மீண்டும் தாமதம், என்ன யாசிர் நீங்க தொடர் முடிப்பதற்குள் நாங்கள் ஆஃப்ரிக்காவையே ஒரு எட்டுபோய் பார்த்திட்டு வந்திடுவோமே என்று பலர் முணுமுணுப்பது காதில் அ(றை)ரையும் குறையுமாக விழுகின்றது,சிலர் பார்த்துவிட்டே வந்திருக்கலாம் நானும் இரண்டு நாடுகளுகு போய்விட்டு வந்துட்டேன்
கடந்த தொடரின் கடைசியில் காட்டிய பட மேட்டருக்கு வருவோம் என்ன மறந்துட்டீங்களா ??
இந்தபடம்தான் அது
தாயின் காலடியில்தான் சொர்க்கம் உண்டு என்று சொன்னது இஸ்லாம். தாயின் அன்பு சுயநலமில்லாதது,தன் குழந்தைகளின் நலம் விரும்புவது,அந்த பாசத்திற்கு எடுத்துக் காட்டுவதுபோல் மேலே உள்ள படத்தில் நீங்கள் காண்பது எத்தியோப்பியர்களின் பாரம்பரிய வீடுகளில் சாப்பிடும் தட்டுகள். இதைப்போல் வயது வாரியாக,வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், குழந்தைகள் தங்களுக்கு சாப்பாடுத் தேவைப்படும்போது அவர்களுடைய தட்டை எடுத்துக் கொண்டு அமர வேண்டும்,அதனைக் காணும் தாய் அத்தட்டில் உணவு பரிமாறி மகிழ்வாள். அவர்கள் பெரியவர்களாகி பல இடங்களுக்குச் சென்று பொருள் சேர்த்து, வருடத்தில் ஒரு நாள் ஒன்றுகூட வேண்டும் என்பது அம்மக்களின் மரபு, அப்பொழுதும் அந்த பெரிய குழந்தைகள் தட்டுகளை எடுத்துக்கொண்டு அமர வேண்டும். எல்லாத் தட்டுகளும் தரையில் இருந்தால் தாய் எல்லையில்லா மகிழ்ச்சியடைவாள். அதில் ஒன்று தரையில் இறக்கபடாமல் இருந்தால் அவள் அதிகமான கவலையில் மூழ்குவாள். அத்தட்டுக்குரியவர் ஏதாவது காரணத்தால் வராமல் இருக்கலாம் அல்லது இவ்வுலகைவிட்டே சென்று இருக்கலாம், தாய் அன்பிற்கு நிகர் எதுவுமே உலகிலில்லை.
அடுத்த நாள் என்னுடைய கஸ்டமர் “வாங்க” அடிஸ் அபாபாவை ஒரு சுற்று சுற்றி விட்டு வரலாம் என்று கூற நானும் கிளம்பினேன்..பல புராதன இடங்கள்,வரலாற்று வாழ்விடங்கள், அழிந்தும் அழியாமலும் இருக்கும் நினைவுச்சின்னங்கள் என்று பட இடங்கள் சுற்றிக் காட்டப்பட்டாலும் ஹஜ்ரத் பிலால்(ரலி) அவர்கள் பெயருடைய பள்ளியை அவர்கள் பிறந்த ஊரிலயே காணும்போது உடல் மெதுவாக சிலிர்க்கத்தான் செய்தது.
மேகங்கள் புடைசூழ,கார்கள் அணிவகுக்க கம்பீரமாக நடந்துவரும் எத்தியோப்பியன்
கண்ணியத்திற்குரிய ஹஜ்ரத் பிலால் அவர்களின் பெயரில் உள்ள பள்ளி.
வளர்ந்து வரும் இஸ்லாம் பெருகிவரும் பள்ளிகள்.
நாட்டின் பார்லிமென்ட், கண்ணுக்கு தெரிகின்றதா ?
இத்தாலி ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்த தியாகிகளின் நினைவு சதுரம் (ஆஃப்கானில் விரட்டி அடிக்கப்பட்டால் அது “தீவிரவாதம்”)
என்ன எத்தியோப்பியாவைச் சுற்றி பார்த்தாச்சா !!!
இவ்வுலகில் இறைவனால் செல்வத்தால் சிறப்பாக்கிவைக்கபட்டவர்களில் எத்தியோப்பியவைச்சேர்ந்த சேக் முகம்மதுவும் ஒருவர் ( Mohammed Hussein Al Amoudi),எத்தியோப்பியா / சவூதி என்று இரட்டைக்குடியுரிமை பெற்ற இவரின் ஷெரட்டான் ஹோட்டல் ஆஃப்பிரிக்காவிலயே மிகப்பெரிய ஹோட்டல். அதன் அழகும், அமையப் பெற்றிருக்கும் லோகேஷனும் ஒரு நிமிடம் திக்கு முக்காட வைத்தது என்றே சொல்லவேண்டும் (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் )சில மனிதர்கள் அதனையே சொர்க்கம் என்று நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் அவர் பல நல்ல காரியங்களை நாட்டிற்கும் ,மார்க்கத்திற்கும் செய்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
மழை மேகங்கள் இருட்டிக்கொண்டு வந்தாலும்,நாங்க எங்கள் பயணத்தைச் சுருட்டிக்கொண்டு வர தயாரில்லை,அடு்த்து அனைத்து ஆஃப்ரிக்க நாடுகளும் ஒன்று கூடும் ஆஃப்ரிக்க யூனியனைக் காணவேண்டி சென்றோம், அந்த பில்டிங்கை போட்டோ எடுத்தவுடன் பில்ட் பாடியுடன் வந்த இரண்டு செக்யூரிட்டிகள் இக்கட்டிடத்தை புகைப்படம் எடுக்க அனுமதியில்லை எடுத்ததை அழித்துவிடுங்கள் என்றனர்…நாங்கள் எடுக்கவே இல்லை எங்க அழிப்பது என்று கூறிவிட்டு காரை தள்ளிக்கொண்டு கிளம்பினோம்…ஆமாம் துபாயில் 130KMH ஓட்டிவிட்டு அங்கே 50 KMH ஓட்டுவது என்பது தள்ளிக்கொண்டு போவதற்கு சமமாகத்தான் இருந்தது
ஆஃபிரிக்காவை தாழ்வு நிலையில் வைத்துவிட்டு தான் நிமிர்ந்து நிற்கும் ஐ.நா-வின் ஆஃபிரிக்க யூனியன் கட்டிடம்
எத்தியோப்பியாவின் மிகப்பழமையான மார்க்கெட் “மெர்க்காட்டோ (Mercato)” மால் 200 வருட பாரம்பரியமிக்க அந்த மார்க்கெட்டுக்கு சென்றால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் (வாப்பா/உம்மாவைத்தவிர என்று துபாய் ஆட்கள் சிட்டி சென்டரைப் பற்றி முன்னர் சொல்லுவார்கள் ). அல்ஹம்துலில்லாஹ் அந்த மார்க்கெட் இயக்கத்தைக் கட்டுபடுத்துபவர்கள் முஸ்லிம்கள்தான் என்றதும் மனதில் எத்தியோப்பிய குளிர்க்காற்றின் சுகம் முழுவதுமாக உடம்பெங்கும் பரவியது
கம்பீரமாக காட்சி தரும் மெர்க்காட்டோ மார்க்கெட் பள்ளி
அப்புறம் சகோதரர் மாலிக்கிற்காக… சில பிஸினஸ் குறிப்புகள்
90 மில்லியன் மக்கள் தொகையுள்ள நாடு…மிகப்பெரிய கன்னி மார்க்கட்
சொந்த நாட்டில் தயாரித்து அல்லது அசெம்பிள் செய்து விற்கப்படும் பொருள்களுக்கு அரசு ஆதரவும்,வரிச்சலுகைகளும் உண்டு
வளர்ந்து வரும் துறை என்றால், கணினி(மென்பொருள்/வன்பொருள்) / கட்டுமான சம்பந்தமான தொழில்கள்/ கனரக வாகனங்கள் / ஜெனரேட்டர்கள்/ஆடைகள் அதன் மூலப்பொருட்கள்
நீங்கள் ஏற்றுமதி செய்வதாக இருந்தால் முதலில் ஒவ்வொரு பொருட்களுக்கும் விதிக்கப்படும் வரிகளின் தகவல்களை பெறவேண்டும் சில பொருட்கள் 100% வரிகளுக்குட்பட்டவை.பொதுவாக அனைத்துப் பொருட்களுக்கும் 35 முதல் 45% வரிகள் உண்டு
HS code எனப்படும் பொருட்களின் கஸ்டம்ஸ் எண் குறியீடு உலகின் டாப் பிராண்ட்களின் குறியீட்டையே அவர்கள் முட்டாள்தனமாக பயன்படுத்துவதால் நீங்கள் ஒரு 3 டாலர் வெப் கேமை எடுத்து சென்றாலும் 1000டாலர் மதிப்புள்ள சோனிக்கு கேமராவிற்கு நிகரான வரி செலுத்த வேண்டி வரும்
அலுவலக செட்டப் அந்த நாட்டின் குடிமகனோடுதான் செய்யவேண்டும் அந்த”குடி”மகனை கொஞ்சம் நாள் கழித்து ஓரம் கட்டிவிடலாம்
நான் பயணத்தை முடித்துகொண்டு கிளம்பும்போது, வழியனுப்ப வந்த மேகங்கள்
போர்டு சாய்ந்து இருந்தாலும், அந்தநாட்டின் மக்களின் மனதில் நிமிர்ந்த நடைபோடும் இந்தியா(ர்கள்)
வீட்டிற்கு போக காந்திருந்த நேரம்…எமிரேட்ஸ்..இதன் டேஸ்ட்டே தனிதான்
வளங்கள் பல இருந்தும் வறுமையாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆஃபிரிக்கா கண்டம்தான் இன்றைய வியாபார உலகிற்கு விடிவெள்ளியாக திகழ்கின்றது.பல முன்னேறிய மார்க்கெட்டுகள் தன்னிறைவு அடைந்துவிட்டது. அங்குள்ள பயன்பாட்டாளர்களும் முதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஆனால் கன்னித் தன்மை மாறாத ஆஃப்ரிக்கா இன்னும் பல நூறு வருடங்களுக்கு உலக வியாபார நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
என்ன வாசகர்களே …கென்யா பயணத்தைத் தொடரலாமா?…மறுபடியுமா ? எக்ஸ்கீயூஸ் மீ இந்த ”எக்ஸ்ட்” எங்கே இருக்கு என்று கேட்டு வெளியே வந்துடலாமா ? எல்லாம் உங்கள் கமெண்டின் வீரியத்தை பொறுத்துதான் இருக்கும்..மீண்டும் சந்திப்போம் இன்னொரு கோணத்தில்
இத்துடன் இத்தொடர் நிறைவடைகின்றது. ஆனால் ,பயணங்கள் தொடரும்
முஹம்மது யாசிர்
44 Responses So Far:
Assalamu Alaikkum
Dear brother Mohammed Yasir,
Excellent finishing of "Me and Africa" travel story.
Nice to know about culture of eating plates and mother's love towards her children, emotional and sentimental.
Nice pictures with succinct descriptions.
Sheratton hotel picture is gargeous - "Excellent input ensures excellent result" - Human can imagine the extreme and he can extreme comparison only with paradise not beyond. Comparing God Almighty with anything else a shirk.
Business information is more useful and I appreciate you for sharing, and there you are looking matured.
I encourage you to continue your travel and write your experience for us.
Jazaakkallah Khair brother.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com.
அழகான தமிழில் அருமை பயணத்தொகுப்பு!
அஹமது அமீன் அவர்களே!
நான் சில மாதங்களாக அதிரை நிருபர் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்களுடைய சொந்த கட்டுரையும் வாசித்திருக்கிறேன்.
ஒரு அன்பான வேண்டுகோள் தயவு கூர்ந்து தாங்கள் பின்னூட்டம் இடும் போது முடிந்தவரை தமிழில் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் ஆங்கிலத்தில் மின்னூட்டமிடுவதால் அனைவருக்கும் புரியும் என்று நீங்கள் எதிபார்க்கக் கூடாது. மேலும் நீங்கள் உபயோகிக்கும் ஒரு சில வார்த்தைகள் சாதாரணமாக ஆங்கிலம் தெரிந்த நபர்கள் கூட சிரமப் படும் வார்த்தைகளை உபயோகிக்கிறீர்கள்.
தாங்கள் ஆங்கிலத்தில் கட்டுரைகளாக இடும்போது எந்தவித பிரச்சனைகளும் இருக்கப்போவதில்லை. அதன் மூலம் உங்களைப் போன்று ஆர்வமுடையவர்கள் தங்கள் ஆங்கிலத்தை மேலும் மெருகூட்ட பயனுள்ளதாக இருக்கும் . அவை தனியாக கட்டுரைகளாக இடும்போது!
பொது இடத்தில் 4 பேர் கருத்தாடலில் தங்கள் ஆங்கிலத்தில் இடுவதால் அனைவருக்கும் புரிய வாய்ப்பில்லை என்பதை மீண்டும் நினைவு படுத்திக் கொள்கிறேன்.
Note:
This is just polite and humble request my brother.
அஸ்ஸலாமு அலைக்கும், நண்பர் யாசிர்,
மாஷா அல்லாஹ்,
அனைத்து புகைப்படங்களும் மிக அருமை.
நபி(ஸல்) அவர்கள் சம்பவத்திற்கு சம்பவம், என்னுடைய பிலால், நானும் பிலாலும் என்று அடிக்கடி சொல்லியுள்ளார்கள் என்பதை ஹதீஸ்களில் படிக்குக்கும் போது நம்ம ரசூலுல்லாஹ், நம்ம பிலால்(ரழி) அவர்களுக்கு எவ்வளவு கண்ணியம் கொடுத்துள்ளார்கள் என்பது நமக்கு புரியும். அவர்கள் பிறந்த பிரதேசத்தில் அவர்கள் பெயரால் உள்ள பள்ளியின் புகைப்படம் காணும் போது எல்லையற்ற மகிழ்ச்சி.
//வளங்கள் பல இருந்தும் வறுமையாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆஃபிரிக்கா கண்டம்தான் இன்றைய வியாபார உலகிற்கு விடிவெள்ளியாக திகழ்கின்றது.பல முன்னேறிய மார்க்கெட்டுகள் தன்னிறைவு அடைந்துவிட்டது. அங்குள்ள பயன்பாட்டாளர்களும் முதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஆனால் கன்னித் தன்மை மாறாத ஆஃப்ரிக்கா இன்னும் பல நூறு வருடங்களுக்கு உலக வியாபார நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை//
100% சரி யாசிரே...
கட்டுரை நிறைவுற்றாலும் பயணங்கள் தொடரும் என்று போட்டது மகிழ்ச்சியாக உள்ளது
படங்கள் ஆங்கங்கே தூள் கிளப்புது
இந்தியா ஹவுஸ் போர்டை கொஞ்சம் நிமிர்த்தி வைத்து விட்டு வந்தால் என்ன ?
நீங்களும் ஆப்பிரிக்காவும் ரொம்ப லேட்டு போங்க!
அடுத்து கென்யா பயணத்தோடு சீக்கிரம் வாங்க!
படங்களுடன் விளக்கம் அழகாக புரிந்தது. அதிரை நிருபருக்கு கிடைத்த Asset நீங்கள். படங்கள் வெளிச்சத்தை நோக்கி எடுத்திருப்பதால் கொஞ்சம் பேக்ரவுன்ட் லைட் நிரப்பி வெளியிட்டிருக்களாம்.
// படங்கள் வெளிச்சத்தை நோக்கி எடுத்திருப்பதால் கொஞ்சம் பேக்ரவுன்ட் லைட் நிரப்பி வெளியிட்டிருக்களாம்.//
மின்சாரத் தட்டுபாடுன்னு சொல்லித் தப்பிக்கவும் முடியாது !
அஸ்ஸலாமு அலைக்கும். என் பிரியத்துக்குரிய அபிமான எழுத்தாளர் யாசரின் பயணக்கடுரையை தொடந்து வாசித்து வந்தாலும் அவ்வளவாய் கருத்து பதியாமல் இருந்துவிட்டேன். வழக்கம் போல் அருமையான எழுத்து, அதன் நடைப்போக்கு நமக்கும் வழிகாட்டிக்கொண்டே சென்றது. நேரில் காண்பதில் கூட நமக்கு இவ்வளவு விளங்கி இருக்குமா? அதன் பின்னனிகளும் , சூழலும்??? அவரின் அழகிய அறிவின் வெளிப்பாடு இந்த பயணக்கட்டுரை.அல்லாஹுக்கே எல்லாப்புகழும். எப்படி வாழ்த்துவது உங்களை?. வார்த்தை இன்றி தவிக்கிறேன்.கவிஞரே(சபிர்காக்க கவனிச்சிக்கிட்டுதான இருக்கீங்க? எனக்கு கொஞ்ஜம் வார்த்தை கொடை செய்வீங்களா???
சொல்ல மறந்தது நான் படித்த பயணகட்டுரையிலேயே அதிகம் மனம் லயித்ததும், கவந்ததும் இதுவே! முத்திரைபதித்தது.
அதிரை நிருபரின் அசையும் சொத்து (ப்ளீஸ் ரெஃபர் ஜாகிர்’ஸ் கமென்ட்) தம்பி யாசிர்,
நீங்கள் படங்களைப் பதியாமல் எழுதியிருந்தாலும்கூட விளக்கும் விதத்தில் காட்சிகள் விரிகின்றன (ப்ளீஸ் ரெஃபெர் கிரவுன்’ஸ் கமென்ட்)
ஓஸியில் ஊர்சுற்றிக்காட்டும் உங்களுக்கு மென்மேலும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் (ப்ளீஸ் ரெஃபெர் யுவர் ஆர்ட்டிக்கிள்) அமையவும் கருப்பே மிகச் சிறந்த நிறம் (ப்ளீஸ் ரெஃபெர் லொகேஷன் ஆஃப் யுவர் பிஸினெஸ்) என்று முழங்கவும் வாழ்த்துகள்.
சகோ கனடா காதர் அன்ட் சகோஅஹ்மது அமீன்: நான் ஆங்கிலத்தில் ஏதாவது மேலே எழுதியிருக்கிறேனா? J
Sabeer Ahmed
யாசிர்,
எனக்குப் பதிலாக நீங்கள் மலேசியா சென்றிருந்தால் மற்றுமொரு பயணக்கட்டுரை வாய்த்திருக்கும். எனக்கு அங்கு எதுவுமே எழுதவோ பார்க்கவோ தோன்றவில்லை.
என் பால்ய காலத்து சிநேகிதர்களோடு அடைமழையை லாபியில் நாற்காலிகள் போட்டு கையில் இஞ்சிட்டீயுடன் ரசித்துக்கொண்டே உரையாடிக்கொண்டிருந்தோம். ஒரு நாள் என்றாலும் அது ஓரு கோடி நாட்களுக்குச் சமம்.
Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer AbuShahruk,
//ஒரு நாள் என்றாலும் அது ஓரு கோடி நாட்களுக்குச் சமம்.//
The above statement in the context of Malaysia expresses some deep feelings and satisfaction, which could be theme for your future poem.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.
அழகான படங்களும், அற்புதமான விளக்கங்களும்
எம்மை அங்கேயே அழைத்துச்சென்றது போல் இருக்கின்றது உங்களின் எழுத்துக்கள் சகோ. யாசிர். உங்கள் எழுத்துக்கள் மூலம் "பயணங்கள் முடியவில்லை" என்பது விளங்குகிறது. தொடர வாழ்த்துக்கள்....
சகோ. யாஸீர், பார்த்ததை, படித்ததை, அனுபவத்தை பகிர்வது என்பது ஒரு தரமிக்க ஆசிரியருக்கு சமம், இங்கே நீங்கதான் ஆசான். உள்நாட்டு வியாபாரம் என்பது எல்லோருக்கும் அறிந்த விசயம் ஆனால் வெளிநாட்டு வியாபாரம் என்பது உங்களை போன்ற ஒரு சிலருக்கு அல்லாஹ் தந்திருக்கான், அல்ஹம்துலில்லாஹ் அதை தொகுத்து எங்களுக்கும் கற்றுதர ஒரு மனது வேணும், வியாபார நுணுக்கத்துக்கு அந்ந்தந்த நாட்டு மக்களின் பழக்கவழக்கம் முதல் இடம் பிடிக்கும் என்பதை சொல்லிருக்கீங்க..
கென்யாவையும் காண மானிட்டர் மேல் விழி வைத்து காத்திருக்கேன்.. நன்றி பகிர்வுக்கு
Assalamu Alaikkum
Dear brother Mr. Canada Kader,
//பொது இடத்தில் 4 பேர் கருத்தாடலில் தங்கள் ஆங்கிலத்தில் இடுவதால் அனைவருக்கும் புரிய வாய்ப்பில்லை என்பதை மீண்டும் நினைவு படுத்திக் கொள்கிறேன்.//
Thanks for your feedback.
Actually I am encouraged(postive) to write in English by most of the brothers(fellow readers and authors) who are expatriates living in foreign countries.
I usually don't attack personally anyone and I don't have bitterness towards any of our brothers. If I do so, my value will be sure down in the assessment of fellow readers and authors.
If some brothers whoever come online to read don't understand English, then let them attempt to read English and try to understand for their own improvement. Otherwise let them simply neglect my comment since my comment is negligible among all other comments.
Actually my teacher and colleague NAS sir used to write his comments mostly in English here, I didn't encounter any objections(negative) in Adirai Nirubar readers. I just follow him.
I would like to suggest you to see English comments as positive ones. Lets consider this forum more of knowledge source than just normal chats.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.
ஒரு வியாபாரி சென்றால்... எல்லாமே விலாவாரியாத்தானே இருக்கும், அதுபொல்தான் யாசிரின் எழுதோடையின் விரிவாக்கமும் ! அருமை !
//நாட்டின் பார்லிமென்ட், கண்ணுக்கு தெரிகின்றதா ? //
ஆமா, ஆமா ! இதுமாதிரி கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் பார்லிமெண்ட்டை பார்ப்பதுதான் நல்லது. நம்மவூர் பார்லிமெண்ட் பக்கத்தில் சென்றால் என்ன நடக்கும்னு சொல்லியா தெரியனும் !?
அசைந்தாலும் / அசையாவிட்டாலும்... யாசிர் அ.நி.க்கு சீர் தான் !
கிரவ்னு இன்னும் நானும் பயணமெல்லாம் போயி எழுதிப் பார்க்கலையே நீயும் !?
" Assalamu Alaikkum
Dear brother Mr. Canada Kader,
//பொது இடத்தில் 4 பேர் கருத்தாடலில் தங்கள் ஆங்கிலத்தில் இடுவதால் அனைவருக்கும் புரிய வாய்ப்பில்லை என்பதை மீண்டும் நினைவு படுத்திக் கொள்கிறேன்.//
Thanks for your feedback.
Actually I am encouraged(postive) to write in English by most of the brothers(fellow readers and authors) who are expatriates living in foreign countries.
I usually don't attack personally anyone and I don't have bitterness towards any of our brothers. If I do so, my value will be sure down in the assessment of fellow readers and authors.
If some brothers whoever come online to read don't understand English, then let them attempt to read English and try to understand for their own improvement. Otherwise let them simply neglect my comment since my comment is negligible among all other comments.
Actually my teacher and colleague NAS sir used to write his comments mostly in English here, I didn't encounter any objections(negative) in Adirai Nirubar readers. I just follow him.
