணம் அவர்களின் ஈகோ அடுத்தது இதை மட்டும் சொல்ல வந்துட்டீங்களே இன்னும் எவ்வளவோ இருக்கே அதையும் பேசலாமா என்கிற மாதிரி பட்டியல். இந்தப் பட்டியலில் தெருவிட்டுத் தெரு திருமணம் நடத்திக் கொள்வது தலையாய இடத்தில் இருக்கும்.

ZAKIR HUSSAIN said...

உள்ளூரில் டான்ஸ்காரிகளையும் , மேடை போடுபவர்களயும் மெனெக்கெட்டு அழைத்து வருவது ஊரில் உள்ள வெட்டி ஆபிசர்கள்தான்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Ebrahim Ansari சொன்னது… முதல் காரணம் அவர்களின் ஈகோ அடுத்தது இதை மட்டும் சொல்ல வந்துட்டீங்களே இன்னும் எவ்வளவோ இருக்கே அதையும் பேசலாமா என்கிற மாதிரி பட்டியல். இந்தப் பட்டியலில் தெருவிட்டுத் தெரு திருமணம் நடத்திக் கொள்வது தலையாய இடத்தில் இருக்கும். //

இது பற்றி ஒரு தனி விவாதக்களம் வைக்கனும் காக்கா...

எல்லோரிடம் ஈமான் ஸ்டாங்கில்லை...

Canada. Maan. A. Shaikh said...

அந்த அந்த சூல்நிலையில் அதிரை வலைதளங்களில் விழிபுனர்வுகளை நம் மக்களுக்கு மிக எளிதாக சொல்லகூடிய ஒரே வலைத்தளம் அதிரைநிருபர் மட்டுமே என்பதை சொல்ல பெருமை படுகிறேன் மாஷா அல்லாஹ், பணிகள் தொடர வாழ்த்துக்கள்

Canada. Maan. A. Shaikh said...

@சபீர் மாமா!! என்ன இதுலாம்??

நானும் எனது நண்பர்களின் வர்புருத்தலால் ஒரு காலத்தில் சென்றிருக்கிறேன்.அங்கு எவ்வளவு கேவலம் நடக்கும் என்று எனக்கு நன்கு தெரியும்.....போன் நம்பரை கையில் எழுதி வைத்துக் கொண்டு திரியுவானுங்க,யார்கிட்ட இருந்து சிக்னலுக்கு ரிப்ளை வருதோ அவங்களை க்ராஸ் பன்ர மாரி கையில் போன் நம்பரை கொடுத்து விடுவானுங்க....அப்ரம் என்ன??நெக்ஸ்ட் ஸ்டெப் லாம் என்ன னு எல்லாருக்குமே தெரியும்...... ஜஸ்ட் கடைக்கு போரோம்னு கூட யாரும் தங்கள் வீட்டு பெண்களை அனுப்ப வேண்டாம் ப்ளீஸ்......

என் மைத்துனன் சொன்ன அனுபவம் எனக்கும் சிறு வயதில் உள்ளது எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அந்த தீய செயளிலிருந்து பதுகாபனாக அமீன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு