அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
 அதிரை பைத்துல்மால் கடந்த
20 வருடங்களாக உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு அளப்பரிய சேவைகளைச் செய்து
வருவதை அறிவீர்கள். அதிரைவாசிகளிடமிருந்து பெறப்படும் ஜகாத், ஃபித்ரா மற்றும் ஸதகா மூலம் இவற்றை மார்க்கம் வரையுறுத்துள்ளபடி பகிர்ந்தளித்து
வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
அதிரை பைத்துல்மால் கடந்த
20 வருடங்களாக உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு அளப்பரிய சேவைகளைச் செய்து
வருவதை அறிவீர்கள். அதிரைவாசிகளிடமிருந்து பெறப்படும் ஜகாத், ஃபித்ரா மற்றும் ஸதகா மூலம் இவற்றை மார்க்கம் வரையுறுத்துள்ளபடி பகிர்ந்தளித்து
வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும்
வெளிநாடுகளிலுள்ள அதிரைவாசிகளின் நன்கொடைகளைத் திரட்டி வழமைபோல் சேவைகள் தொய்வின்றி
தொடர தங்கள் பங்களிப்பை மனமுவந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஐக்கிய
அரபு அமீரகத்திலுள்ள அதிரைவாசிகளிடமிருந்து ஃபித்ரா தொகையாக தலா 15/- (பதினைந்து திர்ஹம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஃபித்ரா உதவிகள் ரமலான்
மாதத்திற்குள் பகிர்ந்தளிக்கப்பட்டு விடும். பிற உதவிகளுக்கு ஜகாத் மற்றும் ஸதகா மூலம்
ஆண்டு முழுமைக்கும் திட்டமிடப்பட்டு அதற்கேற்ப நிதி ஒதுக்கப்படுகிறது. ஆகையால், தங்களின் ஜகாத் தொகையை முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட பகுதியையோ அதிரை பைத்துல்மாலுக்கு
வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
துபாய் மற்றும் அபூதாபியில்
கீழ்கண்ட பிரதிநிதிகளிடம் அதிரை பைத்துல்மாலுக்கான நிதியுதவிகளைச் செலுத்தலாம். 
துபாய்        :      S.M.A.சாகுல் ஹமீது  - 0503792167
                             M.Z.அமீன்            - 0505050922                        
                             N.ஜமாலுதீன்         - 0504737200
                             ஜாஃபர் அலி         - 0504364388
அபூதாபி:          S.அபுல் கலாம்        - 0567822844
                 
           A.முஹம்மது யூசுப்  - 0558084073
இவண்,
செயலர்
அதிரை பைத்துல்மால்
துபை கிளை
1993-2011 ஆண்டுவரை அதிரை பைத்துல்மால் மூலம் வழங்கப்பட்ட முக்கிய உதவிகள்:
| 
சேவைகள் | 
ரூபாய் | 
| 
வட்டியில்லா கடன் | 
6,599,050 | 
| 
மாதாந்திர உதவித்தொகை | 
1,744,550 | 
| 
கல்வி உதவிகள் | 
556,509 | 
| 
திருமண உதவிகள் | 
512,070 | 
| 
மருத்துவ உதவிகள் | 
229,291 | 
| 
கத்னா உதவிகள்  | 
143,301 | 
| 
பிற உதவிகள் | 
140,695 | 
| 
மொத்தம் | 
9,925,466 | 
2012-2013 ஆம் ஆண்டில் அதிரை பைத்துல்மால்
மூலம் வழங்கப்பட்ட முக்கிய உதவிகள்:
| 
சேவைகள் | 
ரூபாய் | 
| 
வட்டியில்லா கடன்கள் | 
3,772,000 | 
| 
மாதாந்திர உதவிகள் | 
403,800 | 
| 
கல்வி உதவிகள் | 
26,640 | 
| 
திருமண உதவிகள் | 
37,000 | 
| 
மருத்துவ உதவிகள் | 
42,500 | 
| 
கத்னா உதவிகள்  | 
29,425 | 
| 
பிற உதவிகள் | 
326,510 | 
| 
மொத்தம் | 
4,637,875 | 
பரிந்துரை : N.ஜமாலுதீன்








 

 
 
 

 

 
 
 
 

2 Responses So Far:
அமீரக அவ்காஃப் 20 திர்ஹாம் என்று சொல்லிருக்காங்களே...
கடந்த 20 வருடங்களாக அதிரை பைத்துல்மால் தெரு பாகுபாடு இன்றி பல தெருக்களுக்கும் பித்ராவை வினியோம் செய்துவருகிறதை நாம் அறிவோம் அதிரையில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் ஒரு சில சங்கங்களை தவிர மற்ற சங்கங்கள் துபையில் உள்ள தங்கள் தெரு வாசிகளிடம் பித்ரா வசூல் செய்து தங்கள் தெருக்களுக்கு மட்டும் வினியோகம் செய்து வருகிறார்கள். தங்கள் தெருக்களுக்கு நேரடியாக அனுப்பாமல் பைத்துல்மாலுக்கு அனுப்பினால் பைத்துல்மால் பல தெருக்களுக்கும் பிரித்துக்கொடுக்கும் போது பைத்துல்மாலுக்கு அனுப்பி தெருவாசிகள் கொஞ்சமாகவும் அனுப்பாத தெருவாசிகள் அதிகமாகவும் பயன் பெறுகிறார்கள் உதாரணத்திற்கு நேரடியாக சங்கங்களுக்கு அனுப்பும் தெருக்களில் சங்கம் + பைத்துல்மால் பைத்துல்மால் மூலம் அனுப்பப்படும் தெருக்களுக்கும பைத்துல்மாலில் இருந்து மட்டும் தான் வினியோகம் செய்யப்படுகிறது இந்த பாகுபாடை பைத்துல்மால் நிர்வாகிகள் நிவர்த்தி செய்து இந்த வருடம் பித்ராவை வினியோகம் செய்ய முயச்சிக்கவேண்டும்
Post a Comment