I would like to suggest you to see English comments as positive ones. Lets consider this forum more of knowledge source than just normal chats.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com. "
Dear Bro Ameen,
I understand what you are trying to say but i don't think you have got my point, see if you are posting an article or poem there wouldn't be any problem and people can neglect or even ignore but like i said this is a place where people input their own thoughts and sharing their comments towards the article and fellow member comments.
if they can't understand your comments they won't be able to share their views towards it and moreover they might just ignore as they have been doing at the moment.
I really appreciate your effort,but i would suggest instead of doing that here in comments why don't you make another page (an English page for learning purpose) and where our adiraiaties can get benefited.
i'm not offending you but as of i know few peoples get irritated to see your comments in english,
Best regards
Ahamed Ameen எழுதும் ஆங்கில கருத்துக்கள் ஆங்கிலத்திலேயே இருப்பதில் எனக்கு எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. பெரும்பாலும் இன்டர்நெட்டில் படிப்பவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களே அதிகம். இன்னும் புதிய வார்த்தைகளை இவரின் வழி தெரிய வரலாம்.
என்னைப்பொறுத்தவரை ஏன் இவர் ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்ற கேள்வி எனக்குள் எழுந்ததில்லை. இவராவது எழுதட்டும் என்ற உணர்வுதான் வருகிறது.
" ZAKIR HUSSAIN சொன்னது…
பெரும்பாலும் இன்டர்நெட்டில் படிப்பவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களே அதிகம்."
I doubt, because i can see few adiraiaties here in canada can not even read a single thing,all they do is just open their laptop and visit all adirai pages,read comments and sharing with us,they don't even know how to post a reply,
I'm talking about just here in canada and i'm quite sure similar kinda people lives in UK,US,Aus etc...
I doubt, because i can see few adiraiaties here in canada can not //even read a single thing,all they do is just open their laptop and visit all adirai pages,read comments and sharing with us,they don't even know how to post a reply,
I'm talking about just here in canada and i'm quite sure similar kinda people lives in UK,US,Aus etc...//
மிகவும் சரி கனடா சகோதரர் அவர்களே!
மருமகன் யாசிர் அவர்களுக்கு,
மெருகு கூடிக் கொண்டே போகும் தங்களின் எழுத்தாள்மை அடுத்த தொடரையும் அள்ளி வழங்கட்டும்.
இரண்டு நாட்களாக எங்கே மாமா ஆளைக்காணோம் என்கிறீர்களா? சின்ன சிங்கப்பூர் ஆகப போகும் ஒரு ஊருக்குப் போய் இருந்தேன். ஊரின் பெயர் அதிராம் பட்டினம். வண்டிப் பேட்டையில் இருந்து சி. எம். பி. லைனில் உள்ள எங்கள் சகோதரி வீட்டுக்குப் போவதற்குள் இடுப்பொடிந்து போய்விட்டது. சாலையின் இரு புறமும் குப்பைக் கழிவுகள். வாய்க்கால் நிரம்பி ஓடும சாக்கடைகள். சின்ன சிங்கப்பூர் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் யாரும் இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் மிரண்டா வாங்கி க் குடித்துவிட்டு பாட்டிலை மறக்காமல் வாய்க்காலில் போடுகிறார்கள்.
இதை ஏன் எழுதுகிறேன் என்றால் அதிரை சிங்கப் பூராக மாறவில்லை; மாறாது. மாறாக ஆப்ரிக்காவாக மாறிக்கொண்டு இருக்கிறது- சுற்று சூழ்நிலைகளிலும் மனிதர்களின் குணத்திலும்.
கருத்தும்,ஊக்கமும்,பாராட்டுக்களும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி...சாரி ஒவ்வொருவராக விளித்து எழத வேண்டும் என்றிருந்தேன்....நேரக்குறைவும்...கணினி இல்லாக்குறையும் குறைத்து எழுத வைத்துவிட்டது......மீண்டும் சந்திப்போம்
/என்னைப்பொறுத்தவரை ஏன் இவர் ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்ற கேள்வி எனக்குள் எழுந்ததில்லை. இவராவது எழுதட்டும் என்ற உணர்வுதான் வருகிறது. //
ditto
/என்னைப்பொறுத்தவரை ஏன் இவர் ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்ற கேள்வி எனக்குள் எழுந்ததில்லை. இவராவது எழுதட்டும் என்ற உணர்வுதான் வருகிறது. //
ditto
ditto to ditto.
அஸ்ஸலாமு அலைக்கும்.டெத்தோ இருக்கும் நாட்டில் இருந்து ditto , நானும் தான்ditto to ditto....
இணையத்துலே அதிகம் தமிழின் வளர்ச்சி இருப்பதால் ஆங்கிலத்தில் படிப்பதுக்கு எழுதுவதுக்கும் ஒரு வகை போர் அடிக்கிறாமாதிரி எனக்கு தோன்றுகிறது. நான் தனிச்சாட்டில் நிறையபேருக்கு தமிழில் டைப்பீப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்திருக்கேன் nhmwriter. அதை கத்துக்கிட்டு கட்டுரையெல்லாம் எழுதுறாங்க.
இங்கே சகோ அமீன் அவர்களுக்கு இரெண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம்.
அவரும் எல்லோரும் சொல்றா மாதிரி ஆங்கில புலமையை வளர்ப்பது. என் நண்பன் வருடத்தில் 1 மாசம் வெக்கேஷன் போனாலும் அங்கே இலவசமாக நம்மூர் மாணவர்களுக்கு spoken english class எடுப்பான், எந்தவித பலனையும் எதிர்ப்பார்க்காமல் செய்வது, இதுமாதிரி ஆங்கில புலமையை வளர்க்க உதவலாம். நான் கூட சிலசமயம் ஆங்கிலத்துலேயும் கருத்திட்டிருக்கேன் அது சகோ அமீனால்தான்.
இரண்டாவது சிலபேருக்கு தமிழில் டைப்ப கஷ்டமா இருக்கலாம். முன்னரெல்லாம் வேறு தளத்தில் தமிழில் டைப்பி காப்பி செய்து இங்கே வந்து பேஸ்ட் செய்யனும்...
எனவே நானும் இங்கே டத்தோ(டிட்டோ)தான்
எல்லாரும் சகோ. அமீனுக்கு ஆங்கிலத்துக்கே டிட்டோ போடுகிறீங்க!
எனக்கல்ல, தமிழுக்கு ஓட்டு போட ஒரிருவரை தவிர யாரும் வர மாட்டேங்கிறீங்க!!
என்னமோ போங்க (டத்தோவும் பேசுற) தமிழ் வாழ்க!!!
M.H.J.:
நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் !
தமிழுக்கென்று தாத்தா இருக்கிறார் - ஆங்கிலத்திற்கு இருக்கிறாரா ?
தமிழின் ஆரம்பமே அம்மாவை அழைக்கிறது - ஆங்கிலத்தால் முடியுமா ?
தமிழினம் தனியினமென தம்பட்டமடிப்போம் - ஆங்கிலம் அந்நிய மொழியென்றுதானே சொல்வோம் !
நேற்று ஜோக்கு படித்தேன், தாத்தா எதைச் சொன்னாலும் அம்மா நேருக்கு மாற்றமாகத்தான் செய்வாங்களாம் !
நான் அரசியலா பேசுறேன் இங்கே !?
You guys don't understand where I'm come from? I'd love to see English ,no doubt about it but let it be on some other page, we can have page where we all can share our knowledge and whoever needs to improve or to share their valuable inputs,ofcourse they can but not here....
This comment box is not just an appreciation or to say thanks, This is the place where people arise some questions( sometimes) and then share their views, in that case if they don't understand then how could they carry on?
They can't just ignore English comments and answer only for the Tamil ones...is that clear?
Guys again I'm not against him or English like I said we can have another page for English ,I'm quite sure people like me,bro sabeer,bro Zakir Husain and other few ditto's will visit....
So please let these comment box for Tamil so that every one can share their views...
சகோ அமீன் அவர்களுக்கு தங்களின் ஆங்கில புலமையை கொண்டு அதிரை நிருபரில் ஆங்கில தமிழ் பாடம் சொல்லிக்கொடுங்களேன்
Shameed சொன்னது…
சகோ அமீன் அவர்களுக்கு தங்களின் ஆங்கில புலமையை கொண்டு அதிரை நிருபரில் ஆங்கில தமிழ் பாடம் சொல்லிக்கொடுங்களேன்
செவ்வாய், மே 07, 2013 2:48:00 PM
I Agree (When its on separate page,that would be good idea though)
Best Regards
Dear brothers,
I wish to make one thing very clear that this site has never ever stated that it is a site which gives importance to the mother tongue tamil only. There are sites which claim that tamil is everything for them, but Adirai Nirubar STANDS only for its guts, not language. However, we promise to give importance to Tamil but not that we give everything for tamil.
If bro Ahmed Ameen finds it easy to comment in English we have no rights to protest whatsoever the way, polite or rude. It is simply that, neither of us have rights to tell him not to write in English. As brother Canada Kader say that the readers of this forum might miss to get the point of view of Ahmed Ameen and then it is something they should worry about and put some efforts to learn English. LEARNING ENGLISH IS NOT A CRIME.
I reiterate, this forum will not STOP anybody to share their views just because of language. Unfortunately, the ones who cannot understand English has to miss the ideas of those who write in English.
So, brothers, lets cheer up and enjoy reading.
Assalamu Alaikkum
Dear brothers and sisters,
Alhamdulillah,
I thank and appreciate all brothers,sisters and especially brothers Yasir(author of this article),Mr. Jakhir Hussain, Mr. Sabeer Abusharuk, Mr. Crown Dastahir, Mr. Malik, Mr. Abu Ibrahim, Mr. Shahul Hameed(Shameed), once again thanks to brother Mr. Sabeer Abushahruk who has been appreciating my thoughts through English and making efforts for facilitating understandings among us.
Jazakkallah Khairan and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.
//LEARNING ENGLISH IS NOT A CRIME.// I Love it...
தம்பி யாசிர் அவர்களின் ..
ஆப்பிரிக்காபயணம் முடிவுற்றாலும் ...
வாழ்க்கையின் வெற்றி பயணம் தொடரட்டும் ..
எல்லா வளங்களும் பெற்று வாழ்க பல்லாண்டு
Thanks for deleting my comment
//Canada Kader சொன்னது…
Thanks for deleting my comment//
என்ன நடந்துச்சு
தமிழ் ஒழிப்பா?
//தமிழுக்கென்று தாத்தா இருக்கிறார் - ஆங்கிலத்திற்கு இருக்கிறாரா ?
தமிழின் ஆரம்பமே அம்மாவை அழைக்கிறது - ஆங்கிலத்தால் முடியுமா ?
தமிழினம் தனியினமென தம்பட்டமடிப்போம் - ஆங்கிலம் அந்நிய மொழியென்றுதானே சொல்வோம்//
ஏதோ வெளியில் இருந்து ஆதரித்தமைக்கு நன்றி காக்கா!
// தாத்தா எதைச் சொன்னாலும் அம்மா நேருக்கு மாற்றமாகத்தான் செய்வாங்களாம் !//
என்னை தாத்தாவாக நினைத்து நேருக்கு மாற்றமாக எல்லாரும்(அம்மா மாதிரி) ஆங்கில நேசர் சகோ. அமீனை ஆதரிக்கிறாங்க!( சுதந்திரத்தை கொடுத்தவன் மொழிக்கும் எதோ சதி பண்ணியிருக்கான் என்று தான் சொல்லனும்)
போற போக்குலெ பாத்தா அதிரை நிருபரை ஆங்கிலத்துக்கு மாத்திடுவாங்க போலிருக்கே!
அம்மா சொன்ன மொழி,
ஆதம் (அலை) பேசியதாக கருதப்படும் மொழி,
ஆயுள் வரை எத்தைகைய எதிர்ப்பிலும் குரல் கொடுப்பேன்.
////Canada Kader சொன்னது…
Thanks for deleting my comment//
என்ன நடந்துச்சு
தமிழ் ஒழிப்பா?//
அன்பு MHJ:
அப்படியொன்றும் இல்லை !
சகோதரர் அவர்களின் கருத்தாடலில் விரும்பத்தகாத அது ஆங்கிலத்தில் பேச்சு வழக்கில் சரளாமக பேசுபவர்களால் பயண்படுதிக் கொள்ளும் வர்த்தை இருந்ததால் அதுவும் அவரே அதனை பொதுவில் வெளிக்காட்ட விரும்பாத நிலையில் '**'ட்டிருந்தால் அதனை மட்டுறுத்தினோம்.
இந்த விளக்கம் உங்களுக்காக, நீங்கள் கேட்தற்காகவே!
நெறியாளர் சொன்னது…
//Canada Kader சொன்னது…
Thanks for delet-------------------
------------
மட்டுறுத்தினோம்.
இந்த விளக்கம் உங்களுக்காக, நீங்கள் கேட்தற்காகவே!//
இது பற்றி விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி காக்கா!
அது இருக்க
தாத்தா இருக்கார், அம்மா, அந்நிய மொழி என்று நேற்று 12. 28 PM நீங்கள் இட்ட கமென்டுக்கு நான் ஒரு பதில்( 40-வது கமென்டு) எழுதினேன். அதையும் காணோமே!
//அது இருக்க, தாத்தா இருக்கார், அம்மா, அந்நிய மொழி என்று நேற்று 12. 28 PM நீங்கள் இட்ட கமென்டுக்கு நான் ஒரு பதில்( 40-வது கமென்டு) எழுதினேன். அதையும் காணோமே! //
அடிக்கும் அலையில் தானாக கரை ஒதுங்கிவிட்டது அதுவும் மதகுக்கு பின்னால் இருந்ததை இழுத்து வந்து கருத்துக் கடலில் மிதக்க விட்டுவிட்டேன் !
//அடிக்கும் அலையில் தானாக கரை ஒதுங்கிவிட்டது அதுவும் மதகுக்கு பின்னால் இருந்ததை இழுத்து வந்து கருத்துக் கடலில் மிதக்க விட்டுவிட்டேன் !//
Thanks for rescue my voice (comment)
Sorry for English!!!
Post a Comment